பார்த்து இருந்துக்கணும் பாப்பா.. யாரையும் தொந்தரவு பண்ணக்கூடாது.. எது வேணாலும் மிஸ்கிட்ட கேளு.. மிஸ் தருவாங்க.. குட் கேர்ள்லா இருந்துக்கணும்.. மதிய சாப்பாட வேஸ்ட் பண்ணாம சாப்பிடணும்.. அதுவும் முட்டை எல்லாம் கண்டிப்பா சாப்பிட்டடணும் என்ன.. என கிரஷ் வாசலில் நின்ற ரித்திகாவிடம் மண்டியிட்டு காற்றில் கலைந்த அவள் முடியை சரிப்படுத்தியபடி கூறி கொண்டிருந்தாள் ஜான்வி.. வழக்கமாய் அவள் கூறுவது தான் என்றாலும் இன்று தான் புதிதாய் கேட்பது போல் கவனமாய் கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்தாள் கிருத்திகா..
நீ கவலைப்படாதே மா.. நான் பாத்துக்கிறேன்.. மழலை சிட்டின் பேச்சில் பெரிய மனுஷ தோரணை.. கனிந்தன அவள் விழிகள்..
சிட்டோ திடீரென எதிரில் வந்தவர்களை கண்டு விழிகள் மலர்த்தியது..
ஹேய்.. தன் குரல் கொடுக்க வந்த இரண்டும் கூட அவள் வகுப்பு தோழிகளாம்.. அவளை விட அரை அடி உயரம்.. உச்சி குடுமியோடு நெருங்கிய குழந்தைகளிடம் பேசிய படி தோளில் ஆளுக்கு ஒரு பக்கமாய் கை போட்டு பெற்றவளுக்கு பாய் சொல்லி விட்டு நல்ல பிள்ளையாய் அவள் உள்ளே செல்ல.. இந்த வயதிலேயே இத்தனை மனமுதிர்ச்சியா.. மகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஆனால் தாய் தந்தை அரவணைப்போடு சகலமும் நிறைய வாழ வேண்டிய வாழ்க்கை கிடைக்காமல் போன தன் குழந்தையை எண்ணி மனம் கனத்தது ஜான்விக்கு.. என்னதான் சில நேரங்களில் குழந்தைக்காக.. என எந்த படிப்பும் இல்லாத இந்த வாழ்க்கையை இழுத்து பிடித்து கொண்டாலும்.. சில நேரங்களில் அதே குழந்தையை நினைக்கும் போது.. எல்லாம் தன் அலர்சியத்தால் வந்த விளைவு.. நம்பி மோசம் போனதால் வந்த நிலைமை.. தன்னால் தன் இளம் உதிரமும் கூட பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.. மனம் தவித்தாள்.
இதோ இப்போதும் கூட.. கிராஷ்ஷுக்குள் சென்று கொண்டிருந்த குழந்தையை பார்வையால் வெறித்தபடி என்னால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. பெற்றவளை என் அலட்சியதால் கொன்று விட்டேன்.. எனக்கு பிறந்தவளை அன்பில் நனைய வைத்து திளைக்க வைப்பதற்கு மாறாய் நானே தனிமையை சந்திக்க விரும்புகிறேன்.. கண்களில் முட்டி நின்ற நீர் துளி பார்வையை திரையிட்டு மறைத்தது..
குழந்தைக்கு ஒன்றரை வயது வரும் வரை வீட்டில் தான் இருந்தாள் ஜான்வி.. குழந்தை பிறந்த மூன்றே மாதத்தில் வேலைக்கு செல்கிறேன் எனக் கூறி தனக்கான வேலையையும் கண்டுபிடித்தவளை அதட்டிமிரட்டி வீட்டில் இருக்க வைத்தவன் அசோக் தான்..
அன்று.. வாழ்வில் முதன் முறையாய் வேலைக்கு செல்லும் ஆவலில் இரவு முழுவதும் உறக்கமின்றி படுக்கையில் புரண்டு விடியற்காலையிலேயே எழுந்து விட்டாள் ஜான்வி..
சத்தம் கேட்காமல் கவனமாய் கிளம்பினாள். எங்கே சத்தம் கேட்டு குழந்தை எழுந்து விட்டால் பெண் கிளம்புவதற்கு சிரமமாய் இருக்குமே என்றுதான்.. ஆனால் சின்ன குழந்தையின் பார்வையில் இருந்து தான் தப்பிக்க முடிந்தது.. அவன் எழுந்து விட்டான்.. அவ்வப்போது அந்த பக்கமும் இந்த பக்கமுமாய் நடந்து கொண்டிருந்தவளின் கொலுசு சத்த அலப்பறையில்.. உறக்கம் கலைந்து எழுந்தான் அசோக்..
வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தவளை அப்போதுதான் கண் கசக்கி கண்டவனாய் எழுந்து நின்றான்..
அவன் எழுந்ததை கண்டு புன்னகையோடு திரும்பினாள்.. என்ன அசோக்.. அப்படி பாக்குற..வேலைக்கு கிளம்புறேன்.. என்றவளை தலை சாய்த்து ஒரு கணம் உற்று நோக்கியவன் ஒன்றும் பேசாமல் குளியல் அறைக்குள் நுழைந்து தன்னை சுத்தப்படுத்தி வெளியே வந்தான்.
நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேல்ல.. எடுத்த எடுப்பில் ஆதங்கம் அவன் குரலினில்..
ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற அசோக்.. நம்ம வீடு இப்ப இருக்கிற நிலைமைக்கு இரண்டு பேர் வேலைக்கு போனாதான் சரியா வரும்.. என்றவளை பார்வையால் உறுத்து விழித்தான்.
அப்படி உனக்கு என்ன நான் செய்யாம வச்சிருக்கேனாம்.. சண்டைக்கு வருவது போன்றான அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.
ஆனாலும் தன்னை காப்பாற்றிய ஒரே காரணத்திற்காக அனைத்து பழுவையும் அவன் தோள் மேலே ஏற்ற அவள் விரும்பவில்லையே.. இதை வெளிப்படையாய் அவனிடம் கூற முடியாது.. கூறினாலும் அவன் ஏற்றுக்கொள்ளப் போவதும் கிடையாது..
அப்படி இல்ல அசோக்.. ஆனா நானும் வேலைக்கு போனா உனக்கு கொஞ்சம் பாரம் குறையுமே.. தயங்கி கூறியவளை அவன் பார்த்த பார்வையில் தானாக கப் சிப்பானது அவள் வாய்.
கண்கள் சிவந்து போனான் அசோக். நான் உங்களை என்னைக்காவது சுமைன்னு சொல்லி இருக்கேனா.. கேட்டவன் குரலில் எங்கிருந்து அவ்வளவு ஆங்காரம் வந்ததோ.. ஒரு கணம் மிரண்டாள் ஜான்வி.
ஐயோ நான் அப்படி சொல்ல வரல.. ஆனா என்ன இருந்தாலும் உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு.. இப்படி எத்தனை காலத்துக்கு நீயே எங்களையே பார்த்துகிட்டு இருக்க முடியும்.. அவள் கேட்ட கேள்விக்கு உயிர் இருக்குற வரைக்கும்.. பட்டென வந்தது அவன் வார்த்தை..
என்ன.. அவள் விழிகள் உருண்டு திரள சட்டென தன்னிலை கொண்டு பிடரி மயிர் கோதி தன்னை நிதானபடுத்தி கொண்டவனாய் கீழுதட்டை வளைத்து கடித்து பிடித்தவன்.. இப்போ எதுக்கு இப்படி முடிவு எடுத்த.. பாப்பாவுக்கு நேரத்துக்கு நேரம் ஃபீட் பண்ணனும்னு உனக்கு தெரியாதா.. இந்த முறை இறங்கி இருந்தது அவன் குரல்.. ஆனால் அதே இடத்தில் வந்து நின்றவனை சோர்வாய் பார்த்தாள்.
முக்கியம்தான்.. குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது ரொம்பவே முக்கியம் தான்.. ஆனால் அதையும் தாண்டி அவனுக்கு சுமையாய் இருந்துவிடக் கூடாது என்றல்லவா இந்த மனம் பிராண்டுகிறது.. அதிலும் தன்னை பார்க்கும் வரை செல்வ செழிப்பாய் வளம் வந்தவன் தன்னை அழைத்து வந்த கணத்திலிருந்து மூட்டை தூக்கியும் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பு தங்களுக்காக அல்லவா.. எத்தனை நாட்கள் இப்படியே அவனுக்கு சுமையாக தாங்கள் இருக்க முடியும்..
அவன் கேள்விக்கு பதில் எதுவும் கூற முடியாது அமைதியாய் கீழுதட்டை கடித்து நின்றவளை பார்வையால் உறுத்து விழித்தவன்.. கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடு.. என்றான் இறுகிய குரலில்..
இந்த குரலில் பேசிய பின் இதற்கு மேல் என்ன பேசினாலும் அவனிடம் பருப்பு வேகாது என இத்தனை நாட்கள் அவனோடு இருந்ததன் பலனாய் அறிந்தவள் உண்மையிலேயே சோர்ந்து தான் போனாள்.. அன்று காலையில் வெளியில் சென்று விட்டிருந்தவன் இரவு வெகு நேரம் கழித்து தான் வீட்டிற்கு வந்திருந்தான்..
சரியாய் குழந்தை உறங்க வைத்து வெளிவந்தவளின் முன் வழியை மறைத்தபடி நின்றவன்.. கேள்வியாய் அவள் பார்த்து கூற வந்த வார்த்தையில்.. ஒரு நிமிஷம் என தன் சட்டை பாக்கெட்டுக்குள் கையை விட்டு கட்டையாய் பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தான்.
ஹான்.. அவள் புரியாமல் பார்க்க பணம் வேணும்னா தயங்காம கேளு.. என்கிட்ட வாய் விட்டு கேக்குறதுல உனக்கு என்ன அவ்வளவு ஈகோ.. என இன்னும் மாறாத இறுகிய குரலில் கூறி சென்று விட.. தோல் தளர்ந்த அவனின் சோர்வு நடை இன்று செய்த அலாதி வேலையை காட்டியது..
காலையில் தான் பேசியதனால் பணம் தேவை என எண்ணி ஒரு நிமிடம் கூட அமராது உழைத்திருக்கிறான் போலும்.. தன் பேச்சு அவனை இவ்வளவு பாதிக்கிறதா.. அதன் பின் ஜான்வி அந்த பேச்சை எடுத்ததில்லை..
அவனும் எதுவும் கூறவில்லை.. வழக்கம் போல் பகல் நேரங்களில் குழந்தையை பார்த்து கொள்வது.. அவள் உறங்கும் நேரங்களில் எங்கெங்கோ அலையும் எண்ணங்களோடு போட்டி போட்டு மனதை புண்ணாக்கி கொள்வது.. மாலை அவன் வந்த பின் கூறும் சிறு மொக்கை ஜோக்குகளுக்கும் தன்னை மறந்து சிரிப்பது என சிறப்பாய் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க.. ஆனால் மனதில் முள்ளய் குத்தும் வேலைக்கு செல்லும் எண்ணம் மட்டும் விலகவில்லை..
அன்று..
குழந்தைக்கு ஒன்றரை வயது கடந்த நிலையில் அவன் முன்பாக வந்து நின்றாள் ஜான்வி.. குழந்தையோடு ஏதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தவன் எதிரே நின்றவளின் அடி சத்தம் உணர்ந்து ஹே ஜான்வி.. பாப்பா பாரேன்.. அப்பா.. அப்பா சொல்றா.. என உண்மையான தகப்பன் போல் மகிழ்ச்சியோடு குதிக்கழித்துக் கொண்டிருக்க அவளிடம் இருந்தோ எந்த பதில் மொழியும் இல்லாததில் கேள்வியாய் புருவங்களை சுருக்கி நிமிர்ந்து பார்த்தான்..
நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அசோக்.. தயங்கியபடி அவள் நிற்க.. சொல்லு என்றான் சற்று மாறிய குரலில்.. ஏதோ பஞ்சாயத்தை கொண்டு வந்திருக்கிறாள் என அறிந்து விட்டான் போலும்..
அசோக் நான் சொல்றேன்னு கோவப்படாத கொஞ்சம் பொறுமையா கேளு.. அவள் போட்ட தூபத்தில் அவன் புருவங்கள் இன்னும் முடிச்சிட்டன..
பாப்பா இப்போ வளந்துட்டா.. ஒரு வயசுக்கு மேல ஆயிடுச்சு.. புட்டி பால் குடிக்க ஆரம்பிச்சிட்டா.. நான் வேலைக்கு போறேனே.. தயக்கத்தோடு புடவை நுனியை திருகிக் கொண்டு கேட்டவளை ஒருகணம் தலைசாய்த்து பார்த்தவன் அடுத்த கணம் என்ன நினைத்தானோ சரி.. என்றிருந்தான்..
ஹான்.. ஆச்சரியத்தில் அவள் விழிகள் விரிந்தன..
உண்மையாவா.. சட்டென இதழில் பொங்கி வழிந்தது மகிழ்ச்சி..
ஹ்ம்ம்.. உண்மையா தான் சொல்றேன்.. எப்ப பாத்தாலும் எங்கேயோ வெறிக்க வெறிக்க பாத்துட்டு உட்கார்ந்து இருக்கிறதுக்கு தாராளமா வேலைக்கே போயிட்டு வா.. என அவன் உத்தரவு கொடுத்ததற்கு கோடி கும்பிடு போடலாம் போல் தோன்றியது அவளுக்கு..
ஆனா.. இழுத்தான் அவன்..
என்ன ஆனா.. மகிழ்ச்சியில் தடைக்கல் பட்டது போல் அவள் விழிக்க..
பாப்பாவை யாரு பாத்துக்குறதா உத்தேசம்.. நான் வீட்டில் இருந்தா பார்த்துப்பேன் தான்.. ஆனா வேலை வந்துருச்சுன்னா போற மாதிரி தான் இருக்கும்.. யோசனையோடு தாடையை தேய்த்தவனை கண்டு.. இவ்வளவுதானா என்பது போல் நிம்மதி மூச்சு விட்டவளாய் பாப்பாவ கிரஸ்ல சேர்த்து விடலாம்.. அவசரமாய் கூறினாள்.. எங்கே மனம் மாறி அவன் மறுத்து விடுவானோ என.. ஆனால் உயிரே போனாலும் வார்த்தை மாறாதவன் அவன் என இன்னும் அறிந்திருக்கவில்லை அவள்..
அவள் கூறியதும் தலை தாழ்ந்து குழந்தையை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன் பின்பு என்ன நினைத்தானோ.. ம்ம்ம்.. என்றான் தலையை ஒரு மார்க்கமாய் அசைத்து.. அதில் சற்று வருத்த சாயல் குடி கொண்டிருந்ததோ.. இப்போது சாலையில் நடந்தபடி தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறாள்..
ஆனால் அதற்கு மேல் இருப்பு கொள்ளவில்லை அவளுக்கு.. அடுத்த நாளே அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்களிடமிருந்து கடைக்காரர்கள் வரை அனைவரிடமும் தன் எதிர்பார்க்கும் படியான வேலையை கேட்டு சொல்லி வைத்தாள்..
பக்கத்து வீட்டு ரேணுகா.. என் பொண்ணு ஆபீஸ்ல ஒரு இடம் காலியா இருக்காம்..உனக்கு சம்மதம்னா நீ அங்க போய் பாரேன்.. எனக் கூறியதும் அவள் விழிகளில் மின்னல் பளிச்சிட்டது.. அடுத்த நாளே குழந்தையை கிரஷில் விட்டு விட்டு கிளம்பி விட்டாள் இன்டர்வியூவுக்கு..
நல்லவேளையாய் வழக்கமான குழந்தை போல் கிருத்திகா அழாதது பெரும் நிம்மதியானது அவளுக்கு.
நினைத்தது போலவே இன்டர்வியூவில் சக்சஸ்.. அனுபவம் இல்லாவிடினும் கேட்கப்பட்ட சிக்கலான கேள்விக்கும் சமயோசிதம்மாய் யோசித்து பதில் கூறிய அவள் புத்தி கூர்மை பிடித்து போய் வேலை கொடுக்கப்பட்டது..
குழந்தையை கிரஷ்லிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தவளுக்கு சொல்லொனா மகிழ்ச்சி.. அம்மாவுக்கு வேலை கிடைச்சிருச்சு பாப்பா.. என இரு துளி சர்க்கரையை அள்ளி வாய்க்குள் போட்டு மகிழ்ச்சியில் குதூகளித்தாள்..
இரவு அசோக் வீட்டிற்கு வர நில்லு.. நில்லு.. வாசலிலேயே அவனை வழி மறைத்தவளாய்.. அவனுக்கும் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை அள்ளி வாயில் போட.. மகிழ்ச்சி மலர்வற்கு பதிலாய் விஷயம் அறிந்து சூம்பி போனது அவன் முகம்..
அடுத்த நாளே வேலைக்கு வர சொல்லி இருப்பதால்.. நேற்று போல் குழந்தையை கிரஷில் விட்டு தான் வேலைக்கு சென்று விடவென கிளம்பினாள் ஜான்வி.. கொண்டு செல்வதற்கான காலையிலேயே இரண்டு வேலைக்கும் சேர்த்து மூவருக்கும் உணவை செய்து விட்டாள்..
அசோக்.. நாங்க கிளம்புறோம்.. நீ சாப்பிட்டு கிளம்பு.. சாவியை ஜன்னல் திட்டுல வச்சிரு.. என தன் கைப்பையில் அனைத்தும் சரியாய் இருக்கிறதா? என பார்த்தபடியே கூறி.. குழந்தையோடு வெளி நகர்ந்தவளை சட்டென இரும்பு கரம் ஒன்று பற்றி நிறுத்தி இருந்தது..
அஹ்ஹ்.. எனத் திடுக்கிடலோடு திரும்பி பார்க்க அசோக் நின்றிருந்தான்..
அசோக்.. புரியாமல் அவள் பார்க்க..
ப்ளீஸ்.. இந்த வேலையெல்லாம் வேண்டாமே பாப்பாவ பாத்துட்டு வீட்டிலேயே இருந்துடேன்.. என்றும் இல்லாத சற்று கெஞ்சல் குரல் அவளை ஒரு நொடி தடுமாறச் செய்தது..
மாறி மாறி பேசும் அவனை புரிந்து கொள்ள முடியாது விழித்து கொண்டு அமைதியாய் நின்றவளை ஒரு கணம் பார்வையால் கூர்ந்து நோக்கியவன்.. அவள் கரம் விடுவித்தான்..
பார்த்து போயிட்டு வா.. என அவள் கைப்பிடித்து நின்று இருந்த கிருத்திகாவை கண்ணில் நிறைத்துக் கொண்டு கூறி உள்ளே சென்றுவிட.. நான் செல்வதில் இவனுக்கு ஏன் இவ்வளவு சோர்வு.. யோசனையோடு அவ்விடம் விட்டு அகன்றாள் தன் மகளோடு..
கருத்துகள்
கருத்துரையிடுக