எதையும் ஒருமுறை சொல்லி தந்து விட்டாள் போதும்.. கப்பான கற்பூரமாய் கிரகித்து மனதில் பதிய வைத்து கொள்வாள் ஜான்வி.. அன்று இரண்டு பேர் வந்து அழைத்துச் சென்ற நிலையில் இன்று வழிகளை அவளே அறிந்து அந்த குறுகலான சந்து வழியாய் சென்று பரவலான அந்த வீட்டின் முன்பாக நின்று இருந்தாள்..
உள்ளே நுழைந்தவளை உள்ளிருந்தவர்கள் ஒரு மாதிரி விசித்திரமாய் பார்த்தனர்..யார் வேணும்.. என்ற படி அவளை நோக்கி வந்தவனை.. ஏய்ய்ய்.. என்ற குரலில் ஒருவன் தடுத்து நிறுத்தினான் அவன்.. அவனோடு அவள் பார்வையும் குரல் வந்த திசை பக்கமாய் திரும்பியது.. அன்று பணம் கொடுத்த சமர்த்.. வாயில் வெற்றிலையை கொதப்பிக்கொண்டு அமர்ந்திருந்த நிலை ஒருவித அருவருப்பை வர செய்தாலும்.. அவளை விடு.. என்பது போன்றான அவன் கை அசைப்பில் வந்தவன் நகர்ந்து விட.. தன்னை சமாளித்து முன்னே சென்றாள்..
வணக்கம்.. இரு கரம் கூப்பி அவள் நின்ற நிலையில் ஒரு மாதிரியாய் பார்த்து உட்காரு.. என்பது போல் இருக்கையை காட்டினான் சமர்த்.
பரவாயில்லை.. என வாயோடு வந்த வார்த்தையை அவன் இந்த பார்வையில் உள்ளேயே விழுங்கிக் கொண்டு அமர்ந்தாள்.. சுற்றி இருந்தவர்களின் பார்வை ஊசி தன்மையாய் தன்னை சுற்றியதை அந்த பெண்மை உணராமல் இல்லை..
என்றுமே கண்களை உறுத்தும் உடையில் அவளுக்கு விருப்பமில்லை.. ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் என நவ நாகரிகமாய் மாறிவரும் இவ்வுலகில் அவளுக்கு மட்டும் என்றும் சுடிதாரே சரணாகதி..
ஏண்டி.. போடறது தான் சுடிதாரே போடுற.. அதுலயும் இந்த ஸ்டெப்ஷால விட்டா உனக்கு வேற மாடலே தெரியலையா.. அவள் தோழிகள் நிறைய முறை கேலி செய்ததுண்டு.. ஒரு புன்னகையோடு கடந்து சென்று விடுவாள்.. என்ன செய்வது தந்தையற்று.. வீட்டில் ஆண் துணை ஆற்று இருப்பவர்களுக்கு தான் அந்த நிலை தெரியும்.. மற்றவர்களிடம் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம்..
தெரியாமல் கூட பாக்யாவிற்கு எந்த தொந்தரவும் தர விரும்ப மாட்டாள். அதற்காகவே உடைய நேர்த்தியாய் அணிந்து விடுவதுண்டு..
புடவை மீது முள் பட்டாலும்.. முள் மீது புடவை பட்டாலும் சேதாரம் என்னவோ புடவைக்கு தான் என ஒரு பழமொழி உள்ளதே.. அதிலும் வழியில் ஒருவன் தன்னை கேலி செய்து விட்டான் என்றால் நீ எதுக்கு அந்த வழியா வர்ற என கேள்வி கேட்கும் உலகம் ஆயிற்றே இது.. தன் தாய் அப்படிப்பட்டவர் இல்லை என்றாலும் தன்னால் முடிந்த மட்டும் தன் பக்கம் இருந்து எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வாள் ஜான்வி.. அப்படிப்பட்டவள் அந்த ஒருவனிடம் மட்டும் வழுக்கி விழுந்தது ஏனோ..
இதோ வரும் வழியில் கலர் கலர் மைனாகளாய் மாடர்ன் டிரஸ்சோடு வலம் வந்த பெண்களை கண்டு.. அந்த வயதுக்கே உரிய ஆசையோடு பார்த்தாலும் ஒரே பெருமூச்சில் கடந்து வந்திருந்தாளே.. இதுதான் ஜான்வி..
ஆனால் தன்னுடை இத்தனை அம்சமாய் இருந்தும் இவனிடம் ஏன் இந்த கழுகு பார்வை..
இந்த இடத்திற்கு தனியாக வந்திருக்க கூடாதோ.. அன்று இல்லாத அசவுகரிகம் இப்போது இருப்பதாய் உள்ளுக்குள் உறுத்தியது.. புது இடம்.. புது மொழி.. புதுமக்கள்.. அதோடு இந்த கேவலமான பார்வை.. என ஒருவித மிரட்சியோடு அமர்ந்து இருந்தவளை ஒரு மார்க்க பார்வையால் கொய்தான் சமர்..
அன்று போன் பேசிக் கொண்டிருந்த காரணத்தினால் எதிரில் இருந்த மைனாவை சரியாய் கவனித்திருக்கவில்லை.. பணம் வாங்கி அவள் சென்று விட்டதும் தான் அந்த பொண்ணு வந்துச்சா இல்லையா என தன் நாட்களில் ஒருவனிடம் கேட்டிருந்தான் சமரத்.. (அங்கு அவர்கள் ஹிந்தியில் பேசியதை நாம் இங்கு தமிழிலேயே பார்ப்போம்)
இப்போ தான அண்ணே வாங்கிட்டு போச்சு.. அவன் கூற சட்டென எழுந்து காலை பின்னால் உதைத்ததில் அமர்ந்திருந்த நாற்காலியை பின்னே வீசி எறியப்பட்டது..
யாரு கேட்டுடா கொடுத்தீங்க.. மற்றவர்கள் நடுங்கி போகும் படி வாயிலிருந்த வெற்றிலையை வெளியே துப்பி கத்தியவன்.. போய் கூப்பிடு.. உடனே கூப்பிடு.. என கத்த.. வெளியே ஓடி சென்றவன்.. அவளை தேடினான்..
பணம் கிடைத்ததும் தாயின் உயிரை காப்பாற்றவென வேகமாய் ஓடியவளை எங்கு சென்று கண்டறிய முடியும்.. அண்ணே அந்த பொண்ணு போய்டுச்சு போல.. தலையை தொங்க போட்டு வந்தவனை கண்டு நெஞ்சில் ஏறி கட்டி ஒரு உதை.. அஹ்ஹ்.. பின்னே அலறி விழுந்தான்..
மாலதி தனக்கு தெரிந்த பெண்ணுக்கு உதவி வேண்டும் எனக் கூறிய போது உடனடியாய் போட்டோவை கேட்டானே.. போட்டோ எதற்கு என கேள்வி வந்தாலும் இப்போதைக்கு அவளுக்கு பணம் தேவை என்று நல்ல எண்ணத்தோடு தான் கல்லூரி டாக்குமெண்டில் வைத்திருந்த அவள் போட்டோவை எடுத்து அனுப்பி இருந்தாள் மாலதி..
ஆனால் அவனின் குறுகலான மூளை வேற விதமா யோசிக்கும் என அறிந்திருக்கவில்லை.. போடுடா அந்த பொம்பளைக்கு போனை.. என போட.. நேரம் பார்த்து சுவிட்ச் ஆஃப் என வந்ததில் சமர்த் தலையை பிய்த்துக் கொள்ளாத குறை.. கிடைத்த பெண் குட்டியை விட்டதில் டென்ஷனில் தலைகீழாய் நடந்தான்..
அந்த பெரிய மும்பை மாநகரில் அவளை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண விஷயம் இல்லையே.. இருந்தும் தாய்க்கு ஆபரேஷன் என மாலதி கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு தன்னால் முடிந்த மட்டும் மருத்துவமனையில் விசாரிக்க செய்தான். அவனும் கூட இறங்கி தேடினான்.. அவள் போட்டோவை கண்ட நொடியில் இருந்து உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் ஜாலையில் தானே தேடியும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.. இந்த நிலையில் தான் மாலதியிடமிருந்தே அவனுக்கு அழைப்பு வந்தது..
அண்ணே போன் பண்ணி இருந்தீங்களா.. போன் தண்ணில விழுந்து சர்வீஸ் கொடுத்து இருந்தேன்.. என மாலதி கூற அவன் இதழ்கள் கோணலாய் வளைந்தன..
அன்னைக்கு ஒரு பொண்ணு அனுப்பி விட்டாயே.. என கேட்க ஹான்.. என் ஸ்டூடண்ட் பணம் நல்லபடியா வாங்கிட்டு போயிட்டாளா.. விசாரித்தாள் மாலதி..
அதெல்லாம் வாங்கிட்டா.. ஆனால் சில விஷயங்கள் பேச வேண்டி இருக்கு.. அந்த பொண்ண கொஞ்சம் வர சொல்றியா.. என கேட்க இதோ உடனே வர சொல்றேன்.. ஆனா ரொம்ப நல்ல பொன்ணு அவ.. சொன்ன மாதிரி பணத்தை கொடுத்துருவா மாலதி கூற.. அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் முதல்ல அந்த பொண்ண அனுப்பி வைக்கிற வழிய பாரு.. என்றதும்தான் மாலு ஜான்விக்கு போன் அடித்ததும் அவளை அழைத்ததும்..
இதோ இப்போது அந்த குறுகல் புத்தி காரனின் முன் சிக்கிய மான்குட்டியாய் நின்று இருந்தாள் ஜான்வி..
சொல்..லுங்க.. சொல்லுங்க சார்.. பேசணும்னு சொன்னீங்களாமே.. சுற்றிய ஊசி பார்வையில் ஒரு வித அசூய உணர்வு மேல் எழும்ப கேட்டவளை தலை சாய்த்து பார்த்தான் சமர்த்..
கொத்தி தின்னும் அவன் கண்கள் அவள் தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இனுக்காய் கீழ் இறங்கி.. சில இடங்களில் தாபத்தோடு நின்று கொண்டது. கண்டவளுக்கு இன்னுமே உடல் கூசி போனது.. கையில் இருந்த கைப்பையை தன் நெஞ்சோடு மறைத்துக் கொண்டாள்..
சார்.. அவளின் சற்று அழுத்தமான குரலில் ஹான்... நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான் சமர்த்..
அன்னைக்கு நீ தானே வந்து பணம் வாங்கிட்டு போனே.. ஒன்றும் தெரியாதது போல் கேட்க.. நிமிர்ந்த பார்வையோடு ஆம் என்று தலையசைத்தாள்..
அவள் நிமிர்ந்த பார்வையில் ஒரு கணம் தடுமாறி பின் ஆரம்பித்தான் சமத்.. அன்னைக்கு உன்னிடம் சில விஷயங்கள் பேசணும்னு நினைச்சேன்.. ஆனா வேலைல பேச முடியல.. வார்த்தைகள் ஏதோ கூற பார்வையோ கொஞ்சமும் இங்கிதம் இன்றி மென் தேகத்தாளை அவ்வப்போது தழுவி சென்றது..
.
சொல்லுங்க சார்.. என்ன பேசணும்.. பணமா.. சொன்னபடி சொன்ன நேரத்துக்கு கொடுத்துடுவேன்.. என்ற அவளிடம் மறுத்து தலையாட்டினான். பணமெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையே இல்ல.. ஆனா அது உனக்கு பெரிய பிரச்சனை தானே.. இதை ஈசி அடைக்க ஒரு வழி இருக்கு.. நீ சம்மதிச்சா ஒரே நாள்ல அடைச்சிட்டு நீ யாரோ நான் யாரோன்னு போயிடலாம்.. இல்லன்னா இந்த கடன்.. இதுக்கு வட்டி வேற அப்பப்ப... கண்களை உருட்டினான்.
அப்படி என்ன வழி கூற போகிறானாம்.. அவள் பார்வைகள் கூர்ந்தது. ஏற்கனவே இங்கு வந்ததிலிருந்து அங்கு இருக்கும் நடவடிக்கை ஒன்றும் அவ்வளவு சரியாய் இல்லையே.. நெஞ்சோடு இருந்த பயத்தை ஓரங்கட்டி அவள் அமர்ந்திருக்க.. ஒரு நாள்.. ஒரு நாள்.. என்கூட டைம் ஸ்பென்ட் பண்ணா.. இந்த பணம் எதுவும் நீ எனக்கு கொடுக்கத் தேவை இல்லை.. நேரடியாய் அவன் கேட்ட கேள்வியினில் நெஞ்சங்குழி அதிர்ந்து போனது..
அவள் மிரண்டு விரிந்த விழிகளை கண்டவன்.. என்ன.. ஒரு நாளுக்கே 15 லட்சம் னு சொல்றான்னு பாக்குறியா? பரவாயில்லை நீ அவ்வளவுக்கு ஒர்த் தான்.. உனக்கு ஓகேன்னா ஒரு வாரம்னாலும் வச்சுக்கலாம்.. என கூறி முடிப்பதற்குள் பளார் என அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தாள் ஜான்வி..
அவளிடம் இருந்து இப்படி ஒரு பதில் மொழியை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது... சின்ன பெண்.. கேட்பதற்கு நாதி இல்லை என அறிந்திருந்தவன்.. ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவள் அறைந்ததில் .. விக்கித்து பார்க்க..
யாரைப் பார்த்து டா இப்படி கேக்குற.. உன்கிட்ட பணம் வாங்கி இருக்கேன்.. ஒத்துக்கிறேன்.. அதுக்குன்னு எப்படினாலும் பேசலாம்.. கேட்கலாம்னு அர்த்தம் கிடையாது.. சொன்னா சொன்னபடி இன்னும் ஒரு வருஷத்தை அந்த பணத்தை உன் மூஞ்சில தூக்கி அடிச்சிருவேன்.. அதுவரைக்கும் தேவையில்லாம இப்படி பேச்சு வச்சுக்காத.. கூறி செல்லப் போனவளை அவள புடிங்கடா.. என்ற குரலில் பாய்ந்து அவளை நோக்கி இரு ஆண்கள் ஓடி வர.. நிலைமை தீவிரம் புரிந்தது.. அவர்கள் கையில் மாட்டினால் நிச்சயம் விடப் போவதில்லை என அறிந்தவளாய் நடக்கும் அபாயகரத்தை உணர்ந்து அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள்..
குறுகலான சந்து என்பதால் மறைவதற்கும் வழி இல்லை.. நேராய் ஒற்றையடி பாதை.. ஓடினால் தான் இங்க இருந்து தப்ப முடியும்.. வயிற்றை ஆடாமல் கையோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள்..
பாப்பா உனக்கு ஒன்னும் ஆகாது.. அம்மா ஒன்ன அப்படி எல்லாம் விட்டு விட மாட்டேன்.. உள்ளே இருக்கும் குழந்தைக்கு கூறினாளோ இல்லை தனக்கு தானே கூறிக் கொண்டாளோ.. எந்த நிலையிலும் தன் காதலின் ஆதாரமாய் வளர்ந்து கொண்டிருக்கும் உயிரை விட்டு விட எண்ணமில்லை..
பின்னே தொடர்ந்து வருபவர்களிடம் இருந்து தப்பிக்க தன்னால் முடிந்த மட்டும் வேகமாய் ஓடினாள்..
திடீரென கால் பிடரியில் அடித்து நின்றது.. இது தான் வந்த பாதை இல்லையே.. வழி மாறி விட்டேனா.. பயத்தில் நெஞ்சம் என்று துடிக்க அதற்குள் பின்னே அவளை நெருங்கி இருந்தவர்களோ.. அவள் வளைத்திருந்தனர்..
அம்மா.. அரண்டாள்.. ஒதுக்கப்புறமான அந்த இடத்தில் காப்பாற்றுவதற்கும் ஆட்கள் இல்லை. இனி பயந்தால் வேலைக்காகாது முடிவோடு போட்டிருந்த ஜடையை தூக்கிக் கொண்டையாய் முடிந்து கொண்டாள்..
உன்ன அம்மா விட்டுட மாட்டேன்.. வயிற்றுமணியை பார்த்து கூறியவளின் கண்களில் அத்தனை தீர்க்கம்.. தன்னை நோக்கி பாய வந்தவனை சடுதி கனத்தில் கையை நேராய் வைத்து வீசியதில் அம்மாஆஆஆ.. அலறலோடு பாய்ந்து பின்னே விழுந்தான்..
என்னடா ஆச்சு.. கூட வந்த மற்றவர்கள் பார்த்து விழி விரிக்க.. அடுத்த ஐந்து நிமிடங்களில் தன்னை நோக்கி வந்தவர்களை தன் கராத்தே
வினால் அசுரத்தனமாய் பந்தாடி கீழே விழ வைத்து விட்டாள்.. அவள் கொடுத்த ஒவ்வொரு அடிக்கும் எழ முடியாமல் ஒவ்வொருவரும் சுருண்டு கிடக்க பார்த்தவளின் கண்களில் வெற்றி..
தப்பிய நிம்மதியோடு அங்கிருந்த செல்ல போக திடீரென பின் மண்டையில் பளார் என விழுந்த அடியில்.. அஹ்ஹ்.. தலையை பிடித்து நிலை குத்திய கண்களோடு திரும்பினாள்..
ஆம்பளைங்களே அடிக்கிற அளவுக்கு அவ்வளவு தைரியமாடி ப**.. பற்களுக்கு இடையில் வார்த்தைகளை கசிய விட்டு துப்பியவன் அடுத்த நிமிடம் அவள் முடியை கொத்தாய் பற்றி இருந்தான்..
அஹ்ஹ்.. அவள் அலறலை பொருட்படுத்தாமல் கேவலமாய் பல் இழித்து அவள் மீது படர்ந்திருந்த துப்பட்டாவை உருவி எடுக்க.. பலவீனமான கைகளோடு அவனை தடுக்க முடியாமல்.. வாங்கிய அடியில் அதே இடத்தில் மயங்கி சரிந்து இருந்தாள் ஜான்வி.. கேட்க நாதி அற்று.
யூ டி எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொன்னா பெரிய ஆதரவா இருக்கும்..
கருத்துகள்
கருத்துரையிடுக