முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 20

 கண்ணை கசித்து வந்த துளி மாரில் விழுந்ததையும் உணர முடியாமல் எதிர் வானை வெறித்தாள் ஜான்வி. அன்று நடந்த சம்பவத்தை கடைசி வாழ்நாள் வரை அவளால் மறக்க முடியாது.. ஒருவேளை எடுக்கும் அத்தனை ஜென்மங்களுக்கும் ஞாபகம் கடத்தும் சக்தி இருந்தால் அனைத்து பிறவியிலும் தொடர்ந்து இந்த விஷயம் வலியூட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...



அப்படி என்ன கேட்டு விட்டேன்.. மனதில் விழுந்த காதல் விதையை வளர்க்க கேட்டேன்.. என்னில் விழுந்த அவன் உதிரத்திற்கு ஆதரவு கேட்டேன்.. அனைத்தையும் பறித்து விட்டனரே.. மறுத்து விட்டனரே.. எவன் ஒருவனை  தன் முழு உலகமாய் நம்பினேனோ கடைசியில் இன்றளவும் அவனே தன்னை வெறுப்பது தொடருகிறதே.. கண்களில் நீர் முட்டி கொண்டு வந்தது.. எப்போதும் மனம் கலக்கம் கொள்ளும் போதிலும் அவளுக்கேனவே பூவாய் ஸ்பரிக்கும் மென்மை குளிர் காற்றால் கூட இன்று அவளின் கணன்ற நெஞ்சத்தை குளிரூட்ட இயலவில்லை..



இத்தனை நாளாய் கண்கொண்டு தன் வாழ்வில் ஒரு முறையாவது காண மாட்டோமோ.. என காத்திருந்த ஒருவனை கண்ட போதும்.. காலையிலிருந்து அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பெரிய கட்டை முழுக்க முள் கம்பியை சுற்ற வைத்து அடித்தார் போல் வலி கொடுத்து அவள் ரணத்தை இன்னும் அதிகம் கிளறி விட்டு விட்டது.. இவ்வளவு நாளாய் அவனின் அறியாமை.. ஒரு முறை நான் கூறியதை நம்பி இருந்தால் அவன் என்னை ஏற்றிருக்கலாம்.. அதோடு கடைசி நிமிடத்தில் மணிமேகலையும் அவனை குழப்பி விடாது இருந்திருந்தால் நிச்சயம் அவன் தன்னை ஏற்று கொண்டிருப்பான்.. என 100 சதவீதமாய் அவள் கொண்ட நம்பிக்கை இன்று அடி வாங்கியதில்.. வழக்கம் போல் இந்நேரம் அவன் தன்னோடு இருந்தால் எப்படி இருக்கும்.. என மனதிற்கு ஏற்ற படி வரித்து கொள்ள முடியவில்லை.




வழிந்த கண்ணீரையும் துடைக்க மறந்து அவள் அமர்ந்து இருக்க.. "ஜான்வி.."திடீரென தோள் படிந்த கரத்தோடு கேட்ட குரலில் சட்டென சுயம் கொண்டாள்.. எதிரே குறுகுறுப்பான பார்வையோடு அஷோக் நின்றிருந்தான்.



"அஷோக்.." இவன் எப்போது வந்தான்.. அவசரமாய் அவனுக்கு மறைத்து கண்களை துடைத்து கொண்டாள். 



"இங்க வந்து என்ன பண்ற.. "சீரான மூச்சு இடைவெளியில் விழுந்த அவன் வார்த்தைகள்.. அவள் அழுததை பார்த்து விட்டான் என காட்டியது.



அவசரமாய் மூக்கை உறிஞ்சி தன்னை நிலைப்படுத்தி அவனை பார்த்தாள். அவள் அழுவது அவனுக்கு பிடிக்காது. அறிவாள் அவள்.




"இப்போ எதுக்கு இங்க வந்து இப்படி உக்காந்து பேய் மாதிரி அழுதுட்டு இருக்க.."சுள்ளேன வந்தன அவன் வார்த்தையில் பாவமாய் பார்த்தாள் ஜான்வி. நட்பு கொண்டால் அவனை போல் நல்லவனையும் பார்க்க முடியாது.. கோபப்படுத்தி விட்டால் அவனை போல் ஒரு கடுவனையும் கண் கொண்டு காண முடியாது.



"நீ போ அஷோக்.. நா வரேன்.."கழுத்து ஒடித்து திரும்பி கொண்டாள். இப்போது இருக்கும் நிலையில் அவனோடு வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கட்ட தெம்பில்லை.




"சோ.. நா இருக்குறது கூட உனக்கு டிஸ்டர்பா இருக்கு.. அப்படி தானே.." என இறுகிய குரலோடு திரும்பியவன்.. ஒரு கணம் நின்று திரும்பி அவள் முகம் பார்த்தான். 



''வீட்டுக்கு வந்ததுல இருந்து நீ ஒரு வார்த்தை பேசல.. நீ பண்ணது தப்பு அதுக்காக தான் உன்ன திட்டினேன்னு உனக்கு புரியலல்ல.. அதோட இப்போ நானே வந்தாலும் போன்னு சொல்ற.. உனக்கும் என்ன பிடிக்கலல்ல ஜான்வி.. ''இவ்வளவு நேரம் கடுகடுத்த குரல் திடீரென உடைய உள்ளே சென்று விட்டான் அவன்.. இவள் தான் அவன் குரலில் விக்கித்தாள்.



"அச்சோ என் டென்ஷன்ல அவனையும் ஹர்ட் பண்ணிட்டேனா.. அசோக்.. அசோக்.. நில்லு டா.. '' தன் கண்ணீர் மறந்து அவனை தொடர்ந்து ஓடி வர சோபாவில் அமர்ந்த படி இரு கைகளையும் கட்டிய படி தலை கவிழ்ந்து இருந்தான் அவன்.  அவளுக்கு தான் அவனின் அந்த நிலை ஒரு மாதிரியாய் மூச்சடைக்க செய்தது.




"என்ன இது.. எத்தனையோ முறை அவனை கஷ்டப்படுத்தி விட கூடாது என்பதில் கவனமாய் தான் இருக்கிறாள்.. ஆனால் பட்ட காலிலேயே படும் என்பது போலாய்.. அவள் சிறிதாய் முகம் சுழித்தாலும் என்னை பிடிக்காம தான் இப்படி போக சொல்றியா.. கேட்கும் இந்த பெரியவனை என்ன செய்வது..



"அஷோக்.. "அழைத்த படி அவனுக்கு கீழாய் மண்டியிட்டு அமர்ந்து அவன் கரம் பற்ற.."ப்ச்.. விடு ஜான்வி.. கொஞ்ச நேரத்துல நானே சரியாகிடுவேன்.. இந்த அன்பு பாசம் எல்லாம் ஏன் வாழ்க்கைல எட்டாக்கனி.. சும்மா சும்மா அத காட்டி என்ன ஏமாத்தாத.. ஒவ்வொரு முறை ஏமாறும் போதும் உள்ளுக்குள்ள பயங்கரமா வலிக்குது.. " இதழ் கடித்தும் உடைந்து வந்த குரலை சரி செய்ய முடியாமல் தடுமாறினான்.




"அம் சாரி.. ஒரு கோபத்துல உன்கிட்ட அப்படி பேசி இருக்க கூடாது தான்.. ஏதோ உன் மேல எனக்கு கொஞ்சமே கொஞ்சம் உரிமை இருக்குன்னு அப்படி பேசிட்டேன் மன்னிச்சுடு.."



"அஷோக்.. ப்ளீஸ்.. என்ன காயப்படுத்தன்னே பேசாத.. ஆல்ரெடி ரொம்ப அப்செட்ல இருக்கேன்.." சோர்ந்து போய் கெஞ்சியவளை நிமிர்ந்த கண்களோடு துளைத்தான் அஷோக்.. 




"அப்படினா அது என்ன அப்செட்ன்னு சொல்லலாமே ஜான்வி .. எதுக்காக இப்படி உள்ளுக்குள்ளயே வச்சு நீயும் மருகி.. அதில என்னையும் ஹர்ட் பண்ணி..  ஏன் இப்படி பண்ற.." ஆதங்கத்தோடு வந்தன அவன் வார்த்தைகள்.. சட்டென அவள் கண்கள் நிலத்தோடு தாள அப்படியே நின்றும் போயின.



"இது.. இது தான் ஜான்வி.. நம்ம மீட் பண்ணி இத்தன வருஷம் ஆகுது.. ஆனா ஒரு நாளும் உன்ன பத்தி நீ சொன்னதே கிடையாது.. நானும் எதுவும் கேட்டது கிடையாது.. நீயே சொல்லுவணும்னு நெனச்சேன்.. உனக்கா என் மேல எப்போ நம்பிக்கை வருதோ அப்போ சொன்னா போதும்னு நெனச்சேன்.. ஆனா பாப்பா பிறந்து இத்தன வருஷம் ஆகியும் உனக்கு என் மேல நம்பிக்கையே வரல இல்லை.. உனக்கு ஏதாவது அப்செட்டா இருந்தா மாடில அந்த ஓரத்துல உக்காந்துட்டு அழுவ.. நா வர்றத பாத்தா அப்படியே சைலன்ட் ஆகிடுவ.. எங்கே நான் திட்டுவேனோன்னு.. உனக்கு எண்ணம்..




ஆனா அது உன் மேல நான் எடுத்துக்கிறேன் அக்கறைன்னு உனக்கு புரியவே இல்லையா.. வலியில் தொக்கி நின்றன அவன் வார்த்தைகள்.



நா தான் உனக்கு தோழன் மாதிரின்னு சொல்றேனே தவிர.. நீ என்ன அப்படி நினைக்கிறது இல்லல்ல..  அன்னைக்கு எனக்கு ஆபரேசன் பண்ணதால உக்காந்து செய்ற மாதிரி வேற வேலைக்கு நீ போன்னு சொன்னப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷம்.. எனக்காக யோசிக்கிற தோழின்னு.. " நினைச்சு ரொம்ப சந்தோஷப்பட்டுட்டேன் ஜான்வி.." சுருங்கியது அவன் முகம்.




அம்மா அப்பா.. ன்னு குடும்பமா வாழறதெல்லாம்.. என்ன மாதிரி அனாதைக்கு ரொம்ப அதிகம்.. ஆனா ஒரு பொண்ணுக்கு நண்பனா வாழற தகுதியாவது எனக்கு இருக்கேன்னு இவ்வளவு நாள் நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. ஆனா இப்போ புரிஞ்சுடுச்சு.. அதுக்கு கூட எனக்கு கொடுப்பினை இல்லை.. இந்த உலகத்தை பொருத்த வர நீயும் நானும் கணவன் மனைவி.. ஆனா உள்ள.. நண்பன் தோழி உறவு கூட இல்லாத மூன்றாம் மனுஷங்க... இனி நா தனி கட்டையாவே இருக்க பழகிக்கிறேன்.. உன்ன அப்படி உரிமையோட திட்டுனது தப்பு தான்.. அதுக்காக என்ன மன்னிச்சுடு.. ஆனா பாப்பாவ எப்போவும் ஒரு அப்பனா கண்டிக்க தான் செய்வேன்.. அதுலயும் என் குழந்தைன்னு நீ வந்தேன்னா அப்போவே என் உயிர் என்ன விட்டு போயிரும் ஜான்வி.."உடைந்த குரலில் அவன் கூறி முடிக்க.."போதும் நிறுத்து அசோக்.. ஏன் இப்படி வார்த்தைலயே டார்ச்சர் பண்ற.. " அவன் தொடர் தாக்குதலில் அழுகவே ஆரம்பித்திருந்தாள் ஜான்வி.




"என்னடா திடீர்னு இப்படி எல்லாம் பேசுற.. நா எப்போ உன்கிட்ட உனக்கு எங்க மேல உரிமை இல்லனு சொன்னேன்.. உனக்கு எங்க மேல எல்லா உரிமையும் இருக்கு.. நீ கோபப்பட்டா கூட அது எங்க மேல இருக்கற அக்கறை தான்னு புரியுது.. 



ஆனா.. ஆனா.. என்னால தான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்ல முடியல அஷோக்.. அதுக்காக நா உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் கிடையாது.. சொல்ல தோணுனது இல்லை.. அவ்வளவு தான்.. அதுக்காக ஏன் இப்படி எல்லாம் ஏதேதோ பேசுற.. அன்னைக்கு மட்டும் நீ சரியான நேரத்துக்கு வரலைன்னா இன்னைக்கு நானும்.. உள்ள படுத்துருக்க பிள்ளையும் என்ன கதி ஆகியிருப்போம்னே தெரியாது.. எங்களுக்கு மறு வாழ்க்கை கொடுத்த கடவுள் டா நீ.. என் அம்மா இறந்துட்டாங்கன்னு சொன்னதும் என்ன எதுன்னு கேக்காம.. அங்க இருந்த யாரும் என்ன ஒரு வார்த்தை சொல்லிடாம என்ன கவனிச்சு.. அதே நேரத்துல எங்க அம்மாவுக்கு மூத்த மகன் மாதிரி நின்னு எல்லா கடமையும் நீ முடிச்சியே.. அதுக்கெல்லாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது..



கடன் காரன் வந்து நின்னு காச கேட்டப்போ.. இந்தா பணம்ன்னு உன்கிட்ட கொஞ்ச நஞ்சம்ன்னு ஓட்டிட்டு நின்ன அத்தனை சொத்தையும் எதையும் யோசிக்காம தூக்கி போட்டியே.. எல்லாம் நீ எனக்காக பண்ணது.. என் குழந்தைக்காக பண்ணது.. அதுக்கெல்லாம் என்ன செஞ்சாலும் ஈடாகாது.. இந்த பிறவி முழுக்க எப்போவும் ஒரு தோழியா என் நன்றிய காட்டுவேன் அஷோக்.. ஆனா நீ என்னனா இப்படி பேசுறியே.. " நன்றி உணர்வோடு அவள் தேம்ப..




"ஜான்வி.. ப்ளீஸ் அழாத.." தன்னை மீட்டெடுத்ததாய் மீண்டும் அவன் குரல் இறுகிக் கொண்டது.



"முடியல.. நீயே என்ன புரிஞ்சுக்கலன்னா நா என்ன செய்வேன்.. எனக்கு உண்மையாவே என்ன சொல்றதுன்னு தெரியல அஷோக்.. அதான் சொல்லல.. அதுக்கு ஏன்டா இப்படி கேக்குற.." சிறு பிள்ளை போல் மூக்கை சுருக்கி அவள் கேட்ட தொணியில் சட்டென அவன் முகத்தில் சின்ன சிரிப்பு எட்டி பார்த்தது.



"ஜான்வி.."அவள் தலையை வருடி கொடுத்தான்.. இன்னும் மூக்கை சுருக்கினாள்.. பெற்றவனிடம் பிள்ளையில் கொஞ்சல் போல் அவனுக்கு.. கிட்டதட்ட கிருத்தி குட்டி போல்.. 



"சரி சாரி.. என்ன இருந்தாலும் நானும் கோபத்துல அப்படி கேட்டிருக்க கூடாது.. நீ என்கிட்ட எப்போவுமே எதுவும் சொல்லலைனாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனா என்னவோ நீ அழும் போது.. மனசு கேக்காம அது என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுக்க துடிக்குது.. அந்த டென்ஷன்ல தான் அப்படி பேசிட்டேன்..  சரி சாரி..



"அதான் சாரி சொல்லிட்டேன்ல.."தலை சாய்த்தான்.




" நீ சொன்னதும் சரிதான்.. எங்களை இவ்வளவு தூரம் காப்பாத்தி இது நாள் வர பாத்துட்டு இருக்க உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கணும் தான்.. இப்போ சொல்லிடறேன்.. " மடியில் இரு கரங்களையும் ஒன்றோடு ஒன்று விட்டு பின்னிக்கொண்டபடி ஆரம்பிக்க.." நான் கேட்டேனேன்னு நீ சொல்ல வேண்டாம்..விடு.. "  எழப்போனவனை கரம் பற்றி எழுத்து மீண்டும் அமரச் செய்தாள்..




" நானே விருப்பப்பட்டு தான் சொல்றேன்.. இப்ப இருக்கிற மனநிலைக்கு யார்கிட்டயாவது சொல்லிட்டா தேவலாம் போல இருக்கு.. தலை மனசெல்லாம் அவ்வளவு பாரமா இருக்கு" என்ற பின் மறுக்கவில்லை அவன்.




ஆரியனை பார்த்த கணத்திலிருந்து.. யாரும் தனக்கு துணை நிற்காத போதும் அவனே முன்வந்து தனக்காக நின்றது..  தான் அவனை உயிருக்குயிராய் காதலித்தது..  அவனுக்கு சம்பந்தமே இல்லாவிடினும் தான் நல்லபடியாய் படிக்க வேண்டும் என்பதற்காக ஸ்காலர்ஷிப் வாங்கி கொடுத்தது.. அவன் தனக்காக செய்த ஒவ்வொரு விஷயம்.. அதில் அவன் மீது தனக்கு ஏற்பட்ட காதல்... கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்த சில நாட்களில் வேலை விஷயமாய் அவன் ஊருக்கு சென்று விட்டான் என மிதா கூறியதும் ஏதோ தொலைத்தார் போல் வெதும்பிய நெஞ்சம்.. அவன் பெற்றோர் திருமண நாளைக்கு அவனே வந்து அழைத்ததும்.. அவனைக் கண்டதும் இதுவரை இல்லாத குதுகலம் வந்து ஒட்டிக்கொண்டது.. அவர்களோடு சென்றது.. காதலின் அர்த்த பிணைப்பாய் அவர்களின் நடனம்.. கடைசியாய் அந்த நிகழ்வு.. ".. கூறிக்கொண்டே வந்தவள் சட்டென நிதானித்து எதிரில் இருந்தவனின் முகம் பார்த்தாள்.




என்னதான் நண்பன் என்றாலும் இந்த விஷயத்தை அவ்வளவு எளிதாய் கூறிவிட முடியவில்லை.. ஆனால் கூற வேண்டிய அத்தியாவசியத்தில்.. " ஆனா உண்மையாவே அன்னைக்கு எங்க ரெண்டு பேருக்குமே சுயநினைவு இல்ல அஷோக்.. அப்போ நடந்த விஷயம் தான்.. இது.. " இரு கரங்களால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கியவளை.. "ஜான்வி.. ப்ளீஸ்..அழாத.. " இதுவரை இறுக்கிய முகத்தோடு அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளை நெருங்கி தோளோடு சாய்த்து தட்டி கொடுத்தான்.



" சரி இந்த பேச்சு வேண்டாம் விடு நீ மறக்கணும்னு நினைச்சத தோண்டி துருவிட்டேன்.. "  எரிச்சலோடு கூறியபடி அவளை ஆசுவாசப்படுத்த முயல.. " அ.. அன்னைக்கு நான் அவன அவ்..வளவு நம்..பினே..ன் அ..சோக்.. " என்றவள் தொடர்ந்து அதற்கு அடுத்து அவனிடம் சென்று விஷயத்தை கூறியதோடு அங்கு நடந்த விஷயத்தை கூற.. அவள் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிந்தது.



" அவனும் அந்த நேரத்துல சுயநினைவுல இல்ல தான்.. ஒத்துக்கிறேன்.. ஆனா நான் சொல்ல வர்றது என்னனாவது ஒரு நிமிஷம் காது கொடுத்து கேட்டிருக்கலாம்ல்ல.. அங்க இருக்கிறவங்க அத்தன சொல்லியும்.. ஒரு வார்த்தை கூட நம்பாம அவங்க அம்மா சொன்னதை மட்டும் கேட்டு அங்க இருந்து போயிட்டான்.. அஷோக்.. அந்த நிமிஷம் நா எப்படி துடிச்சு போனேன் தெரியுமா.." அவள் விம்மல் அதிகமாக.. தோளோடு தட்டிக் கொடுத்தவன் வேகமாய் எழுந்து நீர் எடுத்து வந்தான்..



" முதல்ல அழுகுறத நிறுத்து.. இதை குடி.. " அவள் நிமிர்வதாய் தெரியவில்லை.. மீண்டும் அவள் அருகில் அமர்ந்தபடி அவளை முதுகோடு தட்டிக் கொடுத்து வாயோடு டம்ளரை கொண்டு நீர் புகட்ட.. கொஞ்சமாய் உள்ளே சென்று அவள் தொண்டையை நனைத்தது நீர்.




"என்னால இப்ப நெனச்சாலும் அதை கடந்து வரவே முடியல அசோக்.. அவ்வளவு தூரம் என் மேல அன்பா இருந்தானே.. எப்படி நான் சொல்ல வர்றது கூட கேட்காம போக அவனால முடிஞ்சது.. " மீண்டும் அவள் உடல் குலுங்க ஆரம்பிக்க.. "ஜான்வி அழாத..  அது என்னைக்கோ முடிஞ்ச விஷயம்.. இன்னைக்கு நம்ம பாப்பாவுக்கும் மூணு வயசுக்கிட்ட ஆயிடுச்சு.. இத்தனை நாள் கடந்தும் இன்னும் அந்த வலியில் இருந்து வெளியே வராமல் உன்னை நீயே போட்டு உறுத்துகிறது சரி கிடையாது.. மெண்டல் ஸ்ட்ரெஸ் தான் ஆகும்..  அது உன்னோட பாஸ்ட்.. அதை நீ கடந்து வர தான் வேணும்.." கூறியவனை நிமிர்ந்து சோர்வாய் பார்த்தவளின் தலை பலமாய் ஆடியது..




புரியாமல் கூர் கண்களை கீழிறக்கினான். "பாஸ்ட் இல்ல அசோக்.. இப்ப பிரசண்ட்லயும் வந்திருக்கு.. அவன்.. அவன்.. ஆர்யன் திரும்ப வந்திருக்கான்.. என்ன பழிவாங்கி துடிக்க வைக்கணும்னு திரும்ப வந்து இருக்கான்.. " கண்ணீரோடு குலுங்கி அவன் நெஞ்சில் சாய்ந்து கதறி கொண்டிருந்த வேளையில்.. இங்கு தன் நண்பனிடம் ஆயிரம் ஆயிரம் நன்றி மழைகளை தெளித்துக் கொண்டு இருந்தான் ஆர்யன்.




"என்னடா இவ்வளவு சந்தோஷம்.. " எதிர்பக்கம் இருந்து கேட்டான் அவன் நண்பன்..



"  மனசுல ரொம்ப நாளா உருத்திக்கிட்டு இருந்த ஒரு ஆதங்கத்தை.. வெறிய.. தீத்துக்க உன் மூலமா அந்த கடவுள் எனக்கு வழி விட்டு இருக்கார்டா.. " கையில் இருந்த சிகரட்டை ஸ்டைலாய் சுழற்றியபடி நெஞ்சுக்குழி மொத்தமும் அடைத்து வைத்திருந்த புகையை உஃப்பென வெளி தள்ளினான்.. 



" என்ன சொல்ல வர்றன்னு எனக்கு ஒண்ணுமே புரியலையே ஆர்யா.."



" புரிய வேண்டிய அவசியம் இல்ல மச்சா.. பட் ஐ அம் ஹாப்பி.. " என்றவனின் கண்களுக்கு முன் காலையிலிருந்து கண்ட ஜானுவின் கலங்கிய கண்கள் வந்து நிற்க.. "யூ ப்ளடி" திடீரென கண்கள் நிறம் மாறி பல்லை கடித்தான்.. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...