யோசனையில் காலையிலேயே ஸ்டிரஸ் ஆகி போன மூளையை தூசு தட்டி அந்த பெரிய காம்பவுண்டுக்குள் நுழைந்தாள் ஜான்வி.. அந்த காலத்தில் வாங்கிய இடம் போலும்.. கொள்ளு தாத்தா வாங்கிய விஸ்தாரமான இடத்தில் பரந்து விரிந்து உயர்ந்திருந்தது அந்த பெரிய ஆபிஸ்..
இங்கு எப்பாடு பட்டாவது சேர்ந்து விட வேண்டும்.. என சிலருக்கு கனவு கம்பெனியும் கூட.. சிபாரிசு என்பதை தாண்டி திறமைக்கு மட்டுமே உரிய இடம் அது.. இரண்டு தலைமுறைக்கு முன் தாத்தா ஆரம்பித்து.. இன்று நிர்வகிக்கும் பேரன் வரையிலும் கூட இதே உத்தி தான்.. அதனால் தான் இது இத்தனை புகழ் பெற்றதாய் உள்ளதோ என்னவோ... ஜான்வியின் நல்ல நேரம் பக்கத்து வீட்டு ரிபரன்ஸ் என வந்து தன் திறமையால் வேலையும் வாங்கி விட்டாள்.
இதோ இப்போது தன்னை கடந்து சென்றவளை பார்த்து சினேகமாய் புன்னகைத்த படி செக்யூரிட்டி திரும்பி விரைப்பாய் நின்று கொள்ள.. உள்ளே நுழைந்தவளின் நடை திடுமென நின்றது அங்கு நடந்து கொண்டிருந்த ஏற்பாடுகளை கண்டு..
அது ஒரு சிவில் கம்பெனி.. பெரிய பெரிய இடங்களில் இருந்தும் கட்டிடம் கட்டும் வேலைக்கான ப்ராஜெக்ட் எடுத்து திறம்பட சொன்ன நேரத்திற்குள் சொன்னபடி கட்டிக் கொடுப்பதில் பெயர் போனது.. அதை இங்கு வந்து சில நாட்களிலேயே அறிந்து கொண்டிருந்தாள் ஜான்வி.
ஆனால் இங்கு சேர்ந்து விட்டிருந்த இரண்டு வருட காலத்தில் இப்படி ஒரு பெரிய ஆடம்பரத்தை அவள் கண்டதில்லை.. எப்போதும் வேலை மட்டுமே ஒரே நோக்கமாய் கொண்டு மும்முறமாய் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கம்பெனி இன்று வழக்கத்திற்கு மாறாய் பூ அலங்காரம் என ஜொலித்துக் கொண்டிருப்பதில்.. வாசலில் நின்று கொண்டிருந்தவர்களை கடந்து தன்னிடத்திற்கு வந்தாள்.
இப்போதும் புரியாமல் விழிகளை மலங்க மலங்க விழிகளை முட்டையாய் விரித்தபடி சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தவர்களின் முன் சுடுக்கிட்டாள்..அது யாரென அறிந்து.. திவி.. என்றபடி திரும்பினாள் ஜான்வி.
திவி.. அவள் அலுவலக மேட்.. ஒரே டீம்தான்.. அதோடு ஒரே வயதும் கூட.. என்பதால் இருவருக்கும் சற்று நெருக்கம்.. திவி வாய் ஓயாமல் பேசும் வெகுளிப்பெண் வேறு.. மிதாவிற்கு அடுத்து அவளின் உயிர் தோழி.
என்னடி..அப்படி பார்த்துகிட்டு இருக்க.. அலங்காரம் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குல்ல.. என்றபடி டேபிள் மீது இருந்த அவள் ஹேண்ட்பேக்கை எடுத்து சைட் டிராக்கில் சொருகி விட்டாள். அந்தந்த பொருளை அங்காங்கு தான் வைக்க வேண்டும் என்பது அங்கு எழுதபடாத சட்டம்.
ம்ம்ம்... எல்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனா எதுக்காக இந்த ஏற்பாடு.. என புரியாமல் புருவம் சுருக்கியவளை தலையில் தட்டியவள்.. என்ன மறந்துட்டியா இன்னைக்கு நம்ம ஆபீஸ்ல புது மேனேஜர் வராரு... நேத்தே அஜய் சார் சொல்லிக்கிட்டு இருந்தாருல்ல.. என கேட்க நேற்று சூப்பர்வைசர் அஜய் தாங்கள் வீட்டிற்கு கிளம்பும் நேரம் வந்து இப்படி ஒரு செய்தியை சொல்லிவிட்டு சென்றதாய் ஞாபகம்.. பாலாடையாய் பாழடைந்த மூளையில் மின்னி சென்றது.
ஆமாமா.. சொன்னாரு.. என ஞாபகமானவள் ஆனா அதுக்கு எதுக்கு இவ்வளவு பிரம்மாண்டம்.. எதோ முதலாளியே வரப்போற மாதிரி.. என் சுற்றி பார்த்தபடி கேட்க அவசரமாய் அவள் வாயை பொத்தினாள் திவி.
ஆமா.. கத்தாத முதல்ல.. அவரும் முதலாளி மாதிரி தான்.. புரியல.. இவர் நம்ம முதலாளியோட ஃப்ரெண்டு.. இதுக்கு முன்னாடி இருந்த மேனேஜர் கிளம்பிட்டதால நம்ம பாசே அவர் பிரண்டுகிட்ட பேசி நாம கம்பெனிக்கு கூப்பிட்டு இருக்காரு.. அவர் இப்போ வேலை விஷயமா வெளிநாட்டில் இருக்கிறதால அவரால நேரா வர முடியாதாம்.. அதனால நம்ம தனிகா சார்கிட்ட அவருக்கு வரவேற்புல எந்த குறையும் இருந்திட கூடாதுன்னு ஒன்னுக்கு பத்து தடவை அடிச்சு சொன்னதா காலைல தனிகா சார் சொல்லிக்கிட்டு இருந்தாரு. என தூரமாய் நின்று மேலே தோரணம். கட்டிக் கொண்டிருந்தவரை ஒரு கண்களாலும்.. மற்றொரு கண்ணை அனைத்தும் சரியாய் இருக்கிறதா என பார்க்க வேண்டும் நின்றிருந்தவரை காட்டி கூறினாள்.
தணிகா.. தணிகாச்சலம்.. அவர் அசிஸ்டன்ட் மேனேஜர்.. குறைந்தபட்ச வயது அறுபதை தொட்டிருக்கும் என்பதன் அடையாளமாய் சிறு முதுமை தோற்றம்.. ஆனாலும் இன்னும் அயராது உழைப்பவர்.. எந்த சூழல் ஆனாலும் பொறுமையாய் விஷயத்தை கையாள்பவர்.. அதனாலேயே அவர் மீது தனி மரியாதை ஜான்விக்கு..
ஆனால் இன்று உச்சஸ்தானியல் கத்திய படி அவர் நின்ற தோரணையில்.. இந்த அப்பாவி மனுசனையே இவ்வளவு டென்ஷன் ஆகிட்டாரே இப்போ புதுசா வர போற மேனேஜர்.. பெரிதாய் அபிப்ராயம் கொள்ளாமல் எண்ணி விட்டு.. நேற்று விட்டுச் சென்றிருந்த பைலை பிரட்டிய படி திரும்பினாள்.
ஆனால் கையில் இருந்த பைலை வெடிக்கென பிடுங்கினாள் திவி.. திவி.. என்ன பண்ற எனக்கு வேலை நிறைய இருக்கு கொடு. . என்ற அவளின் பேச்சுக்குமாறாய் பைலை தனக்கு பின்னாய் மறைத்துக் கொண்டவள் இன்னைக்கு ஆன் டீயூட்டினாலும் ஆப் டூட்டி மாதிரி தான்.. பாரு யாருமே வேலை செய்யல.. என சுற்றி வேலை செய்கிறேன் சாக்கில் மொக்கை போட்டுக் கொண்டிருந்தவர்களை காட்டியவள்.. இப்ப நீ மட்டும் பொறுப்பு சிகாமணியா வேலை பார்த்தா அப்புறம் புதுசா வரப்போறவரு எங்கள என்ன நினைக்க மாட்டார்.. கேட்கவும்.. வெளியில் இருந்து கார் வரவும் சரியானது..
பேசி கொண்டிருந்தவர்கள் சட்டென அமைதியாகி விட.. ஒரு கணத்தில் கப் சிப் அங்கு.. தணிகா வேகமாய் வெளி ஓடினார்..
அவரைத் தொடர்ந்து முக்கியமான சிலரும் வெளியே செல்ல.. தன்னை வேலை செய்ய விட மாட்டேன் எனக் கூறிய தோழியை முறைத்து வெளியே செல்லப் போனவளை வெளியேவும் விடாமல் இழுத்து நிறுத்தினாள் திவி..
மேடம் எங்க போறிஙக.. கேலியாய் கேட்டதோடு.. வெளியே இம்பார்டன்ட் ஆளுங்க மட்டும் தான் இருக்கணுமாம்.. அதிகமா கூட்டம் போட வேண்டாம்.. அவர் உள்ள வர்றப்போ உங்கள அறிமுகபடுத்திக்கோங்கன்னு தணிகா சார் சொன்னாரு.. நானே வர கூடாதுன்னு சொன்னதுல வரப்போற மனுஷன் அழகா இருப்பாரா.. ஸ்மார்ட்டா இருப்பாரான்னு ஒரே யோசனைல இருக்கேன்... ஏன் ஜான்வி.. அவருக்கு எத்தனை வயசு இருக்கும்னு நினைக்கிற.. ஒரு முப்பது.. இல்லை 28.. பாப்போம்.. என கண்கள் மின்ன கேட்டவளை ஏண்டி என்பது போல் ஒரு பார்வை பார்த்து வைத்ததில் ஐய்யே.. உன்கிட்ட கேட்டேன் பாரு.. வரட்டும் நானே பார்த்துக்கிறேன்.. என கைகட்டி குதூகளித்தபடி பக்கத்தில் இருந்த தன் சிஸ்டத்தை ஆன் செய்து முன்னே அமர்ந்து கொண்டாள்.
இவ்வளவு நேரம் நின்று வீண் விதான்டவாதமாய் பேசியதென்ன.. இப்போது நல்ல பிள்ளையாய் அமர்ந்து கொள்வது என்ன.. என்னவோ செய்.. என்பது போல் அவள் மறைத்து வைத்திருந்த தன் பைலை எடுத்துக்கொண்டு தானும் தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள் ஜான்வி.
ஹேய் அந்த மேனேஜர் பயங்கர ஸ்மார்ட்டு டி.. நா இப்போ தான் எட்டி பார்த்துட்டு வந்தேன்.. ஹீரோ மாதிரி பாக்கவே கண்னுக்கு குளிர்ச்சியா இருக்கார்.. இதுக்கு முன்னாடி இருந்த கிழத்துக்கு அப்படியே ஆப்போசிட்.. என பக்கத்து யூனிட் பெண் அவள் யூனிட்டில் இருந்தவர்களிடம் பூரித்து பேசி கொண்டிருந்தது காதில் விழ.. இதெல்லாம் என்ன பேச்சு.. அவரும் வேலை பார்க்க வந்திருக்கும் ஒருவர் தானே.. இந்தளவிற்கு அலப்பறை தேவையில்லை என தோன்றியது ஜான்விக்கு.
மாறாய் கிர்.. கிர்.. பக்கத்தில் பல் கடிக்கும் சத்தம். திரும்பி பார்க்க.. திவி தான் பற்களை கடித்து கொண்டிருந்தாள்..
ஜான்வி தன்னை பார்ப்பதை கண்டு.. பாத்தியா ஜான்வி.. இன்னும் அந்த மனுஷன் உள்ள கூட வரல.. அதுக்குள்ள அவர எப்படி வர்ணிக்கிறாளுகண்ணு.. இனி இவளுக அட்டூழியம் தாங்க முடியாது.. என மீண்டும் பல்லை கடித்தாள்.
சிரிப்பு தான் வந்தது ஜானவிக்கு. அந்த பெண்கள் ஒரு ரகம் என்றால் இவள் இன்னொரு ரகம்.. மொத்தத்தில் எல்லாரும் அவனை பெரிய தேவன் போல் தான் கொண்டாடுகிறார்கள்.. ஹ்ம்ம்.. வித்தியாச மனிதர்களின் எண்ணத்தில் எதுவும் கூறாமல் திரும்பி கொண்டவளை கண்டு.. உன்கிட்ட போய் சொல்றேன் பாரு.. இவ்வளவு சொல்றேனே.. அப்படியான்னு ஒரு வார்த்தை கேக்குறியா.. உனக்கும் என் வயசு தான.. ஆனா இப்படி துறவியா இருக்கியே ஜான்வி.. பெரிதாய் குறை பட்டு கொண்டாள் திவி..அதற்கும் தன் பக்குவ புன்சிரிப்போடு எதிர் கொண்டாள் ஜான்வி.. அதில் சின்ன வலியும் ஒளிந்திருந்ததை எதிரில் இருந்தவள் அறியவில்லை.
துறவி எல்லாம் இல்லை டி.. அது ரொம்ப பெரிய வார்த்தை.. அந்த அளவுக்கு நா இன்னும் போகல.. அதோட உனக்கும் எனக்கும் ஒரே வயசு தான்னாலும் உன் உலகம் வேற.. என் உலகம் வேற... என்னுடைய முழு உலகமும் என் பொண்ணுக்கானது மட்டும் தான் திவி.. அதுல இந்த ரசனை காதல் ஆசை இதெல்லாம் அப்பாற்பட்டு போனது.. என கூறியவள் வெளியே கசகசவென தொடர்ந்த சத்தத்தில் பயங்கர வரவேற்பு போல.. எண்ணிய படி கணினியை உயிர்பித்தாள்.
வேலையை பார்க்க பைலை எடுத்த படி இன்று என்னென்ன இன்று செய்ய வேண்டும்.. என குறித்து கொண்டு.. வேலையை பார்க்க ஆரம்பிக்க.. என்ன டிசைனோ இவ.. என பார்த்த படி வழி மேல் விழி வைத்து புதிய நாயகன் வருகைக்காக திரும்பி காத்திருக்கலானாள் திவி.
திடீரென ஜான்வியின் போன் ஒலித்ததில்..பைக்குள் கிடந்த போனை எடுத்து பார்க்க.. கிருத்திகாவின் பள்ளியில் இருந்து தான் அழைப்பு வந்து கொண்டிருந்தது..
இப்போது தானே விட்டு வந்தேன்.. அதற்குள் என்ன.. என யோசித்த படி தாமதியாமல் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.. அதில் என்ன செய்தி கூறப்பட்டதோ.. முகம் வெளிறி கண்கள் இருண்டு போனது.
இப்போ.. இப்போவே வரேன்.. குரல் தழுதழுக்க கூறி.. அடித்து பிடித்து எழுந்தவள் உள்ளே நுழைந்த புது மனிதனை இடித்து தள்ளாத குறையாய் கடந்து கண்களில் நீர் வடிய வெளியே ஓடினாள்.
செல்பவளை தன் கத்தி கண்களில் கூர்மை தீட்டி பார்த்து கொண்டிருந்தான் அந்த புது மேனேஜர்.. அவன் பார்வையை கண்டு தணிகா என்ன நினைத்தாரோ..
ஏன் இந்த பொண்ணு இப்படி அழுதுட்டு ஓடுது.. என பார்த்த படி வந்திருந்த புதியவனிடம்..
சார்.. சாரி சார்.. என்ன அவசரமோ.. இப்படி ஓடுது அந்த பொண்ணு.. பாவம்.. நல்லா வேல பாக்க கூடியவ.. நல்லா பழக கூடியவ தான்.. ஆனா இப்போ என்னாச்சோ தெரியல.. என ஜான்விக்கு அவர் பரிந்து கொண்டிருந்த வேளையிலேயே.. லிசன் மிஸ்டர் தணிகாச்சலம்.. ஓங்கிய குரலில் அழைத்திருந்தான் அவன்.. குரலில் இருந்த இறுக்கம் தான் அவன் உண்மை தன்மை என தோன்றியது அவருக்கு.
அவன் குரலில் சட்டென அமைதி கொண்டு அனைவரும் எழுந்து நின்று விட.. அனைவர் கண்களிலும் ஒரு வித பயம் வழிவதை காண முடிந்தது.. அதோடு சிறு மையல் பார்வையும் துளியாய்..
அண்ட் யூ ஆல்.. என அனைவரையும் ஒரு முறை பார்த்தவன் பார்வையில்.. ஒட்டி கொண்டிருந்த சிறு ரசனையும் சென்று பயம் கொண்டது சற்று நேரத்திற்கு முன் அவனை பெருமை பீத்திய அதே கண்களில்.
ஒரு விஷயம் சொல்றேன்.. எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க.. இது என் நண்பன் கம்பெனி.. அண்ட் இப்போ இதுக்கு நா தான் இன்ச்சார்ஜ்.. சோ இனி இங்க நடக்கிற எல்லா வேளையும் எனக்கு கீழ தான் இருக்கும்.. சொன்னா சொன்ன நேரத்திக்கு எனக்கு வேல முடிக்கிற ஆளுங்க தான் எனக்கு.. இந்த கம்பெனிக்கு தேவ.. உங்க பிரியபட்ட நேரத்துக்கு வர்றதுக்கும் போறதுக்கும் இது ஒன்னும் சத்திரம் இல்லை காட் இட்.. எந்த அவசர வேலையானாலும் இனி என் பெர்மிஸ்ஸின் இல்லாம ஒரு குண்டுசி கூட நேரங்கெட்ட நேரத்துக்கு வெளிய போக முடியாது..இது போல.. என வெளி சென்றவளை சுட்டி காட்டியவன்.. ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டவாறு.. எல்லாருக்கும் புரிஞ்சுருக்கும்னு நெனைக்கிறேன்.. இனி கம்மிங் டேஸ்ல டார்கெட் கூடும்.. அச்சீவ்மென்ட் வரணும்.. அதுக்கு நம்ம நல்லா ஒர்க் பண்ணனும்.. நீங்க நா வேற இல்லை.. நா எனக்கும் சேர்த்து தான் சொல்றேன்.. எல்லாரும் ஒண்ணா வேல பாப்போம்.. கம்பெனி முன்னேற்றத்துக்கு ஆதாயமா இருப்போம்.. அதோட தேவையில்லாம தான் எந்த பேச்சு வார்த்தையும் வேண்டாம்னு சொன்னேன்.. ஆனா அதுக்காக நம்ம வழக்கமான கம்யூனிக்கேஷன விட்டுட கூடாது.. உங்களுக்கு என்ன ஹெல்ப் எப்போ வேணும்னாலும் நா உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பேன்.. இந்த கம்பெனி சப்போர்ட்டா இருக்கும்... என ஆரம்பம் அமர்க்களமாய் அட்டகாசமாய் அனைவரையும் பயமுறுத்தி கடைசியில் நாய்குட்டிக்கு தடவி கொடுப்பது போல் பேச்சை முடித்திருந்ததில்.. விட்டு போன பட்டாம்பூச்சிகள் மீண்டும் கண்களில் பறக்க.. வேகமாய் கை தட்டினர் அவன் பேச்சை கேட்டு.
தேங்க்ஸ்.. அழுத்த மொழியாய் கூறி தன் வேக நடையோடு அவன் உள்ளே சென்றவனை சார் ஒரு நிமிஷம்.. நிறுத்தி இருந்தாள் அந்த பெண்..
எஸ்.. என திரும்பியவனிடம்.. சார்.. உங்க பேரு.. என இழுத்த படி கேட்க..
நிமிர்ந்து காந்த கண்களால் அளவிட்டவன்.. ஆர்யன்.. ஆர்யன் சித்ரதன்.. கூறி உள்ளே சென்று விட்டான்..
ஆர்யன்.. சித்ரதன்.. கண்களை மூடி கொண்டு ஒருவள் லயிக்க.. ஹப்பா.. வந்ததுமே என்ன பட்டாசு.. இன்னொருவள் காதை குடைந்தாள்..
ஆனா அவர் ஒன்னும் தப்பா சொல்லலையே.. சரியா தான் பேசி இருக்காரு..இந்த பொன்னும் இப்படி சொல்லாம கொள்ளாம ஓடி போயிருக்க கூடாது.. அத தான் சொல்லிருக்காரு என் ஹீரோ.. கைகளை காற்றில் நீட்டி அவன் சென்ற வழிக்கு முத்தமிட்டாள் அந்த பெண்..
அனைவரும் தங்கள் இடத்தில் அமர்ந்து கொள்ள.. அவனோடு பின்னேயே வந்திருந்த தணிகா.. இது தான் சார் உங்க கேபின்.. என அவன் இடத்தை காட்டியதோடு..சில டீடெயில்ஸ்களை கூறி வெளி செல்ல போக.. ஒரு நிமிஷம்.. அவரை நிறுத்தினான் அவன்..
இப்போ போனாங்களே.. அந்த பொண்ணு.. என அவன் ஆரம்பிக்க.. மீண்டும் அவளை பற்றி ஆரம்பித்து திட்ட போகிறானா.. என ஒரு வித பயத்தோடு பார்த்தவரிடம்.. அவ.. அவங்க பேரு என்ன.. இவ்வளவு நேரம் சரமாரியாக வந்து விழுந்த வார்த்தைகள் கொஞ்சமே கொஞ்சம் தடுமாறின.
ஒஹ்ஹஹ்.. இதை தான் கேக்க வந்தாரா.. என்பது போல் முகம் மலர்ந்தவர்.. ஜான்வி சார்.. ரொம்ப நல்ல பொண்ணு.. என்றார் கூடவே சேர்த்து.. கேட்டவனின் கண்கள் எதையோ எண்ணி நிலைக்க.. உதடுகளோ ஏளனமாய் வளைந்தன.
இவ்வளவு சப்போர்ட் பன்றிங்களே மிஸ்டர் தணிகா.. உங்களுக்கு எதுவும் அந்த பொண்ணு தெரிஞ்சவளா.. என கேட்க.. தெரிஞ்ச பொண்ணு இல்லை சார்.. ஆனா பாத்தத வச்சு சொன்னேன்.. என கூறினார் அவர்.
தன்னிடத்திலிருந்து எழுந்தவன் டேபிளை சுற்றி அவர் அருகில் வந்து நின்றான்.. கைகள் இரண்டும் பேண்ட் பாக்கேட்டுக்குள் விட்டு அவர் முகத்தையே குறுகுறுவென பார்த்தவன்.. பாத்ததும் எல்லாத்தையும் நம்பிடாதீங்க தணிகா.. வெள்ளையா இருந்தா பாலா தான் இருக்கணும்னு அவசியம் இல்லை.. என ஏளனமாய் கூறிய வார்த்தைகள் அவருக்கு புரியவில்லை.
என்ன சார்.. என்றவரிடம்.. ஒண்ணுமில்ல நீங்க போகலாம்.. என கூறி எதையோ மறைக்க நெற்றியை தேய்த்தான்..
திடீரென அழைத்து அவன் கருத்தூசி போட்டதும் அவனே செல்ல கூறியதையும் கேட்டு.. இவர் ஸ்ட்ரிக்ட்டா.. இல்லை லோயலா யோசித்த படி கதவை திறந்தவர் வாசலிலேயே நின்ற படி திரும்பி அவனை பார்த்தார்..
ஏதோ யோசனையோடு எதிர் ஜன்னலை வெறித்து கொண்டிருந்தான் அவன்.
சார்.. என அவர் அழைக்க யோசனை களைந்து திரும்பியவனிடம்.. அந்த பொண்ணு வந்ததும் உங்கள வந்து பாக்க சொல்லவா சார்.. எங்கே அவளிடம் நேரடியாய் பேசினால் அவள் நிலையை விளக்க அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.. எடுத்த எடுப்பிலேயே கோணல் ஆகாமல் தடுக்கலாம்.. என பெரியவர் கேட்டு விட்டிருக்க..
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... என்றிருந்தான் அவசரமாய்..
அதன் பின் வேறென்ன செய்ய முடியும்.. கடவுளே தேவையில்லாம அந்த புள்ளைய இவர்கிட்ட கோர்த்து விட்டு வேடிக்க பாக்காத.. பாவம் அந்த புள்ள.. என்ன அவசரமோ.. அப்படி போய்டுச்சு.. ஆனா வந்ததும் இனி இப்படி செய்யாதன்னு கண்டிக்கணும்.. என எண்ணிய படி அவர் வெளி சென்று விட.. அவளை எப்போவும் என்கிட்ட விடாம இருக்கிறதே நீங்க எனக்கு பண்ற பெரிய உதவி தான்.. என்றவனின் வெறுப்பு கண்களில் நிறம் கூடியது.
கருத்துகள்
கருத்துரையிடுக