முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 21

 என் வேலையை துவங்கி விட்டேன் என ஆதவன் அந்த காரிருளை விரட்டி கொண்டிருக்க.. எங்கோ கேட்ட குயிலோசையிலும் வழக்கமாய் கேட்கும் இப்போது கேட்காத ஏதோ விட்டு போன ஓசையுடனும் கண்களை திறந்தான் அஷோக்.. இரவு முழுதும் அவள் மன வேதனைகளைக் கொட்ட இருவரும் எப்போது உறங்கினார்களோ..




போய் தூங்கு ஜான்வி.. அவன் கூறினாலும் எழுந்து செல்லும் மனநிலையிலா இருந்தாள் அவள். கடைசியில் அவள் அமந்திருந்த அதே சோபா அவளுக்கு படுக்கையாகி இருந்தது.. தரை இவனிடமாகி.. அவள் மடி இவன் தலையணையாகி இருந்தது..




இது எப்போதிருந்து..கேட்டதற்கு பதில் இல்லை.. அவன் ஆழ்ந்த பார்வை அவள் முகத்தில் நிலைக்குத்தியது.



அவள் வீங்கிய முகமும்.. சிவந்த கண்ணங்களும் இரவு முழுதும் பேசிய அவள் கதறலை இன்னும் நீட்டித்தது.




"ஏற்கனவே ரொம்ப அழுதுட்ட ஜான்வி.. இதுக்கு மேலையும் வேண்டாமே.." கெஞ்சலோடு அவள் முகத்தை பார்த்து மனதார கூறியவனின் பார்வை அடுத்த நிமிடம் அரையாய் மூடப்பட்டிருந்த அறையை தொட்டு சென்றது.  கதவின் இடுக்கின் வழியாய் பிள்ளையின் முகம் தெரிய.. உடலில் புது வித எனர்ஜி கொண்டதை போல் ஒரு தெம்பு..




அவன் உயிர் அவன் மகள்.. அவனை மீறி இதழில் கீற்றான புன்னகையுடன் எழுந்தவன் அவன் வேகத்தில் சரிந்த அவள் தலையை நேரே நிமிர்த்தி தலையணையில் சாய்த்தான்.



ஆனால் இது உறங்க வேண்டிய நேரம் இல்லை.. எழ வேண்டிய நேரம் மகனே.. கதிரவன் கண்ணை சிமிட்டினாலும்..  மணியை பார்த்து நேரத்தை உறுதி செய்து கொண்டவன்.. மீண்டும் அவள் அருகிலேயே மண்டியிட்டு அமர்ந்தான்.




"ஜான்வி.. ஜான்வி.." அழைத்தது அவள் காதில் விழுந்ததா என தெரியவில்லை. ஆழ்ந்த உறக்கம் போலும்.




"மேடம் எந்திரிங்க டைம் ஆகிடுடுச்சு.. எனக்கு ஒண்ணுமில்ல.. அப்புறம் நீஙக தான் சொல்ல சொல்ல கேட்காம எல்லாத்தையும் இழுத்து போட்டு செஞ்சிட்டு  டைம் பத்தலைன்னு அடிச்சு பிடிச்சு ஓடுவீங்க.. மேடம்.. ஜானு.."அவள் கன்னம் தட்டியதில் நெளிந்த படி.. அவன் கடைசி வார்த்தையில்.."ப்ச்.. அப்படி கூப்பிடாத அசோக்.."  உறக்க கலக்கத்தோடு எனினும் அவள் கூறியதை தெளிவாக கிரகித்து கொண்டவனுக்குள் துணுக்கம். 



அவளுக்கு பிடிக்கலைன்னா ஏன் அப்படியே சொல்ற அசோக்.. கேள்வியை தன் பக்கமாய் நிறுத்தி சற்று சமனாகி  கொண்டவனாய்..



சரி சொல்லல.. இப்போ எழுந்திரு.. அப்புறம் டைம் ஆச்சுன்னு அவசரமா ஓடக்கூடாது.. என வழக்கமான காலை புறாக்களுக்கே உரிய பழக்கமாய் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.



அடுத்த கால் மணி நேரத்தில் பாத்ரூமை விட்டு வெளி வரும் போது.. இன்னும் எழாமல்.. ஆனால் அப்போதிருந்தற்கு சொகுசாய் முழு சோபாவிலும் சாய்ந்து அவள் படுத்திருந்த கோலத்தை பார்க்க அவள் பேச்சில் மருகிய மனம் ஸஃட்டேனா இப்போது மலர்ந்து சிரிப்பை வரவழைத்தது..



காயம் கொடுக்கவும் அவளால் தான் முடியும்.. அதை சரி செய்யவும் அவளால் மட்டுமே முடியும்..


தாய் எழுப்பி சென்றதும் இழுத்து கொண்டு போர்த்தி கொண்டு குறட்டை விடும் கிருத்தி குட்டியை போல தான் இவளும்.. நினைத்த படி அவளை நெருங்கியவன்.. அவள் முகத்தருகே நெருங்கியபடி அமர்ந்தான்..



சீரான இடைவெளியோடு உள்ளே செல்வதும் வெளிவருவதுமாய் இருந்த சுவாசக் காற்றில்..  என்றாவது ஒரு நாள் தான் இப்படி ஆழ்ந்து தூங்குகிறாள்.. நல்லா ரெஸ்ட்எடுன்னு சொல்ற நீயே இப்படி விடாக்கன்டனா எழுப்பிறியே டா அசோக்.. கேள்வி கேட்டது மனசாட்சி..



"இல்லனா அவ தான் அடுத்து நேரம் பத்தலைன்னு ஓடுவா.. ஹோட்டல் சாப்பாடு ஹெல்தி இல்லனு எல்லாத்தையும் செஞ்சு வச்சுட்டு லொக்லொக்குனு ஓடுறத பாக்க கஷ்டமா இருக்கும்.. "கூறும் போதே அவன் கரம் நெஞ்சை தேய்த்தது.



ஜானு.. அழைக்க வந்த வாயை கட்டுப்படுத்திய படி.."ஜான்வி.. ஜான்வி.. எழுந்திரும்மா.. மணி இப்போவே ஏழு.."அவன் கூறி முடிக்கவில்லை இவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து அவள் முட்டை விழிகள் ரெண்டும் மொட்டென திறந்து கொண்டன.




"என்ன ஏழா.."விழிகளோடு குரலும் அவசரமாக.. கடிகாரத்தில் கண்கள் படிந்து.. உடனே வாரி சுருட்டி எழுந்து விட்டாள்..




முகத்தில் பதட்டம் தொற்றிக் கொண்டது.  ஐந்து மணிக்கே எழுந்து வேலையை  முடித்திருந்தால் தான் இந்நேரம் கிருத்தியை எழுப்பி கிளம்ப வைத்து.. அடுத்ததாய் தானும் கிளம்ப முடியும்.. "




" இன்னைக்கு இப்படி தூங்கிட்டியே ஜானு.." எண்ணிய படி எதிரில் நின்றவனிடம் திரும்பியவள்.. என்ன அசோக்... ஒரு நாள் அசந்து தூங்கிட்டேன்னா எழுப்பி விடுறதில்லையா.."கேட்க.. அவள் விழித்து விட்டாள் என சுதாரிப்பாய் நகர்ந்து நின்றிருந்தவனின் முகம் அவள் கேட்ட கேள்வியில் மாறியது.




" நானே இப்போதான் எழுந்தேன்.. உன்னை எழுப்பி விட்டுட்டு பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ள மேடம் திரும்ப தூங்கிட்டீங்க.. " அவன் கூறியதில் அசடாய் தலையை சொரிந்தாள்..




" சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னைக்கு சமைக்க வேண்டாம்.. " அவன் கூறி முடிப்பதற்குள் இல்லை.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல.." வேகமாய் எழுந்து கலைந்த முடி கற்றைகளை ஒன்றாய் முடிந்த படி பாத்ரூமுக்குள் ஓடிப் போனவள் அடுத்த இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தாள். 



" லேட் ஆகிட்டனால தயிர் சாதம்.. உருளைக்கிழங்கு பொரியல் பன்னிடறேன்.. அசோக் நீ போய் தயிர் மட்டும் வாங்கிட்டு வர்றியா.. "  கேட்டபடி வேகமாய் கிச்சனுக்குள் செல்லப் போனவளை கரம் பற்றி இழுத்து நிறுத்தினான் அவன்.




" ஏற்கனவே லேட் ஆகிடுச்சு ஜான்வி.. பாப்பா ஸ்கூலுக்கு போற நேரமும் வந்துடுச்சு.. நீ பாப்பாவ பாரு.. ஒரு நாள் தானே.. கடையில வாங்கிக்கலாம்.. " என்றவனிடம் மறுப்பாய் தலையாட்டினாள்.



" நமக்கு ஓகே தான்.. ஆனா குழந்தைக்கு கடை சாப்பாடு எப்படி கொடுக்க.. " அவள் கேட்க தலை சாய்த்து பார்த்தான். " ஏன் ஈவினிங் குட்டி வந்ததும் அந்த பக்கத்து வீட்டு பொண்ணு கூட உட்கார்ந்து சேர்ந்து பிரியாணி எல்லாம் முழுங்குறது மேடம்க்கு தெரியாதோ.. " கேட்க மாட்டிகொண்ட ரீதியில் விழித்தவள்



அடுத்த கனமே சுதாரித்து கொண்டு.. " ப்ச்.. என்ன பேசுற நீ.. அது வேற.. இது வேற.. அதுவும் இல்லாம ஸ்கூல்ல திட்டுவாங்கல்ல அசோக்.. " என இல்லாத ஏதாவது காரணங்களை உளறிக் கொட்டி ஒருவழியாய் அவன் பேச்சையும் கேட்காமல் கிச்சனுக்குள் நுழைந்து இருந்தாள்.




" ரொம்ப நேரம் இப்படியே நின்னு பாத்துகிட்டே இருக்காத.. போய் வேகமா தயிர் வாங்கிட்டு வா.. " பேச்சோடு பேச்சாய் அவள் கரம் அரிசியை களைந்து கொண்டிருந்தது.. தான் என்ன கூறினாலும் அவள் கேட்கப் போவதில்லை என தன் முறைப்புப் பார்வையை திருப்பியவன்  ம்ஹ்ம்ம்.. பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு வெளி சென்று முன்னிருந்த கடையில் இரண்டு தயிர் பாக்கெட்டுகளை வாங்கி 

கிச்சன் மேடையில் வைக்க.. சூடாய் பொங்கி வந்திருந்த சாதத்தில் அதை விட்டு கிளறி சூடான தயிர் சாதத்தை கிண்ட ஆரம்பித்தாள்.




அவ்வளவு தான் ரெடி..  என்றபடி எட்டிப் பார்த்த அவள் விழிகள் கிருத்தியின் அரை கதவை தொட அங்கு குழந்தையை குளிக்க வைத்து உடைமாற்றிக் கொண்டிருந்த அசோகனை கண்டதும் இதழில் தானாய் புன்முறுவல் படர்ந்தது.. தான் சொல்லாமலேயே தனக்கான தேவைகளை அறிந்து செய்ய இவனால் மட்டுமே முடியும்..




ஆரம்பத்தில் இருந்தே அப்படி தானே.. அப்படியானால் ஆரி..?? மனம் ஏனோ இவனை ஆரியனோடு ஒப்பிட்டு கேள்வி எழுப்பியது.



ஆரியன் என்னைக்குமே நான் சொல்லாமல் என் உணர்வுகளையோ விஷயங்களையோ.. புரிஞ்சுகிட்டதே கிடையாதே.. ஒன்னு நான் சொல்லணும்.. இல்ல மிதா சொல்லணும்.. வருத்தத்தோடு மறுமொழி கூறிக் கொண்டது நெஞ்சம்.





திடீரென குக்கரில் இருந்து ஸ்ஸ்ஸ்.. வந்த விசில் சத்தம் நல்ல வேலையாய் நேரத்துக்கு எழுந்து அவள் யோசனையை கலைத்து விட்டது.. இல்லையெனில் இந்த  விடியற்காலையிலேயே தேவையில்லாத எண்ணங்கள் அவளை ஆழ்துளை கிணறு தனக்குள் இழுத்து விழுங்கி கொள்ளும் என்பது மறுக்க முடியாத உண்மை..  ஆனாலும் அவனும் அசோக் மாதிரி இருந்திருக்கலாம்.. கரம் எழுந்த விசிலை தட்டி விட வெறுமையாய் எண்ணிக்கொண்டாள்.




இவனையும் அவனையும் நீ கம்பேர் பண்றியா.. அப்படின்னா ஆரியன் இடத்துல அசோகையும் வச்சு பார்க்கிறியா.. என மனதில் இருந்து எழுந்த திடீர் கேள்வியில் திடுக்கிட்டாள்.




" நான் எப்போ அப்படி சொன்னேன்.. புரிஞ்சு நடந்திருக்கலாமேன்னு சொல்ல வந்தேன்.. அவன் மட்டும் என்ன புரிஞ்சு நடந்திருந்தால் இன்னைக்கு எனக்கும் என் குழந்தைக்கும் இந்த நிலைமை கிடையாதே.. " ஓடிவந்த மனசாட்சியை மண்டையில் தட்டி துரத்தி விட்டாள்.



" புரிந்து நடக்கிறத விடு .. இன்னைக்கு வேலைக்கு போனதும் ஆரியன் என்ன எல்லாம் பண்ண போறான்னு தெரியலை??.. " அவளை பயமுறுத்தி விட்டது அதே மனசாட்சி.



அசராமல் குக்கரில் இருந்து எடுத்த உருளைக்கிழங்கை தட்டில் வைத்தாள். " அவன் என்ன பண்ணா என்ன.. நான் அங்க போறது வேலை பார்க்க மட்டும் தான்.. என் வேலையில சரியா இருந்தேன்னா யாரால என்ன சொல்லிட முடியும்.. " தன்னை தானே தைரியப்படுத்திக் கொண்டவளுக்கு தெரியாது அன்று அவள் படப்போகும் பாடு.




திடீரென ஸ்ஸ்ஸ்.. சத்தத்தோடு அவள் கை எடுக்க.. அய்யோ ஜானு.. அதே நேரத்தில் அவள் கரத்தை பற்றி இருந்தான் அசோக்..



" என்ன ஜானு பார்த்து வேலை பார்க்க மாட்டியா" என்றவனின் விழிகள் கத்தி பட்டதில் கீறி வெளிவந்து கொண்டிருந்த அவள் ரத்தத்தில் பதிய.. எவ்வளவு ரத்தம் போகுது பாரு.. ஓடி சென்று பழைய துணி ஒன்றை கிழித்து எடுத்து வந்தான்..




" இப்படி வா.. " வேகமாய் அவளை ஹாலுக்கு எழுத்து வந்த சோபாவில் அமர வைத்து அவள் ரத்தம் அந்த விரலுக்கு துணியை கட்டிவிட.. " அவன் முகத்தில் தெரியும் படபடப்பும் அவளுக்காய் அவன் பரிதவிக்கும் தன்மையும் சிரிப்புதான் வந்தது அவளுக்கு.




" அசோக் இது சாதாரண காயம் தான்.. சமைக்கிறப்போ இதெல்லாம் சகஜம்.. " அவள் கூறி முடிப்பதற்குள் சிவந்த விழிகளோடு.. " அறைஞ்சேன்ன்னா பாரு.. " அவன் கை ஓங்கியதில் ஹக்.. உடல் அதிர வாய் மூடி கொண்டது.



" என்ன நினைச்சுகிட்டு இருக்க நீ.. சமைக்கிறப்போ கவனத்தை ஒழுங்கா அதுல வைக்க வேண்டாம்... இப்படி கையை கீறிக்கிட்டு.. இதெல்லாம் சகஜம்னு சொல்லிக்கிட்டு இருக்க.. " அவன் குரல் ஓங்கியது பேச்சு வரவில்லை அவளுக்கு.




"அ.. அதில்ல அஷோக்.. நான் கவனமாகத்தான்...."



" இருந்த நீ..  அதான் நான் பார்த்தேனே.. அந்த குக்கர் விசில் தட்டி விடும்போதே உன் கை சூடு பட்டுருக்கணும்..  ஜஸ்ட் ல கை எடுத்துட்டே.. அப்படி என்ன அவசரம் உனக்கு ஜான்வி.. ஒரு நாள் சாப்பாடு இல்லைனா என்ன ஆகிட போகுது.. இப்படி அவசர அவசரமா சமைக்கணுமா.. " கோபத்தில் படபடுத்தவன் சட்டென நீதானித்தான்.




அவள் தொங்கிய முகம் அவனை நிதானப் படுத்தியதோ..



கிருத்திகா ஒன்றும் புரியாமல் படபடக்கும் தந்தை அவனையும் முகம் சோம்பி அமர்ந்திருக்கும் தாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க.. 




"ஜான்வி.." அமைதியாகி போன குரலில் அழைத்தான். " ஏன் இப்படி பண்ற.. யார் என்ன சொன்னாலும் நம்மள காயப்படுத்தி நம்மளால தான் முடியும்.. தேவையில்லாத விஷயங்களை ஓரம் கட்டு.. அப்போதான் நிகழ்காலத்தில் மகிழ்ச்சிய விட நிம்மதியாவாவது வாழ முடியும்.. " எதை மனதில் வைத்து கூறுகிறான் எனavalaalb புரிந்து கொல்ல முடிந்தது.




". ம்ம்.. இனி முயற்சி பண்றேன் அசோக்..  " சோர்ந்த குரலில் கூறியவளை.. " சரி.. இன்னைக்கு நானே உன்ன ஆபீஸ்ல விட்டுட்டு வேலைக்கு போறேன்.. " அவன் கூறிட.. " அப்போ என்ன.. " தாய் தந்தையின் சண்டை அமைதியானதில்.. சட்டென முகத்தில் மலர்ச்சி பொங்க.. தந்தை அவனை கழுத்தோடு கட்டிக் கொண்டாள் கிருத்திகா.




" என் செல்லக்குட்டியை கூட்டிட்டு போகமலா.. முதல்ல என் இளவரசிய தான் விடப்போறேன்.. "அவன் கூற.. மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் அவன் கழுத்தோடு முத்தமிட்டாள் குட்டி பெண்.




" இப்போ தலை சீவலாமா.. " கேட்ட படி அவளை இரு கரங்களிலும் அள்ளிக் கொண்டு சென்றவனை விழிகள் நிறைக்க பார்த்தாள்.




" எப்படி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி இவனால் இவ்வளவு அன்பை எங்கள் மீது காட்ட முடிகிறது.. " வழக்கம்போல்  எழுந்த அதே கேள்வி இன்றும் அவளை உணர்ச்சி வசப்பட வைத்தது..



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...