பட்டமாய் பறந்து கொண்டிருந்த மனதை இழுத்து பிடித்து வேலைக்குள் அமுக்கி விட்டாள் ஜான்வி.. முதலில் அவன் மாற்ற கூறிய மருத்துவமனை வரைபடத்தில் அவன் சுட்டி காட்டிய தவறுகளை சரி செய்ய முற்பட்டவளாய்.. மீண்டும் முதலிலிருந்து வரைய ஆரம்பித்திருந்தாள்..
கிட்டத்தட்ட வரைய மட்டுமே அரை நாளாவது எடுத்து விடும் அளவிற்கு உன்னிப்பான வரைபடம்.. நேற்று மாலை ஆரம்பித்து இப்போது தான் முடித்திருந்த அந்த முதல் படத்தை பரிதாபமாய் பார்த்த படி அடுத்த காகிதத்தை எடுத்து மீண்டும் புள்ளியிலிருந்து வரைய ஆரம்பித்திருந்தாள்.
டீ டைம் வந்திருந்தது.. அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் எழுந்து சென்றிருக்க.. இவள் மட்டும் குனிந்த தலை நிமிராமல் அமந்திருந்ததில்.. ஜான்வி.. எழுந்து வந்த படி அவள் தோளை பிடித்து நாடியை குற்றினாள்.
ஹாப்பப்பா.. உன் கடமை உணர்ச்சிய பாத்து உடம்பெல்லாம் புல்லரிச்சு போகுது.. சரி வா.. இப்போ போய் டீ குடிச்சுட்டு வரலாம்.. " அவள் கை பிடித்து இழுக்க..
" ப்ச்..விடு திவி.. இதை மட்டும் முடிச்சிட்டு வந்துடறேன்.. " என்றவளை
"அதெல்லாம் அப்புறம் " என விடாக்கண்டியாய் இழுத்து கொண்டு நடந்தாள்.
நமக்கு வேண்டியதை எடுத்து கொள்ளும் படியான பபே முறை.. ஓரமாய் இருந்த டீ கேனில் இருந்து ஆளுக்கொரு டம்பலரை எடுத்து கொண்டு தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.
"நம்ம மேனேஜர் இம்புட்டு அழகா.. சார்மிங் பெல்லோவா இருப்பாருன்னு நா நினைக்கவே இல்லை.. அந்த கிளதுக்கு இவர் ஏ ப்ளஸ் குவாலிட்டி.." டீயை ஒரு சிப் விழுங்கிய படி கூறியவளை நிமிர்ந்து முறைத்தாள் ஜான்வி.
"யார் கூட போய் கம்பெர் பண்ற டி.. எரும.. அவர் வயசானாலும் அவ்வளவு பொறுமையானவர்.. நம்ம தெரியாம ஏதாவது தப்பு பண்ணாலும் கூட பொறுமையாரு எடுத்து சொல்லி நடந்துக்க வைப்பார்.. பாக்க நல்லா இருக்கிறதால குணமும் அப்படியே இருந்துடணும்னு அவசியம் இல்லை.." சற்று நேரத்திற்கு முன் அவன் பேச்சில் கணன்ற மனதிலிருந்து சுள்ளேன வந்து விழுந்தன வார்த்தைகள்.
"ப்ச்.. என்னமோ போ.. எனக்கென்னமோ அவர அவ்வளவு பிடிச்சிருக்கு.. எனக்கு மட்டுமேன்ன.. அவர் அப்போ வந்தப்போ நீ பாத்துருக்கணுமே.. ஆபிஸ்ல எல்லாம் ஜொள்ளு விட்டுட்டு நின்னுச்சுக.. " கோணலாய் இதழ் மடக்கினாள் கடுப்பில்.
"திரும்பவும் சொல்றேன்..சிலர் பாக்க மட்டும் தான் அழகு.. குணம் பக்கத்துல போனா தான் தெரியும்.. பாத்து இருந்துக்கோ.. " ஏனோ இம்முறை அவளையும் அறியாமல் சிடுசிடுப்பு வந்திருந்தது.
"போடி.. நீ பக்கத்துல போய் பாத்துட்டு வந்தும் இப்படி பேசுற.. அதான் நீ உன் நிலைமைய எடுத்து சொன்னதும் அவர் தான் மன்னிச்சுட்டாருன்னு சொன்னியே.. அதுக்கு மேல என்ன வேணும்.. அவர் நல்ல குணமானவர்னு தாண்ணு நிரூபிக்க.." அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் பல்லை கடித்தாள்.
"சரி விடு.. விடு.. அவருக்காக நம்ம ஏன் சண்டை போடணும்.. ஆனா அவர பத்தி நெகடிவ்வா சொல்லாத.. என் மனசு தாங்காது.. " என ஒரு விதமாய் முகம் சுருக்கி செல்லமாய் நெஞ்சை குற்றி கொண்டு அவள் கூறிய தொனியில்.. "அதே மாதிரி அவர பத்தி நீயும் என்கிட்ட பேசாத.." கோபமாய் கூறிய படி முகம் சிறுத்தாள்.
"ஓகே.. ஓகே.. நா பேசலப்பா.." என கைகளை தூக்கிய படி சரண்டராய் கூறிய திவியின் கண்கள் திடீரென ஜான்வியின் பின் ஸ்தம்பித்து நின்றன.
இருவரையும் கூர் பார்வையோடு பொசுக்கிய படி நின்றிருந்தான் ஆர்யான்.
பின் நின்றவனை அறியாமல் கண்கள் வண்டாய் மொய்க்க.. டீயை ஒவ்வொரு வாய்க்கும் அலைய விட்டு ஆற வைத்து அவள் குடித்து கொண்டிருந்த விதத்தில்.. முகத்தில் சிவப்பு ஏறி போக.. டப்பென தட்டினான் அவள் மேசையை..
பதறி திரும்பினாள் ஜான்வி. அவசர திரும்பலில் டம்பளரிலிருந்த டீ வேறு துளியாய் அவள் சேலையில் சிந்தி விட.. கொட்டிய டீயோடு தன் முன் அதிர்ந்து நின்றவளை எகத்தாலமாய் பார்த்தான் ஆர்யன்.
" இடியட்.. நா உங்களுக்கு என்ன வேலை குடுத்தேன்.. நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. இப்படி சாவகாசமா உக்காந்து கதை அடிக்கணும்னா வீட்டுல இருக்கனும்.. இப்படி வேலைக்கு வந்து இருக்கிறவன் உயிர வாங்க கூடாது " கார சாரமாய் சுள்ளேன வந்து விழுந்த வார்த்தையில் சட்டென கண்ணீர் மேடிட்டது அவளிடம்.
"சார் நா தான்.." என அவளுக்காக பரிந்து பேச வந்த திவியை பார்வையால் அடக்கி.. மீண்டும் அவளிடம் வந்து நின்றான்.
அதற்குள் ஜான்வி சற்று சுதாரித்தவளாய்.. " சார் பிரேக் டைம் இப்போ.. அதான்.. " என நிமிர்ந்த நோக்கொடு தன்னிலை விலக்கும் பொருட்டு ஆரம்பிக்க.. "ஒஹ்ஹஹ்.. ரியலி" என்றான் இதழ் வளைத்து.
"மணியை கொஞ்சம் பாத்திங்கன்னா.. அடுத்து பேச எனக்கு வசதியா இருக்கும்.." அவன் கூறிய வார்த்தைகளில் சட்டென அவள் கண்கள் எதிலிருந்த கடிகாரதில் நின்றது.
ஆம்.. பிரேக் டைம் முடிந்தது பெண்ணே.. என அடுத்த நிமிடத்திற்கு தாவி கொண்டிருந்தன முட்கள் இரண்டும்..
நா உளர்ந்தது போல் உணர்ந்தாள் ஜான்வி. சும்மாவே கண்ட மேனிக்கு நாக்கில் நரம்பில்லாமல் தன்னை குத்தி கிழிக்கவெண்பதற்காகவெ பேசுபவன் அல்லவா.. இப்போது இத்தனை பேர் முன்னிலையில் என்ன கூற போகிறானோ.. என அவன் கத்தியதில் தங்கள் வேலையையும் விட்டு தங்களையே நிமிர்ந்து பார்த்து கொண்டிருக்கும் அனைவரையும் காண முடியாமல் தவறு செய்த மாணவி போல் அவள் தலை தாழ்ந்தது.
அவள் வலியை அனுஅனுவாய் உள்ளுக்குள் ரசித்து வெளியே கல்லாய் இறுகி நின்றான்.. அவளால் பட்ட வேதனைக்கு அவளை துடிக்க வைக்க எண்ணம்..
என்னவெல்லாம் கூறினாள்.. அவளுக்கும் தனக்கும் இடையில் தவறு நடந்து விட்டதாகவும்.. தன் குழந்தை அவள் வயிற்றில் வளருவதாகவும்.. ச்சி.. இவள் பேசிய பேச்சில் தான் உயிரையே வைத்திருந்த தங்கையும் கூட தன்னை விட்டு விலகி விட்டாளே.. வந்திருந்த உறவினர்கள் தன்னை பார்த்த பார்வை.. இப்போதும் உடல் கூனி குறுகி போகிறது.. அசிங்கம்.. அசிங்கம்.. அதற்கு முன் இதெல்லாம் சாதாரணம்.. அவன் கண்கள் வெற்றி பெற்றதாய் மின்னியது.
குடுத்த வேலைய விட்டுட்டு பிரேக் டைம்னு காரணம் சொல்லி கமெண்ட்ரி அடிச்சுட்டு இருக்கீங்க.. இதுக்கு தான் நீங்க ஆபிஸ் வர்றிங்களா.. இதுல மேல கீழ இப்படி கொட்டி.. வாட் ரப்பிஷ்.. தலையை பிடித்தவன்.. ஒழுங்கா நா சொன்ன வேலைய முடிச்சு அடுத்த ஹாப் அன் அவர்ல என் டேபில்ல பைல் இருக்கனும்.. அதுக்கு முன்னாடி இந்த கொட்டுனத எல்லாம் நீங்களே துடைச்சுருக்கணும்.. அவன் கூறிய வார்த்தைகளில் சட்டென நிமிர்ந்தவளை எகத்தள பார்வையோடு உள்ளுக்குள் தேக்கி கொண்டவன்.. இடியட்.. சொன்ன வேலைய முடிக்க துப்பில்லை.. இதுல நாயம் ஒரு குறைச்சல்.. சொன்னதை சீக்கிரமா முடி..'' பன்மையிலிருந்து ஒருமைக்கு தாவி.. இவ்வளவு நேரம்... " அய்யோ பாவம்.. " என பொய்யான உச்சு கொட்டலோடு என்டர்டெயின்மென்ட்டாய் பார்த்து கொண்டிருந்த கூட்டத்தை தன் உஷ்ண பார்வையால் திரும்ப வைத்து வந்த வேகத்தில் சென்றிருந்தான் ஆர்யன்.
"ஹப்பா.. " அவன் பொரிந்து சென்றிருந்த பட்டாசில் வாயில் கை வைத்து.. என்னால் தான் அவளுக்கு இந்த தட்டு.. என துணுக்கமாய்.. ஜான்வி.. மெதுவாய் அழைக்க..
சிவந்த கலங்கிய கண்களோடு நிமிர்ந்தவள்.. வேலைய பாரு திவி.. என ஒற்றை பேச்சோடு முடித்து எழுந்து சென்று துணி எடுத்து வந்திருந்தாள்.
"சார் தான் உள்ள போய்ட்டாரே.. நா கூட துடைச்சுடுறேன் மேடம்.." என அவள் மீது கொண்ட நன் மதிப்பு காரணமாய் காலையிலிருந்து அவளை அவன் உருக்கி கொண்டிருந்ததில்.. கேட்ட ஆபிஸ் பாயை.
" இருக்கட்டும் பரவாயில்லை.. " மறுத்து தானே குனிந்து சிந்திய துளிகளை துடைத்து எழுந்தாள்.
பாத்ரூமிற்குள் நுழைந்து உடையில் பட்ட அழுக்கை துடைக்க முடிந்தவளுக்கு எந்த காரணம் கூறியும் தான் பட்ட அவமானத்தை ஏற்று கொள்ளவே முடியவில்லை.. கண்ணாடியில் பார்க்க அழுகை பொத்து கொண்டு வந்தது..
" இவன் என் ஆரியே இல்ல.. அவன் எனக்காக எதுனாலும் செய்றவன்.. எனக்கு நல்லத மட்டும் சொல்லி தர்றவன்.. என்ன கண்ணுக்கு கண்ணா பாத்துகிட்டவன்.. எனக்கு ஒன்னுனா துணையா வந்து நின்னவன்.. ஆனா இவன்.. " அவள் கண்கள் மனதோடு சேர்ந்து வெம்பின.
அவன் நடந்து கொண்ட விதத்தை ஏற்று கொள்ளவே முடியவில்லை.. இதயம் வெம்பி செத்தது.
இன்னும் அரை மணி நேரத்துல இந்த வேலைய முடிச்சு பைலை என் டேபிள்ல சப்மிட் பண்ணிருக்கணும்.. காதோரம் அவன் கூறிய வேலையின் அறிவிப்பு மணி.
அவன் கூறிய படி செய்யவில்லை எனில் நிச்சயம் அதற்கும் ஒரு பஞ்சாயத்து நடக்க போவது உறுதி.. என குளிர்ந்த நீரை முகத்தில் அறைந்து எரிந்து கொண்டிருந்த மனதை சற்று நிதானப்படுத்தி மீண்டும் சென்று இடத்தில் அமர்ந்தாள்.
தான் ஏதாவது பேசினால் மீண்டும் அவளுக்கு திட்டு விழுந்து விடுமோ.. என ஒரு வித பயத்தோடு வாயை மூடி கொண்டாலும் பார்வை அவள் சிவந்த முகத்தில் விழுந்து அவளையும் சுணங்க தான் வைத்தது.
"ஜான்வி சொன்னது சரி தான்.. ஆள் பாக்க அழகு தான்.. ஆனா இவ்வளவு ரூடா நடந்துக்க கூடாது.. எக்ஸ்ட்ராவா ஒரு நிமிஷம் ஆனதுக்கு என்ன பேச்சு பேசிட்டாரு.. பாவம் அவ.." வருத்தப்பட்டாலும் வேறு என்ன செய்வதேன புரியாமல் தன் வேளையில் ஆழ்ந்தாள்.
அரை நாள் வரை படத்தை அரை மணி நேரத்தில் வரைவது ஒன்றும் அவ்வளவு எளிதல்லவே.. எவ்வளவு வேகமாய் வரைந்தாலும் அந்த நுனுக்கத்தை விரல் நுனியில் கொண்டு செயல் பட வேண்டும்.. முடிந்த மட்டும் வேகமாய் வரைய ஆரம்பித்தாள் ஜான்வி..
அவன் கூறிய அரை மணி நேரமும் கடந்து அடுத்த கால் மணி நேரத்தில்.. மேடம்.. என வந்து நின்றான் ஆபிஸ் பாய்..
சோர்வாய் நிமிர்ந்தாள். யாரிடமிருந்து அழைப்பு.. என நன்றாகவே புரிந்து விட்டது.
மேடம்.. சொன்ன நேரம் முடிஞ்சும் கால் மணி நேரமாச்சாம்.. சீக்கிரமா கொண்டு வர சொன்னாரு சாரு.. என அழுத்தி அவன் கூற சொன்ன செய்தியோடு அவன் அழைத்ததையும் தயக்கத்தோடு கூறி விட்டு அவன் சென்று விட.. இவனுக்கு என்ன பாக்குறத தவிர்த்து வேற வேலையே இல்லையா.. அதுக்குள்ள எப்படி அவ்வளவையும் வரைய முடியும்.. என கோபம் எழுந்தாலும்.. குறைந்த பட்சம் இது வரை வரைந்ததை எடுத்து சென்று காட்டினால் திட்டு குறையலாம்.. அப்படியே திட்டினாலும் உள்ளேயே முடிந்து விடும்.. அப்போது போல் மற்றவர்கள் கண்களுக்கு அவலாக வேண்டிய அவசியம் இல்லை.. எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தவளை காலி அறை தான் வரவேற்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக