இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்..
அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை.. அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..
" அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்.. அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்.. ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..
காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனால் என்னவாயிற்று..
புரியாமலேயே பேருக்கென ஏதோ ஒரு சமையலை செய்து பிள்ளையை குளிக்க வைத்து கிளப்ப ஆரம்பித்தாள்..
இரவும் தந்தையை காணாது.. பகலிலும் காண முடியாது போனதில் அப்பா எங்கேம்மா.. அப்பா எங்கே.. ஏன் என்ன பாக்காம போயிட்டாரு.. கேட்ட போதெல்லாம் நேற்று போல் சரியாய் போன் செய்வானா அவள் விழிகள் போனை தழுவி சென்றது.
" அப்பாவுக்கு போன் பண்ணி கொடுத்தா தான் நான் ஸ்கூலுக்கே போவேன்.. " அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள் கிருத்திகா.. காலையில் தான் அடித்த போது எடுக்காதவன் இப்போது மட்டும் எடுத்து விடுவானா..
" அவன் ஏதோ வேலையில் இருக்கான்டி எடுக்க மாட்டான்.. "தனக்கே சேர்த்து இந்த ஆறுதல் மொழிகளோ..
" அதெல்லாம் முடியாது நான் கூப்பிட்டா அப்பா எப்பவும் எடுப்பார்.. " என்றவள் ஓடிச் சென்று போனை எடுத்து வந்து நீட்ட.. எப்படியும் எடுக்கப் போவதில்லை என எரிச்சலோடு போனை ஆன் செய்த வேளையில் மேலிருந்து அசோக் என வந்திருந்த காலில் அவள் விழிகள் ரெண்டும் விரிந்தன.
அப்போது தான் கடைசி ரிங் வரை அழைத்தும் அழைப்பை ஏற்காதவன் இப்பொழுது மகள் அவனுக்கு அழைத்துக் கொடு என போனை நீட்டிய உடனே எப்படி அழைக்கிறான்.. இவனுக்கு மட்டும் எப்படி தெரிகிறது.. யோசனையை மூளையோடு ஒதுக்கி போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க..
ஹலோ.. அவள் குரலுக்கு மாறாய்...
பாப்பா.. அடுத்த கணம் உருகியது அவன் குரல்..
பிள்ளையிடம் தான் பேச விரும்புகிறான்.. மனம் வெறுமையாகி போக அடுத்த கணம் போனை தன்னையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்த கிருத்திகாவிடம் கொடுத்தாள்.
அப்பா.. இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் ஆசையோடு வாங்கி காதில் வைத்து கொண்டாள்.. எதிர்முனையில் என்ன கூறினானோ..
ஹான் சரிப்பா..
சரிப்பா..
குட் கேர்ள்..
பாய் பா.. பேசியதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது.. தன்னிடம் ஒரு வார்த்தையும் பேச வேண்டும் என தோன்றவில்லையா..
இதுவரை அழுது அடம் பிடித்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் அந்த சுவடே தெரியவில்லை.. மகிழ்ச்சி பேரழையாய் பூத்து குலுங்கி கொண்டிருந்தது.
நெஞ்சத்தில் ஓரமாய் சிறு பொறாமை எழுவதை தவிர்க்க முடியவில்லை.. என்னடி சொன்னான்.. தலை வாரியபடியே ஜான்வி கேட்க..
"அப்பாவாம்மா.. " அப்பா என கூறும் போது குழந்தையின் கண்கள் மின்னின. இவள் பொறுமை வெகுவாகவே சோதிக்கப்பட்டது..
!ம்ம்ம்.. அவன்கிட்ட தானே இப்ப பேசுன.." என்றவளுக்கு அப்பா என்ற வார்த்தை இன்னுமே சின்ன உறுத்தலாய்.. ஆனால் அவர்களின் பாசம் உண்மையான தந்தை மகளை விட அளப்பரியதல்லவா..
" உன்ன கோபப்படுத்தாம ஸ்கூலுக்கு கிளம்பனுமாம்.. நீ சொல்றதெல்லாம் கேட்கணுமாம்.. அப்ப வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகுமாம்.. " தொடர்ந்து பிள்ளை கூறிக்கொண்டே போனதில்" என்ன ரெண்டு நாளா.. "நெஞ்சம் நின்று விட காரணம் புலப்படவில்லை..
" என்னிடம் எதுவும் சொல்லவில்லையே.. அதுவும் இரண்டு நாளாய் வீட்டிற்கு கூட வர முடியாத அளவிற்கு என்ன வேலையாம்.." ஏனோ நெஞ்சு கனத்தது..
" நான் குட் கேர்ள்லா உன்ன பாத்துக்கணுமாம்.. அவ்வளவுதான் சொன்னாங்க... ஸ்கூலுக்கு கிளம்ப சொல்லிட்டாரு.. சீக்கிரமா கிளப்பி விடுமா நேரம் ஆகுது.. " என இதுவரை செல்ல மாட்டேன் என அடம்பிடித்துக் கொண்டிருந்தவள் தந்தை பேசிய அடுத்த கணம் அந்தர் பல்டி அடித்து பேசினாள்..
மகள் அத்தனை கூறியும் அவள் மனமோ அவன் இரண்டு நாட்களாய் வீட்டுக்கு வரமாட்டான் எனக் கூறியதிலேயே ஸ்தம்பித்து நின்று விட்டது..
குழந்தையை அழைத்துக் கொண்டு கிரஷில் விட்டதோ ஆபீஸ்சிற்கு வந்ததோ.. இதையும் அறியும் நிலையில் இல்லை அவள்..
நல்ல வேலையாய் சீக்கிரமாய் கிளம்பியதால் நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்..
" ஏன் என்னிடம் பேச மறுக்கிறான் என் என்னை ஒதுக்குகிறான்.. " வெறித்த விழிகளோடு வந்தவளை.." ஜான்வி.." அவள் தோள் குலுக்கி நிறுத்தினாள் திவி.
"ஹா.. ஹான்.." அப்போதுதான் அலுவலகத்திற்கு வந்ததையே கவனித்தாள்..
ஒரு மார்க்க பார்வையால் அவளை ஆழ்ந்து பார்த்தாள் திவி.. "என்ன ஆச்சுடி.. காலையிலேயே அப்செட்டா இருக்குற மாதிரி இருக்கு.." புரியாத பார்வையில்..
" இல்ல நீ வரும்போது திவாகர் உனக்கு விஷ் பண்ணாரு.. நீ அவர கண்டுக்கவே இல்லையே.. அதான் கேட்டேன்.. " என கூற தலையை மட்டும் ஆட்டியபடி தன்னிடத்தில் அமர்ந்து விட்டாள்.
" தான் ஏன் அவன் பேசாததற்கு இவ்வளவு தூரம் வருந்துகிறோம்.. இதற்கு முன் கூட இப்படி எல்லாம் நடந்திருக்கிறது தானே.." எழுந்த கேள்வியில் " ஆனா அப்போ எல்லாம் இப்படி ரெண்டு நாள் வீட்டுக்கு வர மாட்டேன்னு பிள்ளை கிட்ட மட்டும் சொல்லிட்டு அவன் போனதில்ல.. " பதில்மொழி கூறியது மனம்..
" தன்னோடு பேசாததோடு இப்போது வீட்டுக்கு வர இரண்டு நாட்கள் லூப் எனக் கூறியதை மீண்டும் மீண்டும் லுக் மோடில் மைண்ட் ஓட்ட ஆசையான வேலையும் கூட பாரமாகி போனது..
மனம் எதிலும் லயிக்கவில்லை.. ஆரியன் திட்டிய போது கூட ஒரு கட்டத்தில் வேலையில் மூழ்கி விட்டிருந்தவளால் இப்போது துளியும் முடியவில்லை.. தாங்க மாட்டாமல் தானே போனை எடுத்து அவனுக்கு அழைப்பு விடுத்திருக்க எதிர்பார்த்ததுதான்.. கடைசி ரிங் வரை சென்று கட்டானது கால்..
இந்நேரம் அவன் பொண்ணு அடிச்சா மட்டும் உடனே எடுத்து இருப்பான்.. மனதில் ஓரமாய் சிறு பொறாமை..
" அது சரி நீ அடிச்சா அவன் எடுக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா.." மனசாட்சியின் கேள்வியில்" அதுக்குன்னு என்னை எதுக்கு அவாய்ட் பண்றதாவது எனக்கு தெரியணுமா இல்லையா.. அப்படி நா என்ன தப்பு பண்ணேனாம்.. " யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. மேடம்.. முன்னே வந்து நின்றான் பியூன்..
அவன் எதற்கு வந்திருப்பான் என உணர்ந்ததும் மனம் ஏதோ சலித்தது..
" மேடம் சார் உங்கள வர சொன்னாரு.. " அவன் கூறியதும் திவி ஜான்வி பக்கம் திரும்பியவள்.. பின் என நினைத்தாளோ அமைதியாய் மீண்டும் அமைதியாய் தன் வேலைக்குள் தலையை விட்டுக் கொண்டாள்..
" வரேன்" என அவள் கூறியும் செல்லாது அவன் அங்கேயே நின்றதில் "இன்னும் என்ன" சலிப்பு தட்டியது அவள் குரலிலும்.
" சார் உடனே வர சொன்னாரு மேடம்.. ப்ளீஸ் வாங்க.. "இல்லையெனில் தனக்கு தான் திட்டு விழும் என அவன் அங்கேயே நிற்க.. தான் எழாத வரை அவன் செல்லப் போவதில்லை என உணர்ந்து எரிச்சலோடு எழுந்தாள்.
" இது என்ன கருமம்.. முன்புவாட்டி வதைக்கிறேன் என்ற பெயரில் இடத்திற்கே வந்து கண்டமேனிக்கு வார்த்தைகளால் குத்தி கிழித்தான் என்றால் இப்போது சமாதானம் ஆகிவிட்டேன் பேர்வழி என அவ்வப்போது அறைக்குள் அழைத்து தன்னை நோகடிக்கிறான்.. " எரிச்சலோடு எழுந்து அவன் அறைக்குள் செல்ல.. தான் வந்த வேலை முடிந்ததில் நிம்மதியாய் அங்கிருந்து சென்றான் பியூன்.
"டப்.. டப்.." கதவு தட்டும் சத்தத்தில் வா ஜானு.. உள்ளிருந்து உரிமையாய் அவன் குரல்..
கதவை திறந்து உள்ளே நுழைய.. அவள் வருவதற்கு எனவே எதிர்பார்ப்பாய் மேசைமீது சாய்ந்து ஒற்றைக்கால் மடித்து கிட்டத்தட்ட அவன் நின்று இருந்து தோரணை முதன் முதலில் அவளை பார்த்த நிலையில் தான்..
அவனின் சின்ன சின்ன அசைவம் கூட அவளின் பொக்கிஷ பெட்டகம் அல்லவா.. கண்டதும் அன்றேய நினைவுகளோடு ஜோடி போட்டுக் கொண்டது.. ஆனால் மனதில் அந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியோ இல்லை.. மாறாய் இருந்த கடுப்போடு எரிச்சலும் கூட சேர்ந்து பொங்கியது.
" என்ன சார் எதுவும்.. புது ப்ராஜெக்ட்டா கூப்பிட்டீங்கன்னு சொன்னாரு வார்த்தைகளில் படபடத்தாள்..
" ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஜானு.. இப்ப எதுக்கு இவ்வளவு படபடன்னு பேசுற.. நான் கூட தள்ளி தானே நிக்கிறேன்.. " அவன் குறும்பு பேச்சையோ பார்வையையோ ரசிக்கும் நிலையில் அவள் இல்லையே.
" என்ன சொல்றீங்க.. " மாறாத இரைச்சலோடு கேட்டபோது தான் அவன் என்ன கூறுகிறான் என உணர தானாக அவள் முகம் சிவந்து போனது.
"ச்சி.. நீ எல்லாம் என்ன சொன்னாலும் திருந்தவே மாட்டல்ல.. நேத்து செயலை கட்டினத இன்னைக்கு வார்த்தைல காட்டுற.. "முகத்தை அசௌகரியமாய் சுழித்தாள். அவன் முகம் போன துவண்டலில்..
அடுத்த கணமே தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளாய்.. " நீங்க ப்ராஜெக்ட் விஷயமா வர சொல்லலைன்னா நான் கிளம்புறேன் சார்.. எனக்கு நிறைய வேலைகள் இருக்கு.. " அவன் அருகில் நிற்பதும் கூட தகிப்பானது.. " வார்த்தைகளோடு வெளியே செல்லப் போனவளை சட்டென பாய்ந்து கரம் பற்றி நிறுத்தினான் ஆர்யன்.
தீப்பொறி கையில் பட்டதாய் உதறி நின்றாள் ஜான்வி.
" ஜானு ஏன் இப்படி எல்லாம் பேசுற.. நான்தான் உன்கிட்ட அத்தனை தடவை மன்னிப்பு கேட்டேனே.. இன்னும் நீ இப்படியே பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்.. " அவன் குரல் உடைந்தது.
" என்ன சார் உங்களுக்கு பிரச்சனை.. திடீர் திடீர்னு இல்லாததை நீங்களே கற்பனை பண்ணிக்கிட்டு பேசுறீங்க.. இல்லன்னா அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு வந்து இப்படி வந்து நினைக்கிறீங்க.. என்னதான் உங்களுக்கு வேணும்.."
" என்ன அர்த்தம்னா கேட்டீங்க.. அதான் நேத்து உங்க அம்மா தான் சொன்னாங்களே.. உங்களுக்கு ஈக்குவலா பணத்திலேயே குளிக்கிற பெண்ணை உங்களுக்கு பார்த்து வைத்திருக்கிறதாவும் அவள தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்னு.. பண்ணிட்டு போங்களேன் சார்.. என்ன விட்டுடுங்க.. " தன்னை மறந்த நிலையில் சிடுசிடுத்துவிட்டு வேக நடையோடு அவன் அறையில் இருந்து வெளியேறப் போக.. ஜானு ப்ளீஸ்.. அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே திடுமென கதவு திறக்கப்பட்டதில் தன் அனுமதி கேட்காமல் உள்ளே வந்தவரை.. ஏய்.. என சுள்ளேன எழுந்த கோபத்தோடு திட்ட அவன் வாய் எடுப்பதற்குள்..ஆரிஈஈ.. துள்ளி குதித்து அவன் மீது வந்து விழுந்து இருந்தாள் ரூபா.. அவன் அத்தை மகள். அவனுக்கு பார்த்திருக்கும் பெண்.
இவளா.. இவள் எப்படி இங்கே.. அவன் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போதே.. ஓடி வந்தவள் கட்டியணைத்ததில் எதிர்பாராமல் இவன் கைகளும் அவளை முதுகோடு கோர்த்து இருக்க.. அனைத்த நிலையில் இருவரையும் அப்படி காண முடியாத அடுத்த கணம் வேக எட்டுகளோடு ஜான்வி கதவை திறக்க போக.. நேரத்திற்கோ என்னவோ இப்போது தான் ரூபா தள்ளிவிட்டு வந்த கதவு தன் கொக்கியோடு இறுகி நின்றது.
என்னாச்சு இதுக்கு.. அவசரமாய் அவள் முயற்சித்துக் கொண்டிருந்த போதே.. ரூபா அவரை விட்டு விலகியவளாய்.. அவன் தோளில் இருகரம் போட்டு மாலையாய் கோர்த்துக் கொண்டாள்..
அப்போதுதான் அதிர்ச்சியில் தன் கரம் அவள் மீது படர்ந்து இருக்க கண்டு ஜானகி என்ன நினைப்பாள்.. என அவசரமாய் அவன் தன் கரத்தை விலக்கப் போக.. மாமா.. குரலில் குழைந்தாள்.
" மாமா நீங்க நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டீங்கன்னு அத்தை சொன்னாங்க.. எனக்கு எவ்வளவு ஹாப்பி தெரியுமா.. என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் நீங்கதான் எனக்கு வரப்போற புருஷன்னு உங்க போட்டோவ காட்டினேன்.. எல்லாரும் உங்கள பாத்து வாயடைச்சு போயிட்டாங்க.. அம்மா அப்பாவுக்கும் கூட இந்த கல்யாணத்துல அவ்வளவு சந்தோஷம்.. " பேசிக்கொண்டே போனவள் பேயறைந்தார் போல் அவன் பார்வை சற்று தள்ளி கதவை திறக்க போராடிக் கொண்டிருந்தவளிடம் படிய கண்டு.. அப்போதுதான் அங்கு ஒருத்தி இருப்பதையே கண்டவளாய்.. "ஏய்ய்ய்.. " சொடுக்கு போட்டதில் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஜான்வி திரும்பினாள்..
அடுத்த கணமே அதிர்ச்சியானது ரூபாவின் முகம்.. " நீயா.. நீ அவ தான.. ஆரி மேல கேவலமான பழியை போட்டவ தானே.. " கேட்க முகம் சிவந்து போனாள் ஜான்வி..
" இன்னும் நீ என் ஆரிய விடலையா.. எத்தனை வருஷம் ஆகியும் கால சுத்தின பாம்பு மாதிரி அவரையே சுற்றி சுற்றி வர.. " அவள் கேட்டதில் அதிர்ச்சியாகி "ரூபா.." என அவளை அடக்கி ஆரியன் ஏதோ கூற வருவதற்குள்.. " நீங்க இருங்க மாமா இந்த மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் நான்தான் சரி.. "என்ற படி திரும்பியவள் .. " இங்க பாரு.. நீ இனிமேல் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் என் மாமா உனக்கு கிடைக்காது.. நானும் என் மாமாவும் கல்யாணம் பண்ணிக்க போறோம்.. அவரும் அதுக்கு ஒத்துக்கிட்டாரு.. வேணும்னா ஒரு சாம்பிள் பாக்குறியா.." என ஓர கண்ணால் அவளையே பார்த்தபடி சட்டென அவன் கண்ணம் பற்றி தன் உதட்டுச் சாயத்தை அவன் இதழுக்கு மேலாய் பதிக்க.. அவள் பேச்சு தந்த தகிப்போடு அவள் செயலை அதற்கு மேல் கண் கொண்டு காண முடியாதவளாய்.. இருவரையும் ஒரு கணம் அருவருப்போடு பார்த்து நல்லவேளையாய் கையோடு திறந்து விட்டிருந்த கதவிற்கு கும்பிடு போட்டு வெளியே ஓடி இருந்தாள்.
Nice ud.. Adutha ud podunga.. Eagerly waiting 🍫🍫🍫
பதிலளிநீக்கு