முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 09

 அடித்து பிடித்து இருந்த டிராபிக் ஜாமை கடந்து ஒரு வழியாய் அரை மணி நேரத்திற்கு பின் கிரஷுக்குள் நுழைந்தாள் ஜான்வி.. அப்போது போன் காலில் வந்த செய்தி காதில் விழுந்ததும் போட ஆரம்பித்த நடை இப்போதுதான் இங்கு வந்து நிற்கிறது..



பதட்டத்தோடு உள்ளே நுழைந்தவளின் பார்வை அந்த காலியாய் கிடந்த வெற்று கிரவுண்டில் சுற்றி கடைசியாய் தன் மகள் படிக்கும் வகுப்பில் பட்டதும்.. கால்கள் தன்னிச்சையாய் அங்கு நோக்கி ஓடின.



டீச்சர்.. டீச்சர்.. அழைத்தபடி உள் நுழைந்தவளை லொக்.. லொக்.. என இருமிய படி இருந்த கிருத்திகா நிமிர்ந்து பார்த்து அம்மா.. எனப் பெற்றவளிடம் தாவினாள்.



பாப்பா.. பாய்ந்து வந்த குழந்தையை இரு கைகளாலும் கட்டி அணைத்து முகம் முழுக்க முத்தம் கொடுத்து தன் நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டாள்..



என்னாச்சு டீச்சர்.. எப்படி திடீர்னு இவ்வளவு இருமல்.. காலையில விடும்போது நல்லா தானே இருந்தா.. என இன்னும் விடாத அழுகையும் பதட்டமும் பொங்கிக் கொண்டு கேட்க.. முதல்ல கொஞ்சம் தண்ணீர் குடிங்க.. என வாட்டர் பாட்டிலை திறந்து நீட்டினாள் ஆசிரியை.



அவசரத்திற்கு ஆட்டோவும் கிடைக்காமல் ஓடி வந்திருந்த நிலையில் நீர்த்தாகம் தொண்டையை அடைக்க.. முதல் வேளையாய் பாட்டிலை வாயில் சரித்தாள்.



ம்ம்.. இப்போ சொல்லுங்க என்னாச்சி.. என்றவளின் கரம் நொடிக்கு நொடி குழந்தையின் பிடரியை தன்னோடு இறுக்கி அவள் பயத்தை சல்லடை போட்டு காட்டியது. 




ரிலாக்ஸ்.. அவளுக்கு பரவாயில்லை தான்.. விளையாட்டுன்னு அவ பிரென்ட் கூட போட்டி வச்சுக்கிட்டு குடுத்த கொழுக்கட்டைய வேகமா முழுங்கி இருப்பா போல.. அடைச்சுருக்கு.. அதான் ஒரே இருமல்.. இப்போதான் முதுகு தட்டி எடுத்து விட்டோம்.. என கூறினாள் ஆசிரியை.. தலையில் கை வைத்து அமர தான் தோன்றியது அவளுக்கு. இந்த விஷயம் மட்டும் அசோக்கிற்கு தெரிந்தால்.. நீ வேலைக்கே போக வேண்டாம்.. முதல்ல பாப்பாவ பாரு.. என் உயிர் இருக்குற வர உங்கள நா பாத்துப்பேன்.. கூறுவான் தவிப்பாய்..




ஆனால் இங்கு கிரஸ்சிலேயே குழந்தைக்கு ஸ்நாக்ஸ் தருவது வழக்கம்தான்.. இது வரை இப்படி நடந்ததாய் ஞாபகமில்லை. ஆனால் இன்று ஏன்.. அதிலும் போட்டியாமே.. மகள் வளர வளர அவள் சேட்டையும் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவு தான் இது.. தேவையில்லாமல் இந்த விஷயத்தை அவனிடம் கூறி  அவனையும் பதற வைக்க விருப்பமில்லை..




மேலே படர்ந்த படி..  தாயின் முதுகு பின்னால் இருந்த தோழியிடம் கண்காட்டி சைகை செய்து கொண்டிருந்தவளை பிரித்து நிறுத்தி முறைத்தாள் ஜான்வி.. செய்த தவறு புரிந்து விட்டது போலும் அந்த குட்டிக்கு.



சாரிம்மா.. பவ்வியமாய் இருக்கைகளையும் கோர்த்தபடி அப்பாவியை முகத்தை வைத்து கூறிய பின்னும் கோபம் நிலைக்குமா? என்ன..



சாரி எல்லாம் வேண்டாம்.. இந்த விஷயம் மட்டும் உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன சொல்ல மாட்டார்.. அவள் கேட்க..



" வேற என்ன நீ வேலைக்கு போக வேண்டாம்னு தான்.. " அவசரமாய் தன் மழலை குரலில் கூறி தாயின் முறைப்பில் மீண்டும் அமைதியாகி கொண்டாள். அவளுக்கு கூட அசோக்கை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது.. 




''இந்த துடுக்கு தனம் தான் உங்க குழந்தைக்கிட்ட..  பாருங்க.."  என புகார் வாசித்த ஆசிரிய பெண்ணிடம் இனி.. ஸ்னாக்ஸ் எது கொடுத்தாலும் குறைவாய் கொடுக்க கூறி விட்டு.. குழந்தையிடமும் மெதுவாய் தான் சாப்பிட வேண்டும் என அறிவுரை மழை பொழிந்து விட்டு எழுந்தாள். இதனால் அங்கு அறிகுறையாய் வேலையை விட்டு வந்தாயிற்று வேறு. 



அம்மா.. வேலைக்கு போயிட்டு சாயங்காலம் வந்து கவனிச்சிக்கிறேன்..  என முறைப்போடு கூறிய தாயை கண் சிமிட்டி வழி அனுப்பி வைத்தாள் மகள்..





"ஏங்க.. நான்தான் சாயங்காலம் வந்தாலே போதும்னு சொன்னேனே.. நீங்கதான் அதுக்குள்ள போன கட் பண்ணிட்டீங்க.. திரும்ப போன் பண்ணாலும் ரீச் ஆகல.. " எனக் கூறிய ஆசிரியரிடம்.. "இருக்கட்டும்.. டீச்சர்.. அவளை ஒரு கண்ணு வச்சு கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க.. " என அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என அறிந்தாலும் தன் மன ஆறுதலுக்காக கூறிவிட்டு வெளிவந்தாள்.




பத்து மணிக்கே உச்சி வேளையாய் எண்ணி கொளுத்திக் கொண்டு இருந்த கதிரவன் இப்போது தான் கண்களில் பட.. வியர்த்திருந்த நெற்றியை புறங்கையால் ஒற்றிய படி..  பஸ் ஸ்டாப்பிற்கு நடந்தவள் வந்திருந்த பஸ்ஸில் ஏறி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்.




அப்ப்பா.. கொஞ்ச நேரத்துல உடம்பே நடுங்கிடுச்சு.. ஆனாலும் இந்த பொண்ணுக்கு விளையாட்டு அதிகமாகுது வர வர.. என மகளின் சேட்டைகளை எண்ணி சோர்வோடு தன்னிடத்தில் அமர்ந்தவளை.. ஜான்வி.. அழைத்தாள் திவி.



ஹான்.. திவி.. என திரும்பினாள் ஜான்வி.. எப்போதும் இல்லாத அதிசயமாய் சிஸ்டமில் இருந்து பார்வையை அகற்றாமல் அமர்ந்து இருந்தாள் திவி. 



"என்னடி அப்படி பண்ணிட்ட.. ஏன் திடீர்னு அவ்வளவு வேகமாக ஓடின.. இந்த புது மேனேஜர் நீ போனதை பாத்துட்டு உன்னால எல்லாரையும் பயங்கரமா திட்டிட்டு போயிருக்காரு.. என நொடியும் தன்சிஸ்டத்திலிருந்து கண்களை அகற்றாமல் அதே பொசிஷனில் கூறிக் கொண்டிருக்க ஜான்வியின் விழிகள் விரிந்தன.



திட்டுனாரா.. என்ன திட்டுனாரு.. நெஞ்சு கூடு ஒரு கணம் ஏறி இறங்கியது.. 




அவள் இங்கு சேர்ந்த இத்தனை நாட்களில் ஒரு நாளும் யாரிடமும் எந்த தவறான பெயரும் எடுத்ததில்லை.. எவ்வளவு விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் தன் வேலையை முடிக்க முடியுமோ அவ்வளவு சாமர்த்தியத்தை கையாண்டு சேர்ந்திருந்த இந்த சில காலங்களிலேயே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள்.. கடமைக்கு என்ன செய்வதற்கும் பிடித்து செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா.. 




சார்.. நாளைக்கு காலைல வந்து செய்யட்டுமா என்ன சரியாய் தங்கள் நேரம் முடிந்ததும் எழுந்து செல்லும் பெண்களுக்கு மத்தியில்.. இவ்வளவுதான் சார் முடிச்சுட்டு போயிடுறேன் என பிடிவாதமாய் அமர்ந்து முடிந்த அளவு விரைவாக வேலையை முடித்து செல்லும் பெண்ணிற்கு அந்த ஆபிசில் நன்றாகவே நல்ல பெயர் தான்.. தேவையில்லாமல் அடுத்தவர்கள் வம்புக்கு செல்லவும் மாட்டாள்.. அவர்கள் வாய்க்கு அவலாகவும் மாட்டாள்.. 




தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவளை சில பொறாமை பேர்வழிகள் தொடக்கத்தில் சுரண்டி பார்த்தாலும் அவளின் அமைதியான நடவடிக்கையில் அதன் பின் அந்த மாதிரியான தொல்லைகள் வெகுவாகவே குறைந்து போயிருந்தன.





ஜான்விக்கும் இருக்கும் மண்டை வலியில் இல்லாத பிரச்சனையை இழுத்து தலையில் போட்டுக் கொள்ள விருப்பமில்லை.. அதனாலேயே இந்த அமைதி போர்க்கொடி.



ஆனால் இப்போது தோழி கூறிய செய்தியில்.. அவள் நெஞ்சுக்குள் சிறு அதிர்வு.



இப்போது தானே வந்தார் அந்த மனிதர்.. அதற்குள் இப்படி ஒரு பெயரா.. ஒரு வேளை தான் செய்யும் வேலையை பார்த்தால் நிச்சயம் அவர் மனம் மாறக்கூடும்.. சொல்லப்போனால் தன்னை திட்டிய வாயாலேயே புகழவும் கூடும்.. ஆனால் முன்பின் தெரியாத மனிதன் ஒருவனுக்குள் தன்னை பற்றிய தவறான அபிப்ராயம் இருப்பதை விரும்பவில்லை அவள்.



என்ன சொன்னாரு.. நேரடியாய் கேட்டாள்.



வேற என்ன.. இனி யாரும் இப்படி கண்ட நேரத்துக்கு பொறுப்பில்லாம போக கூடாது.. எவ்வளவு அவசரம்னாலும் என்கிட்ட சைன் வாங்கிட்டு தான் போகணும்.. அப்புறம் நம்ம கம்பெனி முன்னேற்றம்.. நம்ம முன்னேற்றம்.. இப்படி பிளா.. பிளான்னு.. ஆனா சும்மா சொல்ல கூடாது மனுஷன் பயங்கரமா பேசிட்டு தான் போனாரு.. என திவி கண்கள் கூறி கொண்டிருக்க.. பொறுப்பில்லாம.. என்ற வார்த்தையிலேயே தேங்கி விட்டது அவள் மனம்.



பொறுப்பில்லாமலாமே.. அப்படி என்ன நான் பொறுப்பில்லாமல் போயிட்டேன்.. ஏதோ அவசர சூழ்நிலை.. உடனே கிளம்பி போக வேண்டியதாகிடுச்சு.. சொல்லிட்டு தான் போயிருக்கணும் ஒத்துக்குறேன்.. ஆனா அந்த டைம்ல பாப்பாவுக்கு ஒன்னுன்னதும் மைண்ட்வேலை செய்யல.. அதுக்குன்னு இப்படி பேசுவாரா.. வேலைய முடிச்சுட்டு போய்  நா பேசிக்கிறேன்.. எனது தனக்குத்தானே கூறியபடி வேலையில் தீவிரத்தை காட்டினாள்.



அடுத்த 2 மணி நேரத்தில் கையில் இருந்த பைலுக்கான டிசைனை கனக்கச்சிதமாய் முடித்திருந்தாள். இந்த வேலையை பொறுத்தவரை எப்போதும் அவளுக்கு திருப்தி கிடைப்பது வரை விடுவதில்லை.. உயிருக்குயிராய் யாரை காதலித்தாரோ அவன் கூறினான் என அவனுக்கு இணையாய் காதலித்து படித்த படிப்பாயிற்றே.. 



அவன் இல்லை என்றால் என்ன.. அவன் கைகாட்டிய வழியில் படித்திருந்த இந்த படிப்பு தான் தனக்கு என்றும் துணை என ஒரு நாள் கூட விடாமல் மந்திரமாய் எண்ணி கொண்ட காலங்கள் அதிகம்..




அதிலும் இப்போது அது ஒரு மருத்துவமனைக்கான கட்டமைப்பு.. வெளியில் காற்றோட்டமான கார்டனிலிருந்து வரவேற்பறை.. பேஷன்ட் அறை.. ஐசியூ.. என அனைத்து முக்கியமான இடங்களுக்கும் இடத்தை ஒதுக்கி வரைபடத்தில் காட்டி இருந்தாள்.





இப்போது இதை பிரிண்ட் எடுத்து மேனேஜரிடம் சைன் வாங்க வேண்டும்.. இப்போது புதிதாய் வந்திருந்த மனிதனிடம் இதைக் காட்டி விட்டு அப்படியே தான் அப்போது வெளியே சென்றதற்கான காரணத்தையும் கூறி நீங்கள் சொன்னதைப் போல் பொறுப்பானவள் இல்லை நான் என தனது இந்த வேலையின் ஊடாய் காட்டி விட எண்ணம்.. பெருமூச்சோடு கையில் பிரிண்ட் பேப்பராய் பதித்து கொண்டவள்.. எடுத்து கொண்டு அவன் அறை கதவை தட்டினாள்.




கமின்.. உள்ளிருந்து அவனின் உரக்க குரல்.



ஜிவ்வென ஒரு சாரல் உச்சந்தலையில் இருந்து பாதம் வரை.. என்னாச்சு.. என புரியாமல் தன்னை தானே குனிந்து ஒரு முறை பார்த்து கொண்டவள்.. அறை கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.. 




தன் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி முதுகு திரும்பி அவன் அமர்ந்திருந்த விதத்தில்.. வணக்கம் சார்.. என் பேரு ஜான்வி.. இத நம்ம புதுசா கட்டப்போற ஹாஸ்பிடல் நீங்க பாத்து ஓகே சொல்லிட்டீங்கன்னா பர்தரா ப்ரோசீட் பண்ணிடலாம்.. சார்.. என அவள் கூற கைகளை மட்டும் பின்னே நீட்டினான் அவன்.  தான் கொண்டு வந்து இருந்த கத்தை பேப்பரை அவன் கைகளில் வைத்தாள்..




முன்னே வாங்கி அவன் திருப்பி பார்த்தது பின்னிருந்தவளால் அறிய முடிந்தது.. முகத்தை காட்டினால் தான் என்னவாம்.. பெரிய இடம் தான் போல.. அதான் இப்படி மனுஷங்கள மதிக்க தெரியாம நடந்துகிறாரு.. ஆனா இதுக்கு முன்னாடி இந்த இடத்துல இருந்த மேனேஜரும் கூட பெரிய இடம் தான்.. ஆனா அவரு இப்படி இல்லையே.. என அவளையும் மீறி எழுந்த அபிப்பிராயத்தோடு நிற்க.. சொல்ல வந்தது சொல்லிடு ஜான்வி.. என பிராண்டியது உள் மனம்..




அதுதான் சரி..  என ஆழ்ந்த பெருமூச்சு இழுத்து விட்டுக் கொண்டவளோ.. அதோட சார்..  நீங்க வந்தப்போ வெளிய போனது நான்தான்.. அது எதுக்கு போனேனா.. என்ன திக்கி தயங்கியபடி பூமியில் பார்வை துளைத்து தன்னிலையை எடுத்துக் கூற ஆரம்பிக்க.. இது ஆபிஸ்..  ஸ்கூல் கிடையாது.. சும்மா சும்மா எல்லாத்துக்கும் ரீசன் சொல்லிக்கிட்டு இருக்க.. என்றவனின் பழக்கப்பட்ட குரலிலும் அடாவடித்தனமான பேச்சிலும் சட்டென நிமிர்ந்தாள்.




அவன்.. அவன் தான்.. அவனே தான்.. 



இது உங்க குழந்தைதான் என்ன நம்புங்க.. என அவள் கண்ணீரோடு கரைய.. ஏய்ய்ய்.. கைகளை ஓங்கிக் கொண்டு அறைய பாய்ந்து.. அவள் தலை சாய்த்த பயந்த பாவணையை கண்டு கைகளை உதறி ச்சி.. கடைசில உன் உண்மை முகத்தை காட்டிட்டேல்ல.. இததான் என் அம்மா அன்னைக்கே சொன்னாங்க.. நான் தான் நீ நல்லவன்னு நம்பினேன்.. ஆனா கடைசில என் மேலே பழியை தூக்கி போட்டு.. கருமம்.. இனி இன்னொரு தடவை உன்னை நான் பார்க்க கூடாது.. போயிடு தயவு செஞ்சு எங்கேயாவது போயிடு.. எனக் கூறியதோடு அடுத்த நாளே வெளியூருக்கு பறந்திருந்தது கண் முன் சல்லடை பிம்பமாய் வந்து சென்றது. அதுதான் அவனைப் பார்த்த கடைசி நாள். 





ஆனால் இன்று.. கால்கள் தரையோடு வேரோடி போனதாய் தோன்ற.. அவனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போலும்..  கூர் பார்வையோடு அவளையை துளைத்த படி அசால்ட்டானா ஒரு தோள் குலுக்களோடு எழுந்து டேபிளில் இருக்கைகளை மூன்றின் நின்று அவள் முகத்தையே குறுகுறு என பார்த்தவனின் முகத்தில் அத்தனை வெறுப்பு.




ச்சி.. அடுத்த நொடியே விலகி சரி சாய்ந்த படி கைகட்டி நின்றான்.. பார்வையை கூட இன்னும் மாற்ற முடியாமல் விழிகள் விரிந்த நிலையிலேயே நின்றவளை கண்டு.. ஆஹான்.. என்னமா ஒரு நடிப்பு.. அப்படியே ஷாக் ஆன மாதிரி.. பரவாயில்லை.. இன்னும் கூட உனக்கு என் ஞாபகம் இருக்குங்கிறது ஆச்சர்யம் தான்.. நான் கூட நீ அடுத்தடுத்த பூவா தாவுறதுல என்னை மறந்திருப்பேன்னு நினைத்தேன்..  என ஏளனமாய் இதழ் வளைத்து சொன்னான்.. அவன் வார்த்தைகளில் துடிதுடித்துப் போனாள்.




அவன் தன்னையும் தன் குழந்தையையும் ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் நொடிக்கு நொடி அவனை மனதார சுமந்து கொண்டு கணவனாய் வரித்து வாழ்பவள் அல்லவா.. அந்த வார்த்தை அவளை உயிர் வரை கொன்று சென்றது.



ஹேய் லிசன்.. நான் எப்பவும் சொந்த வாழ்க்கையையும் பிசினஸ் வாழ்க்கையையும் கலந்துகிறது கிடையாது.. என்றான் உறுதியான குரலில். 




அதோட இப்ப நீ என்னோட சொந்த வாழ்க்கையும் கிடையாது.. இங்க வேலை பாக்குற பத்தோட 11 ஒரு ஸ்டாஃப்.. ஜஸ்ட் ஸ்டாப்.. இத மட்டும் மனசுல வச்சுக்கிட்டு வேலை பார்த்தா நல்லாருக்கும்.. தேவையில்லாம பழையபடி உன் கேமை என்கிட்ட ஆரம்பிக்கலாம்னு மட்டும் நினைச்சுடாத.. என மீண்டும் மீண்டும் அதே வலியுறுத்துவதாய் அவன் பேசிக் கொண்டிருந்ததில் சட்டென விழிகள் சிவந்து நிமிர்ந்து அவனை நேருக்கு நேராய் பார்த்து நின்றாள் ஜான்வி.




மன்னிக்கணும் சார்..  நீங்க யாருன்னு நினைச்சோ என்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க.. நானும் இங்கு வந்தது வேலை பாக்குறதுக்காக மட்டும்தான்.. மத்தபடி கண்ட எண்ணங்களும் எனக்கு கிடையாது.. சாரி.. என கண்களில் வழிந்திருந்த கண்ணீரை ஒரே அழுத்தமாய் துடைத்து எரிந்து விட்டு.. என்னோட பைலை செக் பண்ணிட்டு கொடுத்தீங்கண்ணா நான் கிளம்புவேன்..  என நேருக்கு நேர் பார்த்து அவள் பேசிய வார்த்தைகளில்.. இது வரை இல்லாத சற்று செருக்கும் திமிரும்.




ஆரி.. ஆரி.. கொஞ்சி பேசிய அவள் கல்லூரி கிள்ளை முகம் மனதில் வந்து சென்றது.. அப்படி பேசி தானே ஏமாத்துனா.. என உள்ளுக்குள்ளாகவே வஞ்சித்துக் கொண்டவன் அவளின் இந்த புது பரிமாற்றத்தில்.. நானும் ஒன்னும் இவ கிட்ட வழிஞ்சுகிட்டு நிக்கல.. என தனக்கு தானே கூறியபடி அவள் கொண்டு வந்திருந்த பைலை திருப்பி பார்த்தான்..





ஏதாவது ஒரு இடத்தில் சின்ன தவறை இருந்தாலும் சுட்டிக்காட்டி அவள் செருப்பையும் திமிரையும் உடைக்க ஏனோ சற்று நேரத்தில் சொந்த வாழ்க்கையும் சம்பந்தமில்லை எனக் கூறியவனின் மனம் புரண்டியது..




கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி தேடாத குறை.. ஒரு தவறையும் கண்டுபிடிக்க முடியவில்லை.. ஆனாலும் இத்தனை வருட அனுபவத்தில் ஒன்று மட்டும் பளீரென கண்களில் பட்டுவிட.. இடியட்.. பேஷன்ட் ரூமுக்குள்ள கண்டிப்பா ஜன்னல் இருக்கணும்னு தெரியாது.. ரெஸ்பரேட்டரி சிஸ்டம்க்கு அது எவ்வளவு முக்கியம்.. அத நீங்க இங்க மென்சனே பண்ணலையே.. என சுட்டி காட்டி அவன் கூறிய வார்த்தைகளில் அவன் கோபம் நிறைந்த வார்த்தைகள் அவளுக்குள் கடுகடுப்பை கொடுத்தாலும்.. அவன் கூறுவதில் இருந்த விஷயத்தை உணர்ந்து ஓகே சார்.. நோட்டட்...  என்று இருந்தாள் சலனமற்ற குரலில்..




தன் திட்டில் முகம் சுணங்குவாள்.. மீண்டும் கண்ணீர் வடிப்பாள் என எண்ணி கொண்டிருந்தவனுக்கு சின்ன மூக்குடைப்பு தான்..




அப்படியானால் என்ன.. என கேட்கும் அளவிற்கு நிற்கிறாளே.. அதிலும் நோட்டடாமே.. அதற்கு மேலும் பேச்சை வளர்த்து அவளை குத்தி கிழிக்கும் வழி கிட்டாது.. யூ மே லீவ் நவ்.. என்றிருந்தான் அவன்..




அவன் கையில் இருந்த தன் பைலை வாங்கிக் கொண்டு அவள் வெளியே செல்ல போக அப்புறம் ஒரு நிமிஷம் அவளை தடுத்து நிறுத்தினான்.. சும்மா சும்மா என் ரூமுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.. ஆபீஸ் பாய் கிட்ட கொடுத்து விட்டாலே போதும்.. என அவன் கூறிய வார்த்தைகளில் உள்ளுக்குள் தீக்கங்குகள் எறிய அவன் அரை கதவை அடைந்து சாற்றி விட்டு வெளியே நகர்ந்து வந்திருந்தாள் ஜான்வி. 





Ud எப்படி இருக்குனு சொன்னா எனக்கும் பெருசா ஆதரவா இருக்கும்.. சப்போர்ட் ப்ளீஸ்.. ♥️



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...