முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 25

 ஆழ் கடலின் நீர் எவ்வளவு அமைதியாய் இருந்தாலும் மேற்பரப்பு பயங்கரமாய் ஆர்ப்பரிபதை போல் கடற்கரையின் கடைசி புள்ளியில் இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்தவளின் மனம் உள்ளுக்குள் பேயாய் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.




எப்படி அப்படி ஒரு வார்த்தையை அவனால் கூற முடிந்தது.. அவன் வார்த்தை தந்த வலியை மறக்க முடியாமல் கண்களை இறுக மூடிக்கொண்டாள்..




சிலர் குடும்பத்துடன் சிலர் தம் தம் துணையுடன் சிலர் தங்கள் குழந்தையுடன்.. சிலரோ தங்கள் வேலையுடன்.. என ஆளாளுக்கு ஒவ்வொரு துணையோடு இருக்க தான் மட்டும் நிர்கதியாய் நிற்பதாய் தோன்றியது..




ஒருவனை உயிருக்குயிராய் காதலித்தது அவ்வளவு தவறா? இல்லை அவனை நம்பி என்னை இழந்தது தவறா.. எதையும் கொஞ்சமும் காதில் வாங்காமல் புரிந்து கொள்ளாமல் தன்னை இப்படி காயப்படுத்துகிறானே.. கண்களில் இருந்து பொலபொலவென உதிர்ந்த நீர் மார்பு சேலையை நனைத்தது..



அவன் பேசுவதை எல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளக் கூடாது.. முக்கியமாய் அழக்கூடாது என  எடுத்திருந்த முடிவு எல்லாம் எப்போதோ தவிடுபொடியாகி போயிருக்க.. அவன் விட்ட வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை.. இதயம் ஆழம் வரை ஊடுருவி அவளை தவிக்க வைத்தது..





இதுவரை என்னென்னவோ பட்டாயிற்று.. அவனைப் பார்த்து கன்னத்தில் இருந்து காதல் மயக்கமென மூழ்கி.. அதனால் அவனிடம் தன்னையே இழந்து..  தாயை இழந்து.. குழந்தையை தனியே பெற்றெடுத்து.. அதற்கு தகப்பனாய் வேறு ஒருவனை அமர்த்தி.. இதெல்லாம் எந்த பொண்ணுக்கும் நடக்கக்கூடாதது அல்லவா..





ஆனால் அப்போதும் நொடிக்கு நொடி அவன் நினைவில் வாடி வருந்தி செத்துப் பிழைத்து.. என கடந்த எட்டு வருடங்களும் அணுஅணுவாய் அவன் நினைவில் செத்துக்கொண்டிருக்க.. திடீரென மீண்டும் அவன் தன் வாழ்வில் வந்ததோடு தன்னை இப்படி இன்னொருவனுடன் சேர்த்து வைத்துப் பேசுகிறானே..எப்படி அவனால் முடிந்தது..



" நீ என் ஆரியே இல்ல.. " மனம் கனன்றது.. அசோக்கையும் எவ்வளவு கேவலமாய் கூறிவிட்டான்..??  



அவளை பார்த்த கணத்திலிருந்து ஒரு நாளும் அவனும் சரி.. அவளும் சரி.. அப்படி தவறான பார்வை பார்த்ததில்லையே.. 



தனது குழந்தையை தன் மகளாய் அவன் ஏற்றுக்கொண்ட போதிலும் அவளைக் காணும் ஒவ்வொரு சமயமும் அவன் பார்வையில் ஒரு நாகரிகமும் கண்ணியமும் தெரியுமே.. குழந்தை பெற்ற அந்த டெலிவரி நேரத்திலும் கூட சில சமயங்களில் நண்பனானவன் தாயாய் மாறி அவளுக்கு சேவகம் செய்திருக்கிறான். ஆனால் அதிலும் ஒரு நாளும் தவறான போக்கை கண்டதில்லையே.. 




எதிர்பாராத நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டும் வேளையிலும் அன்று ஒரு நாள் தெரியாமல் வந்திருந்த போது.. சா.. சாரி ஜான்வி.. கதவை மூடிக்கோ.. என உடனடியாய் அவன் வெளியேறியதும்.. அந்த கண நேரத்திலும் தவிப்பாய் மட்டுமே அவன் பார்வை மாறியதே தவிர்த்து தவறாக இல்லையே.. எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஒரு பெண்ணின் உணர்வு தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னை எப்படி.. எந்த நோக்கோடு பார்க்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து விடும்..  அப்படி இருக்க அவனையும் என்னையும் சேர்த்து இப்படி பேச எப்படி அவனால் முடிந்தது...??





நொடிக்கு நொடி அவன் வார்த்தையில் செத்துப் பிழைத்தாள். இத்தனை வருடமாய் காத்திருந்தது இதற்குதானா.. அவனுக்கு கல்யாணம் ஆகப்போகுது.. இனி அவன் வாழ்க்கையே அவன் பார்த்துப்பான்.. உன் கதி..?? மனதின் கேள்வி பூதாகரமாய் எழுந்து பயமுறுத்தியது..




வழக்கமாய் கூறுவதைப் போல் கனவிலேயே அவனோடு சந்தோஷமாய் வாழ்ந்து என் கடைசி காலம் வரை என் குழந்தைக்கு துணையாய் இருப்பேன்.. என கூற முடியவில்லை.




அவன் வார்த்தை ஒவ்வொன்றும் அடிமடி கங்காய் எரிந்தது.. அஹ்ஹ்ஹ.. சீறி வந்த கடல் மகளுக்கு இணையாய் தொண்டை வறள அலறியவள் இப்போதே தன் துடிப்பை நிறுத்தி விட வேகமாய் துடித்த நெஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாது தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள்..




இல்ல.. இவன் என் ஆரியனே இல்ல.. இதோடு நூறாவது முறைக்கும் மேல் அவளிடம் இருந்து இந்த வார்த்தை..




கத்தியதில் மூச்சின் வேகம் கூடியது.. தடதடத்த இதயத் துடிப்பின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.. இந்த வலியோடு இன்னும் எத்தனை நாட்கள் உயிர் வாழ்வது.. இது நாள் வரை கனவிலாவது அவனோடு பிடித்து வாழ்ந்த வாழ்க்கை இப்போது கசந்த தகித்தத்.. இனி அப்படி ஒரு வாழ்க்கை நிஜத்தில் மட்டுமல்ல கனவிலும் கூட அவளுக்கு எட்டி பார்க்காது என்பது சர்வ நிச்சயம்..




அம்மாஆஆஆஆ.. அலறலோடு கண்ணீரில் நனைந்த முகத்தை வான் முட்டி மண் தரையில் மண்டியிட்டு விழுந்தாள்.




வெளிப்படையாக இவ்வளவு கத்தியும் இந்த வலி குறைய மறுப்பதேன்..




"ஆரி.. உன்ன ரொம்பவே காதலிச்சேன்.. ஆனா நீ என்ன உயிரோடு கொன்னுட்ட.. என்னால முடியல.. முடியவே இல்ல..'' கண்ணீருக்கு இடையாய் தேம்பியவள் வார்த்தையை முடித்தபடி வேகமாய் எழுந்தாள்..




ஒரு முடிவோடு தன்னை முத்தமிட ஓடிவந்த கடல் அலையை நோக்கி தானும் ஓடி.. அம்மாஹ்ஹ்.. இடையில் கிருத்திகாவின் கீச்சு குரல் அவள் காதருகில்.. சடார் என பிரேக் போட்டு நின்றன அவள் கால்கள்..



பாப்பா.. பாப்பா.. விழிகள் சுற்றி சுழன்றடித்தது.. மாயை.. கிருத்தி இல்லை அங்கே..



நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டவளின் இதயம் வெம்பி தவித்தது.. '' நீ கவலைப்படாத பாப்பா.. என்னைக்கும் நீ அழக்கூடாது.. சந்தோஷமா மட்டுமே இருக்க இந்த உலகத்துல பிறந்தவ நீ.. நான் இருந்தாலும் இல்லினாலும் அசோக் உன்ன நல்லபடியா பார்த்துப்பான்.. அசோக் உன்ன பெத்தவன் இல்லைனாலும் அவன் உயிருக்கு இணையா உன்னை நெஞ்சில் வைத்து சுமக்கிறவன்.. உன்னை எப்பவும் அவன் கைவிட்டு விட மாட்டான்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு.. அந்த நம்பிக்கையில் அம்மா போறேன் பாப்பா, அம்மாவால இந்த வலிய தாங்கிக்கவே முடியல..  பாப்பா.. பாப்பா.. அவள் கரம் பைக்கில் துளவி போனை கண்டுபிடித்து எடுத்தது.. 



தற்செயலாய் கைப்பட்ட கையில் ஸ்கிரீன் ஆனாக.. அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி இருந்து கிருத்திகாவின் முகத்தை ஆசை தீர பார்த்தாள்.




ஐ லவ் யூ பாப்பா.. இந்த உலகத்திலேயே ரொம்ப துரதிர்ஷ்டசாலி நான் தான்.. பிறந்ததும் அப்பா இறந்தாரு.. அடுத்து என் சுயநலத்தால என் அம்மாவை கொன்னேன்... இப்போ உன்னையும் விட்டுட்டு போகப்போறேன்.. ஆனா உன்னை தனியா விடலை.. அசோக் உன்ன பார்த்துப்பான்.. " என இமைக்க மறந்து பிள்ளையை பார்த்தவளின் கண்களில் நீர் திரையிட்டது.. குழந்தையின் முகம் மெல்ல மெல்லமாய் கலங்கலானது..




பையை மண் தரையில் போட்டு விட்டாள்.. அதில் இருப்பது இந்த மாதம் வாங்கிய சம்பள பணத்தின் கடைசி துளி அவ்வளவே.. அதோட அசோக் செலவிற்கேன கொடுத்து சொற்ப பணமும்..



மொத்தமாய் கூட்டி கழித்து பார்த்தாலும் 100 ரூபாயை தாண்டாது என்பது உசிதம்..  மற்ற ப்ரூஃப்களும் ஆதாரங்களும் வீட்டில் தான் இருக்கிறது என்பதால் எந்த பிரச்சனை இல்லை.. இருப்பதிலேயே விலை உயர்வான பொருள் என்றால் போன் மட்டுமே.. யாராவது எடுத்துக் கொள்ளட்டும் அல்லது என் உடல் கரை ஒதுங்கினால் நான்தான் என கண்டுபிடிப்பதற்காக ஆதாரமாக இருக்கட்டும்.. விரக்தியாய் எண்ணியபடி அதற்கு மேலும் நிற்க முடியாமல் வேகமாய் கடல் அலையை நோக்கி அவள் ஓட.. கடைசி புள்ளியில் இருந்தவளை யாரும் கண்டிருக்கவில்லை.. 




இதோ கடலுக்குள் ஓடிவிட்டாள்.. ஆர்ப்பரித்து பாம்பாய் சீறிவரும் அலை அவள் மீது தொப்பையென விழுந்து முழுவதுமாய் உள்வாங்கி கொண்டது.. நீயாவது என்னை ஏற்றுக் கொண்டாயே.. என மூக்கினுள் பட்டும் படாமல் நுழைந்த நீரை தானே ஆழமாய் சுவாசித்து உள்ளிழுத்து கொண்டாள்.




லொக்.. லொக்.. இருமல் முட்டிக்கொண்டு வந்தது.. வாயை திறந்த சிறு வேளையிலும் டன்டன்னாய் நீர் வாய்க்குள் நுழைந்து வயிற்றை நிரப்ப.. என்னதான் சாக வேண்டும் என முடிவெடுத்து வந்திருந்தாலும்.. கடைசி நிமிடத்தை கண் முன் கண்டதில் கைகள் தானாய் வெளியே வர மேலும் கீழுமாய் அடித்து முன்னேற முயற்சிக்க.. விடாமல் இன்னும் கடல் மகள் தனக்குள் வாரி அனைத்துக் கொண்டாள்..



இதோ அவ்வளவு தான்.. கண்கள் மெல்ல மெல்ல சொருகியது.. எமன் அவன் பாச கயிற்றோடு தயாராய் நின்றான்.. ஊஃப்.. என மூச்சும் கூட விட முடியாமல் கண்கள் மேலே சொருக எதையும் அறிய முடியாத நிலையில்.. மயங்கி கண்களை மூடி இருந்தாள் ஜான்வி.. 



சுயநினைவு கொஞ்சம் கொஞ்சமாய் தொலைந்து போனது.. 



தன் கண்ணுக்கு முன் ஆர்யன்.. என்றோ பார்த்த அந்த ரூபாவோடு கைகோர்த்து கண்களோடு கண் சிரிக்க பேசிக்கொண்டே வருகிறான்.. அவனையே வைத்த கண் வாங்காமல் ஏகமாய் பார்த்துக் கொண்டிருந்த தன் கண்களில் தாரை தாடையாய் கண்ணீர்.




கடைசி வரைக்கும் நீ என்ன புரிஞ்சுக்கவே இல்லயே ஆரி.. நமக்கு உண்மையாவே ஒரு குழந்தை இருக்குங்குறது கூட உன்கிட்ட சொல்லாம நா போறேனே.. கண்களில் நீர்த்ததும்ப தலையை மட்டும் பின்னே திருப்பி அவனைப் பார்த்தபடியே அவனுக்கு எதிர் திசையில் நடக்க ஆரம்பித்திருந்தாள்..



அம்மா.. என்ன கத்தி அழைத்தபடி கிருத்திகா பின்னே ஓடி வந்தாள்.. பாப்பா.. குழந்தையின் குரலில் தாய்மை உயிர்த்தெழ.. குழந்தையை அள்ளி நெஞ்சோடு அணைக்க தான் வர முயன்றும் முடியாமல் ஏதோ ஒரு அசுர காற்று தன்னை இழுத்துச் செல்வதாய் தோன்றியது..  



பாப்.. பாப்பா.. கை நீட்டி குழந்தையை தொட முடியாமல் அவள் தவிக்க.. அம்மா.. அவள் பின்னேயே கதறி கொண்டு ஓடி வந்தாள் கிருத்தி..



பாப்பா.. பாப்பா.. கிருத்தி.. அவள் குரல் ஒரு பக்கமுமாய் அம்மா.. என குழந்தையின் அழுகுரல் ஒரு பக்கம்மாய் அந்த வெட்ட வெளி வானத்தை மொத்தமாய் அடைத்து கொண்டிருக்க... குழந்தையை உச்சி முகர்ந்து நெஞ்சோடு அணைக்க முடியாத தன் கையாளாகத்தனத்தில் அவள் ஏங்கி அழுவதை கண்டு செத்து பிழைத்தவளுக்கு.. சற்று நேரத்திற்கு முன் இன்னொரு பெண்ணோடு கண்டபோது கண்ட வலியை விட அதிகமான வலி.. துடித்து போனாள்.




" என் குழந்தை எனக்காக அழுகிறாள் என்னை தேடி அழுகிறாள் அசோக்.. அசோக்.. எங்க போன..குழந்தைய வந்து பாரு" அவள் எவ்வளவு கத்தியும் அவன் வரவில்லை.. வயிற்றைப் பிடித்துக் கொண்டு தாயைப் பார்த்தபடி பசிக்காய் அழுகிறாள்.




" ஐயோ என் குழந்தைக்கு பசிக்குது.. கிருத்தி பாப்பா அம்மா வரேன் வரேன்.. பேச பேச காற்றோடு அவளை விலகிக் கொண்டே அல்லவா செல்கிறாள்.. பிள்ளையின் தவிப்பு கண்டு இந்த இறப்பும் கூட வெறுத்துப் போனது... செய்த தவறு மண்டையில் உரைத்தது.. பாப்பா.. அய்யோ கடவுளே.. என் குழந்தைகிட்ட எப்படியாவது என்ன சேர்த்துடு..  இனிமேல் இப்படி ஒரு முடிவ என் வாழ்நாளில் எடுக்க மாட்டேன் இந்த ஒரு முறை மன்னிச்சிரு.. ஒரே ஒரு முறை மன்னிச்சிரு..  எனக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை கொடு.. என அவள் கதறிக் கொண்டிருந்த வேளையில் திடீரென.. அவளை வேகமாய் சுழற்றி அடித்த காற்று நின்றது..



விழித்துக் கொண்டு சுற்றிலும் பார்க்கிறாள்.. அந்த காற்றை காணவில்லை.. தூரத்தில் அழுது கொண்டிருந்து குழந்தை திடீரென அவளைப் பார்த்து சிரிக்கிறாள்.. சென்று வா என்பது போல் கையாட்ட.. இல்ல.. நான் உன்னை விட்டு போக மாட்டேன் கிருத்தி.. உனக்கு நான் வேணும்.. எனக்கு நீ வேணும் டி.. காற்றில்லாத அந்த சூழ்நிலையில் ஓடுவது எளிதாகி போனது.. வேகட்டுக்களோடு.. ஓடி வந்தவள் குழந்தையை நெருங்கி இருந்தாள்.




பரிதவித்தபடி நெஞ்சோடு குழந்தையை அணைத்துக்கொள்ள முற்படுகையில் சட்டென மறைந்து போனாள் கிருத்தி.

பாப்பா.. அய்யோ என் பாப்பா.. எங்க போனா.. அதே இடத்தில் கைகளை அலையவிட்டு தேட.. திடீர்னு அவள் விழிகள் ஸ்தம்பித்தன..




கையின் எடையை உணர முடியாமல் போனதேன்.. என் கை.. இரு கரங்களாலும் தன் கையை மாறி மாறி தொட்டுப் பார்க்க.. உருவம் எதுவும் இன்றி ஒரு கைக்குள் இன்னொன்றை நுழைந்த கணத்தில் அப்போ நான் செத்துடேனா.. பயத்தில் ஒரு கணம் அவள் இதயம் நின்று துடித்தது..



அப்படின்னா இனி நான் என் குழந்தைகிட்ட போகவே முடியாதா.. ஆனா எனக்கு என் பாப்பா வேணும்.. கை கூப்பி தரையில் சரிந்தபடி நெஞ்சோடு அடித்துக்கொண்டு அழ.. திடீரென முன்னிருந்த வெண்மேகம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தது.. எழும்பிய இருட்டில் பார்க்க கூட முடியாது தவித்தாள்.



நா சாகல.. சாகல.. என் குழந்தை அனாதையாகிடக் கூடாது.. அவளுக்காக நானும் நான் இருக்கணும்.. உண்மையிலேயே இந்த நொடிதான் உயிர் துடிப்பு அதிகமானது.. 



இருட்டையும் அடித்து துரத்தி பதறி கொண்டு எழ முயல.. முடியவில்லையே.. திடீரென இந்த கைகளும் கால்களும் கனக்கிறதே..



அப்.. அப்படினா.. விழிகள் சூழல ஒன்றும் புரியாமல் மண்டியிட்டு விழித்தவளின் கன்னம் திடீரென படபடவென தட்டப்பட.. ஹக்.. உடல் துள்ள.. அடுத்த நொடி.. முன்னிருந்த இருட்டு மெல்லிய செம்மையாய் மாற.. கண்களில் சிறு அசைவு.




முகத்தில் சுள்ளென வெயில் படுவதை உணர முடிந்ததில்.. விழிக்க மறுத்த கண்களை முயன்று பிரிக்க.. உச்சந்தலைக்கு மேலாய் வானத்தை நெருக்கமாய் முத்தமிட்டு நின்ற ஆதவன் தன் சூட்டை சுள்ளேன அவள் கண்களில் பாய்ச்சி கண்களை கூச வைத்தது..




இமைகளை படபடக்க கொட்டி இமை நன்றாய் பிரித்தவளின் விழிகள் தன் முன் உடலில் நீர் சொட்ட சொட்ட அமர்ந்து இருந்தவனை கண்டு சொக்கலாய் ஆரி.. நீயா.. அவள் இதழ்கள் முணுமுணுத்ததோடு இதுவரை கொண்ட போராட்டத்தின் காரணமாய் அவள் கண்கள் மயக்கத்தில் மீண்டும் சொருகி போனது..




இதுவரை பரிதவிப்பு பொருந்தியிருந்த அவன் கண்கள் இரண்டும் இப்போது அவளை வெறித்தன.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...