முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி.. 



கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது..



சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்..




ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்.. 



இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்..



அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூறியதும் ஏதோ இந்த கடையே அவளுக்கு தான் சொந்தம் என்பது போல் திமிராக திரும்பி கொண்டாளே.. 




அப்போது விட ஓங்கி தட்டிய இரண்டு தட்டில் அடுத்த நிமிடம் தன் பிரச்சனைகளை ஒதுக்கி பதறி எழுந்து நின்றிருந்தாள் ஜான்வி.. விழிகள் மாறா பயத்தோடு எதிரில் நின்ற கடைக்காரரிடம் பதிய.. ஏதாவது வாங்கறதுனா வாங்கு.. இல்லை இடத்தை காலி பண்ணு.. வடமொழியில் அவர் கூறியது புரியவில்லை தான்.. ஆனால் நாயை விராத குறையாய் கை செய்கை புரிகிறதே.. நொடியில் அவரைப் பற்றிதான் கொண்டிருந்த நல்லெண்ணங்கள் அதற்கு மேல்  மேலும் உள்ளே இருக்க அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. வேகமாய் வெளி வந்து விட்டாள்.. 




விழிகளில் அந்த மிரட்சி மட்டும் இன்னும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.. இங்கு நின்றால் அவனுக்கு தன்னை அடையாளம் தெரியுமா.. அந்த டீ கடை தானே பிரதான அடையாளம்..  கண்கள் ஒரு கணம் அந்த கடையை தொட்டு எதிர் பக்கமாய் சென்றது..





இனி எவ்வளவு நேரமோ இங்கு தான் நின்றாக வேண்டும்.. உச்சி வெயிலில்.. காட்டமான நெரிசலில்.. சலிப்பாகியது..



ஆனாலும் அம்மா.. அம்மா.. அவள் மனம் உரு போட்டதும் அடுத்த நிமிடம் அத்தனை தெம்பு.. 



விழிகள் எழும்பி பார்த்தன.. யாராவது வருகிறார்களா.. ஆனாலும் அவளுக்கும் தெரியாது வரபோறவன் யார் என.. ஏதோ கடவுளின் ரூபமாய் தன் ஆசிரியை மாலதியின் உபயம்.. இல்லையெனில் இந்நேரம் அவளுக்கு என்ன இருக்கும் ஒரே உறவையும் இழந்து இருப்பாள்.. 



பணம் எதுவும் இருக்குமா மேடம்.. என அவள் கேட்ட நிமிடத்தில் தொகையைக் கேட்டு அதிர்ந்து அவ்வளவு பணம் என்கிட்ட இல்லையே.. ஆனா எனக்கு தெரிஞ்சு ஒரு கந்துவட்டிகாரன் இருக்கான்..  அங்க எங்க அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் பாக்கும்போது அவன் கிட்ட கொஞ்சம் வாங்கனோம்.. மனதை கூறிக் கொண்டிருக்கும்போதே என்ன ட்ரீட்மென்ட் மேடம்.. வாய்விட்டு கேட்டிருந்தாள்..




டிரான்ஸ்பிளடேஷன் தான்.. கூறியதும் இப்போ நல்லா இருக்காருல.. அவசரமாய் கேட்டாள்.. ஆப்ரேஷன் முடிஞ்சதுல இருந்து கொஞ்ச நாள் மட்டும் நடக்க முடியல.. இப்போ எல்லாம் ரொம்பவே சூப்பரா இருக்காரு.. மாலதி கூறிய வார்த்தையினில் மனதூடாக சிறுபிரகாசம்.. இந்த விஷயத்தில் தனக்கு துணை கிடைத்த அற்ப மகிழ்ச்சி..



தாயை காப்பாற்றி விடலாம்.. காப்பாற்றி விடலாம்.. அந்த வார்த்தையே அவளுக்கு பெரும் ஆறுதலாய்.. ஆனால் இப்போது பணம் வேண்டுமே.. 



தொடர்ந்தாள் மாலதி.. சொன்னா சொன்ன நேரத்துல சரியா குடுக்கணும்.. ஆனா மனுஷன் கொஞ்சம் நல்லவர் தான்.. நீ வேணும்னா அங்க போய் எனக்கு போன் போட்டு கொடு நான் பேசுறேன்.. கூறியதில் கண்ணுக்கு தெரியாது இருளில் சிறு விளக்கொளி கிடைத்த நிம்மதி..



மாலதி கொடுத்த போன் நம்பரை வாங்கி போனில் பதித்துக் கொண்டவள் அடுத்த நிமிடம் அந்த எண்ணுக்கு அழைத்து இருந்தாள்.. காரணத்தோடு தேவையும் கேட்கப்பட்டது. . அது பேசியவன் இதோ இங்கு வந்து நிற்க கூறி இருக்கிறான்..




திடீரென அசாத்திய வேகமாய் அவளை நோக்கி வந்த நெடு நெடு நெடியனை கண்டதும் ஒரு பக்கம் அச்சம் மறுபக்கம் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமே என்ற தவிப்பு..  தன் எலிக்குட்டி உடலை வளைத்து ஒரு மாதிரியாய் நெளித்து அங்கிருந்து தட்டுக்குள் நகன்று கொண்டவளை முன் வந்து நின்றான் அவன்.





புரியாமல் பார்த்தாள் அவள்.. தும் நாம் ஜான்ஹை.. ஹிந்தியில் அவன் கேட்ட கேள்வி எதுவும் புரியவில்லை எனும் ஜான் என்ற பெயரில் அவள் கண்களை மிரட்சியோடு சிமிட்டி.. ஜான்வி என்றாள்... திருத்தினாள்.. இந்த நேரத்துல இந்த திருத்தம் முக்கியமா.. மனசாட்சி எள்ளி நகையாடியது.. 



அவன் பெரிதாய் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.. ஆவ்.. கூறிவிட்டு முன்னே நடந்தவனை பின்தொடர்ந்தாள்..  



கால்கள் பயத்தோடு முன் சென்றவனை தொடர பார்வையோ அவன் மீது படிந்தது.. அகன்ற பரந்த தோள்.. செல்லும் இடம் தவறானது என்றால் நொடியில் தன்னை சுழற்றி உள்ளே இழுத்து அடைத்து போட முடியும்.. மும்பைல சிவப்பு விளக்கு பகுதி நிறைய இருக்குமாம்.. ஒரு நாள் தோழி கூறியது கேளாமல் இப்போது காதுக்குள் வந்து விழுந்தது..



ஒருவேளை தன்னை அப்படி ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விடுவானோ.. மனதில் திக் திக் என நிமிடங்கள்.. 



ஒருவேளை அப்படி மட்டும் நடந்துச்சு ஒரே செகண்ட்ல சுத்தி சுழண்டு படிச்ச சிலம்பு வித்தையா காட்டிட மாட்டேன்.. உள்ளுக்குள்ள இருந்த வீரமங்கை குரல் எழுப்ப கரமோ தன்னிச்சையாய் தன் சிறு தொப்பையான மேடிட்ட வயிற்றை தடவியது..



பயந்த விழிகளில் திடீரென கனிவு.. அன்பு.. இதுதான் தாய்மையோ.. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னை இழுத்து பிடித்து நிதானிக்க வைக்கிறதே.. என்னும்போதே இதனால் தான் தன் தாய்க்கு இப்படி ஒரு நிலை என்பதும் புரியாமல் இல்லை..




ஜான்வி இளங்கலை பொறியியல் படிப்பு முடித்த நவீன காலத்துப் பெண்.. பொறியியல் படிப்பு என்பதற்காக அவ்வளவு வசதி எல்லாம் கிடையாது.. பத்தாம் வகுப்பில் பள்ளியின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி ஆதலால் 11 12 ஆம் வகுப்பிற்கு இலவசம் என பள்ளியில் கூறியிருக்க.. பெரிய கும்பிடு போட்டு அதே பள்ளியில் தன் படிப்பை தொடர்ந்தாள்.. தான் நினைத்தது போல் முதல் குரூப் எடுத்து படித்தவள் 12-ம் வகுப்பில் முதல் இல்லை எனினும்.. 1100க்கும் மேற்பட்ட மதிப்பெண் தான்..




சிறுவயதிலிருந்தே பொறியியல் என்றால் மிகப்பெரிய படிப்பு என மனதில் பதிய வைத்திருந்தவள்.. அதே படிப்பேன் என ஒரே அடமாய் பிடித்து தாயோடு கல்லூரி வாசலில் ஏறினாள்.. தன்னிடம் மதிப்பெண் இருக்கிறதே என்ற நம்பிக்கையோடு..




ஆனால் இடம் கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை.. என்னதான் மதிப்பெண் இருக்கிறது என்றாலும் சிறு அளவுக்கு தொகையே குறைக்கப்பட்டது.. ஆனால் குறைக்க பட்ட தொகையும் டொனேஷன் என்ற பெயரில் கேட்கப்பட்டது..



ஓர் இரண்டு காசு கூட கொடுக்க நாதியற்று வீட்டு வேலைக்கு சென்று மகளை காப்பாற்றும் பாக்கியலட்சுமிக்கு அவ்வளவு பணத்தை எங்கிருந்து புரட்டுவது என தெரியவில்லை..  அப்போதுதான் அந்த கர்ணக்காரன்.. ஆர்யன்.. அவன் பேரை சொல்லும் போதே இன்னும் இந்த வெட்கம் கெட்ட நெஞ்சம் இனிக்கிறதே..  அவன் தான் கையை நீட்டினான்.. அவளை தூக்கி விட்டான்.. 



அவன் மிதாவின் அண்ணன்.. மிதாவும் அவளும் சிறுவயதிலிருந்தே உயிருக்கு உயிரான தோழியர்.. இவளுக்கொன்று என்றால் அவள் கண்ணில் ரத்தம் வழியும்.. அவளுக்கு ஒன்று என்றால் இவள் உயிர் பரிதவித்துப் போகும்.. மிதாவை விட எட்டு வயது கூடியவன்.. அதனால் தானோ தங்களை விட அத்தனை அனுபவம் அவனுக்கு.. தந்தை குடிகாரராய் இருந்த நிலையில் படித்து முடித்ததும் பொறுப்பான பையனாய் வேலையில் அமர்ந்து விட்டான்.. தாய் தங்கைக்காக விடாது உழைத்துக் கொட்டி இப்போது அவர்களுக்கு என பெரிய சொந்த வீட்டையும் கட்டி முடித்து இருக்கிறான்.. அவர்களுக்காக மட்டும் தானா.. மனசாட்சி சட்டென எழுந்து கேள்வி கேட்டது.. அன்றைய நாளில் உனக்காக தாண்டி அத்தனையும்.. என காதுக்குள் முனகினானே.. அதை தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் மொத்தமும் நினைவு வர.. கண்களோ அன்று நடந்த நிகழ்வின் ஆதாரமாய் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த கருமணியிடம் பதிந்து கலங்கி போயின..




திடீரென ஏதோ ஒன்று மாறுதலாய் தோன்றியதில் அப்போதுதான் கவனித்தாள்.. முன் சென்றவன் நின்று திரும்பி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் புரியாமல் விழிக்க.. உள்ளே செல் என்பது போல் அவன் கை காட்டிய விதத்தில் தலையாட்டி உள்ளே சென்றாள்.. அந்த குறுகலான சந்து.. சற்று பயத்தை வரவழைத்தது.. 



நின்ற ஆட்களின் பார்வை எதுவும் சரி இல்லை.. சற்று நேரத்தில் முன் பேசிய வீரமங்கை ஒழிந்து கொண்டாள் போலும்.. நடுங்காத குறையாய் வயிற்றில் ஒரு கரும்பும் நெஞ்சில் மறுகரமுமாய் பதித்து உள்ளே சென்றாள்.. 



திடீரென அந்த குறுகிய சந்துக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் பரந்து விரிந்த இடத்தை கண்டதும் விழித்தாள். இது என்ன இடம் என சுற்றும் முற்றும் பார்க்க.. வாங்க.. இன்னொருவன் அழைத்துச் சென்றான்.. அவள் நினைவு மீண்டும் கொசுவத்தி சுழலாய் பின்னே நகர்ந்தது..



என்ன டி இது.. தன் டிரஸ்சுக்குள் மறைத்து வைத்திருந்த பிரக்னன்சி கிட்டில் இரண்டு கோடை கண்டு அதிர்ந்து பார்த்தபடி கேட்டார் பாக்யா.. 



அம்மா.. அது.. கல்லூரியின் கடைசி செமஸ்டரில் படித்து கொண்டிருந்த இளஞ்சிட்டுக்கு பதில் சொல்ல தெரியவில்லை..



இது என்னன்னு கேட்டேன்.. தாய்க் குரலை உயர்த்தியதில் அம்மாஆஆஆஆ.. அலறி அவர் காலிலேயே விழுந்து விட்டாள்.




யாரு.. என பெருமையான பார்வையோடு கேட்டவரிடம்.. பதில் கூற முடியாது தவித்தாள்.. அவன் தான் இப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை என உறுதியாய் கூறி விட்டானே.. அப்படி இருக்க தாயிடம் மட்டும் பெரிதாய் என்ன கூறி விட முடியும்.. கண்ணோடு கண் பார்த்தோம்.. காதலிப்பதாய் நம்பி கயவனிடம் ஏமாந்து விட்டேன் என்றா கூற முடியும்.. 



பதில் சொல்ல முடியாமல் அவள் தயங்கி நின்றதிலேயே.. அடியே.. என சிறு வயதிலிருந்து கஷ்டம் பொறுத்து..  தன் தோள் மீது தாங்கி.. தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக வளர்த்த செல்ல மகளை ஓங்கி அறைந்திருந்தார் பாக்யா.




அம்மா.. அடி வாங்கியவள் வலியின் சுவை உணராது தன் தாயின் கலக்கம் கண்டு தானும் கலங்கி நிற்க.. சொல்லு டி.. என தாய் நெஞ்சை பிடித்துக் கொண்டு கேட்டபடியே கீழே சரிந்ததில்.. அம்மா.. பாய்ந்து அவரை தாங்கினாள்.



அம்மா.. அம்மா.. உலுக்கி அழைக்க அவரிடம் எந்த பதில் வினையும் இல்லாமல் போனது.. கண்கள் மூடி விட.. பதறி விட்டாள். இந்த உலகில் தனக்கென இருக்கும் வரை உறவையும் இழந்து விட்டேனா.. அதுவும் என் கேவலமான முட்டாள்தனத்தினால்.. அம்மா.. அம்மா.. எத்தனை முறை கண்ணீரோடு அழைத்தும் அவரிடம் எந்த பதில் வினையும் இல்லை..



வேகமாய் ஓடினாள் பக்கத்து வீட்டுக்கு.. அக்கா..அக்கா.. படபடவென கதவை தட்டி அழைத்ததில் வெளியே வந்தாள் பூரணி.. இரண்டு முகத்தோடு அழுகையும் வியர்வையுமாய் படபடப்பாய் நின்றவளை கண்டு என்னாச்சு.. என கேட்க.. அம்மா.. மயங்கிட்டாங்க எனக் கூறியவளுக்கு வார்த்தையே வரவில்லை.. 



என்ன.. அதிர்ந்து உள்ளே இருக்கும் தன் கணவரை அழைக்க.. அதன்பின் பாக்யாவை தூக்கி அந்தப் பெரிய அரசு மருத்துவமனைக்கு முன் ஆட்டோவை நிறுத்தினர்.




அடுத்த கால் மணி நேரத்தில் சீட்டு வாங்கி உள்ளே அனுமதிக்கப்பட்டார் பாக்யா.. ரத்த கொதிப்பால் வந்த இதய அழுத்தமாம்.. செய்தி கூறப்பட்டது.. அம்மாவுக்கு சுகர் இருக்கா.. கேட்ட கேள்விக்கு இல்லை என தலையாட்டினாள்..



இல்லையே.. ஆறு மாசமாவே சுகர் இருந்திருக்கு.. அப்போதுதான் வந்த டெஸ்ட் டாக்குமெண்டை பார்த்து கூறினார் டாக்டர்.. 



டாக்டர்.. அதிரந்தாள்.. அவனைப் பார்த்த கணத்திலிருந்து மூளை பொரி சாப்பிட சென்றிருக்க தன்னை பெற்று கண்ணுக்குள் மணியாய் வைத்து வளர்த்த தாயை இந்த மூன்றரை வருடங்களாய் மறந்த தன் முட்டாள் தனத்தை இப்போது நொந்து கொண்டாள்.. ஆனால் இந்த மூன்றரை வருடங்களில் ஒரு நாளும் கூட வாயை திறந்து அவன் தன்னை காதலிப்பதாய் கூறவே இல்லையே.. இப்போது மனம் எண்ணி வெம்பியது..




இன்னொன்னு உங்க அம்மாவுக்கு கிட்னி ஃபெயிலியர் ஆகி இருக்கு..  உடம்பிலயும் சத்தே இல்லாம இருக்காங்க.. முதல் அட்டாக்னாலும்.. உடம்புல அதிகமாகி இருக்கிற சுகர்.. உடம்பு தெம்பில்லாமல் இருக்கிறது.. அதோட கிட்னி ஃபெயிலியர் என ஒவ்வொன்றாய் அவர் கூறி வர..  அம்மாவுக்கு ஒன்றும் இல்லை என கூறி விட வேண்டும் என அந்த ஒரு நிமிடத்தில் அவள் வேண்டாத தெய்வம் இல்லை.  




ஆனால் அவள் எண்ணத்தில் ஆசை பாதி ஆசிட் பாதி என ஊற்றி.. இப்போதைக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.. ஆனா இந்த நிலைமை இப்படியே இருந்துச்சுன்னா அப்புறம் உங்க அம்மாவ காப்பாத்துறது முடியாத காரியம்.. என்றிருந்தார் டாக்டர்..




அப்போ என்ன பண்ணனும் டாக்டர்.. பயத்தில் அடைத்த தோண்டை குழியை எச்சில் விழுங்கி உள்ளே தள்ளியபடி அவள் கேட்டதற்கு.. கிட்னி ட்ரான்ஸ்பிளடேசன்.. உங்க அம்மாவுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடத்தணும்.. அவர் கூறிய வார்த்தைகளில் நெஞ்சை பிடித்தாள்.. 



அறுவை சிகிச்சை என்றாலே எவ்வளவு பணம் தேவைப்படும்.. அதற்கெல்லாம் எங்கு செல்வது.. என்ன செய்வது.. நிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் பாக்யா..



வீட்டிற்கு வந்ததிலிருந்து வேலைக்கு செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை.. பகல் நேரத்தில் கல்லூரிக்கும் இரவு நேரத்தில் தாய் வேலை செய்த அதை வீட்டிற்கும் தானே வேலைக்கு கிளம்பி இருந்தாள் ஜான்வி.




வீட்டுக்கு வந்து ஒரு மாதம் கழிந்து இருந்தும் மகளிடம் எதுவும் பேசவில்லை பாக்யா.. சமைத்து மட்டும் வைத்து விடுகிறார் அவளுக்கும் சேர்த்து.. அம்மா.. பேசும்மா.. எத்தனை முறை கேட்டும் அது யாரு என்ற கேள்வி மட்டுமே.. பதில் கூற முடியவில்லை.. அமைதியாய் சென்று விடுவாள்..



ஆனால் அன்று.. 



கமெண்ட்ல உங்க கருத்துக்களை சொன்னா சப்போட்டிவா இருக்கும்.. ♥️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...