டப்ப்ப்ப்.. என வெகு அருகில் ஓங்கி கேட்ட சத்தத்தில் துள்ளி விழுந்து நிமிர்ந்தாள் ஜான்வி.. எதிரில் அவளையே பொசுக்கிய படி நின்றிருந்தான் ஆர்யான்.
ஆர்யன்.. இவனா.. இவன் எப்போது இங்கே வந்தான்.. அவள் விழித்து கொண்டிருந்ததில் நிச்சயம் அவன் கடுப்பாகி இருக்க வேண்டும்.
டப்.. டப்.. மீண்டும் முன்னிருந்த மேசையை தட்ட.. “அடியே.. அவன் கிட்ட என்ன தான்னு கேட்டு தொலையேண்டி.. “என பரிதாபமாய் கத்தி கீழே விழுந்தது அவள் கொண்டு வந்திருந்த பைல்.
தன் பைலை கீழே விழ வைத்தவனை முறைத்து கொண்டே தரையில் மண்டியிட்டு எடுத்து கைக்குள் அடக்கி கொண்டாள்.
“இப்போ தான் வெளிய அவ்வளவு பத்தி பத்தியா வேல நேரம் எவ்வளவு முக்கியம்னு டயலாக் அடிச்சுட்டு வந்தேன்.. அதுக்குள்ள இப்போ வெட்டிஆ என் ரூமுக்குள்ளேயே வந்து நின்னு கனவு கண்டுகிட்டு இருக்க.. “கோபம் துளிர்த்து வந்தது அவன் குரல்.
“ஹலோ சார்..” ஏற்கனவே அவன் மீது கோபமாகியவள் இப்போது அவன் கூறியதில் அவள் குரலும் உயர்ந்தது.. என்னவோ அவன் தன்னை வேலையே பார்க்கவில்லை போல் கூறுவதில்.. “நா ஒன்னும் வேணும்னு உங்க ரூமுக்கு வரல.. நீஙக தான் கூப்பிட்டிங்கனு ஆபிஸ் பாய் சொல்லிட்டு போனான்.. அதான் நீஙக கேட்ட பைலை எடுத்துட்டு வந்தேன்..” மாறாத காரத்தோடு கூறினாள் ஜான்வி.
அவள் கோபம் கண்டு ஏளனமாய் நெளிந்தன அவன் புருவங்கள்.. “ஒஹ்ஹஹ் ரியலி..” என்றான் இதழ் பிதுக்கி.
‘’அப்படி நா கூப்பிப்பிட்டதுக்காகவே என் கேபின் வரைக்கும் வந்திருந்தாலும் நா இல்லனு பாத்ததும் உங்க வேலைய பாக்க போயிருக்காலாமே.. வேல நேரத்தோட முக்கியத்துவம் தெரிஞ்ச யாரும்.. இப்படி நின்னுகிட்டு கனவு காண மாட்டாங்க.. “சுள்ளேன வந்து விழுந்த அவன் குரலில்.. பதில் கூற முடியவில்லை அவளால்.. ஆனால் அவன் தன்னை வம்பிழுபதற்காக தான் அழைத்திருக்கிறான் என நன்றாகவே புரிந்தது அவளுக்கு.
தான் கையில் வைத்திருந்த பைலை அவன் முகம் முன்பாய் நீட்டினாள். “இதோ நீங்க கேட்ட பைல்..”என கொடுத்து விட்டு செல்ல போக.. சட்டென அவன் சொடுகிட்ட சத்தத்தில் நின்றன அவள் கால்கள்.
திரும்பினாள்.. என்ன இது.. என அரைகுறையாய் நின்ற அவள் வரை படத்தை காட்டி அவன் கேட்க.. நீங்க கொடுத்த ஒருமணி நேரத்தில் இது தான் வரைய முடியும் சார்.. “அவனுக்கு சமமாய் கூறி விட்டு நகர்ந்தவளை இழுத்து பிடித்து நிறுத்தினான் ஆர்யன்.
அவன் தொடுகையில் ஒரு கணம் சிலிர்த்து சிதறி நிற்க.. சடுதியில் அவளை நெருங்கி இருந்தவனின் வாசம் அவள் நாசியோடு நெஞ்சு குழியில் வேகமாய் இறங்கியது.. கிட்டத்தட்ட இரு தேகமும் ஒட்டும் அளவிற்கு நெருக்கம்.. விழிகள் கோலிகுண்டுகளாகி போயின.
ஏனோ அது வரை அவனோடு கொண்டிருந்த பேச்சும் சண்டையும் மறந்து போக.. “என் ஆரி.. என் ஆரி..’’ அவள் மனம் தடதடத்தது.
ஆழ்ந்த கண்களோடு அவள் விழி வழி செய்திகளை அறிந்து கொண்டிருந்தவனின் விழிகளில் திடீரென தீ ஜூவாலை. “பரவாயில்ல.. நல்லாவே உருகுற டி..” என விட சட்டென சுயம் கண்டு நிற்க முடியாமல் தடுமாறி பக்கத்திலிருந்த சேரை பிடித்து சமநிலைத்தாள்.
“என்னமா நடிக்கிற.. அப்பா உண்மையாவே காதலிச்சவங்களால கூட இவ்வளவு தத்ரூபமா நடிக்க முடியுமான்னு தெரியல.. ஏதோ கால காலம் என்கூட வாழ்ந்த மாதிரியும்.. ரொம்ப நாளுக்கழிச்சு நா உன்ன ஆசையோட தொடுற மாதிரியும்.. ம்ம்ம்.. ரொம்பவே நல்லா குழைய்யிற.. “அவன் வார்த்தைகளில் உள்ளுக்குள் உடைந்து போனாள்.
“ச்சி.. இப்படி தானே அன்னைக்கு உன்ன பிடிச்சேன்னு அத்தனை பேர் முன்னாடி சொல்லி என் மானத்த வாங்குன.. எப்படி.. எப்படி.. முதல்ல உன்ன இப்படி பிடிச்சேன்.. கட்டி புடிச்சேன்.. முத்தம் குடுத்தேன்.. அப்புறம் வயித்தில பிள்ளையும் கொடுத்தேன்.. ச்சி.. எப்படி உன்னால அப்படி சொல்ல முடிஞ்சுது.. அசிங்கமா இல்லை.. “அவன் முகம் அருவருப்பின் உச்சக்கட்டத்தில் சுருங்கியது.
“உனக்கு நா வேணும்.. என் பணம் வேணும்.. காலம் முழுக்க என் பணத்துல ஓசில உக்காந்து மகாராணியா வாழனும்.. அதுக்கு உன் கேரக்டரயே ஆசாசிநேட் பண்ணுவியா.. இவ்வளவு கேவலமானவளா நீ..!” அவன் வார்த்தைகள் அவளுக்கு ஆயிரமாயிரம் தீ கங்குகளை வாரி எரித்தன.
பேச அத்தனை விஷயஙகளும் வார்த்தைகளும் முட்டு கொண்டு வந்து நின்ற போதிலும் இப்படி பேசுபவனிடம் மனம் விட்டு பேச முடியாமல் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடுத்தது.
“ ஆரி.. நா.. “ என தன்னை சமன் படுத்தி அவள் நடந்ததை கூற முற்படுகையில்.. “ஆரியா.. ச்சி.. வாய மூடு..”உச்சஸ் தானத்தில் கத்தி இருந்தான் அவன்.. அவன் கண்கள் இரண்டும் கோவை பழமாய் சிவந்து போனது.
“என்ன அப்படி கூப்பிட வே* உனக்கு என்ன டி தகுதி இருக்கு..”அவன் உச்ச கட்ட தவறான வார்த்தையில் சட்டென.. ‘’ வாய மூடுங்க.. “ தன்னை மறந்து கத்தி இருந்தாள் ஜானவி. கண்களிலிருந்து பொலபொலவென நீர் உகுந்தது.
“என்ன விட்டா நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறிஙக.. என்ன சொன்னிஙக..வேசியா.. வேசியா நா.. “கேட்டவள் கண்களை அழுந்த மூடி திறந்தாள்.
“வேல நேரம் முக்கியம்.. முக்கியம்னு சொல்லிட்டு பண்ற லட்சணம் இது தானா.. “
“நீஙக உங்க பிரண்ட் கம்பெனில பெரிய பொசிஷனுக்கு வந்திருக்கலாம்.. இங்க இருக்குற எல்லாருக்கும் நீங்க பெரிய ஆளாகவும் இருக்கலாம்.. ஆனா அதுக்காக வேலைய காரணமா வச்சு என்கிட்ட இப்படி பேசுற உரிமைய யாருங்க உங்களுக்கு குடுத்தா..”
“சாரி.. நானும் கொஞ்சம் உரிமை எடுத்து பழைய படி உங்கள அப்படி கூப்பிட்டுட்டேன்.. மன்னிச்சுக்கோங்க.. இனி நா எப்போவும் எதுக்காகவும் உங்ககிட்ட இதை பத்தி பேச மாட்டேன்.. மாட்டேன்.. போதுமா.. “ தன்னை மறந்து அவள் கத்தியிருந்தாள்.
“நா இங்க வந்ததுல வேல பாக்க மட்டும் தான்.. நா வேல பாத்தாதான் எனக்கு கைக்கு தேறும்.. அதுக்காக மட்டும் தான் நா வேலைக்கு வரேன்.. இப்படி அண்ணாடங்காட்சியா இருக்கிற எனக்கு உங்கள மாதிரி பெரிய ஆளுங்க கூட நின்னு பேசவோ எதற்கு எதிரா நின்னு சண்டையிடவோ நேரமும் இல்ல தைரியமும் இல்ல... மன்னிக்கனும்.. அது மாதிரி இனி நீங்களும் என்கிட்ட வேலைய பத்தி மட்டும் பேசுனா நல்லாருக்கும்.. “ கூறியவள் அவன் கையில் வைத்திருந்த தன் பைலை விடுக்கென வாங்கினாள்.
“எதையுயும் நடு ஆத்துல விட்டுட்டு எனக்கென்னனு போற குணம் எனக்கு கிடையாது.. என்ன வரைய சொல்லி இதை குடுத்துருக்கீங்க.. என்னால முடிஞ்சளவு சீக்கிரமா முடிஞ்சு இந்த பைல் உங்க டேபிலுக்கு வரும்.. “ வேகமாய் கூறியவள் தான் கொண்டு வந்திருந்த பைலோடு வெளி சென்றிருக்க.. அவள் பேச்சில் சற்று துணுக்கம் கொண்டவனாய்.. அப்படியே நின்றவனின் வெறித்த பார்வை அவளை தொடர்ந்தது.
“என்னவோ தப்பு எதுவும் செய்யாதவ மாதிரி என்னமா பேசுறா.. எல்லாம் நடிப்பு.. “ மனம் கூற.
“ஆனாலும் அப்படி ஒரு வார்த்தைய நீ விட்டுருக்க கூடாது ஆர்யா.. என்ன இருந்தாலும் நீ சொன்னது தப்பு டா..”அவனுக்கே உரிய குணமும் கூற தான் செய்தது.
“நா ஒன்னும் இல்லாதத சொல்லலையே.. “கூறி அதை உள்ளேயே அடக்கிய படி தன் அடுத்த வேலையை ஆரம்பித்தான்.
. தன் இடத்தில் வந்து அமர்ந்த ஜான்விக்கு இதுவரை இல்லாத உந்துதலும் ஆங்காரமும் நெஞ்சுக்குள்.
“என்னை பார்த்து என்னவொரு வார்த்தை கூறி விட்டான்.. ‘’நினைக்க நினைக்க அழுகை முட்டி கொண்டு வந்தது.
“அழாதே.. அழாதே.. ஜான்வி.. நீ அழகுறது உன்ன அழ வச்சவங்களுக்கு நீ குடுக்குற வெற்றி.. “ ஆழ்ந்த மூச்சிழுத்து தன்னை சமன் செய்து வேலைக்குள் மூழ்கி போனாள்.
“ஜான்வி.. ஜான்வி..” திவியின் குரல் கேட்கும் வரை அவள் அந்த உலகில் இல்லை.
அவள் உலுக்கியதில்.. ஹான் திவி.. விழித்து நிமிர்ந்தாள் ஜான்வி..
“என்னடி.. அந்த சாரு திட்டுனதுல உலகத்தையே மறந்துட்டியா.. வேலைல மூழ்கி போய்ட்டியா.. “கேட்டவளிடம் “ப்ச்.. டிஸ்டர்ப் பண்ணாத திவி.. இதை முடிச்சுடுறேன்.. “கூறியவளை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் திவி.
“அடியே.. பயங்கரமான கடமை உணர்ச்சி தான்.. போதும் போதும்.. இப்போ லன்ச் டைம்.. வா சாப்பிடலாம்.. ‘’கூற அப்போது தான் அதிர்ந்து மணியை பார்க்கிறாள்.
ஆம் மணி ஒன்றை கடந்து கொண்டிருக்கிறது.. எப்போதும் இணைந்து அமர்ந்து உண்பது தான் வழக்கம் என்பதால் இதோ திவி அழைத்து கொண்டிருக்கிறாள்.
ஆனால் வேலை.. மீண்டும் அவன் தலை மேல் ஏற வாய்ப்பு கொடுத்து விட கூடாது என்பதில் உறுதியாய்.. திவி.. நீ சாப்பிட்டிகிட்டே இரு.. நா வந்துடறேன்.. என்ற தோழியை முறைத்தாள் திவி.
"வேல தானே.. அதெல்லாம் வந்து செய்யலாம்.. இப்போ வா சாப்பிட.. "என வழுக்காட்டாயமாய் அவள் கையிலிருந்த பைலை வாங்கி வைத்து விட்டு அவளோடு சேர்ந்து நடந்தாள்.
அவன் அறை தாண்டி கை கழுவும் இடம்.. அவன் அறை தாண்டி செல்லும் போதும் ஏனோ அவள் கண்கள் மட்டும் தானாய் அவன் பக்கம் திரும்பியது.. சாப்பிடாமல் லேப் டாப்பில் புருவம் சுழிய ஏதோ பார்த்த படி வேலை செய்து கொண்டிருந்தான்.
கல்லூரியில் தான் சேர்ந்த புதிதில் தோழியை பார்க்க செல்கிறேன்.. என அவள் செல்லும் போதும் கூட இப்படி தான் மடி கணினியை எடுத்து வைத்து கொண்டு ஏதாவது தட்டியபடி அமர்ந்திருப்பான் .. பெரிய விஷயமாய் கண்டு வாயை பிளப்பாள் ஜான்வி.
அவனருகில் தயக்கதோடு எட்டி பார்த்த படி.. "இது என்ன.. இது என்ன.."என கை நீட்டி கேட்கும் போதெல்லாம்.. பொறுமையாய் அது என்னவென சொல்லி கொடுப்பானே.
"ஹ்ம்ம்.. இவ்வளவு நேரம் நா கேட்டப்போ அப்படி திட்டுனான்.. இவளுக்குனா மட்டும் ஒரு வார்த்தை திட்டாம எப்படி சொல்லறான் பாரு.."என மிதா நொடித்து கொள்ளும் போதெல்லாம் அவளுக்கு சிரிப்பு தான் வரும்..
"நீயும் நானும் அவருக்கு ஒன்றில்லையே டி.."என.
ஆனால் இப்போது புரிகிறது.. "அவனுக்கு தான் யாரோ.. "அதனால் தான் திட்டவும் முடியாமல் எழுந்து செல்லவும் முடியாமல் அவன் பதில் கூறி இருக்க வேண்டும்.
வேண்டாத ஞாபகமாய் ஆரம்பித்து கடைசியாய் கோடு போட்டு மனம் கொடுத்த சொல்லியூஷனில் இன்னும் அடிபட்டு போனாள்..
"ச்சே.. இதுக்கு தான் பழசை பத்தி யோசுக்கவே கூடாது.."என தலையை உலுக்கி கொண்டாலும் சாப்பிடாமல் இருக்கிறானே.. என ஒரு பக்கம் மனம் பிராண்டியது...
"அவனுக்கு வேண்டுமானால் அவள் யாரோ.. ஆனால் அவளுக்கு.. உயிருக்குயிராய் காதலித்தவனே..."
திவியோடு நடந்தவள் டிபன் பாக்கசை எடுத்த படி தன்னிடத்தில் அமர்ந்தாள்.. கொண்டு வந்த உப்புமா கொஞ்சம் எடுத்துட்டு போய் குடுக்கலாமா.. "கேள்வி கேட்டது அவள் மனம்.
"கொடுத்ததும் வாங்கி சாப்பிட்டுடுவானா.. கஷ்டம்.. அப்போது பேச்சை போல் இப்பொழுது கொண்டு செல்லும் உணவை முகத்தில் எரிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.."அமைதியாய் அமர்ந்து விட்டாள்.
வேலையை விட்டு வந்து அவள் தனக்காக அமர்ந்த போதிலும் ஏதோ யோசனையில் சாப்பாடை அலைந்து மட்டுமே கொண்டிருப்பதில்.. "ஜான்வி.. " அவள் கரம் பற்றி தட்டினாள் திவி.
"ஹான்.." என விழித்தவளிடம்.. "என்ன டி சாப்பிடாம இருக்க.. வேல ஞாபகமா.. முதல்ல சாப்பிடு.. அப்புறமா வேலைய பத்தி யோசிக்கலாம்.. "என்றாள் சிரித்த படி.
"ம்.." என்றாலும்.. இன்னும் அவள் ஒரு வாய் வைப்பதும்.. அவன் அறை காண்பதும் யோசனையாகவும் ஆக.. திடீரென "ஜான்வி.. "அருகில் ஒருவனின் குரல்.
"சார்.." அவளுக்கு பதில் அருகில் இருந்தவள் அழைக்க.. சம்பந்தப்பட்டவளோ தன் கள்ள பார்வையை கண்டு விட்டு வந்துள்ளானோ.. தலை கவிழ்ந்த படி விழித்து கொண்டிருந்தாள்.
"டுவோ கிளாக்.. ஷார்ப்பா எனக்கு அந்த ட்ராயின் வேணும்.. சீக்கிரமா சாப்பிட்டு அத முடுச்சி குடுங்க.." என சற்றும் பிசிறு இல்லாத தன் கம்பீரக் குரலில் கூறியவன் தன் கார் சாவியை சுழற்றிய படி சென்று விட.. "அய்யே.. என்ன இந்த மனுஷன் இப்படி இருக்கு.. திஙக கூட விட மாட்டேங்குதே.."என திவி புலம்பலோடு கூறி கொண்டிருந்த வேளையிலேயே தன் டிபன் பாக்சை கோபத்தில் காலி செய்திருந்தாள் ஜான்வி.
"அடியே.." ஆச்சர்யமாய் பார்த்தாள் திவி.. "இவ்வளவு நேரம் நா அவ்வளவு உளுக்கு உளுக்குனே.. அலைய வுட்டுக்கிட்டு இருந்த.. இப்போ அந்த மனுஷன் ஒரு வார்த்தை சொன்னதும் அதுக்குள்ள சாப்பிட்டு முடிச்சுட்ட.. ஹப்பா.. என்ன சின்சியாரிட்டி.. என இரு விழிகளையும் விரித்து கொண்டு விழிக்க.. அவளின் விழிகளோ கோபத்தில் பளபளத்து கொண்டிருந்தது..
தன் கார் அருகே சென்ற ஆர்யனின் கூர் விழிகளின் கத்தி நேராய் உள்ளே இருந்தவளிடம் பாயிந்தது.. அவள் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்ததை கண்டு ஒரு வித குறு இதழ் சிரிப்போடு தன் காரில் ஏறி பறந்திருந்தான் ஆர்யன்.
கருத்துகள்
கருத்துரையிடுக