தன்னிடத்தில் வந்து அமர்ந்தவளுக்கு அவன் பேசிய பேச்சுக்கள் காதுக்குள் ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் மனதை ஆறுதல் படுத்த முடியவில்லை.
எத்தனை நாட்கள் கழித்து அவனை பார்த்திருக்கிறாள். அவன் வேண்டாம் என கூறி சென்றிருந்தாலும் கனவிலும் கூட அவனை தவிர இன்னொருவனை நினைத்தும் பார்க்காதவளை என்னென்ன வார்த்தைகளால் வஞ்சித்து விட்டான்..
மலருக்கு மலர் தாவும் வண்டாமே.. எவ்வளவு அசிங்கமான வார்த்தை.. உள்ளுக்குள் மனம் எரிமலையாய் கணன்று கொண்டிருந்தது..
அவனை எதிர்பாராமல் இப்படி ஒரு இடத்தில் பார்த்ததில் அப்படி அதிர்ந்து நின்றிருக்க கூடாதோ.. அதனால் தானே அவ்வளவு அசிங்கமான பேச்சு..
ச்சி.. ஒரு காலத்தில் இவனையா காதலித்தேன்.. அவன் தன்னையும் தன் வயிற்றில் வளர்ந்த குழந்தையையும் வேண்டாம் என கூறி சென்ற போதும் கூட அனைத்தும் அவன் தாயின் சூழ்ச்சி.. மற்ற படி அவன் நல்லவன் தான்.. என அப்போதும் காதல் பேய் கண்ணை மறைக்க.. இத்தனை நாட்கள் தன்னை தேற்றி கொள்ள முடிந்தவளால் இப்போதும் அந்த பூச்சை பூசி மொழுக முடியவில்லை.
அதிலும் அவன் பார்த்த பார்வை.. அவ்வளவு தன்னை கீழ் தரமாய் காட்டியதே.. அது சரி.. பேச்சே அப்படி இருக்கும் நிலையில் பார்வையும் அப்படி தானே இருக்கும்.. கண் மூடியவளின் புருவ மத்தியில் தனக்கே தனக்காய் யோசித்து அவன் செய்த வேலைகளும் ஆறுதல் மொழிகளும் நினைவு வந்தது..
அந்த அடர்ந்த மர இருட்டில் உடைந்து நின்று அழுது கொண்டிருந்தவளின் தோளில் கை போட்ட படி.. விடு ஜானு.. ஏன் இவ்வளவு கவலைப்படுற.. விடு.. இங்க யாருக்கும் யாரையும் பாக்க நேரம் கிடையாது.. அப்படியும் பாத்து இப்படி கண்டமேனிக்கு சொல்றாங்கனா அவங்களுக்கு தான் வேல இல்லனு அர்த்தம்.. அப்படிப்பட்டவங்க சொன்னதை கேட்டு உன்ன நீயே வருத்திக்கிறியா.. அப்படி வருத்திக்கிட்டா அது நீ அவங்களுக்கு கொடுக்கிற வெற்றி.. அந்த வெற்றியை அவங்களுக்கு கொடுக்கணும்னு தான் நினைக்கிறியா.. அவனின் தெளிவான பேச்சு அவளுக்குள் ஒரு வித மாற்றத்தை ஏற்படுத்தியது.
இல்ல.. அவள் தலை மறுப்பாய் ஆட.. தென்.. ஏன் இவ்வளவு கவலை.. விடு.. உன்ன பத்தி உனக்கு தெரியும்.. உன் மனசுக்கு நீ சரியா இருந்தாலே போதும்.. விட்டு தள்ளு.. இதுக்கெல்லாம் இப்படி சின்ன பிள்ளை மாதிரி கலங்கிட்டு.. அவனின் அழுத்தமான குரலின் அழகான வார்த்தைகள்.. அவளை தேற்றும் வார்த்தைகள்..
அவன் கூறியதென்னவோ ஒரு முறை தான்.. ஆனால் அவள் கவலை படும் போதெல்லாம் அவனின் இந்த வார்த்தைகளை தான் பல முறையாக்கி உரு போட்டு தன்னை மீட்டு கொள்கிறாள்.
ஆனால் இப்போது காயப்படுத்தியதே அவனாய் இருக்க...? கேள்வி குறி தான்.
இப்போதே நான் அப்படி எல்லாம் கிடையாது.. ஏன் என்னை இப்படி தவறாகவே நினைக்கிறாய்.. என உரிமையோடு அவனிடம் கேட்டு விடலாமா.. குழந்தையை பற்றி கூறி விடலாமா.. என கூட தோன்றியது..
கேட்டு?? பாப்பாவை பற்றி கூறி.. அதன் பின் என்ன.. மீண்டும் இரண்டு வார்த்தைகளை சொல்லம்புகளாய் வீசி.. அந்த குழந்தை தனது அல்ல.. என தன்னோடு தன் குழந்தையையும் அசிங்கப்படுத்துவான்.
கடவுளே.. ஏன் என் வாழ்க்கையில் மட்டும் இப்படி விளையாடுகிறாய்.. யார் ஒருவனை கனவில் எண்ணியே என் மீதி வாழ்க்கையை என் குழந்தைக்காக வாழ்ந்து விடலாம்.. என இது வரை நினைத்திருந்தேனோ அவனையே என் கண் முன் நிறுத்தி இப்படி சோதிக்கிறாயே..மௌன குமுறலாய் மனம்.
மேடம்.. மேடம்.. அவள் டேபிளை தட்டினான் ஆபீஸ் பாய்.. நியாயமாய் அவன் இரண்டு முறை ஏற்கனவே அழைத்திருக்க வேண்டும்.. அதை கவனிக்கததால் தான் இந்த தட்டல் அழைப்பு.
ஹான்.. கண்களை சிமிட்டி வெளி வந்த கண்ணீரை உள்ளே நிமிட்டி.. சொல்லுஙக.. என்றாள்.. வழக்கமான புன்னகையை விட்டு விடாமல்.
மேடம்.. இந்த பைல்ல இருக்கிற வேலைய சீக்கிரமா முடிச்சு கொடுக்கணும்னு சார் சொன்னாரு.. அறையை கண் காட்டி பவ்வியமாய் அவன் சொன்ன விதத்தில் அந்த சார் யாரென புரிந்தது.
சரி.. என்று பைலை வாங்கி கொண்டாள் சோர்வாய்.
அனைவர்க்கும் ஏதாவது ஒரு சோக கதை இருக்க தான் செய்யும்.. அதை எல்லாம் வேலையில் காட்ட தான் முடியுமா.. அப்படி காட்டினால் சம்பளம் தான் வாங்க முடியுமா.. அதிலும் ஜான்வி வேலையில் நாணயமானவள்.
ஆபிஸ் பாய் சென்று விட்டான்.. வேகமாய் அவள் அருகில் சேரை நகர்த்தி கொண்டு வந்தாள் திவி.. தணிகாவிடம் ஏதோ கேட்டுவிட்டு அப்போது தான் வந்திருந்தாள்.
ஏன் ஜான்வி உன் முகமே சரியில்ல.. காலைல இருந்தே ஒரு மாதிரியா தான் இருக்க.. ஏன் பாப்பாவுக்கு நடந்ததையே இன்னும் நினைச்சுட்டு இருக்கியா.. என்றவளிடம் உண்மையை கூறி இல்லாத பிரச்சனையை கூட்டி காட்ட விரும்பவில்லை ஜான்வி.
ச்சே.. ச்சே.. அப்படி எல்லாம் இல்ல.. கொஞ்சம் தலை வலி அதான்.. என்ற படி.. அவன் புதிதாய் கொடுத்து விட்ட பைலை திருப்பி அவள் பார்க்க.. ஏன் ஜானு.. ஒன்னு உன்கிட்ட கேக்கணும்.. என்றாள் கிசுகிசுப்பாய்.
பொதுவாய் வேலை நேரங்களில் தேவையில்லாத பேச்சு வார்த்தைகளை அவள் வைத்து கொல்ல மாட்டாள் என்றாலும் இன்று உள்ளுக்குள் கணன்று கொண்டிருக்கும் மனதை எவ்வழியிலாவது திருப்ப வேண்டி.. ம்ம்.. என்ன.. சொல்லு.."
"உள்ள போனியே.. என்ன சொன்னாரு அவரு.. மன்னிச்சுட்டாரா.. கண்கள் மின்ன கேட்டவள்.. அவள் பதில் சொல்லும் முன்பாகவே ம்ம்ம்.. ம்ம்ம்.. மன்னிச்சுருப்பாரு.. மன்னிச்சுருப்பாரு.. பாக்கவே அவ்வளவு கிளாஸ்சா.. எலிகன்ட்டா.. பாத்ததும் அள்ளி வாயில போட்டுக்கிற மாதிரி.. அழகா இருக்காரே.. பெரிய மனுஷங்க எல்லாம் டக்குனு மன்னிச்சுடுவாங்க.. அதுலயும் இவர் கம்பெனி.. உயர்வுன்னு மூச்சி பிடிக்க பேசிட்டு போனவரு.. கண்டிப்பா திட்டி இருக்க மாட்டாரு.. என அவனை பற்றி புகழுரையாய் அவள் பேசி கொண்டே செல்ல.. பட்ட காலிலேயே படும்.. என்பது போல.. அவளின் நிலை.
அய்யோடா.. என தலையில் கை வைத்து எங்காவது ஓடி விடலாமா என தோன்றியது.. இப்போதேவா இன்னும் நிறைய இருக்கிறதே.. அது வரை பொறு மகளே .. என ஒரு குரல் ( வேற யாரு.. நா தான் 😂)
ஆர்வதோடு கேட்ட திவி அவள் எதுவும் கூறாமல் இருப்பதில்.. ஜான்வி.. ஜான்வி.. குலுக்கினாள்.
என்ன டி.. நா பாட்டுக்கு கேட்டுகிட்டு இருக்கேன்.. நீ இப்படி பேன்னு உக்காந்துருக்கா.. அவர் மன்னிச்சுட்டாருல்ல.. என ஆர்வமாய் கேட்க.. அவள் ஆர்வத்தை ஏன் வீணாக்க வேண்டும்.. என எண்ணியவளாய் ம்ம்.. கொட்டி வைக்க..
உஹஹுஓஓஓஓ.. அவ்வளவு தான் திவி துள்ளி குதிக்காத குறை.. எஸ்.. எஸ்.. எனக்கு தெரியும்.. அவர் பாக்க மட்டும் இல்லை.. குணத்துலயும் அவ்வளவு நல்லவரு.. என ஏதோ பெரிய ஹீரோவை கண்டு விட்ட பூரிப்போடு இரு கைகளையும் உயர்த்தி குதுகலித்து கொண்டிருந்த வேளையில்.. மேடம்.. முன்னே வந்து நின்றான் அதே ஆபிஸ் பாய்.
"என்ன.."
"வேலை நேரத்துல வேலைய மட்டும் தான் பாக்கணுமாம்.. வெட்டி நாயம் அடிக்க இது நேரமில்லைனு சார் சொன்னாரு.. " என ஒரு வித தடுமாற்றதோடு கூறியவன் சென்று விட.. பொக்கென போனது திவியின் முகம்.
ஜான்வி பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை.. அவன் குணமே அது தான் என இப்போது தானே புரிகிறது..
இப்படி கூறாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
இருந்தும் தோழி வருத்தம் கொள்வதை தாங்க முடியாமல் விடு திவி.. அப்புறமா பேசிக்கலாம்... என கூறினாலும் அவன் பேச்சிலிருந்து விடுதலை கிடைத்ததில் அவளுக்கும் உள்ளுக்குள் சிறு துளியாய்.. அது என்ன மகிழ்ச்சியா.. இல்லை தவிப்பா.. பெயர் கொடுக்க விருப்பமில்லை.
அவள் கூறியதில் இதழ்கள் மலர்ந்து சிரித்தாள் திவி.. ச்சே.. ச்சே.. நா எதுக்கு பீல் பண்ண போறேன்.. நா தான் சொன்னேனே.. அவருக்கு வேல தான் முக்கியம்.. நல்லபடியா வேல பாத்தா அவர் என்ன சொல்ல போறாரு.. இனி இந்த ஆபிஸ் என் வேலைய பாக்கும்.. என பிரமாண்ட பட டைலாக் போல குரல் ஏற்ற இறக்கத்தோடு பேசி சிஸ்டமுக்குள் தலை விட்டு கொள்ள என்ன டிசைனோ இவ.. என தானும் தன் வேலைக்குள் ஆழ்ந்து விட்டாள் ஜான்வி.
இங்கு ஜன்னல் வழியாய் வானத்தை வெறித்து கொண்டிருந்த ஆர்யனின் போன் ஒளிர்ந்தது.. அவன் நண்பன் மானஸ் தான் அழைத்து கொண்டிருந்தான்..
எங்கெங்கோ காற்றடித்து பறந்து கொண்டிருந்த மனதை இழுத்து நிறுத்தி போனை ஏற்று காதில் வைக்க.. வாழ்த்துக்கள் நண்பா.. நண்பனின் உற்சாக குரல்.
தேங்க்ஸ் டா.. என்றான் மேசையில் வந்து அமர்ந்து அதன் மேல் இருந்த வெயிட்டை உருட்டிய படி.
"அப்புறம் ஆபிஸ் எல்லாம் எப்படி இருக்கு.. வரவேற்பு எல்லாம் ஓகேவா " என கேலியாய் அவன் கேட்ட தொனியில்.
"நா தான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேனேடா.. அப்புறமும் எதுக்கு இதெல்லாம்.." என்றான் விட்டேரியாய்.
"நீ சொன்னன்னு நா விட்டுட்டா நல்லவா இருக்கும்.. அத விடு.. ஆபிஸ் எப்படி இருக்கு.. ஸ்டாப்ஸ் எல்லாம் எப்படி நடந்துகிறாங்க.. ஓகேவா.. " அவன் கேள்வியில் ஒருவளின் முகம் மட்டும் நினைவில் தோன்றி அவனை இறுக வைத்தது..
"ம்ம்.. ஆல் குட் தான்.. ஆனா இப்போ தானே வந்துருக்கேன்.. போக போக பாக்கலாம் "
"மச்சான்.. உன்ன அங்க விட்ட நம்பிக்கைல தான் நா இங்க முழு மூச்சா இந்த கம்பெனில வேல பாக்குறேன்.. பாத்துக்கோடா.. இருக்கிற கடன் உனக்கு தெரியும்ல.. எவ்வளவு சீக்கிரம் முன்னேத்துறோமோ.. அவ்வளவு நல்லது.. "என சோர்ந்த குரலில் ஆரம்பித்தவனை..
''மானஸ்.. மானஸ்.. " அழுத்தமாய் அழைத்தான் ஆர்யன்.
"இந்த கம்பெனிய என் பொறுப்புல விட்டுட்டேல்ல.. இனி இதை சக்ஸஸ் புல்லா கொண்டு போய் காட்ட வேண்டியது என் பொறுப்பு " அவன் கூறிய விதத்தில் நிச்சயம் எதிரில் இருந்தவனிடம் நிம்மதி தேங்கி இருக்க வேண்டும்.
"தேங்க்ஸ் மச்சான்" என்றான்.
போனை துண்டித்து விட்டான். "கம்பெனிய நல்ல பொசிஷனுக்கு கொண்டு போகணும் தான்.. ஆனா அதையே சாக்கா வச்சு அவ பண்ணது எல்லாத்துக்கும் தண்டனை குடுக்காம விட மாட்டேன்.. தேங்க்ஸ் நா தான் டா உனக்கு சொல்லணும்.. இப்படி ஒரு ஆப்பர்ச்சுனிட்டிய எனக்கு ஏற்படுத்தி கொடுத்ததுக்கு.. " என்றான் ஸ்வைப் ஜன்னல்களின் பலகைகளை மேலேற்றி வெளியே வேகமாய் விசைப்பலகையில் தட்டி வேலை பார்த்து கொண்டிருந்தவளின் மீது கோப பார்வையை பதித்து.
கருத்துகள்
கருத்துரையிடுக