கிரஷில் கிருத்திகாவை விட்டு பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து வந்து கொண்டிருந்தாள் ஜான்வி.. என்னவோ இன்று காலை எழுந்ததிலிருந்து மனதில் ஒரு தவிப்பு..
ஏன் ஒரு மாதிரியா இருக்க ஜான்வி.. என குழந்தைக்கு துவட்டும் போதே இரண்டு முறை காரணம் கேட்டு விட்டான் அஷோக். தனக்கே என்னவென்று தெரியாத போது அவனிடம் மட்டும் என்ன கூறுவாள்.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே.. பொய்யாய் சிரித்து மழுப்பினாள்.
ஆனால் இன்னும் கூட அதே தவிப்பு உள்ளுக்குள் பரவி தான் இருக்கிறது.. அந்தத் தவிப்பில் தான் கிரஸுக்குள் சென்ற குழந்தையை ஒரு கணம் பூத கண்ணாடியாய் ஏக்க பார்வை கொண்டு கடந்த காலத்தை எண்ணி வேதனை கொண்டது..
வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி தன்னைத்தானே மறந்து கொள்ள தான் இப்படி அடி தடியாய் ஓடுகிறாள்.. ஆனால் மனதைப் பிடித்த பூஞ்சையாய் எப்போதும் ஏதோ ஒரு விஷயத்தை இந்த மூளை யோசித்து வருத்தி கொண்டே இருக்கிறதே.. அதிலும் இன்று ஒரு படிக்கு மேலாய் இந்த படபடக்கும் பட்டம்.. ச்சே தவிப்பு வேறு..
புரியாத சலனத்தோடு பஸ் ஸ்டாப்பிற்கு வந்து சேர்ந்திருந்தாள். அவ்வளவாய் கூட்டமில்லை.. நான்கு ஐந்து பேர் மட்டும் நின்றிருந்தனர். கையை திருப்பி மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்சை பார்க்க இன்னும் பஸ் வருவதற்கு ஐந்து நிமிடம் உள்ளது என தன் டக் டக்.. ஒலியோடு காட்டியது..
யோசனையில் வேகமாய் நடந்து வந்திருக்க வேண்டும்.. அதான் இந்த விரைவு ஸ்தனம்..
பரவாயில்ல எப்பவும் ஓடி வந்து பஸ் பிடிக்கிறதுக்கு இன்னைக்கு ஓகே தான்.. ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.. பெருமூச்சோடு தன்னை சமாதானப்படுத்தியபடி பஸ் வரும் நேரத்தை எதிர்நோக்கி பார்த்து நின்றாள்.
திடீரென.. ஏய்.. இது பஸ் ஸ்டாப் டா.. ப்ச்.. தள்ளி நில்லு.. அப்பா.. இல்ல தெரிஞ்சவங்க யாராவது பாத்துட்டா பிரச்சனை ஆகிடும்.. வார்த்தைகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் குழைந்து கொண்டிருந்த பெண் குரலில் ஜான்வியின் விழிகள் தன்னிச்சையாய் திரும்பின..
கல்லூரி மாணவர்கள் போலும்.. முதுகில் தன் பேக்கை மாட்டிய படி நின்ற அந்தப் பெண் குழைந்து கொண்டிருக்க.. அருகில் நின்றவனும் பார்வையால் அவளை தான் வரித்துக் கொண்டிருந்தான்.. பேக் மறைத்த பக்கமாய் அவள் இடையில் விரல்களின் சில்மிஷம் வேறு.. அதில் தான் உருகி குழைந்து நெளிந்து கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
பொதுவிடங்களில் இது போன்ற விஷயங்களை பார்த்தால் ச்சி.. கொஞ்சமும் நாகரிகம் இல்லாமல் ஏன் எப்படி நடந்துக்கிறாங்க.. இதெல்லாம் பண்ணனும்னா இடமா இல்ல.. எத்தனையோ பார்க் பீச்சுன்னு இருக்கே.. அங்க போய் இதெல்லாம் வச்சுக்காம பொது இடத்தில் இப்படியா.. என கட்டுனை கண்ணியமாய் கூறி செல்லும் பெண்களில் ஒருத்தி ஜான்விக்கு இன்று ஏனோ சிறிது மாற்றம் தேவை பட்டது..
காலையில் இருந்து தவிக்கும் தவிப்பை மாற்றும் பொருட்டு காதை அவர்களிடமே விட்டு கண்களை மட்டும் எதிர் திசையில் திருப்பினாள். ஆனால் இந்த மூளை.. அது உலகத்தில் சூழல ஆரம்பித்து விட்டது. இந்த பெண் போல் தானே தானும் இருந்தேன் அவனிடம்.. அவனை அவ்வளவு உயிருக்குயிராய் நம்பினேனே.. மனம் புழுங்கியது.
இன்னைக்கு கிளாஸ் நல்லா போச்சுல்ல.. நாளைக்கு எக்ஸாம்னதும் நேரம் போனதே தெரியல.. பொதுவாய் அவளின் பேச்சு படிப்பை சுற்றி தான் வலம் வரும்.. இருவரும் பள்ளி முடித்து நடந்து வந்து கொண்டிருந்தனர்.
ஆமா.. ஆமா.. என்ற மிதாவிற்கு படிப்பில் ஒன்றும் அவ்வளவு பெரிதாய் நாட்டம் கிடையாது. ஆனால் தோழி கூறினால் மறுக்காமல் எதுவானாலும் செய்வாள். அவள் பெற்றோரும் கூட சில நேரங்களில் அவர்களால் முடியாவிட்டால் ஜான்வியைத்தான் தேடுவர்.
நீ அவகிட்ட சொல்லேன்.. நீ மட்டும் முதல் மார்க் வாங்கினர.. உன் பிரண்டு எப்படி போனாலும் பரவாயில்லையா.. என உனக்கெல்லாம் இப்படி ஒரு மதிப்பெண் தேவைதானா.. என்பது போல் குரலில் ஏகத்தாளத்தோடு அவள் தாய் கூறும் போது.. ஐயோ ஆன்ட்டி ஃபீல் பண்ணாதீங்க.. நான் அவகிட்ட பேசுறேன்.. என்று கூறுவதோடு கூறிய வார்த்தையை நிறைவேற்றவும் செய்வாள் ஜான்வி. முன்பெல்லாம் பார்டர் மார்க்கத்தில் பாஸாகி கொண்டிருந்தவள் இந்த சில நாட்களாய் அம்பதைத் தாண்டி மதிப்பெண் எடுத்துக் கொண்டிருப்பது இவள் புண்ணியத்தில் தான்.. அந்த ஒரு விஷயத்திற்காக தான் ஆஸ்தி அந்தஸ்து என கருத்தில் கொள்ளாமல் இப்போதைக்கு மகளை இவளோடு சகஜமாய் பழக விடுவது..
முன்பு ஒன்று பேசினாலும் பின் மாறி பேசுவது அவள் தாய் மணிமேகலையின் இயல்பு.. பெருசா படிக்கிறோம்னு திமிரு.. நான் பாத்துக்குறேன்னு பெரிய இவளாட்டும் சொல்லிட்டு போறா.. மறுபக்கம் தன்னைப் பற்றிய பேச்சு இப்படி தான் இருக்கும் என தெரிந்தாலும் ஜான்வி பெரிதாய் எடுத்து கொள்ள மாட்டாள்.
தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டு தனக்கிருக்கும் ஒரே தோழியையும் இழக்க எண்ணமில்லை.
அத விடு.. இன்னைக்கு என் அண்ணன் ஊருல இருந்து வர்றான்.. குஷியோடு கூறினாள் மிதா.. ஸ்ஸ்ஸ்.. அப்பா.. இதோட 100 தடவைக்கு மேல சொல்லிட்டே டி.. காதை குடைந்தாள் ஜான்வி.
ப்ச்.. எத்தனை தடவ சொன்னா என்ன.. எனக்கு அவ்வளவு ஹாப்பியா இருக்கு.. என் அண்ணன் ஹீரோ மாதிரி..அவ்வளவு நல்லவன்.. ஸ்மார்ட்.. சொல்ல போனா அவனுக்கு அத்தனை பிமேல் பிரண்ட்ஸ்னா பாத்துக்கோயேன்.. அதோட நா ஸ்கூட்டி கேட்டேன்னு அவன் தான் என் பிறந்த நாளுக்கு வாங்கி தந்தான்.. எனக்காக என்னவேனாலும் செய்வான்.. அண்ணனின் புகழை தொடர்ந்து பாடி கொண்டு வந்தவளை அசோயையாய் பார்த்து வைத்தாள் ஜான்வி.
ஆனாலும் இவ்வளவு பில்டப் ஆகாது டி.. அண்ணன் தங்கச்சிக்கு செய்றதெல்லாம் பெரிய விஷயமா.. இல்லை.. நீ கேட்டு உன் அம்மா அப்பா தான் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட போறாங்களா.. வெளிப்படையாய் சாதாரணம் போல் அவள் கேள்விகள் தெரிந்தாலும் இது போல் ஒரு அண்ணன் தனக்கு இல்லையே என்ற ஏக்கம் அவளையும் அறியாமல் ஊடுருவ தான் செய்தது..
வாங்கி தருவாங்க தா.. ஆனா நா ஸ்கூட்டினு சொன்னதுமே லேட்டாஸ்ட் மாடல் வாங்கி குடுத்தது என் அண்ணன் தானே.. மூணு வருஷத்துக்கு முன்னாடி பெங்களூருக்கு போனவன் இப்போ தான் திரும்பி வரான்.. அதுல தான் நா பயங்கர எக்சைட்மென்ட்.. போறப்போ ஒல்லியா போனான்.. ஆனா இப்போ அவன் அனுப்புற போட்டோல எல்லாம் சும்மா கோட் சூட்டியெல்லாம் போட்டு வெள்ளைக்காரன் கணக்கா எப்படி இருக்கான்.. ஆளே மாறிட்டான்.. ஊருக்கு வர்றேன்னு சொன்னதும் நிறைய பொருள் வாங்கிட்டு வர சொல்லிருக்கேன்.. மகுருநி கேட்டுருக்கேன்.. ஓகேன்னு சொல்லிட்டான்.. அவ்வளவு ஸ்வீட்.. உனக்கும் எடுத்துட்டு வந்து தரேன்.. என எதைக் கூறினாளோ.. ஆனால் அவனை ஹீரோ என புகழ்ந்ததை தொடர்ந்து அவன் உடை நடை பாவனை.. குடும்பத்தின் மீது கொண்டுள்ள பற்று என ஒவ்வொன்றாய் அவள் கூறியதனைத்தும் ஜான்வியின் மனதிற்குள் ஒரு சாரலாய் அந்த வயதிற்கு உரிய குறுகுறுப்போடு பரவ தான் செய்தது.
திடீரென.. சடார் என உரசி நின்ற வண்டியில் ஹக் என பயந்து மிதா துள்ளி விழ.. சடுதியில் அவளை இழுத்து தன் கைக்குள் அடக்கி இருந்தாள் ஜான்வி.
பார்வை தீயாய் மாறி எதிரில் நின்ற ஹெல்மேட் காரனை முறைத்து தள்ளியது.. ஏய்ய்ய்.. அறிவில்ல.. சின்ன தெருல இப்படி வண்டி ஓட்டுற.. என கத்திய கணம் அவன் தலையில் மாட்டி இருந்த ஹெல்மெட்டை கழட்டினான் அவன்.. அண்ணா.. மிதாவின் விழிகளும் இதழ்களும் ஒன்றாய் மலர்ந்தன.
பாப்பூ.. என்றான் அவனும்.. தோழியை விட்டு அண்ணனை வெகு நாளைக்கு பின் காணும் ஆவலில் கட்டி கொண்டாள் தங்கை அவள்.
அப்படியானால் இவன் இவள் அண்ணனா.. இவ்வளவு நேரம் இவள் பாடிய புராணத்தின் ஹீரோ.. ஜான்வியின் கண்கள் தங்கையை தழுவி நின்றவனை தழுவியது.
அளவான நீண்ட முகம்.. இடுங்கிய கண்கள்.. முகத்தை போன்றே நீண்ட மூக்கு.. மிதாவை போல் அளவான உதடு..காற்றுக்கு ஏற்ப தாளம் போடும் சிகை.. வந்ததும் தங்கையை காணும் ஆவலில் அப்படியே வந்திருப்பான் போலும்..
குளிருக்கு இதமான மாறாய் வெயிலில் தகிக்க செய்யும் கனமான மஞ்சள் ஊதா நிற டீ சர்ட்.. அதற்கு சக பொருத்தமாய் கிரே நிற ஜீன்ஸ் பேண்டில் கூட மிதா சொன்னது போல் பாலிஷ்ஷாக தான் இருக்கிறான்.. ஏனோ பிடித்த ஹீரோவை பார்ப்பது போல் புரதோற்றத்தை மெச்சி மாறியது அவள் பார்வை.
எப்படி டா இருக்க.. என்ன இளைச்சு போய்ட்ட.. சரியா சாப்பிடுறதில்லயா.. கேட்டான் தங்கை முடியை நீவிய படி.
அதெல்லாம் நா நல்லா தான் இருக்கேன்.. நீ தான் குண்டாகிட்ட.. அதான் நா அப்படி தெரியுறேன் போல.. என கூறிய தங்கையின் கேலியில் அடிங்க.. என வந்தான் அவன்.
அஹ்ஹ்.. அவன் அடியில் விலகியவள் அப்போது தான் ஜான்வியை கண்டு அண்ணனிடம் நிமிர்ந்தாள்.
அண்ணா.. இவ உனக்கு தெரியாதுல.. என் ஃப்ரெண்ட்.. ஜான்வி.. என அறிமுகப்படுத்தி வைக்க அதுவரை தங்கையின் மீது அன்போடு பதிந்திருந்த அவன் விழிகள் தீர்க்கமாய் மாறி எதிரில் இருந்தவள் மீது படிந்தது..
தெரியும்.. என்றான் ஒற்றை வார்த்தையில்..
அந்த ஒரே வார்த்தையில் உள்ளுக்குள் சிறு சிலிர்ப்பு.. ஜாலம்.. ஒருவேளை மிதா கொடுத்த.. ஓவர் பில்டப்பில் வந்திருக்கலாம்.
அப்படியானால் தன்னை பற்றி அவனுக்கு முன்பாகவே தெரியுமா? எப்படி தெரியும்.. அறிந்து கொள்ள சிறு துடிப்பு அவளிடம்.. ஏதோ பெரிய ஹீரோவிற்கு ஹாய் சொல்ல வரும் நேரம் ஓ நீயா.. எனம் மற்றவர்கள் முன்னிலையில் உரிமையோடு கேட்டு தன்னை ஒய்யாரத்தில் எடுத்து அமர வைப்பது போல் எண்ணம்.. உள்ளுக்குள் குளிர்ந்தாள்..
எப்படி தெரியும்.. தோழியின் மைண்ட் வாய்ஸை தனதாய் பிடித்து மிதா கேட்க.. அதான் உன்ன உரசற மாதிரி வந்ததுக்கே அறிவில்லன்னு கத்துனாங்களே.. என்றான் சட்டென இதழ்களில் புன்சிரிப்பு தவழ.
ஒஹ்ஹ்.. மிதா கூற.. இவளுக்கும் அவன் பதிலில் சப் என்றுதான் ஆகிப் போனது..
ஆனால் அவன் இதழ்களில் மலராய் மலர்ந்திருக்கும் சிரிப்பு.. அஹ்ஹ்.. அந்த இறுகிய உதட்டின் சிரிப்பில் தடுமாறி தான் போனாள் ஜான்வி.. கண்களை எடுக்க முடியவில்லை.
அதிலும் தங்கையிடம் பாசமாய் அவன் கண்கள் பணிந்ததும் தன் பக்கம் திரும்பும் போது தீர்க்கமாய் மாறியதும் என அவன் ஒவ்வொரு அசைவுகளையும் அவளையும் அறியாமல் கனகச்சிதமாய் படம் எடுத்துக் கொண்டது அவள் மனது. அதிலும் கடைசியாய் வெண்ணிற பற்கள் காட்டி சிரிக்கும் இந்த சிரிப்பு அவளை வாரி சுருட்ட காத்திருக்கும் ஆழமாய்.. அவன் தாய் ஒரு ரகம் என்றால் தந்தை வேலை வேலை என ஓடுபவர். மிதா கூறிய போது கூட இவனும் அப்படி தான் இருப்பான் போலும்.. மூன்று வருடம் கழித்து வருகிறான் என்கிறாளே.. என நினைத்திருக்க.. தங்கள் பண உயரத்தை கருத்தில் கொள்ளாது அவன் புன்னகைத்த விதமே அவன் மனிதர்களை மதிப்பவன் என காட்டியது.
ஹாய் மா.. முதன் முதலாய் அவன் வாயிலிருந்து உதிரும் தனக்கான வார்த்தை.. இது வரை சலித்தவள் இப்போது சலிக்கவில்லை.
யாரென தெரியாமல் திட்டி இருக்க கூடாது என வந்து மன்னிப்பை வாயோடு வைத்து கொண்டு..
ஹாய்.. என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்..
என்ன மிது.. உன் பிரண்டா இருந்துட்டு இவ்வளவு சாப்டா பேசுறாங்களே.. நீண்ட சிரிப்போடு பெரிதாய் அவன் குறைபட்டுக் கொள்ள.. அண்ணனின் கேள்வியில் போண்ணா.. முறைத்தாள் மிதா.. மாறாய் இவளோ சின்னதாய் நாணி தான் போனாள்.
சரி வா வண்டில ஏறு.. உன்ன கூட்டிட்டு போக தான் வந்தேன்.. என்றான்.. விழித்தனர் தோழியர் இருவரும்.
நான் வந்துட்டா அப்புறம் ஜானு எப்படி தனியா போவா.. இல்ல நான் ஜானு கூடவே வரேன்..நீ முன்னாடி போ.. என மறுத்தவளை கண்டு சட்டென அவன் கண்கள் சுருங்க.. ச்சே.. இட்ஸ் ஓகே டி.. நீ போ.. ஒருநாள் தானே.. நானே போய்க்குவேன்.. என்றவளை முறைத்தாள் மிதா.. எப்படி தனியா போவ.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. அண்ணா நீ போ.. நா அவ கூட வரேன் என்ற தங்கையை பைக் மீதாய் சாய்ந்து தாடை தேய்த்த படி.. அதான் இது பெரிய பைக்காச்சே.. உன் பிரண்ட்க்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்லனா நம்ம மூணு பேரும் சேர்ந்தே போகலாம்.. என அவன் கூற.. இந்த டீல் மிதாவுக்கு வெகுவாகவே பிடித்து போனது.
தாய்க்கு இதெல்லாம் பிடிக்காது.. என மறுத்தவளையும் அதட்டி மிரட்டி தன் பின்னால் அமர்த்தி முன்னால் அமர்ந்திருந்தவனை வண்டியை கிளப்ப சொல்லி இருந்தாள்.
அவனுடைனான முதல் பயணம்.. இன்றும் மனதில் நீக்க மற..
நா ஆர்யன்.. என்ன குள்ள.. எனக்கு மட்டும் தான் உன் பிரண்ட்ட இன்ட்ரோ குடுப்பியா.. உன் பிரண்ட்க்கு குடுக்க மாட்டியா.. பாரு எப்படி முழிச்சுட்டு வர்றாங்கன்னு.. என அவள் நலனை மட்டுமே கருத்தில் கொண்ட பே முன் மிரரை அவள் முகத்தில் பொருத்தி தங்கையிடம் கேட்க.. அவன் தன்னை குள்ள என அழைத்ததில் காதை திருகி வீட்டுக்கு வா.. உனக்கு இருக்கு.. என பல்லை கடித்தவள்.. அவளுக்கு தெரியாம என்ன.. உன்ன பத்தி எ டு செட் என் பிரண்ட்டுக்கு தெரியும்.. இப்போ பாரு.. என பெருமையாய் தோழியியம் திரும்பி .. இவன் பேரு என்ன டி.. கேட்டாள்..
ஹான்.. அவர்கள் தன்னை வைத்து விளையாடுவதில் ஜான்வி விழிக்க.. அவன் பெயர்?? அதானே என்ன.. என்பது போல் அவள் விழிப்பு..
அய்யோ.. தப்பா எதுவும் சொல்லிடாத.. என மிதா விழிக்க அவளை நிறைய படுத்த விரும்பாதவனாய்.. ஐ அம் ஆர்யன்.. என்றான் கம்பீர குரலில்.
ஆர்யன்.. இப்போது தான் அவன் பெயர் கேட்கிறாள்.. அண்ணன்.. அண்ணன்.. என உரு போட்டவள் ஒரு கணமும் அவன் பெயரை கூறி இருக்கவில்லையே..
எங்க சொல்லுங்க.. கேட்டான் குறும்பு குரலில்.. அவன் குரல் ஜாலத்தில் விழித்து சிலிர்த்தாள்.
ஆர்யன்.. அழைக்க.. அதன் பின் அவன் எதுவும் பேசவில்லை.. இரண்டு தெரு முன்னாலேயே ஜான்வி இறங்கி கொண்ட சமயம்.. தேங்க்ஸ் என்றான்.. அவள் தன்னை கடந்து சென்ற வேளையில்.. அண்ணன் போனையும் ஹெட் போனையும் வாங்கிய படி எப்போதோ பாடலில் மூழ்கி விட்டிருந்தாள் மிதா.
எதுக்கு.. அவள் புரியாமல் பார்க்க.. பேர் மட்டும் சொன்னதுக்கு.. கூறி சென்று விட்டான்.. அவள் தான் அப்படியே நின்றாள். பேர் மட்டும் என்றால்.. அண்ணன் என அழைக்காததற்கா.. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.
அதன் பின் மாலை இருவரையும் வீட்டிற்கு அழைத்து செல்வதே ஆர்யனின் வழக்கமாகி போனது.
தங்கைக்கென வந்து விடுவான்.. அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது டி.. என்பவளை ஆன்டிகிட்ட நா பேசிக்கிறேன்.. பாரு.. எக்ஸாம் நடக்குது.. வீட்டுக்கு சீக்கிரமா போகணும்.. அது தான் முக்கியம்.. ஏறு.. என விடா கண்டியாய் தன் பின்னால் ஏற்றி கொள்வாள் மிதா.. அவன் பெரிதாய் எதுவும் பேசி கொள்ள மாட்டான்.. ஏறினால் ஏறு.. என்பது போல் அமைதி தான் அவனிடம்.
ஏண்டி.. வீட்டுலயே விட்டுடுரோமே.. என இரண்டு தெரு தள்ளியே இறங்குபவளிடம் மிதா கூற அம்மா தாயே.. சும்மா இரு.. அங்க போய் இறங்குனா தேவையில்லாம ஏதாவது கேள்வி வரும்.. மத்தவங்க புறணிக்கு நம்ம ஏன் அவல் ஆவனேன்.. பேகை சரியாய் மாட்டிய படி சிறு நொடிப்போடு அவள் கூறி கொண்டிருக்கும் போதே.. ப்ச்.. விடு மிதும்மா..அவங்களுக்கு என்னவோ.. மனசுல எதுவும் எண்ணம்ம்.. இதழ் ஓரம் சிரிப்பில் கழிய.. அவன் கூறிய வார்த்தைகள் சிரிப்பு ஒலியோடு அவள் காதில் பாய்ந்து சிலிர்க்க வைத்தது.. கண்கள் நிமிர்ந்து அவனை நோக்க.. காற்றில் களைத்து விட்ட கேசத்தோடு கண்கள் சுருக்கி அவன் தன்னை பார்த்த விதம்.. நிச்சயம் தன் கனவாய் தான் இருக்க வேண்டும்.. அன்று இரவு முழுதும் தனக்கு தானே கூறி உறங்கி போனாள்.
ஆனால் அது கனவல்ல என அடுத்த நாளிலேயே நிரூபித்திருந்தான் ஆர்யன். இன்று பிராகட்டிகல் எக்ஸாம்.. காலை ஜான்விக்கு.. மதியம் மிதாவிற்கு.. அடியே.. எப்படிடி.. தனியா இருப்பேன்.. காலை ரிப்போர்ட்டை பார்த்து ஒரே தவிப்பு மிதா..
ஒருநாள் தானே.. என் செல்லம்ல பீல் பண்ணாத.. நல்லா படி.. மதியம் நேரத்துக்கு வந்துடு.. நானும் டைம்க்கு கிளம்புறேன்.. கூறி போனை அணைத்து விட்டு தாயிடம் சொல்லி கொண்டு கிளம்பினாள் ஜான்வி..
இரண்டு தெரு தள்ளி நடக்க.. சடாரென உராய்வு.. பயப்படவில்லை ஜான்வி.. மாறாய் நெஞ்சமோ அது யாரென உணர்ந்தது.. கண்கள் நிமிர்ந்து வியப்பை தத்தேடுத்தன..
போகலாமா.. கேட்டான் அவன்.. எங்க.. என்ற படி தொடர்ந்து நடந்தாள் ஜான்வி. நின்று பேசி யாரும் பார்த்து விட்டால் வம்பு என எண்ணம்.
எங்க.. ஸ்கூலுக்கு தான்.. என்றான் அவன் சர்வ சாதாரணமாய்.
அப்படியானால் என்னையே என்னை அழைக்க அவன் வந்திருக்கிறானா.. அவள் விழிகள் முட்டையாய் உருள.. பாப்பூ சொல்லல.. அவ தான் நீ தனியா போவன்னு என்ன அனுப்பி வச்சா.. கூற சட்டென முகம் மாறியது.
பரவாயில்ல நானே போய்கிறேன்.. ஏன் இந்த சிடுசிடுப்போ.. ஆனால் அவள் வழி மறைத்து வண்டியை நிறுத்தி மார்பின் குறுகாய் கரம் கட்டினான்.
ஏன் என் கூட தனியா வர விருப்பமில்லையா.. அவன் குரல் ஆழத்தில் அவள் விழிகள் சட்டென நிமிர்ந்து அவன் காந்த கண்களோடு முடிச்சிட்டன..
வா.. என்ற அவன் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் என்ன.. ஆனால் அவன் பேச்சில் ஏறினாள். அவனோடு முதல் முறையாய் தனி பயணம்..
மிதா வந்தால் அவள் தோள் பற்றி கொள்ளலாம்.. ஆனால் இப்போது.. எங்கே பிடிப்பது என தடுமாறி கொண்டிருந்த வேளையில் சட்டென போடப்பட்ட பிரேக்கில் குலுங்கி முன்னிருப்பவன் மீது விழுந்திருக்க.. கரம் தானாய் அவன் தோளை பற்றி கொண்டது.. சைடு மிரர் வழியாக ஒரு முறை பார்த்து வண்டியை கிளப்பி இருந்தான் ஆர்யன்.
தேர்வு முடிந்து விட்டிருந்தது..
இங்கு பஸ்சும் தன் பீங்.. பீங் சத்ததோடு வந்திருந்தது..
திரும்பி பார்க்க அந்த பெண்ணும் ஆணும் எங்கேவேன தெரியவில்லை.. பெருமூச்சோடு சிந்தனையை ஒதுக்கி ஏறி ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.
அதிகமாக யோசிச்சுட்டேன் போல.. ஆனா அவனை பத்தி நினைக்க கூட எனக்கு விருப்பமில்லை.. அவன் என் வாழ்வின் முடிந்த பக்கம்.. முடித்து போன பக்கம்.. என இப்போதும் அவன் நினைவில் இலகும் தனக்கு தானே கூறி இறுக்கி கொண்டவளுக்கு தெரியாது இன்றைய நாள் தனக்கு கொடுக்க போகும் அதிர்ச்சி.. அது இன்பமா.. துன்பமா.. அவள் தான் கூற வேண்டும்..
கருத்துகள்
கருத்துரையிடுக