முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 17

 


அன்று காலை முகத்தை தூக்கி வைத்து கொண்டு தங்கள் வீட்டு குட்டி திண்ணையில் அமந்திருந்தாள் ஜான்வி. ஒன்றுமில்லை பிரிய தோழியை சந்தித்து இன்றோடு ஒரு வார காலம் முடிகிறது.. அவள் மனம் விட்டு பேசி பழக கூடிய ஒரே ஜீவன் அவள் மட்டும் தான்.. பாக்கியாவிற்கு இந்த விஷயம் தெரிந்தாலும் அவரின் இந்த முடிவை அவர் விடுவதாய் இல்லை. 



அவர்கள் தகுதி கண்டு எப்போதும் சற்று ஒதுக்கத்துடன் அவர் இருந்தாலும் மிதாவே தேடி வந்து பேசும் போது அதில் ஒரு மரியாதை.. ஒதுக்கம் கொண்டு பேசுவார்.



மகளையும் அப்படியே அவளிடம் பழக கூறுவார்.. ஆனால் தாய் கூறுவதை இந்த விஷயத்தில் மட்டும் அவள் கேப்பதே இல்லை. பாக்கயா கண்டாலும் மகளின் மகிழ்ச்சியில் அதிகம் தலையிட விரும்பாமல் இது வரை விலகி இருந்தார்.




ஆனால் எப்போது அவள் வீட்டில் தன் மகளை இவ்வளவு அவமானப்படுத்தினார்கள் என தெரிய வந்ததோ பெற்றவளுக்கே உரிய தவிப்பு.. ரத்தகொதிப்பாய் மாறி போனது..



தங்கள் தகுதிக்கு அவர்களை ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்.. என கேட்பது இயலாத காரியம் என தெரியும்..இனி அப்படி நடந்து கொள்ளாதிர்கள்.. எனவும் கூற முடியாது.. ஆக சிறந்த ஒரே வழி மகளை இனிமேலும் அவள் போக்கில் விடாமல் இந்த விஷயத்தில் இழுத்து பிடிப்பது தான்..




அந்த பிரச்சனை முடிந்த அடுத்த நாள் வீட்டிற்கு வந்ததும் பாக்யாவின் முகம் செவ்வானமாய் சிவந்திருந்தது.



"ஜான்வி..'' அவர் கத்திய சத்தத்திலேயே ஓடி வந்து நின்றாள் மகளவன்..




பொதுவாய் பாக்கியா எதற்கும் கோபப்பட மாட்டார் எனினும் இன்று அவர் முகத்தில் தெரிந்த கடுகு பொரிப்பு அவளை சற்று உலுக்கியது.




" என்னாச்சும்மா ஏன் வந்ததும் வராதுமா சத்தம் போட்டு கிட்டு இருக்க.. " என்றவளைக் கூர்ப்பார்வையால் முறைத்தெடுத்தார்.



" நேத்து உன் தோழி பிறந்தநாள்ல்ல என்ன நடந்துச்சு.. " அவர் கேட்டதிலேயே விஷயம் அவருக்கு தெரிந்து விட்டது என்பது புரிந்து மௌனமாய் கண் மூடி திறந்தாள் ஜான்வி.



பொதுவாய் பொய் கூறி பழக்கம் இல்லாதவளுக்கு தேவையில்லாத வண்டு சல்லடைகளை இழுத்து போட்டு அதை பூசி முழுக விருப்பமில்லை.




" இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு,. நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல.. "



" அது சாதாரண கேசரி பிரச்சனைதாம்மா.. " என்றவளை பார்த்த பார்வையில் அவள் தலை தாழ்ந்தது.



" வெறும் ஒரு கேசரிக்காக தான் பிரச்சினை ஆரம்பிச்சி இருக்கலாம்.. ஆனா அது முழுக்க முழுக்க உன்ன அசிங்கப்படுத்தனும்னு நடந்ததுன்னு உனக்கு புரியவே இல்லையா.. இன்னும் நீ சின்ன பிள்ளை கிடையாது ஜானு..  இதுக்கு தான் அந்த பொண்ணு கூட அவ்வளவு நெருக்கமா பழகாதன்னு சொல்லி தலைல அடிச்சுக்கிறேன்.. " தாயின் குரலில் ஆதங்கம்.




"அம்மா.." ஓங்கி குரலோடு இவளும் அழைத்தாள்..



" எனக்கும் அங்க நடந்ததெல்லாம் அவங்க என்ன அங்க இருக்கக்கூடாது என்பதற்காக பண்ணதுதான்னு புரியுது.. ஆனா மிதாவும்.. அவ..  தொடர்ந்து வந்த வார்த்தைகள் வாய்க்குள்ளே விழுங்கிக் கொண்டவள்..  மிதா எனக்கு எவ்வளவு சப்போர்ட்டா நின்னான்னு தெரியுமா.. நான் செய்யலன்னு அவளை நிரூபிச்சுட்டா.. சொல்லப்போனா நான் செஞ்சது ரொம்ப நல்லா இருக்குன்னு அவங்க வாயாலவே என்ன பாராட்டவும் வச்சுட்டா.. " என்ற மகளை கூர்ந்து பார்த்தார் பாக்யா..



" உன் தோழியா இல்ல அவ அண்ணனா.. " சுட்டிக்காட்டி அவர் கேட்ட கேள்வியில்.. ஏதோ திருட்டுத்தனம் செய்து விட்டதாய் அவள் கண்கள் விரிந்தன..


சற்று சுதாரித்துக் கொண்டு.. "ம்ம்ம்.. அவ அண்ணனும் தான் சப்போர்ட் பண்ணாங்க.. ஆனா மிதா தான் எனக்கு முழுக்க முழுக்க துணையா இருந்தா.. நான் செய்யலன்னு நிரூபிச்சா.." செய்தவன் ஒருவனாய் இருக்க தனக்கேற்றார் போல் மாற்றிக் கொண்டவளிடம் முதன் முறையாய் பொய் எட்டிப் பார்த்தது.. 




" எனக்கு என்னமோ இதெல்லாம் சரியா படல ஜானு.. முதல்ல அந்த பொண்ணு கிட்ட இவ்வளவு நெருக்கமா பழகுவதை விடு.. அதோட இனி எப்பவும் அவ வீட்டுக்கு நீ போகவே கூடாது.. " பெரியவள் அடி குரலில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட.. "சப்பா.." பெருமூச்சு விட்டபடி தரையில் சரிந்து அமர்ந்தாள் ஜான்வி.




நெற்றியில் வடிந்து கொண்டிருந்த வியர்வை தாயிடம் பேசி பேசி போதும் என்று ஆகிவிட்டது என சுட்டிக்காட்டியது.. எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு இந்த அம்மா எப்படி வந்து கேள்வி கேக்குதுன்னு பாரு..  இதுல மிதா கிட்ட வேற பேச கூடாதாம் என்றவளின் கண்களுக்கு மிதா தெரிந்தாளோ இல்லையோ அருகில் சிரித்துக்கொண்டு நிற்கும் அவள் அண்ணனின் முழு உருவம் கண்முன் விரிந்தது.



"ஆரி.. " உங்கள பாக்காம எப்படி நான் இருப்பேன்.. " கூறியவliன் கன்னங்கள் செவ்வானமாய் சிவந்து நின்றன.




வகுப்பில் தோழிகள் சிலர் காதலிக்கிறோம் என பேச்சு அடிபடும் போதெல்லாம் முகம் சுழித்துக் கொண்டு செல்பவளுக்கு இந்த புதுவித அனுபவமும் ஒரு வித புல்லரிப்பாக  இருந்தது.. அந்தப் பருவத்திற்கே உரிய கிளர்ச்சியோ அல்லது உண்மையான காதலோ.. அவன் தனக்காக செய்யும் ஒவ்வொன்றையும் தனக்கே தனக்காய் அவன் செய்வதை எண்ணி மனம் அளவுக்கதிகமாய் அவனை தன்னுள் பிடிக்கச் செய்தது.



இதோடு ஒரு வார காலம் முடிந்து இருந்த நிலையில் அன்று +2 ரிசல்ட்.. 



மகளுக்காகவே விடுமுறை போட்டு அவளோடு அன்று பள்ளிக்கு கிளம்பி வந்தார்  பாக்கியம்..  




"ஹாய் ஆன்ட்டி.." இருவரையும் பார்த்து புன்னகையோடு ஓடிவந்த மிதாவிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் அவள் மகிழ்ச்சியை கெடுக்க விரும்பாதவராய் பெருக்கென பாக்கியம் புன்னகைத்து வைக்க.. "ஜானு.." அவளைக் கட்டிக் கொண்டாள் மிதா .



" என்னடி உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா.. இவ்வளவு லேட்டா வர்ற.. " உரிமையோடு கேட்ட தோழியிடம் காதை பிடித்தாள்.





" கிளம்பி வர கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு.. அதான் ரிசல்ட் ரிலீஸ் பண்றதுக்குள்ள வந்துட்டேனே.. " 



"வா ரிசல்ட் போடுறாங்க.." அவளை இழுத்துக் கொண்டு ஓடினாள் மிதா.



ஆளுக்கு ஒரு பக்கமாய் தங்கள் சீரியல் நம்பரை தேடி தங்கள் மார்க்கை பார்த்து "அம்மா.. " ஒருவள் மகிழ்ச்சியில் கலங்கிய கண்களோடும் .. இன்னொருவள் துள்ளலோடும் ஓடி வந்தனர்.




"ஆன்ட்டி.. ஆன்ட்டி.. உங்க பொண்ணு ஸ்கூல் டாப் 10 ல வந்துருக்கா.. " ஜான்விக்கும் மேலாய் கூச்சல் போட்டாள் மிதா.. ஏதோ தானே அப்படி மதிப்பெண் எடுத்து விட்டதை போல் பரவசம் அவளிடம்.



"நீ எவ்வளவு.."பாக்கியம் கேட்க.. "வழக்கம் போல தான் ஆல் பாஸ்.." தோள் குலுக்கினாள் அவள். ஆனால் ஜாண்வி எடுத்த மதிப்பெண்கள் அவள் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன..


என்னதான் அவர்களின் தகுதி கண்டு மிதாவை தள்ளி வைத்து நடந்து கொள்ள கூறி பாக்யாவின் மனம் பிராண்டினாலும்.. உரிமையோடு தன் கைபிடித்து துள்ளலோடு கொண்டாடும் கொண்டாடும் இந்த பெண்ணை பெரிய வர்க்கத்தில் ஒருவளாய் சேர்க்க முடியவில்லை.. இதனால தான் ஜானுவுக்கு இவளை இவ்வளவு புடிச்சிருக்கு போல.. தனக்குள் எண்ணிக்கொண்டார்..



"மிதா.." அழுத்தமான ஆண்மையான குரல் கேட்டு அதை மலர்ந்த கண்களோடு திரும்பினாள் மிதா. அருகில் நின்ற ஜானுவின் கண்களும் தன்னிசையாய் திரும்ப.. தன் முழு உயரத்திற்கும் நிமிர்த்து நின்றபடி கூர் கண்களால் பார்த்த அவன் மெனரிசத்தில் மெய் மறந்தாள்.




" ரிசல்ட் பாத்திட்டியா.. எத்தனை மார்க் நீ.. " கேட்டான் அவள் அண்ணனாய்.




"ப்ச்.. நம்ம வழக்கம்போல பார்டர் மார்க் தான்.. ஆனா நம்ம ஜானு எவ்வளவு எடுத்து இருக்கா தெரியுமா.. ஸ்கூல்ல டாப் 10 ஸ்டுடென்ட்ஸ்ல அவளும் ஒருத்தி.." அவள் கூற விழிகள் மலர்ந்து ஜான்வியின் பக்கமாய் திரும்பினான் ஆரியன்..



"காங்கிரட்ஸ்.." அவன் கை நீட்ட.. வேகமாய் அவன் கருத்திற்குள் தன் மின் கைகளை பதித்து புதைத்து கொண்டவளுக்கு இதைவிட வேறு அற்புதமான பொழுதில்லை எனத் தோன்றியது.. அவன் கண்களும் அவன் மகிழ்ச்சியை தனியாய் அவளுக்கு காட்டியது.



முதல் பத்தில் வந்த மாணவர்களை பேட்டி எடுத்து கொண்டாடி என ஒரு வழி ஆக்கிவிட்டு தான் பள்ளியிலிருந்து அனுப்பினர்..



மிராவிற்கு அங்கு ஒன்றும் வேலையில்லை என்றாலும் தோழிக்காக.. அவள் மகிழ்ச்சியில் லைத்த படி அங்கேயே கிடக்க.. அவளுக்கு துணையாய் என வந்தவனும் அங்கேயே தான் அமர்ந்து இருந்தான்.




" சாரிமா.. அன்னைக்கு எங்க வீட்டில அப்படி நடந்து இருக்க கூடாது.. எங்கள மன்னிச்சிடுங்க.. " கேட்டான் பாக்கியா அருகில் அமர்ந்தபடி..



திரும்பி பார்த்தார் பாக்யா.. தகுதியும் இடத்திலும் உயர்ந்தவன் என்றாலும் எந்த திமிரும்  ஆதிக்கமும் இன்றி தங்கள் மீது தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்பவன் மீது நன்மதிப்பு படர்ந்தது..



" பரவாயில்லப்பா.. அதான் நீங்களும் உங்க தங்கச்சியும் என் பொண்ணு மேல எந்த தப்பும் இல்லை என்று நிரூபிச்சிட்டீங்களே.. எனக்கு அதுவே போதும்.. " அவர் கூற அவன் முகத்தில் புன்னகை படர்ந்தது.



"நன்றிம்மா.. அப்புறம் உங்க பொண்ணு என்ன படிக்க போரா.. எந்த காலேஜ்ல சேர்க்க போறீங்க.." பொதுவான பேச்சுக்கள்.. ஆனால் அவன் கேட்டதில்  அவர் மூச்சு ஆயாசமாய் வெளிப்பட்டது.



" அவ இன்ஜினியரிங் கோர்ஸ் ஏதாவது எடுக்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்காப்பா.. ஆனா பணம் அதுக்கு நிறைய செலவாகும்.. வேற ஏதாவது எடுத்துக்கோன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறா.. நீங்க ஏதாவது சொல்லிப் பாருங்களேன்.. நீங்களும் உங்க தங்கச்சியும் சொன்னா கண்டிப்பா அவ கேட்பான்னு தோணுது.. " சில நேரத்தில் பூத்த நம்பிக்கையோடு கூறினார் பாக்யா.




அதே நேரத்தில் பேட்டிகள் அனைத்தையும் முடித்து தாய் அருகில் வந்திருந்தனர் மிகவும் ஜான்வியும்.




பெரியவள் கூறியதில் மறுப்பாய் தலையசைத்தான் ஆரியன்.. " ஏன்மா உங்க பொண்ணுக்கு இன்ஜினியரிங் தான் படிக்க ஆசைனா அதையே படிக்க வைக்கலாமே... சொல்லப்போனா இன்ஜினியரிங் ரொம்பவே நல்ல கோர்ஸ்.. நானும் கூட இன்ஜினியரிங் தான் முடிச்சிருக்கேன்.. " கூறும்போது அவள் விழிகள் கொஞ்சம் மலர்ந்து நின்றது. தன் கனவிற்கு துணை வருகிறானே..




"அது சரி.. உங்க பாப்பா என்ன படிக்கப் போறா.. " திரும்பி கேட்டார் பாக்யா..



நான் என்னோட ட்ரீம் காலேஜ் தாமா..  த்ஜ்ல் காலேஜ்.. கோயம்புத்தூர்ல இருக்கு.. கண்டிப்பா படிச்சா அங்க தான் படிப்பேன்.. " உறுதியாய் அவள் கூறிட.. " ஆமா ஆமா இவ படிச்சா அங்கதான் படிப்பா.. ஆனா இவ எடுத்த மார்க்குக்கு அங்க சீட்டு கொடுப்பாங்களான்னு தான் தெரியல.. " கேலியாய் கூறினான் அண்ணன் காரன்.



ம்ம்க்கும்.. முறுக்கிக் கொண்டு திரும்பியவள்..  அந்த காலேஜ்ல சீட் கிடைச்சா தான் நான் படிப்பேன்.. என உறுதியாய் கூறியபடி ஜான்வியிடம் திரும்பி.. " உனக்கு பிடிச்ச மாதிரி நீயும் இன்ஜினியரிங்கே படி டி.. அண்ணன் தான் நல்ல படிப்புன்னு சொல்றானே.. இங்க பாரு.. எங்க அண்ணன் படிச்சு நல்ல வேலையில இருக்கான்.. நிறையவும் சம்பாதிக்கிறான்.. அப்புறம் என்ன.. " அவள் கூட அவள் விழிகள் தாய் என கூறுவாரோ என எதிர்பார்ப்போடு அவர் முகத்தில் நிலைத்தது.




" எல்லாம் சரி தான்.. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி பணமும் தேவைப்படுமே.. போதிய சான்றிதழ் இல்லாம பேங்க்ல கூட பணம் கொடுக்க மாட்டாங்களாம்.. நான் இதை படிக்கணும்னு சொன்ன போவே தெரிஞ்சவங்க கிட்ட விசாரிச்சு பாத்துட்டேன்.. " சோர்வோடு கூறினார் பாக்கியம்..




"அட.. பணத்த பத்தி ஏன் நீங்க கவலை படுறீங்க.. நல்லா படிக்கிற பொண்ணு.. படிக்க வைத்து வேலை மட்டும் வாங்கி கொடுத்துட்டீங்கண்ணா  அவ லைஃப் செட்டில் ஆகிடுமே..  பணத்தை பத்தி நீங்க எதுவும் கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் அரேஞ்ச் பண்றேன்.." அவன் சர்வ சாதாரணமாய் கூறியதும் ஜான்வின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது என்றால் பாக்கியத்தின் கண்கள் பரிதவிப்பானது.




" ஐயோ தம்பி உங்களுக்கு ஏன் வீண் சிரமம்.."


" இதுல ஒன்னும் சிரமம் இல்லை.. நான் வேலை பாக்குற கம்பெனியில நல்லா படிக்கிற பொண்ணுங்களுக்கு மாசா மாசம் ஸ்காலர்ஷிப் அமௌன்ட் போடுவாங்க.. அதுல உங்க பொண்ணு பேர சேர்த்துட்டா அவளுக்கும் அந்த பணம் வந்துடும்.. நீங்க பணம் கட்டவேண்டிய அவசியமே இல்லை.. " அவன் கூறிய செய்திகள் தாய்மகள் இருவரின் கண்களிலும் மலர்ச்சி.




" தனக்கு பிடித்த படிப்பை படிக்கப் போகிறேன் " என்ற எண்ணத்தில் குத்தாட்டம் போட்டது அவள் மனது.. மகள் ஆசைப்பட்டு கேட்ட விஷயத்தை செயல்படுத்த போகிறோம் என்பதில் அந்த தாய் முகத்திலும் மகிழ்ச்சி.



" நல்ல காலேஜா பார்த்து அவளுக்கு பிடிச்ச கோர்ஸ் எடுங்க.. பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்.. " என்றவன் கையோடு சில சர்டிபிகேட்டை வாங்கிக்கொண்டு  தங்கையோடு சென்றுவிட்டான்.




அடுத்த அடுத்த நாட்களில் அங்கிருந்ததிலேயே பெரிய கல்லூரியில் அவளுக்கு பிடித்த இன்ஜினியரிங் கோர்ஸ்சில்.. மிதாவிடம் கேட்டு அவள் அண்ணன் படித்தது சிவில் என அறிந்து.. தானும் அதையே எடுத்து கொள்ள.. பணம் கட்டும் வேளையில் சூட்கெசோடு அங்கு வந்திருந்தான் ஆரியன்.




கையோடு பணத்தை கட்டி கல்லூரியில் இருந்து வெளிவந்தனர் மூவருமாய்.. ஜான்விக்கு ஏதோ கனவில் இருப்பது போல் தோன்றியது.. நடக்கவே நடக்காது என வெறும் கனவில் மட்டும் கண்ட ஆச்சரியம் இப்போது ஒன்றொன்றாய் தன் வாழ்வே நடக்க ஆரம்பித்து இருந்ததில் அதற்கு காரணமானவனின் மீது மொத்தமாய் விழுந்திருந்தாள். அவன் பார்வை.. சிரிப்பு.. பேசும் ஒரு வார்த்தைகளும் என அனைத்தையும் நெஞ்சில் இனிமையாய் கோர்த்துக் கொண்டவளின் கண்கள் அவனோடு ஒட்டி நின்றது.



" தம்பி.. நீங்க செஞ்ச உதவியை என்னால மறக்கவே முடியாது.. கடவுளே நேரத்துக்கு உங்கள அனுப்பி விட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்.. பெரிய உதவி பண்ணிருக்கிங்க..'' மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி கைகூப்பிய பாக்யாவின் கரத்தை பதறி இறக்கினான் ஆரியன்.



"  பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்கம்மா..  இதுல நான் செஞ்சது இன்னும் ஒன்னும் இல்ல.. உங்க பொண்ணு வாங்கினா மார்க்குக்கு அவளுக்கு கிடைச்ச நன்கொடை.. அவ்வளவு தான்.. " அவன் அடக்கம் அவள் மனதில் விருட்சமாய் படர்ந்தது..




அடுத்தடுத்த நாட்களில் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து இருந்தாள் ஜான்வி. மிதா கேட்ட பெரிய கல்லூரியில் அவள் மதிப்பெண்ணுக்கு சீட்டு கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை.. வேற காலேஜ் கூட பார்க்கலாம் என அவள் வீட்டில் எவ்வளவோ எடுத்துக் கூறியும் மறுத்துவிட்டாள்.. இப்போது வீட்டில் தான் இருக்கிறாள்.. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர் அவள் வீட்டினர்.







அன்று வார இறுதி விடுமுறை.. விடுமுறைக்கும் சேர்த்து கொடுக்கப்பட்டிருந்த கல்லூரி வேலைகளில் மூழ்கி இருந்தாள் ஜான்வி.. சுட்டெரிக்கும் வெயில் அவள் தலையை சூடு செய்து கொண்டிருக்க.. திடீரென அருகில் ஒரு உருவம் நிழலாடியதில் அவள் விழிகள் நிமிர்ந்தன.



"மிதா.." அவளை கண்டவளின் முகத்தில் மலர்ச்சி.. மகிழ்ச்சி.. தோழி அவளை பாய்ந்து கட்டிக் கொண்டாள் ஜான்வி.



இந்த சில காலமாய் கல்லூரிக்கு காலையில் மாலையிலும் ஓடிக்கொண்டிருந்தவளால் தோழியை பார்க்க முடியாமல் போனதே..



" என்ன மேடம் காலேஜ் எல்லாம் எப்படி போகுது.. " தோழியை அரவணைத்தபடி கேட்டாள் மிதா.




" போகுதடி.. இதை பாரு.. " சோம்பலாய் கூறினாலும் அவள் விழிகள் மகிழ்ச்சியோடு  கிழே கிடந்த புத்தகத்தை காட்டி கூறிட.. " என்ன மறந்துட்ட இல்ல

. பாக்கவே வரல.. " முறைத்தாள் மிதா..




"பாவி.. உன்ன போய் எப்படிடி நான் மறப்பேன்.. உன்னை நினைக்காத நாளில்லை தெரியுமா.. அங்க அத்தனை பேர் இருந்தாலும் நீ இருக்கிற மாதிரி இருக்காது.. நானும் உன்ன பாக்க வரணும்னு தான் நினைப்பேன்.. ஆனா எங்க..  இப்படி அசைன்மென்ட் வேலை கொடுத்தா நகரவே முடியரது இல்ல.." ஜான்வி பதறி கொண்டு கூறியதில் சிரித்தாள் மிதா.




" அடியே சும்மாதான் சொன்னேன் அதுக்கு ஏன் இவ்வளவு பதறுற.. சரி கிளம்பு.. " என்றவளை புரியாமல் பார்த்தாள் ஜான்வி.




" என்ன மேடம் புரியலையா இன்னைக்கு என்ன நாள்.. " கேட்டதும் வீட்டிற்குள் தொங்கி கொண்டிருந்த காலண்டரில் பட்ட அவள் கண்கள்.. சட்டென விரிந்து மிக முகத்தில் நிலவித்தது.. " உங்க அம்மா அப்பா கல்யாண நாள்!!" மிதா வீட்டின் அனைத்து விஷயங்களும் ஜான்விக்கு அத்துபடி.


"ம்ம்ம்..  அதுக்கு தான் கிளம்பு.''



" ஐயோ நான் எதுக்கு.. " பதறினாள் ஜான்வி.. தான் அங்கு சென்றால் அவள் வீட்டில் யாருக்கும் பிடிக்காதே..



பதறியவளை முறைத்தாள் மிதா. " என்னடி எல்லாத்துக்கும் இப்படி பதறிகிட்டே இருக்க.. நீ எதுக்கா.. நீ என் ஃப்ரெண்ட், நீ வராம எப்படி.. " என்றவளின் பாசம் அவளை சற்று வழுக்க தான் வைத்தது. ஆனாலும் தாயின் பேச்சை மீறி அங்கு செல்ல முடியாதே..  



" இனி அவர்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது என தாய் கூறிய நாளில் இருந்து அவர்கள் வீட்டிற்கு சென்று இருக்கவில்லை ஜான்வி.. இப்போது மட்டும் எப்படி என அவள் தவிப்பாய் பார்த்தபடி..



" ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மிதா.. நான் அங்க வந்தா யாருக்கும் பிடிக்காது எங்க அம்மாவும் என்னை போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. " என்றவளை இடுப்பில் கை வைத்து நொடித்துக் கொண்டு பார்த்தாள்.



திடீரென நீ சொன்னது சரிதான் அண்ணா.. " அவள் கூறியதும்.. அண்ணா என்ற வார்த்தைகள் ஜானவியின் வழிகள் விரிந்தன.



" அப்படின்னா அவரும் வந்திருக்காரா.. " அவள் விழிகள் மிதாவிற்கு பின்னை எட்டிப் பார்த்தபடி ஆர்வமாய் தேடின.




"மிதும்மா.." என்றபடி பிடரி பற்றி முன்னே வந்தவனின் பார்வை ஆழமாய் எதிரில் நின்றவளை தொலைத்ததாய் அவள் விழிகள் ரெண்டும் விரிந்தன.




" இதனை நாட்களாய் அவனை பார்க்காதற்கும் சேர்த்து அந்த ஒரு நொடியில் வாயை பிளந்து கொண்டு நின்றாள்.




" நீ சொன்னது சரிதான் அண்ணா.. இவ இனி நம்ம கூட எல்லாம் வரமாட்டா.. இவளுக்கு நான் எல்லாம் முக்கியமே இல்ல.. வா.. முகம் தொங்கப்போட்டு அவள் செல்ல போக.. 




ஒரு மாதிரியான இருதலை கொள்ளி எறும்பின் நிலையில் நின்றாள் அவள். 



" அம்மா கிட்ட கேட்டா கண்டிப்பா கோபம் தான் படுவாங்க.. வேண்டாம்னு தான் சொல்லு வாங்க.. ப்ளீஸ் னா வரல டி " தாயைப் பற்றி நன்கு அறிந்தவளாய் ஜான்வி கூறிட.. 




.. " அதுதான் பிரச்சனைனா உங்க அம்மா வீட்டுக்கு வரதுக்குள்ள திரும்ப உன்னை கொண்டு வந்து வீட்டில் சேர்க்க வேண்டியது எங்க பொறுப்பு.. இப்ப ஓகேவா.. "கேட்டான் ஆர்யன்.  உண்மையாகவே தங்கைக்காக தான் கேட்கிறானோ.. 




நிலைத்து விழிகளோடு யோசித்தாள். எப்படியும் தாய் வருவதற்கு மாலை 5:00 மணிக்கு மேல் ஆகும்.. அதற்குள் இவர்களோடு சென்று விட்டு வந்தால் என்ன..  மிதாவோடு இவரும் அழைக்கிறாரே.. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின் அவர்களோடு நேரத்தை கழிக்க வாய்ப்பு.. அதோடு அவர்கள் அழைப்பை விட்டு விடவும் மனமில்லை.. " சரி வரேன்.. " வேகமாய் உள்ளே சென்றவள் இருந்ததிலேயே  நல்லதான ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கிளம்ப ..  அங்கே தன் வாழ்வை மாற்ற போகும் மிகப்பெரிய சம்பவம் நடக்கப்போவதை  அந்த நேரம் அவள் அறிந்திருக்கவில்லை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...