முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 16

 வீட்டிற்கு வரும் வழியில் சின்ன பேச்சுமின்றி வந்தவர்கள் பைக் சத்தத்தில் வேகமாய் வெளியே ஓடி வந்த கிருத்திகாவை கண்டதும் தானாக அவர்களின் முகம் மலர்ந்து விட்டது. 




பாப்பா.. ஓடி வந்த குழந்தையை தன் மார்போடு அணைத்து கொண்டாள் ஜான்வி.



"அப்பாடா.. வந்துட்டீங்களா.. கொஞ்ச நேரத்துல என் உசுரயே வாங்கிட்டா.."நொடித்து கொண்டு சென்றாள் பூவிழி.. பக்கத்து வீட்டு பெண்..



கணவன் அருகில் இருந்தாலும் ஒரு பெண் துணை இருப்பது நல்லது.. என மருத்துவர் கூறிய பிரசவ காலத்தில் ஓடி வந்து உதவியவள் பூவியின் அம்மா நீலா தான்.. 




பின் தானும் தாயோடு வந்து அக்கம் பக்கத்தில் பழகிய பூவிக்கு கிருத்தி என்றால் போதும்.. கை கால்கள் உதைத்த படி படுத்து மலங்க மலங்க விழித்து பார்க்கும் மழலையின் பிஞ்சு கை கால்களாய் பூவாய் தொட்டு ஸ்பரிசிப்பாள் அவள் பெயரை போலவே..



அன்றிலிருந்து இன்று அவள் பள்ளி செல்லும் காலம் வரை அதே அன்பு தான்.. ஆனால் முன்பு மெது வருடலாய் இருந்தது இப்போது அடித்து தூக்கி வீசி எரியும் அளவிற்கு முன்னேறி இருக்கிறது..



"அம்மா இவ என்ன டார்ச்சர் பண்ரா.."என மகள் ஜானவியிடம் வந்து புகார் வாசிப்பதும்.."எக்கா உன் மவ என்ன கடிக்கிறா.. என்னன்னு கேளு.. "என கைகளை தேய்த்து கொண்டே வரும் பெரியவளையும்.. கண்கள் பிதுங்க பார்ப்பாள் ஜான்வி. 



இரு குழந்தைகளையும் சமாளிப்பதற்குள் அவளுக்கு தான் பேரும் பாடாகி போகும்..




ஆனால் அஷோக்கை கண்டால் தானாக பூவி கப் சிப் தான்.  அத்தனை வாலும் சுருண்டு விடும் என்பது மறுக்க முடியாத உண்மை.



"எக்கா உன் புருஷன் எதுக்கு எப்போ பாத்தாலும் முறைச்சுகிட்டே இருக்காரு..."என ஜானுவிடமே அந்த கம்பளைண்ட்டும் திரும்பி வந்து சேரும்.. மற்றவர்களை பொருத்த வரை அவர்கள் கணவன் மனைவி.. ஆனால் உண்மையில்??



எப்போதும் எட்டிக்கும் போட்டிக்கும் இருக்கும் அவளை இப்போது மட்டும் எப்படி உதவிக்கு அழைத்தானோ.. என்ன.. கிருத்தியை தூக்கி நீலா வீட்டில் விட்டிருப்பான்.. விளையாட ஆரம்பித்ததும் நீலா போடும் அதட்டலில் "வா என் வீட்டுல யாருமில்ல.. ஓடிடலாம்.."என இழுத்து கொண்டு வந்திருப்பாள் சின்னவள்.




அம்மாவும் மகளும் பாசமாய் அணைத்து நிற்பதை இடையில் ஒரு பக்கம் கரம் குற்றி நொடித்து கொண்டு பார்த்தவளாய்.. " ஒரு நாள் லேட்டா வந்ததுக்கு இந்தம்மாவும் பிள்ளையும் பண்ற அலப்பறைய பாரு.." கூறினாலும் செல்லும் போதே.. "இனிமே நேரத்துக்கு வர்ற வழிய பாரு.. பாப்பாவ ஏங்க விடாத.."என அதட்டலாய் கூறி விட்டு தான் இடத்தை காலி செய்தாள்.





புன்னகைத்த படி நின்ற ஜானவியை.. அம்மா அம்மா.. கலைத்தது ஒரு குட்டி குரல்.



"பாப்பா.."கண்கள் விரிய திரும்பினாள்.



"பா.. பா.."என உள் சென்றவனை சுட்டி காட்டி பிள்ளையானவள் கூற.. "இன்னும் பேசாமல் செல்கிறானே.. கோபமாய் இருக்கிறானோ.. " என கேள்வியோடு அவனை பின் தொடர்ந்து உள்ளே சென்றாள்...




அஷோக்கை காணவில்லை.. அறையில் இருப்பான் என பூட்டிய கதவு செய்தி சொன்னது.



"இனி கவனமாய் இருக்கிறேன்.."என கூறி அவனை சமாதானபடுத்தலாமா.. என எழுந்த கேள்வியை உள்ளேயே புதைத்து.. பிறகு பார்த்து கொள்ளலாம்.. என குழந்தையோடு இருக்கும் இந்த நேரத்தை கெடுத்து கொள்ள விரும்பாமல் குழந்தையை மடியில் இறுத்தி கொண்டாள். 






திடீரென மொறுக மொறுக வந்த நெய் வாசம் மூக்கை தீண்டியதில் தானாக அதை இழுத்து கொண்டவளுக்கு வாயில் உமிழ் நீர் சுரப்பு.



"நீலா அக்கா அது கை மணத்த ஆரம்பிச்சுடுச்சு போல.."வாசலை பார்த்து எண்ணி கொள்ள அம்மா.. அம்மா.. அவள் கன்னம் பற்றி தன் முகம் பார்க்க வைத்தாள் சின்னவள்.




"பாப்பா.."குழந்தையிடம் கவனமானாள் ஜான்வி.



"இன்னைக்கு ஸ்கூல் எப்படி போச்சு.. நல்ல விளாடுனியா.. " பெற்றவள் கேட்க குட்டியின் தலை வேகமாய் உருண்டது.





"ஆம்.. மா.. இன்னைக்கு கூல்ல கோஓட் பாத்தேன்.. அவ தாரா என்ன பாத்து சிரிச்சுட்டாம்மா.. மாறன் இருக்கானே அவனும் தான்.. நாளைக்கு நீ வந்து எல்லாரையும் சிரிக்க கூடாதுனு சொல்லு.."கண்களை உருட்டி.. நிமிட்டி.. விரிய என.. அத்தனை உணர்ச்சிகளையும் காட்டி கொண்டிருந்த தன் மகளை இமைக்க மறந்து பார்த்தாள்.




எத்தனை அன்பான அழகான மகள்.. இவளை போய் அப்படி கூறி விட்டானே.. நெஞ்சம் வறண்டு வலித்தது..



"அம்மா.." அவள் பார்வை எங்கோ நிலைத்ததை கண்டு கன்னம் தொட்டு தன்னை பார்க்க வைத்தாள் கிருத்தி..



"ஹான்.. சாரி.. சாரி.. அம்மா ஏதோ யோசனைக்கு போய்ட்டேன்.. அம்மா சாப்பாடு செஞ்சுட்டு வந்ததும் ரெண்டு பேரும் நிறைய பேசி விளையாடலாம்.." முயன்று முகத்தில் புன்னகையை வரவழைத்த படி கூறும் போதே குழந்தையின் முகம் சுருங்கியது..




"ம்மா.. ம்மா.."மீண்டும் குழந்தையின் ஆளுமையில்.. தானாய் "சரி வா..  உக்காந்துக்கலாம்.."கிருத்தியை நெஞ்சோடு பிடித்த படி அமர்ந்து கொண்டாள்.."அவள் ஏதேதோ கதைகள் கூற பெற்றவளுக்கு இம்மியும் சலிக்கவில்லை போலும்.. அவளுக்குள் தொலைந்து தன்னை மறந்து சுவாரசியமாய் கேட்டு கொண்டிருக்க.. "ம்மா.. பசிக்குது.."வயிற்றை தேய்த்தாள் சின்னவள்.




இன்னும் தான் எதுவும் செய்யவில்லையே.. அவளுக்கும் வயிற்றில் சிறு உருட்டல் கேட்டது அப்போது தான் புரிந்தது..



"ஒரு அஞ்சு நிமிஷம்.. அம்மா ஏதாவது செஞ்சு கொண்டு வர்றேன்.." என அவசரமாய் அவளை கீழே விட்டு எழ போக.. அவள் கழுத்தை பற்றி தொங்கி கொண்டே வந்தாள் குட்டி பெண் அவளும்..


எழுந்த வேகத்தில் ஜான்வி மீண்டும் தொப்பேன விழ..குட்டி முத்து பல் காட்டி சிரிப்பு வேறு..



அவள் முறைக்க.. சிரிப்பை சற்று குறைத்த சேட்டையாய் "அம்மா என்னையும் கூட்டிட்டு போ.."என்றாள் இன்ஸ்டன்ட்டாய் இதழ் பிதுக்கி.




வேலைக்கு சென்று விட்டு வரும் சில நேரங்களில் அதிக நேரம் தாயை காணாது பரிதவிக்கும் குட்டி பெண்.. அவள் வீட்டிற்கு வந்ததும் இப்படி கழுத்தை கட்டி கொண்டு இப்படி பாடாய் படுத்துவது கிருத்தியின் வழக்கம்.. அவள் தேடல்.. அந்த நேரங்களில் அவளை விட்டு பூவியிடம் என்ன.. அஷோக்கிடம் கூட சென்று கொள்ள மாட்டாள்.



"இன்றும் மாட்டிக்கிட்டேனா.."விழித்த படி.. பக்கத்து வீட்டிலிருந்து வரும்.. நெய் வாசனையை உள்ளே இழுத்த படி சிரமத்தோடு ஒரு கையில் குழந்தையை பிடித்து கொண்டு.. மறு கையால் சோபா முனையை பிடித்து கொண்டு எழ போக.. சுட சுட அவள் முன் ஆவி பறக்க நீட்டிய கோதுமை நிற நெய் ரோஸ்டில் அவள் கண்கள் ஆச்சர்யமாய் விரிந்தன.



தட்டை அவள் முன்பாய் நீட்டிய படி கூர் கண்களால் அவளை முறைத்து நின்றான் அசோக்..



அவனை பெரிதாய் கண்டு கொள்ளவில்லை அவள்.. "என்ன அஷோக்.. நீலாக்கா குடுக்க சொன்னாங்களா.." கேட்டாலும் எப்போதோ தட்டை வாங்கி குழந்தைக்கு பிய்த்து ஊட்ட ஆரம்பித்திருந்தாள்.



அவள் கேட்டதற்கு ஒரு பார்வை மட்டுமே..உள்ளே சென்று விட்டான்அவன்..




ம்ம்க்கும்.. கோபமா இருக்கேன்னு காட்டுரானாம்.. நா என்ன வேணும்னா அந்தாளு கிட்ட மாட்டுனேன்.. ஏதோ ஹீரோ மாதிரி காப்பாத்திட்டு இதுக்கு இந்த அலப்பறை வேற.. "பெருமூச்சோடு குழந்தைக்கு ஊட்டி விட்டாள்.. அது இருந்த அலாதி சுவையில் தானாகவே தட்டடை வாங்கி உண்ண ஆரம்பித்திருந்தாள் கிருத்தி.



"இவ வேல முடிஞ்சது.. இனி நமக்கு மட்டும் தான்..''எண்ணினாலும் அடித்து போட்ட உடல் இப்படியே உக்காந்துடேன் என கெஞ்சியது.


அஷோக்கிடம் கூறினால் செய்து கொடுப்பான் தான்.. ஆனால் அவள் வேலைக்கு செல்கிறேன் எனக் கூறிய போது.. குழந்தைய நல்லா பாத்துக்கணும் ஜான்வி..  இல்லனா ஏங்கி போயிடும்.. அவன் கூறிய வார்த்தைகளில்.. நான் வேலைக்கு போனாலும் இப்ப செய்ற எல்லா வேலையும்.. பாப்பாவையும் நான் இதே போல நல்லா பாத்துப்பேன் போதுமா.. என வீரா வசனம் பேசி சென்று இருக்கிறாளே.. 



அதை அவன் ஞாபகம் வைத்திருக்கிறானோ என்னவோ .. ஆனால் இவள் விடாக்கண்டியை பிடித்துக்கொண்டு அனைத்தையும் இழுத்து தன் தலையில் போட்டு கொண்டு செய்வாள்.. 


அசதியில் சொருகிய கண்களை இழுத்து பிடித்து கொண்டு எழுந்தாள். அறைக்கு வர.. இன்னும் அஷோக் உள்ளே தான் இருந்தான்.. ஆதாரமாய் அரை கதவு மூடப்பட்டிருக்கிறது.. பெருமூச்சோடு  மறு பக்கம் குளியலறை பக்கமாய் சென்று தன்னை சுத்தப்படுத்தி நேராய் கிச்சன் வந்தவளின் கால்கள் தண்ணிச்சையாக நின்று விட்டது..




இடுப்பில் செப் போல் துண்டை கட்டி கொண்டு.. தோசை கல்லில் கிடந்த மாவில்.. பாராபட்சமின்றி நெய்யை நீராய் வாரி இறைத்து கொண்டிருந்தான் அஷோக்.



அதுவோ.. தனக்கு வேண்டியது கிட்டி விட்டது.. என தங்க நிறமாய் மொறுகி கொண்டிருந்தது.. விழித்தாள்.



"அஷோக்.. அப்போ நீ ரூம்ல இல்லையா.. இங்க  தான் தோசை ஊத்துனியா.. நா கூட இவ்வளவு கமகமன்னு வாசனை வருதே.. நீலா அக்கா தான் ஊத்துனாங்களோன்னு நெனச்சேன்" அகண்ட விழிகளோடு எட்டிப்பார்க்க முடி இருந்தா அரை கதவின் வெளிப்பக்கம் தான் தாளிடப்பட்டிருந்தது.. அவள் கேட்டு கொண்டே வர..



"அவங்க வீட்டில ஊத்துனா வெளிய வராத வாசனை வீட்டுக்குள்ள நுழைஞ்சுதும் வருமா.. தன் வேலையில் அவன் கவனமாக அவன் கேட்டதில்.. நாக்கை கடித்து கொண்டாள் ஜான்வி.. சரி தான்.. வெளியே இந்த வாசனை இல்லை என்பது அப்போது தாம் புரிந்தது.



அடுப்பின் மூளையில் ஒரு செலோ பாக்சில் தோசையை அடுக்கி வைத்து கொண்டிருந்தான்..



வியர்த்த வியர்வையையும் துடைக்க மறந்து சுட சுட தோசைகளை அடைத்து கொண்டிருந்தவனை பார்த்த படி.. விடு அஷோக்.. இனி நா பாத்துக்கிறேன்.."என்றாள் அவன் கையிலிருந்து கரண்டியை வாங்க முற்பட்டப்படி..



டக்கென கரண்டியை பின்னிழுத்து கொண்டான் அவன்.. "இருக்கட்டும்.. அவ்வளவு தான் முடிய போகுது.. நீ போய் உக்காந்து சாப்பிடு .. " அவன் கூறிட அவள் விழிகள் பணித்தன..



அடக்க மாட்டாமல் கோபத்தை தீயாய் வாரி இறைத்தாலும் அவளுக்கு முன்பாய் அவள் தேவையை அறிந்து நிறைவேற்றுபவனும் அவனே.. எப்போதும் போல தான்.. இன்று மட்டும் மாறிப்போகுமா என்ன.. " ம்ம்.. இதழில் உதிர்ந்த புன் சிரிப்போடு தனக்கு வேண்டியதை எடுத்து கொண்டு ஹாலில் அமர்ந்த படி டிவியில் ஓடி கொண்டிருந்த சின்சானில் அவள் கவனம் பதிந்தது. 




அடுத்த சில நொடிகளில் அவனும் எடுத்து கொண்டு வந்திட.. ஆளுக்கொரு பக்கமாய் கிருத்தி அருகில் அமர்ந்த படி அவர்கள் உணவை முடித்தனர்..



"ஹோம் ஒர்க் எல்லாம் முடிச்சுட்டேல்ல பாப்பா.."வாயில் உணவை மென்ற படி ஜான்வி கேட்க.. கருவிழிகள் இருபக்கமாய் உருண்டு.. திருதிருவென விழித்த குழந்தையின் முகத்தை கண்டு கொண்டவன்.. "சாப்பிட்டு முடித்து பேசலாம்.. ஜான்வி.."அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தான்..




சாப்பிட்டு முடித்து உள்ளே ஓடி விட்டாள் கிருத்தி.. தான் சாப்பிட்டு கிடந்த பாத்திரங்களை சுத்த படுத்தி ஜான்வி அறைக்குள் நுழைந்த நேரம் அவள் குர்.. குர் தான்.. டீப் ஸ்லீப்பிங்..




என்ன சீக்கிரமா தூங்கிட்டா.. கேள்வியோடு கைகள் தானாய் அவள் பேகை துழவி டைரியை எடுத்தது.. தொடர்ந்து நோட்டையும் பார்க்க.. ம்ம்ஹும்.. எழுதவில்லை.. ஆசிரியை மேலே விட்டிருந்த சிவப்பு மையோடு தொடர்ந்து காலி கோடுகள் இருக்க.. "இன்னைக்கும் ஹோம் ஒர்க் செய்யாம தூங்கிட்டா.."சலிப்பானாள் ஜான்வி.



தினமும் இதே வேலை தான்.. இரண்டடி எழுதினாலே ஹோம் ஒர்க் முடிந்து விடும்.. அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும்.. ஆனால் அதை செய்யாமல் எப்போதும் இப்படியே டேக்கா குடுப்பவளை முறைக்க தான் முடிந்தது.




ம்ம்ஹும்.. இன்னைக்கு விட கூடாது.. 



"பாப்பா.. கிருத்தி.. அடியே.."என அவளை எழுப்ப உலுக்க.. "ஜான்வி.." பின்னிருந்து கேட்ட அஷோக்கின் அழுத்த குரலில்.. திரும்பினாள் அவள்..




"இப்போ எதுக்கு பாப்பாவை எழுப்பிட்டு இருக்க.." மகளை தூக்கத்தில் எழுப்புவது நிச்சயம் அவனுக்கு பிடிக்காது.. அவளுக்கும் தெரியும்..  முறைப்போடு நோட்டை அவன் பக்கமாய் நீட்டினாள்.



''பாரு இன்னைக்கும் ஹோம் ஒர்க் செய்யாம தூங்கிட்டா.. நாளைக்கு எழுதாம போனா டீச்சர் முதல் வேலையா எனக்கு தான் கால் பண்ணுவாங்க.. காலைலயே அரை மணி நேர கம்பளைண்ட்" சலிப்பாய் கூற.. 




வாங்கி பார்த்தவனின் முகத்தில் பெரியதா எந்த மாற்றமும் இல்லை.. " அதனால என்ன.. நீதான அம்மா..  அப்போ உன்கிட்ட தானே கம்ப்ளைன்ட் பண்ண முடியும். வேணும்னா.. இனி பேசாம என் நம்பரை கொடுத்திரு..  நானே அவங்கள ஹேண்டில் பண்ணிக்கிறேன்.. கூறியவனை அதெல்லாம் வேண்டாம்.. மறுத்தாள். 


அவன் முகம் கருத்தது..



"ஏன்.. இன்னைக்கு மாதிரி பிள்ளை முடியாம கிடந்தத அப்போ தான் என்கிட்ட இருந்து மறைக்க முடியுமோ.. "கேட்டதில் விழித்தாள்.



இது எப்படி இவனுக்கு தெரியும்.. அவன் கோபத்திற்கான காரணம் இப்போது புரிந்தது..



"இல்ல.. அசோக்.. தெரிஞ்சா வருத்தப்படுவியேன்னு தான்.. உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்னு சொல்லுவ.. அவ்வளவு ஒன்னும் பெருசா இல்ல" சமாளிப்பாய் அவள் இழுக்க..அவன் முகத்தில் சிவப்பு..



"எல்லாத்துக்கும் பணத்தை பத்தியே யோசிக்காத ஜான்வி.. பிள்ளைக்காக செலவு பண்ணாம யாருக்கு பண்ண போறோம்.. "கேட்டதில் இப்போது அவள் முகம் கருத்தது.




"ஏற்கனவே நிறைய செலவு.. அதான் அவளுக்கு ஒண்ணுமில்லயே.. இந்த பேச்சை விடு.. 


அவ ஹோம் ஒர்க் செய்யலானா செய்ய சொல்லணும்.. அத விட்டு பேச்சை டைவர்ட் பண்ணி இப்படி சப்போர்ட் பண்ணிட்டு இருக்க..





நீ கொடுக்கிற செல்லத்துல தான்  இவை இப்பவே இவ்வளவு சேட்ட பண்றா.. மீண்டு அதே புள்ளியில் வந்து நின்ற படி மகளை எழுப்ப முயல.. வேகமாய் அஷோக் அவள் கரம் பற்றியவன் வெளியே இழுத்துக் கொண்டு வந்தான்.




அடுத்து நான் என்ன நடக்கும் என யூகித்தவளாய் அசோக் விடு..  அவள் எழுப்பி எழுத வைக்கணும்.. என கதறிக் கொண்டிருந்த வேலையிலேயே.. வேகமாய் அவன் உள் சென்று கதவு உள்பக்கமாய் தாளிடப்பட்டது.




தினமும் இதுவே வேலை.. கேட்டால் நாளையிலிருந்து சீக்கிரம் வந்து சொல்லி கொடுக்கிறேன் என்பான். இல்லை நீ சீக்கிரமா வா.. என்பான்.




ஹ்ம்ம்.. பெருமூச்சு விட்டவளின் சோர்வான பார்வை அறையின் கதவை சோம்பலாய் தழுவியது. இப்போதைக்கு கதவு திறக்கப் போவதில்லை.. ஒரு சில நேரங்களில் மகளின் அருகே படுத்தபடி அவன் உறங்கியும் விடுவான்.. பிறகு என்ன ஜான்விக்கு ஹாலே கதி..



ஹ்ம்ம்.. பொண்ண திட்டுனா மட்டும் மூக்குக்கு மேல கோபம் வந்துடும்.. ஏன் ஒழுங்கா ஹோம் ஒர்க் எழுத சொன்னா என்னவாம்.. என வாய்க்குள் முணுமுணுத்தத்தபடி கால்கள் தன்னிச்சையாய் மாடியை நோக்கி நடைபோட்டது..







வா மகளே.. என்ன துணுக்கம் என்றாலும் என்னிடம் கூறு..என இரு காரங்களையும் நீட்டி வரவேற்ற நில மகளின் குளிர்ச்சியில் சிலிர்த்து நின்றவளின் பார்வை எதிரில் இலக்கற்று பரந்து இருந்த வானை விரித்தது.




இன்று முழுதும் நடந்த சம்பவங்கள் கண் முன் பிம்பங்களாய் வந்து அவளை அழுத்தி எடுத்தன.. " அவனை எவ்வளவு உயிருக்கு உயிராய் காதலித்தேன்.. அவனும் தானே.. அவன் மீது எத்தனை நம்பிக்கையும் காதலும் இருந்தால் என்னையே அவனிடம் இழக்கும் அளவிற்கு துணிவேன்.. ஆனால் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இப்படி ஏசி பேசுகிறானே.. மனம் வறண்டு வலித்தது..



அவனோடு கடந்த பொழுதுகள் இன்ப அலைகளாய் அவள் நெஞ்சில் முட்டி உள்வாங்கின.. 



" ஜானு.. " மிதா பிறந்த நாளை தொடர்ந்து இரண்டு நாள் கழித்து அவள் வீட்டின் முன் பைக்கில் ஒய்யாரமாய் கால் சாய்ந்த படி நின்று அழைத்த ஆரியனின் குரலில் வேகமாய் வெளியோடி வந்தாள் அவள்.. அந்த நேரம் வேலைக்கு சென்றிருந்தார் பாக்கியம்..




அன்றைக்கு பின் இன்றுதான் அவனை சந்திக்கிறாள்.. 




ஓடி வந்தவளின் கண்கள் தன் வீட்டு வாசலில் நின்றவனை கண்டதும் இமைக்க மறந்து போயின. பைக்கில் ஒய்யாரமாய் சாய்ந்தபடி கருப்பு பான்ட் வைட் டி-ஷர்ட் சகிதம் கண்களில் கூலர் மாட்டின் நிற்பவனை கண்டு கண்கள் மட்டும் எங்கனம் நகர்ந்து விடுமாம்..




நடந்து வந்த கால்கள் தன்னிச்சையாய் அவனை கண்டதும் ஓட ஆரம்பித்து அவன் முன் பிரேக்கிட்டு நின்றன..




"ஏய்ய்ய்.. மெதுவா.. " அவள் ஓடிவந்த வேகத்தில் இங்கு விழுந்து விடுவாளோ என அவள் தோள் பற்றி நிற்க வைத்தான் ஆரியன்...


" நீ..  நீங்க இங்க என்ன பண்றீங்க.." கேட்கும் போது ஏனோ மூச்சு வாங்கியது.





" உன்ன தான் பார்க்க வந்தேன்" அவன் கண்சிமிட்டியதில் உள்ளங்காலில் இருந்து ரத்தம் உச்சந்தலைவரை விர்ரென இரத்தம் ஏறி அவளை சிலிர்க்க வைத்தது.




அவள் பார்வையில் இருந்து அவள் உணர்வுகளை அவன் அறிந்திருக்க வேண்டும்.



"ஹேய் கூல்.. மிதா ட்ராயிங் புக் உன்கிட்ட இருக்காமே.. வாங்கிட்டு வர சொல்லி மிதா தான் என்ன அனுப்பி வச்சா.." கூறியதும் மாலை தாமரையானாள் அவள்..



அவள் ஒவ்வொரு அசைவையும் கூர் கண்களால் அழகாய் படம் எடுத்தபடி நின்று இருந்தான் ஆரியன்.




" இதோ இதோ எடுத்துட்டு வரேன்.. " என உள்ளே ஓடினாள் ஜான்வி.




பையை புரட்டி அவன் கேட்டதை நோட்டை எடுத்து திரும்ப.. அருகில் நின்ற உருவத்தைக் கண்டு பக் என திகைத்துப் போனாள்.




நெடு நெடுவென பனைமரம் உயரம்.. அந்த உயரத்தில் முக்கால் தான் அவள்..



வெகு நெருக்கத்தில் விழிகளோடு கழுத்தையும் நிமிர்த்தி அவன் முகம் பார்க்க வேண்டிய நிலை..


அந்த பத்துக்கு பத்து அறையில் இடத்திற்கு சம்மந்தமில்லாமல் பணத்தின் செழுமையோடு  நின்றான் அவன்.




அவள் விழித்து நின்ற வேளையில் " நீ உள்ள வாங்கன்னு கூப்பிடல அதான் நானே வந்துட்டேன்.. " எந்த பாகுபாடும் காட்டாமல் தோள் குலுக்கியபடி அவன்   கூறியதில்..  துணுக்கற்று அவள் பார்வை அசுவைய உணர்வோடு சுற்றி இருந்த பழம் பாய்.. கட்டில் இல்லாத தரை.. என படர..




அவளை கண்டு கொண்டவனாய் விட்டு விலகி ஓரமாய் கிடந்த அந்த இத்துப்போன பாயை விரித்து அதில் அமர்ந்து கொண்டான்.




தனக்காக இதையெல்லாம் செய்கிறானா ..இப்போது அவள் விழிகளில் மலர்ச்சி. அவனின் திமிர் காட்டாத கம்பீரமான செயல் அவளை கவர்ந்தது.




" இருங்க இருங்க வந்துடறேன்.. " உள்ளே ஓடிப்போனவள் வரும்போது செம்பு நிறைய நீர் எடுத்து வந்தாள்.




எந்த அலட்டலும் காட்டாது வாங்கி குடித்தவனை இமைக்க மறந்து அவள் பார்த்து நிற்க.. "சரி அப்போ கிளம்பவா.." தொடை தட்டி கேட்ட படி எழுந்தான் அவன். தலை தாழ்ந்த கூரை அவன் தலையை தட்ட போக .. பாத்து.. முழு உயரத்திற்கு எக்கி அவன் தலையில் அதுரமாய் கை பதித்துக் கொண்டாள்.



தேகம் இரண்டும் தீப்பொறியாய் உரசும் அளவுக்கு நெருக்கம்.. தலையில் தட்டி விடக் கூடாது  என பதறிய அவள் எதுவும் அறியவில்லை.



ஆனால் சற்று சுதாரித்து அவன் தலையை நகற்றியதில்.."உங்களுக்கு ஒண்ணுமில்லையே.."கேட்டாள் விழிகள் விரித்து.



"இப்படியே நின்னா தாம் ஏதாவது ஆகும்.." இரு தேகத்திற்கும் இடையில் ஆன இடைவெளியை பார்த்தபடி அவன் கூறிய போது தான் தன்னிலை கவனிக்கிறாள்.. அவனுக்கு வெகு அருகில் தான்.. "சா.. சாரி.."முகத்தில் எறிய செம்மையோடு விலக போக.. அவசர விலகலில் கால் இடரி அவள் பின் சாய்ந்த நேரம்.. "ஹேய் பாத்து.." அவள் இடையோடு பிடித்து தன்னோடு சேர்த்து நிறுத்தினான் அவன்.




"ஆரி.."வெகு அருகில் அவன் முகம்.. அடர்ந்த புருவத்தின் கீழ் கூர்ந்த கண்கள்.. வசீகரமாய் அவளை உள்ளுக்குள் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது..  கூர்மூக்கும் குவிந்தது போல் தோன்றிய உதடுகளும்.. அவளுக்குள் சொல்லவனா மாற்றத்தை ஏற்படுத்தின.



ஆசை கொண்டு  பார்த்த ஹிந்தி சீரியலில் வரும் ஹீரோ ஹீரோயின்கள் எல்லாம்.. இதே பொசில் கண் முன் வந்து சென்றனர்.



அவள் முட்டை விழியில் என்ன கண்டானோ.. ஒழுங்காவே உனக்கு நடக்க தெரியல.. இனிமேலாவது பாத்து நட.. இதழில் வசிகரிக்கும் சிரிப்போடு ஒரு மார்க்கமாய் மூச்சிரைத்து இதழ் கடித்து கூறிய ஒவ்வொரு அசைவும் அவளுக்கு அத்துபடி.. வெளி சென்று விட்டான்.. அவள் நெஞ்சமும் பின்னேயே ஓடி சென்று அவனோடு ஒட்டி கொண்டது.. 



"ஆரி.. ஆரி.." அவனை தொடர்ந்து பின் வந்தவளை நின்று பார்த்தான்.. "என்னாச்சு.. என்ன விட்டு இருக்க முடியலயா.." அவன் தாழ்ந்த குரல் அவள் காது மடலை சூடாக்கியது.



"உங்.. உங்க வாட்ச்.."அவன் வாட்ச்சை நீட்டினாள்.. அவளை எக்கி பிடித்ததில் கீழே விழுந்து இருக்கக்கூடும்.. "ஒஹ்ஹ்.. இதுக்காக தான் வந்தியா.."அவன் முகம் சற்று சுருங்கினார் போல் தோன்றியது ஜான்விக்கு.



"இல்ல.. உங்கள வழி அனுப்ப தான்.."அவள் கூறியதும் சட்டென வெண்ணிற பற்கள் தெரிய சிரித்து தன் மகிழ்ச்சியை காட்டினானே.. இது காதல் அன்றி வேறென்ன.. 



"ஆரி.. ஆரி.." இப்போது போல் கண் முன் தெரிந்த அவன் சிரிப்பில் தன்னை மறந்து நிலவொளியில் நின்றவளை.. "என்ன அப்படி கூப்பிட வே* உனக்கு என்னடி தகுதி இருக்கு.." அவன் நெருப்பு வார்த்தைகள் சட்டென காதுக்குள் கேட்டு அவளை இறுக வைத்தன.




இன்று காலை அவனை கண்ட நொடி எவ்வளவு மகிழ்ந்து போனாள்.. அந்த ஒரு நொடியில்... "என் ஆரி.. என் ஆரி.."அவள் மனது கூப்பாடு போட்டாதே.




ஆனால் தொடர்ந்து அவன் பேசிய தீ கங்கு வார்த்தைகள்.. கண்களை இறுக மூடினாள்.. "இது உண்மையாவே உங்க குழந்தை தான் ஆரி.." கொசுவர்த்தி சுருள் மீண்டும் அன்றைய நாளை நோக்கி படர்ந்தது..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...