உனக்கும் நேரம் ஆகுது.. நீ கிளம்பு அசோக்.. நான் பஸ் பிடிச்சு போய்க்
கிறேன்... " என எழுந்தவளை விடாப்பிடியாய் வண்டியில் ஏற்றி கிளம்பி இருந்தான் அசோக்..
வண்டி சீறியதில் முகத்தில் மோதிய அனல் காற்று நேரம் மதியத்தை தொட போகிறது என காட்டியது.. ஆனால் நீரில் நனைந்திருந்தவளுக்கு அந்த வெப்ப காற்றும் கூட இதமாய்..
'' வீட்டுக்கு போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு போறியா? என கேட்டவனிடம்..'' இல்லை இல்லை வேண்டாம்".. அவசரமாய் மறுத்தாள்..
" ஏற்கனவே மணி பதின்னொன்னாகிடுச்சு.. பர்மிஷனா சொல்லிக்கிறேன்.. அதோட அடிக்கிற வெயில்ல போறதுக்குள்ள டிரஸ்சே காஞ்சிரும் போல.. "அவள் கூற அதற்கு பின் எதுவும் பேசவில்லை அவன்..
திடீரென ஏதோ தோன்றியவளாய்.. "ஆமா அசோக்.. நீ எப்படி சரியான நேரத்துக்கு அங்க வந்த.. "என அதுவரை மறந்து விட்டிருந்த கேள்வியை அவள் கேட்டதில்.. ''ஹான்.. '' அவன் விழிகள் இடுங்கி சுற்றி வளைய வந்து.. முன் சென்ற காரில் காரணம் கொண்டு நிலைத்தது..
" அது ஆபீஸ்ல இருந்து ஒரு பைல் கொடுத்து விட்டாங்க.. அத கொடுத்துட்டு திரும்பி வரப்போதான் உன்னை பார்த்தேன்.. " அதுக்கு அடுத்து நடந்ததுதான் உனக்கே தெரியுமே என்பது போல் அவன் தோள் குலுக்க.. ''ஓஹோ.. ஆனா என்னால உனக்கும் இவ்வளவு நேரம் ஆயிடுச்சே.. உன் கம்பெனில திட்ட மாட்டாங்களா.. அதுவும் நீ சேர்ந்து இப்போதான் கொஞ்ச நாள் ஆகுது.. ஏதாவது பிளாக் மார்க் ஆகிற போகுது.." என அவள் பரிதவிப்பாய் கூறியதில்.. அவன் இதழ்கள் சிறிதாய் விரிந்தன.
" அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் பார்த்துக்கிறேன்.. " என்றபடி வண்டியை சடன்பிரேக் போட்டு அவள் அலுவலக வாசலில் நிறுத்தினான்..
" தேங்க்ஸ் அசோக்.. ஈவினிங் மீட் பண்ணலாம்.. " மனம் தெளிந்திருந்த நிலையில் இதழ்கள் சிநேகப்புன்னகையில் விரிந்தன..
"ம்ம்ம்.. ரிலாக்ஸ்சா ஒர்க் பண்ணு.. ஈவினிங் பாப்பாவ போய் நான் கூப்பிட்டுக்கிறேன்.. "
"சரி.. "என தலையாட்டி விட்டு அவள் செல்ல.. அவள் அலுவலகத்திற்குள் நுழையும் பார்வையால் தொடர்ந்தவன் அவள் சென்று விட்டதை உறுதி செய்த பின் பைக் கீக்கரை உதைத்து அங்கிருந்து கிளம்பி இருந்தான்..
அப்போது காலியாகி கிடந்த அலுவலகம் முழுவதும் இப்போது ஆட்கள் நிரம்பி வழிய அனைவரும் வேலையில் மூழ்கி கிடந்தனர்.. திவியும் கூட அவள் லேப்டாப்பில் கண்ணும் கருத்துமாய் வேலை பார்த்த படி ஏதோ டைப் செய்து கொண்டிருந்தாள்..
"திவி.. "சோர்வான குரலோடு அழைத்து தன் கைப்பையை டேபிளில் வைத்து அமர போக.. அவள் குரலில் திரும்பினாள் திவி..
" என்ன ஜான்வி.. இன்னைக்கு ஏன் இவ்வளவு நேரம்.. நான் கூட இவ்வளவு நேரம் ஆகியும் நீ வரலன்னதும் லீவோன்னு நெனச்சேன்.. உனக்கு கூட அத்தன போன் பண்ணி இருப்பேன் பாரு.. "கூற.. தன் சிஸ்டமை ஆன் செய்து கைப்பையில் இருந்து போனை எடுத்துப் பார்க்க.. கிட்டத்தட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மிஸ்டுகால்கள்..
இவள் மட்டும்தானா.. மனதில் ஏதோ எண்ணம் தோன்ற ஒருவித ஆர்வத்தோடு உள்ளே நுழைந்து பார்க்க அத்தனையும் திவி அழைத்ததுதான்.. உடலோடு உள்ளமும் சட்டென சோர்வானது..
" சாரிடி கவனிக்கல.. போன் சைலன்ட்ல கடந்திருக்கும்னு நினைக்கிறேன்.." என நோட்டிபிகேஷன் பேடை இழுத்து ஸ்பீக்கரை ஆன் செய்தாள்..
"அது சரி.. ஆனா என்னைக்கும் நேரத்துக்கு வந்துட்றவ இன்னைக்கு ஏண்டி இவ்வளவு நேரம்.. " கேட்க சோர்வான விழிகளோடு ஏறிட்டாள்..
சொல்லப்போனால் அனைவருக்கும் முன் பாய் செக்யூரிட்டிக்கு டஃப் கொடுத்து இன்று முதலில் ஆபிஸ் வந்தது அவள் தானே.. அடுத்தடுத்து நடந்த நிகழ்வினால் வெளியே செல்ல வேண்டிய நிலை.. நினைவில் முகம் சுருங்கியது.
" கொஞ்சம் டயட்.. அசந்து தூங்கிட்டேன்.. " என்றாள் சமாளிப்பாய்..
" சரி சரி.. நேத்து எதுவும் பெண்டிங் வெச்சிருந்தா சீக்கிரமா பாக்க பாரு.. இல்லன்னா இதுதான் சாக்குனு அந்த சிடுமூஞ்சி புடிச்சுக்கும்... வந்ததும் வராததுமா அந்த ஆளுகிட்ட ஏன் திட்டு வாங்கணும்.. " கண்களை உருட்டி அவன் அறையை காட்டி ரகசியமாய் அவள் கூறியதில் ம்ம்... என தலையாட்டி பாதியில் விட்டு வைத்திருந்த பைல்களை திறந்தாள்.
முக்கியமான வேலை.. அதுவும் இன்று மதியமெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்.. என நேற்றே தெரிவிக்கப்பட்டு இருந்தது..
முதலில் அதை எடுத்தவள் வேலையில் ஆழ்ந்தாள்.. வரைபடத்தில் இருந்து அதை எக்ஸிக்யூட் வரை செய்து முடித்து.. பெருமூச்சு விட்ட படி நிமிர எதிரில் இருந்த கடிகாரத்தில் மணி 1 என காட்டியது..
அதுக்குள்ள ரெண்டு மணி நேரம் ஆகிடுச்சா.. என யோசித்தபடி நுண்ணிப்பை பிடித்த கரம் ரெண்டையும் நீட்டி விரல்களுக்கு நெட்டை எடுத்தாள்.
" இந்த வேலை முடிந்து விட்டது.. இப்போது அவனிடம் இதற்கான அப்ரூவல் வாங்க வேண்டும் என யோசித்து கொண்டு இருக்கையில் திடீரென மண்டையில் பொறி தட்டியது.
" அவன் பேசியதை தாங்க முடியாமல் தானே இங்கிருந்து சென்றேன்.. அவன் என்னை தேடவில்லையா? நான் இங்கு வந்து 2 மணி நேரம் ஆகியும் கண்டு கூட கொள்ளவில்லையே.. ஒருவேளை தேடி எங்கேயும் வெளியே சென்று இருப்பானோ.. "என எழுந்த யோசனையில் வந்ததும் அந்த சிறுமூஞ்சி வந்தா திட்ட போது என அவன் அறையை கண்காட்டி திவி கூறியதுநினைவு வர அப்படியானால் அறையில் தான் இருக்கிறான்.. மனம் சுருக்கென தைத்தது..
கையில் தான் முடித்த பைலை எடுத்துக்கொண்டு அவன் அறையை நெருங்கியவள்.. டப் டப்பென கதவை தட்ட உள்ளிருந்து கமின்.. என வந்த குரலில் சற்றும் பிசிர் இல்லை..
" அப்படின்னா உள்ள தான் இருக்கான்.. நான் எங்க போனன்னு தெரிஞ்சுக்க கூட அவனுக்கு விருப்பம் இல்லையா.." மனம் வறண்ட நிலமாய் வெடித்து சிதற.. அதை உள்ளுக்குள்ளேயே அமுக்கியபடி உள்ளே நுழைந்தாள்..
" சார் இன்னைக்கு மதியம் சப்மிட் பண்ண வேண்டிய பைல்.. சைன் பண்ணிட்டீங்கன்னா சப்மிட் பண்ணிடலாம்.. " என பொதுவான வேலைப் பேச்சோடு தன் கையில் இருந்த பைலை நீட்ட.. அவள் குரல் கேட்டு அசூயையான விழிகளோடு நிமிர்ந்தான்..
ப்ச்.. என்று அவன் சலிப்பு சத்தமே அவள் நிற்பதையும் கூட அவன் விரும்பவில்லை என காட்டியது.. அப்படியானால் அவனுக்கு அவ்வளவுதானா நான்.. இப்படிப்பட்டவன் பேசியதற்காகவா மனம் உளைச்சல் கொண்டு பெற்ற பிள்ளையையும் மறந்து கடலில் விழ போனேன்.. அப்போது அசோக் மட்டும் வந்திராவிட்டால் இந்நேரம் செத்தும் போயிருப்பேனே..
ஆனால் அப்போதும் என் இறப்புச் செய்தி இவனுக்கு பத்தோடு பதினொன்று தானா இவனுக்கு..
எனக்காக இவன் கொஞ்சமும் துடிக்கவில்லையா.. எங்கே சென்றாய் என அறிந்து கொள்ள ஒரு சிறு மனிதாபமும் கூடவா இல்லை..??விழிகள் அவள் கொடுத்த பைலை பார்த்துக் கொண்டிருந்தவனை வெறித்தன.
" பையில் இருந்த பேப்பரை ஒன்றன்பின் ஒன்றாக தெளிவாக அலசி முடித்தான் ஆர்யன்.. அதை சமர்ப்பிக்கலாம் என்பதன் அத்தாட்சியாய் கீழே தன் கையெழுத்தை இட்டு முடிக்க.. மனதில் கேட்க கேள்விகள் அத்தனை கொட்டிக்கிடந்தும்.. அவன் செயலில் அடைத்துப் போன வாயை திறக்க முடியாமல்.. பைலை எடுத்துக்கொண்டு அவள் திரும்பி வெளியே செல்ல போக.. ஒரு நிமிஷம்.. அவன் குரல் நிறுத்தியது..
அதுவரை அழுகையிலும் சோர்விலும் சோம்பலிலும் சுருங்கி கிடந்த அவள் கண்கள் மொத்தமும் சட்டென பளிச்சென மின்னலிட வேகமாய் அவன் பக்கம் திரும்பினாள்.. இப்போது எங்கே சென்றாய்.. என கேட்பானா என்ற ஏக்கம்.. அவள் கண்களில் அப்பட்டமாய்.
ஒருவேளை அப்படி கேட்டால் தான் எங்கே சென்றேன் என்றதோடு.. அப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம் என்ற அனைத்தையும் கூறி விட வேண்டும்... உள்ளுக்குள் தன்னை தயார் செய்தபடி அவள் நின்று இருக்க.. அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை படித்து விட்டானோ..
"ஒஹ்ஹஹ்.. நானா கேட்கணும்னு தான் மேடம் விருப்பப்பட்டீங்களாக்கும்.. சரி எனக்கு கேக்குறதுல ஒன்னும் பெரிய ஆட்சேபனை இல்லை.. பெரிதாய் தோளைகுலுக்கியவன்.. டேபிளை சுற்றி வந்து அவள் முன்னே நின்றான்..
"எனக்கு தேவையான நான்தானே கேட்டாகணும்.." அவன் ஆழமான பார்வையில்.. " கேளு ஆரி.. கேட்டிடு.. உன்கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்.. " மனம் தவிக்க விரிந்த விழிகளோடு அவள் நின்றிருக்க.. "என்ன முடிவு எடுத்திருக்க.. காலைல நான் கேட்டதுக்கு சம்மதமா.." என ஒரு கூடை லாரி அனலை எடுத்து அவள் உச்சந்தலையில் கொட்டி இருந்தான்..
அவள் பார்வை சட்டென மருண்டு அதிர்ச்சியாகிப் போனதில்.. அவள் முகப் போக்கையை கவனித்துக் கொண்டிருந்தவனாய் "ஏன் திடீர்னு உன் முகம் மாறிடுச்சு.. என்ன ஓகே தானே.. எவ்வளவு எஸ்பெக்ட் பண்ற.. " என அடுத்தடுத்து தொடர்ந்து கேட்ட கேள்வியில் " ஏய்ய்ய்ய்.. " கையில் இருந்த பைலை கீழே விட்டு அவன் சட்டை காலரை இருக்க பிடித்திருந்தாள்..
விரிந்த கண்களில் கொலை வெறி தாண்டவம் ஆடியது.. " என்ன நெனச்சுக்கிட்டு இருக்க .. உன் இஷ்டத்துக்கு என்னென்னமோ பேசிக்கிட்டே போற.. ச்சி.. உன்ன போயா விரும்பினேன்னு பேசுற ஒவ்வொரு நிமிஷமும் என்ன நீ கூனி குறுக வைக்கிற.. என்ன.. என்ன.. காசுக்காக உன் கூட வரவா.. ஹ்ம்ம்.... " அழுகையில் கண்கள் சிவந்து இதழ்களில் விரத்தி சிரிப்பு படர்ந்தன.
" யாருக்கு வேணும் உன் காசு.. இந்த உலகத்துல காசையும் தாண்டி பாசம் மதிப்பு மரியாதை என நிறைய விஷயங்கள் இருக்குது மிஸ்டர் ஆர்யன்.." அவள் கூறி நிறுத்த.. இப்போது அடுத்த சிரிப்பு அவனிடம்..
" அதெல்லாம் நாணயமா வாழறவங்க நினைக்கிறது.. உனக்கும் அதுக்கும் தான் சம்பந்தமே இல்லையே.. " அவன் கூறிட பிடித்திருந்த அவன் காலரோடு தள்ளி விட்டாள்..
ஒரு அடி பின்னே எடுத்து வைத்தாலும் தன்னை சமன்படுத்தி இருக்கைகளையும் பின்னாக கட்டி கொண்டு பார்வையால் அவளை துளைத்துக் கொண்டிருக்க அடிபட்ட வழிகளோடு அவனைப் பார்த்தாள்... " உன்ன பார்த்தாலே வரவர எனக்கு அருவருப்பா இருக்கு ஆரியன்.. எப்படி இவ்வளவு கேவலமா உன்னால பேச முடியுது.. எப்படி இப்படி நடந்துக்க முடியுது.. நான் விரும்புன ஜென்டில்மேன் ஆரி நீ கிடையாது.. கிடையவே கிடையாது.. இன்னொரு.. இன்னொரு முறை இப்படி வந்து என்கிட்ட பேசிட்டு நின்ன.. அப்புறம் வேலையாவது கண்டதாவதுன்னு பேசுற இடத்திலயே உன்னை காலில் போட்டு இருக்கிறத எடுத்து அடிச்சிட்டு போகவும் நான் தயங்க மாட்டேன்.. " கண்கள் சிவக்க அவள் கூறியதில்... "என்னடி திமிரா.. ஓரடி தன்னை நோக்கி எடுத்து வைத்தவனை உறுத்த பார்வையால் நிறுத்தினாள் ஜான்வி.
" உன்கிட்ட போய் விஷயத்தை சொல்லனும்னு ஒவ்வொரு தடவையும் அவமானப்பட்டுக்கிட்டு இருக்கேன் பாரு.. எனக்கு திமிர்தான்.. இப்ப சொல்றேன்.. இனி நானா எப்பவும் உன் கிட்ட எதையும் சொல்ல மாட்டேன்.. ஆனா எப்போ உனக்கு உண்மை எல்லாம் தெரியுதோ அன்னைக்கு நீயே ஈரக்குலை நடுங்கி ஓடி வருவ.. அன்னைக்கு தெரியும் உனக்கு இந்த ஜான்வி யாருன்னு.. " என்றவள் சட்டென கீழே குனிந்து பேப்பர்களை அள்ளி ஃபைலில் புகுத்திய படி அவனை ஏறெடுத்து பார்க்காமல் சென்றுவிட.. ஆணி அடித்தார் போல் அதே இடத்தில் உறைந்து நின்றான் ஆரியன்..
ஆரம்பத்தில் இருந்தே அவன் பார்த்தவரை ஜான்வி நல்ல பெண் தான்.. நாணயமான குடும்ப பெண்தான்.. ஆனால் முதன்முதலாக தன்னை அவளோடு கண்டபோதே தாய் கூறிய வார்த்தை..??
பணத்துக்காக மட்டுமே மிதாவோடு பழகுவதாய் கூறினாரே.. பணத்துக்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்லக்கூடியவள் எனக் கூறினாரே.. ஆனால் அப்போது அவர் வாய் வார்த்தையை நம்பாது அவளுக்காக அனைத்து விஷயத்திலும் துணையாய் தானே நின்றேன்.. ஒரு நாளாவது அவளை அப்படி தர குறைவாய் நடத்தி இருப்பேனா.. அல்லது மற்றவர்கள் நடத்ததான் அனுமதித்திருப்பேனா... கண் மூடி சுவற்றில் சாய்ந்தான்..
ஆனால் எப்போது அவளை தன் மீது இப்படி ஒரு பழியை அத்தனை உறவினர்கள் மத்தியில் கூறினாளோ.. அன்று அந்த நிமிடம் தாய் கூறிய அத்தனை வார்த்தைகளும் சத்தியம் என்றானது.. பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவள் என அப்போதுதானே தன் மனதில் அச்சாய் படிந்து போனாள் ..
பாஸ்கர் கூறியது போல் தனக்கென ஒரு கோட்பாட்டை வதைத்து அதன் வழியே நடக்கும் ஆரியன் முதன்முதலில் ஒரு பெண்ணோடு தோழமையாய் பழகிருக்கிறான் என்றால் அது ஜான்வியிடம் மட்டும்தான்.. ஏனோ தங்கையின் தோழி என்பதையும் தாண்டி சில இடங்களில் கேலி சீண்டல்.. என அனைத்தும் கொண்டு வாழ்வில் இதுவரை காணாத பருவ ருசியை அவள் மூலமாய் அறிந்திருந்தான்.. தன்னை பார்க்கும்போது மொட்டாய் விரியும் அவள் விழிகளும் ஜிவ்வென சிரிக்கும் அவள் கன்னங்களும் அவனை சொல்ல முடியாத மகிழ்ச்சிக்குள் தள்ளும்.. ஆனால் அதற்கான காரணத்தை தோண்டி துருவி அறிய விரும்பவில்லை அந்நாட்களில்..
ஆனால் அவள் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டபின் அவளை நிச்சயம் நல்லவள் வகையில் சேர்க்க முடியவில்லை.. இப்படி ஒரு பெண்ணுக்காகவா நான் அவ்வளவு செய்தேன்.. மனம் வெறுத்துப் போனான்..
" அவள் கூறிய புகாரை ஏற்றுக் கொள்ளவும் முடியாது அதிலிருந்து வெளியே வரவும் முடியாது இத்தனை நாட்கள் தவிச்சுப் போனேனே.. ஆனா திரும்ப இங்க வந்து அவளை பார்த்ததும்.. அவ எவ்வளவு கேவலமானவன்னு தெரிஞ்சும் என் மனசு அவளைக் கேட்டுதானே துடிச்சது.. " என்றவனுக்கு எப்போதும் போல இப்போதும் தனி வீடு தான் எனினும் வீட்டிற்குள் நுழைந்ததும் ஆட்கொள்ளும் அந்த தனிமை சூரியனாய் சுட்டு எரிப்பதேன்..??
முதலில் அவளைப் பார்த்ததும் கோபமும் வெறியாகவும் இருந்த நாட்கள் ஒரு கட்டத்தில் அவள் அசாத்திய வேலையையும் திறமையையும் பார்த்து அவனால் அசராமல் இருக்க முடியவில்லை..
அவளைப் பார்க்கும்போதெல்லாம் தனிமீறி எழும் உணர்ச்சிகளை முடக்கி வைக்க வழி தெரியாது அதற்கும் அவளையே காரணம் காட்டி இல்லாத ஒன்றை கையில் எடுத்து அவளை திட்டி கரைத்துக் கொட்டினான்...
ஆனால் அப்போதும் தன்னை பார்த்து விட்டால் உருளும் அவள் கண்களும்.. துடிக்கும் அவள் இதழ்களும்.. அவனை இரவின் இருட்டறையில் தனிமையில் பேயாய் பாடுபடுத்தின..
முடிவெடுத்து விட்டான்.. அவள் தவறானவள் தான்.. கீழ்தரமானவள் தான்.. பணத்திற்காக எதையும் செய்யக் கூடியவள் தான். ஆனால்... அவளைக் கேட்டு ஆர்ப்பரிக்கும் உடலையும் உள்ளத்தையும் சமாளிக்க முடியாது..
" எதற்கு சமாளிக்க வேண்டும்.. பணம் கொடுத்தால் எதையும் செய்ய துணிபவள்தானே அவள்.. பணத்தை கண்ணில் காட்டினால் போதும்.. அழைத்த குரலுக்கு ஓடோடி வந்துவிடுவாள்.. " என அந்த இருட்டறையில் முடிவெடுத்த பின் தான் என்று அவள் சீக்கிரமாய் வந்ததும் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் தன் முடிவை அவளிடம் கூறியிருந்தான்.
அவள் கோபமாய் பேசி வேகமாய் வெளியோடிய போதும்.. " எல்லாம் நாடகம்.. உடனே ஒத்துக்கிட்டா கேவலமா நினைச்சிடுவேன்ல்ல.. தனியா உக்காந்து யோசிக்கப் போறா.. எவ்வளவு பணம் கேட்கலாம்னு.. என இகழ்ச்சியாய் நினைத்துக் கொண்டானே தவிர்த்து அவள் கலங்கிய கண்கள் அவனை கொஞ்சமும் அசைத்துப் பார்க்கவில்லை..
நேரம் கழித்தும் அவள் திரும்பாததில் இன்னும் எவ்வளவு ரேட் என்று முடிவு பண்ணல போலும்.. என எண்ணியபடி ஜன்னல் திரையை விலக்கி அவள் வந்து விட்டாளா என அவன் கண்கள் அலைந்ததே...
சிறிது நேரத்திற்கு மேல் அவள் வந்து விட்டதை கண்டதும் விழிகள் மின்னியவன்.. அவளாய் தேடிவந்து விஷயத்தை கூறட்டும் என காத்திருக்க கடைசியில் இரண்டு மணி நேரம் கழித்து அவள் வந்திருந்தாலும் அதைப்பற்றி துளியும் வாய் திறக்காது கடைசியில் தன்னையே கேட்க வைத்திருக்க.. இப்போது அவள் பேசி போனதில்.. அவன் கண்கள் சுருக்கினான்..
" நான்தான் எவ்வளவு பணம்னாலும் கொடுக்கறேன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் வர்றதுக்கு என்ன.. " செய்து கொண்டிருக்கும் தவறு உணராது கோபம் மீண்டும் அவளிடமே திரும்ப இப்போது இதற்கோரு முடிவு கட்டிவிட வேண்டும் என வேகமாய் வெளி நடந்தவன்.. அங்கு நடந்த எதிர்பாராத சம்பவத்தில் உறைந்து போனான்.
கருத்துகள்
கருத்துரையிடுக