முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 22

 குழந்தையை கிரஷில் விட்டு பைக்கில் வந்து கொண்டு இருந்தனர் இருவரும். 



இன்னும் முகத்தில் குழப்பம் தங்க காலையிலேயே சோர்வுடனும்.. பதட்டத்துடனும் அமர்ந்திருந்தவளை கண்ணாடியின் வழியாய் அவ்வப்போது பார்வையினால் உரசியபடி வந்து கொண்டிருந்தான் அசோக்..



"இன்னும் ஏன் ஒரு மாதிரியாவே இருக்க.. அதான் சொன்னது போல ரெண்டு பேரையும் ஹோட்டல்ல சாப்பிட விடாமல் செஞ்சாச்சே.." சலிப்பு தட்டியது போல் கேட்டாலும் அது நிச்சயம் அவளுக்கான பெருமிதம் தான்.. ஹோட்டல் உணவிற்கே பழகிய வாய் இப்பொழுது வீட்டு சாப்பாடு ருசிக்கிறது என்றால் அது அவள் கைமணம் என்பது மறுக்க முடியாத உண்மையாயிற்றே.




ஒன்னும் இல்ல அசோக்.. கண்களை படபடத்து தன்னை நிதானபடுத்தும் பொருட்டு கொட்டிக் கொண்டாள்..



"இல்லையே ஏதோ ஒன்னு இருக்கே.." விழுந்த பச்சை விளக்கை கண்டு கிக்கரை உதைத்து வண்டியை எடுத்தான்.



"ப்ச்.. நேத்துசொன்னேன்ல.. ஆரியன் வந்திருக்கான்னு..  இன்னைக்கு என்னெல்லாம் பண்ண போறான்.. அவனை எப்படி சமாளிக்க போறேன்னு நினைச்சா ஒரே பதட்டமா இருக்கு.." மனதை மறைக்காமல் வெளி கொட்டியவளை கண்டு கேட்டவனின் முகம் இறுகிப்போனது.. 



" என்ன ஒன்னும் பேச மாட்டேங்குற.. " பிடித்திருந்த அவன் தோளை பரிதவிப்போடு உலுக்கினாள்.




" என்ன பேச சொல்ற.. நேத்தே அது முடிஞ்சு போன சகாப்தம்ன்னு தானே பேசினோம்.. திரும்ப அதையே தூக்கி கையில வச்சுக்கிட்டு புலம்புனா என்ன பண்றது.. "  என்றவனிடம் இப்போது அது ஒன்றும் முடிந்து போன சகாப்தம் இல்லை என வெளிப்படையாய் அடித்து பேச முடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது.



" ஆனா உண்மையாவே அவன் நினைக்கிற மாதிரி கிடையாதே அசோக்.. அதை அவன் கிட்ட நிரூபிக்க வேண்டாமா.. " தவிப்பாய் கேட்டவளை தலையை மட்டும் திருப்பி பார்த்து மீண்டும் முன்னால் திரும்பிக் கொண்டான்  



" உன்ன நம்புறவங்க கிட்ட நீ எதனாலும் சொல்லலாம்.. அவங்களும் அத ஏத்துக்குவாங்க.. நம்புவாங்க..  ஆனா உன்ன நம்ப கூடாதுன்னு விடாண்டவாதமா இருக்கிறவன்கிட்ட உன்னை நிரூபிக்கணும்னு ஏன் இப்படி நீ தவிக்கிற.. "  அவன் ஆணித்தரமான கேள்வியில்.. " ஆனா அவனுக்கு அன்னைக்கு நடந்த நிகழ்வுகள் தப்பா போர்ட்ரேட்  ஆகி இருக்கே..  அதனாலதான் இவ்வளவு வெறுக்கிறான்.. இல்லனா அவன் கேரக்டர் இது கிடையாது.. " மீண்டும் மீண்டும் அவனுக்கே வரிந்து கொண்டு செல்பவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது என புரியவில்லை.




ஆனால்.. என ஆரம்பித்து ஒரு கணம் இதழ் கடித்து தன்னை நீதானப்படுத்தி கொண்டான்.. அவனை பற்றி பேசும் போது தழுதழுக்கும் அவள் குரலும்.. பேச்சும்.. புதிதாய் பட்டது.



" அப்படின்னா அவன் கிட்ட அன்னைக்கு நடந்த விஷயத்தை ஒண்ணு விடாம சொல்லிடு.. அதுக்கு மேல அவன் எடுக்க வேண்டிய முடிவை எடுக்கட்டும்.. " சாதகமாய் பேசியதில் அவள் விழிகள் ஆச்சரியமாய் விரிந்தன.




"  திடீர்னு எனக்கு சப்போர்ட் பண்ற.. அப்போ நான் யோசிக்கிறது சரிதானே.." கேட்டு ஊர்ஜிதமாய் மகிழ்ச்சியுற்றவளாய்.. "ஆனா அதுல தான் ஒரு பிரச்சனை பாரு.. நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட அவன் கேட்கவே மாட்டேங்குறான்.. ஒருமுறை கேட்டுட்டான்னா போதும்.. இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சிடும்.. " அவள் கூறக் கூற முன் இருந்தவனின் கண்கள் சுருங்கி விரிந்தன. 




" ஒன்னு மட்டும் கேட்கிறேன்.. இன்னும் நீ அவன காதலிக்கிறியா ஜான்வி.. " அவன் கேள்வியில் இதுவரை வாய் ஓயாமல் பேசி வந்தவளிடம் திடீரென பலத்த அமைதி.. ஆனால் அந்த அமைதியை செய்தி கூறியது.. 



அப்போ பேசிடு.. வண்டியையும் சடார் என பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான்.




இறங்கினாள். "உண்மையாவா சொல்ற அசோக்.." அவள் கண்களில் அளவு கடந்த எதிர்பார்ப்பு.




"இத்தனை வருஷம் கழிச்சும் இவ்வளவு நடந்த பிறகும் நீ அவனை காதலிக்கிறேனா அப்ப சொல்றது தானே நல்லது.. "கடைசி வார்த்தைகளில் ஏனோ அவன் குரல் கமரியது..




" அவர் உன்னை காயப்படுத்தனும்னு என்ன சொன்னாலும் சரி.. அதையெல்லாம் காதுல வாங்காம  உன் மனசுல இருக்குறத நீ சொல்லிடு.. " அவன் கூறிட மனதில் ஒரு தெளிவு கிடைத்தது போல் முகம் மலர்ந்தாள் ஜான்வி... 



கண்டிப்பா இன்னைக்கு சொல்லிடறேன்.. தேங்க்ஸ் அசோக்.. உன் கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் மனசு கொஞ்சம் தெளிவா இருக்கு.. ஐ ஆல்வேஸ் நீட் யூ அஸ் எ ஃப்ரெண்ட்.." முடிவு உறுதியானதில் முகம் ஜொலிக்க கூறியபடி உள்ளே ஓடியவளை நின்று ஒரு கணம் ஆழ்ந்த பார்வையோடு துளைத்து பின் என்ன நினைத்தானோ  உஃப்.. என ஊதி.. கண்களை படபடக்க சிமிட்டி வண்டியை கிளப்பி இருந்தான் அஷோக்..



இனிமேல் நேரத்திற்கு வராவிட்டால்  தாமதிக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் பைன் என நேற்று வந்த புது மேனேஜர் போட்ட புது ரூல்ஸ்சில் அடித்து பிடித்து வழக்கமாய் வருவதற்கு ஒரு பஸ் இருக்கும் முன்பே வந்திருந்தாள் திவி.




" இந்த மேனேஜர் என்  இவ்வளவு பாடுபடுத்துறாரு.. இதுக்கு முன்ன இருந்த அந்த சொட்டையை பரவாயில்லை.. போர் அடிக்குதே.. " என்றவளின் கண்கள் ஜான்வி வருகிறாளா என பார்த்து அவள் இல்லாததில் சோம்பலோடு திரும்பியது..





" எப்போ வருவ ஜானு.. " புலம்பியவள் இன்னும் எதிரில் இருந்த சிஸ்டமை கூட ஆன் செய்திருக்கவில்லை.




திவி.. கேட்ட குரலில் விழிகள் மலர்ச்சியாக  நிமிர்ந்தாள்.




" அப்பாடி ஜான்வி..வந்துட்டியா.. இப்பதான் நீ வறியான்னு பாத்துட்டு திரும்புனேன்.. எப்படியோ வந்துட்டியே..சப்பா.. " என பெருமூச்சு விட்டவளை புரியாமல் பார்த்தபடி கைப்பையை கீழே வைத்து தன் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.



என்னடி காலையிலேயே ஒரு மாதிரி டயர்டா தெரியுற.. " 



" எல்லாம் இந்த புது மேனேஜர் படுத்துற பாடுதான்.. சீக்கிரமா வந்துடனும்.. லேட்டா வந்தா பைன் ன்னு சொல்லிட்டாரே.. " பெரிதாய் நொடித்துக் கொள்ள.. " அது சரி இல்லன்னா நீ எல்லாம் சீக்கிரமா வந்துடுவியா.. " கேட்டபடி நேராய் அமர்ந்து பெண் சிஸ்டத்தை ஆன் செய்தாள்..



ஹான்.. முழுமுற்றாய் திரும்பி குறுகுறு பார்வையோடு அவளைப் பார்த்தாள்.



" என்னடி அப்படி பாக்குற.. "



" இல்ல அவர் நேத்து உன்னை அவ்வளவு வறுத்து எடுத்தும் எப்படி அவருக்கு சப்போர்ட் பண்ற.. " பெரிய மனுஷியாய் அவள் தலையாட்டியபடி கேட்க.. "ப்ச்.. என்னதான் அவர் சொல்லியிருந்தாலும் அவர் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டது என் தப்பும் கூட தானே.. " என்றவளை பார்த்து வாயில் கை வைத்தாள்.



'' என்னடி இவ்வளவு சப்போர்ட் பண்ற.. "


"ம்ம்.." ஒன்றுமில்லை என்பது போல் அவள் தோலை குலுக்கினாலும் வழக்கத்தை விட அவள் முகத்தில் தெரியும் அதிக புதுப்பொலிவு?? ஹேய் ஜான்வி.. அவள் இரு தோள்களையும் பற்றி தன் பக்கமாய் திருப்பி அவள் முகத்தையே குறுகுறுப்பாய் பார்த்தாள் திவி.



" என்ன ஆச்சு ஏன் அப்படி பாக்குற.. " அவள் கண்மணிகள் ரெண்டும் உருண்டன.



" இல்ல வழக்கத்தை விட உன் ஃபேஸ் கொஞ்சம் க்ளோவா இருக்குற மாதிரி தெரியுது.. பார்லர் போனியா.. " அவள் கேள்வியில்  அந்த மாற்றம் ஏன் என உணர்ந்து கீழே உதட்டை கடித்துக் கொண்டாள்.




என்ன நடந்தாலும் அவன் எப்படி பேசினாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் விஷயத்தை அவனிடம் கூற வேண்டும் என முடிவெடுத்து விட்டாlளே.. இன்று எப்படியும் அவனிடம் விஷயத்தை கூறி விடுவாள்.. அவனும் மனம் மாறி தன்னையும் தன் மகளையும் ஏற்றுக் கொண்டு.. இதனை நாட்கள் தங்கள் பட்ட பாட்டிற்கு மருந்தாய் அமைய போகிறான்.. அந்த எண்ணத்தில் வந்த பொலிவு தான் இது என்பதை எப்படி உன்னிடம் கூறுவேன்.. மனதில் எண்ணம் பொங்க ஜான்வி அமைதியானதில்..  உன்ன தான் டி.. கேட்க ஆரம்பித்தவள்  ம்ம்க்கும்.. அருகில் கேட்ட தொண்டைச் செருமலில் விழித்தாள்.


ஜான்வியும் கூட மலர்ந்த விழிகளோடு திரும்ப.. தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றபடி கைகள் இரண்டையும் பேன்ட் பாக்கெட்டில் விட்ட படி தன் கூரான பார்வையால் அவர்களையே துளைத்துக் கொண்டிருந்தான்  ஆரியன்.. 




சார்.. ஒருவரின் நா மேலாணத்தோடு ஒட்டிப் போக இன்னொரு வழியில் விழிகளோ லஜ்ஜை இன்றி  அவனை அதுரமாய் வருடியது..  அவன் தனக்கே தனக்கானவனாய் மாறப் போகிறான் என அறிந்த பின் காதலை கண்களில் காட்ட தடை ஏது..??




அளந்தெடுத்த வடித்த பூஜ வடிவத்திற்கு ஏற்றார் போல் முகத்தையும் செதுக்கினானோ என்ற கேள்விக்கு ஏற்ப கழுகு கண்களும் கூரான மூக்கும் ஊசி தாடையுமாய்.. எட்டிப் பார்த்த அந்த இதழ்களிலும் கூட சிகரெட் படாத செம்மை.. காந்த கண்களின் மேலிருந்த அடர் இமையும் கூட கவி பேசும்.. எட்டு வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ இன்றும் அதே ஆளுமை.. ஆனால் அந்த கண்களில் இருந்த வசீகரம் மட்டும் கூடியதாய் தோன்றியது..




அணிந்திருந்த சாம்பல் நிற கோட் அவனை இன்னும் மிடுக்காய் காட்ட..  இமைக்க மறந்து இதழ்களில் புன்னகையோடு நின்றவள் முன்.. ஷ்ட்.. ஷ்ட்.. சுடுக்கிட்டான் அவன் ..



ஹான்.. தெரிந்துவிட்டதன் அடையாளமாய் விழித்தவளைக் கண்டு என நினைத்தானோ காலையிலேயே  உங்க வெட்டி புராணத்தை ஆரம்பிச்சாச்சா.. ஷிட்.. எரிச்சலில் அவன் கத்த மற்றவர்கள்  சுதாரித்துக் கொண்டு தங்கள் சிஸ்டமே ஆன் செய்ய.. தன்னை காயப்படுத்தத்தான் அவனின் இந்த கோபம் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.



ஆனாலும் எதுவரை சென்று விடுவான்.. என்று அவன் என்ன செய்தாலும் விஷயத்தை கூறாமல் விடப் போவதில்லை என்பதில் முடிவாய் அவள் நிற்க.. அவள் தீர்க்க பார்வை அவனை அசைத்ததன் அடையாளமாய் உடனே நக்கலான சிரிப்போடு அவன் பார்வை திவி சிஸ்டத்தின் மீது படிந்தது. 




"வந்து அரை மணி நேரம் ஆயிருச்சு.. இன்னும் சிஸ்டம் கூட ஆன் பண்ணல.." என்றவனின் இறுகிய குரலில் சப்தமும் ஒடுங்கிப் போனது அவளுக்கு..


" இப்ப பண்ணிடறேன் சார்..'' என்றாள் மிரண்டு.




"சீக்கிரமா.." என பள்ளி தலைமை ஆசிரியர் போல் மிரட்டியவன் பழைய ஃபார்முக்கு வந்திருக்க வேண்டும்.. அவன் கூர் பார்வை மீண்டும் தன் எதிரில் நிற்பவளிடம் குவிந்தது.



"நேத்து கொடுத்த வேலையை முடிச்சிட்டீங்களா.." அலுவலகப் பேச்சாம்.. சிரிப்பு வந்தது ஜான்விக்கு..



தன்னிடம் பேச வேண்டும் என நினைக்கிறான்.. ஆனால் அதை வெளிப்படையை ஒப்புக் கொண்டால்  தான் என்ன.. ஏன் இப்படி சிடுசிடுப்பாய் காட்ட வேண்டும்.. 



"நேத்தே முடிச்சிட்டேன்.. உங்க டேபிள்ல சப்மிட் பண்ணிட்டேன்.. "



"அதுக்காக இப்படி வந்தது உக்காந்து வெட்டி நாயம் அடிக்கணும்னு அவசியம் இல்லை இடியட்.." வார்த்தைகளில் சட்டென பாம்பாய் சுருங்கியது அவள் முகம்..




   தலைசாய்த்து ஆழ்ந்து அவள் இருண்ட முகத்தை பார்த்து வந்த வேலை சிறப்பாய் முடிந்து விட்டிருந்ததில்.. நேத்து வந்த புது ப்ராஜெக்ட் பைலை எடுத்து வொர்க் பண்ண ஆரம்பிங்க.. என்ற படி திரும்பி.. மகேஷ்.. எனக் குரல் கொடுக்க ஓடிவந்த ஆபீஸ் பாயை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து விட்டான்.




அவன் சென்றதும் ஏதோ புயலே அடித்து ஓய்ந்த அமைதி.. இவர் எப்பவும் எப்படி சிடுசிடுன்னு தான் இருப்பாரா.. கொஞ்ச நேரத்துல படபடன்னு வந்துடுச்சு.. இவருக்கு வரப்போறவ எல்லாம் உண்மையாவே ரொம்ப பாவம்.. அட அதுக்கு நீ ஏண்டி முறைக்கிற.. கூறிய படி திரும்பிய திவி தன்னையே முறைத்து அமர்ந்திருந்த தோழியைக் கண்டு விழித்தாள்..



அப்படி எல்லாம் சொல்லாத.. அவர் நல்ல மனுஷர் தான்.. என்ன கொஞ்சம் கெடுபிடியா இருக்கிறதால உனக்கு அப்படி தெரியுது.. என்ற படி மெயிலில் வந்து இருந்த தன் செய்திகளை ஆராய்ந்தாள்..



"ம்ம்ம் ரொம்ப பொறுப்புணர்ச்சி தான்.." உதடு சோழிழ்த்துவிட்டு தன் கணினியில் மூழ்கினாள் திவி.




நேற்று இரவு முடித்திருந்த  ப்ராஜெக்ட் வரைபடத்தை அனுப்ப கூறி அவனிடமிருந்து மெயில் வந்து இருந்தது.. அதான் டேபிள்ல சப்மிட் பண்ணிட்டோமே.. இன்னும் பாக்கலையா அவன்.. " யோசனையோடு எழுந்தவள் முதலில் அந்த ப்ராஜெக்ட் எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டால் அடுத்தடுத்த வேலைகளை செய்ய எளிதாய் இருக்கும் என யூகித்து அவன் அறை கதவை தட்டினாள்.



தனியே பேசுவதற்கான வாய்ப்பு.. இதுதான் சரியான நேரம் ஜான்வி.. நடந்த உண்மை எல்லாம் ஒன்று விடாமல் அவர்கிட்ட சொல்லிடு.. அவர் பக்கம் இருந்த நியாயத்தையும் நீ புரிஞ்சுகிட்டேன்னு எடுத்து சொன்னா நிச்சயம் அவர் எல்லாத்தையும் நம்ப வாய்ப்பிருக்கு.. உள்ளிருந்து எழுந்த குரலில் தடதடத்த இதயத்தை தட்டி சமன் செய்தபடி கதவை தட்டினாள்.



கமின்.. குளிர்ந்து வந்த அவன் கம்பீரக் குரலில் ஒரு கணம் தடுமாறி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.



உள்ளே லேப்டாப்பில் ஏதோ தட்டிக் கொண்டிருந்தான்  ஆர்யன்.. வேலையா இருக்காரா.. இந்நேரம் சொன்னால் சரியா வருமா.. இன்னும் என் மனசுல அவர்தான் இருக்கார்னு தெரிஞ்சா ஏத்துக்குவாரா.. "



" கண்டிப்பா ஏத்துக்குவார் உன் ஆரிய பத்தி உனக்கு தெரியாதா ஜானு.. " மனம் கொடுத்த அலாதி நம்பிக்கையில்  தெளிவான முகத்தோடு அவன் முன்னே நின்றாள். 




ஆரி.. அழைக்க வந்த வாயை கட்டுப்படுத்திக்கொண்டு சார் என்றாள் பவ்யமாய்..


கண்களை மட்டும் நிமிர்த்தி என்னவென்பது போல் அவன் பார்க்க.. ஹான்.. அந்த பைல் கேட்டு மெயில் பண்ணி இருக்கீங்க.. ஆனா நேத்தே உங்க டேபிளில் வைத்துவிட்டேனே.. 



இட்ஸ் ஓகே.. நான் பாத்துக்குறேன்.. முடிந்தது என்பது போல் மீண்டும் அவன் லேப்டாப்பில் மூழ்கி விட.. ச்சை.. ஒன்னு பேசி கொல்றான்.. இல்ல பேசாம கொல்றான் என   சுடிதார் துப்பட்டா ஓரத்தை விரலில் சுற்றியபடி  முணுமுணுத்து கொண்டவள்.. மீண்டும் சார்.. அழைத்தாள் மெதுவாய்.



என்ன.. இப்போது அந்த குரலில் சுருதி கொஞ்சம் கூடி போனது.



ஹக்.. என்ன பதறிய நெஞ்சத்தை தட்டிக் கொடுத்தபடி கொஞ்சம் மெதுவா பேசினா தான் என்னவாம்..  என தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டு.. 



ஆரி.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..  அன்னைக்கு முழுசா என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா.. என்ன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் கூறி முடிப்பதற்குள் எப்போது சேரிலிருந்து எழுந்தானோ.. டேபிளை சுற்றி பாய்ந்து வந்தானோ..  அவள் கழுத்தை பிடித்தானோ.. அவளை தரவென பின்னே நகற்றி சுவற்றோடு ஒட்டி நிறுத்தி கழுத்தோடு பிடித்து மேலே தூக்கினான்.. அவன் கண்கள் செவ்வானமாய் சிவந்து கிடந்தன.




அவனை இந்த எதிர்பாராத ஆக்ரோஷத்தில் ஆடிப் போனாள் ஜான்வி.. 



ஆரி.. நா என்ன சொல்ல வர்றேன்னா.. திணறியபடி ஆரம்பித்த விஷயத்தை முடித்து விட எத்தனைக்க.. 



இன்னொரு இன்னொரு வார்த்தை பேசின.. கோழி மாதிரி கழுத்து நெரிச்சு தூக்கி போடவும் தயங்க மாட்டேன்.. அடிகுரலில் உருமினான்.



என்ன டி என்ன நெனச்சுட்டு இருக்க.. இது என்ன உன் அப்பன் வீட்டு கம்பெனியா.. ஏற்கனவே சொல்லி இருக்கேனா..இல்லையா வேலை நேரத்தில் வேலையை மட்டும் பார்த்தால் போதும்னு..



நீ பாட்டுக்கு ஆரி கீரின்னு உரிமையா பேசிகிட்டு வந்து நிக்கிற.. முதல்ல இப்படி கூப்பிடுற உரிமையை உனக்கு யார் கொடுத்தது.. 



என்ன காலையில உன்ன வந்து டிராப் பண்ணிட்டு சிரிச்சு வழிஞ்சு பேசிட்டு போனானே.. அவனை மாதிரி என்னையும் உன் வலைக்குள்ள விழ வைக்க திட்டமா..



ச்சி அசிங்கமா இல்ல உனக்கு.. ஏதோ ஒன்னு கண்டதெல்லாம் மேயுற மாதிரி.. இப்படி அலையுற.. வெறுப்போடு முகம் சுழித்து அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் மனதில் பழுக்க காய்ச்சிய கம்பியாய் ஆழமாய் ஊடுருவியது..




எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் குளம் கட்டிவிட.. ப்ளீஸ்.. நான் என்ன சொல்றேன்னு ஒரு நிமிஷம் கேளுங்களேன்.. என்றவளை சட்டென தொப்பலாய் விட்டு நகர்ந்து நின்றான்..



அவன் தூக்கியதில் விக்கிப் போன தொண்டை குழியை நீவி விட்டபடி தொண்டையை பற்றி கொண்டு  அவள் துடித்து நிற்க.. "ச்சி.. உன்கிட்ட பேசறதே அசிங்கம்.. இவ்வளவு சொல்லியும் கொஞ்சமும் வெட்கமில்லாமல் அன்னைக்கு என்ன நடந்துச்சுனு திரும்ப ஆரம்பிக்கிற.. ஓஹ்ஹ்..  காட்.. உன்ன பாக்க பாக்க இப்படி ஒருத்திக்கா அன்னைக்கு சப்போர்ட் செஞ்சேன்னு எனக்கே என்ன நெனச்சு அசிங்கமா இருக்கு.. உன்ன பாக்க பாக்க பத்திகிட்டு வருது.. தயவு செஞ்சு இங்க இருந்து போய் தொல.. என் கண்ணு முழில பட்டுடாத.. " அவன் பேச பேச அவள் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வடிந்தது.





அப்படித்தான் என்ன தவறு செய்து விட்டோம்.. ஒருவனை உண்மையாய் காதலித்ததற்காக இவ்வளவு பெரிய தண்டனையா.. அதுவும் அவனே புரியாமல் தன் கற்பை கலங்கப்படுத்துவது எவ்வகையில் நியாயம்.. கடவுளே.. இதுக்கு பேசாம நீ என்ன கொன்னே போட்டு இருக்கலாம்..  மனதில் ஏகப்பட்ட கதறலோடு அவள் உடைந்து நிற்க.. ஒலித்த அவன் போனை எடுத்துப் பார்த்தான் ஆர்யன்.




அம்மா.. திரையில் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.. பெரிய நீள் மூச்சோடு தன்னை நிதானப்படுத்திக் கொண்ட படி அழைப்பை ஏற்று காதில் வைக்க ஆரிக்கண்ணா எதிர்பக்கம் இருந்து மணிமேகலையின் குரல்.. அருகில் நின்றவளுக்கும் சேர்ந்தே கேட்டது.



தன் வாழ்க்கையை கெடுத்ததில் இந்த புண்ணியவதிக்கும் பெரும் பங்கு உள்ளதே.. அன்று மட்டும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் அன்றே தான் கூற வந்தdhai முழுமையாய் அவன் கேட்டிருப்பான்.. தானும் தன் குழந்தையும் இப்படி அனாதையாய் வாழ வேண்டிய அவசியம் வந்திருக்காது..



சொல்லுங்கம்மா.. இன்னும் உறுமலாய் நின்ற அவன் குரலில் என்னபா ஆரி.. எதுவும் பிரச்சனையா.. " கேட்டதாயிடம் "அதெல்லாம் ஒன்னும் இல்லமா நீங்க சொல்லுங்க" என்றான் இந்த முறை சற்று குரலை தழைத்து.




"அது ஒன்னும் இல்லப்பா நான் தான்ஏற்கனவே சொன்னேனே..  என் அண்ணன் மக ரூபா.. என இழுத்தவள்.. உனக்கேத்த மாதிரி நிறைய படிச்சிருக்கா.. நம்ம கேட்ட வசதி வாய்ப்பான குடும்பம்.. நீ மட்டும் சரின்னு சொல்லிட்டா சீக்கிரமா உங்க ரெண்டு பேருக்கான கல்யாண பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சுடலாம்.. 




அம்மா.. அவன் ஆரம்பிக்க..  டைம் வேணும்னு சொல்லி சொல்லி ஏற்கனவே நிறைய டைம் எடுத்துட்ட ஆர்யா.. இன்னும் எவ்வளவு நாள் எடுக்கப் போற.. உனக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்கணும்னு அம்மாவுக்கும் ஆசை இருக்காதா பா.. ஏதோ ஒரு கழிசடை உன் மேல தேவையில்லாத பழியை போட்டுட்டான்னு இன்னும் நீயும் அதுக்குள்ளேயே மூழ்கி கிடக்கிறதும் சரி இல்லயே.. தாய் கூற கூற.. அவள் யாரைப் பற்றி கூறுகிறாள் என உணர்ந்து ஜான்வி விரிந்த வழிகளோடு நிமிர்ந்த ஆரியன் முகத்தை பார்க்க..



அம்மா.. அம்மா.. அவளை நிறுத்தினான் ஆரியன்.


" இப்போதும் நிச்சயம் இந்த திருமணம் வேண்டாம் என்றுதான் கூறப்போகிறான்.. அப்படி கூறுவதற்கு தான் தான் காரணம்.. இப்பதான் அவனிடம் விஷயத்தை கூறிவிடலாம்.. " என அத்தனை அடிபட்டும் தன் காதலுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து நம்பிக்கையோடு அவன் முகம் பார்த்து அவள் நின்று இருக்க..



" நான் கேட்ட டைம் முடிஞ்சிருச்சுன்னு எனக்கே தெரியும்.. நானும் நல்லா யோசிச்சுட்டேன்.. ரூபா தான் நமக்கு.. நம்ம குடும்பத்துக்கு.. முக்கியமா எனக்கு சரியா வருவான்னு தோணுது.. நீங்க மேற்கொண்டு ஏற்பாடு செய்ய வேண்டியதை பண்ணிடுங்க.." அவள் எண்ணத்தில்..தலையில் ஒரு லாரி மண்ணை கொட்டி  அவளை பூமிக்குள் புதைத்து விட்டிருந்தான் ஆரியன்.




. "ஆரி.. ரொம்ப ரொம்ப சந்தோஷம்பா.. " வார்த்தை வராமல் குரல் தழுதழுக்க மணிமேகலை கூறியதும் போனை துண்டித்து விட்டான் அவன்.




அடிபட்டு விழிகளோடு அவனைப் பார்த்தால் ஜான்வி.. 




இப்போது என்ன செய்யப் போகிறாய் என்பது போலான அவன் திமிரில் விரக்தியாய்  சிரித்தவள்.. நான் என்ன சொல்ல வர்றேன்னு நீ கேட்கவே மாட்டேல்ல.. " கண்கள் குளம் கட்ட வந்த மனநிலை முற்றும் மாறி.. அதற்கு மேல் அவன் முன்னிற்கத் தெம்பில்லாதவளாய் ஓடிப்போனாள்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...