உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான்.
இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.
அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு.. காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்.. ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது..
அசோக்.. அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..
நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்.. ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்..
நான் என்ன சொல்லாமல் இருக்கேன்..
நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கிற தா இன்னும் சொல்லலையே.. அவள் விழிகளுக்குள் தளைந்து விட அவன் ஈட்டி கண்கள் களைந்தன.
பைத்தியம்!! பிடிக்காமல் தான் இப்படியே கட்டிப்புடிச்சிட்டு இருக்காங்களா.. இல்ல முத்தம் கொடுக்கிறார்களா.. அவள் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே கண்களில் ஆசை மின்ன அவள் இதழ்களை தன்வயப்படுத்தி இருந்தான் அசோக்..
விரும்பியே மனம் உவந்து அவன் காதலுக்குள் திளைத்தாள்.. கரம் ரெண்டும் அவன் சட்டை காலரோடு ஊறி இன்னும் இறுக்கிக் கொள்ள.. தப்பேன சத்தத்தோடு அதற்கு மேல் மூச்சு வேண்டி விலகினர்..
முகம் குங்குமமாய் சிவந்திருந்தவளை கண்ணார ரசித்தபடியே.. தூங்கலாம் நேரம் ஆயிடுச்சு.. குறும்போடு அவன் கண்கள் கடிகாரத்தில் படிந்து மீண்டன.
அவளும் அப்போதுதான் மணியை பார்க்கிறாள்.. கிட்டத்தட்ட விடிந்து எழப்போகும் நேரம்.. 5 மணி..
இல்ல இருக்கட்டும் என எடுத்த வாய் ஆஆஆஆ.. சோடுக்கிட்ட கொட்டாவியில் முடிந்தது..
நேற்றிலிருந்து கொண்டு இருந்த அலைச்சல்.. பதட்டம் தவிப்பு.. அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாய் உறக்கம் கண்களை சொருக வைக்க.. சரி நீ தூங்கு.. என எழுந்து செல்லப் போனவளை கரம் பற்றி நிறுத்தினான்..
எங்கே டி போற.. தாய் விட்டு செல்லும் குழந்தையின் தவிப்பு அவனிடம்..
தூங்கணும்னு சொன்னியே.. அதான் பாட்டி கூட.. தவிப்பாய் கூறியவளை அப்படி ஒன்னும் உன் மேல பாஞ்சர மாட்டேன் டி.. நிம்மதியா படுத்து தூங்கு.. என கீழ்கண்களால் முறைத்து அவன் கூறியதில் அவள் கன்னங்கள் தான் குழிந்தன..
எவ்வளவு கோபம்.. அவன் மூக்கை பிடித்து இடம் வலமாய் ஆட்டினாள்.. உன்ன பத்தி எனக்கு தெரியாதா.. அங்க பாப்பா பாட்டி கூட இருக்கா.. எழுந்தா என்ன தேடுவாளே.. அதான் அவகிட்ட போறேன்.. கூறினாலும் எவ்வளவு முயன்றும் அவனை விட்டு செல்வதில் எழுந்த குரலில் வாட்டத்தை மறைக்க முடியவில்லை..
இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது.. பாப்பாவ பாட்டி பார்த்துப்பாங்க.. நீ இங்கேயே இரு.. தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.. சோர்ந்த குரலோடு கண்கள் ரெண்டும் பணியாரக் கல்லுக்குள் உருளும் பானி பூரியாய் அவன் கூறி முடிப்பதற்குள்ளாக அவன் மறுபக்கம் வந்து படுத்து இருந்தாள் அவள்.
லைட் ஆஃப் பண்ணு அசோக்.. தூக்கம் வருது.. சொர்ந்த அவள் பேச்சில் இதழில் தட்டிய புன்னகையோடு.. தெஎரிந்து கொண்டிருந்த லைட்டை அனைத்து விட்டு வந்து படுத்தவன் அடுத்த நிமிடம் மறுபக்கம் சரிந்து அவள் மார்பில் தலை வைத்து கவிழ்ந்தடித்திருந்தான்.
அஷோக்.. ஆழ்ந்து இழுத்த சுவாசக் காற்றில் இவள் சுவாசக்கூடு நடுங்கியது.
அசோக்.. என்ன பண்ற..
இது கூட இல்லனா மூச்சு முட்டிடும் போல இருக்குடி.. உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா.. இதே ரூம்ல எத்தனை நாள் உன் ஞாபகத்தோட தூங்க முடியாமல் நடந்திருக்கிறேன்.. ஆனா இன்னைக்கு.. நீண்ட மூச்சொன்று எடுத்து விட்டான்.. விரல்கள் தானாக உணர்ந்து அவள் இடையோடு ஒட்டிக்கொண்டன.. அவன் வார்த்தைகள் காட்டிய வலியில் அதற்கு மேல் அவனை தடுக்கவில்லை அவள்..
அவன் உச்சந்தலையில் முத்தமிட்டபடி தானும் இறுக்கி அணைத்துக் கொள்ள நீண்ட நாள்களுக்கு பின் உறங்கா இரவை மறந்து துயில் கொண்டிருந்தான் அவள் வாசத்துடன்!!
காலையில் ஜானு கண் திறக்கும் போதே.. கீழே பயங்கர சத்தம்.. என்னாச்சு.. இரவு நடந்தவை அனைத்தும் கனவு போல் கண்முன் வீரிய இதழ்களில் மென்மையாய் எழுந்த புன்னகையோடு அடுத்த நிமிடங்கள் போர்வையை சுருட்டி பக்கத்தில் திரும்பி பார்க்க அசோக்கை காணவில்லை..
ஆனால் கீழே ஏன் இவ்வளவு சத்தம்.. யோசித்தபடி வேகமாய் முகம் கை காலை அலம்பி விட்டு வர.. அங்கு.. ஒரு பக்கம் வெற்றி தேவனும் மறுபக்கம் கையில் சாப்பாட்டு கிண்ணத்துடன் யமுனாவும் நின்று இருக்க.. அசோக்கின் தோளில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் அவர்களின் புதல்வி..
ஒரு பக்கம் மூச்சு வாங்க நின்ற படி அவர்களை முறைத்துக் கொண்டு இருந்தாள் மிதா..
என்ன நடக்கிறது என புரியாமல் படிக்கட்டில் நின்றபடி அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே..
டேய் புள்ள சாப்பிடலனா அப்பனா இருந்து சாப்பிட வைக்கணும்.. அதை விட்டுட்டு நீயே இப்படி அவளுக்கு கொம்பு சீவி விட்டு தூக்கிட்டு ஓடுனா ஓடுற வயசுடா எனக்கு.. யமு காட்டு கருத்தாய் கத்திகொண்டு இருக்க.. அட அதானே.. அடேய் சத்ரியா.. வான்ட இறக்கி விடு.. உன் பாட்டி அதுல இருக்கிறத முழுக்க அவளுக்குஊட்டி முடிக்கிற வரைக்கும் என்னையும் சேர்த்து ஓடவப்பா.. கூறிய கணவரை சட்டென திரும்பி யமு பார்த்த பார்வையில் நா மேலானதோடு ஒட்டிப் போய்க் கொண்டது போலும்.. கண்களை ஒரு மார்க்கமாய் உருட்டி நல்ல பிள்ளையாய் கைகட்டி நின்று கொண்டார்.
அட இது என்ன வம்பா போச்சு.. பிள்ளைக்கு புடிச்ச மாதிரி சாப்பாடு செய்யணும்.. அதை விட்டுட்டு ஏதோ பேருக்கு செஞ்சத எடுத்துட்டு வந்து ஊட்டி விட்டா எப்படி சாப்பிடுவா.. இதெல்லாம் அநியாயம்.. ஒத்துக்க முடியாது.. ஒத்துக்க முடியாது.. தந்தையும் கிருத்திகாவும் ஒரே மாதிரியாய் கைகளை ஆட்ட.. அதற்குள் மிதா தூரத்தில் நின்ற ஜானுவை பார்த்தவளாய்..
ஜானு.. இங்க பாருடி.. வேகமாய் குற்ற பத்திரிகையை எடுத்து வந்தாள் தோழியிடம்.. அவள் பெயரை கேட்டதும் ஓட எத்தனித்த அவன் கால்கள் இரண்டும் ஸ்டர்கடித்து நின்றுவிட விழிகள் ஸ்தம்பித்து அவளிடம் சிக்கிக் கொண்டது..
இதழ் உறைந்த புன்னகையோடு அவர்களின் பேச்சு வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்தவளிடம்.. பாருடி பாப்பாவுக்கு இட்லி பிடிக்காதாம்.. அவ ஒரு வார்த்தை வேண்டாம் னு சொன்னதும்.. இவர் தூக்கிக்கிட்டு ஓடுறாரு.. கேட்டாலும் அவளை விடமாட்டேங்குறாரு.. ஓடி ஓடி எங்களுக்கு மூச்சு தான் வாங்குது.. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க புகார் கூறியவளை கடந்து முன்னே வந்தாள் ஜானு.
தந்தையும் மகளும் பேய் அறைந்தார் போல் நின்றனர்..
முதல்ல இறங்கு.. கைகட்டி மகளை தீர்க்கமாய் அதட்டிய தொணியில்.. ப்பா.. கம்பெனிக்கு பாவமாய் தன் முட்டை விழிகளை உருட்டி அவனை தன் பக்கம் சாய்க்க.. உனக்கு சொல்லனுமா அசோக்.. அவள் கேட்டு முடிப்பதற்குள்ளாக குழந்தையை சோபாவில் இறக்கிவிட்டு அவள் அருகில் அமர்ந்தபடி தன் மடியேற்றி இருந்தான் அவன்.
அம்மாடியோ.. அதிர்ச்சியில் வாயை பொத்தினார் யமுனா.. வெற்றியும் மிதாவும் கூட அதே ரேஞ்சில் பார்த்துக் கொண்டிருக்க.. இது தெரிஞ்சா நான் முன்னையே இவளை எழுப்பி கூட்டிட்டு வந்திருப்பேனே.. அடியாத்தி.. எப்படி பொட்டி பாப்பா அவ சொல்ற பேச்சை எல்லாம் கேட்கிறான்.. ம்ம்ம்கூம்.. இருடா இரு இன்னைக்கு மதியம் உனக்கு பாவக்காய் குழம்பு தான்.. யமுனா பெரிதாய் முறித்துக் கொண்டாலும் அவர் குரலில் இருந்து மகிழ்ச்சியும் கண்களில் காட்டிய சிரிப்பும் அவர் மகிழ்ச்சியை எடுத்துக்காட்டியது.
ம்ம்ம்.. பாவக்காய் குழம்பு?? நீங்க எதனாலும் செஞ்சுட்டு போங்க.. என் ஜானு எனக்கு வேற ஏதாவது டேஸ்டா செஞ்சு தருவா.. என்ன ஜானு.. அவன் விழிகள் கல்மிஷமாய் அவள் முகத்தில் மோதி ஏதோ செய்தியை கூற சட்டென சிவந்து போனவளாய்.. பொய்யாய் முறைத்து தோற்றாள்.
அவர்களின் சம்பாஷனைகளை கண்டாலும் காணாதது போல் ஆளுக்கு ஒரு பக்கமாய் திரும்பிக் கொண்டனர்.. முதல்ல பிள்ளைக்கு சாப்பாடு ஊட்ட விடுடா.. யமுனா வர.. குழந்தையின் அப்பாவி பார்வையில் எழுந்து ஓட போன கால்கள் அவள் அம்மாவின் பார்வையில் அப்படியே அமர்ந்து விட்டது..
துரோகி அப்பா.. என்று ரீதியில் அவள் மொட்டாய் விழிகளை உயர்த்த.. சட்டென வானில் பறந்தாள் குழந்தை..
அதுவரை சிரிப்பும் விளையாட்டுமாய் காட்டிக் கொண்டிருந்த அசோக்கின் கண்கள் சற்றென கூர்மையை தத்தெடுத்தது.. அவளை ஆளுக்கு ஒரு பக்கமாய் தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அத்தை மகன் சித்தி மகன்களான ராகுலும் ஹரியும்..
அவர்கள் செய்த வேலையில் இப்போது ஒரே வீட்டில் இருந்தாலும் அவ்வளவாய் யாரும் அவர்களிடமும் சரி அவர்களை பெற்றவர்களிடமும் சரி பேசுவதில்லை.. அவர்களும் அதற்கேற்றார் போல் ஒதுங்கி தான் இருக்கின்றனர்.. ஆனால் இப்போது திடீரென வந்து குழந்தையை தூக்கிப் போட்டு விளையாடியதும் முகிழ்த்த கோபத்தோடு அவன் எழ.. அப்பா உனக்கு சப்போர்ட் பண்ணலைனா என்ன.. அதான் சித்தப்பா மாமான்னு நாங்க ரெண்டு பேர் இருக்கோமே, நீ எதுக்கும் கவலைப் படாத செல்லம்.. என ஆளுக்கு ஒரு பக்கமாய் அவளை மாற்றி மாற்றி தூக்கி விளையாட..ஹிஹிஹி.. குழந்தையின் கிளுக்கி சிரிப்பு அந்த காலை அடைத்தது..
அசோக்கி கூர் கண்கள் தன் இறுக்கத்தை சற்று தளைத்தன.
சாப்பாட்டுக்கு பயந்து மிரண்ட குழந்தையை இறக்கிய விடமாட்டோம் என உறுதிமொழி கொடுத்துவிட்டு தாத்தா பாட்டி அசோக் முன்பு வந்து நின்றனர்.
அடுத்த நொடி வெற்றி யமுனா காலையிலேயே விழுந்து இருந்தனர் ராகுலும் ஹரியும்..
மேலே இருந்த தான் திடீரென கீழே வந்ததும் ஒன்றும் புரியாமல் கிரித்தி முழிக்க அவளை.. எப்போதும் உன்னை விட மாட்டோம் என்று ரீதியில் கைகளை இறுக்கிக் கொண்டனர் இருவரும்.
விழிகள் குற்ற உணர்ச்சியோடு பெரியவர்களிடம் படிந்தன.
தாத்தா பாட்டி நீங்க ரெண்டு பேரும் எங்க மேல பயங்கர கோபத்தில் இருப்பீங்கன்னு புரியுது... ஆனா நாங்க வேணும்னு எதுவும் செய்யல.. எப்படியாவது பிசினஸ் முன்னேத்தி கொண்டு போகணும்னு நெனச்சு தான் கடன் வாங்கனோம்.. ஆனா அதை சமாளிக்க முடியல.. ஆனா இனிமே நீங்க சொல்ற மாதிரி கண்டிப்பா நாங்க கொஞ்சம் கொஞ்சமா மாற பாக்குறோம்.. என்னதான் திட்டுனாலும் முறைச்சாலும் நீங்க எங்க கூடவே இருக்கணும்.. ஒரே வீட்டிலே இருந்துகிட்டு நீங்க யாரும் எங்களிடம் பேசாதப்போ எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா?.. ராகுல் உருகி மன்னிப்பு கேட்க..
ஆமா பாட்டி.. அதுபோல நாங்க தப்பு செய்யாம நீங்க திட்ட போறது கிடையாதே.. அதனால இனிமேல் தவறு நடக்காம பாத்துக்குறோம். நீங்க அனுமதி கொடுத்தீங்கன்னா இனிமேல் சத்ரியன் அண்ணன் கூட போய் நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா தொழிலை கத்துக்குறோம்.. நல்லபடியா முன்னேற பார்க்கிறோம்.. சிறியவர்கள் இருவரின் வார்த்தைகளும் பெரியவர்களின் இதழ்கள் மலர்ந்தன..
தயவு செஞ்சு எங்க கூட பேசுங்க பாட்டி.. தாத்தா.. அசோக் அண்ணா.. நாங்க உன்கிட்ட நடந்துக்கிட்டதும் தப்புதான் எங்களை மன்னிச்சிடு.. அவன் காலில் விழபோனவர்களை சட்டென கரம் பற்றி நிறுத்தினான்.
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் டா.. நீங்க சொன்னத செய்யலை காட்டுங்க.. அதுவே போதும்.. கட்டளையை வந்து விழுந்த அவன் வார்த்தையினில் சம்மதமாய் இருவரின் தலையும் மலர்ச்சியோடு ஆடியது..
ஒரு பக்கமாய் ஒடுங்கி நின்றனர் மகளும் மருமகளும்.. எவன் ஒருவனை விட தங்கள் மகன்கள் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என எண்ணினரோ இப்போது அவர்கள் காலிலேயே தங்கள் இரு புதல்வர்களும் விழக்கண்டு பல்லை தான் கடிக்க முடிந்தது.. ஒரு வார்த்தை ஓங்கி பேசினாலும் தங்கள் வளர்த்த மகன்களே தங்களுக்கு பாம்பாக மாற தயங்க போவதில்லை.. என புரிந்து விட்டதே.. அவனுங்க வாழ்க்கை அவனுங்க பாடு என ஆளுக்கு ஒரு பக்கமாய் நிமிட்டி கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்ற தன் இரு கணவன்மார்களையும் இழுத்து முகத்தை திருப்பி அறைக்குள் நுழைந்து கொண்டனர்.. இந்த ஜென்மத்தில் அவர்கள் யாரும் திருந்தி விடப் போவதில்லை..
அண்ணி.. அசோக் அருகில் நின்றிருந்த ஜான்விடம் வந்து நின்றனர்..
ரொம்ப நாளாவே தாத்தா, பாட்டி அண்ணன் கிட்ட சொல்லனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம்.. ஆனா அதுக்கு வாய்ப்பே கிடைக்கல.. இன்னைக்கு இந்த குட்டியால தான் சொல்ல முடிஞ்சிருக்கு.. என குழந்தையை தோளோடு குலுக்கியவர்கள்.. நேத்து உங்ககிட்ட அப்படி பேசினதுக்கு சாரி அண்ணி.. என்னதான் மாறணும்னு நினைச்சாலும் சில நேரங்கள்ல துடுக்கா பேச்சு வந்துடுது.. அதுக்கு மன்னிச்சிடுங்க உண்மையாகவே மனம் வருந்தி கண்கள் சுருக்கி அவர்கள் கேட்டது.. பரவாயில்ல நான் அதை ஒன்றும் பெருசா எடுத்துக்கல.. அவள் கூறியதும் 1000 வாட்ஸ் பல்பாய் அவர்கள் முகம் ஜொலித்தது.
தேங்க்ஸ் அண்ணி.. என்றவர்களின் விழிகள் இன்னும் கின்னத்தோடு யமுனா நின்று கொண்டிருப்பதை கண்டு பெண்டுளமாய் உருண்டது.
சரிடா உங்க மன்னிப்பு எல்லாம் முடிஞ்சுச்சுன்னா முதல்ல அந்த புள்ளையை இறக்கி விடுங்க.. ரெண்டு வாய் ஊட்டி விடுகிறேன்.. தன் வேலையில் சிரத்தையாய் யமுனா கேட்க.. முடிஞ்சா வந்து புடிச்சுக்கோ பாட்டிஈஈஈ.. என அடுத்த நிமிடம் அவளை தோளோடு தூக்கிக் கொண்டு ஓடி இருந்தனர்.. இவ்வளவு நேரமாய் அசோக்.. அவன் தாத்தா பாட்டி என அனைவரும் பெரிய சப்போர்ட்டாக அவளுக்கு இருந்தாலும் இதை வீட்டில் அவளை பிடிக்காதது போல் மற்ற சிலரும் இருக்கிறார்களே.
இவர்களை சமாளித்து என் தோழி இங்கு எப்படி இருக்கப் போகிறாளோ என தவிப்போடு யோசித்துக் கொண்டிருந்த மிதாவின் கண்கள் இப்போது அவர்களின் செயலில் மகிழ்ச்சியில் விரிந்தன.. இனி இந்த மனதில் எந்த சங்கடங்களும் சஞ்சலங்களும் இல்லை..
கருத்துகள்
கருத்துரையிடுக