முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 14

 அவன் சொன்னது போல் ரெண்டு மணிக்குள்ளகவே வேலையை முடித்திருந்தாள் ஜான்வி. முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை.. உன்னால் முடியாது என்பது போல் மெத்தனமாய் கூறி அவன் சென்ற தொணியில்.. என்னால் முடியும்.. என காட்டுவதற்காகவே விரல்களில் நுனுக்கத்தை பிடித்து அவன் சொன்ன நேரத்திற்குள் நயமாக அந்த படத்தை வரைந்து முடித்திருந்தாள் ஜான்வி.


எடுத்து பார்க்க அத்தனை திருப்தி தோன்றியது.. இவ்வளவு கம்மியான நேரத்துலயே இவ்வளவு நல்லா வரைஞ்சுட்டியே ஜான்வி.. " தனக்கென உற்சாகமாய் தோள் தட்டி கூறி கொண்டாள். வாழ்வில் தமக்கென யாரும் இல்லாத போது.. தட்டி கொடுக்க முன் வராத போது தனக்கு தானே தட்டி கொடுத்து முன்னேறுவதும் ஒரு கட்ட பருவநிலையின் உச்சம் தான்.. அதாவது மெச்சுரிட்டி..




"இப்போது அவன் அறைக்கு செல்ல வேணுமா.. அய்யோ.. அவன் முகம் பார்க்க வேண்டுமே.." அவனை நினைக்கும் போதே மனம் பிராண்டியது.



''இந்த முகத்தை பாக்க தானே இத்தன நாள் தவம் கிடந்த.. அப்படிபட்ட முகம் இப்போ கண் முன்னாடி இருக்கிறப்போ பாக்க யோசனையா.. கரும்பு தின்ன கூலியா.." நினைப்பு ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க கண்களோ அவன் அறையை பார்ப்பதும் மீளுவதுமாய் இருந்தன.



"அவனை பாக்கணும்னு நெனச்சேன் தான்.. ஆனா அதெல்லாம் அப்போ.."



"இப்போ மட்டும்.. எதுக்கு இந்த வீண் வெட்டி பேச்சு..இவ்வளவு நாள் உருகி உருகி தவம் கிடந்தவ ஒரே நாள்ல மாறிட்டேன்னு சொன்னா ஆச்சர்யமா இருக்கு.."மனதின் உந்தலில் அவள் கால்கள் எழுந்தன.




''நான் மாறல.. அவன் அப்படி பேசி மாற வச்சுட்டான்.. அது சரி.. நா என்ன அவன மாப்பிள்ளை பாக்கவா போரேன்.. அதோட அவன் பேசுன பேச்சுக்கு நீ குடுத்த வேலைய எப்படி நேரத்துக்கு முடிச்சேன்னு பாதிய்யானு.. இந்த பைலை குடுத்துட்டு சாரி சாரி.. முகத்துக்கு நேர நீட்டி குடுத்துட்டு வர போறே.. அதுக்கு ஏன் இவ்வளவு யோசனை.." பைலை கையில் எடுக்க..



"மேடம்.."அருகில் வந்து நின்றான் ஆபிஸ் பாய்.




வந்து விட்டானா.. விஷயம் புரிந்து விட்டது.."மேடம் சார் பைல் கேட்டார்.."அவன் கை நீட்ட தன் கையில் வைத்திருந்ததை அவன் கைகளில் கொடுத்து விட்டு அங்கேயே அமர்ந்து விட்டாள்.


''இதுக்கு ஏன் அப்செட் ஆகிற.. ஒருவேள அவனை பாக்க முடியலன்னா..?"கேட்டது மனம்.



"ச்சி.. ச்சி.. அப்படி எல்லாம் இல்ல.. நேரா போய் முகத்துல அரைஞ்ச மாதிரி கொடுக்க முடியலன்னு தான் பீல் பன்றேன்.. " தன் மனதில் படிய வைத்து விடும் நோக்கொடு வெளிப்படையாகவே வாய் திறந்து கூறி கொண்டாள். 




உன்னிப்பாக வரைந்த கை வெடுக்வெடுகென வலித்து கொண்டிருந்தது.. கட்டை விரலுக்கு கீழாய் நீவி நெட்டை எடுத்தாள்.



மனம் என்ன நினைக்கிறது.. என புரியவில்லை.. 


தன்னை அவன் முழு முற்றாய் தவிர்கிறான்.. அதான் இப்படி ஆபிஸ் பாயின் தலையீடு..  ஆனால் எப்படி என்னை இந்த அளவுக்கு அவனால் வெறுக்க முடிந்தது.. காதலை என்றும் வாய் திறந்து கூறியதில்லை எனினும்.. ஒவ்வொரு நாளும் னால் ஒரு வண்ணமும் பொழுதோறு மேனியுமாய் கண்களால் காதல் கவி வாசித்திருக்கின்றனரே.. அதை மறக்க முடியுமா.. இல்லை மறுக்க தான் முடியுமா..




பெருமூச்சு விட்டு சிஸ்டமை வெறித்தவளை மேடம்.. மேடம்.. இரண்டாம் முறையாய் அழைத்த படி நின்றான் ஆபிஸ் பாய்..



வந்த முதல் நாளிலேயே வேலை பார்க்கும் அனைவரையும் விரல் நுனியில் ஆர்யன் சுத்த விட்டு கொண்டிருப்பதால்..ஆபிஸ் பாய் இப்படி அடிக்கடி அவள் முன் வந்து நின்று மேடம்.. மேடம்.. என அழைப்பதை யாரும் அதிகமாய் கவனிக்க வாய்ப்பு கிட்டி இருக்கவில்லை.. இல்லை இந்நேரம் நிச்சயம் அவர்கள் வாய்க்குள் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பாள் ஜான்வி..




திவி பார்த்தாலும் வேலை நேரத்தில் சிறு பேச்சு வைத்தாலும் அவனுக்கு பிடிப்பதில்லை என கண்டு.. எங்கே தானே வழிய சென்று பேசினாலும் அவளுக்கு திட்டு விழுமோ.. என நடப்பதை மட்டும் கவனித்த படி தன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.




"இப்போ என்ன.." வந்தவனை சோர்வாய் பார்த்த படி கேட்டாள் ஜான்வி. சங்கடமாய் நெளிந்தான் அவன். அவனும் எத்தனை முறை தான் அவளிடம் வேலை கூறுவான்..




" சார்.. இதை முடிச்சு குடுக்க சொன்னாரு.. மேடம்.. " என பவ்வியமாய் தான் கொண்டு வந்த பைலை அவள் கையில் கொடுக்க அதற்குள் அழைப்பு ஆர்யனிடம் இருந்து.. "இதோ வரேன் சார்.." ஓடி போனான் அவன்.





"இப்போ தானே கொடுத்து விட்டேன்.. அதுக்குள்ள செக் பண்ணி முடிச்சுட்டானா" என அவன் கொடுத்த பைலை விரித்து பார்க்க.. வெள்ளை காகிதம் மட்டுமே அதில்.. அய்யோ எங்க போச்சு ட்ராயின்.. திருப்பி பார்த்த போது தான் இது வேறு என புரிந்தது..  கண்கள் விக்கித்து நின்று விட்டன.




" இன்னும் அந்த வரை படத்தின் வேலையைவே முழுதாய் முடிக்கவில்லை.. அதற்குள் இன்னொன்றா.. " வரைந்த கரங்கள் வெடுவேடுக்கென தன் வலியை காட்டி கொண்டிர்ந்தன.



இங்கு பொருத்த வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை பிரித்து கொடுக்கப்படும்.. கொடுத்த வேலையை வரைபடத்தில் இருந்து கடைசியாய் சிஸ்டமிள் ஏற்றி ஃபைல் எக்ஸ்ப்ளோர் வரை முடிப்பது அவர்களாக தான் இருக்கும்.. அவள் வேளைக்கு சேர்ந்த நாள் முதல் இது தான் பாணி.. ஆனால் இப்போது..?



"பேசாம குடுத்த வேலைய மட்டும் பாக்கலாம் " கூறிய மனதிடம்.. " இடையிலேயே அதையும் பாருன்னு வந்து கொடுத்தான்னா என்ன பண்ண முடியும்.. அதுலயும் என்ன வம்பு இழுக்கிறதுக்குன்னே கண்டிப்பா கொடுப்பான்.. முதலயே போய் அந்த வேலையை ஃபுல்லா முடிச்சிட்டு இதை பண்றேன்னு சொல்லிடலாம்.. "என சின்சியர்காரியாய் முடிவோடு எழுந்தவள் சென்று அவன் அறை கதவை தட்டினாள்.




"கமின்.."உள்ளிருந்து அவன் குரல்.. உள்ளே செல்ல ஆபிஸ் பாய் அங்கு காணவில்லை.. வேறு ஏதும் வேலை கொடுத்து அனுப்பி இருப்பான்.. எண்ணி கொண்ட படி.. பார்வையை அவன் மீது சாய்க்க..




தன் லேப்டாப்பில் ஏதோ தட்டிய படி அமர்ந்திருந்தான் ஆர்யன்..அவள் வந்ததை அறிந்தாலும் பேருக்கும் நிமிர்ந்து பாராமல் அமந்திருக்க.. இடுங்கிய அவன் புருவங்கள் வேலையாய் இருக்கிறான் என காட்டியது.




வேலையா இருக்கிறான்.. சென்று விடலாம்.. என தோன்றினாலும் தானும் ஒன்றும் வேலையில்லாமல் அவனோடு கடலை போட வரவில்லையே.. விஷயத்தை கூறி சென்று விடலாம்.. என தன்னை நிதானப்படுத்தி கொண்டவளாய்.




"சார்.. " அழைத்தாள். அவன் பெரிதாய் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.




''இவன் பக்கத்துல வந்து நின்னதும் நம்ம என்னனு கேக்கணும்.. ஆனா நம்ம கூப்பிட்டாலும் இவன் காதுல விழாது.. எல்லாம் ஹை பொசிஷன்ல இருக்கிற திமிரு.." வாய்க்குள் முணுமுணுத்த படி நொடித்து கொண்டு சார்.. மீண்டும் ஒருமுறை அழுத்தமாய் அழைக்க போக.. அதற்குள்.. "அப்படி தான்னு வச்சுக்கோங்களேன்.."புருவம் உயர்த்தி கூறிய படி நிமிர்ந்தவனின் பேச்சில் கப் சிப்.. விழித்தாள்.



"ஹை பொஷிஷன்னா அதுக்கான மரியாதைய நீஙக குடுத்து தான் ஆகணும். வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு.. இன்னும் இது தெரியாதா மிஸ்.. சாரி மிஸஸ்.."மிஸஸ் கூறும் போது அவன் அடர்ந்த பார்வை அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் கயிரில் உறுத்து தன் அழுத்தத்தை காட்டியது.




"ஹான்.. "அப்போது தான் அவளும் கவனிக்கிறாள்.."அய்யோ இதை எப்படி மறந்தேன்.. இவன் இதை எப்படி எடுத்து கொள்ள போகிறான்.. " அதுவரை அவனோடு கொண்டிருந்த ஊடல்கள் நொடியில் மறந்து பதறி.. "இது.. வந்து.."என தடுமாறி கூற வருவதற்குள்.."அத. பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் ஏனக்கில்லை.. இங்க நா உங்களுக்கு ஹை மேனேஜர் மட்டும் தான்.. " சட்டென வந்திருந்த வார்த்தைகளோடு ஏளனமாய் அவன் உதடு சுழிந்தது.. முகம் கருத்து போனாள்..




செய்து கொண்டிருந்த வேலையை விட்டு நிமிர்ந்து கூர் கண்களால் அப்போதுதான் அவள் முகத்தை கவனிக்கிறான்..  அவள் முக வாட்டத்தை ஆழ்ந்து ரசித்தபடி அவன் அமர்ந்திருக்க.. அவன் ஏளனம் புரியாமல் இல்லை. காதலித்த ஒருவனால் எப்படி இப்படி வார்த்தைக்கு வார்த்தை  வலிக்க அடிக்க முடிகிறது..?




தொடர்ந்தான்.."ஆனா என்கிட்ட ஏன் சொல்லணும்னு வந்திங்க.. ஒருவேள .. உங்க வண்டவாளம் தெரிஞ்சவங்க கிட்ட..  இல்ல.. மேல் போஷிஷன்ல இருக்கிறவங்க கிட்ட இப்படி விளக்கம் சொல்லி வளைச்சு போட பிளான் பண்ணுறியோ.." அவன் பேச்சில் முகத்தில் செருப்படி வாங்கிய உணர்வு.. நிமிர்ந்தவளின் கண்களில் அலாதி வலி.



அவன் பார்வையில் ஏதோ ஒரு குற்ற உணர்வு தோன்ற வாய் திறந்து விட்டாள்.. அதற்கு எப்படி பேசுகிறான்.. வேசி என நேரடியாக கூறியவன் அவன் இப்படி பேசவில்லை என்றால் தான் அதிசயம்..அவன் ஈட்டிய கூர் அம்பில் குளம் கட்டிய கண்களில் இருந்து தானாய் நீர் வடிய ஆரம்பித்தது.



" இவனை எல்லாம் நீ மனுஷனாக மதித்து பேசவே வந்திருக்க கூடாது.. மனம் எடுத்துரைக்க.. ஆமா.. சொன்ன வேலைய முடிச்சிட்டு நா அங்கேயே இருந்துருக்கனும்.  இங்க வந்துருக்கவே கூடாது.. " அதற்கு மேல அவன் முன் நிற்க விருப்பமில்லாமல் வேகமாக அவள் வெளி செல்ல போக.. வேகமாய் அவள் வழி மறைத்து நின்றவன் சட்டென அவள் கரம் பற்றி இழுத்தான்.. இழுத்த வேகத்தில் அவன் மீதே விழ வந்தாலும் சற்று சுதாரித்து மறு கையால் சுவற்றை பிடித்து தன்னை நிலைப்படுத்தி கொண்டாள்.



இன்னும் அவன் பிடி தன் கரத்தை பிடித்திருப்பதை வெறித்து பார்த்தவள்.. "வேல பத்தி கேக்க வர்ற எல்லாரையும் இப்படி தான் பிடிப்பிங்களா சார்.."அவன் பாணியிலேயே மடக்குவதாய் கேட்டாலும்.. அவனை பற்றி அனைத்தும் அறிந்த தானே இப்படி கேட்பதில் தன்னிலையை நொந்த படி அவள் நிற்க.. அவன் இதழ்கள் வளைந்தன.



'"நல்ல குடும்பத்து பையன் நா.. எனக்கும் தங்கச்சி இருக்கு.. அதோட பொண்ணுங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னும் ஏனக்கு நல்லாவே தெரியும்.. அதே போல உன்ன மாதிரி ஆளுங்கங்கிட்ட எப்படி நடந்தா வேலையாகுன்னும் எனக்கு தெரியும்.." அவன் மார்க்க பார்வையாய் தலை சாய்த்து கூறுயதில்.. தகித்து போய் இன்னும் பற்றி இருந்த அவன் கரம் உதறினாள்.




" எதுக்கு என்னை இப்படி வார்த்தையிலேயே கொல்றீங்க.. அப்படி நா உங்களுக்கு என்ன பாவம் பண்ணனேன்" தன்னை மறந்து கண்களில் நீர் வடிய நின்றவளை எகத்தாளமாய் பார்த்தான்.



"என்ன பண்ணனு உனக்கு தெரியாதா.." சட்டென மாறிய ஓங்கிய குரலோடு அவன் கர்ஜிக்க..அவன் கோபத்தில் அதிர்ந்து உடல் துள்ளி போட்டதோடு.. திடீரென சார்.. எதிர்பாராமல் உள்ளே வந்த ஆபிஸ் பாயை கண்டதும் பேச்சு தடை பட்டது..



எஸ்.. அவன் பார்வை அவன் மீது திரும்பியது.. ஜான்வியும் சடுதியில் சுதாரித்து கொண்டவளாய் அவசரமாய் தன் கண்ணீரை அழுந்த துடைத்து நிற்க.. இருவரும் உள்ளே இருப்பதை கவனித்த படி.. "சார் நீங்க சொன்ன படி அந்த வேலைய முடிச்சுட்டேன்.. "கூறினான் அவன்.




"ம்ம்ம்.. போய் அடுத்த வேலைய பாரு.."ஆர்யன் கூறி விட்டதும் வந்த வேலை முடிந்ததாய் வெளியேறி விட்டான் அவன்.


சில கணம் அங்கு அமைதி.. ம்ம்க்கும்.. தொண்டையை செருமி கொண்டு  பேச ஆரம்பித்தான் ஆர்யன்.




"இங்க பாருஙக.. இங்க வேல பாக்க வந்தா அந்த வேலைய மட்டும் பாத்தா போதும்.. இதை நா ஏற்கனவே சொல்லிட்டேன்.. திரும்பி திரும்பி இத சொல்ல வச்சுக்கிட்டே இருக்கிறது நல்லதில்லை.."அப்போதிருந்த கோபத்திற்கு மாறி கூறிய படி தன் சேரில் சென்று அமர்ந்து விட.. அதே இடத்தில் நின்ற படி கண்களை இறுக மூடி திறந்தாள் ஜான்வி.




''அவன் என்ன கூறினாலும் விட்டு விட்டு தான் தான் வேளையில் மட்டும் கவனமாய் இருக்கவேண்டும்.." ஒன்றுக்கு இரண்டு முறையாய் கூறி கொண்ட படி நேராய் அவனை பார்த்தாள். அவனும் அவளை தான் புருவம் உயர்திய படி பார்த்து கொண்டிருக்க..




"சாரி பார் த டிஸ்டர்ப்பன்ஸ் சார்.."அந்த சாரில் அழுத்தத்தோடு பேசினாள். 




"ஆபிஸ் பாய் புதிசா ஒரு பைல் குடுத்து போனார்.. ஆனா நா இன்னும் முதல்ல குடுத்துததே புல் பில் பன்னலயே.. அதான் என்ன பண்றதுன்னு கேக்க உங்ககிட்ட வந்தே.. "வேலையை பற்றி மட்டும் பேசும் போது மற்ற கதைகளை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லையே..



அவன் பார்வையிலும் சற்று மெச்சிதல் வந்ததாய் தோன்றியது..


"நா அந்த பைல் செக் பண்ற வரைக்கும் இதை பக்கலாமே.. " என்றான் அவனும் அதை பற்றி யோசித்தவனாய்.. 



"இடைல அந்த பைலும் வந்தா வேல முடிக்க சிரமம்.. அதான் கேட்டேன்.."



"சொன்ன வேலைய பாருங்க ஜான்வி.. எப்போ எந்த வேலைய கொடுக்கணும்னு எனக்கு தெரியும்.." பட்டென்று வந்தன அவன் வார்த்தைகள்.



'"எஸ் சார்.. "அவன் பேச்சில் முகம் கருத்தாலும் எதையும் காட்டி கொள்ளாது கூறி வெளி வந்தவளை ஒரு கணம் நின்று பதித்து கண்டேன்ட் கிடைக்காதாதில் தானும் வேளையில் கவனமாகி போனான் ஆர்யன்.



மூச்சு அடைப்பது போல் உணர்ந்தாள் ஜான்வி. வேண்டுமென்றே அடிக்கிறான்.. உஃப்.. சாமாளித்து தான் ஆக வேண்டும்..


மாலை மணி 5 தொட.. அவன் கொடுத்த படத்தை வரைந்த கொண்டிருந்த ஜான்வி.  போனை வெளியில் எடுத்தாள்.



வேலை நேரத்தில் அதிகமாய் போனை பயன்படுத்தி அவளுக்கு பழக்கம் கிடையது. ஆத்திர அவசரத்திக்கு மட்டும் தான் அவளை பொருத்தம் வரை போன்.. வீட்டிலும் கூட இருக்கும் நேரங்களில் கிருத்திகாவோடு நேரம் செலவழிப்பாள் .. அல்லது  வீட்டு வேளைகளில் ஏதாவது மூழ்கி இருப்பாள்.


"எதுக்கு அதுக்குனதையே இழுத்து போட்டு அடுக்கிட்டு இருக்க..ஜான்வி.." அஷோக் கேட்டாலும் தான் முன் மலை குவியலை கிடைக்கும் உடைகளை ஒன்றுக்கு இரண்டாய் கைக்குள் வசமாய் விட்ட படி.. "போர் அடிக்குது.. அஷோக்.."என்பாள்.



அவனும் புன்னகைத்து விட்டு சென்று விடுவான்.. 



இப்போது போனை எடுத்தவள்..  நேரம் ஆனதை உணர்ந்து அவசரமாய் அஷோக்கிற்கு அழைப்பு விடுத்தாள்.



கடைசி இரண்டு ரிங்கில் அழைப்பு ஏற்கப்பட.. "சொல்லு ஜான்வி மா.."எதிர்பக்கம் அசோக்கின் குரல்..



"அஷோக்.. பாப்பாவ ஸ்கூல்ல கூட்டிட்டு வர்ற நேரமாகிடுச்சி.. கூட்டட்டு வந்துட்டியா.."



"அதுக்கு தான் போய்கிட்டு இருக்கேன். இப்போ தான் வேல முடிஞ்சுது.. நீ எதுவும் யோசிச்சுட்டிருக்காத.. நா போய் கூட்டிட்டு வந்துகிறேன்.. நீ வேலைய முடிச்சிட்டு சீக்கிரமா வா.." அவள் பதட்டத்தை குரல் வழியாய் கண்டறிந்து கூறிவிட்டு அவன் போனை துண்டித்து விட..



"ஹலோ ஜான்வி.."அருகில் ஒங்கலான அதட்டலான குரல்..



"அதிர்ந்து திரும்பினாள் அவள். அவளையே பார்வையால் துளைத்த படி இரு கைகளையும் பாக்கேட்டுக்குள் விட்டு கொண்டு ஆர்யன் நின்ற தோரணையில் அடுத்த சம்பவம் ரெடி என தெளிவாய் தெரிந்தது.



திவியும் கூட அவன் இப்போது என்ன கூற போகிறானோ.. என கல்லூரியில் பிட் அடித்து ப்ரோபசரிடம் மாட்டி கொண்ட ரியாக்ஷனில் அவர்களை ஓர கண்ணில் கவனித்து கொண்டிருந்தாள்.




"என்ன நடந்துட்டு இருக்கு இங்க.. நா உங்களுக்கு என்ன வேல குடுத்தேன்.. நீங்க என்னனா கொஞ்சமும் பொறுப்பிக்கலாமா இப்படி உக்காந்து போன் பேசிட்டு இருக்கிஙக.. இது எவ்வளவு அவசரமான ஒர்க் தெரியுமா.. "



"சார்.. அது வந்து.."




"ஷட் அப்.. ஏற்கனவே சொல்லிருக்கேன்ன வேல நேரத்துலபவேலைய தவிர இங்க எதுவும் நடக்க கூடாது.. எவ்வளவு முக்கியமான ஒர்க இது.. கொஞ்சமும் ரேஸ்பான்சிபிளிட்டி இல்லமா.. சிட்.." அவன் கத்தலில் அனைவரும் நிமிர்ந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க.. அதற்கு மேல் முடியாதவளாய்.. "சார்.. முக்கியமான போன் அதான் பேசுனேன்.. அதுவும் ஒரு ரெண்டு நிமிஷம்.. சரி இப்போ என்ன இந்த பிராஜேக்ட் முடிக்கணும்.. அவ்வளவு தானே.. நா முடிச்சு குடுத்துட்டே வீட்டுக்கு கிளம்புறேன்.. அவள் கூறிட தேவையானது கிடைத்து விய்ட்டாதாய் அவன் இதழ்கள் வளைந்தன.




''வேல நேரத்துல இப்படி கண்டமேனிக்கு போன் பேசிட்டு இருந்தா அந்த வேலைய முடிச்சிட்டு தான் வீட்டுக்கு போக முடியும்.. இது ஒன்னும் சேவை மனப்பான்மை கிடையாது.. யுவர் இரீஸ்பான்ஸ்சிபில் பனிஷ்மென்ட்.. "ஏளனமாய் கூறிய படி.. "இது எல்லாருக்கும் பொருந்தும்.."என தங்களை பார்த்து கொண்டிருந்தவர்களிடம் நிமிர்ந்த பார்வையால் கூறி விட்டு சென்று விட அதே இடத்தில் தொப்பென அமர்ந்தாள் ஜான்வி..




"ஒரு நிமிட போன் காலுக்கு என்னவெல்லாம் பேசி விட்டான்.. மற்றவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்.."என கண்களை நிமிர்த்தி நிமிர்ந்து பார்க்க.. கலங்கிய கண்களில் அனைவரும் தன்னை பார்ப்பது போலவே தெரிந்தது..



அழுதால் கோழைத்தனம்.. அவனுக்கு நான் கொடுக்கும் வெற்றி.. அவசரமாய் குனிந்து மற்றவர்கள் யாரும் கண்டு விடாமல் தன் இரு கண்களையும் அழுந்த துடைத்து கொண்டாள்..




கண்களில் நெருப்பு பொறி பறந்தது.."இனி இந்த மாதிரியான வேலைகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.. வாய்ப்பு கிடைத்தால் தானே பிய்ப்பான்.."தோன்ற ஆழ்ந்த மூச்சேடுத்து தன்னை சமன் படுத்திய படி.."இந்த வேலைய சீக்கிரமா முடிச்சிட்டு உன் முகத்துல எரிஞ்சுட்டு தான் இங்க இருந்து கிளம்புவேன்.. வலித்த வெண்டை பிஞ்சு விரல்கள் தன் நுனுக்கத்தை கையில் பென்சிலாய் பிடித்தன.



ஆனால் அவள் போட்ட சபதத்தை முடிக்க விடாமல் அப்போதும் ஆரியன் வந்து நின்றான்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...