முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 15

 ஆறரை.. ஆபிஸ் விடும் வழக்கமான நேரம்..




அன்று கொடுக்கபட்ட அலாதி வேலையில் விரல்களை நெட்டை எடுத்த படி நிமிர்ந்து அமர்ந்தாள் திவி.. அன்றைய வேலையை புது மேனேஜருக்கு இ மெயில் அனுப்பி விட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட படி திரும்ப.. இன்னும் மும்முரமாய் ஜான்வி வரைந்து கொண்டிருப்பதை கண்டு அவள் விழிகள் விரிந்தன.



"ஜானு.. இன்னும் உன் ட்ராயின் முடியலையா.. நேத்துல இருந்து வரைஞ்சுட்டே இருக்கியே.. என்ன அந்த சிடுமூஞ்சி மேனஜர் நீ எது வரைஞ்சாலும் நல்லாலன்னே சொல்லிட்டு இருக்காரா.. " என பாராபட்சமின்றி அவன் வேலை வாங்கும் கடுப்போடு கேட்க.. "ப்ச்.. "உச்சு கொட்டினாள் ஜான்வி.



"இது அது இல்ல.. அத காலைலயே முடிச்சுட்டேன்.. அவரும் சரின்னு சொல்லிட்டாரு.. இது வேற.." கூற அவளிடம் ஆச்சர்யம்..



"வரைஞ்சதோட ஒரே நாள்ல அத மானிடரிங் பண்ணி.. பைலும் பண்ணிட்டிஆ.. '"ஆச்சர்யமாய் கேட்க.. 




"அதெல்லாம் இல்ல டி.. வரைஞ்சு மட்டும் தான் குடுத்தே.. இதை வரைன்னு இன்னொன்னா குடுத்துட்டான்.. அந்த மெண்டல்..''



"ஹான்.?."



"மென்..மேனேஜர்னு சொன்னேன்.." நாக்கை கடித்து கொண்டு கூற.. பக்கென சிரித்து மற்றவர்கள் கண்டுபிடிப்பதற்குள் அவசரமாய் வாயை பொத்திக் கொண்டாள் திவி.




"நீ பஸ்ட் சொன்னதே சரி தான்.. நா எதுவும் தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன் பா.. ஏன்னா என்னையும் அந்த அளவுக்கு வேல வாங்கி பெல்ட்ட கலர வச்சுட்டார் அந்தாளு.." முதுகை ஒரு மாதிரியாய் நெளித்து கொண்டு கூற.. எட்டி பார்த்த சிரிப்போடு.. நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்து மீண்டும் வரைபடத்தில் மூழ்கினாள்.



"அட.. கடமை கண்ணியவானே.. மணி ஒர்க்கிங் அவர தாண்டி போய்கிட்டு இருக்கு.. பேக் பண்ணு.. கிளம்பலாம்.." ஏன அவள் கை பையை எடுத்த படி திவி கூற..




"நீ கிளம்பு திவி.. நா இதை முடிச்சிட்டு வந்துடறேன்.. "என இன்னும் பார்வை அகற்றமல் கூறியவளை "அடியே.."அவள் அருகில் அமர்ந்து விட்டாள் திவி.




"இங்க என்ன நடக்குது.. அந்த மனுஷன் வந்ததுல இருந்தே உன் மேல எரிஞ்சு எரிஞ்சு விழுறதும்..  அவர் சொல்றதுக்காக நீ இல்லாதத எல்லாம் தலை மேல தூக்கி போட்டுக்கிட்டு வேல பாக்குறதும்.."ஹான்.. என்ன.. என்ன.." அவள் ஆர்வமாய் ஆரம்பித்து கேலியோடு முடிக்க .. கண்களை மட்டும் நிமிர்த்தி அவளை முறைத்தாள் ஜான்வி.



"நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமில்ல.. எல்லாரைய போல தான் அவரும் என்ன நடத்துறாரு.. நானும் வழக்கம் போல வேல பாக்குறேன்.. ஏன் இதுக்கு முன்னாடி இப்படி வேல பாத்ததில்லயா.."




"ஹான்.."பதில் சொல்ல முடியாமல் திவி விழிக்க.. '' அதையே தான் இப்பவும் பண்றேன்.. நீ எக்ஸ்ட்ரா பிட் போடாம கிளம்பு.. நா இந்த வேலையை முடிச்சுட்டு வரேன்.. "அவள் உறுதியாய் கூறி விட.. "சரி நேரத்துக்கு கிளம்பு.."என்றதோடு முடித்து கொண்டு கிளம்பி விட்டாள் திவி.




இதோ மணி ஏழரை ஆகி விட்டேன்.. என டக்.. டக்.. என நகர்ந்து கொண்டிருக்க.."மேடம்.. டீ ஏதாவது வேணுமா.'வந்து நின்றான் ஆபிஸ் பாய்.




"அதெல்லாம் எதுவும் வேண்டாம்.." என்ற படி.. அவள் நிமிர.. "முடிஞ்சதா மேடம்.."நின்று கேட்டான் அவன்.




"ஹான் முடிஞ்சுது.." சிறு புன்னகையோடு கூறியவள்.. பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டு தான் கையில் வைத்திருந்ததை ஒருமுறை கண்ணார கண்டு ரசித்த படி.. ''இதை கொண்டு போய் அவன் மூஞ்சில எரிஞ்சுட்டு இதுக்கு மேல தேவையில்லாம இப்படி பேசுற வேல வச்சுக்கதன்னு சொல்லிட்டு வரணும்.. என முடிவோடு அதை எடுத்து கொண்டு அவன் அறைக்குள் செல்ல போக.. "மேடம்.. மேடம்.. அவசரமாய் நிறுத்தினான் ஆபிஸ் பாய்.



"என்னாச்சு.."நின்று திரும்பினாள் அவள்.



"சார் ரூமுக்கா போறிஙக.. அவர் அப்போவே கிளம்பிட்டாரே.."அவள் கூறியதில் அவள் கண்களில் சிறு அதிர்ச்சி.



"கிளம்பிட்டாரா.. எப்போ.."



"அவர் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிட்டாரே மேடம்.. நீங்க பாக்கலயா.."அவன் கேட்க.. பல்லை கடித்தாள் ஜான்வி.



வேண்டுமென்றே தன்னை வேலை வாங்கி விட்டு.. காதும் காதும் வைத்தார் போல் சென்றிருக்கிறான்..ராஸ்கல்..




"முடிஞ்சதுனா கிளம்பலாமா மேடம்.."அவன் தனக்காக நின்று  கொண்டிருப்பதை கண்டு வரைந்த படத்தை பத்திரப்படுத்தி நிமிர்ந்தாள்.. மனம் கணன்று கொண்டிருந்தது.




"கிளம்பலாம்.."கூறிட.. விளக்குகள் அனைத்தும் அணைக்க பட்டு.. அவனும் கிளம்ப ஆரம்பித்தான்.




ஆபிஸ்சில் இருந்து இறங்கி சாலையில் நடக்க ஆரம்பித்தாள் ஜான்வி. அது ஆட்கள் வந்து செல்லும் முக்கிய இடம் தான் என்றாலும் இன்று பார்த்து குறைந்து எரிந்த மின் விளக்கு வெளிச்சதோடு இருக்க..அதிக ஆள் நடமாட்டமும் கண்களில் படவில்லை.. 



வேக நடையோடு பஸ் ஸ்டாப்பிற்கு நடந்தாள்.அவனை நினைக்க நினைக்க ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.  வேண்டுமென்றே தன்னை வேலை வாங்கி சென்றருக்கிறானே.



அவன் அப்போது வேலையை சொன்ன போது கூட இத்தனை கோபம் எழுந்ததா என தெரியவில்லை. ஒருவேளை செல்ல நேரமானாலும் அவனும் தனக்கு துணை இருப்பான்.. என பழைய காலத்து ஆர்யனை மனதில் நிற்க வைத்து தப்பு கணக்கு போட்டு விட்டாள்.. அது தவறு என உச்சந்தலையில் ஆணி அடித்தது போல் எப்படி புரிய வைத்திருக்கிறான் அவன்.





"ஆரி.. எப்படி இப்படி மாறி போன.. இது நீயே இல்ல.. பாசமும் அன்பு மட்டுமே உருவமா இருக்குற என் ஆரி எங்க போனான்.."அவள் மனம் இரண்டாய் கிழிந்து இரத்தம் பீரிட்டது.




பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கால் மணி நேரம் கடந்து விட்டது. கால் வலித்து போனது தான் மிச்சம்.. இன்னும் பஸ் வந்த பாடில்லை..  ஆட்டோவெல்லாம் வருகிறது தான்.. ஆனால் அதில் ஏறினால் பத்து ரூபாய் எக்ஸ்ட்ராவாகும்.. ஒருவேளை ஏறிய அடுத்த நிமிடம் பஸ் வந்து விட்டால் பணத்தை ஏன் இப்படி தண்ணியா வீண் செய்யுற.. அது கையில இருந்தா பாப்பாவுக்கு கிளிப் ஏதாவது வாங்கி தரலாமே.. என மனம் பிராண்டும்.. மிடில் கிளாஸ் தாய்க்கே உரிய மைண்ட் செட்.





ஆனால் நேரம் ஆக ஆக ஆட்டோவின் வரவேற்பும் குறைய கையை திருப்பி மணியை பார்த்தாள்.. எட்டை கடந்து கொண்டிருந்தது.  இனி தாமதித்தால் வேலைக்காகாது.. ஆட்டோலயே போய்டலாம்.. என நினைக்க.. என் நேரம் முடிந்து விட்டது.. என பாய் பாய் காட்டி விட்டது போலும் ஆட்டோ அத்தனையும்.




"அய்யோ ரொம்ப நேரம் ஆகுதே..பாப்பா வேற அங்க என்ன கேட்டு அழ ஆரம்பிச்சுடுவா.. அசோக் தனியா எப்படி சமாளிப்பான்.. சீக்கரமா போகணும்.. கடவுளே.."என வானத்தை வெறித்த படி கூறி கொண்டிருக்க.. திடீரென.. "பாப்பா.. " அருகில் கரகரத்த ஒரு குரல்.  திரும்பி பார்த்தாள்.



ஜடை பிடித்த தலையோடு.. அழுக்கும் கிழிந்த உடையுமாய் அவளை உரசாத குறையாய் இளித்து கொண்டு நின்ற மனிதனை கண்டதும்.. ஹக் என துள்ளி போட பின் நகர்ந்தாள்.




"ஹிஹிஹி.."ஒரு மார்க்கமாய் அவளை பார்த்த படி தலையை சொரிந்தான் அவன்.. 



பஸ் ஸ்டாப்பில் வேறு யாருமில்லை.. விளக்கில்லாத இருள் படர்ந்த அந்த இடம் வேறு இப்போது நேரத்திற்கேன புதிதாய் பயம் கிளப்ப.. "பாப்பா.. கொஞ்சம் என் கூட வாயேன்.." உரிமையாய் அவள் கை பிடிக்க வர.. அவள் பயந்து பின்னேறிய சமயம்.. சட்டென ஒரு தூணில் முட்டி நின்றான்.




"இங்க எப்படி சுவர்.."யோசித்த படி திரும்பி பார்க்க.. அது சுவரில்லையே.. அவன் படர்ந்த மார்பு.. அவனா.. துணை கண்டு விட்டதாய் பூரித்து போன அவள் கண்கள் அவன் முகத்தில் பட்டதும்.. "அஷோக்க்.."என அழைத்து தடுமாறியது.



அவன் அவள் தடுமாற்றத்தை கண்டு கொண்டதாய் தெரியவில்லை..உஷ்ண விழியின் மொத்த குவிப்பு பார்வை மொத்தமும் அவள் எதிரில் நின்றவனிடம்..



நல்லவேளை அஷோக் வந்து விட்டான்.. என மகிழ்ச்சி மறந்து நிம்மதி மட்டும் கொண்டவள் அப்போது தான் கவனிக்க.. அவள் கரம் தொட வந்த அவன் கரத்தை ஒரு இனுக்கு இடைவெளியில் அவள் மீது பட்டு விடாமல் பிடித்து உண்மையாகவே தூணாய் அரணாய் தான் நின்றான் அசோக்.




"இதுவும் இவனால் தானா.."நன்றி உணர்வில் கண்கள் மலர நின்றவளை மறு கரத்தால் அவள் கை பற்றி தன் பின்னே இழுத்து நிறுத்தி தான் அவளுக்கு முன்பாக வந்தான்.




நேரான பார்வையோடு உஷ்ணம் பொங்க அவன் வந்ததோடு.. ஏற்கனவே அவனிடம் மாட்டி இருந்த தன் கையில் அவன் பலம் கண்டவனாய்.."ஹிஹிஹி.."இளித்து கொண்டு தலையை மறு கையால் சொறிந்த படி.. வெடுக்கென அவனிடம் இருந்து தன் கைகளை பிடுங்கி கொண்டு தப்பி ஓட ஆரம்பித்தான் அந்த ஆள்.



பெருமூச்சு விட்டாள் ஜான்வி.. பார்க்க பைத்தியம் போல் தெரிந்தாலும்.. நிச்சயம் அவன் ஓன்றும் பைத்தியமில்லை. என்பது அவன் செயல்களில் நன்றாகவே தெரிய.. இது வரை இழுத்து பிடித்து நின்ற மூச்சை நெஞ்சை நீவி சமன் செய்து கொண்ட படி.. ஒன்றும் கேட்காமல் வண்டியை எடுத்து கொண்டிருந்தவனை விழிகள் மலர பார்த்தாள்.




"ரொம்ப தேங்க்ஸ் அஷோக்..இந்நேரம் நீ மட்டும் வரலன்ன்னா ஏன்னா ஆகி இருக்கும்னு யோசிக்கவே பயமா இருக்கு..'' அவன் பின்னால் பைக்கில் ஏறி அமர்ந்தாள் ஜான்வி.




"வேற என்ன அவன் உன் மேல பாஞ்சுருப்பான்..'' சுள்ளேன கோபத்தை குரலில் அவன் காட்டிட.. அவள் முகம் சுருங்கிய போக்கில் முன் மிரர் வழியாய் பார்த்து கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை சமன் படுத்தி கொண்டவன்... ''சரி விடு விடு.. அதான் நா வந்துட்டேனே.. இனி இதை பத்தி யோசிக்காத.. லேட்டாகுதுன்னா எனக்கு போன் பண்ணிடு.. நா வந்துடறேன்.. "அவள் முகம் சுருங்குவதை காண முடியமல் சமாதானமாய் கூறிய படி தலையை அழுந்த கோதி விட்டு வண்டியை நகர்த்தி இருந்தான். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...