முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மரணக்கிணறே! மயக்காதே..! 11

 அடுத்து அரை மணிநேரம் ஆகியும் அவன் கிழித்தெறிந்து விட்டு சென்றதில் காற்றில் பறந்து கொண்டிருந்த பேப்பரையே வெறித்து அமர்ந்து இருந்தாள் தூரி..




என்னதான் அவன் கூறியது சரி என்றாலும் அதற்காக இவ்வளவு நேரம் அவள் செய்த வேலையை வீணாக்குவது போன்ற அவன் நடவடிக்கை தாரிக்குமே பிடிக்கவில்லை.. 



ஏன் இப்படி செய்த.. என பின்னோடு சென்று அவள் கேட்ட கேள்விதனில் நின்று திரும்பி ஆராய்ச்சியாய் பார்த்தவன்..  அதுக்காக ஒருத்தனுக்கு மண்டி போட்டு அவன் சொல்றத அடிமையா கேட்டுட்டு போகணும்னு சொல்ல வரியா..  என கேட்க பதில் கூற முடியாமல் திணறி நின்றதில்.. நா செஞ்சது சரி தான்.. ஒரு முறை சரியா செஞ்சா நாளைக்கு இதே பழக்கம் வளரும்.. அப்போ நம்ம நெனச்சாலும் சரி பண்ண முடியாது.. என தன் அறைக்குள் சென்று அடைந்து விட்டான் வர்மன்..



அறைக்கு வர தூரி அப்படியே அமந்திருந்தாள்.. வழக்கம் போல் கத்தி இருந்தாளோ.. அல்லது கோபப்பட்டிருந்தால் கூட சமாதானப்படுத்தி அடுத்த வேலையை நோக்கி முன்னேறி இருப்பாளோ என்னவோ.. ஆனால் இப்போதுஇந்த மௌனம் மனதை பிசைய தூரி  என அழைத்தபடி அவள் தோளில் கை வைத்தாள் .. நிர்மல்மான விழிகளோடு நிமிர்ந்தாள் அவள்.



விடு தூரி.. நீ கவலைப்படாத.. நைட் எவ்வளவு நேரம் ஆனாலும் உனக்கு துணையா நானும் எழுதிக் கொடுக்கிறேன்.. இரண்டு பேரும் சேர்ந்து முடிச்சிடலாம்.. என்றவளை உக்கிரமாய் பார்த்தவள்.. எப்படி இப்படி சொல்ற தாரி.. நான் அவன் வழிக்கு வந்தேனா.. நான் பாட்டுக்கு என் வேலை... நான்னு தானே இருக்கேன்.. எதற்கு இப்படி திடீர்னு உள்ள புகுந்து இப்படி ஒரு வேலையை பண்ணிட்டு போறான்.. அவள் குரலிலும் ஆதங்கத்தின் சாயல்.



விடு தூரி.. இன்னொருத்தன் ஆதிக்கத்துக்கு நம்ம போகக்கூடாதுனு நினைச்சு தான் வர் மா அப்படி.. எனக் கூறுவதற்குள் நிமிர்ந்து அவள் பார்த்த பார்வையில் தானாய் மூடியது இவள் வாய்.




அது என்ன இன்னொருத்தன் ஆதிக்கம்.. நம்மள நமக்கு பாத்துக்க தெரியாதா.. இல்ல அந்த அளவு தைரியம் இல்லாம தான் இருக்கோமா.. அப்பாவுக்காக தானே இப்படி பொறுத்துக்கிட்டு போறோம்.. அவனுக்கு என்ன பிரச்சனையாம்.. இப்போ எதுக்கு இவன் இப்படி ஒரு வேலை பண்ணிட்டு போறான்.. அப்படி என்ன திமிர் அவனுக்கு.. இப்பவே இருக்கு அவனுக்கு.. என சுற்றி இருந்த புத்தகத்தை விலாசி எழப்போக தூரி.. தூரி.. அவசரமாய் அவள் கைகளை பிடித்தாள் தாரி.



வெளிய போய் சண்டை போட்டா விஷயம் அம்மா அப்பாவுக்கு தெரிய வந்துடும்..  காலைல நா பேசுனதுக்கே அவங்க மனசு வருத்தப்பட்டு போயிட்டாங்க.. ப்ளீஸ் விடேன்..  உனக்கு எழுத தானே செய்யணும்.. நான் கூட எழுதி தரேன்.. என்ற தங்கையை பார்த்தவளின் பார்வையில் அனைத்திற்கும் நீதான் காரணம்.. என்ற குற்றச்சாட்டு வெளிப்படையாகவே..



ஆனாலும் என்ன எழுதுவ.. எதுல எழுதுவ..  அவன் தான் மொத்த நோட்டையும் கழிச்சு போட்டுட்டு போயிருக்கானே.. என்றிட.. அப்போதுதான் திரும்பி காண.. தன்னிடம் ஒரு பேப்பர் கூட உருப்படியாய் இல்லை என்ற ரீதியில் அட்டையும் பேப்பருக்கு துணையாய் பறந்து கொண்டிருந்தது. கண்ட அவள் விழிகள் மருண்டன.



உண்மைதான் நோட்டில் இருந்து அத்தனை காகிதத்தையும் பறக்க விட்டு சென்றிருந்தான்.. 



ஏன் இந்த வர்மா இப்படி ஒரு வேலை பண்ணான்.. தனக்குள் முனகிய படி தூரி முகம் காண.. அவளோ அதற்குள் படுக்கையில் சாய்ந்து இருந்தாள்.




என்னால எல்லாம் இதுக்கு மேல முதல்ல இருந்து எழுத முடியாது.. நாளைக்கு நடக்கிறது நடக்கட்டும்.. விஷயம் அப்பாவுக்கு தெரிஞ்சா அப்புறம் நடந்த எல்லாத்தையும் நானே சொல்லிடுவேன்.. காரணம் இந்த வர்மாண்ணும் சேர்த்தே சொல்லிடுவேன்.. நீயே நினைச்சாலும் தடுக்க முடியாது..



ஆனா இன்னும் படிக்கலையே நீ.. தயங்கினாள்.



இதுவரையும் பார்த்தது போதும்.. ப்ச்.. என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டவள்  லைட்டை அணைத்து மறுபக்கம் திரும்பிக் கொள்ள.. பெருமூச்சு விட்டபடி தானும் மறுபக்கமாய் படுத்துக் கொண்டாள் தாரி.




அறைக்கு வந்த அர்ஷா துள்ளாத குறை.. வந்த நொடியில் இருந்து அவளிடம் பேச வேண்டும்..  பழக வேண்டும் என சுமுகமாய் போகத்தான் எண்ணியிருந்தான். ஆனால் அவளின் ஏறெடுத்துப் பார்க்காத முகமும்.. கோப நடவடிக்கைகளும் அவனுக்கே உரிய சுயமரியாதையை திரி தூண்டி விட்டிருக்க.. நாளைக்கு போய் நல்லா அசிங்கப்படு.. வீட்டுல வந்து நீ சொன்னாலும் அதை எப்படி மேனேஜ் பண்ணனும்னு எனக்கு தெரியும்.. என ஓரமாய் இதழ் வளைத்து சிரித்தவன்.. நிம்மதியாய் படுக்கையில் விழுந்தான்.



அவள் எழுதியதை தான் கிழித்துப் போட்ட போது அவள் விழிகள் விரிந்த விதம் மீண்டும் மீண்டும் அவன் கண்ணுக்குள் வந்து இம்சித்தது.. அய்யோ.. என அலறிய செர்ரி இதழ்களும் அதற்கு மேல் பண்ணாய் குண்டு கன்னங்களும்.. அதில் பொதித்து வைத்த ஸ்டராப்பேரி துண்டுகளாய் கண்களும்.. என அவனை வேறு லோகத்திற்கு இட்டுச் சென்றது..



ச்சே.. ச்சே.. தலையை உலுக்கிக் கொண்டான் அர்ஷா.. இந்த அளவு டிஸ்டர்ப் பண்றதுக்கு அவ ஒன்னும் பேரழகி இல்ல.. என இந்நாள் வரை தன்னோடு போட்டி போட்டு இழைந்த வெண்மை தோல் பெண்களை மனதில் நிரப்பிக் கொள்ள.. அவர்களின் ஒயில் அழகும் பார்வையும்.. என எண்ணி கொண்டவனுக்கு மீண்டும் கண்கள் அந்த குண்டு கண்ணிலேயே வந்து நின்றது.. ச்சே..என சலித்து எழுந்து விட்டான்.



லைட்டா டிஸ்டர்ப் ஆகிட்டேன்னு நினைக்கிறேன்.. ஆனாலும் வொர்ஸ்ட்ன்னு சொல்ல முடியாத அளவுக்கு பாக்க நல்லா தான் இருக்கா.. என கரெடிட் கொடுத்து படுக்கையில் சாய்ந்து விட.. கட கடத்த பேனுக்கு மத்தியில் சிறிது நேரத்தில் நித்ரா தேவியின் அணைப்பு.




விடியற்காலை வழக்கம் போல் சுப்ரபாதம் தொடர்ந்து சுதாவின் குரல் என.. அமோகமாய் பொழுது விடிந்தது அர்ஷாவுக்கு.. எப்போதடா இதிலிருந்து விடிவுகாலம் கிடைக்கும் என்ற எண்ணம் காலையிலேயே மேலோங்கி போனதில்.. ச்சை.. ***  என தகாத வார்த்தைகளால் வாய்க்குள் அர்ச்சித்த படி குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்தி வெளி வந்தான்..




எப்போதும் நேரத்திற்கு எழுந்து வரும் தங்கை மகன் இன்று இன்னும் வராததில்.. அழைக்கிறேன் பேர்வழி என அவன் அறை கதவை தட்ட சாமி கையை உயர்த்திய நேரத்தில் உள் பக்கமிருந்து கதவை திறந்திருந்தான் அர்ஷா.. கண்ட சாமியின் விழிகள் விரிந்தன. 




புல் பார்மில் நிற்கிறானே.. என்னப்பா வர்மா.. வெளிய எங்கயும் போறியா..

.

ஆமா அங்கிள்.. என்ற படி வெளி வந்தவனை சரியாய் கல்லூரிக்கு கிளம்பி வந்திருந்த இரு பெண்களும் பார்க்க.. தாரிகோ அவன் தனுடன் வரப் போகிறானா என்ற சந்தேகம்.



என்ன பர்மா இவ்வளவு சீக்கிரமா கிளம்பி இருக்க.. எங்க கூடயா வரப்போற.. என மனதில் தோன்றியதை தாரி கேட்க.. சாமி திரும்பியவர் அவன் எதுக்கு உங்க கூட வரணும்.. வேற எங்கேயோ கிளம்புவான் போல.. என அர்ஷாவை பார்த்து கூறியதில் ஆமா அங்கிள் என்றான் அவன்.. வாடிப்போனது தாரியின் முகம்.





கிளம்பலாம் வா.. என தந்தை கொடுத்த பணத்தை கையில் அடக்கி கொண்டு தூரி முன்நடக்க.. இன்று கல்லூரிக்கு போனால் என்ன நடக்குமோ என தடதடக்கும் நெஞ்சோடு கண்களை உருட்டியபடி அவளோடு சென்றாள் தாரி.



பாத்தியா.. நேத்து பண்றதையும் பண்ணிட்டு எவ்வளவு தெனாவட்டா அப்பா கேக்குறதுக்கு ஆமா சொல்றான்னு..  நீதான் அவனை ரொம்ப நம்பிக்கிட்டு இருக்க தாரி.. என பஸ் ஸ்டாப்பில் நின்றபடி தூரி கடுகடுத்து கொண்டிருக்க.. தாரிக்கும்  அதுவே உண்மையாய் பட்டது.



வர்மா இப்படி பண்ணான்னா கண்டிப்பா அவன் நமக்கு சப்போர்ட் பண்ணுவான் என்று நினைத்தேன்.. ஆனா இல்ல.. என கை  விரித்தவள்..ஆமா நீயும் அவன் வருவான்னு எதிர்பார்த்தேயோ.. கேட்க.. சட்டென முகம் மாறினாள் தூரி.





எ..எனக்கென்ன.. நா ஏன் அவனை எதிர்பார்க்க போறேன்..என்றிட இன்று கல்லூரி சென்றால் என்னவாகும் என்ற பயம் அதிகமாய்.. சீனியர்களின் கொடூரங்களை வார்த்தையினால் சொல்லி மாளாது. 



சொன்னது போல் சாலை இடுப்பில் கட்டி ஆட விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..  அதிலும் ஒருமுறை ஒரு மாணவன் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை என பிரேக் டைமில் அவன் கழுத்தில் நான் ஒரு முட்டாள் என போர்டை தொங்க போட்டு கல்லூரி முழுக்க நடக்க விட்டதை மறக்க முடியுமா..



பயமா இருக்கு தூரி..  நடுங்கிய குரலோடு தமக்கையின் கைகளோடு இறுக்கிக் கொண்டாள்.  குளிர்ந்த அவள் கரத்திலேயே பயம் புரிய எதனாலும் பார்த்து தான் ஆகணும்.. வா..  என அழைத்து கல்லூரிக்குள் இருவருமாய் நுழைந்தனர்..




விழிகள் சல்லடை போட்டு வருணும் அவன் நண்பர்களோ தென்படுகிறார்கள் என எட்டிப் பார்த்து யாரும் இல்லை என்பதில் மனம் திருப்தி கொண்டது..  உள்ளே நுழைந்தனர்.. 




நல்லவேளை சீனியர் இல்ல.. இருந்திருந்தால் இந்நேரம் நம்ம நிலைமைய யோசித்துப் பார்க்கவே முடியல... என தாரி கூறி முடிப்பதற்குள் முன்னே தொப்பென வந்து குதித்தான் வருண்..





என்ன வந்ததும் ரெண்டு பேரும் என்னதான் தேடுனீங்க போல... கேலி இழை ஓடியது அவன் குரலில்.



அஹ்ஹ்.. என அதிர்ந்து ஹான்.. சீனியர்.. அது.. அது.. என தாரி தடுமாற..



என்னோட நோட் கை நீட்டினான் அவன்.



சீனியர் அது வந்து.. என அவள் தயங்க.. நோட்ட குடுன்னு சொன்னேன்.. நொடியில் அவன் சிரிப்பு மறந்து கேட்ட விதத்தில்.. வேறு வழியில்லாமல் பைக்குள் போட்டு வந்திருந்த அவன்  கிழிந்த நோட்டை தூரி நீட்டியதும்.. ஏற்கனவே பாதியை தன் நண்பர்களை எழுத வைத்து மீதியை அவளிடம் எழுத கூறி சொல்லி இருந்தான்..  ஆனால் அவன் நண்பர்கள் எழுதியதிலிருந்து அனைத்தும் கிழிந்து போய் இருக்க.. ஏய்ய்ய்.. என்ன டி பண்ணிட்டு வந்துருக்கீங்க.. அவன் கத்தலில் வந்து கொண்டிருந்த மற்றவர்களும் கூட சிறப்பான சம்பவம் காண எண்ணி அப்படியே நின்று விட நடுவில் இருவரும்..அவன் சத்தத்தில் கூனி குறுகி போயினர்.. 


யாரும் சீனியரை எதிர்த்து பேச வரமாட்டனர்.. என நன்றாகவே தெரியும்.. அனைவர் முன்னிலையிலும் அவமான படும் நிலை..




அவன் நண்பர்களும் வந்து விட்டிருந்தவர்கள் அவன் நோட்டை கண்டு.. பக்கென சிரித்த சிரிப்பில் அவன் விழிகள் இன்னும் கோபத்தில் சிவந்து போயின.. 



மச்சான் நான் தான் சொன்னேன்ல..இவளுங்க ராங்கிக்காரிங்கன்னு..  இவளுங்க கிட்ட ஏன் கொடுத்த.. ஒருவன் வயிறு பிடித்துக் கொண்டு சிரிக்க..  இன்னொருவனோ பாரு மச்சான் சீனியர்னு தெரிஞ்சு நம்ம வருணுக்கே மொட்டை அடிச்சு இருக்காளுங்க ரெண்டு பேரும்.. என ஏற்றி விட்டான்..






சீனியர் ப்ளீஸ் நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க..  தெரியாம இப்படி ஆயிடுச்சு.. இன்னும் ஒரு நாள் டைம் கொடுங்க நானே புது நோட்டு வாங்கி எல்லாத்தையும் எழுதிட்டு வந்துறேன்..  என தூரி  கூற.. வாயை மூடு..ஆத்திரத்தில் கத்தி இருந்தான்..



நேத்து நான் அவ்வளவு சொல்லியும் எவ்வளவு தைரியம் இருந்தா நீ இப்படி செஞ்சிட்டு வந்துருப்ப..  அவ்வளவு திமிரு.. என்றவன் சட்டென அவள் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த ஷாலில் கை வைக்க.. அவன் செய்யப் போவதில் அதிர்ந்து ப்ளீஸ் சீனியர் வேண்டாம் என.. அவளும் சீனியர் ப்ளீஸ் விட்டுடுங்க என தாரியும் மாறி மாறி கூறிட... வக்கிரமாய் முறைத்தவன் அதெல்லாம் நீங்க இப்படி செய்வதற்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்.. என்கிட்டயே உங்க ஆட்டத்தை காட்டணும்னு பாத்தீங்கல்ல.. அதற்கு தண்டனை வேண்டாம் என இழுக்க ஷால் போடுவது தான் மானம் என எண்ணும் அருந்த பழையவர்கள் இல்லை அவர்கள்.. ஜீன்ஸ் டி-ஷர்ட் என சங்கீதம் சுற்றுபவர்கள் கல்லூரிக்கு வரும்போது மட்டுமே இந்த ஷால் எல்லாம்..  ஆனாலும் இத்தனை பேர் மத்தியில் ஒருவன் இழுப்பதில் அவமானத்தில் குன்றி..  கண்களை அவள் மூடிய தருணம்.. அஹ்ஹ்.. அலறலோடு அவன் சத்தம்.




கண் திறக்க... வருண் வாயில் ரத்தத்தோடு ஒய்ந்து கீழே கிடக்க அவன் மறுபக்கம் கருப்பசாமி போல் கோபமாய் உக்கிரமாய் தன் இரும்பு காப்பை முறுக்கியபடி நின்று இருந்தவன் சாட்சாத் வர்மனே..




அவனை அங்கு எதிர்பாராமல் இரு பெண்களின் விழிகளும் விரிய.. கைகளைப் போட்டிருந்த வெள்ளிக்காப்பை முறுக்கியவன்  வேக அடிகளோடு அவனை நெருங்கினான்.



எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பிள்ளைங்க கிட்டயே இப்படி கேவலமா நடந்துக்க பாப்ப..  காட்டாற்று வெள்ளமா பாய்ற பொண்ணுங்கள அடக்க இதை தவிர வேற வழி தெரியலையா டா எச்ச **.. இத்தனை பேர் முன்னாடி வச்சு அசிங்கப்படுத்தறானே..  பார்க்கிற ஒருத்தருக்கும் இவனை தடுக்கணும்னு தோணலையா.. ச்சே.. என சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து கேட்டதில் தலை தொங்கி போயினர் மற்றவர்கள்.. ஆனாலும் சீனியரை அடித்ததோடு கெத்தாய் நின்று பேசி கொண்டிருந்தவனை ஒருவித மகிழ்வோடு தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.. 




அவன் நண்பர்களோ எங்கே நண்பன் கைகாட்டி தன் பக்கமும் வந்துவிடுவானோ என மிரண்டு பேயடித்தார் போல உறைந்து நிற்க.. நண்பன் நான் ஏற்கனவே வாயில் சொட்ட சொட்ட ரத்தம் வழியே அடிவாங்கி கிடைக்கின்றானே.. என்ற பரிதாபம் வேறு..



ஏண்டா..  காசு கட்டி பிள்ளைகளை படிக்க அனுப்புனா  அதையே கெடுக்கிற அளவுக்கு எழுத கொடுத்து அனுப்புவியா நீ.. அந்த நோட்டை கிழிச்சது நான் தான்.. தாரிகாவுக்கும் தூரிகாவுக்கும் இதுல சம்பந்தம் இல்லை..  எங்க என்கிட்ட உன் வீராவேசத்த காட்டு பாப்போம்.. என முஷ்டியை இறுக்கிக் கொண்டு செல்ல.. வருண் ஏற்கனவே அவன் விட்ட அடியில் தலையில் பட்டாம்பூச்சி படுக்க கிடந்தவன் அவன் மீண்டும் தன்னை நெருங்கி வருவதில் அரண்டு சாரி.. சாரி.. ப்ளீஸ் விட்டுடுஙக.. அவன் காலை பிடித்து இருந்தான்..



ப்ளீஸ் என்ன விட்டுடுங்க.. என ரத்தம் சொட்டிய வாயோடு சொல்ல அப்போதும் கோபம் குறையாமல் நின்றவனின் புஜத்தை ஓடிவந்து பற்றினாள் தூரி.. 




போதும் வர்மா.. அவன் பண்ணதுக்கு தான் தண்டனை கொடுத்தாச்சுல.. வா போகலாம்.. இனி யார்கிட்டயும் இப்படி நடக்க மாட்டான்.. என்று தான் தூரி இழுக்க.. முதல் முறையாய் அவள் உரிமையாய் தன்னோடு பேசுவதை கண்டு அவன் விழிகள் அந்த சூழலிலும் ஒன்றிணைந்து இருந்த தங்கள் இரு கரங்களையும் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டது.. 




ஆனால் தூரி இவன் எப்படிப்பட்ட வேலையை பார்த்து இருக்கான்.

இவன போய் விட சொல்ற..  என மீண்டும் எதிரி கொண்டு செல்ல விடு வருமா.. அவன் உன்ன அளவுல பாதி கூட இல்ல அவன்கிட்ட எதுக்கு போட்டி போடுற.. என இப்போது அவள் குரலில் கேலி படர்ந்து இருந்ததில்.. அவளுக்காய் தட்டி கேட்டதில் தன் மீது நன்மதிப்பு உண்டாகி இருக்கிறது என உணர்த்தவனின் இதழ்களும் விரிந்தன.



தூரி சொல்றானு விடுறேன்.. இல்ல மவனே இங்கேயே நீ சட்னி தான்.. என மீண்டும் பல்லை கடிக்க தூரி இழுத்து கொண்டு செல்ல தாரியும் இங்கு என்ன நடக்கிறது என்ற ரீதியில் அவர்களோடு நடந்தாள்.




அடிபட்ட தன் நண்பனை பாவமாய் பார்த்தபடி மச்சான் வாடா.. என ஆளுக்கு ஒரு பக்கமாய் கை போட்டு தூக்கி அழைத்துச் சென்றனர் அவன் நண்பர்கள்..




இழுத்து வந்தவனை அந்த மரத்தடியில் விட்டு எதிரில் கைகட்டி நின்றாள் தூரி.. இப்ப எதுக்கு இப்படி பிஹேவ் பண்ற.. நேத்து என்னன்னா எழுதிக்கிட்டு இருந்த நோட்டை பிடுங்கி கிழிச்சு போடுற..  இப்போ இங்க..இவ்வளவு ரூடா பிஹேவ் பண்ற என கூர் பார்வையோடு அவள் கேட்டதில்..



ரூடா நானா புருவம் சுழித்தான் அவன்.



எவ்வளவு கேவலமா வேலையை பார்க்கப் போனான் அவன்..  அதை தட்டி கேட்டா நான் உனக்கு ரூடா... என கரம் தலை கோத அவன் கேட்ட விதத்தில்.. ஏனோ இதுவரை யாரையும் கண்டுகொள்ளாத அவள் மனம் நொடியில் சற்று தடுமாறி தான் போனது.



அதுக்குன்னு இத்தனை பேர் முன்னாடி அவன அடிப்பியா.. பிரின்ஸ்பால்க்கு விஷயம் தெரிஞ்சா உன்னால எங்க படிப்பு தான் பாதிக்கப்படும்.. என்றிட அதுக்காக கையை கட்டிட்டு என்னால சும்மா வேடிக்கை பார்க்க முடியாது என்றான் சட்டென..


உன்னை யாரும் வேடிக்கை பார்க்க சொல்லல.. தேவையில்லாம எதுக்கு நேத்து நான் எழுதினதை நீ கிழிச்சு போட்ட..


அதுக்கு பதிலா நேற்று நான் சொல்லிட்டேன்.. என்றான் சட்டென.



உனக்கு எப்படியோ.. நீங்க எனக்கு என் மாமன் பொண்ணுங்க.. உங்க கிட்ட யாரும் தவறா நடந்துக்க கூடாது.. அதுக்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்.. அங்கிள் எந்த எண்ணத்துல நான் வந்ததுல இருந்து அவர் வேலை குறைஞ்சதுன்னு சொன்னார்ன்னு தெரியாது.. ஆனால் உங்க ரெண்டு பேரையும் பாதுகாக்க வேண்டியதும்  என் பொறுப்பு தான்.. என கூறி விறுவிறு நடையோடு அவன் சென்று விட.. நேரத்திற்கு கடவுள் போல் வந்தவன் எப்போதும் தங்களை பாதுகாக்க வேண்டியது அவன் பொறுப்பு என கூறி செல்கின்றானே, அவளையும் இது அறியாமல் மெல்லிய இழையாய் புன்னகை அவள் இதழில் வழிந்து ஓடியது..




ஆனாலும் வர்மா.. பயங்கர ஸ்மார்ட் இல்ல..  என செல்பவனை கண்ணில் நிரப்பி தாரி கூறிய வார்த்தையில் தூரி கடுப்பாய் திரும்பியவள்.. சும்மா அவன புகழ்றத விட்டுட்டு கிளாசுக்கு வா.. என கோபமாய் கூறி முன்னே செல்ல நான் இப்போ என்ன சொன்னேன்னு இவ்வளவு கோபப்படுற எப்பவும் நான் சொல்றது தானே.. என அக்காளை புரிந்து கொள்ள முடியாது அவள் பின்னே நடந்தாள்.. முன்னே நடந்த தூரியின் இதழ்களோ சற்று நேரத்திற்கு முன் அவன் அடித்த நிகழ்வை எண்ணி விரிந்தன..


படத்தில் ஹீரோயினை ஹீரோ நேரத்திற்கு காப்பாற்றுவது போல் வரும் காட்சிதனில்.. இதெல்லாம் எவ்வளவு ஃப்ராடுலன்ஸ்.. அது எப்படி நேரத்துக்கு வந்து குதிப்பானா என எதிர் கேள்வி கேட்பவர்களுக்கு என்ற கண் முன் தனக்கு நடக்கவிருந்த அநியாயத்தில் இருந்து நேரத்திற்கு காப்பாற்றி விட்டவனின்  நினைவு வந்து போக.. ஏனோ அந்த ஹீரோ ஹீரோயின் இடத்தில் தன்னையும் அவனையும் பொருத்திப் பார்த்தது மனது..



ஸ்மார்ட் தான்.. என கூறும்போது கண்கள் சிமிட்டி இதழ்கள் புன்னகையில் சுழிந்தது ஏனோ... 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...