வர்மா கொஞ்சம் இந்த பொருள் எல்லாம் இறக்கி வைக்க உதவி செய்ரியா.. என வந்தவனிடம் சாமி கேட்க.. முன்னிருந்ததை கண்டு விழித்தான் வர்மன்.
சீர்வரிசையில் இருந்து திருமணத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பெரிய லாரியில் வந்து இறங்கியிருக்க அனைத்தையும் தான் எடுத்து வைக்க வேண்டுமா?.. அவன் இருக்கும் உயரத்திற்கும் அசாத்திய பலத்திற்கும் ஒன்றும் அவ்வளவு கஷ்டமில்லை என்றாலும் வைத்திருக்கும் பொருட்கள் அதிகம்.. அதிலும் விருந்தாளியாய் வந்த இடத்தில் வேலை செய்வதற்கு அவசியம் என்ன.. இது அனைத்தையும் தானே ஏற்றி இறக்க வேண்டும் என்றால் நிச்சயம் இரண்டு மணி நேரத்தை தாண்டி விடுமே.. வந்ததில் தூரிகாவை உஷார் பண்ணலாம் என பார்த்தால் அவள் பக்கமே செல்ல முடியாத அளவிற்கு வேலையை கொடுத்தால் எங்கிருந்து அவளிடம் பேசுவது நெருங்குவது.. எரிச்சலானான்..
தான் கேட்ட அமைதியாய் நிற்பவனை பார்த்தார் சாமி.. அவன் பார்வையிலேயே எண்ணத்தை யூகித்தவராய் நானும் உனக்கு உதவி செய்கிறேன் வர்மா.. தனியா செய்ய முடியாதில்லையா.. அதுக்கு தான் கூப்பிட்டேன்.. என்றபடி லாரியில் இருந்த பீரோவை அவர் ஒரு பக்கமாய் தூக்க மேல்பக்கமாய் இவன் பிடித்துக் கொண்டான்..
சொல்லப்போனால் மேல் பக்கத்தை விட கீழ்ப்பக்கம் தான் எடை அதிகமாக இருக்கும்.. அவன் நினைத்தால் தூக்கலாம்.. ஆனால் இவருக்காக தான் மெனக்கட்டு செய்ய வேண்டுமா? என்ற கடுப்பில் அடுத்தடுத்த பொருட்களையும் எடை அதிகமாக இருக்கும் பக்கம் சாமியிடம் விட்டு மறுபக்கம் பேருக்கேன இவன் தூக்கிக் கொள்ள.. ஒவ்வொன்றாய் இறக்க ஆரம்பித்தனர்..
தான் எந்த வேலைக்காக வந்து எந்த வேலையை செய்து கொண்டிருக்கிறோம் என எண்ணும் போதெல்லாம் கடுப்பானான் அவன்.. எல்லாம் இந்த ஆளாள தான்.. புன்னகை முகமே கொண்டு வேலை செய்து கொண்டிருந்தவரை பார்த்து கடுப்போடு எண்ணிக் கொண்டான்..
முட்டாள்.. வெயிட்டா இருக்குன்னு தான் என்ன கூப்பிட்டான்.. ஆனா நான் சும்மா பொத்தம் பொதுவா பிடிச்சிருக்கேன்னு கூட தெரியாம வெயிட் எல்லாத்தையும் அவன் தான் தூக்கிட்டு இருக்கான்.. என உள்ளுக்குள் ஏளனமாய் எண்ணியபடி அடுத்தடுத்து கட்டில் கிரைண்டர் என ஒவ்வொன்றாய் இறக்கி.. ஒருவழியாய் அனைத்து பொருட்களையும் இறக்கி முடித்தும் விட்டனர்..
இவன் பெரிய வேலை செய்தவன் போல் கையை தூசி தட்டிக் கொண்டு திரும்ப.. சாமியும் அளவுக்கு அதிகமான வேலையில் மூச்சு வாங்கியவராய் நிற்க.. சாமி.. குரல் கேட்டு திரும்ப அங்கு வந்து நின்றார் ராஜன்..
கீதாவின் கணவர்.. இருவருக்குள்ளும் அதிகமாய் பேசி பழக்கமில்லை என்றாலும் தன்னிடம் வந்தவரிடம் புன்னகைத்தவராய் சாமியின் நிற்க.. ரொம்ப தேங்க்ஸ்.. மாப்பிள்ளைன்னு கால் போட்டுட்டு உட்காராம உங்க வீட்டு பொண்ணு கல்யாணமா எடுத்தேறி நீங்க எல்லாம் செய்றத பாத்தாலே மனசு நிறைவா இருக்கு.. என அவர் கையை பிடித்தபடி பெருமிதமாய் ராஜன்.. கூற அட இதுல என்ன இருக்கு லட்சுமியும் எங்க பொண்ணு மாதிரி தானே.. என்றார் புன்னகையோடு..
நல்லவர்னு நெனப்பு.. உள்ளுக்குள் ஏளனமாய் எண்ணி அர்ஷா நின்று இருக்க.. எல்லாத்தையும் நீங்களே எடுத்து வச்சிட்டனால என் வேல இப்ப பாதி குறைஞ்ச மாதிரி இருக்கு.. பெருமூச்சோடு கூறினார் ராஜன்..
நான் மட்டும் இல்லங்க.. இதோ என் மருமகன் நிக்கிறானே.. இவன் தான் முன்ன நின்னு எல்லாத்தையும் எடுத்து வச்சான்.. எனக் கூறியதும் அவர் பார்வை இவன் பக்கமாய் திரும்பியது..
ஆணையிட்டே பழக்கப்பட்டு இருந்தவனுக்கு இந்த உறவுமுறை முற்றிலும் புதிது.. அதிலும் அவர் கூறியதை கேட்டு தன் பக்கமாய் அவர் நன்றியோடு பார்த்த பார்வையில் தான் எதுவுமே செய்யவில்லை என்ற உணர்ச்சி சிறிதாய் துளிர்ப்பதாய்..
அங்கிள்.. ஆன்ட்டி கூப்பிடுற மாதிரி இருக்கு நான் வரேன்.. என்றபடி அவன் நகர... சாமி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. உங்க மருமகன் நல்லவன் தான்.. ஆனா தூக்குற எல்லா பொருளையும் வெயிட்டான பக்கத்தை உங்க பக்கம் விட்டுட்டு சும்மா பேருக்கு தான் உங்க மருமகன் புடிச்சிருந்தார். நான் பாத்தேன்.. என ராஜன் கூறிட.. சென்ற அர்ஷாவின் நடை சட்டென ஒரு கணம் தடைபட்டது..
யார் இந்த ஆள்.. தன்னை இவ்வளவு கவனமாய் நோட்டம் பிடித்து அதை இவரிடம் வேறு வந்து கூறுகிறாரே.. இப்போது இவர் என்ன கூறுவாரோ என.. அவர்கள் அறியா படிக்கு மறைந்து நின்று பேசுவதை கேட்க.. அவர் கூறியதில் சாமி இன்னும் அதிகமாய் புன்னகைத்தவராய் எனக்கும் தெரியும்.. ஆனா நா கூப்பிட்டதுக்காக அவன் தானே வந்தான்.. தூக்குவதற்கு இன்னொரு கை கொடுத்தானே.. அது போதாதா..அவர் சர்வ சாதாரணமாய்.. அவர் வார்த்தை அவனை ஆழமாய் தாக்கியது..
இத்தனை நாள் அப்படி தான் செய்ததிலும் சிலவற்றை அறிந்தும் இப்படி விட்டு கொடுத்து தான் இந்த மனிதர் இருக்கிறாரா.. என கேள்வி..
தான் செய்வதை அறியும் அளவிற்கு கூட அவருக்கு திறமை இல்லை என இருந்த தன் எண்ணம் அனைத்தையும் ஒரே நொடியில் நொறுக்கியவரை விசித்திரமாய் பார்த்தான்..
வர்மா.. என பின்னிருந்து குரல் கேட்க சுதா அழைத்துக் கொண்டிருந்தார்..
ஆன்ட்டி.. என்ற படி அவரிடம் வர.. என்றும் இல்லாத திருநாளாய் அவர் அருகில் அமர்ந்தபடி தாரியும் தூரியும் வெங்காயம் உரித்து கொண்டிருந்தனர்.. அருகில் அவன் வர கண்டதும் நிமிர்ந்தனர்..
எரிச்சலில் கண்கள் கரித்து போய் தூரி உரித்து கொண்டிருக்க.. தாரியோ பாரேன்.. என்பது போல் விழியினால் அவனிடம் உரிமையாய் குற்ற பத்திரிக்கை வாசித்தாள் ..
பார்த்தவனுக்கு பட்டென சிரிப்புதான் வந்தது.. என்ன ஆன்ட்டி இது.. என அருகில் அமர்ந்து இருந்த இருவர்களையும் காட்டி கேட்க.. வேலை நிறைய இருக்குல்லப்பா.. ஆளுக்கு ஒரு கை வச்சா சீக்கிரமா வேலை முடிந்துவிடும் அதான்.. எனக் கூறியவர்.. அத குடுங்க என.. கேட்டு புதிதாய் மிளிர்ந்து கொண்டிருந்த தங்க நெக்லஸை அவனிடம் கொடுத்தார்..
எதையோ அறிந்தவள் போல் தூரிகா வெங்காயம் புண்ணியம் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு விழிக்க.. வர்மா இந்த நெக்லஸ்ஸ கல்யாண பொண்ணு கிட்ட கொடுத்துடுறியா.. இவங்க ரெண்டு பேரையும் போக சொல்றேன்.. மாட்டேங்குறாங்க.. என பெரிதாய் குற்ற பத்திரிகை வாசிக்க அதுக்கு ஏன்மா இவன் கிட்ட கொடுக்கணும்.. என அவசரமாய் கேட்டிருந்தாள் தூரி.
எப்போது அந்த பெண்ணை அவனோடு சம்பந்தப்பட்ட பேசினார்களோ அப்போது அந்த பொண்ணை பற்றிய எண்ணம் முற்றிலுமாய் அவளுக்கு மாறிபோனது.. அவளை பார்க்க கூட பிடிக்காமல் தான் சுதா இந்த நெக்லஸை கொண்டு போய் கொடுத்துவிடு என கூறிய போது முடியாது என மறுத்திருந்தாள். தாரியையும் செல்ல கூடாது என கூறிவிட்டிருந்தாள்.. ஆனால் இப்பொழுது அவனையே.. அவளிடம் செல்ல கூறியதில்.. வேகமாய் பாய்ந்து கொண்டு கேட்க.. அட இது என்னடி வம்பா போச்சு.. நீங்களும் போக மாட்டேங்கிறீங்க.. அவனை கிட்ட கொடுத்தா இப்படி கேக்குறிஙக.. பெரிய பொருள் இல்லையா நம்பிகமான ஆளுங்க கிட்ட தானே கொடுக்க முடியும்.. நானும் வேலையா இருக்கேன் இல்லனா நானே போய் கொடுத்திடுவேன்.. என வர்மனிடம் திரும்பி.. நீ போய் கொடுத்துடுபா.. என கொடுத்து விட.. எடுத்து கொண்டு எழுந்தான் வர்மன்..
அதிலும் அவன் செல்லும் போது தன்னிடம் ஒரு வார்த்தையும் கூறாமல் செல்கிறானே என்ற ரீதியில் அவள் விழிக்க.. நெக்லஸ்சோடு வந்தவனோ.. அந்த நடுவான இடத்தில் நின்று கையிலிருந்த பெட்டியை பிரித்தான்..
உறவினர்கள் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை எனினும் வந்ததற்கு நான்கு பெண்களை ஆவது நன்றாக சைட் அடித்து செல்ல தான்.. எண்ணம்..
ஜொலிக்கும் தங்க நெக்லஸ்.. கனமாய்.. இதழ்கள் வளைந்தன.. இதுல ஏதாவது கோல் போடலாமா.. நிறைய படுதுகளே.. அணுவ பாத்தும் நாளாச்சு.. நாவை சுழற்றி எண்ணி கொண்டவன்.. கண்ணாடியில் தன் சிகையை கோதி சரி செய்து விசிலோடு அங்கிருந்து நகன்றான்..
பெண்ணின் அறை எதுவென கேட்டு உள்ளே வந்தான் வர்மன்.. நினைத்ததற்கும் மேலாய் நான்கு ஐந்து பெண்கள் கிராமத்திற்கே உரிய வாசனையோடு கைகளில் வளையலுகளும் காலில் கொலுசும்.. அதற்கு மேல் சத்தமாய் கலகலக்கும் குரலோடு பேசிக்கொண்டிருக்க.. ஒவ்வொருவரையும் காண பட்டாம்பூச்சியாய் தோன்றியது அவனுக்கு..
டக்.. டக்.. கதவை தட்டினான் அவன்.. யாரு.. நிமிர்ந்து பார்த்த பெண்களின் விழிகள் விரிந்தன..
காலை ஆரம்பித்ததிலிருந்து அவனை பற்றிய பேச்சு தானே.. நேற்று நடு இரவு வந்தவனின் புகழ் அதற்குள் வயது பெண்களிடம் பிரகடனமாகி இருந்தது..
அதிலும்.. பேசும் போதெல்லாம்.. அவன் எவ்வளவு ஸ்மார்ட்.. பாக்குறதே ஹிர்த்திக் ரோஷன் மாதிரி.. மேனரிசம்.. கேஜிஎப் யஷ் மாதிரி.. என என்னென்னவோ ஹீரோகளை வைத்து விதவிதமாய் வைத்து அவனை ஏற்றி தான் விட்டிருந்தனர்..
அவனை அத்தனை முறை பார்த்தாலும் தன் வேலை என இருப்பவன் இப்போது பெண்ணின் அறைக்கு வர கண்டு அவர்கள் விழிகள் விரிய.. ஏதோ பிடித்த நடிகரை பார்ப்பது போல் ஜொள்ளு விடாத குறையாய் நின்றிருந்தனர்..
மண பெண் லட்சுமியும் கூட.. மணப்பெண் என்பதால் தோழிகள் அவ்வளவு தூரம் கூறியும் அவனை பார்க்க முடியவில்லையே.. என ஒரு சின்ன எண்ணத்தில் தான் இருக்க.. ஏய் இவன் தான் நாஙக சொன்னவன்.. என ஒருவள் காதை கடித்ததில்.. வாங்க.. என்றாள் பெரிய சிரிப்போடு..
மற்றவர்கள் கூற கூறவே கேட்டு கொண்டிருந்ததாலோ என்னவோ.. பார்த்த மாத்திரத்தில் அவனின் தோரணையும் லட்சுமிக்கும் கூட பிடித்து தான் போனது.. ஒரு ஹீரோவை போல்.. கல்லூரியில் பிடித்த ஸ்டாப்பை போல்..
புன்னகையோடு வர்மன் உள்ளே நுழைந்தவன்.. மற்றவர்களை கண்டு கொள்ளாது மெத்தையில் அமர்ந்திருந்த மணப்பெண்ணிடம் நேராய் வந்திருந்தான்.. இருந்த இரண்டு கண்களை விட. மற்ற அணைத்து கண்களும் ஒவ்வொரு பெண்கள் மீதும் தான் என்பதை அங்கிருந்தவர்கள் அறியவில்லை.. லட்சுமியிடம் கை நீட்ட... புரியாமல் பார்த்தாள் அவள்..
வந்திருந்த தோழிகள் அனைவரும் அவனை புகழ்ந்து கொண்டிருக்க அவனோ தனக்கு கை கொடுக்கிறானே என்ற ரீதியில் மற்றவர்களை பார்க்க.. அனைவரும் ஒருவித வயிற்றெரிச்சலோடு இருப்பதை உணர முடிந்தது..
வாழ்த்துக்கள்.. என கைகுலுக்கியவனை கண்டு அவள் இதழ்கள் மலர்ந்தது..
தேங்க்ஸ் என்றாள் இவளும் புன்னகையோடு..
இவ்வளவு நேரம் ஆகியும் அவன் வரவில்லையே.. ஒருவேளை அந்த பெண்ணை பார்த்து பேசிக் கொண்டிருக்கிறானா.. என எண்ணம் எழ.. அதுக்குன்னு போனதும் வேல முடிஞ்சதுனா குடுத்துட்டு வர முடியும்.. எழுந்த கேள்வியில் அப்படிதான் கொடுத்துட்டு வரணும்.. அத்தனை பொண்ணுங்க இருக்கிற இடத்துல இவனுக்கு என்ன பேச்சு.. என அதற்கு மேல் பொறுக்க முடியாதவளாய்.. உரித்து கொண்டிருந்த வெங்காயத்தை அப்படியே போட்டு எழுந்து வந்திருந்தாள் தூரிகா..
சரியா கதவு நெருங்கும் சமயத்தில்.. இருவரும் கைப்பிடித்துக் கொண்டிருப்பது மட்டுமே தெரிய.. அவர்கள் பேசுவது என்னவென அங்கிருந்த சத்தத்தில் கேட்கவில்லை..
இந்தாங்க.. என தான் கையோடு கொண்டு வந்திருந்த பெட்டியை எடுத்து நீட்டினான்.. இப்பதான் கொண்டு வந்த பெட்டியவே கொடுக்குறான் இவ்வளவு நேரம் என்ன பேசி இருப்பாங்க.. உரிமை உணர்வு அதிகமாய் பட்டதில் மனம் வேகமாய் துடித்தது..
இது என்ன லட்சுமி கேட்க.. உங்க அம்மா குடுக்க சொன்னாங்க என அவள் கையில் கொடுத்தான்.
அப்போ நா வரேன்ங்க.. என அவன் திரும்ப போக.. திடீரென பின்னாளிருந்து அஹ்ஹ். கேட்ட அலறல் சத்தத்தில் அங்கு பாம்பு ஒன்று கதவருகில் நின்ற படி படம் எடுப்பதாய்.
உள்ளிருந்த பெண்களுக்கு மூச்சைடைத்து போனது.. தூரியும் கூட அப்போது தான் கண்டவளாய் அய்யோ வர்மா.. என்றாள் பதறி. உள்ளே செல்லவும் முடியாத நிலை.. அதற்கென அவனை அப்படியே விட்டு இருக்கவும் முடியவில்லை..
வர்மா.. வர்மா.. என வெளியிலிருந்து இவள் பதற.. உள்ளிருப்பவர்களோ.. எப்படி வெளி செல்வது என தெரியாமல் பயத்தில் அரண்டு மிரண்டு நின்றனர்.
பயத்தில் போடும் கூச்சலில் பாம்பும் நெளிய ஆரம்பிக்க.. அமைதியா இருங்க..அமைதியா இருங்க.. என வர்மன் கூறியும் கேட்காததில்.. அமைதியா இருக்க போறிங்களா.. இல்லியா என அவன் போட்ட சத்தத்தில் கப் சிப்பென அமைதி.
பெண்கள் நடுங்கி நிக்க.. நீங்க போட்ட சத்தத்தில் தான் அது பயந்து ஓடிட்டு இருக்கு...என்ற படி அதை மெல்ல நெருங்க.. அய்யோ பாத்து.. கத்தினாள் லட்சுமி.
அதற்குள் சத்தம் கேட்டு மொத்த குடும்பமும் வந்து இருக்க.. வெளியே நின்று இருந்த தூரிடம் என்னடி ஆச்சு.. எனக்கேத்த சுதாவை கை நீட்டி அவள் காட்டிய திசையில் பார்க்க வைத்ததும்.. அங்கு பெரிய பாம்பை கண்டதும் அனைவரும் முகமும் இருண்டு போனது..
பாம்பா.. இது எப்படி இங்க..
மழை நேரத்துல அப்பப்போ வரும்.. செடியா இருக்குல்ல.. ஆனா எப்பவும் சின்னதா தான் இருக்கும் இது ஆனா இவ்வளவு பெருசு கூறிய முத்தப்பாவின் விழிகளும் பயத்தில் இருண்டது..
இது ***.. பெரிய மலைப்பாம்பு.. இது மட்டும் கடிச்சிருச்சுனா மனுஷன் பொழைக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை.. எனக்கு இங்கிருந்து ஒருவர் கூற கேட்டதும் தூரிகாவின் மூச்சு நின்று போனது..
வர்மா.. வர்மா.. பாத்து.. வெளியிலிருந்து அவள் கத்த.. மற்றவர்கள் போட்ட கூச்சத்தில் அவள் சத்தம் மட்டும் கேட்க வாய்ப்பு இல்லை..
உள்ளே அவனோ.. நேக்காய் நகர்ந்து.. பாம்பை பிடிக்க போக.. அதுவோ முழு வீச்சில் சீறி கொண்டு வந்தது.. முன்னே அவன் செல்வதும் பின்னே கை எடுப்பதுமாய் அதை பிடிக்க தோது பார்த்து கொண்டிருந்தான் அவன்..
நினைத்தது போல் அதைப் பிடிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதாய் இல்லை.. வழுக்கும் சருமத்தோடு.. இருந்ததை காணவே சிலருக்கு அருவருப்பாய் தான் போனது..
அதைப் பிடிக்க எல்லாம் வேண்டாம்.. வர்மா.. வெளிய வர பாரு.. அனைவர் சத்தத்தையும் தாண்டி கண்ணீரோடு கத்தி இருந்தாள் தூரிகா..
அவளின் அதிக சத்தத்தில் ஒரே கணத்தில் அனைவர் பேச்சும் தடைபட்டு திரும்பி பார்க்க.. கத்திக் கொண்டிருந்த ஜனம் திடீரென அமைதியானதில்.. பாம்பு திரும்பிய நேரம்.. சடாரென பாய்ந்து அதன் கழுத்து வளைவை பிடித்தவன்.. நொடியில் தள்ளிக் கிழந்த கோணி பையை எடுத்து அதற்குள் போட்டு சுருட்டி இருந்தான்.. உள்ளே வேகமாய் தன் அசுர உடலோடு நெளிந்தது அது..
உள்ளே ஓடி வந்த இருவர்.. அதை இழுத்து தூக்கி கொண்டு நடக்க.. பிள்ளைகள் பாதுகாக்கப்பட்டிருந்த வேளையில் பெற்றோர்கள் வேகமாய் உள்ளே நுழைந்து தங்கள் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகவில்லை.. என பார்த்து நிம்மதியோடு நின்றிருக்க.. வர்மன் தனித்து நின்றிருந்ததில் முன்னே சென்றிருந்த தாயையும் தாண்டி அதுவரை கொண்டிருந்த பயத்தில் தன்னிலை மொத்தமாய் மறந்து.. சுற்றி இருந்த அனைவரும் நொடியில் மறைந்து போக பாய்ந்து அவனை அணைத்திருந்தாள் தூரிகா..
கருத்துகள்
கருத்துரையிடுக