முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 12

 இப்போதானே அவன் கூப்பிட்டதா சொல்லி ஆபிஸ் பாய் சொல்லிட்டு போனான்.. அதுக்குள்ள எங்க போனான் இவன்.. வேலை நேரத்தில் இப்படி வெட்டியாய் நிற்பதில் கடுகடுத்து நின்றாள் ஜான்வி.




இன்னும் அவனை காணாததில்.. சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உளைக்கலம்.. என்பதை போல் மனம் அவனை தொடர்ந்த பிற்காலங்களுக்கு தாவியது.




அன்று அவன் பார்வையில் சிலிர்த்து வெளி ஓடி வந்த ஜான்வி பார்த்தது ஆளுக்கொரு முக்காய் நின்ற படி.. முகத்தை சுழித்து கொண்டு.. துப்பி கொண்டிருக்கும் கேசரியை தான்.




தான் தன் தோழிக்காக ஆசை ஆசையாய் செய்து கொண்டு வந்ததல்லவா.. அதை ஏன் இப்படி துப்ப வேண்டும்.. என புரியாமல் அவள் பார்த்து கொண்டிருந்த வேளையில்.. ஏய்ய்ய்.. பொண்ணே.. அவள் தோளை வலிக்க பிடித்திருந்தாள் மணி மேகலை.




"அம்மா" அவள் பிடித்ததில் வலித்த தோளை விலக்க முயன்ற படி நெளிந்தவளின் கண்களில் நீர் திரையிட்டது.




"என்ன நெனச்சுட்டு இருக்க நீ.. இப்போ யாரை கேட்டு நீ கொண்டு வந்த இந்த இத்து போன கேசரிய எங்க கெஸ்ட்டுக்கு குடுத்த.. பாரு உன்னால எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு " என மணி மேகலை காட்டமாய் ஆரம்பித்தவர்.. அடுத்து தான் தான் என அறிந்து பயந்து நின்ற வேலைக்காரம்மாள் மீது தன் கோப பார்வையை வீசினாள்.




" ஏய்ய்ய்..யார் என்ன குடுத்தாலும் என்ன கேக்காம வந்தவங்களுக்கு கொடுத்துடுவியா.. " எரிச்சலோடு கத்தி.. "சாரி.. சாரி.. வேண்டாம்னா விட்டுடுஙக.. அவ வேலைக்காரிக்கு தெரிஞ்ச பொண்ணு.. என் பொண்ணு அவகூட எந்த பாகுபாடும் காட்டாம  பழகுறதல அவளுக்காக செய்றேன்னு ஏதோ தெரியாம பண்ணி.. அத உங்களுக்கும் கொடுத்துட்டா.. மன்னிச்சுடுங்க.. " மணிமேகலை கேட்ட தொணியில் ஜானவியை சுட்டி காட்டி அவள் கூறிய செய்தியில் அனைவரின் கோபமும் ஒரு சேர அவள் பக்கம் திரும்பியது.



"ஏய்.. இந்தா பொண்ணு " ஓங்கி வந்தது ஒரு குரல்.




"உனக்கு ஏதாவது செஞ்சு போடணும்னு ஆசை இருந்தா அத உன் அப்பா அம்மாவுக்கு செஞ்சு போட்டு உயிர வாங்கணும்.. இருக்கிறவன இல்ல.. நாங்க எல்லாரும் எவ்வளவு பெரிய ஆளுங்கன்னு தெரியுமா.. எங்களோட ஒரு நிமிஷ வேல்யூ என்னனு தெரியுமா..




"மிடில் கிளாஸ் கூட இல்லாத உனக்கெல்லாம் இங்க என்ன வேல.. வேலைகார பொண்ணுனா உன் இடத்துல இருந்துக்கணும்.."




"சை.. இதுவரைக்கும் இப்படி ஒரு உப்பு கேசரிய நா என் வாழ்க்கைல சாப்பிட்டதில்ல.." 




ஆளாளுக்கு அமிலமழையை பொழிந்து கடைசியாய் நீ வந்த வேல முடிஞ்சா கிளம்பிடு.. என அவள் தோள் பற்றி வெளியே இழுத்து வந்து விட்டிருந்தாள் மணிமேகலை.




அவள் விட்ட வேகத்தில் தரையில் உரசி விழுந்தாள் ஜான்வி.. "அப்படி என்ன தவறு செய்தேன்.." என புரியமலேயே கண்களில் வழிந்த நீரையும் துடைக்க மறந்து நிமிர்ந்து பார்த்தாள்.. வந்திருந்த மொத்த கூட்டமும் அவளை தான் காட்சி பொருளாய் பார்த்து நின்றது. 



அதற்கு மேல் அந்த அவமான நிலையை தாங்க முடியாமல்  வேகமாய் எழுந்து ஓடியவளை.. "என்ன ரகமோ.. இந்த மாதிரி பொண்ணுஙக எல்லாம்.. "என முனகி விட்டு விருந்தாளிகள் உள்ளே சென்று விட.. 




மணிமேகலையோ தான் நினைத்தது சரியாய் நடந்து விட்டிருந்ததில்.. அவள் அழுகையையும் ஓட்டத்தையும் நின்று நிதானமாய் ரசித்து விட்டு உள்ளே சென்று கதவை அறைந்து சாற்றினாள். 



ஓடி வந்திருந்த ஜான்வியின் மனம் ஒரு நிலையில் இல்லை.. என்னவெல்லாம் பேசி விட்டார்கள்.. என் இடத்தில் இருக்க வேண்டுமா.. என் இடம் என்றால் என்ன.. என் அம்மா வீட்டு வேலை செய்பவர் தான்.. ஆனால் அதுவே என் இடமாக ஆகி விடுமோ..



அவர்கள் பிள்ளைகளை போல நானும் நல்ல பள்ளியில் படிக்கிறேன்.. நன்றாகவும் படிக்கிறேன்.. ஆனாலும் என் இடம் என இப்படி ஒதுக்குவது சரி தானா..




நான் என்ன தவறு செய்தேன்.. எவ்வளவு யோசித்தும் புரியவில்லை.




வேகமாய் ஓடி வந்த கால்கள் சோர்ந்து போக அங்கு ஓரமாய் கிடந்த மர பெஞ்சில் அமர்ந்தவள் அப்போது தான் எங்கு வந்திருகிறோம் என்பதை கண்டாள்.




அவள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பார்க்கிற்கு.. மிதா வீட்டிற்கும் தன் வீட்டிற்கும் இடையில் அமைந்திருப்பதால் இருவரும் பள்ளி இல்லாத நாட்களில் அடிக்கடி சந்தித்து கொள்ளும் இடம்.. 




அதனால் இப்போது மனம் வெதும்பி கொண்டிருந்த நிலையில் எங்கு செல்கிறோம் என்ற தன்னிலை கூட இல்லாத போதும் இந்த இடத்தில் வந்து அமர்ந்திருந்தாள்.




"அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டேன்.. என் தோழிக்காக ஒரு ஸ்வீட் தானே செய்தேன்.. அதை வந்தவர்களுக்கு கொடுக்க சொன்னது அவ்வளவு பெரிய தப்பா.."



"தப்பு தான்.. குடுத்துருக்க கூடாது.. கூடவே கூடாது.." மனதிலிருந்து உதிர்ந்த வார்த்தையில் இன்னும் கலங்கி போனாள்.




"ஏன்.. அதற்கு கூட எனக்கு அருகதை இல்லையா" மனம் சுயப்பச்சாதாபத்தில்  கலங்கியது.




திடீரென.. "ஜானு.. " அழைத்த படி வந்த மிதாவை கண்டதும் இவள் எப்படி இங்கே.. ஒரு கணம் அதிர்ந்து அடுத்த கணமே.. அவள் பின்னோடு வந்தவனை கண்டு முகம் மாறினாள்... முயன்ற மட்டும் சாதாரணமாய் இருக்கும்படி காட்டிக் கொண்டாள். 




மிதாவின் முகம் வருத்தமாய் தெரிந்தது. பேசாமல் நிற்கும் இந்த கலங்கிய கண்களே அங்கு நடந்ததை இவள் அறிந்திருக்க கூடும் என காட்டி கொடுக்க.. எதுவும் பேசாமல் நின்றாள் ஜான்வி. 




யோசனையோ தனக்காக தோழி வந்தது வரை சரி.. ஆனால் இவர் எதற்கு.. என அவள் பின்னால் நின்றவனை பார்த்த படி.




"ஜானு.. சாரி.. டி... " சட்டென கலங்கிய விழிகளின் நீர் கன்னத்தில் இறங்கும் முன்பாய்.. பதறி அவள் தாடை ஏந்தி இருந்தாள் ஜான்வி.




"ஏய் லூசு.. எதுக்கு டி இப்போ பிறந்தநாள் அதுவுமா அழகுற.. என்னாச்சு.." அவள் கேட்ட தொணியில்.



"சாரி.. என்னால தான.. நீ இப்படி அசிங்கப்பட்ட.. " என்றாள் மிதா கண்ணீரோடு.



"அய்யோ மிது... " வருத்தத்தை உள்ளேயே மறைத்து புன்னகைத்த படி.. அதெல்லாம் ஒன்னுமில்ல டி.. நா செஞ்சது நல்லால போல.. அதனால தான் வந்தவஙக அப்படி சொன்னாங்க.. நானும் சரி.. வந்த வேல முடிஞ்சதுன்னு கிளம்பிட்டேன்.. உன்ன பாத்தேன்.. ஆள காணோம்.. அதான் நேரமாச்சின்னு வந்துட்டேன்.. தோழிக்காக தன்னை கட்டுப்படுத்தி கொண்டாலும்.. ஆங்காங்கு குரல் கமறுவதை தடுக்க முடியவில்லை.




இவ்வளவு நடந்தும் தன் ஆட்களை விட்டு கொடுக்காமல் கூறுவதை ஒரு வித சுவாரசியம் கண்களில் தேங்க பார்த்து நின்றான் ஆர்யன்.




வேலைக்காரம்மளிடம் இருந்து விஷயத்தை நேரடியாய் கரந்தவன் அல்லவா..



"பொய் சொல்லாத.. நடந்த எல்லாத்தையும் அண்ணா சொல்லி தான் என்ன இங்க கூட்டிட்டு வந்துச்சு.. நான் ஒரு பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள ஒரு பிரளயமே நடந்து இருக்கு..  மறைக்காத என்கிட்ட" கோபமாய் கூறிய தோழியை தாண்டி அவள் கண்கள் அதிர்ச்சியோடு ஆர்யனிடம் பதிந்தது..




அவனும் தன்னையே குறுகுறுப்பாய் பார்த்து நின்று கொண்டிருந்ததில்.. இருவரையும் சமநிலைக்கு திரும்ப வைக்கும் பொருட்டு "அய்யோ.. சும்மாவெல்லாம் சொல்லல டி.. உண்மையாவே நா செஞ்சது நல்லால போல.." அவள் மழுப்பி முடிப்பதற்குள்.. 




"உப்பாகிடுச்சு.. அப்படி தானே" என்றிருந்து மிதாவை தாண்டிய குரல்.




ஆச்சர்யம் கண்களில் தேங்க பார்த்தாள். "அப்படி சொன்னதாக தான் ஞாபகம்.. " இப்போது நினைவு வந்தது..




சட்டென மிதாவை தாண்டி முன்னே வந்தவன் அவள் கையை பிடித்திருந்தான்.. ''ஹான்.. " அவள் விழிக்க.. வா என் கூட.. என மறு கரத்தால் தங்கையை பிடித்து கொண்டு முன்னேற.. அவன் வழக்கத்தை விட வேகமான நடையும்.. உரிமையான இந்த கை பிடிப்பும்.. அவளை ஜிவ்வென சிலிர்க்க வைத்தது அந்த நிலையிலும்..




எங்கே அழைத்து போகிறான்.. என யோசித்து கொண்டிருந்த வேளையிலேயே.. பெண்கள் இருவரையும் தன் பைக்கில் ஏற்றி விரைந்திருந்தான் ஆர்யன்..




தான் அவ்வளவு கூறியும் கேட்காமல் மகளை அழைத்து கொண்டு எங்கே சென்றானோ என் தவப்புதல்வன்.. என கண்களால் தேடிய படி மிதாவிற்கு வாழ்த்து தெரிவிக்க வந்து கொண்டிருந்தவர்களை சமாளித்து கொண்டிருந்தாள் மணி மேகலை.




சீறி பாய்ந்து நின்ற வண்டியின் சத்தத்தில் வேகமாய் ஓடி போய் பார்க்க.. ஆர்யன் மிதா முன் வர அழுது வீங்கிய முகத்தோடு ஜான்வி அவர்களுக்கு பின்னால்..




"இவளா.. இவ எதுக்கு திரும்பி வந்துருக்கா.. எதையும் மறந்து வச்சுட்டு போட்டாளா.. ச்சை.. போய் தொலையட்டும்னு ஒரு வேல பண்ணி வெளிய அனுப்பி வச்சா.. போன வேகத்துல வந்து நிக்குது.. " என உச்ச கட்ட வெறுப்பில் மொழிந்து விட்டு.. முன்னே வந்த பிள்ளைகளை தாண்டி.. ஜான்வி முன் குதித்தாள் மணிமேகலை.




"என்னம்மா.. பொண்ணே.. இப்போ தான் என்னவோ நாஙக உன்ன கொடும படுத்தின மாதிரி அழுதுக்கிட்டே ஓடுன.. இப்போ திரும்ப வர்ற.. என்ன எதுவும் வேணுமா.. ஒரு வேல எல்லாரும் கிளம்பி இருப்பாஙக.. சாப்பாடு மீந்து கிடந்தா வாங்கிட்டு போகலாம்னு வந்தியோ.. " மணிமேகலையின் எகத்தாலமான கேள்வியில் உள்ளுக்குள் துடிதுடித்து போனாள் ஜான்வி.




"இதுக்கு தான் நா வரலன்னு சொன்னேன் " என்ற படி கலங்கிய கண்களோடு நிமிர்ந்து முன்னிருந்த இருவரையும் பார்க்க.. "அம்மாஆஆஆஆ.." உச்சஸ்தானியில் கத்தி இருந்தான் ஆர்யன். அவன் சத்தத்தில் உள்ளிருந்த அனைவரும் வெளியே வந்து வந்து விட்டனர்.




"ஹக் " மகனின் குரலில் அதிர்ந்து துள்ளி.. அவன் இருப்பதை கவனித்து அவசரப்பட்டு வாய் விட்டதை நொந்தாலும் விட்டு கொடுக்காமல் "அட ஆமாப்பா ஆர்யா.. உனக்கு தெரியாது.. இவ அம்மா எத்தனை தடவ நம்ம வீட்டுல மீந்து கிடந்தத எடுத்துட்டு போயிருக்கா.. அதான் கேட்டேன்.." என அப்போதும் தன் பேச்சில் விடாமல் இருந்த தாயை முறைத்த படி.. "அவ ஒன்னும் அதுக்கு வரல.. நா தான் கூட்டிட்டு வந்தேன்.. " கூறிட மணிமேகலை வாயில் கை வைக்காத குறை.




"இவன் அழைத்து வந்தானா.. அதற்கு தான் இவளையும் அழைத்து சென்றானா.. ஆனால் ஏன் " என யோசனையோடு விழித்து கொண்டிருக்க.. 



"அவளை எதுக்கும்மா அப்படி அழ வச்சு அனுப்பினீங்க.. அவளும் நம்ம பாப்பா பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வந்த கெஸ்ட் தான.." கேட்டதும் மணி மேகலையின் இதழ்கள் கோணலாய் வளைந்தன.



"இவ கெஸ்ட்டா.. "என வெளிப்படையாய் கேட்டு.  மகனின் பார்வையில் "சரிப்பா.. அப்படியே கெஸ்ட்டா இருந்தா என்ன பண்ணிருக்கணும்.. எல்லார் மாதிரி நம்ம புள்ளைக்கு கிப்ட் கொடுத்தோமோ.. வாழ்த்து சொன்னோமா.. கிளம்புனோமான்னு இருந்துருக்கணும்..அத விட்டு ஏதோ கேசரியாம்.. சாமிக்கு வச்சலாம்.. அத போய் எல்லாருக்கும் குடுத்துருக்கா.. அது பூரா உப்பு..சாப்பிட்ட எல்லாரும் வாந்தி எடுக்காத குறை.. நம்மள நம்பி நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிய நல்ல படியா கவனிக்க வேண்டியது நம்ம கடமையில்லையா.. " ஊசியை நேக்காய் வாழை பழத்தில் ஏற்றினாள்..




ஜான்வி முகம் சுருங்கி போனது.. ஆக உப்பு கூடி போனது தான் பிரச்சனை.. கடவுளுக்கு சமைக்கிறேன் என எச்சில் பாக்காமல் செய்திருந்தாலும் மற்றவர்களுக்கு கொடுக்கும் முன்பு தான் சுய பரிசோதனை செய்திருக்க வேண்டும்.. என காலம் கடந்த ஞானோதயத்தில்.. தன்னால் அன்னை மகன் இருவரும் அடித்து கொள்வதை விரும்பாமல்..



"ஆன்ட்டி.. மன்னிச்சுடுஙக.. தப்பு என் மேல தான்.. நா கிளம்புறேன்.. " என தழுதழுத்த குரலில் மீண்டும் அனைவர் கண்ணுக்கும் கேலி பொருள் ஆக விரும்பாமல் செல்ல போனவளை.." நில்லு " அவனின் அழுத்த குரல் நிறுத்தியது..




"உனக்காக தானே நா பேசிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.."அவன் கோப பேச்சில்.. 



"அதான் தப்பு என் மேல தான்னு சொல்லிட்டேனே.. நா கிளம்புறேன்.. எனக்காக நீங்க ரெண்டு பேரும் சண்டை போட வேண்டாம்.. ப்ளீஸ்.." என கண்கள் குளம் கட்டி அவள் கூறி முடிப்பதற்குள்.. 




"உனக்குன்னு எல்லாம் யாரும் இங்க பேசல.. ஏங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட்டுக்கு ஒரு தவறான பேர்னா துடைக்க வேண்டியது என் கடமை.. அத தான் நா செய்றேன்..  உன் இடத்துல யார் இருந்திருந்தாலும் நா இப்படி தான் நடந்துப்பேன். " சுள்ளேன வந்து விழுந்த அவன் வார்த்தையில்.. "



''இது வரை எனக்காக பேச நிற்கும் ஒரு ஜீவன்" என மனதிற்குள் மொட்டாய் அரும்பி நின்று சந்தோஷித்து கொண்டிருந்த விஷயம் ஒன்றுமில்லாத வெடித்த பலூனாகி போனதில் முகம் கருத்து நின்றாள். இவ்வளவு கூறிய பின் அங்கிருந்து செல்ல முடியாத நிலை.



"எப்பா.. ஆர்யா.. என்னப்பா சொல்ற.. அப்படி என்ன அந்த பொண்ணுக்கு தவறான பேராம் " என வந்திருந்த ஒருவர் கேட்க..




நிமிர்ந்து பார்த்தவன் "சொல்றேன் பெரியப்பா.. "என்றவன் "ரமணி.." குரல் கொடுக்க.. கையில் ஒரு டிபன் பாக்சோடு வெளி வந்தார் வேலைகாரம்மாள்.




"இது நா கொண்டு வந்த டிபன் பாக்ஸ்சாச்சே.." என யோசனையோடு ஜான்வி பார்த்து நிற்க.. அதை தன் கையில் வாங்கி கொண்டவன் திறந்தான்.. உள்ளிருந்த கேசரியை கண்டதும் அனைவர் முகமுன் மீண்டும் அஷ்ட கோணலாகி போனது.




"என்னப்பா.. என்னவோ பண்ண போரன்னு பாத்தா.. இந்த உப்பு கேசரிய எடுத்துட்டு வர சொல்லியிருக்க.. " என ஏதோ காமெடி கண்டதை போல் சிரித்து கொண்டு அந்த பெரியப்பா கேட்க..




"சொல்றேன்.. பெரியப்பா." இதழுக்கும் வலிக்காமல் புன்னகைத்த படி.. அவரை நெருங்கி.. அதிலிருந்து கொஞ்சம் எடுத்து அவர் வாய் முன் நீட்டினான் ஆர்யன்.. விழித்தார் அவர்.




''சாப்பிடுங்க.. "என்பதை போல் அவன் கண் காட்ட.. "ஏன் பா எனக்கு இப்படி ஒரு சோதனை.. ஏற்கனவே எனக்கு சுகர் பாடிடா கண்ணா.. நிறைய உப்பு சேர்க்க கூடாது.. "என மறுத்தவரை.. "அப்போ கேக் மட்டும் 2 க்கு மூணா சாப்பிடலாமா.. பெரியப்பா.." நக்கலடித்து.. எனக்காக ஒரு வாய் சாப்பிடுங்க.. " என ஸ்பூனில் காட்டியதை அவர் வாய்க்குள் திணித்து விட்டிருக்க.. த்து.. த்து.. தூ.. துப்ப முற்பட்டு ஓரமாய் ஓடியவரின் நடை சட்டென நின்று கண்கள் பெரிதாகின.




"இது அந்த கேசரி இல்லை.. அளவான இனிப்பில்..முந்திரியும் பாதாமும் கொழிக்க.. சரியான பாதத்தில் கிண்டி எடுத்து வந்திருந்த அல்வா.. அமிர்தம்.. ச்சி.. கேசரி.." கண் மூடி அவர் நின்ற விதத்தில் அங்கிருக்கும் அனைவருக்கும் ஏதோ புரிவதாய்.




ஜானவியும் கூட ஓடியவர் திடீரென மெய் மறந்து நிற்பதை கவனித்தாள்.. துப்பவில்லையே.. ஏன்.. அவளிடம் கேள்வி.



"என்ன பெரியப்பா.. எப்படி இருக்கு.."காதருகில் கேட்ட ஆர்யனின் குரலில் "ம்ம்ம்ம்.. ரொம்ப சூப்பரா இருக்குப்பா.. "சொட்டை போட்டு கண்களை திறந்தார் பெரியவர்.




நம்ப முடியாமல் ஆளுக்கொரு கையாய் வைக்க.. அதிலிருந்த கொஞ்சமும் அடுத்த இரண்டு நொடிகளில் தீர்ந்து போனது.




"எம்பா.. ஆர்யா.. எல்லாரும் கேசரி நல்லா இல்லனு சொன்னதால மேனக்கெட்டு எங்களுக்காக போய் வாங்கிட்டு வந்தியாக்கும்... ஆனாலும் நல்ல டேஸ்ட்டுப்பா.. எந்த கடைல வாங்குன.. " என ஆளாளுக்கு கேட்க ஆரம்பிக்க.. "அவர்கள் கேள்வியில் ஜான்வி தான் விழித்து கொண்டு நின்றாள்.



மிதா புன் சிரிப்போடு அண்ணன் அடுத்து கொடுக்க போகும் குட்டுக்காக ஆர்வமாய் அவன் முகம் பார்த்து கொண்டிருக்க.. இங்க தான்.. என கை நீட்டினான் அவன்.




நேராய் நின்றிருந்தாள் ஜான்வி.




"அட இவ உப்பு கேசரி போட்ட பொண்ணுப்பா.. இவளால நா கேசரியவே வெறுத்துருந்தேன்னா பாத்துக்கோயேன்.. நல்லவேளை நீ இதை குடுத்து சரி பண்ணிட்ட..!" சிரித்த படி அவர் கூற.




''அய்யோ.. பெரியப்பா.. இந்த பொண்ணு செஞ்ச கேசரி தான் இது.. இவ கொண்டு வந்ததும் இது தான்.. " கூறியதும் நம்ப முடியமல் அனைவரும் விழித்தனர்.



"இல்லையேப்பா.. அந்த பொண்ணு செஞ்சது.. உப்பால்ல இருந்துச்சு.. "அவர் இழுக்க.. அதுக்கு இது தான் காரணம்.. என போனில் ஓட விட்ட வீடியோவை ஒட்டு மொத்த கூட்டமும் பார்த்து நின்றது..



ஹாலில் மாட்டி இருந்த கேமராவில்.. ரமணி அவள் கொடுத்த கேசரியை எடுத்து வருவதும்.. திடீரென யாரோ அழைத்து அவர் சென்றதும்.. தொடர்ந்து முக்காடு அணிந்த ஒருவள் அதில் ஒரு டப்பா உப்பை கொட்டி கிளறுவதும் தெளிவான காட்சியாய் இருக்க.. அனைவரிடமும் அதிர்ச்சி.. யாரோ செய்த தவறுக்காக இந்த சிறு பெண்ணை வாய்க்கு வந்த படி ஏசி விட்டோமே என.. 



தான் வசமாய் மாட்டி கொண்டதில் அனைவர் பார்வையும் தன் பக்கம் திரும்புவதற்குள் ஓடி விட எண்ணி நகர்ந்த முக்காட்டு பெண்ணை வளைத்து நின்றிருந்தனர் அனைவரும்.




"எம்மா.. யாரு நீ.. எதுக்கிய இப்படி பண்ண.." நேரடியன கேள்வியில்.. விதிர்த்து போனாள்..



விழிகள் மணிமேகலையிடம் படிய.. முந்தி கொண்டு வந்தாள் அவள்.




"அய்யோ அவங்க நம்ம பக்கத்து வீடு தான்.. ரொம்ப நல்லவங்க.."



"நல்லவங்க பண்ற வேலையா இது.. " கூட்டத்திலிருந்து குரல்.



"ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க. அவங்களுக்காக நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்.. மன்னிச்சுடுங்க.. " என கை கூப்பி நின்றதில்.. "அம்மா.. அவங்களுக்காக நீங்க ஏன் மன்னிப்பு கேக்கணும்.. விடுஙக ம்மா.. ஏன் இப்படி பண்ணாங்கனு கேக்கலாம்.. " என ஆர்யன் முந்தி கொண்டு சென்ற வேளையில்.. அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்ப்பா.. ஏற்கனவே வந்த எல்லாருக்கும் நம்மளால சிரமம்.. இதுல எதுக்கு இந்த பிரச்சனைய ஊதி பெருசாக்கிட்டு.. விடுப்பா.. விடு.. விடு.." என மணி அந்த பெண்ணிடம் கண் காட்ட.. ஓடி மறைந்து போனாள் அவள்.




"ஏன் இப்படி எல்லாம் அல்பமா நடந்துகிறாங்களோ.. " தங்களுக்குள் புலம்பிய படி திரும்பிய அனைவர் பார்வையும் அழுது வீங்கி நின்ற ஜான்வியிடம் பதிந்தது..





"எங்கள மன்னிச்சுடும்மா.. தேவையில்லாம என்னென்னவோ பேசி.. உன்ன கஷ்டப்படுத்திட்டோம்.. உண்மையா சொல்றேன்.. உன் கேசரி ரொம்ப நல்லாருக்கும்மா.. இனி எங்களுக்கு கேசரி வேணும்னா நாங்களே உனக்கு போன் போட்டு கேப்போம்.. இதெல்லாம் மனசுல வச்சிக்காம இந்த பெரியப்பா.. பெரியம்மாவுக்கு நீயே செஞ்சு தரணும்.." முறை போட்டு கூறிய அவர்களின் அன்பு கட்டளையில் இப்போதும் அவள் கண்கள் கலங்கியது.. மகிழ்ச்சியில்..




அனைவரும் அவள் கேசயை புகழ்ந்த படி உள்ளே சென்று விட.. தன் திட்டம் மண்ணை கவ்வியதில் அவளை பார்வையால் பொசுக்கி எரிச்சலோடு வேகமாய் உள்ளே சென்று விட்டாள் மணிமேகலையும்.



"பாரு.. இதுக்கு போய் எவ்வளவு அழுக.." தோழியை கட்டி கொண்டாள் மிதா.



"மிதாஆஆஆ.." உள்ளிருந்து கேட்ட குரலில்.. "இதோ வர்றேன்.. " என திரும்பியவள் '' இப்போ வந்துடறேன்.. " உள்ளே சென்று விட்டாள்.




மனம் மகிழ்ச்சியில் தேங்க.. பெரியப்பா.. பெரியம்மா.. என உரிமையோடு பெரியவர் கூறியது மனதில் நிறைந்து நிற்க.. மகிழ்ச்சியோடு செல்ல போனவளை..



"ஹலோ மேடம்.." என அழைத்த படி பேண்ட் பாக்கட்டுக்குள் கை விட்டு வழி மறைத்தான் ஆர்யன்..




அவன் தனக்கு செய்த உதவியில் அவள் கண்கள் மிண்ணினாலும் அப்போது அவன் கூறிய வார்த்தையில் சட்டென முகம் சுருக்கினாள்.



" தேங்க்ஸ் சொல்லுவன்னு பாத்தா.. என்ன பாத்ததும் இப்படி உம்முனு ஆகுற.." தலை சாய்த்து அவள் முகம் பார்த்து குறும்பு குரலில் கேட்டான்.



அவன் குரலில் உள்ளுக்குள் டோப்பமைன் சுரப்பின் வருகை தெரிந்தாலும் அதை உள்ளுக்குள்ளேயே மறைத்து இன்னும் முகம் சுருக்கினாள்.




"ஓய் என்ன.. எதுக்கு இப்போ என்ன முறைக்குற.. உனக்கு இப்ப கிடைச்சா அத்தனை பாராட்டுக்கும் நான்தான் காரணம்" சட்டையை தூக்கி விடாத குறையாய் அவன் கூறியதில்..




" அப்படி ஒன்னும் நான் உங்ககிட்ட பாராட்ட கேட்கல.. " என்றாள் மூக்கு நுனி சிவக்க..



"அப்பா.. ஜானுக்கு இவ்வளவு கோபம் வருமா... " என பொய்யாய் அதிசயித்து வாயில் கை வைத்தவன்.. " ஆனா ஏன் இவ்வளவு கோபம்னு தான் புரியல.. "




"புரியலயா.. என் இடத்தில் யார் இருந்தாலும் இப்படி தான் நடந்துப்பேன்னு சொன்னீங்களே.." உரிமையாய் கேட்டாள்.




"ஆமா.. "தோள் குலுக்கினான் அவன்.



மீண்டும் மூக்கு நுனி விடைக்க செல்லப் போனவளை.. கரம் பற்றியதில்.. கையை விடுஙக.. என உதறினாள். சுற்றி அவள் முன் வந்து நின்றான்..




"இப்போ என்ன உனக்காக தான் அப்படி நடந்துக்கிட்டேன்னு சொல்லனுமா.. " கண்கள் சுருங்கி குறும்பு குரலில் கேட்க.. ஜிவ்வேனா மீண்டும் உள்ளுக்குள் சாரல் அவன் குரலால்.




"இது தான் பிரச்சனையே.. " என யோசித்துக் கொண்டிருந்த வேளையிலேயே.. " ஆமா... உனக்காகத்தான் அப்படி பேசினேன்.. உனக்காக மட்டும் தான் அப்படி பேசினேன்.. போதுமா.. என ஒற்றை கண்ணடித்த படி கூறி.. அவன் உள்ளே சென்று விட.. " இப்போது என்ன செய்தார்.. " வெளி செல்லும் பாதையை மறந்து ஸ்தம்பித்து போனாள்.. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...