ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்.. ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.
தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்.. அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்..
என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..
அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் முடியாததை இந்த பொசசிவ்வை வைத்து முடிக்க வேண்டும்.. என மூளையில் வெட்டிய மின்னலோடு வேகமாய் அறைக்குள் நுழைந்தவன் ரூபாவோடு கைகோர்த்தான்..
" மாமா" அதிர்ச்சியோடு அவள் பார்த்தவளிடம்.. கண் சிமிட்டி புன்னகையோடு அவளை அழைத்துக் கொண்டு வெளிவர.. அப்போதுதான் திவி கூறியதில் ஓரளவு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வேலையில் ஆழ்ந்தவளின் விழிகள் எதைச்சையாய் நிமிர்ந்தன..
அவன் கைகோர்த்தபடி ஒட்டி உரசிபடி அவன் காதருகே மூக்கு நுனி உரச ஏதோ பேசிக்கொண்டே வந்தாள் ரூபா.. அவள் கூறுவதற்கு பதில் மொழியாய் ஏதோ கூறியபடி ஆரியன் வர அவ்வப்போது சிரிப்பும் வெட்கமும் அவளிடம்.. பேச்சோடு பேச்சாய் அவள் விழிகள் சுற்றி அழைப்பாய்ந்து அங்கு அமர்ந்திருந்த ஜான்வியை கண்டதும் அவளிடம் பளிச்சென்ன நின்று விட்டன.. உரிமையாய் இன்னும் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்." என் மாமன் மீது எனக்கு தான் எல்லா உரிமையும் என்பது போல்.."
என்னதான் அவன் வாழ்க்கை.. அவன் முடிவு என எடுத்துக் கொண்டாலும் இத்தனை வருடமாய் தான் கொண்ட ஞாபகங்களும் நினைவும் காதலும் ஒன்றும் பொய் இல்லையே.. அவளையும் அறியாது குடியேறின விட்ட இடத்தில் மீண்டும் கண்ணீர்..
ஆரியனுக்கும் ரூபாவின் செய்கையில் அசௌகரிகமாய் தான் இருந்தது.. அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்றுதான் அழைத்து வந்தான்.. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அவள் இப்படி தன்னோடு நெருக்கமாய் வருவதை அவனாலுமே முழுமனதாய் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
" என்ன பண்ற ரூபா இது ஆபீஸ்
. " அவளுக்கு மட்டும் கேட்கும்படி அடிக்குரலில் கூறினான்.
" அதனால என்ன மாமா.. நம்ம கட்டிக்க போறவங்க தானே.. அதெல்லாம் யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க.. எடுத்துக்கிட்டா அவங்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை.. பொறாமைன்னு அர்த்தம்.. " சரியாய் ஜான்வியை கடந்த போது அவளின் இந்த கடைசி வாக்கியம்..
கலங்கிய கண்களை சட்டென தரை தாழ்த்தி கொண்டாள்.. அதிகமாய் பேசி விட்டாள.. ஆரியன் பதறி ஜான்வி பக்கம் திரும்ப.. வாங்க மாமா நீங்க.. நம்ம ரவுண்ட்ஸ் போவோம்.. அவளைப் பார்க்கவும் விடாமல் இழுத்துக்கொண்டு நடந்தாள் ரூபா.
" அவசரப்பட்டு இப்படி ஒரு வேலை செய்திருக்க வேண்டாமோ.. " என யோசித்தபடியே அவளோடு நடந்தான் ஆர்யன்..
தனித்தனியாய் நின்ற ஒவ்வொரு யூனிட்குள்ளும் சென்று வழக்கமான விசிட்டை போட.. அவன் வருவதை கவனித்து ஏதோ ஒரு வார்த்தைகள் கூடுதளாய் பேசிக்கொண்டு நின்றவர்களும் உடனடியாய் தங்கள் இடத்தில் சென்று வேலை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.. ஒர்க்கர்ஸ்.. தன் மாமனை பார்த்து அனைவரும் புயலாய் சுழன்றடித்து வேலை செய்கின்றனரே.. ரூபாவின் விழிகள் கெத்தில் மின்னின..
அவனோடு கரம் கோர்த்து செல்வதில் ஏதோ தனக்கே அந்த மரியாதையும் மதிப்பும் தோன்றியதாய் மமதை வேறு..
ஆனால் ஜானவியை தாண்டிய மாத்திரத்தில் இருந்து இந்த ரவுண்ட்ஸ் அவனுக்கு வெறுத்துப்போனது என்பதே உண்மை..
மீண்டும் எப்போது சென்று அவள் முகத்தைப் பார்ப்போம் என பெயருக்கென அனைத்து இடத்திற்கும் போய் விட்டு வேகமாய் மீண்டும் வர.. சரியாய் ஜான்வியை நெருங்கிய சமயத்தில்.. மாமா.. குரலில் குழைந்தாள் ரூபா.. அவள் உருண்டு திரண்டு மேனி வேறு அவன் கைகளில் உரசி கொண்டிருக்க சட்டென எழுந்த எரிச்சலோடு..தள்ளி.. என ஆரம்பிப்பதற்குள்ளாக சிவந்த விழிகளோடு நிமிர்ந்து ஜான்வி பார்த்த பார்வையில் தானாக அவன் வாய் மூடிக்கொண்டது.
" கோபப்படாத ஆர்யா.. ஜானு உன்கிட்ட வர வைக்கிறதுக்கான ஒரே வழி இதுதான்.. கோபப்பட்டு இதையும் விட்டுடாத.. " என தனக்கு தானே கூறிக் கொண்ட படி.. "என்னம்மா" கேட்டான் முயன்று வரவழைத்த பொறுமையோடு.
எப்போதும் தான் ஒரு அடி எடுத்து வைத்தால் பத்து அடி பின்னே எடுத்து வைத்து தலை தறிக்க ஓடும் மாமன்.. இப்போது தான் இவ்வளவு நெருங்கி உருகி பேசியும் ஒரு வார்த்தை மறுத்து பேசாததில் ரூபாவின் முகத்தோடு கண்களும் மலர்ச்சியாகின..
" மாமா வந்ததுல இருந்து எதுவுமே சாப்பிடல.. கேன்டீன் போவோமா.." கேட்டதில் அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து முயன்று வேலை பார்ப்பது போல் கணினியில் கண் பதித்திருந்த ஜான்வியின் கண்கள் அவளையும் அறியாது ஒரு கணம் நிமிர்ந்து அவன் முகத்தில் ஆழமாய் குத்தி நின்றது.
அவள் வலியில் தனக்கும் வலிதான் எனினும் அவளே வாய் திறந்த தன்னை மன்னித்ததாய் கூற வேண்டும்.. தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. என்ற எண்ணத்தில்.. ஒஹ்ஹ்.. போகலாமே.. மலர்ந்த முகத்தோடு ரூபாவை அழைத்துக் கொண்டு சென்றான்.. அவள் விழிகளோடு இதழ்களும் விரத்தியோடு புன்னகையை சிந்தின.
ஜான்வி.. ஒன்னும் பிரச்சனை இல்லையே.. அவள் கலங்கிய கண்களை கண்டு திவி கேட்க.. ச்சே..ச்சே.. மீண்டும் தன் வேலையில் கவனம் பதித்தாள்.
எப்படியும் நினைத்தார் போல் அவளை வெறுப்பேற்றி ஆயிற்று.. அவளும் கொஞ்சம் கொஞ்சமாய் கோபப்படுகிறாள் தான்.. இப்படியே போனால் நிச்சயம் தன்னை ஏற்றுக் கொள்வாள்.. என அடுத்தடுத்த நாட்களில் நொடி கணமும் விடாது அலுவலக நேரத்தில் எல்லாம் ரூபாவை தன்னோடு இறுக்கிக் கொண்டே சுற்றினான் ஆரியன்.
" சார் என்ன எப்ப பார்த்தாலும் அந்த பொண்ணு கூடவே இருக்காரு"
" ஆமா அதுலயும் கவனிச்சியா எப்பவும் அந்த பொண்ணு கை கோர்த்துக்கிட்டே அவர் கூடவே தான் இருக்கு.. "
" ஒருவேளை கட்டிக்க போற பொண்ணோ.. "
" இல்லையா பின்ன.. அவங்க அன்னோன்யத்தை பார்த்தாலே தெரியல.. " சும்மாவே கண் மூக்கு காது வைத்து தங்களுக்கு கிடைக்கும் ஐந்து நிமிட இடைவேளையும் பயங்கரமாய் பயன்படுத்த தெரிந்திருந்தவர்களுக்கு ஆரியன் ரூபாவின் இந்த விஷயம் வாய்க்கு அவலாகி போனது..
" ஆனா அந்த பொண்ணு பார்க்க பயங்கர மார்டனா தெரியுதே.. சார் கொஞ்சம் ஹோமிலியா தான் இருக்காரு.. ரெண்டு பேருக்கும் செட் ஆகுமா என்ன.. " மறுபக்கம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டு வந்து திவி ஜான்வியிடம் கேட்டு வைக்க.. காதில் கேட்டும் கேட்காதது போல் அமர்ந்து இருந்தவளை உலுக்கினாள்.
" உன்ன தாண்டி கேட்கிறேன்.. " அவள் கேள்வியில் பட்டென கண்கள் சிவந்து.. " அது ஏன் என்கிட்ட கேட்கிற.. போய் அவர்கிட்டயே கேட்க வேண்டியதுதானே..
" மற்றவர்கள் பேச்சுக்கும் சேர்த்து இவளிடம் எரிந்து விழுந்தாள்..
கேட்ட திவியின் முகம் சட்டென வாடி போக தன் தவறை உணர்ந்தவளாய் ஹேய் திவி.. அவள் கரம் பற்றினாள்.
உனக்கே தெரியும்ல்ல.. வேலை நேரத்தில் இப்படி காசிப் பேசுவதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு.. ப்ளீஸ் ஏதோ டென்ஷன்ல கொஞ்சம் கோபமா கத்திட்டேன் தப்பா எடுத்துக்காத.. அவள் முகம் வாடியது.
அவள் தாடை பற்றி நிமிர்த்தினாள் திவி.. " பிரண்டு கிட்ட கோபப்படுறதுக்கு கூட உரிமை இல்லையா என்ன.. ச்சே.. ச்சே.. அதையெல்லாம் நான் தப்பா எடுத்துக்கல.. ஆனா உன் முகம் ஏன் ரெண்டு நாளா ஒரு மாதிரியாவே இருக்கு.. ஏதோ இழந்த மாதிரியே இருக்க.. என்ன ஆச்சு.. " அவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஏதேச்சையாய் அவர்களை கடந்து சென்ற ஆரியனின் காதில் இந்த வார்த்தைகள் விழ.. " இரண்டு நாளா.. அப்படியானால் அவள் உள்ளுக்குள் தனக்காக தான் தவித்துக் கொண்டிருக்கிறாள்.. " அடி வயிற்றிலிருந்து உவகை பெரும் புயலாய்.
" எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுற ஜானு.. ரூபா உனக்கு சரி வரமாட்டா..நான் தான் உனக்கு எப்பவும் எல்லாவும இருப்பேன்னு என் சட்டை புடிச்சிட்டு வந்து கேள்வி கேளுடி உரிமையா.. " மனதிற்குள் பேசியபடி அவன் பார்த்து நிற்க.. திடீரென யாரோ தங்களையே பார்த்து நிற்பதே உணர்ந்து திவி திரும்பியவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
"ஐயோ இவர் எப்ப வந்தாரு.. சும்மாவே திட்டுவாரே.." என்று ரீதியில் முட்டை விழிகளை உருட்டி விழிக்க.. இவ்வளவு நேரம் சாதாரணமாய் தன்னோடு பேசிக்கொண்டிருந்தவள் இப்போது அமைதியானதில் ஜான்வியும் திரும்பினாள்..
குறுகுறுத்த பார்வையோடு தன்னையே துளைத்துக் கொண்டிருந்த ஆரியனை கண்டதும்.. அடுத்த கணம் தன் பார்வையை மாற்றி வேலையில் ஆழ்வது போல் இருந்து விட.. " சொல்ல மாட்டா கல்நெஞ்சகாரி.
" இதனை மடித்து கடித்தான் ஆரியன்.
" ஆனா கண்டிப்பா உன்ன சொல்ல வைக்கிறேன்.. பாரு.. " அங்கிருந்து நகன்றான்..
"அம்மா.. அப்பா எங்கே மா.. ஏன் போன் கூட பண்ண மாட்டேங்குறாரு.. எனக்கு அவர பாக்கணும் போல இருக்கு.." தாய் வந்ததும் வராததுமாய் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு தந்தை புராணத்தை பாட ஆரம்பித்திருந்தாள் கிருத்தி..
காலையிலிருந்து தன் மனம் படுத்தும் பாடு ஒரு பக்கம் என்றால்.. வீட்டில் இவள்.. என எழுந்த எரிச்சலோடு.. " என்கிட்ட மட்டும் என்ன சொல்லிட்டா போனான் அவன்.. ரெண்டு நாள் அவன் வீட்டுக்கு வர மாட்டான்குறத கூட உன்கிட்ட தானே சொன்னான்.. அப்புறம் அவன் எங்கே எங்கேனு என்கிட்ட கேட்கிற.. " வார்த்தைகளில் ஆத்திரத்தை கொட்டினாள்..
அம்மா.. குழந்தையின் உதடுகள் அழுகையில் பிதுஙக.. கோபத்தை குழந்தை மீது காட்டிய தன் மடத்தனத்தை நொந்து கொண்டு.. பாப்பா.. அவளை நெஞ்சோடு அணைக்க கைகளை நீட்டிய சமயம் சட்டென வானில் பறந்திருந்தாள் குழந்தை.
அவளை உயர்த்தி தூக்கிப்போட்டு பிடித்துக் கொண்டு இருந்தான் அசோக்.
அஷோக்.. சட்டென அவள் விழிகள் மலர்ந்தன..
" அசோக் வந்துட்டியா.. எங்க போன இந்த ரெண்டு நாளா.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. போன்லயும் பேசல.. நானும் போன் பண்ணா எடுக்கல.. பாப்பா கிட்ட சொல்ற அளவுக்கு அவ பெரிய மனுஷியா" அடுத்தடுத்து எழுப்பப்பட்ட கேள்விகளை காதில் போட்டுக் கொள்ளாது குழந்தையை தூக்கிப்போட்டு அவன் பிடிக்க.. இதுவரை இருந்த சோர்வு மறந்து கலகலப்பு சிரித்துக் கொண்டிருந்தாள் குழந்தை..
குழந்தையை தோளோடு ஏற்றிக் கொண்டான் அசோக்..
அப்பா.. கையை கிழிறக்கி அவன் கண்ணம் கிள்ளி கொஞ்சினாள் மகள்.
சட்டென ஏதோ தோன்ற குழந்தையை தன் மார்பருகில் இறக்கியவனை நான் கேட்பதற்கு அவன் பதில் கூறாததில்.. மலர்ந்த முகம் மாறி குழந்தையோடு விளையாடும் அவனை தவிப்போடு பார்த்துக் கொண்டிருக்க.. என்ன இவ்வளவு காய்ச்சல்.. அவன் குரல் சட்டென பதறியது.
"காய்ச்சளா.. இல்லையே நல்லா தானே இருந்தா.." ஜான்வி கூறியபடி நெருங்க வர
... " அக்கா" ஓடி வந்தாள் பூவிதா.
" அக்கா பாப்பாவுக்கு பயங்கர காய்ச்சலாம்.. அவங்க டீச்சர் சொல்லித்தான் அனுப்பிவிட்டாங்க.. " கூறிய செய்திகள் அவள் விழிகள் விரிந்தன.
வந்து ஐந்து நிமிடம் ஆகியும் குழந்தையை கவனிக்காது.. அவள் உடல்நிலை எப்படி இருக்கிறது என கூட தெரியாது.. அவள் கூறிய வார்த்தைகளில் மட்டும் தன் ஆத்திரத்தை கொட்டிய தன்னை நொந்து கொண்டு தவிப்பாய் குழந்தையை ஏறெடுத்து பார்க்க..
வா.. முதல்ல ஹாஸ்பிடல் போகலாம்.. தன்னைத் தூக்கிக் கொண்டு நடந்தவனை.. வேணாம் அப்பா.. " பயத்தோடு நிறுத்தினாள் கிருத்திக் குட்டி..
உருண்டு கொண்டிருந்த விழிகள் அவள் பயத்தை சல்லடையிட்டது.
" என்னடா வேண்டாம்.. உடம்பு முடியலன்னா ஹாஸ்பிடல் போய் ஒரு ஊசி போட்டு வந்த எல்லாம் சரியாகிடும்.. " கூற.. " ஊசி எல்லாம் வேண்டாம் நீ என்கூடவே இருப்பா.. காய்ச்சல் சரியாகிடும்.. " தன் மலரை குரலில் கூறி அவன் கழுத்தோடு கட்டிக் கொண்டாள்.. மழலை சிட்டிடமிருந்து எப்படி ஒரு வார்த்தை.. இதை விட ஒரு தேவாமிர்தமும் வேண்டுமோ.
பாப்பா.. கரகரத்த குரலோடு தானும் அவளைக் கட்டிக் கொண்டான் அசோக்.
எப்பவும் அப்பா உன் கூடவே இருப்பேன் சரிதானா.. அவன் கேட்டதும் ம்ம்ம்.. வேகமாய் குழந்தையின் தலை உருண்டது..
இருவரும் அணைத்துக் கொண்டு நின்றதில்.. ம்ம்க்கும்.. பத்து வருஷம் கழிச்சு பாக்குற மாதிரி தான் பில்டப்.. என வாய்க்குள் முனகி கொண்டாலும் கண்கள் ஊர் கண்ணாய் அவர்கள் மீது மகிழ்ச்சியோடு பதிந்து தான் விலகியது புவிதாவிற்கு.. அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்று விட்டாள்.
அவர்கள் பாசத்தில் மனம் உருகி தன்னை மறந்து நின்றிருந்த ஜான்வியின் கண்கள் அவன் மீது ஆதூரமாய் படர.. அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணிட்டியாடா கண்ணா.. குழந்தையின் நெற்றி முட்டி கேட்டான் அஷோக்.
"ம்ம்ம்.. ரொம்ப.. ரொம்ப.. உன்ன பாக்காம நான் மட்டும் இல்ல அம்மாவும் கூட ஒரு மாதிரி ஆகிட்டாங்க.. அம்மா முகமே ரெண்டு நாளா உம்முன்னு இருந்துச்சு.. தெரியுமா.. " கிருத்தி கூறியதில் சட்டென அவள் பக்கம் திரும்பிய அவன் விழிகள் ரெண்டும் குழந்தை கூறியதில் அதிர்ந்து விழுந்த அவள் கண்கள் இரண்டோடு ஒட்டிப் போக.. நொடிக்கும் அதிகமாய் அவளை ஆழ் பார்வையால் துளைத்தவன்.. " உங்க அம்மா அப்படி இருந்ததுக்கு காரணம் நான் இல்லாம இல்லடா.. "என்றான் வலியான குரலில் முணுமுணுப்பாய்..
Woww.. Fantastic move.. Padikum podhe semmaya iruke.. Supero super.. 🤣🤣🤣🤣 nalla venum avaluku.. Keep write sissy maah🤩🤩🤩🤩
பதிலளிநீக்கு