முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 18

 பாக்யா வருவதற்குள் அழைத்து வந்து விட்டு விடுகிறோம் என கூறினாலும் அவர்கள் பேச்சை கேட்டு காரில் ஏறி அமர்ந்தவளுக்கு நெஞ்சம் திக்திக்கென துடித்தது.



"மிதா சீக்கிரமா வந்துடலாம்ல.. அம்மாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாங்க டி.. "என்றவளிடம்..

"அதான் அண்ணன் நேரத்துக்கு கூட்டிட்டு வந்து விட்டுடாறேன்னு சொல்லிருக்கான்ல.. ஏதாவது நினைச்சு டென்சன் ஆகிகிட்டே இருக்காம பீல் ரிலாக்ஸ்.. "பற்றிய அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்தாள் மிதா.




கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க அப்போது தான் சுற்றத்தை கவனிக்கிறாள்.. அவள் வீட்டிற்கு செல்லும் பாதையை தாண்டி நேராய் சென்று கொண்டிருந்தது வண்டி..



"ஏய் மிதா.. வழி தப்பா இருக்கே டி.. அந்த பக்கம் திரும்பனும்.. "பதறியவளை கழுத்து வளைத்து திரும்பி அவன் பார்த்த பார்வையில் கப் சிப்.



"ஏண்டி கத்துற.. நீ போண்ணா.. " அண்ணனிடம் கூறி தோழியிடம் திரும்பியவள்.. "அம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் செலிபிரேஷன் ஸ்டார் ஹோட்டல்ல டி.. அண்ணா அங்க தான் போயிட்டு இருக்கான்.. " அவள் கூறியதில் அதிர்ந்தாள் ஜான்வி.



அவர்கள் வீட்டில் என நினைத்திருக்க.. இப்போது ஹோட்டல் என கூறியதும் பீதியனது அவள் முகம்.



"நீ எதுக்கும் பயப்படாத.. உன்ன நல்லபடியா நேரத்துக்கு வீட்டுல சேர்க்க வேண்டியது என் பொறுப்பு.. " அவள் முகம் கண்டு மிதா கூறிய பின் அவளால் மறுக்க முடியவில்லை...



எப்படியோ நேரத்துக்கு வீட்டுக்கு போனால் போதும்.. என்றவளை "கண்டிப்பா போய்டலாம்.."அவன் கூறிய பின் வார்த்தை வருமா என்ன..




அந்த ஆடம்பரமான ஹோட்டல் முன்பாய் கார் நின்றது.. "இறங்கு ஜானு.."அவள் கை பிடித்து மிதாவும்.. அவள் முட்டை விழிகளை கண்டு கண்களால் அவனும் கூற இறங்கினாள்.



நிறைய பேரை அழைத்திருந்தனர்.. அவள் வீட்டு ஆட்கள் மட்டும் தான் எண்ணி வந்தவளுக்கு அதிர்ச்சி அதிகமானது.. கேளாத நினைவாய் அன்று அவர்கள் வீட்டில் நடந்தது வேறு நினைவு வர இன்றும் அப்படி எதுவும் நடந்து விட கூடாது.. என பரிதவிப்போடு மிதாவிடம் திரும்பினாள். 




மிதா ப்ளீஸ் டி நா வரலயே.. பேச்சு மிதாவிடம் என்றாலும் அவள் பார்வை ஆர்யனிடம் மன்றாடியது.




ஹேய் ரிலாக்ஸ்.. எல்லாரும் எங்க ரிலாட்டிவ் தான்.. கண்டிப்பா அன்னைக்கு நடந்த மாதிரி எதுவும் நடக்காது.. நம்பு ஜான்வி.. அவன் குரலில் அழுத்தம் குளித்ததில் அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவர்களோடு வந்தாள்.



ஆர்யன் மிதாவை தேடி கொண்டிருந்த அவன் கசின்கள் அவனை கண்டு கை ஆட்டிய படி வேகமாய் வந்தனர்.



"ஆர்யா.. எங்கடா போயிருந்த.. எப்படி இருக்க.. வேலைக்குன்னு போக ஆரம்பிச்சதுல இருந்து ஒரு போன் கூட இல்ல.."அவன் தோளில் கை போட்ட படி.."ஹேய் மிதும்மா.. எப்படி இருக்க.."  வாய் முழுக்க பல்லாய் கேட்க..



வழிசல் பார்ட்டி என வாய்க்குள்ளேயே மிதா முணுமுணுத்த படி.. "அம் பைன்.. பாஸ்கர்.. என்ன இப்போவும் வெட்டியா தான் இருக்கியா.. "சுருக்கேன அவனை தைக்க..



"நம்ம வேலைக்கு போகணும்னு என்ன அவசியம்.. நம்ம அப்பா அம்மாவே நம்ம பிள்ளைகளும் உக்காந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து சேத்து வச்சிருக்காங்க.. அப்படி இருக்கும்போது வேலைக்கு போய் கஷ்டப்படணும்னு என்ன தலை எழுத்தா.. இவன் கிட்டயும் அத தான் சொல்றேன்.. சொன்னா கேக்க மாட்டேங்குறானே.."என்றவனை தோளில் தட்டினான் ஆர்யன்.




அவன் பேச்சில் தலை முறை அமர்ந்து உண்ணும் அளவிற்கு பணமா என எட்டாக்கனியாய் ஜான்வி ஆச்சர்யமாய் பார்த்தாலும்.. அதற்காக அவன் கருத்தில் ஒப்பு கொள்ள முடியாது மீண்டும் அவர்கள் பேச்சை கவனித்தாள். 




அவன் கூறியதை கேட்டு பட்டென பற்கள் தெரிய சிரித்தான் ஆர்யன். 


"வேலைக்கு போறது காசுக்காக மட்டுமே கிடையாது பாசு.. ஒரு மனநிம்மதிக்காக.. ஆதரவுக்காக.. நம்ம அம்மா அப்பாவுக்கு.. கூட பிறந்தவங்களுக்கு.. நம்ம காசுல ஏதாவது வாங்கி தர்றப்போ கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது.. இப்போ இது உனக்கு புரிய வாய்ப்பில்லை முருகேசா..நம்ம காசுல நம்ம வாழுறது தான் மதிப்புங்குறத விட.. அது ஒரு ஆத்மார்த்த மான திருப்தி.. அவன் முகம் போன போக்கில் ஆர்யன் கூறி முடிக்க .. சபாஷ் போடலாம் போல் ஜானவியின் விழிகள் மின்னின..



எவ்வளவு அழகாய் விஷயத்தை எடுத்து கூறி விட்டான்.. ஆனால் பாஸ்கர் தான் அவன் கூறியது புரியாமல் ங்கே.. வென விழித்து நின்றான்..



"இப்போ அண்ணா சொன்னது ஒன்னும் உனக்கு புரியல தானே.."மிதா கேலியாய் கேட்க.. "திருதிருவென விழிகளை உருட்டியவனாய்.."புரியாம என்ன.. நல்லாவே புரிஞ்சுதே.."தலையை மாடாய் உருட்டினான்.




புரிஞ்சா சரி தான்.. ஒரு மார்க்கமாய் உதடு பிதுக்கிய படி.. வா ஜானு.. நம்ம உள்ள போகலாம்.. தோழியிடம் திரும்பினாள் மிதா. அவளை கண்ட பாஸ்கரின் பார்வை அசூயையானது.





"மிது.. யார் இது.. " என ஒரு மார்க்கமாய் முகம் சுழித்து கேட்டதில் அவன் முகம் போன போக்கிலேயே அடி பட்டு அசௌகரிமானாள் ஜான்வி.




"இவ என் பிரண்ட்.. "என அவள் தோள் மீது கை போட்டு மிதா கூறிய வார்த்தைகளில் இறுக்கம் தளரவில்லை.



"வாட்.."அதிர்ச்சியாய் கேட்டான் பாஸ்கர்.. ஜானவியை தலை முதல் பாதம் வரை அவன் ஊடுருவிய பார்வை ஒன்றும் அத்தனை சரியானதல்ல..


"நா கிளம்பிடுறேனே.."மிதா காதுக்குள் கூறிய படி பின் செல்ல போனவளை ஒரு கரம் அழுத்தமாய் பற்றி நிறுத்தியது.. ஆனால் இம்முறை மிதா அல்ல.. ஆர்யன்..



"நீ எதுக்காக போகணும்.. இன்னைக்கு முழுக்க எங்க கூட தான் இருக்கனும்.."என்றவன் சுடு பார்வையோடு பாஸ்கரிடம் திரும்பினான்.



"இப்போ என்ன உனக்கு.."நேரடியய் அவன் கேட்ட கேள்வியில் தடுமாறி.. இல்லடா ஆர்யா.. இந்த பொண்ணு டிரஸ்சும் ஆக்ட்டீஸ்சும் கொஞ்சமும் கிளாஸ் இல்லாம.. " ஆர்யன் பார்வையில் முடிக்க முடியாமல் அவன் இழுக்க.. "அதுக்கு என்ன.."சுள்ளேன வந்த அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.



"களாஸ்ங்கிறது அவுட் லுக்ல மட்டும் கிடையாது பாஸ்கர்.. சொல்லப்போனால் அந்த பொண்ணும் நல்ல க்ளாஸ் தான்.. நம்ம எல்லாரும் நம்ம அம்மா அப்பாவோட காசில தான படிச்சோம்..  இன்னைக்கு இப்படி ஒரு வேலையில இருக்கோம்னா அதுக்கு காரணம் நம்ம அம்மா அப்பா.. ஆனா அவ அப்படி கிடையாது..  அவளுடைய சொந்த முயற்சியில ஸ்காலர்ஷிப் எடுத்து அந்த காசில படிச்சு அவளோட வாழ்க்கையை முன்னேற்றிக்கிட்டு இருக்கா.. போதுமா.. இதுக்கு மேல வேற எதுவும் நீ சொன்ன கிளாஸ்க்கு தகுதியா வேணுமா.. ஆரியனின் உறுதி குரலில் பாஸ்கரின் முகம் சுருங்கியது என்றால் இந்த இன்னொருவளுக்கோ மனதில் பூ பூத்து நிரம்பி வழிந்தது..



தனக்காக இவ்வளவு தூரம் அவன் உறவினன் நண்பன் என்றும் பார்க்காமல் நின்று வாதாடுகிறானே..  இவ்வளவு நாளாய் கண்டும் காணாமலுமாய் கசிந்துருகிய காதல் இப்பொழுது முதன்முறையாய் அவன் கண்களை நேருக்கு நேராய் மோதி கசிந்து நின்றது. அவன் பற்றிய தன் தளிர்க்கரத்தில் ஏதோ புதுவிதமான வெம்மை உருவாவதாய் உணர்ந்தாள். வேகமாய் மூச்சு வாங்கியது.



"வா.." ஒற்றைச் சொல்லோடு பற்றிய அவள் கரத்தை விட மறந்தவனாய் முன்னேறினான் ஆரியன். 



அண்ணனும் தங்கையும் வெளியே சென்ற போதே அன்று போல் ஏதாவது நடந்து விடுமோ.. என பூனை நடையாய் அந்த பெரிய ஹாலை அளந்து விடும் பொருட்டு வேகமாய் நடந்த படி அவ்வப்போது வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களிடம் பேசுவதும்.. அப்படி எதுவும் இருந்து விட கூடாது என பரிதவிப்போடு வாசலை பார்ப்பதுமாi இருந்த மணிமேகலை.. தன் மகன் அவள் கரம் பற்றி உரிமையோடு உள்ளே அழைத்து வருபதை கண்டு விழி விரிந்து போனாள்.



"இது என்ன அபத்தம்.. இவளை இங்கு அழைத்து வருவதே தேவையில்லாத செயல்.. இதில் அவளை கரம் பற்றி ஏதோ உரிமையானவள் போல் அவன் அழைத்து வந்த தோரணை " அவள் வயிற்றை பற்றி எரிய வைத்தது.. வெளியில் நடந்த விஷயம் அவளுக்கு தெரியாதே..



வேகமாய் அவனிடம் வந்தாள்.. பார்வை பாராபட்சமின்றி அவளை முறைத்தது.. அழுத்த பார்வையோடு நிற்கும் மகன் பொருட்டு தன் கோப ஜூவாலையை உள்ளேயே அடக்கி கொண்டவளாய்.. "ஆர்யா.. இவள எதுக்குப்பா இங்க கூட்டிட்டு வந்துருக்க.."ஏதோ பார்க்க கூடாத அருவருப்பை கண்டது போல் அவள் முகம் சுணங்க.. "பாப்பா ஆசைபட்டா அம்மா.."அவன் வார்த்தையில் ஒருவளுக்கு எரிச்சல் அதிகமானது என்றால் ஜான்விக்கோ அவன் தன் கரம் பிடித்து வந்ததில் உண்டான குளுமை சற்று மட்டுப்பட்டது.




அப்போ மிதாவுக்காக மட்டும் தானா.. அவன் கண்களையே பார்த்த படி அவள் நிற்க.. தான் பேசினாலே அழுது கொண்டு ஓடி விடுபவள் இப்போது தன் மகனை இப்படி வாரி சுருட்டி பார்த்து அதே இடத்தில் ஆணி அறைந்தார் போல் நிற்பதில் பல்லை கடித்தாள் மணி.. அன்று அந்த பாக்யத்தை நாக்கை பிடுங்கிவதை போல் அத்தனை கேள்வி கேட்ட பின்னும் இப்படி அனுப்பி விட்டிருக்கிறாளே.. கொஞ்சமும் சூடு சொரணை இல்ல.. பல்லை கடித்தாள்.



மிதா பிறந்தநாள் முடிந்த அடுத்த நாள் வேலை முடித்து பாக்கியம் வரும் போது மெனக்கேட்டு காரை நிறுத்தி முதல் நாள் தன் வீட்டில் நடந்ததை கூறியதோடு.. "இனி கேசரி கொடுக்குறேன்.. அல்வா கொடுக்குறேன்ன்னு உன் பொண்ணு என் வாச படில காலை வச்சான்னு வச்சுக்கோ.. வச்ச காலை வெட்டவும் தயங்க மாட்டேன்.. என்ன அம்மாவும் பிள்ளையும் இப்படி பெரிய இடத்து பசங்கள வளைச்சு போட்டு சீக்கிரமா பணக்காரங்களா ஆகிடலாம்னு எண்ணமா.. மணிமேகலை கேட்ட கேள்விகள் துடிதுடித்துப் போனார் பாக்கியம்.



" என் மகளை பத்தி இப்படி அவதூறா பேசாதீங்க.. "   பெற்றவளாய் பாக்கியம் சீறி கண்ணீர் வடித்ததில் ஏளனமாய் இதழ் பிதுக்கினாள் மணிமேகலை..



" இந்த வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. உண்மையாவே உனக்கு ரோஷம் இருந்தா.. சாப்பாட்டில் உப்பு போட்டு தான் சாப்பிடுறேன்னா.. இனி உன் மகளை என் வீட்டு பக்கம் விடாதே.. இனி என் பொண்ணு கூட உன் மகளை பார்க்கக்கூடாது.. " என கூறிவிட்டு மணிமேகலை அந்த இடத்திலிருந்து சென்று விட்டிருக்க கண்களில் இருந்து கட்டுப்பாடு இன்றி வழிந்த நீரை துடைத்த படி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததை காரின் சைடு மிரர் வழியாய் திருப்தியாய் பார்த்து சிரித்தாளே மணிமேகலை.



" அன்னைக்கு அந்த வேலைக்காரி கிட்ட அவ்வளவு சொல்லியும் இன்னைக்கு  அவ மகளை என் மகன் கூடவே அனுப்பி இருக்கானா அவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும்.. " பல்லை கடித்து நின்றவளுக்கு மகன்  முன் அவளை வசை பாடவும் முடியாத நிலை. அதுவும் மகளுக்கு என அவன் கூறிய பின் தான் எதுவுக் கூறினால் ஆம் அப்படி தான் என தான் கூறியதற்காகவே  விதன்டவாதமாய் பேசவும் அவன் தயங்க மாட்டான்..


ஒருவேளை மனதில் சிறு வித்தாய் கூட அந்த எண்ணம் விழுந்து விட்டால்.. பின் நடப்பது. அய்யயோ.. இத்தனை உறவு காரர்களின் மத்தியில் தன் இமேஜ் அல்லவா கெட்டு போகும்.. அமைதியாய் பல்லை கடித்து போவதை விட வேறு வழியில்லை.. என உணர்ந்து விழிகளை மலர்த்தி அவளை பார்த்தாள் மணி.




உள்ளுக்குள் ஆயிரம் கங்குகள் கணன்று கொண்டிருந்த போதிலும்.. வந்துட்ட.. சரி.. சரி.. போய் கிச்சன்ல உதவியா இரு.. பெரிய மனது பண்ணி கூறிட.. ம்ம்மா.. அழுத்தி அழைத்தான் ஆர்யன்.



"இல்லப்பா ஆர்யா.. தனியா இருப்பா.. போர் அடிக்கும்ல.. "அவன் பார்வையில் பவ்வி கூறிட.. "அதெல்லாம் ஒன்னும் அடிக்காது.. தனியா என்ன.. நம்ம பாப்பா தான் அவ கூட இருக்கால்ல.. அவ பாத்துப்பா.."




"இல்லப்பா.. வேலைகாரிக்கும் கொஞ்சம் துணையா.. இருக்குமேன்னு..."என தன் பிடியில் விடப்பிடியாய் அவள் கூற.. கீழ் கண்ணால் பார்த்தான் ஆர்யன்.




"என்னம்மா உங்களுக்கு பிரச்சனை...வேல செய்ய தான் இத்தன ஆளுங்க இருக்காங்களே.. பத்தலைண்ணா சொல்லுங்க.. நா அவங்களுக்கு ஹெல்ப் பண்றேன். நம்ம வீட்டு விஷேசத்த நம்ம தானே பாத்துக்கணும்.."மகன் கூறியதில் பதறி அவன் வாய் பொத்தியவளின் கண்கள் யாரவது அவன் கூறியதை கேட்டு விட்டார்களா என பார்த்து.. இல்லை என அறிந்து அருகில் நின்றவளை உறுத்து விழித்தது.




"சரிப்பா.. இப்போ என்ன இவள எதுவும் சொல்ல கூடாது.. அதானே.. போ.. கூட்டிட்டு போ.."கையை காற்றாய் வீசியதில்.. "வா ஜான்வி.." அவளை உள்ளே அழைத்து சென்றான் ஆர்யன்.




வண்ண விளக்குகள் மின்ன அங்கிருந்த ஒவ்வொரிலும் பண செழுமை கொட்டி தெரிந்தது.. வாழ்வில் முதன் முதலாய் இதை எல்லாம் பார்ப்பவளுக்கு ஆச்சர்யம் தானே.. ஆனால் சுழன்று வந்த அவள் விழிகளோ அருகில் நின்றவன் மீது காந்தமாய் படிந்து ஒட்டி கொண்டது.. ஒரு கரம் மிதாவிடம் இருக்க.. மறு கரம் இன்னும் அவன் வசம் தான்.. 




"ஏன் விட்டா யாரும் என்ன ஏதாவது சொல்லிடுவாங்கனு பிடிச்சு வச்சுருக்காரா.." எண்ணும் போதே நெஞ்சுக்குள் பூகம்பம் வெடித்தது..


"ஆர்யா.."அவன் குரல் கேட்கும் இடமெங்கும் அவளையும் அழைத்து சென்றான்.. அவள் தரம் குறைவான உடையை மற்றவர்கள் ஒரு மாதிரியாய் பார்த்தாலும் அவன் கை பிடித்து வந்ததை கண்டதும் உடனே அவர்களின் விழிகளில் மரியாதை தொற்றியதை உணர முடிந்தது அவளால்.




"காண காண பொறுக்க முடியாத அளவிற்கு மணிமேகலை போசுங்கி கொண்டு நின்ற போதில் தான்.."ஆன்ட்டி.." அவள் அருகில் வந்து நின்றான் பாஸ்கர்.




உடனே முகத்தை சாதாரணம் போல் வைத்தபடி .. "வா.. வா.. பாஸ்கர்.. என்ன விஷயம்.. "என பொத்தாம் பொதுவாய் கேட்டதும்.. "உங்களுக்கும் அந்த லோக்கல் டிக்கெட்ட பிடிக்கலல்ல.."அவன் கேட்டதில் அதிர்ச்சி குளித்து  திரும்பினாள் மணி.. என்ன தான் கணவனின் அக்காள் மகன் என்றாலும்.. ஆர்யனுக்கும் அவனுக்கும் நெருக்கம் இருப்பது அவளுக்கு தெரியும்.. 



"நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. அந்த பொண்ணு வந்ததுல இருந்து உங்க முகம் சரியில்லயே.." அவன் கெட்ட தொணியில் அவள் விழிக்க.. "எனக்கும் தான்.."அவன் முத்தாய்ப்பாய் வைத்த வார்த்தையில் அவள் விழிகள் முட்டின.




"எஸ்.. ஆன்ட்டி.. அவ ஆளும் டிரஸ்சும்.. இங்க இருக்குற வேலக்காரி கூட நல்ல டிரஸ் போட்டுருக்கா.. ஆனா இவ.. ஷிட்.. இப்படி தராதாரம் இல்லாதவங்க கூட இந்த ஆர்யன் எப்படி பழகுறான்.." அவள் மன குரலாய் பாஸ்கர் கேட்டதில் நிம்மதி கொண்டு.. "எனக்கும் அதே தான்.. பாஸ்கர்.. எப்படி கொஞ்சமும் இங்கிதம் இல்லாம இவனால பழக முடியுது.. " முகத்தை சுழித்தாள் மணி மேகலை.



"கூல் ஆன்ட்டி.. நீங்க பெர்மிஷன் குடுத்தா இதுக்கு நா ஒரு ஐடியா சொல்றே..."அவன் கூறியதில் குள்ள நரி கூட்டு சேர்ந்ததாய்.. விழிகள் மின்ன அவன் கூறியதை கேட்டு முடித்த மணியின் கண்கள் விரைத்தன.



"என்ன பாஸ்கரா இப்படி எல்லாம் சொல்ற.. அவளை எனக்கு பிடிக்காது தான் ஆனா இந்தளவுக்கு ஒன்னும் அவ மேல எனக்கு எந்த வெஞ்சன்ஸ்சும் இல்ல.. " 




"ஆனா எனக்கு இருக்கே.."வாய்க்குள் முணுமுணுத்தவனை என்ன சொல்ற.. என புரியாமல் தலை குனிந்து அவள் கேட்க..வாசலில் நடந்த விஷயங்களை பாதி கூறியும் மறைத்தும்.. போயும்போயும் ஒரு அன்னக்காவடிக்காக என்ன மட்டம் தட்டி பேசிட்டு போறான் இந்த ஆர்யன்.. ஏதோ பெரிய மகாராணி மாதிரி அவன் கைய பிடிச்சுட்டு அவள் நின்னது.. இரிடேட்டிங்.. என் நண்பன் இப்படி அவன் தகுதிய இறக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல.. அதுக்கு தான் இந்த ஐடியா.."



"ஆனா இப்படி செஞ்சா எப்படி.. ஆர்யன் மனசு மாறி உண்மையாவே அவளை ஏத்துக்கிட்டான்னா.. "



"அதுக்கு 1% கூட வாய்ப்பில்லை.. ஆர்யனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. இந்த விஷயத்துல அவன் என்ன சொன்னாலும் காம்பரமைஸ் ஆகவே மாட்டான்.. பாக்க மார்டனா இருந்தாலும் அவனுக்குன்னு ஒரு கோட்பாட வச்சுக்கிட்டு அதன் படி வாழுறவன்.. திடீர்னு ஒருத்தி வந்து இப்படி சொன்னா.. அவன் கோபம் மொத்தமும் அவ பக்கம் தான் திரும்பும்.. கொஞ்சம் கொஞ்சம் அவ மேல ஏதாவது சாப்டு கார்ணர் இருந்தாலும் இந்த விஷயத்தால எல்லாம் மாறிடும்"



"நீ சொன்ன மாதிரி நடந்தா சரி தான்.. ஆனா அதுக்காக இவ்வளவு பெரிய வேல செய்யணுமா பாஸ்கர்..."



"இல்லனா அந்த பொண்ண நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க போறேன்னு உங்க பையன் முன்னாடி வந்து நிறுத்துவான்.. "தலையாட்டிக்கிட்டு இரண்டு பேர் கல்யாணத்துக்கு மண்டபம் பாக்க ரெடி ஆகுங்க.."அவன் கூறியதில் அய்யயோ.. பதறினாள்.



"அப்படி மட்டும் உன் வாயால சொல்லாத பாஸ்கர்.. நினைக்கவே அருவருப்பா இருக்கு.."உடலை ஒரு மாதிரியாய் உலுக்கிய படி அவள் கூறியதில்..  "அப்போ இதுக்கு சம்மதம் சொல்லுங்க..அத சக்ஸஸ்புல்லா முடிக்க வேண்டியது என் பொறுப்பு.."அவன் கூறியதில் தன் மகன் பார்வை அவள் பக்கம் கூட செல்ல கூடாது என்பதில் தலையை உருட்டினாள். இதழுக்குள் மறைத்த வக்கிர சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான் பாஸ்கர்.



குள்ள நரி ஒன்று தனக்கு வலை தீட்டுவதை அறியாமல் தன் ஆருயிர் தோழியுடனும் நெஞ்சம் கவர்ந்தவனுடனும் நேரத்தை ஆழ்ந்து அனுபவித்து செலவிட்டு கொண்டிருந்தாள்..



பெரிய விழா போல் வைத்திருந்ததற்கு ஏற்ப பப்பே முறையில் உணவுகளையும் குவித்து வைத்திருந்தனர்.. ஒரு பக்கம் பாரும்.. மறுபக்கம் பெரிய ஸ்கிரீனுமாய் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து கொண்டிருந்தது..




அந்த ஸ்கிரீனுக்கு முன்னால் பெரிய மேடை போன்ற அமைப்பு.. அனைத்தையும் பார்க்க பார்க்க கண்கள் இரண்டும் போதவில்லை ஜானவிக்கு.. ஆனால் அதையும் தாண்டிய போதையாய் அருகில் அவன்.. ஏனோ வழக்கத்தை விட அதிகமாய் அவளை ஸ்வீகரித்தது அவன் விலை உயர்ந்த கோர்ட்சூட்டினாலோ.. அல்லது அவளுக்கே அவனாய் நடந்து கொண்டதோ..



இரண்டாவது தான்.. என்பதை அவள் கண்கள் காட்டி கொடுத்தது.. இந்த நிமிடம் மட்டும் கடவுள் இங்கிருக்கும் எதெல்லாம் உனக்கு வேண்டுமோ எடுத்து கொள்.. என கூறினால் அவள் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை என் ஆரி.. என்பதாக தான் இருக்கும்.

.



எப்போது தன் மனதிற்கு இவ்வளவு நெருக்கமானான் என தெரியவில்லை.. தோழி கூறிய போது சினிமா ஹீரோ மேல் ஏற்படும் சின்ன ஆசை போல இருந்த துளி ஒன்று அவன் ஒவ்வொரு செயலிலும் தன் வேர் விட்டு.. இப்போது விருட்சமாய் அவள் நெஞ்சம் முழுதும் பரவி காணப்பட்டது..




இப்படி ஆசை படவோ.. காதலிக்கவோ தனக்கு எந்த தகுதியும் இல்லை என்பது ஏனோ அவளுக்கு தோன்றவே இல்லை.. ஒரு வேளை தோன்றினாலும் அதற்காக அவள் மனதை மாற்றி விட முடியுமா.. என்றால் பதில் நிச்சயம் இல்லை தான்.. 



இதோ இப்படி நகர மறுத்து நிற்கும் இந்த கண்களை என்ன செய்து விலக்குவதாம்.. கண்களில் மின்னல் வெட்ட அவள் நின்று கொண்டிருந்த வேளையிலேயே.. ஹேய் மிது.. ஒரு பக்கம் யாரோ அழைத்தனர்..என இதோ வருகிறேன்.. என ஓடி போனாள் அவள்.



ஆர்யனின் கரம் பிடித்து அவள் நின்ற சமயம்..


வா வா பக்கம் வா

பக்கம் வர வெக்கமா.. டிஜே பாட்டு ஆர்ப்பரிக்க.. ஆளுக்கொருவராய் தம் தம் இணையை இடை வளைத்து அந்த மேடைக்கு நகற்றி பாடலோடு தங்களுக்குள் மூழ்கி நடனமாட ஆரம்பித்தனர்..




ஹேய் ஆரி.. லெட்ஸ் கம்.. உன் பார்ட்டினர கூட்டிட்டு வா.. ஒருவன் அவனோடு நின்ற ஜான்வியை கை காட்டி கூறிட.. இன்பமாய் அதிர்ந்தவளை மயக்கும் கண்களோடு திரும்பி பார்த்தவன்.. என்ன போகலாமா.. கேட்டதில் குறும்பு கொப்பளித்ததோ..



"ஆனா எனக்கு இதெல்லாம் தெரியாதே.."மருண்டவளை.."அது பரவாயில்ல.. நா பாத்துக்கிறேன்.. என்ன என்ன நம்பி வர்றியா.."ஒற்றை புருவம் அவன் கேட்டதில் தானாய் அவள் முகம் மலர்ந்தது.. உன்னை தவிர வேறு யாரை நான் நம்ப போகிறேன்.. என அவன் நீட்டிய கரம் மீது தன் கை வைத்தாள். அவளை சுழற்றி அந்த மேடைக்கு நகற்றி இருந்தான் ஆர்யன்.




ஆனந்த உலகம்

அந்தி வரும் பொழுதில்

தொடங்கிடும் சுவையாக.. அவள் இடையை தன்னோடு இழுத்து பிடித்தான்..



ஆசையில் தொடங்கி

ஜாடையில் மயங்கி

மகிழ்ந்திடும் பொதுவாக.. அவன் கண்களில் மயங்கினாள்.



மாலை வேளை மன்னன் லீலை

மாலை வேளை மன்னன் லீலை

ஆடவர் வரலாம்

அங்கங்களை தொடலாம்

அன்பில் நீந்தலாம்.. பாடலில் கரைந்தவர்களின் விரல்கள் எப்போது தன் எல்லையை விட்டு நீண்டதோ.. ஒருவருக்கு ஒருவராய் அணைத்த நிலையில் அவளை தன் நெஞ்சுக்குள் பதுக்கி இருந்தான் ஆர்யன்.. அவன் கதகதப்பில் அவள் தேகம் வெம்மை கண்டது.



ஹேய் ஹேய் ஹேய்

டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ

மன்மத மோகத்திலே

ஹ ஹா ஹ ஹா

வாலிப வேகத்திலே

ஹோ ஹோ ஹோ ஹோ

ஏங்குது இளமை

இன்பம் தரும் பதுமை

இனிமை காண வா

அவளை சுழற்றி விலக்கி இடை வளைத்து விழி துளைத்து.. கடைசி வார்த்தைகளில் அவளை பார்வையால் சிலிரிக்க வைத்த கணம்.. அவன் கண்களிலும் தனக்கான காதலை கண்டவளின் முகத்தில் வெட்கம் நிரம்பி வழிந்தது.. 



"ஹேய் ஹேய் ஹேய்

டிஐஎஸ்சிஓ டிஸ்கோ டிஸ்கோ.. பாடல் முடிய அனைவரின் கை தட்டல் சத்தத்தில் தான் கட்டியதாய் தோன்றிய அவன் மாயப்பார்வையில் இருந்து வெளி வந்தாள்.




கண்களை படபடவென சிமிட்டி  அடித்து.. அவன் கைகளில் இருந்து வாகாய் விலகி வெட்கம் துளிர்க்க அவள் ஓடியதில் பின்னந்தலை கோதி  இதழில் உதித்த புன்னகையை உள்ளே அடக்க முயன்று தோற்று அவள் பின்னையே தொடர்ந்தான் ஆரியன்..



ஓடி வந்தவளுக்கு மூச்சு வாங்கியது.. அவன் பார்வையில் தனக்கென கண்ட ஒவ்வொரு உணர்வும் அவளை பேயாய் ஆட்டுவித்தது.. அவன் கரம்பட்ட இடம் எங்கும் குளிர்ச்சாரல்..



அருகில் வந்து நின்றவனிடம் பேச வார்த்தைகள் எழாமல் மூச்சு வாங்கி அவள் நின்றதில்.. மேடம் வாட்டர் என அருகில் வந்து நின்ற பேரரிடம் இருந்து அவனே ஒரு கிளாஸ் எடுத்து அவளிடம் நீட்டினான்.




நிமிர்ந்து பார்த்தவளிடம்.. ரொம்ப தவிக்க வச்சிட்டேனா.. என கேட்டதில் அவள் விழிகள் விரிந்தன..


"ஐ.. ஐ மீன்..  டான்ஸ் ஆட வச்சத சொன்னேன்.. எப்போதும் அழுத்தமும் கம்பீரமும் மட்டுமே பொருந்தி வரும் அவன் குரலில் முதன் முதலாய்  தடுமாற்றத்தை கண்டவளுக்குள் பூரிப்பானது.. இது தனக்கே தனக்கானது அல்லவா.." மறக்காமல் வாங்கி அதிலிருந்து மொத்த தண்ணீரையும் அவள் குடித்து முடிக்க.. " இனிதான் கேம் ஸ்டார்ட்.. " தூணுக்கு பின்னால் இருந்து அவர்களைப் பார்த்து சிரித்தான் பாஸ்கர்.  



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...