முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 04

 


அம்மா.. வலியில் அலறி மயங்கி விழுந்தாள் ஜான்வி.. அந்த ஒரு நொடியில் மருத்துவமனையில் இருக்கும் தாயும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் மட்டுமே கவனத்தில் நிற்க.. அடர்ந்த இருள் ஒன்று கண்களை மறைத்தன.. 




தான் அவர்களிடம் அகப்பட்டு விட்டால் இனி தன் வாழ்க்கை என்னாகும் என்பதை விட அவர்களால் தன் தாய்க்கோ குழந்தைக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே மயங்கி சரிந்தாள் ஜான்வி..




ஒரு பொ**யா இருந்துகிட்டு என்ன திமிர்த்தனம் பண்றா.. இத்தனை ஆம்பளைங்க அடிச்சு போட்டு இருக்கா.. அவளை கட்டையால் அடித்தவன் சுற்றி கீழே கிடந்தவர்களை பார்த்து ஏளனமாய் காரி துப்பி விட்டு கீழே கிடந்தவளை ஒருகணம் விழியால் அள்ளிப் பருகினான்..




கீழே விழுந்ததற்கு அவள் உடை ஏற்ற இறக்கமாகி மறைமுக முகடுகள் ஆங்காங்கே கண்களுக்கு விருந்தாகி போக.. ஆசையோடு அவள் நோக்கி நீண்டன அவன் கரங்கள்.. 



அவள் தனக்கு வேண்டும் என்று தான் கூறியிருக்கிறான் சமர்த்.. அப்படியே வேண்டும் என்றா கூறி இருக்கிறான் மனதில் சிறு நயவஞ்சகம் தோன்ற.. கண்முன் இருக்கும் பெண் கனியை சுவை பார்த்து தன் தலைவனிடம் விடக் கூறியது அவனுக்குள் இருந்த கேவலமான மிருகம் ஒன்று..



அவளை ஆழ்ந்து பார்த்தான்.. மயக்கத்தில் கிடப்பது தெரிந்தது.. அங்க இருந்து இவ்வளவு தூரம் நீ ஓடி வந்ததும் நல்லது தான்.. தனக்குள் கூறிக் கொண்டவன் அவள் அந்தரங்கம் நோக்கி கை நீட்ட.. சடுதியில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த கரம் ஒன்று அவன் கரத்தை முறுக்கி பின்னோடு எழுத்து திருப்பி.. குறுக்கோடு சேர்த்து வளைத்து முதுகையும் உடைத்து விட்டிருந்தது..




அஹ்ஹ்.. அங்கிருந்து மரங்களில் பட்டு எதிரொலித்தது அவன் அலறல்..



சுற்றி எழுந்தவர்களும் எழ திராணி ஏற்று இன்னும் வலியில் முனங்கிக் கொண்டு கிடக்க.. வந்தவனோ ஒரு கணம் நீதானித்து கீழே கலைந்து ஓவியமாய் கிடந்தவளை தூக்கி கொண்டான்.. ஓடினான்.. தன் காரில் போட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான்..




அம்..மா.. ம்ம்.. மம்.. இரண்டு வயது குழந்தையான கிருத்திகா.. அம்மாவின் புடவை முந்தானையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருக்க ஒரு நிமிஷம் இரு பாப்பா.. அம்மா செஞ்சுட்டேன்.. தட்டில் போட்டு தரேன்.. என அவசரமாய் கூறியபடி தட்டில் சோறு போட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஜான்வி..




திடீரென வெளியில் இருந்து.. கிசிக்.. கிசிக்.. கிசிக்.. கிசிக்.. என்ன சத்தம் கேட்டது தான் தாமதம்.. அடுத்த கணம் கேட்டுக் கொண்டிருந்த உணவையும் மறந்து வெளியே ஓடி போனாள் கிருத்திகா.



மகளைப் பற்றிய அறிந்தவளாய்.. இவ வயசுக்கு அப்படி இந்த பாட்டுல என்னதான் புரியுதோ.. தனக்குள் புன்னகைத்து பிள்ளை கேட்ட படி தட்டில் சாப்பாட்டை போட்டு.. ஜான்வி வெளியே எடுத்து வந்திருக்க.. அங்கு கண்ட காட்சியில் ஒரு கணம் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள்..




பாட்டுக்கு ஏற்ற வகையில் கைகளை அசைத்து கிருத்திகா ஆடிக்கொண்டிருந்தாள்.. ஒவ்வொரு வளைவிலும் அவ்வளவு எடுப்பாய் அவள் அசைவு.. அதிலும் டிவியில் அவர்கள் எப்படி ஆடுகிறார்களோ தெளிவாய் உள்ளுக்குள் கிரகித்து அதே போல் ஆடிய மகளை கண்டு ஜிவ்வென உச்சி குளிர்ந்து அவள் நின்று இருக்க.. திடீரென அவளுக்கு துணையாய் ஆடுகிறேன் என்ற பெயரில் வராத நடனத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு மூட்டுகளை ஆங்காங்கு தூக்கி காமெடி செய்து கொண்டிருந்தான் அவன்.. அசோகன்..




ஆட்டத்தோடு ஆட்டமாய் சட்டென திரும்பியவனோ அங்கு எதிர்பாராமல் நின்றவளை கண்டு ஸ்தம்பித்து போய் விட்டான்.. அவளோ தன்னை மறந்து வாயால் கை பொத்தி சிரித்திருந்தாள்.. மாட்டிக்கொண்ட ரீதியில் விழித்தான் அசோகன்..



நீ எப்போ வந்த.. என கேட்டாலும் நல்ல பிள்ளையாய் சென்று ஓரமாய் கிடந்த சோபாவில் அமர்ந்து விட ஏன் என் முன்னாடி ஆடினா என்னவாம்.. உரிமையாய் கேட்டபடி குழந்தையை நெருங்கி ஆடிக் கொண்டிருந்தவளை தோள் பற்றி திருப்பி தன் மடியில் அமர வைத்தாள் ஜான்வி..



அம்மா.. விடுமா நான் டான்ஸ் ஆடணும் என.. தாயின் கை வளைவில் அடங்காதவளாய் கிருத்திகா மீண்டும் எழுந்து ஒரு நடனத்தை போட்டு.. வேகமாய் அசோகனிடம் ஓடி வந்தாள்..




அப்பா.. வாப்பா.. இவ்வளவு நேரம் எவ்வளவு நல்ல டான்ஸ் ஆடிட்டு இருந்த.. வா சேர்ந்து ஆடுவோம்.. என உரிமையோடு அவன் கரம் பற்றி இழுக்க.. ஒற்றை புருவம் உயர்த்தி ஜான்வி பார்த்த பார்வையில்.. ஹிஹிஹி.. அசுயையாய் சிரிக்க மட்டுமே முடிந்தது அவனால்..



அவனுக்கு ஆட தெரியாது என்பது அவனுக்கும் நன்றாகவே தெரியும்.. இருந்தும் குழந்தை ஆடும் போது கை கால்கள் சும்மா இருக்க முடியாமல் தானாக உதற ஆரம்பித்து விட்டன.. அதுக்கு டான்ஸ் என குழந்தையே பெயர் வைத்துக்கொண்டு இப்பொழுது நடனமாட வேற கூப்பிடுகிறதே.. எண்ணம் தோன்ற அவன் விழித்துக் கொண்டிருக்க.. போய் ஆடுங்க அசோக்..என்றாள் இதழ் மடித்து சிரித்தபடி..



பாத்தியா என்னை கேலி பண்ற.. நீ எனக்கு ஒழுங்காவே டான்ஸ் ஆட வராதுன்னு உனக்கும் தெரியும்.. அப்படி இருந்தும் ஏன் இப்படி டான்ஸ் ஆடுனு  சொல்லி டீஸ் பண்ற.. 



இது டீஸ் எல்லாம் இல்ல.. நமக்கு புடிச்சத நம்ம செய்ய மறுப்பானேன்.. நமக்கு வருதோ இல்லையோ.. உனக்கு பிடிச்சதுன்னா நீயும் டான்ஸ் ஆடு.. என கூறியவளை தலை சாய்த்து ஆழ்ந்து பார்த்தான்..  இன்னும் நீ மாறவே இல்ல ஜானு.. அவன் வார்த்தையில் சட்டென அவள் முகத்தில் இருந்த பொலிவு மங்கியது..



அப்படி கூப்பிடாத.. என்றாள் இறுகிய குரலில்.. 



சட்டென சுதாரித்து கொண்டவனாய்.. சாரி சாரி நான் வேணும்னு அப்படி கூப்பிடல ஒரு பேச்சு வாக்குல..



பேச்சு வாக்குலனாலும் அப்படி கூப்பிடாத ப்ளீஸ் அசோக்.. கண்களை சுருக்கி கூறியவளை கண்டு மறுக்க தோன்றவில்லை..




சரி ஒரு மார்க்கமாய் தலையசைத்து விட்டு எழுந்தான்.. 



எங்க போற.. அவள் கேட்டதற்கு நின்று திரும்பினான்..



இன்னைக்கு திங்கட்கிழமை வேலை கிடக்கே.. என்றவனை முறைத்தாள்..



இப்போதான் ஆபரேஷன் பண்ணி முடிச்சு வீட்டுக்கு வந்துருக்க.. திரும்ப மூட்டையை தூக்குகிறேன்.. அதை தூக்குறேன்னு போயி உடம்ப கெடுத்துக்காதே..



உடம்பை விடு ஆனா இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.. அடுத்த மாசம் வாடகை கொடுத்தாகனுமே.. என்றவனை ஆழ்ந்து பார்த்தாள்.



நான் உன் தோழி என்கிற நினைப்பை மனசுல வரல தான் போல இருக்கு.. இறங்கிய குரலில் அவள் கூறிட ச்சே.. ச்சே.. என்ன லூசு மாதிரி பேசுற..  சட்டென தலை கோதினான்.



அப்படி எதுவும் இல்லைனா நான் கொடுக்கிற பணத்தை வாங்குறதுல உனக்கு என்ன கஷ்டம்.. நேரான பார்வையில் அவள் கேட்க.. என்ன ஜான்வி நீ.. எவ்வளவு சுமையை தான் நீயே எடுத்துப்ப.. உனக்கு சுமையா இருக்குமோன்னு எனக்கு குற்ற குறுகுறுப்பா இருக்கு.. என்றவனை கூர்ந்து பார்த்தாள்.





அப்படி பார்த்தா அன்னைக்கு அந்த ரவுடிங்க கிட்ட மாட்டிக்காம என்ன காப்பாத்துனது யாரு.. அம்மா இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் உடைந்து நின்ன என்ன தேத்தி பெத்தவளுக்கு சமமா.. என்ன கண்ணுக்குள்ள வச்சு டெலிவரி பார்த்து இதோ கண்ணு முன்னாடி நடமாடுற இந்த பிள்ளையை உன் பிள்ளையா ஏத்துக்கிட்டு.. நான் வாங்குன கடனுக்கு அந்த படு கார பாவி.. என்னென்னமோ கணக்கு போட்டு 15 லட்சத்துக்கு 40 லட்சம் கொடு.. இல்லனா அந்த பொண்ண குடுன்னு உன்கிட்ட பேரம் பேசினப்போ கண்ணுல தீ பொரியோட எத பத்தியும் யோசிக்காம  ஒரே நாள்ல உனக்குன்னு இருந்த காரு வீடு எல்லாத்தையும் வித்து அந்த அரக்கன் கிட்ட இருந்து என்னையும் என் குழந்தையையும் காப்பாற்றி .. இன்னும் எத்தனை... நீ எனக்கு செஞ்சிருக்க.. அப்போ அந்த நிமிஷம் எல்லாம் நான் உனக்கு சுமையா தான் இருந்திருக்கேனா அசோக்.. அவள் கேட்ட கேள்வியில் பதறிவிட்டான்...



ஏன் இப்படி எல்லாம் கேட்கிற.. யாருமே இல்லாம பிரண்ட்ஸ் மட்டுமே உலகம்னு சுத்திட்டு வந்த எனக்கு இதுதான் குடும்பம்..  இதுதான் நிம்மதி..இதுதான் சந்தோசம்னு காட்டுன பொக்கிஷம் நீ.. நீ எனக்கு தோழி மட்டும் கிடையாது.. அம்மா.. அக்கா.. பிரண்ட்.. சொல்லப்போனா மகளும் கூட தான்.. அவன் வார்த்தைகளில் உள்ளுக்குள் உருகி தான் போனாள்.




அவன் வார்த்தைகளில் சட்டென கண்களில் துளிர்த்த நீரை உள்ளோடு இழுத்துக் கொண்டபடி.. அப்போ இப்ப நான் சொல்றத கேளு.. ஒன்னு உட்கார்ந்து பாக்குற மாதிரி வேற வேலைய தேடும். இல்லனா வேலைக்கு போற சங்கதியே வேண்டாம் விட்டுடு.. என அழுத்தமாய் கூறியவளை ஆழ்ந்து பார்த்தான்..




வேற வேலைக்கு போறது ஒன்னும் பெருசு இல்ல.. ஆனா இதுல வர்ற சம்பளம் எதுவும் அதுல வராதே.. ஜம்பமா உக்காந்து வேலை பார்க்கணும்னா மாசம் கைக்கு 15 தான் வரும்.. ஆனா இதுல பாரு டெய்லி 1000..  ஆயிரத்துக்கு மேல.. மாசம் 30 35 தாண்டி கைக்கு வருது.. அதுக்கு தான் இதிலேயே போறேன்.. 



நீ அப்படி ஒன்னும் கை நிறைய சம்பாதின்ணு நான் சொல்லலையே அசோக்.. நானும் தான் இப்போ சம்பாதிக்கிறேன்.. முன்ன உன் ஒருத்தன் காசுல நம்ம இருக்கணும்.. சாப்பிடணும்.. ஆனா இப்போ நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டேன்.. பாப்பாவ வழக்கம் போல நர்சரில விட்டுட்டு நம்ம வேலைக்கு போகலாம்.. ஈவினிங் யாரு சீக்கிரமா வர்றோமோ அவங்க போய் பாப்பாவ கூப்பிட்டுக்கலாம்.. இது தானே இந்த மூணு மாசமா நடக்குது.. அப்புறம் என்ன.. நல்ல வேலையாவே பார்த்துப்போ.. நானும் உனக்கு சப்போர்ட் பண்றேன்.. என்றவளிடம் ஒரு மார்க்கமாய் தலையசைத்தான்..



பாக்கறேன்.. பாக்கறேன்.. என்றவனின் குரலில் நம்பிக்கை இல்லை போலும்.. தூசு படிஞ்சு கிடக்குற உன் சர்டிபிகேட் எல்லாம் முதல்ல தட்டி வெளியே எடு.. வேலைக்கு அப்ளை பண்ணு.. இன்டர்வியூ போ.. நீ நல்ல வேலைக்கு போறேன்னு தெரிஞ்சாதான் நான் உன்னை வீட்டை விட்டே வெளியே அனுப்புவேன்.. என உரிமையாய் கூறியவளை சிரிப்போடு பார்த்தான்..




என்ன சிரிப்பு.. கடுகடு முகத்தோடு புருவம் உயர்த்தி கேட்டவளை கண்டு.. ம்ம்ஹும்.. ஒண்ணுமில்ல.. நான் போய் நியூஸ் பேப்பர் வாங்கிட்டு வரேன்.. அதுல தான் நம்ம கேக்குற மாதிரி வேலை தேடணும்.. தலையை உலுக்கி எழுந்தான்..



ம்ம்ம்.. முதல்ல அதை செய்.. குழந்தைக்கு சோறு ஊட்டுவதில் கவனம் ஆனாள்..




வாசல் வரை வந்தவனின் நடை நின்று பார்வை அவளிடம் திரும்பியது.. அவளுடன் ஆன இந்த உறவிற்கு பெயர் வைக்க விரும்பவில்லை அவன்.. ஆனால் இது வேண்டும்.. எப்போதும் வேண்டும்.. தன் கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் வேண்டும்.. மனதோடு எண்ணி மீண்டும் ஒருமுறை தாயையும் மகளையும் கண்ணில் நிறைத்து கொண்டு வெளியே நடந்தான் அசோக்.. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...