ஆனால் அன்று.. கல்லூரியில் பலத்த வேலை.. ஒரு பக்கம் செமஸ்டர்.. மறுபக்கம் சீனியரை வழி அனுப்பி வைக்கும் கல்ச்சுரல் ஃபங்ஷனுக்கு சில வேலைகள்.. ஜூனியர் மாணவிகள் தான் அத்தனை வேலைகளையும் எடுத்து போட்டு செய்தார்கள் எனினும் சீனியரும் சில கை கொடுக்க தான் வேண்டியிருந்தது.. அதிலும் மூன்று மணி நேரமாக நின்று கொண்டே செய்த லேப் டெஸ்ட்டும் வேலையும் என அவள் மசக்கை உடம்பை ஒரு வழி ஆக்கி இருக்க இப்போது அடுத்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பே அவளுக்கு அத்தனை கஷ்டமாய்..
மூன்று வீட்டிற்கும் சென்றாக வேண்டும்.. காலையில இருந்து சாப்பிட்டா தட்டை கூட கழுவாமல் போட்டிருப்பர்.. தட்டில் இருந்து சோராக்கிய பாத்திரம் வரை அனைத்தையும் விளக்கி கழுவி வீடை கூட்டி மாப்பும் போட்டு விட வேண்டும்.. இதையெல்லாம் முடித்து வீட்டிற்கு வர எப்படியும் மணி ஒன்பதை தொட்டு விடுமே.. அதிலும் இன்று எழுதுவதற்கும் சில வேலைகள் இருக்கின்றன.. ஹப்பா.. மூச்சு விட முடியாமல் தன் நிலையை எண்ணி நோந்தாள்..
தாய்க்கு தெரிந்தால் வருத்தப்பட கூடும் என தன்னை மறைத்துக் கொண்டு கைகால் கழுவி உடலை சுத்தம் செய்து.. உள்ளே அறையை எட்டிப் பார்க்க கண்மூடி படுத்திருந்தார் பாக்யா.. ஒரு காலத்தில் இரவும் பகலும் பார்க்காத ஓடி ஓடி வேலை செய்தவர்.. இப்போது இப்படி படுத்தே கிடக்க வேண்டிய நிலை.. தன் நிலையை விட தாய் நிலை மோசமாய் பட்டது.. அவரின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் என உள்ளுக்குள் குற்ற உணர்ச்சி வேறு..
அம்மா.. கமரிய குரலை மீட்டுக் கொண்டு அழைத்ததில் அவரிடம் சிறு அசைவு.. விழித்து தான் இருக்கிறார் என்பதன் அடையாளம்..
அம்மா.. நான் வேலைக்கு போயிட்டு வரேன்.. என கூற.. இனிமே நீ அங்க போக வேண்டாம்.. அவர் குரல் தடுத்து நிறுத்தியது அவளை..
ஹான்.. ஒரு அடி எடுத்து வைத்தவள் அப்படியே நின்றாள்.. பேசாதவர் திடீரென பேச கண்டு அம்மா.. இன்ப அதிர்ச்சியோடு திரும்ப.. நா போக ஆரம்பிச்சுட்டேன்.. இப்பதான் வேலைய முடிச்சுட்டு வர்றேன்.. என்ற தாயை அதிர்ச்சியோடு பார்த்து அறைக்குள் நுழைந்தாள் ..
அம்மா.. நீ எதுக்கு வேலைக்கு போன.. உன்ன தான் பெட்ரெஸ்ட்ல இருக்கணும்னு டாக்டர் சொல்லி இருக்காருல்ல.. கேட்க.. படுத்த படியே விரத்தியாய் சிரித்தாள் பெற்றவள்.. அந்த சிரிப்பு உயிர் வரை தாக்கியது அவளை.. உயிரோட இருந்து மட்டும் என்னத்த சாதிக்க போறேன்.. பெத்த புள்ள இப்படி வீணா போய் வந்து நிக்குது.. அதுக்கு ஒரு நல்ல வழியை சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டு இருக்க நான் எல்லாம் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம் .. விரத்தியின் உச்ச கட்டத்தில் அவர் வாயிலிருந்து வந்த வார்த்தையினில் அம்மா.. கண்களில் இருந்து நீர் பொல பொலவென உதிர்ந்தன.. மூடி இருந்த கண்களை திறந்தார் பாக்யா.. உள்ளுக்குள் மறைந்திருந்த கோபத்தை அந்த உஷ்ணம் விழிகள் அவளை சுட்டு பொசுக்கி காட்டியது..
இப்ப கூட அழுவ.. ஆனா சொல்ல மாட்டேல்ல.. என அவர் தீர்க்கமாய் கேட்டும் அவளால் கூற முடியவில்லையே.. அம்மா.. ப்ளீஸ் அதை மட்டும் கேட்காதே.. என்ற பின் அதற்கு மேல் வேறு எதுவும் பேசவில்லை பாக்கியம்.. மீண்டும் கண்களை மூடிவிட்டார்.. ஓரித நொடிகள் அங்கேயே நின்று நிலைத்த விழிகளோடு தாயையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் கேட்பதற்கு தன்னால் பதில் கூற முடியாதே..
மீண்டும் பேசாமடந்தை விரதம் தொடர்ந்தது.. ஆனால் பழையபடிக்கு வேலை சென்றார் பாக்கியம்.. கல்லூரி படிப்பில் முயன்ற அளவுக்கு தன் கவனத்தை செலுத்தி கொண்டு இருந்தாள் ஜான்வி.. அந்த நாள் வரும் வரை..
அன்று வகுப்பறையில் அமர்ந்து எதிரில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கவனித்துக் கொண்டிருக்கையில்.. மேம்.. என வந்து நின்றார் பியூன்.. பாடம் நிறுத்தப்பட்டது.. விஷயம் கேட்கப்பட்டது.. இங்கே யாருமா ஜான்வி.. உங்க பக்கத்து வீட்டுக்காரர் வந்திருக்காரு.. கூறியதுமே அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது..
ஆசிரியரிடம் அனுமதி வாங்கி அடுத்த நிமிடம் வகுப்பறையில் இருந்து எழுந்து ஓடினாள்.. வெளியே நின்றிருந்தார் ரத்னா..
அண்ணா.. என்னாச்சு.. என வந்தவளை கண்டு.. உன் அம்மா திடீர்னு ரோட்டிலேயே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்.. வா.. தங்கையாய் பாவித்து மரியாதை ஒருமைக்கு தாவி இருக்க அழைத்துச் சென்றார்..
வழிநெடுக பயத்தில் நெஞ்சை பிடித்து கொண்டு புத்தி பேதலித்தவளாய் வந்தவள் ஆட்டோ நின்றதும் தன்னிலை இழந்து பித்து பிடித்தவளாய் மருத்துவமனைக்குள் இறங்கி ஓடினாள்.. அன்று பார்த்த மருத்துவர் தான்.. அவள் கலங்கிய முகம் அவருக்கு நன்றாய் நினைவிருக்கிறது போதும்..
ஸ்டேட்டஸ் கோப்பை மாட்டிக்கொண்டு வந்தவர்.. ஓடி வந்தவளைக் கண்டதும்.. உடனடியா கிட்னி ட்ரான்ஸ்லேஷன் பண்ணனும்.. லேட் பண்ண லேட் பண்ண உயிருக்கு ஆபத்து.. என ஒரு கூடை இடியை அவள் உச்சாந்தலையில் இறக்கியிருந்தார்..
எப்போ டாக்டர் பண்ண.. னும்.. பேச்சு வர மறுத்தது..
எப்போனாலும்.. முடிஞ்ச அளவு சீக்கிரமா.. நாளைக்கேனாலும் ஓகேதான்.. லேட் பண்ற ஒவ்வொரு நாளும் ஆபத்து தான்.. எனக் கூறிய வார்த்தைகளில் மொத்தமாய் இடிந்து போனாள்.
எவ்வளவு டாக்டர் வரும்.. பணம் தானே பிரதான மூல தனம்.. அவள் குரல் கமரியது..
15 லட்சத்துகிட்ட ஆகும்.. என அவர் கூறிய வார்த்தையில் நெஞ்சு வெடிக்காத குறை.. 15 லட்சமா.. 15 ரூபாய்க்கு கூட தான் நாளைக்கு வேலைக்கு சென்றால்தான் முடியும் என்னும்போது 15 லட்சம் எந்த வகையில் சாத்தியம்..
ஆனால் ரத்னாவும் அவர் மனைவியும் தைரியம் கொடுத்தனர்.. தன்னால் முடிந்த மட்டும் பணம் பிரட்ட முயற்சித்தாள். இந்த நிலையில் வீட்டிற்கு அனுப்ப முடியாது என மருத்துவமனையிலேயே தான் இருந்தார் பாக்கியம்..
அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தாள்.. தாய் வேலை செய்யும் அனைத்து இடங்களிலும் கேட்டுப் பார்த்தாள்.. எங்கும் இல்லை என்ற பதிலே வந்தது..
உங்க அம்மாவே இப்போ எல்லாம் சரியா வேலைக்கு வர்றதில்ல.. அன்னைக்கு நீ வந்த.. அப்புறம் உடம்பு சரியாயிடுச்சுன்னு உங்க அம்மா வந்துச்சு.. இப்போ ரெண்டு பேருமே வரதில்ல.. இதுல பணம் வேறயா.. எந்த நம்பிக்கையில் தர்றது.. வேலை செய்த மூன்று வீட்டிலும் இதே பதில்.. எந்த நம்பிக்கையிலா.. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாய் தாய் அவர்களிடம் தானே வேலை செய்து கொண்டிருக்கிறார் அப்படிப்பட்டவரை பற்றி அவர்களுக்கு தெரியாதா? இதுவரை ஒரு சிறு துரும்பும் கூட அவர்கள் அனுமதி இன்றி வீட்டிற்கு வந்திருக்குமா.. இல்லை தீபாவளி பொங்கல் நாளைக்கு அவர்கள் பிள்ளையின் கிழிந்த கந்தளான உடையை கொடுக்கும் போதும் தான் தாய் மறுத்திருப்பாளா.. அப்படிப்பட்டவரை போய் எப்படி நம்புவது என்ற கேள்வியா.. பணத்தில் மனித நிறத்தை அறிந்தவளுக்கு ஒவ்வொரு நாளும் அதன் மீது வெறுப்பு கூடிக்கொண்டே தான் போகிறது.. இதே பணத்திற்காக தானே உயிருக்குயிராய் நேசித்த அவன் கூட நடந்ததை இல்லையென்று மறுத்து என்னை விட்டு சென்றான்.. அதனால் வந்தது தானே இத்தனை பெரிய பிரச்சனையும்..
மிதாவிற்கு அழைக்கலாமா என்று யோசனையை உடனடியாய் கை விட்டாள்.. இப்போதுதான் அவளுக்கு பிடித்த கல்லூரியில் ஹாஸ்டலில் சேர்ந்து நிம்மதியாய் படித்துக் கொண்டிருக்கிறாள்.. அவள் மன நிம்மதியை கெடுக்க விருப்பமில்லை..
வேறு யாருக்கு அழைப்பது.. உடனடியாய் முன்னே வந்து நின்ற ஒருவனின் பிம்பத்தை முயன்று உதறித் தள்ளினாள்..
ச்சே.. மானங்கெட்ட மனசு..எத்தனை தடவை பட்டாலும் திரும்பத் திரும்ப அவன் கிட்டயே போகுது பாரு.. என தன்னைத்தானே திட்டிக்கொண்டு.. அவன் கல்லூரி கட்டணத்திற்கு கொடுத்த பணத்தையே அவன் முகத்தில் தூக்கி விசிறி அடிக்க வேண்டும்.. என எண்ணிக்கொண்டிருக்க நீ கேட்டா மட்டும் அவன் அப்படியே உடனே அள்ளிக் கொடுத்துவிடுவானாக்கும்.. எள்ளி நகையாடி உள்ளே சென்று மறைந்து கொண்டது மனசாட்சி.. பணம் படைத்தவனுக்கு மனம் குறுகல் எனக் கூறுவது சரியாய் தான் இருக்கிறது.. ஒருவேளை பணத்தைப் பார்த்து தான் மனம் விரியுமோ.. காட்டாற்று வெள்ளமாய் மனம் எங்கெங்கோ பாய இழுத்து பிடித்த தாயின் மருத்துவத்தைப் பற்றி யோசித்தாள்..
யாரிடம் சென்று உதவி கேட்பது என தெரியவில்லை.
கல்லூரி தோழிகளுக்கும் போன் போட்டு தன்னால் முடிந்த மட்டும் கேட்டு ஆயிற்று.. அவ்வளவு பணம் எல்லாம் எங்களால முடியாதுப்பா என வெளிப்படையாய் கூறிவிட்டாலும் ஆயிரம் இரண்டாயிரம் என தங்கள் கையில் இருந்ததை கொடுக்கத்தான் செய்தனர்.. அவரவர் சக்திக்கு முடிந்த அளவிற்கு ஆண்டவரே
ஆனால் அது மட்டும் பத்தாதே.. வேறு வழியில்லாமல் தன்வகுப்பு ஆசிரியை மாலதியிடம் கேட்டபோதுதான் அந்த உதவி கிடைத்தது.. முதலில் டிரான்ஸ்லேஷன் என கூறியதும் அதிர்ந்தார் அவள்நிலையை அறிந்தவராய்..
15 லட்சம் செலவாகும்னு சொல்றாங்க மேம்.. அவ்வளவு பண்றதுக்கு எங்க போறதுன்னு தெரியல.. கண் கலங்கி குரல் தழுதழுக்க பேசிக்கொண்டிருந்தவளை.. சரி கவலைப்படாதே.. என ஆறுதல் படுத்தினார்.. என்கிட்ட இருந்தாலும் உடனடியா கொடுத்திடுவேன்.. ஆனா என்கிட்டயும் அவ்வளவு பணம் இல்லையே.. இப்போதான் என் அப்பாவுக்கும் இப்படி ஒரு சிகிச்சை பண்ணோம்.. என கூற இதயமே இரண்டாய் போனது போல் உடைந்தாள் ஜான்வி..
இதற்கு மேல் கேட்க ஒரு நாதியும் இல்லையே.. அவள் கண்ணீர் அவரை பாதித்தது போலும்.. ஹான்.. ஆனா நீ விருப்பப்பட்டால் இன்னொரு ஒரு ஐடியா சொல்றேன்.. அவர் எடுக்க ஏதாவது வழியில் பணம் கிடைத்தால் மட்டுமே போதும் என்று தோன்றியது அவளுக்கு..
என்ன மேடம் சொல்லுங்க ஊக்கினாள்.
எங்க அப்பாவுக்கும் மும்பைல சர்ஜரி நடந்துச்சு.. அங்க ஒரு இடத்துல எங்க அண்ணன் கடன் தான் வாங்கினான்.. உனக்கு வேணும்னா சொல்லு.. நான் ரெகமெண்ட் பண்றேன்.. என அவர் அந்நேரத்தில் கூறிய வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளாய் காதில் விழுந்தது..
மேம்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. என உணர்ச்சி பெருக்கில் அவர் காலிலேயே விழுந்து விட.. ஹேய் என்ன இது.. அவளை தூக்கி விட்டார்..
எனக்கும் அவங்களை அவ்வளவா தெரியாது..அவங்க கொஞ்சம் ஒரு மாதிரியான ஆளுங்கனு என் அண்ணன் சொல்லி இருக்கான் .. சொன்ன நேரத்துல காசு கொடுக்கலைன்னா பயங்கரமா டென்ஷன் ஆயிடுவாங்க.. பர்டிகுலர் டைம் ஃபிக்ஸ் பண்ணி சொல்லிடு.. அந்த டைம் வர்ற வரைக்கும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டாங்க.. ஆனா சொன்ன நேரத்துக்கு நீ கொடுக்கலைன்னா அவங்களோட இன்னொரு முகத்தையும் பார்க்க வேண்டி வரும்.. என எச்சரிக்கையாய் மாலதி கூறி விட.. இப்போதைக்கு பணம் கிடைத்தால் மட்டுமே போதும்.. என வேகமாய் தலையாட்டி விட்டாள்.
அதற்கு அடுத்தடுத்த வேலைகள் படுவேகமாய் நடக்க ஆரம்பித்தது.. பாக்கியலட்சுமி மும்பை அழைத்து வந்தனர்..பணம் வேணுமே.. மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் படுத்தபடி பாக்கியா கேட்க.. பாத்துக்கலாம் வாம்மா.. என்றதோடு முடித்துக் கொண்டாள்.. அதோடு கொண்டு வந்திருந்த சீட்டை காட்டி இங்கு புது மருத்துவமனையில் அனுமதித்தது வரை செய்து விட்டாள் தான்..
ஆனால் பணம் கட்டினால் தான் சிகிச்சை தொடங்க முடியும் என நிர்வாகம் கூறிவிட.. இதோ பணத்தை வாங்க வேண்டி வந்திருக்கிறாள்..
ஏற்கனவே உன் நிலைமையை பத்தி அவங்க கிட்ட சொல்லிட்டேன்.. நீ போனதும் பணத்தை கொடுத்துடுவாங்க.. ஒன் இயர் டைம் கொடுத்திருக்காங்க.. நீ தான் பிளேஸ்மென்ட்ல செலக்ட் ஆகி இருக்கியே.. அதான் கண்டிப்பா அந்த பொண்ணு சொன்ன மாதிரி கொடுத்துடுவான்னு சொல்லி பணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்.. என்றதும் ரொம்ப தேங்க்ஸ் மேம்.. என்று போனை அணைத்தாள்.. இதோ இப்போது அந்த வட்டி காரரின் முன் நின்று இருக்கிறாள்.
காதில் போனை வைத்தபடி அவரிடம் பேசிக் கொண்டிருந்தவன் எதிரில் நின்றவளை கண்டு.. மாலதி நீ வாச்சா ஆளா கோ பேஜா .. என ஹிந்தியில் ஏதோ கேட்டதில் மாலதி என பெயர் மட்டும் புரிந்து ஆம் என தலையசைத்தாள்..
கை காட்ட ஒருவன் பணத்தை வந்து கொடுத்துச் செல்ல நன்றி என இரு கரம் கூப்பி வேகமாய் பணத்தை நெஞ்சோடு தூக்கிக்கொண்டு ஓடியவள் மருத்துவமனையில் தான் நின்றாள். பணத்தை நல்லபடியாய் கட்டிவிட தாய்க்கு சிகிச்சை தொடங்கப்பட்டது..
இதோ பாக்கியத்திற்கு நல்லபடியாக சிகிச்சை முடிந்து ஒரு வாரத்தை கடந்து விட்டது.. இன்று டிஸ்சார்ஜ் என கூறிய நிலையில்.. திடீரென போன் ஒழிக்க எடுத்தாள். ஜான்வி..
மாலதி தான் அடித்துக் கொண்டிருந்தாள். மேடம்.. எடுத்ததும் அவள் குரலில் ஒரு மலர்ச்சி.. அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு? நல்லா இருக்காங்களா.. பொதுப்படையான மாலதியின் கேள்விக்கு பரவாயில்லை மேடம்.. ரொம்ப தேங்க்ஸ்.. உங்களால தான் இன்னைக்கு அம்மாவுக்கு நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சு இருக்கு.. என நன்றி தழும்பும் குரலில் அவள் கூறிக் கொண்டிருக்க.. அது பரவாயில்ல.. ஆனா இப்போ அந்த கந்து வட்டிக்காரன் உன்ன பாக்கணும்னு சொல்லி இருக்கானாம்.. போய் ஒரு எட்டு பார்த்துட்டு பேசிட்டு வந்துரு.. கூற இவள் குண்டுவிழிகள் அங்கும் இங்குமாய் உருண்டன.. தாய்பார்வை தன்னையே மொய்க்க கண்டு.. ஒரு நிமிஷம்.. என எழுந்து வெளியே வந்தாள்..
ஏதும் பிரச்சனையா மேடம்..
பிரச்சனை எல்லாம் ஒன்னும் இருக்காது.. கொடுத்த பணத்தை சரியா கொடுக்கணும்னு சொல்ல கூப்பிட்டு இருப்பான்.. நீ போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடேன்.. என்றிட அவளுக்கும் அதுவே சரியாய் பட்டது..
சரி மேடம் எனக் கூறியவள்.. உள்ளே வந்தாள்.. கண் மூடி கிடந்த தாயிடம்.. அம்மா இதுல பழத்தை நறுக்கி வச்சிருக்கேன்.. பசிக்கும்போது சாப்பிட்டுக்கோ.. எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு போயிட்டு வரேன்.. பேச்சோடு பேச்சாய் செல்லப் போனவளே கைப்பிடித்து நிறுத்தினார் பாக்யா..
நீ பண்றது ஒன்னும் எனக்கு சரியா படல.. ஆபரேஷனுக்கு பணம் எங்கிருந்து வந்துச்சுன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற.. போன் வந்தா வெளியே போய் பேசுற.. இப்போ எங்க போறன்னு சொல்லாம கிளம்புற.. என்னதான் பண்ற நீ.. சோர்ந்த குரலோடு கேட்க.. அம்மா.. தன்னை நிதானித்து அவர் அருகில் அமர்ந்தாள்..
எல்லாத்தையும் உனக்கு விளாவரியா சொல்றேன்.. ஆனா இப்ப போய் ஆகணும்.. வந்து சொல்றேன்.. என கோபித்துக் கொண்டவரை உச்சி முகர்ந்து நெற்றியில் பெற்றவளாய் முத்தமிட்டு செல்ல.. கடவுளே.. சின்ன வயசுல இருந்து என் பொண்ணு நிறைய கஷ்டங்களை பட்டுட்டா.. இப்போ வேற அவ பிள்ளைத்தாச்சி பொண்ணு.. எப்போவும் கூடவே இருந்து பத்திரமா பாத்துக்கோங்க.. என மனதார வேண்டுதல் வைத்த தாய்க்கு தெரியாது.. இனிமேதான் அவளுக்கு சோதனை காலம் ஆரம்பம் என்பது..
யூ டி எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க.. முடியாதவங்க ஸ்டார்ட் கொடுக்கலாமே..
கருத்துகள்
கருத்துரையிடுக