முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 24

 அதன் பின் ஆர்யன் அவளை ஒருவழியாக்கி விட்டான்.. 




வேலையில் அவள் மூழ்கி இருந்தாலும் அவள் இடத்தை தேடி வந்து என்ன வேலை செய்திருக்கிறாய்.. என நேற்று அவள் நேரத்தை கணக்கில் எடுக்காது முடித்து சென்ற பைலை அவள் முகத்திலேயே தூக்கி விசிறி அடித்தான்.. கணினியில் கவனமாய் இருந்தவள் எதிர்பாராத அடியில் சட்டென பதறி எழ.. இடியட்.. என்ன வேல பாத்துருக்க.. ஒழுங்கா ஒரு டிசைன வரைய தெரியல.. நீஙக எல்லாம் எதுக்கு வேலைக்கு வர்றிஙக.. மனுஷன் உயிர வாங்கவா.. இப்போ தான் தெரியுது.. அவன் ஏன் இந்த கம்பெனிய என் கைக்கு இடம் மாத்தி விட்டான்னு.. வேலைக்காகாத வேஸ்ட் வச்சுக்கிட்டு வேல பாத்தா இப்படி தான்.. வாய்க்குள் முணுமுணுப்பது போல் கடைசி வாக்கியம் தெரிந்தாலும் நன்றாகவே சத்தமாய் கூறியதில் அனைவரும் சட்டென சிரித்து விட முகம் கருத்து போனாள் ஜான்வி.




இதை வரைய தானே நேற்று தாமாதமாகி.. பேருந்து கிடைக்காமல் ஒரு கயவனிடம் சிக்க போய்.. அப்போது மட்டும் அசோக் வராமல் இருந்திருந்தால் என் நிலை.. என் குழந்தையோடு நான் செலவழிக்கும் அந்த சிறு நேரத்தையும் விட்டு இதை முடிக்கவேன இருந்தேனே.. அதை போய் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் எப்படி பேசுகிறான்.. அதிலும் அவன் கூறியதை கேட்டு அனைவரும் சிரித்ததில்.. குளம் கட்டி விட்டன கண்கள்.




அவன் பேசுவதற்கு வருந்த கூடாது.. என காலையிலிருந்து உரு போட்டிருந்த பாடம் மறந்து போனது.. அஷோக் வார்த்தைகளில் சற்று மலர்ச்சியாகி இருந்தவள் மீண்டும் மாலை தாமரையானாள்..




சிரித்தவர்களை ஆர்யன் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.. அவன் மொத்த பார்வையிடமும் அவளிடம் மட்டுமே மண்டி கிடந்தது.. தாயிடம் திருமணத்திற்கு ஒப்பு கொண்ட காரணமே அவளை வருத்த தானே.. தான் சம்மதம் கூறினால் அவள் கதறுவாள் என்பது அவனுக்கு நிச்சயம்.. 



அவள் மனதில் தானில்லை.. தெரியும்.. ஆனால் பண ஆசை நிறையவே இருக்கிறதே.. இல்லையெனில் அவளை பார்த்த முதல் கணத்திலிருந்து தாய் கூறிய அசிங்கத்தை செய்திருப்பாளா அவள்.. பல்லை கடித்தான்.



இந்த திருமணம் வேண்டாம்.. என பழைய படிக்கு வேறு ஏதாவது புது நாடகத்தை அரங்கேற்றுவாள்.. அல்லது.. கண்ணீர் விட்டு கதறுவாள்.. இரண்டில் எதுவானாலும் சரி.. அவள் செய்த தவறுக்கு அவளை வலிக்க வலிக்க அழ வைக்க வேண்டும்.. என தாயிடம் சம்மதம் தெரிவித்திருக்க.. அவன் நினைத்ததற்கு அப்படியே மாறாய் கலங்கிய கண்களை துடைத்து கொண்டே வெளி வந்ததோடு சிறிது நேரத்தில் எந்த கவலையும் இன்றி வேளையில் மூழ்கி போனவளை கண்டு பல்லை கடித்தவனுக்கு இப்போது அவள் கண்ணீரை கண்டதும் தான் மனம் சற்று நிம்மதியானது..




அவள் ஏதாவது பேசினால் அதற்கும் சேர்த்து வைத்து செய்யலாம்.. என கண்கள் பழியில் மின்ன ஆர்வமாய் நின்றிருக்க.. அவளோ அமைதியாய் நின்றதில்.. பொறிக்க கிடைக்காத பொரியில்.. சிக்காமலா சென்று விடுவாள்.. என வஞ்சித்து உள்ளே சென்று விட்டான் ஆர்யன்.




கண்களில் மொட்டாய் நின்ற நீரோடு செல்லும் அவனை வெறித்தவளின் தோளில் கை வைத்தாள் திவி..



"ஜான்வி ப்ளீஸ் அழாத.. அந்த மனுஷனுக்கு அப்படி உன் மேல என்ன காண்டோ.. எப்போ பாத்தாலும் திட்டிட்டே இருக்காரு.. ஆனா நீ எப்படி இவ்வளவு அமைதியா இருக்க.. என்கிட்ட மட்டும் இப்படி நடந்துகிட்டா.. அடுத்த நிமிஷமே போயா நீயும்.. உன் வேலையும்ன்னு முகத்துல அவன் தூக்கி அடிச்ச அதே பைலை படாத கூடாத எடத்துல படுற மாதிரி சிக்ஸர் போட்டு துடிக்க வச்சுட்டு நா பாட்டுக்கு கிளம்பிட்டே இருப்பேன்.."என கோபமாய் அவன் அறையை முறைத்தாள்..



சட்டென கலங்கிய கண்களை அழுந்த துடைத்து கொண்டாள் ஜான்வி.."விடு திவி.. நீயே சொல்றியே.. எங்கயோ இருக்குற கோபத்தை நம்ம மேல காட்டுறார்ன்னு.. காட்டுனா காட்டிட்டு போகட்டும்.. நம்ம நம்ம வேலைய பாப்போம்.. 



எப்படி டி எந்த கோபமும் இல்லாம உன்னால இப்படி துறவி மாதிரி பேச முடியுது.. அவள் அமைதியை கண்டு அதிசயித்தாள்.




"என்ன பண்றது.. தப்பு பண்ணிட்டோமே.." மூடி இருந்த அவன் அறை கதவில் பார்வை பதித்து அவள் கூறிய வார்த்தைகள் அருகிலிருந்தவளுக்கு புரியவில்லை..



"என்னமோ.. ஆனா நீ சரியா தான் வேல செஞ்சுருப்ப.. எனக்கு உன்ன பத்தி தெரியும்... அந்தாளும் அத சீக்கிரமே தெரிஞ்சுப்பார்.."சமாதானமாய் கூறிய படி தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.





ஜான்வியும் ஒரு பெருமூச்சோடு அவன் தூக்கி எரிந்த பைலை எடுத்து பார்க்க.. அதில் வெறும் வெற்று காகிதம் தான் இருந்தது.. ஆக.. நான் வரைந்து கொடுத்ததை எடுத்து கொண்டு வேண்டுமென்றே இல்லாத ஒன்றை கூறி நிந்தித்திருக்கிறான் புரிய.. பர்சனலும் தொழிலும் வேற.. என என்றோ அவன் கூறிய வார்த்தை அவள் இவ்வளவு நாளாய் பொக்கிஷமாய் பாதுகாத்து வந்த அவள் மனப்பெட்டகத்திலிருந்து பொய் என விடைபெற்று பறந்தது..





திவி சொன்னது தான்.. என்னைக்காவது ஒருநாள் நீயே என்ன புரிஞ்சுப்ப ஆரி.. கலங்கிய கண்களை இதழ் கடித்து கட்டுப்படுத்திய படி.. கூறி அது எந்த அளவிற்கு சாத்தியம்.. தன் வாழ்வை மாற்றுமா.. என எதுவும் தெரியாது இப்போது மேலேழும் பேராளியாய் அவளை சுழற்றும் இந்த காயங்களை ஆற்ற தனக்கு தானே கூறி கொண்டு வேலையை ஆரம்பித்தாள்.



வருவா.. இப்போ வருவால்ல.. அந்த பைல்ல ஒண்ணுமில்லன்னு பாத்ததும் அப்புறம் ஏன் சும்மா திட்டுனன்னு வருவால்ல.. இருக்கு அவளுக்கு.. தன் கேபினில் அவள் வரவுக்காய் ஆவலாய் காத்து கொண்டிருந்தான் ஆர்யன்.




வருவான்னு நினைக்குற.. அப்போ சண்டை போடுவான்னு நெனச்சதுக்கே பல்பு கொடுத்துட்டா.. இப்போ மட்டும் எப்படி வருவா.. 



நெகடிவ்வா பேசாத.. அதுவும் இல்லாம அவளை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. அப்போவே என்ன பாக்க ஏதாவது சான்ஸ் கிடைக்குமான்னு தேடுவா.. மிதாவ பாக்க வர்ற சாக்குல என்ன தான் அவ கண்ணு தேடும்.. அதுக்கெல்லாம் அர்த்தம் அப்போ புரியல.. ஆனா இப்போ.. கண்களை மூடி திறந்தவன்..  கண்டிப்பா அவ வருவா.. வார்த்தையை முடித்தான்.




அவளை பொருத்த வரைக்கும் இது என்ன பாக்க.. என்கிட்ட பேச ஒரு சாக்கு.. ஆனா அவளுக்கு தெரியாது மீன் தானா வந்து வலைல மாட்டி சாக போகுதுனு.. வக்கிரமாய் அவன் இதழ்கள் விரிய.. எப்போ இருந்து இப்படி மாறுன ஆர்யா.. பாவம் அவ.. வரிந்து வந்த மனசாட்சியிடம் சட்டென திரும்பியவன்.. யார்.. அவ.. அவளா பாவம்.. எவ்வளவு கேடு கெட்ட பொய்ய சொல்லி என்ன அசிங்கப்படுத்தி இருக்கா.. எல்லாம் பயங்கர ஸ்கெட்ச்.. ரிலேட்டிவ்ஸ் இருக்கும் போது இப்படி சொன்னா வேற வழியில்லாம கல்யாணம் பண்ணிப்பேன்.. அத்தனை சொத்துக்கும் உரிமையானவளா ஆகிடலாம்னு நெனப்பு.. ஆனா அதெல்லாம் என்கிட்ட நடக்குமா.. என் மனசுக்கு எது சரின்னு படுதோ அத மட்டும் தான் நான் செய்வேன்.. இப்போ அவ படுறது இவ்வளவு நாள் என்ன குடும்பம் தங்கச்சி.. சொந்தம்னு எல்லாத்துகிட்ட இருந்தும் பிரிச்சதுக்கு.. கர்மா இஸ் அ பூமராங்.. அத தான் இப்போ அவ அனுபவிக்கிறா..'"



"என்னமோ சொல்ற.."என்ற படி ஓடி ஒளிந்தது மனசாட்சி.. 




"இவ்வளவு நேரமாச்சே.."யோசனையோடு ஜன்னல் அருகே வந்தவனின் கண்கள் அவள் இடத்தில் படிய.. அங்கு எந்த சஞ்சலமும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருந்தவளை கண்டு சட்டென அவன் விழிகள் இடுங்கின.




இவ்வளவு அலட்சியமா.. அந்த பைலை பாத்தாளா இல்லையா.. அவன் விழிகள் கீழே போட்ட பைலை தேட.. அது அவளருகில் இருப்பதை கண்டு.. தாடையை தேய்த்தான்.




"அப்போ பாத்துட்டா.. அப்புறமும் ஏன் வரல.. எதனால வரல.. ஒருவேள என் முன்னாடி அவளால எதிர்த்து நிக்க முடியாதுன்னு பயந்துட்டாளா"




" ஆனா அதுக்கெல்லாம் அசரற ஆள் இல்லையே அவ.. ம்ம்.. "தாடையை தேய்த்தவன்.. போனை எடுத்து யாருக்கோ அழைத்திருந்தான்.



மேடம்.. அழைத்து நின்ற பியுன் குரலில் நிமிர்ந்தாள் ஜான்வி.. 



சொல்லுங்க..




மேடம்.. சார் உங்கள அவர் ரூமுக்கு கூப்பிட்டாரு.. நேரத்திற்கு உணவு உள்ளே சென்று விடுவதை போல.. இந்த ஆர்யன் சார் வந்ததிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இங்கே வந்து இந்த பெண்ணை கத்தி காயப்படுத்தி விடுகிறார்.. அல்லது உள்ளே அழைத்து விடுகிறார்..



மற்றவர்களிடமும் வேலை விஷயத்தில் அவன் கெடுபிடி தான் என்றாலும் ஜான்வி விஷயத்தில் கூடுதலாய் இருப்பதை போல் தோன்றியது.. அதிலும் ஒவ்வொரு முறையும் அவன் அறையை விட்டு அவள் வெளிவரும் போது கணன்று நிற்கும் அவள் முகமும்.. அழ துடிக்கும் கண்களும்.. கண்டவருக்கு.. அவளை உள்ளே அனுப்ப அவ்வளவு விருப்பமில்லை.




ஆனாலும் மேலிட உத்தரவு.. சொன்ன வேலையை செய்து தாம் ஆக வேண்டும்.. ஆனால் இப்போது தன்னிடமே சிடுசிடுவென்று தானே விழுந்தார்.. அப்படி இருக்க இப்போது இந்த பெண்ணை என்ன பாடு படுத்த போகிறாரோ.. அவள் நிலை எண்ணி பாவப்பட்டு இடத்தை காலி செய்தார் அவர்.




திவியும் அதே ரியாக்ஷனில் தான் அவளை பார்த்து கொண்டிருந்தாள்.




முகத்தில் எந்த உணர்வும் காட்டாது தான் செய்து கொண்டிருந்த வேலையை ஓரம் கட்டி கொண்டிருந்தவளை ஆராய்ச்சியாய் பார்த்த படி.. கண்டிப்பா போகணுமா டி.. கேட்டவளை புரியாமல் ஜான்வி பார்க்க.. இல்ல.. அந்த மனுஷன் சும்மாவே உன்ன பிச்சு எடுப்பாரு.. இதுல வேற நீ போகணுமான்னு.. இழுக்க.. வார்த்தைகள் இல்லாத நிலையில் சிறு புன்னகையை உதிர்த்து எழுந்து சென்று விட்டாள்.




"சார்.."அறை கதவு தட்டப்பட்டதில்.. வாங்க.. கேட்ட குரலில் உள்ளே வந்தாள்.



தானே அழைத்தும் எந்த சலனமும் இல்லாமல் நின்றவளை கீழ் பார்வையால் ஆழ்ந்து பார்த்த படி.. "மார்னிங் குடுத்த பிராஜேக்ட் எந்த லெவலுக்கு போய்கிட்டு இருக்கு.. கேட்டான் சிஸ்டமை பார்த்த படி.



ஆன் கோயிங் சார்.. இன்னும் அரை மணி நேரத்துல முடிஞ்சிடும்.. எந்த துணுக்கும் இல்லாமல் வழக்கம் போல் எதிர்பார்ப்பு விழிகளும் கூட இல்லாமல் நேராய் நின்று அவள் பேசிய தோரணையில் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது அவனால்.



ம்ம்ம்.. டேபிளை சுற்றி எழுந்து வந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்..நா குடுத்த பைலை பாத்திங்களா..



எஸ் சார்..




என்ன மிஸ்டேக்ன்னு தெரிஞ்சதா.. அப்போதாவது அதை பற்றி பேசுவாளா.. எதிர்பார்ப்பு அவன் கண்களில் அதிகமாய்.



ஆனால் அதற்கும் எஸ் சார்.. போட்டு அவள் முடித்து விட்டிருந்ததில் தன் எதிர்பார்ப்பு அனைத்தும் பொய்யானநிலையில் சட்டென அவள் கரத்தை ஆவேசமாய் இழுத்து தன் நெஞ்சருகில் இறுக்கினான்..





என்ன டி திமிரா.. அதுல நீ வரஞ்சது அதுல இல்லன்னு தெரிஞ்சும் கலாய்க்கிறீயா.. என்றவனை அழுத்தமாய் பார்த்தாள்..



" ஆமா பார்த்தேன் தான்.. அதுக்காக உங்ககிட்ட வந்து ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்கணுமா.. நீங்க ஏன் பண்ணீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுறப்போ, நான் ஏன் வந்து உங்க கிட்ட கேட்கணும்.. அவள் நெத்தியடியான பதிலில் இதை எதிர்பார்க்கவில்லை என்பது போல் அவன் புருவங்களில் முடிச்சு.



" இது ஆஃபீஸ் சார்.. இங்க வேலைய மட்டும் பாக்கிறது தான் உங்க நோக்கம்னு நேத்து நீங்க சொன்னதா ஞாபகம்.. அவள் கூறியதில் சட்டென அவள் கரத்தை விட்டு இரண்டடி பின்னே நகர்ந்து நின்றவனின் தீர்க்கமான பார்வை அவளை துளைத்தது.




தான் நினைத்தது போல் இல்லை அவள்.. அழுது ஓய்வேண்டிய இடத்தில் நிமிர்ந்து நிற்கிறாள்.



சொல்லப்போனால் தனக்கும் இதுதான் தேவை.. அழுது ஓய்பவளை விட விரைப்பான எக்காய்  நிமிர்ந்து நிற்பவளை வலிக்க வலிக்க வார்த்தையினால் கொட்டி குனிய வலிக்க வைத்தால்.. அவள் செய்த அத்தனைக்கும் தண்டனை கொடுத்து விடலாம்.. பார்வை ஈட்டியாய் அவள் முகத்தில் படிந்தது.



தட்ஸ் குட்.. இனிமே இதுதான் இங்க நடக்கும்..  இதை அட்ஜெஸ்ட் பண்ணி தான் நீ இங்க ஒர்க் பண்ணி ஆகணும்.. ஒருவேளை டார்ச்சர் தாங்காம வேற கம்பெனிக்கு போறேன்னு முடிவு பண்றேன்னா அது இந்த ஜென்மத்துல நடக்காது... உன்னோட ஒரிஜினல் சர்டிபிகேட் எல்லாம் இந்த கம்பெனில கொடுத்து இருக்க ஞாபகம் இருக்கட்டும்.. அக்கனா வைத்து அவன் முடிக்க.. இதழில் உதயமான வெற்று சிரிப்போடு நின்றால்  ஜான்வி.



" அதுக்கு அவசியம் வராது.. நான் தான் இங்க இருந்து போகவே போறதில்லையே.. எனக்கும் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு

. அதுக்காகனாலும் எனக்கு இந்த வேலை வேணும்.. அதுவும் இல்லாம ஒரு இடத்துல சமாளிக்க முடியாம நான் வெளியேறுறது எனக்கு பிடிக்காது.." நிமிர்ந்த பார்வையோடு அவர்கள் கூறியதில் அவன் இதழ்கள் 

கேலியில் சுழிந்தன..




வாழ்த்துக்கள்.. என அவன் நீட்டிய கரத்தை பற்றி குலுக்கியவளின் விழியினில் தீர்க்கம்.




சொன்னதை வார்த்தையில் காட்ட ஆரம்பித்து இருந்தான் ஆரியன்.. அவள் சரியாத்தான் வேலை செய்கிறாள் எனினும் மூச்சு வாங்குவதற்கு ஒரு கணம் நிமிர்ந்து விட்டாலும் போதும்.. வேலை செய்ய வருகிறாயா.. இல்ல இப்படி வேடிக்க பாத்துட்டு உட்கார்ந்துட்டு போக வரிங்களா.. மற்றவர்கள் பார்க்க பார்க்க திட்டி ஒவ்வொரு முறையும் அவளைக் கூனிக் குறுக செய்தான்..




முதலில் இரு முறை அடங்கி ஒடுங்கிய ஜான்வி.. அதன் பின் அவன் நோக்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக அவன் திட்டும் நேரமும் கூட கண்டுகொள்ளாமல் வேலையில் ஆழ்ந்து விடுகிறாள்..




தான் பேசும்போது கவனிக்காமல் வேலையை பார்த்துக் கொண்டிருப்பவளை அப்பொழுதும் வாயில் போட்டு மென்று பல்லை கடித்து வேறு வழியின்றி சென்று விடுவான்..




அவனிடம் நிரூபிக்க என்பதை விட தனக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருந்தாள் இந்த சில நாட்களில்.. முதலில் அவன் கொடுத்த வேலையை எவ்வளவு நேரம் ஆனாலும் முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை முயன்று விட்டு.. அந்த நேரங்களில் கண்களில் தன் மகளை நிரப்பி வேலை நேரம் முடியும் நேரத்தில் திவியோடு தானும் கிளம்பி விடுகிறாள்..




சில நேரங்களில் அவன் பேசும்போது சுருக் சுருக்கென தைக்கும் மனதை தட்டி சமன் செய்து கொள்பவளின் கரம் தன் போனை எடுத்து அதில் அவள் கன்னத்தில் முத்தமிட்டது போல் இருக்கும் கிருத்திகாவை அன்பொழுக பார்த்துக் கொள்ளும்..




போற வர்றவன் எல்லாம் அடிச்சிட்டு போறான்டா என்ற ரீதியில் தனக்கு தோணும் போதெல்லாம் அவளை திட்டி தன் வஞ்சத்தை தனித்து கொள்கிறான் இவன்.. 



அலுவலகத்தில் எவ்வளவு மனஸ்தாபம் என்றாலும் சரி வீட்டில் ஆரியனை பற்றி மூச்சு கூட விடுவது கிடையாது ஜான்வி.. அவள் நிலையை அறிந்தாலும் வருந்தி அமர்ந்து இருப்பவளை விஷயம் கேட்டு குத்தி கிண்டாது.. மௌனமாய் தலை தடவி கொடுத்து சென்று விடுவான் அஷோக்.



அல்லது.. சூட ஒரு கப் காபி.. என இருவருக்கும் ஆளுக்கு ஒரு கப்பாய் எடுத்துப்போட்டு வந்து அமர்பவனை காண்பவள்.. எனக்கு வேண்டாம்.. மனசு சரியில்ல.. என்றாலும் தனியா குடிக்க ஒரு மாதிரி இருக்கேன்னு தான் போட்டு கொண்டு வந்தேன்.. சரி உனக்கு குடிக்க விருப்பமில்லைன்னா விட்டுடு.. என முகம் சுருக்கி அவன் கூறும்போது.. மறுக்காமல் தானும் வாங்கிக் கொள்வாள்..





ஆனால் காபியின் மாயமோ அல்லது அந்த நேரத்திற்கு கொடுக்க வேண்டும் என கொடுத்தவனின் மாயமோ.. இன்னைக்கு வேலையில இப்படி எல்லாம் ஆச்சு.. என சுவாரசியமான நிகழ்வுகளை அவன் காபி குடித்தபடி கூற ஆரம்பித்தவனின் பேச்சில் சிறிது நேரத்தில் அவளை மொத்தமாய் அவள் கவலையிலிருந்து இழுத்து வந்திருக்கும்..




காபி முடித்த கையோடு.. டிபன் செய்கிறேன்.. என்ன சிரிப்போடு எழுந்த செல்பவளை.. அவளே அறியாமல் தொடரும் இரு விழிகள்.. 



ஆனால் செலவழிக்கும் அந்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு சில நிமிடங்கள்தான் அவளுக்கே அவளுக்காய் உணர்கிறாள்..  தன்னை மறந்து சிரிக்கும் அந்த பொழுதுகள் அவளுக்கு மிக பிடித்ததாகிப் போனது..



இப்படி ஒரு இடத்தில் வலிக்க வலிக்க காயப்பட்டும் மறு இடத்தில் அதற்கு மயிலிறகால் வருடி கொடுத்தபடியும் நாட்கள் கடந்து கொண்டிருக்க.. 



அன்று காலை கிருத்திகாவை கிரஷில் விட்டு அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து இருந்தாள் ஜான்வி.. 




  அசோக் இன்று காலை வேகமாக கிளம்ப வேண்டும் என கூறியதால் நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கிளம்பி விரைவாகவே வந்து சேர்ந்து இருந்தாள் ஜான்வி..இன்னும் அதிகமாய் யாரும் வந்திருக்கவில்லை..



திவியும் கூட வந்திராததில் தன் சிஸ்டத்தை ஆன் செய்து நேற்று மிச்சம் கிடந்த வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.



விழிகள் சோம்பலாக மேல் எழுவதும்.. மீண்டும் தன் வேலையில் மூழ்குவதுமாய் இருக்க திடீரென வெகு அருகில் உரசி நின்ற உருவத்தை.. சிஸ்டத்திலிருந்து பார்வையை எடுக்காமல்.. ஹாய் திவி.. வந்திட்டியா.. நீ இல்லாம செம போர்.. இன்னைக்கு அசோக் சீக்கிரமா கிளம்பனும்னு சொன்னதால வேகமாகவே கிளம்பி நா வந்துட்டேன்..உக்காரேன்.. நேத்து அசோக் ஒரு காமெடி சொன்னான்.. சொல்றேன்.. இதழ்கள் நேற்றைய சிரிப்பில் விரிய கீபோர்ட்டில் டைப் செய்து கொண்டிருந்தவளின் கரம் திடீரென பற்றி இழுக்கப்பட்டதில் எழுந்து விட்டவளின் விழிகள் வெகு அருகில் முகம் தாழ்த்தி நின்று இருந்தவனை கண்டு பிரிந்தன.




ஆ.. ஆரி.. வார்த்தைகள் வர தடுமாறியது.. மிக அருகில் நின்றதில் கூர்பார்வை அவளை கத்தியாய்த்துளைத்தெடுத்ததில்.. அருகில் அவன் ஸ்பரிசம் பட்டு உருக துடித்த இதயத்தை இறுக்கிக் கொண்டு நேரான விழிகளை சுற்றி சுழற்றினாள்.. வந்திருந்த சிலரும் கூட வெளியே சென்று இருந்தனர் போலும்.. அலுவலகமே காலியாய் கிடந்தது..




வளையாய் சுற்றி வந்த பார்வை மீண்டும் அவன் அழுத்தமாய் படிந்தது.. அவனும் அவளைத்தான் துளைத்து வளைத்துக் கொண்டிருந்தான்...



" யாரு அவன் அசோக்.. அன்னைக்கு வந்து உன்ன ட்ராப் செய்தானே அவனா.. அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. " அடி குரலில் கர்ஜித்த படி  வார்த்தைக்கு வார்த்தை பற்றி இருந்த அவள் கரத்தை தன்னை சுற்றி அவன் வளைய விட்டதில் சட்டென என அவனை விலக்கி தான் விலகி நின்றாள்..




அது எதுக்கு சார் உங்களுக்கு.. ஆபீஸ்க்கு வர்றது வேலை பார்க்க தானே.. நறுக்கு தெரிந்தால் போல் அவள் குரலில்.. ஆபீஸ் வரது வேலை பார்க்கவா இருக்கலாம்.. ஆனா நீ வேலை மட்டுமா பார்க்க வர்ற.. இகழ்ச்சியாய் இதழ் வளைத்தவன்



இப்ப சொல்லு யார் அவன்..  எனக்கு அடுத்து நீ செட் பண்ணவனா.. அவன் மட்டும்தான் எனக்கு அடுத்தா இல்ல இன்னும் நிறைய பேர் லிஸ்ட்ல இருக்காங்களா.. அவன் கேட்டதில் சட்டென கண்கள் சிவக்க.. பாய்ந்து அவன் சட்டை காலரை பற்றியவளின் கரம் நடுங்கியது..


உதடுகளும் இணைந்து துடிக்க.. செம்மையான வழியினில் அத்தனை ஆக்ரோஷம்..



" நல்லவ மாதிரி நடிக்காத.. என்றபடி தன் சட்டை கலரில் படிந்து இருந்த அவள் கரத்தை விளக்கி விட்டவன்.. உனக்கு என்ன தேவைன்னு எனக்கு தெரியும்.. எது இல்லையோ அதுக்கு ஏங்குறது தானே மனித இயல்பு உன்கிட்ட பணம் இல்ல பணம் இருக்கிற என்ன நீ பிடிச்சுகிட்ட.. இட்ஸ் ஓகே.. நானும் நிறைய யோசிச்சு பார்த்தேன்.. என்னதான் நல்லவ மாதிரி நீ சீன் போட்டாலும் உனக்கும் சில தேவைகள் இருக்கும் தானே.. " அவன் பார்வை வேறு மாதிரியாய் அவள் உடலில் படிந்தது.. கூனி குறுகினாள்..




"நானும் இங்க அவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்ட்ல தனியா தான் இருக்கேன்.. என்னவோ அன்னைக்கு நீ சொன்னத உண்மையாக்கணும்னு தோணுது.. உனக்கு தேவை பணம்தானே..  நீ கேட்கிற பணத்தை நானே தருகிறேன்.. என் கூட வந்துடு.. அவன் வார்த்தையினில் நிற்க கூட தெம்பில்லாதவளாய் கால்கள் நடுங்க சேரில் சரிந்தவளின் கண்கள் அடிபட்ட வலியோடு அவனைப் பார்த்தன.. 




" எவ்வளவு கேவலமான வார்த்தை.. பணத்துக்காக அவனோடு செல்வதா.. இதில் தேவை வேறா.. " அவன் கேள்வியில் நடுங்கிப்போன உள்ளத்தை சமன்படுத்தவே முடியவில்லை.



"என்ன வந்துடறியா.. ஆபீஸ்லயும் உனக்கு இதைவிட நல்ல பொசிஷன்லையே நான் வேலை தர்றேன்.. சம்பளத்துக்காக தானே சரியா வேலைக்கு வருவேன்னு என்கிட்ட சபதம் போட்ட.. அந்த சம்பளம் இரண்டு மடங்கா கூடும்.. என்ன வர்றியா.. " கொஞ்சமும் வாய் கூசாது நிமிர்ந்து கேட்டவன் பேச்சில் அதற்கு மேல் அங்கு இருக்க முடியாது.. தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தவள் அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கடற்கரையின் இலக்கில் நின்றிருந்தாள்.. கண்களில் நீர் முட்ட..




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...