முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 07

 பஸ்ஸில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.. மறக்க வேண்டும் என தான் எண்ணுகிறாள்..  ஆனால் மீண்டும் மீண்டும் வேண்டாத தகாத அவன் ஞாபகங்களின் வருகையை தடுக்க முடிவதில்லை..



சின்ன சின்ன விஷயங்களிலும் அவன் முகம் தென்பட்டு அவளை சிதைக்கிறது.. உண்மையா லவ் பண்ணி தொலைச்சிட்டேன் போல.. விரக்தியான கண்ணீர் உகுதல் அவளிடம்..




ச்சே.. அப்படி ஒருத்தன நினைச்சு இன்னும் வருந்திக்கிட்டு இருக்கியா எனக் கேட்ட மனசாட்சின்னு கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை..




என்னை இருந்தாலும் தன் குழந்தையின் தகப்பன் அல்லவா.. பதில் மொழி வந்தது.



ஆனா அந்த குழந்தையே அவனது இல்லைனு.. உன் கேரக்டரோட நீ சொல்றியே குழந்தை.. அதையும் கலங்க படுத்திட்டு தான் அவன் போயிருக்கான்.. என கொஞ்சமும் பாராபட்சம் பார்க்காமல் சூடான இரும்பு கம்பியை அவள் நெஞ்சில் பாய்ச்சியது மனசாட்சி..




நடக்கும் நேரம் மீண்டும் அவன் நினைவுகளின் தொல்லை.. அன்று வண்டியில் அவளை அழைத்துச் சென்றவன் முன்மிரர் வழியாய் அவளின் முகம் அவ்வப்போது கண்டபடி ஆர் யூ ஓகே.. என கேட்டான்.. 




ஓகே தான்.. என்ற படி வலியில் முகம் சுழித்த கணம் எதிர்பாராது வந்திருந்த ஸ்பீடுபிரேக்காரில் வண்டி ஏறி இறங்க அஹ்ஹ்.. அம்மா.. வெளி படையாகவே முகம் சுணுங்கியவளை கண்டு வண்டியை ஓரம் கட்டி விட்டான்.. 



தலையை மட்டும் திருப்பி அவள் முகம் பார்த்தபடி.. ஒன்னும் பிரச்சனை இல்லையே.. எனக் கேட்டவனின் பரிதவிக்கும் காந்த விழிகள் அவளை கவர்ந்தன.. தனக்காக பதறுகிறான்.. வலியையும் தாண்டி உள்ளுக்குள் மகிழ்ச்சி.



பிரச்சனை எல்லாம் இல்ல.. அவள் கூறி முடிப்பதற்குள் வயிற்றிலிருந்து கிர் கிர் என சத்தம்.. சீக்கிரமா கிளம்புதுல சாப்பிடல.. அதான் உள்ள வயிறு உருளுதுன்னு நினைக்கிறேன்.. என்றாள். 



இரவு வைக்கும் சாப்பாட்டு தான் அடுத்த நாள் காலைக்கும்.. பாக்யா காலை 4:00 மணிக்கு எல்லாம் வீட்டு வேலைக்கு கிளம்பி விடுவதால் இந்த நிலை. ஆனால் நேற்று இரவு நிறைய அவிச்சிட்டேன்.. என பக்கத்து வீட்டில் இருந்து இட்லி கொடுத்து விட்டதில் அதை வைத்து இரவு உணவை முடித்து விட்டிருந்தவர்களுக்கு இன்று காலை உணவை சமைக்க நேரமில்லை.. ஆனால் அதை எப்படி இவனிடம் கூற முடியும்.. என்னதான் அவன் மீது ரசிப்பு வர்ணனை என அனைத்தும் வைடூரியங்களாய் கொட்டிக் கிடந்த போதிலும் தன் சுயமரியாதை இழந்து தன்னிலை விளக்க தோன்றவில்லை அவளுக்கு.



ஆனால் அவள் கூறியதை கேட்டு தலை சாய்த்து ஓர பார்வையால் தன்னை துளைத்ததில்.. கண்டு கொண்டு விட்டானோ.. சிறு பதைபதைப்பு அவளிடம்.



எத்தனை மணிக்கு ஸ்கூல்ல இருக்கணும்.. கேட்டான் இறுகிய குரலில்.. திடீரென ஏன் இந்த குரலில் இவ்வளவு இறுக்கம்.. யோசித்தபடி.. எய்ட்.. எய்ட்.. டென்.. என்றாள் திக்கிய படி. 




வண்டியை கிளப்பினான். மேடு பள்ளங்களை கவனித்து மெதுவாகவே வண்டியை ஓட்டியவன் திடீரென ஒரு இடத்தில் நின்று விட.. என்னாச்சு.. புரியாமல் பார்த்தாள். வண்டிக்கு எதுவும் ஆகி இருக்குமோ.. நேரத்திற்கு சென்றாக வேண்டுமே.. என பதைபதைப்போடு நின்று கொண்டிருந்த வேளையில் இறங்கு.. என்றான் ஒற்றை சொல்லாக.




இறங்கிவிட்டாள்..  என்னாச்சு.. என புரியாமல் நின்ற வண்டியை பார்த்தபடி கேட்டவளை.. வா.. என கூறி விட்டு முன்னேறினான்.




சிறிய வீடு போன்றான அமைப்பிற்குள் அவன் நுழைய கண்டு இது என்ன.. என புரியாமல் உள்ளே வந்தவளுக்கு சாம்பாரின் மணம் நாசியை வருடி சென்றது.. ஹோட்டலா.. ஹோட்டலுக்கு என்ன கூட்டிட்டு வந்திருக்காரா.. அவள் விழிகள் விரிந்தன. சாதாரண சின்ன ஹோட்டலாக இருந்தாலும் ஹோட்டலுக்கு வருவதே இதுதான் முதல் முறை என்னும்போது அதன் அளப்பரிய மகிழ்ச்சி பெரிதாக தானே இருக்கும்.. அதிலும் தான் சாப்பிடவில்லை என கூறியதற்காக அழைத்து வந்திருக்கிறாரா? என மனசாட்சியின் தனக்கு ஏற்ற வகையான முடிவு அவளை இன்னும் மகிழ்ச்சி கொள்ள செய்தது.. அப்படித்தான் என்பதை போல்..  இடத்தைக் கூர் கண்களால் ஆர்யன் அளவிட்டபடி ஓரமாய் கிடந்த சேரில் சென்று அவன் அமர்ந்து விட.. வாசலிலேயே நின்று முட்டை வழிகளை உருட்டி கொண்டு நின்ற அவளின் பார்வையோடு தன் காந்த விழிகளை பொருத்தினான்..  வா.. என கண்களால் அழைக்க.. ஒரு வித சங்கோஜத்தோடு உள்ளே வந்தாள்.





ஒருவித அசுவையை உணர்வோடு நெளிந்து கொண்டு நிற்பவளை கண்டவன் உக்காரு என்றிட.. இப்போ எதுக்கு இங்க வந்திருக்கோம்.. எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம் ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு. என்றவளிடம் தன் கையில் கட்டி இருந்த உயர்தர வாட்ச்சை திருப்பி காட்டினான்.. மணி ஏழு அம்பதை தொட்டுக் கொண்டு இருந்தது..



இன்னும் சொளையா இருபது நிமிஷம் இருக்கு.. நேரத்துக்கு உன்னை ஸ்கூல்ல சேர்க்க வேண்டியது என் பொறுப்பு. இப்போ உட்காரு.. என எதிர் இருக்கையை காட்டியதும் மறுக்க முடியாமல் அமர்ந்தாள்.




சுட சுடவென மொறு மொறுப்பான தோசை.. தட்டு நிறைய தோசையில் உருகி வடித்த நெய் முழுவதுமாய் இருக்க.. இருந்த பசியில் அடுத்த கணம் தன் முன் வைக்க பட்டதை வேகமாய் உண்ண ஆரம்பித்து இருந்தாள்.




லொக்.. லொக்.. சட்டென தொண்டையில் ஏற்பட்ட அடைப்பில் இரும.. மெதுவா மெதுவா என கூறியவன் அவள் பக்கமாய் ஒரு கிளாஸ் தண்ணியை நகற்றி வைத்தான்.. இன்னும் முகமும் அந்த குரலும் கனிந்திருக்கவில்லை.. மடமடவென வாயில் சரித்தவள் அப்போதுதான் சற்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். உள்ளுக்குள் இன்ப சாரல் பரவிற்று.. என்னாச்சு..  தன்னிலை மறைக்க முயன்ற படி கேட்டதும் இவ்வளவு பசிய வச்சுக்கிட்டு ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டு வர்ற ல்ல.. கோபம் கடுகடுத்தது அவன் குரலில்.




அப்படியெல்லாம் இல்ல.. என்ன சந்தோஷத்தோடு கூறியவளின் மேஜையில் இருந்த கரத்தை  பற்றி தன் கைகளுக்குள் புதைத்தான்.. அவனுக்கு இந்த வகையான தொடுகை சாதாரணமானதாய் இருக்கலாம்.. ஆனால் அவளுக்கு அந்த ஒரு கணம் உலகமே சுழன்று நின்றது.. விழித்தாள்.




என்கிட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன சங்கடம்.. நேரடியாய் அவன் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் ஆயிரம் மலர்கள் பூத்தன.. இனிமேல் சொல்றேன்.. அவள் கூறியதும் தான் அவன் முகம் சற்று கனிந்தது.. 



சிரிக்கலாமே.. கேட்டாள் அவள்.



தாராளமாய் அவன் இதழ்கள் விரிந்தன.. அவன் சிரிப்பில் மகிழ்ந்து அவள் இதழ்களும் விரிந்தன..  விழிகள் நான்கும் கவ்விக் கொள்ள பள்ளிக்கு பயணம்.. 



கண்ணோடு கண்கள் இன்பமாய் நோக்கி கொண்ட போதிலும் வரம்பு மீறி நடந்து கொள்ளாதவனின் மீது நன் மதிப்பு வெள்ளமாய் பெருக்கெடுத்தது..




பரிட்சைகள் அனைத்தும் முடிந்திருந்த நிலையில் அன்று மிதாவின் பிறந்தநாள்.. எப்போதும் தோழியின் பிறந்தநாளன்று அதிகாலையிலேயே எழுந்து பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலில் அவள் பெயரில் அர்ச்சனையை முடித்து வீட்டிற்கு கொண்டு செல்வது ஜான்வியின் வழக்கம். அன்றும் காலை எழுந்து விட்டாள் தான்.. ஆனால் துள்ளல் இன்று நிறையவே அதிகமாய்.. விடுமுறை விட்ட கடந்த ஒரு மாதங்களாய் அவனை பார்க்கவில்லையே.. உள்ளுக்குள்ள அவனைப் பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு..  இன்று அங்கு சென்றால் அவரைப் பார்க்க முடியும் என உள்ளம் குத்தாட்டம் போட வேகமாய் கோயிலுக்கு சென்று அர்ச்சனையை முடித்து தோழியின் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.




எப்போது வருவாள்.. என மிதா எதிர்பார்த்த படி கண்ணாடி முன் நின்று மஸ்காரா போட்டுக் கொண்டிருக்க.. பின்னிருந்து கட்டிக் கொண்டாள் தோழியவள்.. 




ஹாப்பி பர்த்டே டி.. என்றபடி தான் கொண்டு வந்திருந்த விபூதி குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டாள்.



இன்னைக்கும் முருகர் கோயிலா..




அவரே.. அவரே.. என சிரித்த தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள் மிதா.



என்னடி அப்படி பாக்குற..




" லீவு விட்டதிலிருந்து உன்ன பாக்காம மனசு ஒரு மாதிரியா இருந்துச்சு.. தெரியுமா.. இப்போ உன்னை பார்த்ததும் தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு" என்ற தோழியை கட்டிக் கொண்டாள்.. இதுவல்லவா உண்மையான தோழமை.. தானும் இவளை பார்க்காமல் எவ்வளவு ஏங்கிப் போனோம்.. என உள்ளுக்குள் எண்ணிக்கொண்டிருக்க இவளை நினைத்தா இல்லை இவள் அண்ணனை நினைத்தா..  எனக்கேட்ட மனசாட்சியின் கேள்விக்கு வெட்கத்தோடு தலை தாழ்ந்தாள்.




அஹ்ஹா.. இங்க என்ன நடக்குது.. கேட்டபடி வந்தான் ஆரியன்.



அவன் குரல் கேட்டதும் அடி வயிற்றில் இருந்து புயல் ஒன்று சுழன்று எழுந்து அவள் கண்களை விரித்தது..




உள்ளே வந்தவன் அங்கு நின்ற ஜான்வியை பார்த்ததும் அப்படியே சிலையாகி நின்று விட்டான். அது சரி.. உன் பிரண்டு வந்துருக்காங்களா.. அதானே பார்த்தேன்.. என்றைக்கும் இல்லாம உன் ரூம்ல இருந்து இவ்வளவு கலகலப்பு சத்தம் வருதேன்னு..  அவன் சாதாரணமாய் கூறிய வார்த்தைகளும் அவள் காதுகளில் தேன் அமிர்தமாய் விழுந்தது நான்.. நான் வரும்வரை இந்த கலகலப்பு இல்லை எனக் கூற வருகிறாரா.. உள்ளுக்குள் அவள் கேள்வி.




ஃப்ரெண்ட் பர்த்டேனா தான் வீட்டு பக்கமே வருவீங்களா..  என அவன் கேட்ட கேள்வியில் அப்படியெல்லாம் இல்ல..  என புன்னகையோடு பதில் கூறினாள் ஜான்வி.. 




பேச்சு சத்தம் கேட்டு வேகமாய் உள்ளே வந்தாள் மணிமேகலை.. மகளோடு ஜான்வி இருப்பதையும் அருகில் மகன் நின்றபடி அவர்களோடு ஏதோ பேசிக் கொண்டிருப்பதையும் கண்டவரின் முகம் கடுகடுத்து போனது..




ஆர்யா.. நீ என்னப்பா பண்ற இங்க.. என கேட்டவர்.. மகளிடம் திரும்பினார்.



மிதும்மா.. அப்பா உன்னை கீழே கூப்பிட்டாரு மா.. எனக் கூற தயாராகி இருந்த உடையோடு தோழியை அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டாள் அவள்..




செல்லும் அவளை பார்வையால் தொடர்ந்தபடி ஆரியன் நின்று இருக்க இன்னுமே கடுகடுத்து போனார் மணிமேகலை.. ஆர்யா.. அவரின் ஓங்கிய குரலில் அம்மா.. திரும்பினான் அவன்.




சட்டென முகத்தை கனித்தபடி..  இந்த பொண்ணு யாருன்னா.. என ஆரம்பிக்க தெரியும் நம்ம மிது குட்டி பிரண்ட்.. ரொம்ப நல்ல பொண்ணுமா..  என அவள் யார் எனக் கூறியதோடு  கேட்காமல் பாராட்டு பத்திரம் வழங்கியவனை பல்லை கடித்துக் கொண்டு வெளியே மறைத்து பொய்யாய் சிரித்தார்..



ஐயோ ஆர்யா.. உனக்கு இன்னும் அந்த பொண்ண பத்தி சரியா தெரியலன்னு நினைக்கிறேன்.. என கூற தாயின் வார்த்தையில் புரியாமல் அவண் புருவங்கள் சுழிந்தன..




என்ன.. 




இவங்க அம்மா வீட்டு வேலை செய்றவ என முகத்தை சுருக்கி கொண்டு கூற.. சட்டென நான் அவன் புருவங்கள் முடிச்சிலிருந்து விடுபட்டன.. ஏம்மா.. அதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்.. சொல்லப்போனால் அதுவும் ஒரு வேலை தானே.. சோறு போடற தொழிலும் கடவுளும் ஒன்றுதான்.. அதுக்காக அத வச்சு நம்ம மனுஷங்கள மதிக்கக்கூடாது..  என தாய்க்கே அறிவுரை கருத்து மழை பொழிந்து அவ்விடம் விட்டு நகர்ந்தவனை பல்லை கடித்துக் கொண்டு பார்த்து நின்றாள்.




  தந்தையோடு மிதா இணைந்து கொள்ள அவள் அருகில் தோழியாய் நின்று கொண்டாள் ஜான்வி.. தங்கைக்கு உதவ என அவளின் மறுபக்கமாய் தனக்கு அருகில் வந்து நின்று சிரித்த ஆரியனை எதிர்பாராத நேரத்தில் அவள் தோளோடு தோள் உரசி நின்றதில் ஹக்.. என துள்ளி முட்டை விழிகளோடு அவனைப் பார்க்க கண்சிமிட்டி புன்னகைத்தான் அவன்.



ஹேப்பி பர்த்டே டூ யூ.. ஹாப்பி பர்த்டே டூ யூ.. என தொடர்ந்து பாடிய சுற்றத்தாரின் முன் கேக் வெட்டி தாய்க்கு தந்தைக்கு ஊட்டி விட்டாள் மிதா..




அண்ணன் பக்கமாய் திரும்பியவள் அவனுக்கு ஊட்டியதோடு அருகில் நின்று இருந்தவளுக்கும் சேர்த்து ஊட்டி விட.. அவன் பார்வை அவள் கேக்கோடு அருகில் இருந்தவளையும் சேர்த்து உள்ளே தள்ளியது.. கண்ணோடு கண் காதல்.. சிலிர்த்தாள். மகன் மீது கண்களை ஒட்ட வைத்து இருந்த மணிமேகலைக்கு தான் பற்றி கொண்டு வந்தது..



போயும் போயும் ஒன்றும் இல்லாதவள் மீது தன் மகனின் பார்வை விழுவதா.. இது நல்லதற்கல்லவே என யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே வேலைக்காரம்மாள் ஒவ்வொரு கேக் துண்டுகளை வெட்ட.. கண்டு அவரோடு கிச்சனுக்குள் நுழைந்தாள் ஜான்வி. 


பார்க்கும் நிறங்களில் எல்லாம் சட்டென மலரும் அவள் சிரிப்பும்.. மனம் கேட்காது கொட்டிய தீர்க்கும் வேதனைகளின் போது சரியாயிடும்.. விடுங்கம்மா என அறிவினை கூறும் அவள் அழகும் அந்த அம்மாளுக்கு வெகுவாக பிடித்தம்.. தொழிலை காணவென அவள் இங்கு வரும் நேரமெல்லாம் இவரிடம் ஒரு வார்த்தையாவது பேசிவிட்டு தான் செல்வாள்.



இப்போதும் இந்த கேசரியையும் எல்லாருக்கும் வச்சு கொடுத்துடுங்க அக்கா.. என தான் கொண்டு வந்திருந்த கேசரியை நீட்டியபடி ஜான்வி கூறிக் கொண்டிருக்க.. சரிடா மா.. என்ற வேலைக்கார அம்மாளுக்கு எப்போதும் அவள் மீது தனி பிரியம் தான்.  கேக்கோடு சேர்த்து வைத்து விட்டு அங்கிருந்து அகன்றார் அவர்.




வந்திருந்த ஆட்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு திக்காய் நின்றபடி பேசிக் கொண்டிருக்க.. கிச்சனுக்குள் தனித்து நின்று கொண்டிருந்த அவளின் அருகில்.. ம்ம்க்கும்.. ஒருவனின் கம்பீரக் குரல்.



திரும்பினாள்..




ஆர்யன்.. அவனை கண்டதும் விழிகள் சூரியகாந்தியாய் மலர்ந்தது.. அவனை அங்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் அடைத்துப்போன வாயை மீட்டுக்கொண்டபடி சொல்லுங்க..  ஏதாவது வேணுமா என்றவளை கைகட்டி பார்த்தான்..  என் வீட்டு கிச்சனில் ஏதாவது வேண்டுமென்றால் நான் எடுத்துக் கொள்ள மாட்டேனா..  என்பது போல் பார்வை அவனிடம்..



வெ.. ளிய போறேன்.. என அவன் பார்வையை தாள முடியாமல் வெளியே செல்ல போனவளை ஒரு நிமிஷம்.. என நிறுத்தினான்..



ஏன்..  என்ன பாக்கும்போதெல்லாம் ஓடுற.. ஒன்னும் பிரச்சனை இல்லையே என தலை தாழ்ந்து குறும்பு பார்வையோடு கேட்டவனுக்கு பதில் தெரியாதா? என்ன.. செல்ல கோபம் அவனிடம்..



அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே.. இப்போ நான் போகணும் என வெளியே ஓடிவந்தவள்.. 




திடீரென ஹேய்.. ஷிட்.. உவேக்.. என வந்திருந்த அனைவருக்கும் முகம் சுழியத்தபடி ஆளுக்கு ஒரு பக்கமாய் கத்திக்கொண்டிருக்க.. புரியாமல் நின்று விழித்தாள்.. 




இதோ அலுவலகத்திற்கும் வந்து சேர்ந்திருந்தாள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...