முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 19

 அவனுக்கொரு பானமும் அவளுகொன்றுமாய் எடுத்து கொடுத்த ஆர்யன் அவன் குடித்து வைத்த அடுத்த கணம் தடுமாறி போனான்.. இமைக்க மறந்து காதலோடு அவனையே குறுகுறுவென பார்த்து நின்ற ஜான்வி அவனின் எதிர்பாராத தள்ளாட்டத்தில்.. அய்யோ.. பதறி அவன் தோளை பற்ற அவன் முழு எடைக்கு அவனை தாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதாய் இல்லை.. தடுமாறிய கால்களை சுதாரிப்பாய் நிறுத்தி கொண்டு அவனை மறு பக்கமாய் சுவற்றில் சாய்த்து நிறுத்தினாள்.




முகத்தை தொங்க போட்டு ஏதோ முனகிய படி அவன் நின்றதில் அவள் நெஞ்சு கூடு பதறி போனது.. அய்யோ.. ஆரி.. ஆரி.. என்னாச்சு உங்களுக்கு.. "என்றவளின் கண்கள் அவசரமாய் மிதாவை தேட அவளை அங்கு காணவில்லை.. 



மேடையிலிருந்து ஓடி வருகிறேன்.. என ஆள் மறைவாய் இருந்த திரைக்கு பின்னாலிருந்த அந்த இடத்திற்கு வந்திருந்ததால் மற்ற யாரையும் அழைக்கும் வாய்ப்பும் இல்லை.




"ம்ம்ம்.. ஹ்ஹ்ம்.. கா.. " வாய்க்குள் ஏதோ முனகி கொண்டிருந்தான் ஆர்யன்.. 



"அய்யோ.. இப்போ என்ன பண்றது.. திடீர்னு இவருக்கு என்னாச்சு.."புரியாமல் அவள் விலக போக.. அடுத்த நொடி நிலை தவறி அவள் மீதே சரிந்தான் ஆர்யன்..




"அம்மாஆஆ.."முழு பாரத்தையும் சரித்து அவள் மீது விழுந்ததில் தானும் விழுந்தவளின் இடுப்பு சுளுக்கி கொண்டது.. எழ கூட முடியவில்லை.



"ஆரி.. ஆரி.. என்ன பாருங்க.. என்னாச்சு உங்களுக்கு.. " அவன் தாடி பதித்த கன்னம் தட்டியவளை "ம்ம்.. ஜா.. னு.. அஹ்ஹ்.. சா.." மீண்டும் முனகல்.. அவன் தன்னை தான் அழைக்கிறான் என தெரிந்தும்.. தொடர்ந்து என்ன கூறுகிறான் என புரியாமல் அவள் காதுகள் கூர்ந்தன.



அப்போதும் ஒன்றும் புலப்படவில்லை.. அவனை விலக்கவே பெரும் பாடாய் போக.. ஒரு வழியாய் அவனையும் தோளிலேயே தாங்கிய படி இருவராய் எழுந்தனர்.



"ஆரி.. திடீர்னு உங்களுக்கு.. என்னாச்சு.."எத்தனை முறை கேட்டும் அவனால் பதில் கூற முடியவில்லை.. சென்று யாரையாவது அழைத்து வந்தால் தான் நல்லது.. என தோன்ற.. அவனை விட்டு விலகினாலே அவன் விழுந்து விடுவான் என புரிய மாற்று வழிக்கு அவள் கண்கள் அலைபாய்ந்தன..




நடுக்கூடத்தில் மேடை அமைக்கப்பட்டு மற்ற செட்டிங்களும் செய்யப்படிருக்க.. பின்னால் அறைகள் இருந்தது கண்ணில் பட்டது.. 




"ஆமா.. முதல்ல இவர இங்க படுக்க வச்சுட்டு மிதாட்ட விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வருவோம்.. அவ வந்தா அடுத்து அவ என்ன பண்ணணுமோ பண்ணிடுவா.. நடுங்கிய கை கால்களை நிலை படுத்திய படி.. அவன் கன்னம் தட்டினாள்.



"ஆரி.. ஆரி.. இங்க ஒரு ரூம் இருக்கு.. உங்கள அதுல விடவா.. விட்டு போய் மிதாவ கூட்டிட்டு வரேன்.. "கூறியதில்.."வி...டு.. போ..றி..யா... குழரலாய் வந்த வார்த்தைகளோடு அவளை இடை வளைத்து தன்னோடு நெருக்கினான்.




அவன் செயலில் அதிரந்தாள். இது வரை பார்வையிலும் செயலிலும் காதலை அவன் காட்டி இருந்தாலும் கண்ணியமான நடத்தையோடு தானே இருப்பான்.. இப்போது என்னானது.. 



"ஆரி விடுங்க.. "அவன் பிடியில் இருந்து விலக முயன்று தோற்று.. அவனை முதலில் படுக்க வைத்து விடலாம்.. என அவனை தன்னால் முடிந்த மட்டும் இழுத்து கொண்டு வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள்..




"ஜா.. னு.."அவள் காதுக்குள் அவன் மீசையின் குறுகுறுப்பு.. அவன் நிதானம் தப்பி இருக்கிறான் என அறிந்தாலும் அவனின் இந்த செயல் அவளை சிலிர்க்க வைத்தது.. ஒரு வித இன்ப அவஸ்தையோடு படுக்கை வரை அழைத்து வந்தவள்.. அவனை விட்ட சமயம்.. அவன் மட்டும் விழாமல் அவளையும் தோளோடு கட்டி இருந்ததில் தன்னோடு இழுத்தான்.. நிலை கொள்ளாமல் அவனோடு சேர்ந்து விழுந்தாள்.




ஏற்கனவே விழுந்ததில் உண்டான இடுப்பு வலியோடு இப்போது எசகு பிசகாய் விழுந்ததில்.. ஏற்பட்ட வலியும் சேர்ந்து கொள்ள.. அப்போது தான் கவனிக்கிறாள். 




கிட்டத்தட்ட அவனை அணைத்த நிலையில் வெகு அருகில் அவன் முகம்.. கண்கள் சொருக வெகு அருகில் அவளை பார்த்து கொண்டிருந்தவன் ஏதோ சுவையான பண்டத்தை பார்த்ததாய் நாவை சுழற்றி இதழை ஈரப்படுத்தி கொண்டான்.




"ஆரி.."அவன் புது விதமான செய்கையில் அதிர்ந்து அவள் அழைக்க வாய் எடுப்பதற்குள் சட்டென அவளை தன்னுள் இழுத்து கட்டி கொண்டவனின் மற்றொரு கரம் வன்மையாய் அவள் பிடரி பற்றி தன்னோடு நெருக்கி அவள் தேன் சுளை இதழ்களை தன்னோடு பொருத்தியது.



வேறு யாராவது இருந்தால் தட்டி விட்டு எக்ஸாட்ராவாய் கூட இரண்டடி கொடுத்து அங்கிருந்து சென்றிருப்பாளோ.. ஆனால் கள்ளுண்ட வண்டாய் சற்று நேரத்திற்கு முன் அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் அன்பை நடனமாய் அனுபவித்து தவித்து போனவளால் இப்போது அவன் முத்தத்தை தவிர்க்க முடியவில்லை..




ஆரி.. ஆரி.. மனதார அவனை அழைத்து அவன் நிதானமிண்மையில் அவள் தவித்து கொண்டிருந்த வேளையில் திடீரென தானாக அவள் கண்களும் சொருகின.. அவளும் சுயநினைவு தப்பி போனாள்.





கண் திறந்து பார்த்த போது அணிந்த சுடிதாரின் துப்பாட்டா எங்கோ பறந்து கிடக்க.. டாப்ஸ் அரையும் குறையுமாய் மேலேறி இடுப்பில் இருந்த முடிச்சு அவிழ்ந்து கிடந்ததில் நெஞ்சம் நடுங்கி போனது.. அய்யோ.. என்ன பண்ணி வச்சுருக்கேன்.. கண்கள் தன்னிச்சையாய் திரும்பி பார்க்க.. அருகில் கவிழ்ந்து படுத்த படி உறங்கி கொண்டிருந்தான் ஆர்யன்.




மனம் கவர்ந்தவனிடம் தன்னை இழந்திருகிறோம் என புரிய.. "அய்யோ ஆரி.. என்ன செஞ்சுட்டோம் நம்ம.."பதறி போனாள்.



வேகமாய் எழுந்து தன் உடையை சரி செய்த படி.. "ஆரி.. ஆரி.."அவனை எழுப்ப முயல.. அவனோ இம்மியும் அசருவதாய் இல்லை.. கடிகாரத்தில் டிங்.. டிங்.. என எழுந்த மணியோசை நேரம் ஐந்தை தொட்டு விட்டதை காட்டியது..



"அய்யோ அம்மா வர்ற நேரம்.. அம்மா.."பாக்யத்தின் முகம் கண் முன் தோன்ற சிறு வயதிலேயே தந்தை இறந்த போது வேற கல்யாணம் பண்ணிக்கோ.. என அறிவுரை மழை பொழிந்த உறவினர்களை தூரத்தி தனி மனுஷியாய்.. உண்மையான சிங்கப்பெண்ணாய் தனக்காகவே வாழ்ந்து.. இன்று வரை காத்து வரும் தாய்க்கு என்ன ஒரு துரோகம் செய்து விட்டேன்.."அம்மா.. அம்மா.. "தலையிலடித்து கொண்டு கதறினாள்.



"செய்த தவறை எப்படி சரி செய்வதேன தெரியவில்லை.." அவனை எழுப்ப முயன்றாள்.. ம்ம்ஹும் இம்மி அசையவில்லை அவன்..



இப்போதைக்கு வீட்டிற்கு செல்வது தான் சரி என பட்டது.. துப்பட்டாவை எடுத்து இழுத்து உடை கிழிந்திருந்த இடத்தை எல்லாம் மறைத்து அவனை ஒரு முறை தவிப்பு பார்வையால் வருடி கிளம்பி விட்டாள்.




அவர்களோடு காரில் செல்கிறோம் எனினும்.. கையோடு கொண்டு வந்திருந்த ஒன்றிரண்டு சில்லறைகள் இப்போது உதவின.. யாரையும் பார்த்து சொல்லி விட்டு செல்ல மனமில்லை.. இங்கிருந்து சென்றாலே போதும் என நேராய் பஸ் ஸ்டாப்பிற்கு விரைந்தவள்.. முதலாய் வந்த பஸ்சில் ஏறி தன் வீட்டை அடைந்தாள். நல்லவேளையாய் இன்னும் பாக்யா வராதது அவளுக்கு நல்லவேளையாய் போனது.. 




வீட்டு உடை எடுத்து குளியலறைக்குள் நுழைந்து வாளியிலிருந்த குளிர் நீரை அள்ளி ஊற்றியவளுக்கு மேனி எங்கும் தகதகப்பு.



செய்த தவறில் கண்களும் நீரில் சேர்ந்து குளிக்க "அம்மா.. என்ன மன்னிச்சுடும்மா.."என நெஞ்சில் அடித்து கொண்டு கதறியதை அவள் மட்டுமே அறிவாள்.. 


பாக்யா வந்தவர்.. ஏன் ஒரு மாதிரி இறுக்க... உடம்பு எதுவும் முடியலயா.. என அவள் வீங்கிய முகம் கண்டு நெற்றியில் தொட்டு பார்ப்பதும் கை எடுப்பதுமாய் இருக்க அவர் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை இவளால்.. குற்ற உணர்ச்சி கொலையாய் கொன்றது. தாய் வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவர் முகம் பார்க்க முடியாமல் அவரை தவிர்த்தாள். அவரே வந்து பேசினாலும் நாசுக்காய் இரு பதிலோடு முடித்து கொண்டவளுக்கு நடந்ததை எப்படி அவரிடம் தெரிய படுத்துவது என புரியவில்லை.




அவளை கல்லூரியில் சேர்க்க ஆரி எடுத்த முயற்சியை கண்டிருந்தவருக்கு அவன் மீது நிறைய மதிப்பு தான்.. ஆனால் பணக்காரர்கள் என்றாலே நகர்ந்து விடு என அறிவுரை மழை பொழியும் பெற்றவள் இப்போது இந்த விஷயத்தை கூறினால் ஏற்று கொள்வாரா.. கேள்வி குறி முன்னால் பூதாகரமாய் எழுந்தது..



இந்த கண்ணாமூச்சு ஆட்டத்தை நிறுத்தவென.. அன்று வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருந்தது.. நெஞ்சில் உறுத்தி கொண்டிருந்த விஷயங்களை விட்டு பாடத்தில் முழு முற்றாய் கவனம் பதித்து அவள் அமந்திருக்க.. திடீரென அடி வயிற்றிலிருந்து ஒரு புயல்..




உப்.. வாய் திடீரென உப்ப பதறி பொத்தினாள். "அய்யோ என்னாச்சு.. ஏன் திடீர்னு வாந்தி வர்ற மாதிரி இருக்கு.. காலைல கூட வழக்கம் போல பழைய சோறு தானே சாப்பிட்டேன்.."என்றவளுக்கு ஒன்றும் புரியாமல் போக.. மீண்டும் அடி வயிற்றிலிருந்து எழுந்த பேராழியில்.. மேம்.. வா.. வாமிட்.. சொல்லி முடிக்க முடியாமல் கால்கள் பரபரக்க ஓடினாள்.



நன்றாய் படிக்கும் மாணவி என்பதால் அவள் மீது நல்ல அபிப்ரயம் அணைத்து ஆசிரியைகளுக்கும்.. அதனால் அதிகம் கண்டிக்கவில்லை.. உடம்பு சரியில்லனா படுத்துக்கோ என கூட கூறினர்..



உடல் ஏனோ அசதியாய் தெரிந்தது.. சொன்னது போல் பெஞ்சில் தலையை சாய்த்து படுத்து விட்டாள். ஆனாலும் அவ்வப்போது வாந்தி எடுப்பதுமாய் படுப்பதுமாய் இருக்க.. அருகில் இருந்த மற்ற பெண்கள் எல்லாம் மாலை கல்லூரி விட்டிருந்த நேரத்தில் அவளை எழுப்பினர்.



"ஜானு.. காலேஜ் முடிஞ்சது.. வா கிளம்பலாம்.."அழைக்க.. சலிப்போடு பையை தோளில் மாட்டிய படி நடந்தாள்.


"இப்போ எப்படி இருக்கு.. கேட்டாள் உடன் வந்தவள்..



"பரவாயில்ல தான்.. "



"என்ன டி ஆச்சு உனக்கு.. காலைல இருந்து ஏதோ மாசமானவ மாதிரி வாந்தி எடுத்துக்கிட்டே இருக்க.. கேலியான அவள் பேச்சில் இவள் நடை நின்றது.



"என்னாச்சு.. "கேட்டவளை கவனிக்காமல் அவசரமாய் பஸ் ஏறி தன்னிடத்தில் வந்தவள் வேகமாய் மருந்து கடைக்கு ஓடினாள்.. 



வேண்டிய பொருளை கேட்க..தோளில் மாட்டிய பையோடு பதைபதைத்து நிற்பவளை மேலும் கீழுமாய் பார்த்த படி அந்த பெண்மணி கொடுத்ததையெல்லாம் கவனிக்கும் நிலையிலா இருக்கிறாள் அவள்.



இருக்கும் சில்லறைகளை பொருக்கி எடுத்து நீட்டி.. வாங்கி கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தாள்.. வரும் வழியிலேயே மீண்டும் வயிற்று பிரட்டல் வேறு.. யாராவது பார்த்தால் தேவையில்லாத வம்பாகிவிடும் என வாயை மூடிக்கொண்டு ஓடி வந்தவள்  தங்கள் பாத்ரூமில் தான் நின்றாள்..




வாங்கி வந்த சாதனத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என அதில் போட்டிருந்த குறிப்புகளை கண்டு அறிந்து அதன்படி பிரயோகிக்க அதில் வந்த இரண்டு கோடுகள்.. அவளை மூச்சு அடைக்க வைத்தது..




"அய்யோ.. " தேகம் நடுங்கிப் போனது..



செய்த தவறு ஒரு உயிராய் தனக்குள் வளர்ந்து கொண்டு இருப்பதை அறிந்தவளுக்கு அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதே தெரியவில்லை... தனக்கு பிரியமானவன் உதிரம் தனக்குள் வளர்கிறது என முழுமையாய் மகிழ்ச்சியும் கொள்ள முடியாது இந்த விஷயத்தை தாயிடமும் சம்பந்தப்பட்டவனிடம் எப்படி கூற போகிறோம் என தவிப்போடு அமர்ந்திருக்க.. திடீரென ஒலித்த போனில் பித்தம் தெளிந்தவளாய் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.




"ஜானும்மா.. வந்துட்டியா.." தாயின் பாச குரல் அவளை பாச கயிற்றாய் வதைத்தது.




"ம்ம்.. இப்போ தான் மா.."வார்த்தைகள் பாதி காற்றில் கரைந்தன.




"சரி டி.. இன்னைக்கு நான் வர கொஞ்சம் லேட்டாகும்.. அதான் சொல்லிடலாம்னு போன் போட்டேன்..வச்சுடறேன்.." அழைப்பை துண்டித்து விட்டார் பாக்கியம்..



தோய்ந்து சரிவோடு கீழே அமர்ந்தாள்.. தாயிடம் என்பதை விட.. முக்கியமாய் அவனிடம் இந்த விஷயத்தை தெரிய படுத்தியாக வேண்டும்.. அடுத்த கணம் மிதாவிற்கு அழைத்திருந்தாள்..




"சொல்லு டி.." தோழியின் குரலில் வழக்கம் போல் உற்சாகம்.



"மிதா.. ஒரு விஷயம் சொல்லணும் டி... அவள் குரல் நடுங்கியதில் எதிரில் இருந்த அவளின் புருவங்கள் சூழிந்தன.



"ஜானு.. உனக்கு ஒன்னும் இல்லையே நல்லா தானே இருக்க.." எனக் கேட்டதற்கு பதிலாய்.. "எங்க இருக்க நீ.." மாற்று கேள்வி கேட்டாள் ஜான்வி..




"வீட்டுல தான் டி.."



"உன் அண்ணன்..?"



"அவர் லீவு முடிஞ்சிடுச்சுன்னு ஊருக்கு கிளம்பிட்டு இருக்காரு.." அவள் கூற பக்கென துள்ளிப் போட்டது உள்ளம்.. ஊருக்கு செல்கிறானா இப்போது விட்டால் எப்போது அவனை பார்த்து இந்த விஷயத்தை கூற முடியும்...



" மிதா.. மிதா.. " அவள் அவசர குரலில் ஏதோ சரியில்லை என உணர்ந்து.. அவள் விழிக்க.. " கொஞ்ச நேரத்துல நான் உங்க வீட்டுக்கு வரேன்.. அதுவரைக்கும் அவர் கிளம்பாம பார்த்துக்கோ.. " 



ஏண்டி என்னாச்சு.. எதிர்முனையில் மிகா கேட்டதற்கு கூட பதில் கொடுக்க முடியாமல் அவசரமாய் அழைப்பை துண்டித்து அவர்கள் வீட்டிற்கு ஓட ஆரம்பித்திருந்தாள்.




அவள் சென்ற போது.. ஆளுக்கு ஒரு பக்கமாய் மணிமேகலையின் அத்தனை உறவினர்களும் நின்று இருக்க ஒரு ஓரமாய் அண்ணனிடம் ஏதோ பேசியபடி நின்றிருந்தாள் மிதா. 




வந்திருந்த உறவினர்களை கண்டு நெஞ்சம் எம்பி குதிக்க  இந்த நேரத்தில் அவனிடம் விஷயத்தை கூறினால் சரியாய் வருமா என கேள்வி எழுந்தது .. இப்போது மட்டும் சொல்லவில்லை என்றால் எப்போதுமே சொல்ல முடியாது.. என புரிந்து வேக நடையோடு அவனை நெருங்கினாள்.



"மிதா.." ஓடி வந்ததில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அழைத்த அவள் சோர்ந்த சத்தத்தில்  பதட்டமாய் திரும்பினாள் மிதா.




"என்ன டி.. என்ன ஆச்சு..  ஏன் இப்படி அவசரமா ஓடி வந்திருக்க.. போன்ல கூட பதட்டமா பேசினாயே.. ஒருவேளை அம்மாவுக்கு எதுவும்.. " வார்த்தைகளை முடிக்க முடியாமல் தடுமாற.. " அதெல்லாம் இல்ல.. " அவனையே ஏக்க பார்வையால் தழுவி நின்ற ஜான்வியின் வார்த்தைகள் நிம்மதி கொண்டு பெருமூச்சு விட்டாள் மிதா.




" அவசரமா பேசவும் பயந்துட்டேன்.. சரி அப்புறம் என்ன விஷயம்.. ஏன் அண்ணன நிக்க சொன்ன.. "அவள் கேட்க.. 



"அவர்கிட்ட நா கொஞ்சம் தனியா பேசணும்.."அவள் தயங்கி கூறியதில்.. மிதா ஒரு கணம் அதிர்ச்சியாய் இருவரையும் பார்த்தாலும்.. ஏதோ புரிந்தது போல் அமைதியாய் நகன்று கொண்டாள்.




தன்முன் நின்றவளை ஆயாச பார்வையோடு வருடினான் ஆர்யன்.




"என்ன மேடம்.. நான் ஊருக்கு போறேன்னதும் இனிமேல் என்ன பாக்க முடியாதோன்னு ஓடி வந்தீங்களா.. " குறும்பு கொப்பளிக்கும் வார்த்தைகளில்.. வழக்கம்போல் லயிக்க முடியவில்லை.. சொல்ல வந்த விஷயம் வேறல்லவா..




"ஆரி.. ஆரி.. நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.." அவள் படபடப்பான பேச்சில்.. "சொல்லு.." விரிந்த பரந்த மார்பை மறைத்தபடி கை கட்டினான் அவன்.



"ஆரி.. அன்னைக்கு உங்க அம்மா அப்பா கல்யாண நாள் பங்ஷன்ல.. நம்ம.. " வார்த்தைகளை முழுதாய் கோர்க்கத் தெரியாமல் அவள் தடுமாற.. அவள் தயக்கத்தை வேறு மாதிரியாய் எடுத்துக் கொண்டவன்.. "என்ன டான்சா.. நல்லாருந்துச்சுல்ல.. காலேஜ் கல்ச்சுரலுக்கு பிராக்டிஸ் வேணுமா.." கேட்டதில் அதிர்ந்தாள்.




"டான்சா..  அப்படியானால் அதுவரை நடந்தது மட்டும் தான் அவனுக்கு நினைவு இருக்கிறதா.. அதற்கு அடுத்து நடந்தது.. அதன் விளைவாய் இப்பொழுது தன் வயிற்றில் வளரும் உயிர்..?? எதுவும் அவனுக்கு நினைவில்லையா.."



"ஹலோ மேடம்.. சொல்லுங்க.. என்ன பிராகட்டிஸ் வேணுமா.. அம் சாரி.. இப்ப நான் கிளம்பிட்டேன்.. கண்டிப்பா உனக்கு ப்ராக்டிஸ் கொடுப்பதற்காகவே இடையில ஒரு நாள் வரேன் போதுமா.. "என கூறி செல்ல போக.."ஆரி.."அவன் கரம் பற்றி நிறுத்தினாள்.




"என்னம்மா.."பொறுமை இழந்தார் போல் சலிப்பாய் கேட்ட படி அவள் பக்கமாய் திரும்பினான்.



" அப்படின்னா அன்னைக்கு நடந்த எதுவும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா.. " அவள் குரல் நடுங்கியது..



"என்ன நடந்துச்சு.. டான்ஸ் ஆடூனோம் அதானே.. வேறென்ன.." மீண்டும் மீண்டும் அதையே கூறுபவனை கண்டு  பரிதவித்த படி..



" என்ன இப்படி கேக்குறீங்க.. அன்னைக்கு டான்ஸ் ஆடி முடிச்சதும் நீங்க மயங்கி விழுந்தது.. நான் உங்கள ரூமுக்கு கூட்டிட்டு போனது.. அங்க நமக்குள்ள.. " அவள் கூறி முடிப்பதற்குள்.. ஏய்ய்ய்.. அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டவனாய்  கர்ஜித்தவனின் கண்கள் செவ்வானமாய் சிவந்திருந்தன.



சட்டென அங்கிருந்த சுற்றத்தை கவனித்து பிடரியை அழிந்த கோதி.." என்ன பேசிக்கிட்டு இருக்க நீ.. நீ என் தங்கச்சியோட ஃப்ரெண்ட்.. அதான் அப்பப்போ சும்மா டீஸ் பண்ணேன்.. அதுக்காக மனசுல ஏதோ ஆசை வளர்த்து வச்சுக்கிட்டு இப்படி கேவலமா பேசிக்கிட்டு நிக்கிற.. " அவன் வார்த்தையில் உயிர் அடிவரை பதறிப் போனாள்.




"இல்ல ஆரி.. அன்னைக்கு நமக்குள்ள அதெல்லாம் நடந்தது உண்மைதான்.. அதான் இப்ப என் வயித்துல.." என்றவள் கையோடு கொண்டு வந்திருந்த கிட்டை எடுத்து காட்ட.. "ச்சி.. இவ்வளவு கேவலமானவளா நீ.." அவன் ஓங்கிய சத்தத்தில் அனைவரின் பார்வையும் ஒருசேர அவர்கள் பக்கமாய் திரும்பி இருந்தது..



மிதாவும் கூட அண்ணனின் குரலில் ஓடி வந்தவள்.. அருகில் அழுகையில் கரைந்து நின்ற தோழியையும் அவள் கையில் இருந்த பொருளையும் பார்த்து ஏதோ புரிந்து கொண்டவளாய் அதிர்ச்சியில் விழி விரித்தாள்.




"ஆரி.. நான் சொல்றதெல்லாம் உண்மைதான்.. ஒருவேளை அன்னிக்கு உங்களுக்கு சுயநினைவு இல்லாததால நடந்தது உங்களுக்கு ஞாபகம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனா அது எல்லாம் உண்மை தான்.." 




" திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டு இருந்த அறைஞ்சு பல்லு கில்ல எல்லாம் கழட்டிடுவேன் பாத்துக்கோ.. " பல்லை கடித்துக்கொண்டு ஒரு அடி உன்னை எடுத்து வைத்தவனை கண்டு ஹக்.. உடல் துள்ளிப் போட பின்னே நகர்ந்தாள் ஜான்வி.




அழுது கொண்டிருந்தவளையும் அவள் கையில் வைத்திருந்த பொருளையும் ஆர்யாவின் கோபத்தையும் கண்டவர்களுக்கு விஷயம் புலப்பட்டு விட "என்னப்பா.. ஆரி.. என்ன இதெல்லாம்.. நம்ம குடும்பம் எப்பேர்பட்ட குடும்பம்.. போயும் போயும் ஒரு வேலைக்காரி பொண்ணு கூட.. இப்படி.. இப்போ அந்த புள்ள வயித்துல குழந்தையோட வந்து நிக்குது.. இதுக்கு என்ன பதில் சொல்ல போற.."பெருசு ஒன்று கேட்க.. "அய்யோ சித்தப்பா.. இது என்னன்னு எனக்கே இன்னும் புரியல.." அவன் சொல்லி முடிப்பதற்குள் "பொய் சொல்லாத அண்ணா.. " தோழியை நெஞ்சோடு சாற்றி கூறி இருந்தாள் மிதா.




உள்ளே ஏசி காற்றில் இருந்த மணிமேகலையும் சத்தம் கேட்டு வெளியே வந்து விட.. அழுத நிலையோடு ஜான்வியை கண்டதும் உள்ளுக்குள் பொசு போசுவேன தாக்கம்.. "வா மணி உன் மகன் என்ன வேல பண்ணிருக்கான் பாரு.."கூற என்ன விஷயம் என்ன புரிந்து விட்டது அந்த குள்ள நரிக்கு.




ஆனாலும் ஒன்றும் தெரியாதது போல்.. "என்னாச்சு.."



"உன் மகன் அந்த பொண்ண வீணாக்கிட்டான்.. புள்ளையோட வந்து நிக்குது.. "கூறிய வார்த்தைகளில்.. "ஏய்ய்ய்.."கர்ஜித்தலோடு முஷ்டியை முறுக்கி கொண்டு அவன் முன்னேற.."இருப்பா.. இருப்பா.."என்ற மணிமேகலை ஆக்ரோஷ கண்களோடு ஜான்வியிடம் திரும்பினாள்.




"ஏய்ய்ய்.. எங்க வந்து என்னடி பேசிகிட்டு இருக்க.. என் பையன பத்தி எனக்கு தெரியாதா.. அவன் சொக்க தங்கம்.. பொண்ணுங்கனாலே மரியாதை கொடுத்து விலகிப் போறவன்.. அவன் போய் இப்படி பண்ணிட்டான்னு சொல்ற.." வரிந்து கட்டிக்கொண்டு வந்ததில் ஜான்வி கூனிக்குறுக.. 




"என்ன பேசுற மணி.. உன் பையன் பொண்ணுங்க விஷயத்துல நல்லவன்தான்.. ஆனா அன்னைக்கு ஒரு சின்ன பிரச்சனைகளையும் இந்த பொண்ண விட்டுக் கொடுக்காம எவ்வளவு துணையா நின்னான்.. மனசுல எதுவும் எண்ணம் இல்லாமலா அப்படி நடந்துருப்பான்.." அன்று வந்திருந்த அதே பெரியப்பா கூறியதில் இப்போது ஜான்வியின் உடல் குலுங்கிற்று.





"அய்யோ பெரியப்பா.. அது ஏதோ தெரிஞ்ச பொண்ணுக்கு இப்படி நடக்க கூடாது என்பதற்காக நான் பண்ணது.. அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.." என நடுமுற்றத்தில் அவன் கூறிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள அங்கு யாரும் தயாராய் இல்லை.




ஆளுக்கு ஒரு பக்கம் நியாயத்தை பேசிக்கொண்டிருக்க அவன் விழிகள் ரெண்டும் சிவந்து எதிரில் நின்றவளை தான் பாரபட்சம் இன்றி முறைத்தது.. இதில் வேறு.. " இப்ப புரியுதா ஆர்யா.. நான்தான் அன்னைக்கே சொன்னேன்.. இந்த மிடில் கிளாஸ் பொண்ணுங்க எல்லாம் பணத்துக்காக எது வேணாலும் செய்வாளுங்கன்னு.. நீ தான் கேட்கவே இல்லை.. நல்ல பொண்ணுன்னு சொல்லி அவளுக்காக எல்லாம் செஞ்ச.. ஆனா கடைசியில உன்னையே இப்படி கழுத்தறுத்து இத்தனை பேர் முன்னாடி அசிங்கப்படுத்திட்டா பாத்தியா.. " கூறியதில் அவன் கண் நரம்புகளும் விரைத்தன.




"போதும்மா.. ரொம்ப பேசாத.. என் ஜானுவ பத்தி எனக்கு தெரியும்.. பணத்துக்கு மயங்கரவ அவ கிடையாது.. ஜான்வி இவ்வளவு தூரம் சொல்றானா கண்டிப்பா ஏதோ ஒன்னு இருக்கு.." என தன் மீது பழி சுமத்தியவளை நெஞ்சில் சாய்த்து கூறிய தங்கையை அடிபட்ட பார்வை பார்த்தான் ஆரியன்.



" குட்டிமா நீயும் நானும் தப்பு பண்ணி இருப்பேன்னு நம்புறியா.." இவ்வளவு நேரம் அழுத்தத்துடனும் கோபத்துடனும் பேசிக் கொண்டிருந்தவனின் குரல் உடைந்தது.




" எனக்கு உன்ன பத்தி தெரியும் அண்ணா.. ஆனா அதைவிட என் ஜானுவ பத்தி எனக்கு தெரியும்.. அம்மா சொல்ற கீழ்தரமான ஆளுங்க மாதிரி கிடையாது என் ஜானு.. அவ சொல்றான்னா கண்டிப்பா அது உண்மையா தான் இருக்கும்.. " என தான் உயிரையே வைத்திருந்த தங்கையும் கூறிவிட.. முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை விழி நிமிர்த்தி காற்றில் பறக்க விட்டான்..




" யாரு என்ன நம்பினாலும் சரி இல்லைனாலும் சரி.. இருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. " அழுத்தமாய் வந்தன அவன் வார்த்தைகள்.



" அப்போ உனக்கும் எனக்கும் கூட சம்பந்தம் இருக்காது அண்ணா.. " கூறிய மிதாவை வெறித்தான்.




" உன் சந்தோஷத்துக்காக ஒவ்வொண்ணையும் பார்த்து பார்த்து செஞ்சவன் நான்.. ஆனா அதுவே என் கேரக்டரை இவ்வளவு அசாஸினேட் பண்ணனும்னு தெரியாம போயிடுச்சு.. என்ன நம்பாதவர்களுக்காக உட்கார்ந்து என்னால் அழுதுகிட்டு இருக்க முடியாது.. அம் ஜஸ்ட் லீவ்.. " என ஒரு அடி எடுத்து வைத்தவன் ஒரு கணம் நின்று பின்னால் திரும்பி அழுது கொண்டிருந்தவளை பார்த்தான்..




" உன்ன நல்ல பொண்ணுன்னு நம்புனதுக்கு என்னை இப்படி கழுத்து அறுத்துட்டல.. என் குடும்பத்துக்கு முன்னாடி என்ன அசிங்கப்படுத்தி என் தங்கச்சியே என வேண்டாம் னு சொல்ற அளவுக்கு பண்ணிட்ட.. "





" இனி என்னைக்கும் நீ என் கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு வேண்டிக்கோ.. பட்டனா அதுக்கு அடுத்து நீ சந்திக்கப் போற ஆரியன் இப்போ இருந்ததுக்கு அப்படியே எதிரானவனா இருப்பான்.. உன்ன வாட்டி வதைக்கிறவனா இருப்பான்.. ச்சி.. " வெறுப்போடு உமிழ்ந்து தன்னைச் சுற்றி நின்ற உறவினர்களை பார்வையால் எரித்து வேக நடையோடு தயாராய் நின்ற காரில் ஏறி கிளம்பி இருந்தான்.. அன்றைய நாளின் நினைவின் ஆதாரமாய் அவள் பற்றிய கண்களில் இருந்து வழிந்த ஒற்றை நீர் துளி மார்பை நனைத்து சிரித்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...