தன் முன் அமர்ந்திருந்தவனை தவிப்பாய் பார்த்து கொண்டிருந்தாள் ஜான்வி.. அவன் முகம் கல்லாய் இறுகி கிடந்தது.. அவள் நா மேலண்ணத்தோடு ஒட்டி போனதையும் கண்டுகொள்ளாமல் அழுத்தமான அவன் கூர் கண்கள் கத்தியாய் பாய்ச்சி அவளை கீச்சியது.. எவ்வளவு நேரம் தான் இப்படி தர்ம சங்கடத்தோடு அமர்ந்திருக்க முடியும்..??
அஷோக்.. ப்ளீஸ்டா.. என்ன மன்னிச்சிடு ஏதோ அப்போ இருந்தா குழப்பத்துலையும் கவலையிலையும் அப்படி ஒரு முடிவு எடுத்துட்டேன். அதுக்காக இவ்வளவு கோபப்படாத.. என்ன மன்னிச்சிடு... மெல்ல பேச்சை ஆரம்பித்தவளை கண்களில் அனல் அடிக்க அவன் ஏறெடுத்து பார்த்த பார்வையில் சப்தமும் ஒடுங்கிப் போனது அவளுக்கு..
கோபமாவா.. கொலைவெறியில இருக்கேன் பல்லை கடித்துக் கொண்டு அவன் கூறிய வார்த்தையினில் அவன் ஆத்திரம் பன்மடங்காய் பிரதிபலித்தது..
அ.. அஷோக்.. ப்ளீஸ் நீயாவது என்ன புரிஞ்சுக்கோயேன்.. என் மனசு அந்தளவு வலிச்சு போச்சு.. என்னால அந்த நிமிஷம் அதை தவிர்த்து வேறு எதையுமே யோசிக்க முடியல.. இல்லன்னா இப்படி ஒரு முடிவை நான் எடுத்திருப்பேனா.. பரிதாபமாய் அவள் கேட்டதில் கேட்க கண்கள் முறைப்பில் இடுங்கின..
" அப்படி என்ன தலை போற பிரச்சனையானாலும் இருக்கட்டும்.. அதுக்காக சாகுற அளவுக்கு போவியா.. இது என் ஜான்விதானன்னு எனக்கே சந்தேகமா இருக்கு.. அவ எவ்வளவு போல்டான பொண்ணு எல்லாத்தையும் தைரியமா பேஸ் பண்ற பொண்ணு. ஆனா நீ ஏதோ சாதாரண பிரச்சனைக்காக சாகுற அளவுக்கு போயிருக்க.. கடல் தண்ணிக்குள்ள வேகமா ஓடுனியே அந்த ஒரு நிமிஷம் கூட குழந்தை நினைப்பு உனக்கு வரலையா.. நீ இல்லாம அவ எப்படி இருப்பான்னு யோசிக்கலயா.. ச்ச.. ஏதோ தெய்வாதீனமா நேரத்துக்கு நான் இங்கு வந்ததால நீ கடலுக்குள்ள ஓடுறத பார்த்து உன்ன காப்பாத்துனேன்.. இல்லன்னா இந்நேரம் என்ன ஆகி இருக்கும்.. என்றவனின் குரல் வேகமாய் படபடத்தது.
தவறை அறிந்து விட்டாள்.. உணர்ந்தும் விட்டாள்.. ஆனால் அதற்காக திரும்ப திரும்ப அவன் கூறிய வார்த்தையில் என் பிரச்சனை அப்படி அசோக்.. கூறியவளின் கரம் ரெண்டும் நெஞ்சில் அழுத்தமாய் படிய தேகம் குலுங்கியது..
அவள் ஒற்றைத் துளி விழி நீரும் அவனை அசைத்ததோ.. சட்டென தலையை பிடித்தபடி கண்களை இறுக மூடிக்கொண்டவன் ஒரு பெருமூச்சோடு விழிகளை திறந்தான்.
அப்படி உயிரை விடுற அளவுக்கு.. பெத்த பிள்ளைய மறக்கிற அளவுக்கு உனக்கு என்னதான் பிரச்சனை ஜான்வி.. நான் உன் நண்பன் தான் எனினும் இந்த விஷயத்தை நிச்சயமாய் நீ என்னிடம் கூறி தான் ஆக வேண்டும் என்ற கட்டளை அவன் குரலில்..
"அஷோக்.. அது.. ஆர்யன்.. " அவள் தேம்பிய போதே அவன் பெயரைக் கேட்டதும் இவன் முஷ்டி இறுகி விட்டன.
"என்னவாம் அவனுக்கு.. போனவன் தான் போயிட்டான்ல.. இப்போ திரும்பவும் வந்து உன்னை தொல்லை பண்றானா.. " அவன் கேட்க மறுப்பாய் தலையசைத்தாள்.
"அவன் இல்ல.. நானா தான் தேடி போய் வாங்கி கட்டிக்கிறேன்.. என முதல்நாள் அவனைப் பார்த்தேன் எனக்கூறி விட்ட இடத்திலிருந்து இந்நாள் வரை நடந்த அனைத்தையும் அழுகையும் தேம்பலுமாய் கூறி முடிக்க.. அவன் விழிகள் நிர்மலமாகின..
" நீ கூட அன்னைக்கு பேசுன்னு சொன்னியே அசோக்.. நானும் விஷயத்தை சொல்லிட தான் போனேன்.. ஆனா அதுக்குள்ள என்னென்னவோ பேசி கடைசில அவங்க அம்மா கிட்ட கல்யாணத்துக்கும் அவன் சம்மதமும் சொல்லிட்டான்.. அப்போவே என் உயிர் பாதி போயிடுச்சு.. மீதி.. " என்றவள் இன்று நடந்த சம்பவங்களை வெளிப்படையாய் கூற முடியாமல் தேம்பி நிறுத்தினாள்.
ஒரு நொடி அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவள்.. அந்த விஷயத்தை உள்ளேயே தள்ளி.. "நா.. நா என்ன தப்பு பண்ணேன் அசோக்.. ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.. உண்மையா காதலிச்சது அவ்வளவு பெரிய குத்தமா.. அவன நம்பி என்னையே அவன் கிட்ட விட்டேனே.. எல்லாத்தையும் இழந்துட்டு கையில குழந்தையோட இப்போ நிக்கிறேனே.. " கடைசி வார்த்தையில் அவன் கண்கள் இடுங்கியதை கவனிக்கவில்லை அவள்..
" என்னால முடியல அசோக்.. எல்லாருக்கும் சாதாரணமா அமையுற காதலும் கல்யாணமும் கூட என் வாழ்க்கையில எட்டாக்கனின்னா நான் எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும்.. அந்த நிமிஷம் என்னால கிருத்தியை பத்தி கூட யோசிக்க முடியல.. " அவள் தேம்ப.. " நான் ஒன்னு மட்டும் கேட்கிறேன்.. " என்றவனின் குரலில் உணர்ச்சி தொலைந்திருந்தது..
என்ன.. என்பதுபோல் விழிகள் நிமிர்த்தி அவனை பார்த்தவளிடம்.. "இன்னும் நீ அவனை அவ்வளவு காதலிக்கிறியா.. "கேட்ட கேள்வியில் இதழ் கடித்தாள்.
" இத்தனை வருடம் கழித்து அவனை கண்ட முதல் நாள் இதே கேள்வியை கேட்டிருந்தால் ஆமென வேகமாய் தலையாட்டி இருப்பாளோ எண்ணவோ.. இப்போது இந்த நொடி மனதில் சின்னதான உறுத்தல்.." ஆனாலும் சமன்படுத்திய படி.. விரக்தியாய் இதழில் புன்னகையை படரவிட்டு "காதலெல்லாம் என் வாழ்க்கையில மலையேறி போய் ரொம்ப நாள் ஆயிடுச்சு.. ஆனா கிருத்திக்கு ஒரு அடையாளம் வேணுமே.. பெத்தவனுக்கு அப்படி ஒரு குழந்தை இருக்காங்க்கிறதே தெரியாமல் இருக்கான்.. நாளைக்கு அவ வளர்ந்தான்னா கேட்க போற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.. அதுக்காகனாலும் அவன் வேணுமே.." உடைந்த குரலோடு அவள் கூறிக் கொண்டிருக்க அவளை தீர்க்கமாய் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென எழுந்து விட்டிருந்தான்..
அஷோக்.. விழிகள் விரிய அவள் புரியாமல் பார்க்க.. இரு வந்துடறேன்.. எனக்கூறி சில அடி தூரங்கள் சென்றபின் மறைந்துவிட சோம்பலான விழிகளை திருப்பி கடல் அலைகளை மோதினாள்.
வாழ்வின் எந்த கோணத்தில் பயணிக்கிறோம் என தெரியவில்லை.. ஆனால் வாழ்வின் போக்கே முயன்ற மட்டும் தனக்கு பிடித்தபடி மாற்றி அமைத்துக் கொள்ள முயல்கிறேன்.. இனி எந்த காரணம் கொண்டும் இந்த மாதிரி கீழ்த்தரமான முயற்சிகளில் ஈடுபட மாட்டேன் என தனக்கு தானே கூறியபடி அவள் அமர்ந்திருக்க.. ஜான்வி.. அவள் தோள் தட்டலில் விழிகளை மட்டும் உயர்ந்தன ..
கையில் வாட்டர் பாட்டில்களோடு நின்றிருந்தான் அசோக்..
"எங்க போன.. பேசிட்டு இருக்கும்போதே போயிட்டியே என் மேல எதுவும் கோவமா.." தவிப்பான விழிகளோடு கேட்க.. "முதல்ல இதை குடி.. ரொம்ப ஹாசிலேட்டா இருக்க.." அவள் அருகில் அமர்ந்தபடி கையில் இருந்த வாட்டர் பாட்டில் மூடிடியை திறந்து அவளிடம் நீட்டினான். குரல் லேசாய் கமரியது.
" இதெல்லாம் வேண்டாம் அசோக்.. நீ ஏன் திடீர்னு எந்திருச்சு போயிட்ட.. கோபமாகிட்டயா" என மீண்டும் அதே கேள்வியை கேட்டவளை.. இன்னும் நீட்டிய கரத்தை மடக்காமல் அப்படியே வைத்துக்கொண்டு அவளை அழுத்தமாய் பார்க்க.. அவன் தின்மம் அவளும் அறிந்தது தானே.. வேகமாய் அவன் கையில் இருந்து வாங்கி தன் வாயில் சரித்து விட்டு அவனிடம் கொடுத்தாள்.
ஆனால் சிறிது நீர் உள்ளே சென்றதும் அதுவரை என்னவோ ஏதோ என பரிதவித்து அலைபாய்ந்து கொண்டிருந்த மனது சற்று அமைதி அடைந்தார் போல் உணர்வு.. நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டபடி அவன் முகத்தைப் பார்த்தவள் சொல்லு அசோக்.. கேட்க... சட்டென அவன் இதழ்கள் சிறிதாய் விரிய ம்ம்ஹும்.. இருபுறமமாய் தலையாட்டினான்..
" ஆனா நான் பேச பேச போயிட்டியே.. " இன்னும் அவள் குரலினில் தவிப்பு.. நண்பனாகப்பட்டவனின் கோபத்தில் அலாதி தவிப்பு.. அவளையும் மீறி..
" கோபம் எல்லாம் ஒன்னும் இல்ல ஜான்வி.. ஒரு சின்ன ஆதங்கம் தான்.. அவன் உனக்கு அவ்வளவு செஞ்சிருக்கான்னு தெரிஞ்சும் எப்படி உன்னால இப்படி அளவில்லாமல் அவனை நினைச்சு உருக முடியுது.. "
" தெரியல அசோக் அந்த அளவு காதலிச்சிட்டேன் போல.. " அவள் இதழ்கள் விரத்தியாய் வளைந்தன..
" குழந்தையின் தேவைக்கென அப்போது கூறியவள் இப்போது காதலிப்பதாய் கூறியதில்.. ஒரு கணம் நின்று துடித்த நெஞ்சத்தை தட்டிக்கொடுத்து கண்மூடி திறந்து அவளை அழுத்தமாய் பார்த்தான்.
" நீ முதல்ல என்ன மனநிலையில இருக்கன்னு நல்லா யோசிச்சு முடிவெடு.. இந்த உலகத்துல சொல்யூஷன் இல்லாத பிராப்ளமே கிடையாது.. உன் மனசு முதல்ல என்ன சொல்லுதுங்கறது தெளிவா கேளு.. அதுக்கேத்த மாதிரி நம்ம அடுத்த மூவ் பண்ணலாம்.. கண்டிப்பா காரியம் வெற்றி பெறும்.. " அவன் நம்பிக்கையாய் கூறியதை ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
" என்ன சொல்ற நீ.. நீ என்ன சொல்ல வரேங்குறதே எனக்கு புரியல.. " முட்டைக் கண் உருட்டி அவள் விழித்த தோரணையில் மார்பில் சாய்த்து ஆறுதல் படுத்த கைகள் பரபரத்த போதிலும் அதைப் பின் தள்ளி மண்தரையில் சாய்ந்து சரிந்து அமர்ந்து கொண்டான்.
அவள் அழும் போதெல்லாம் நெஞ்சே பிசையும் அளவிற்கு வலி காண்பவனுக்கு இந்த உணர்வுகள் எல்லாம் வழக்கம் தான்.. அதை அடக்கி வைப்பதும் அதைவிட சர்வ சாதாரணம்தான்..
ஓகே தெளிவாவே சொல்றேன்.. தலையை மட்டும் திருப்பி அவள் முகத்தை கண்டான்.
" ஜான்வி இப்போ நீ என்ன யோசிக்கிற.. உன்ன விட்டுட்டு போய் இத்தனை வருஷமா தனிமையில் தவிக்க வச்ச அந்த ஆரியன் தான் உனக்கு வேணும்னு யோசிக்கிறியா.
" அவன் கேள்வியில் அவள் விழிகள் படவென கொட்டிக் கொண்டன.
" வெளிப்படையா அப்படி சொல்லிட முடியல அசோக்.. ஆனா கிருத்திகா பத்தி யோசிச்சு பார்த்தா.. " தயக்கமாய் அவள் இழுக்க..
" இந்த விஷயத்துல நம்ம பாப்பாவ விட்டுரு.. உன் மனசு என்ன சொல்லுதுங்குறத மட்டும் கேளு.. " நம்ம பாப்பா என அவன் அழுத்தம் கொடுத்ததில் அவளும் அறியாமல் ஏதோ ஒரு நம்பிக்கை இதயத்தில் விளக்கேற்றியது.
" அப்படி என்னால தெளிவா சொல்ல முடியல அசோக்.. ஆனா இன்னும் அவனைப் பார்த்தா என் மனசுக்குள்ள ஏதோ அதிர்வு.. கண்ணெல்லாம் தானா கலங்குது.. அவன்கிட்ட உரிமையா சட்டைய புடிச்சு சண்டை போடணும்னு தோணுது.. ஏன் என்ன விட்டுட்டு போனன்னு கேட்க தோணுது.. " மனதை கொஞ்சமும் மறைக்காமல் தன் நண்பனிடம் மனதில் இருக்கும் உணர்வுகளை அப்படியே எடுத்துக் கொட்டியதில்..
ஓகே.. என நிமிர்ந்து அமர்ந்து தரையில் ஒன்றிய மண் கைகளை தட்டிவிட்டு மடியில் வைத்துக்கொண்டான்..
"சோ.. உனக்கு அவன் வேணும்னு நினைக்கிற.. உன் கருத்துப்படி இன்னும் நீ அவன காதலிக்கிறதா சொல்ற.."
" அது என்ன என் கருத்துப்படி?? உண்மையாவே இன்னும் நான் அவனை காதலிக்க தானே செய்கிறேன்... " அந்த கடைசி இரண்டு வார்த்தைகளில் தானாக அவள் குரல் கம்மியது..
"ஓகே.. ஓகே.." தலையை உருட்டினான்..
" ஆனா வாழ்க்கையில் சேர்ந்து வாழ்றதுக்கு இருவர் விருப்பமும் முக்கியமாச்சுல்ல.. " என ஆராய்ச்சி விழிகளோடு அவளை பார்க்க.. " அதுக்கு தான் உண்மையை அவன்கிட்ட சொல்லணும்னு பார்க்கிறேன்.. ஆனா அவன் கேட்க மாட்டேங்கிறானே.. என்ன சொல்ல வர்றேங்கறதையே கேட்காம வார்த்தையால என்ன குத்தி கிழிக்கிறான்.. காயப்படுத்திட்டே இருக்கான்.. நானும் எவ்வளவுதான் தாங்குவேன்.. " அவள் குரல் மீண்டும் தேம்பியது.
"அழுதன்னா ஐடியா எதுவும் கொடுக்காமல் எந்திரிச்சு போயிடுவேன்னு பாத்துக்கோ.." கோபத்தில் வெடுக்கென அவன் கூறி எழ போக.. "நா அழல.. அழல.." அவசரமாய் கண்களை துடைத்து அவன் கைப்பிடித்து இழுத்து மீண்டும் தன் அருகில் அமர்த்தி கொண்டாள்.
" அப்போ நடந்த விஷயத்தை நீ அவன்கிட்ட சொல்லணும் அவ்வளவு தானே..
"ம்ம்ம்.. அவள் தலை மட்டும் ஆடியது.. "ஆனா அவன் கேக்க மாட்டேங்கிறான் அசோக்.. "
" கேட்கலைன்னா கேட்கிற மாதிரி அடிச்சு சொல்லிட வேண்டியதுதான்.. " எனக் கூறியவனை அதிர்ச்சியில் விழி விரிக்க பார்த்தாள்..
"என்ன அடிக்க போறியா.. " இருவரும் பலத்தில் ஒன்றும் குறைவான ஆட்கள் இல்லையே.. தன்னால் இவர்கள் எதுவும் முட்டிக்கொள்வார்களோ என பயம் வந்துவிட்டது..
ஒருவனுக்கு உடற்பயிற்சியில் விளைந்த உடம்பென்றால் இன்னொருவனுக்கு மூட்டையை தூக்கி கன்றிப்போன தேகம்.. இருவரின் உடலும் மலைமுகட்டை அடுக்கி வைத்த எரிமலையின் கோலம்தான். அவள் அறிவாள்..
அவள் கேட்ட தொணியில் பக்கென சிரித்தான் அசோக்.. அடிக்கிறதுனா நீ நினைக்கிற மாதிரி கை கலப்பு கிடையாது.. இது வேற மாதிரியான அடி.. முடிஞ்ச வரைக்கும் அவன்கிட்ட விஷயத்தை சொல்ல பாரு.. முடியலன்னா விட்ரு.. தானா அவன் தெரிஞ்சுப்பான்.. "
எப்படி தானா.. என எழுந்த கேள்வியை வாய்க்குள்ளயே புதைத்து அவன் கூறியதில் மெழுகுவர்த்திவெளிச்சமாய் சின்னதான நம்பிக்கை ஒளி நெஞ்சில் பரவ.. ம்ம்.. சம்மதமாய் புன்னகைத்தாள்.
" அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.. இதுல நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்னா அதுக்கு பதிலா நீ எனக்கு என்ன செய்வ.. " அவன் கேள்வி புரியாமல் அவள் பார்க்க.. " இனி இப்படி தேவை இல்லாத வேலை எல்லாம் செய்யக்கூடாது.. " அவன் கூறியதில் குற்றவுணர்ச்சியில் சம்மதமாய் அவள் தலை ஆடியது..
" இனி உன் கண்ணுல இருந்து கண்ணீர் கூட வரக்கூடாது.. அது அந்த ஆரியனே ஏதாவது சொன்னாலும் சரி.. "
" நீ பேசுறத அவன் முதல்ல கேட்கணும்னா நீ அழுகாமல் இருக்கணும்.. அழுகுறவங்க சொல்றத இந்த உலகம் பாவமா தான் பாக்குமே தவிர்த்து அவங்க சொல்ல வர விஷயத்தை புரிஞ்சுக்காது.. இதெல்லாம் காமன் ஃபேக்ட்.. புரிஞ்சுக்கோ.. இனி அவனே உன்ன என்ன சொன்னாலும் நிமிர்ந்து நிக்கணும்.. நேரா பேசணும்.. சம்மதமா.. " கேட்க ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு இருந்த கரத்தை அவன் கரத்தில் வைத்து அழுத்தியபடி.. கண்டிப்பா இதை ஃபாலோ பண்றேன்.. "சிறு பிள்ளையாய் தலையாட்டினாள்.. தானாக அவன் விழிகள் புன்னகையில் சுருங்கின..
" சரி மேடம்.. ஒரு கொஸ்டின்.. தெரியாம தான் கேட்கிறேன்.. நீங்க அவ்வளவு ஆழம் போயிட்டீங்கன்னு உங்க பின்னாடியே தேடி வந்து கஷ்டப்பட்டு நீச்சல் அடிச்சு காப்பாத்தி கூட்டிட்டு வெளியே வந்தா ஆரின்னு கூப்பிடுறிங்களே.. அவன் மேல அவ்வளவு காதலா.. " கேலியாய் ஆரம்பித்த குரல் கடைசியில் சிறிதே சிறிதாய் இறுகி தான் போனது.. விழிகள் ஏக்கமாய் அவளை மொய்க்க.. சாமர்த்தியமாய் மறுபக்கம் முகத்தை திருப்பி கொண்டான்..
" அப்படின்னு இல்ல.. ஆனா மூக்குக்குள்ள தண்ணி போனதும் மனசுல இருந்த என்னென்னவோ கழிவுகள் எல்லாம் வெளியே வந்துடுச்சு.. எடுத்த முடிவு எவ்வளவு தவறுன்னு புரிஞ்சது.. அதுல அவன் முகம் எல்லாம் தெரிஞ்சதா.. அதனாலதான் காப்பாத்தினதும் அவன்தானோன்னு நினைச்சி இருந்த அரை மயக்கத்துல கலங்களா தெரிஞ்சத வச்சு அப்படி கூப்பிட்டுட்டேன்.. நீ எதுவும் கோவிச்சுக்காத.. " என அவள் சமாதானமாய் கூறிட.. " சுயநினைவு தப்பும் அந்த அரை மயக்கத்துல கூட உனக்கு அவன் முகம் தான் கண்ணு முன்னாடி வருதா ஜானு.. " முதன் முறையாய் தன் மனதின் வலியை வார்த்தைகளாய் கொட்டி மறுபக்கம் இருந்த மண் தரையில் எழுதி இருந்தான்.. காலை கட்டிக்கொள்ள பாய்ந்து ஓடிவந்த நீர் வழக்கத்தைவிட இன்னும் அதிகமாய் தன் கிளையை பரப்பி அவன் நெஞ்சில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைளோடு.. உணர்வுகளையும் முத்தமிட்டு அழித்து சென்றிருந்தது..
கருத்துகள்
கருத்துரையிடுக