முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 28

 


சினம் கொண்ட வேங்கையாய் அவனிடம் சீறி வெளிவந்திருந்தவளுக்கு அவனை பற்றி யோசிக்கவும் விருப்பமில்லை..



அவன் அற்ப புத்தியும் குணமும்  தெரிந்துவிட்டது.. இனியும் அதையே நினைத்து மருகி அழுது தன்னை தானே முடக்கிக் கொள்ள எண்ணமில்லை..  ஏற்கனவே எடுத்த தவறான முடிவு ஒன்று போதும்.. என நினைத்ததற்கு உயிர் வாரிசுருட்டிய நிமிடம் ஒரு காரணம் என்றால் காப்பாற்றியவன் கொடுத்த உரை அதற்கும் மேலானதே.. 





அசோக் சொன்னது சரிதான்.. எனக்கு என்ன வேணும்ன்னுகிற முடிவ நான் முதல்ல தெளிவாக எடுக்கணும்..  அப்போதான் அதுக்கு அடுத்த படிகளில் என்னால சரியா கால் வைக்க முடியும்..  என எண்ணி கொண்டவளாய் இப்போதைக்கு மனதை குழம்பிய குட்டையாக்கும் அவன் சம்பந்தப்பட்ட அனைத்து யோசனைகளையும் ஓரம் கட்டி விட்டாள்..  வேலையிலும் ஆழ்ந்து விட்டாள்.



அனைவரும் தம் தமது வேலையில் மூழ்கி கிடக்க திடீரென அவள் போன் அடித்து தன் இருப்பை காட்டியது.. எடுத்து பார்க்க புது நம்பர்.




நம்பர் புதுசா இருக்கே.. யாரு.. அதுவும் வேலை நேரத்துல.. புருவம் இடுங்க யோசித்தவள்.. அடிக்கடி வரும் ஸ்பேம் காலாய் இருக்கும் என சைலன்ட் போட்டு விட்டு வேலையில் மூழ்க.. மீண்டும் அதே நம்பரில் இருந்து அழைப்பு.. முழுதாய் ரிங் சென்டர் கட்டான நிலையிலும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு..




" விடாம கூப்பிட்டு இப்படி டார்ச்சர் பண்றாங்களே..  எடுக்கலைன்னா விட வேண்டியது தானே..  என சலிப்பாய்.. 




போனை எடுத்து அவர்கள் கேட்கும் லோனோ அல்லது வேறு எதுவுமோ..  வேண்டவே வேண்டாம் என பெரிய கும்பிடு போட்டு வைத்து விட வேண்டும் என போனை அட்டென்ட் செய்து காதில் அவள்  வைக்க.. ஹலோ.. என்ற அவள் கோப குரலுக்கு மாறாய் ஜானு..  அந்த பக்கம் கேட்ட குரல் அன்போடு உருகியது.




நெஞ்சம் நின்று துடிக்க அந்த குரல் யாருடையது என அறிய வெகு நேரம் எடுக்கவில்லை அவளுக்கு.. நொடி நேரத்தில் அவளுக்கும் கண்கள் கலங்கி போயின..



மி.. மிதா.. குரல் கரகரக்க... மறுபக்க குரலும் அவள் குரல் கேட்ட மகிழ்ச்சியில் விசுகசித்தது..



" ஹேய் ஜானு எப்படிடி இருக்க.. எங்க போன.. உன்னை இவ்வளவு நாள் எங்கெங்கெல்லாம் தேடினேன் தெரியுமா..  என்கிட்ட கூட நீ ஒரு வார்த்தை சொல்லலையே.. "



"நான் காலேஜ் சேர்ந்த கொஞ்ச நாள் இல்ல உன் அம்மா இறந்துட்டாங்கன்னு மாலினி சொன்னா.. அத கூட நீ என்கிட்ட சொல்லலையே.. இவ்வளவு வருஷம் ஆகியும் ஒரு கால் இல்ல.. மெசேஜ் இல்ல.. நம்பரையும்  மாத்திட்ட... ஏன் ஜானு என் மேல இன்னும் உனக்கு கோபம் போகலையா.. " என தடுமாற்ற குரலோடு கேட்டு அவள் விசுகசிக்க.. 



கடந்த காலங்களை அவள் கிண்டி விட்டிருந்த போதிலும் தோழியின் அன்பு குரலில் அனைத்தும் மறந்து போனவளாய்.. "ச்சி லூசு.. உன் மேல எனக்கு என்னடி கோபம்.." என்றாள் தானும் கண்ணீரில் கரைந்து.




" அப்புறம் ஏன் இவ்வளவு நாளா என்னை காண்டாக்ட் பண்ணல.. அன்னைக்கு நீ சொல்ல வர்றத முழுசா கூட கேட்காம விரட்டுனது எங்க வீட்டு ஆளுங்க தப்புனாலும் அதுக்கு நான் என்னடி பண்ணுவேன்..  நான் கடைசிவரை உனக்கு தானே சப்போட்டா இருந்தேன்.. ஆனா திடீர்னு இந்த காலேஜ்ல இருந்து சீட்டு கிடைச்சிருச்சு..  நானும் இங்க ஷிப்ட் ஆகிட்டேன்... ஆனா நீ என்ன மறந்துடியா ஜானு..!'' அவள் கேட்ட வார்த்தைகளில் கண்களில் இருந்து பொல பொலவென நீர் உகந்து விழுந்தது..




" என்ன ஆச்சு" என அவள் அழுகையை கண்டு என்னவோ ஏதோ என தோள் பற்றிய திவியிடம்.. "ஒன்னும் இல்ல'' என்பதைப் போல் கண்சிமிட்டியவள்..  ஃப்ரெண்ட் என வாய் அசைக்க..  " அதற்கு ஏன் அழுகிறாய் என்பது போல் பார்த்து வைத்தவள் " அழாதே என டெஸ்க்கு அடியில் இருந்த கர்ச்சீப்பை  அவள் பக்கமாய் நகர்த்தி வைத்தாள்.



மற்றவர்கள் கவனிப்பதற்குள் வாகாய் கண்ணீரை ஒத்தி எடுத்துக் கொண்டாள்.. நாளைக்கு பின் உயிர் தோழியின் குரலைக் கேட்டவளுக்கு அலாதி மகிழ்ச்சி..




"மிதா.. உன் மேல எப்படி டி என்னால கோபப்பட முடியும்.. நீ சொன்னபடி அங்க யாருமே நான் சொல்ல வர்றதை கேட்கலைனாலும் எனக்காக என் தோழின்னு எனக்கு சப்போர்ட்டா நின்னவ அங்க நீ மட்டும் தானே..  உன் மேல கோபப்பட்டு நான் எங்க போக.."  குரல் தழுதழுக்க அவள் நிறுத்தியதில் 



"அப்புறமும் ஏன் இவ்வளவு நாளா எனக்கு போன் பண்ணல.. நீயும் போன் நம்பரை மாத்திட்ட.. அம்மா இறந்ததோடு நீ வேற எங்கேயோ போயிட்டதா ஊருக்கு வந்தப்போ கேள்விப்பட்டேன்..  எங்க போன இப்போ என்ன செய்யற எதுவும் தெரியாம எப்படி துடிச்சு போனேன் தெரியுமா.. " அவள் குரல் அன்றைய நாளின் வேதனையை பிரதிபலித்தது.



" நான் நல்லா இருக்கேன் மிதா.. பாப்.. " என ஆரம்பித்தவள் வார்த்தையை உள்ளுக்குள்ளேயே விழுங்கி இப்போதைக்கு குழந்தையை பற்றி அவளுக்கு தெரிவிக்க வேண்டாம் என முடிவெடுத்து.. " இங்க பிரண்டு கூட தங்கி இருக்கேன்.. " அவள் முடிக்க இப்ப எந்த ஊர்ல இருக்க.. அவசரமாய் கேட்டாள்..



"சென்னைல தான்.. " அவள் கூற எதிர்முனையில் இருந்தவள் வாய் அடைத்துப் போனாள்.




" அது பெரிய சிட்டி ஆச்சே.. அங்க எப்படி தனியா சர்வைவ் பண்ற..  உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே.. நல்லா தானே இருக்க "என தோழியின் பாதுகாப்பு கருதி தவிப்பாய் கேட்க..



" நான்தான் சொன்னேன்ல.. நான் நல்லா தான் இருக்கேன்.. என்றவள் வெகு நேரம் போனை காதில் வைத்தபடியே பேசினால் அவன் எங்கே கண்டு வெளியே வந்து கத்த ஆரம்பித்து விடுவானோ என எண்ணி..




" ஒரு நிமிஷம் டி ஸ்பீக்கர் போடுறேன் " என ஸ்பீக்கர் போட்டு பக்கத்தில் மேஜை அருகில் போனை வைத்துக் கொண்டாள். வெகு நாளைக்கு பின் கேட்கும் தோழியின் அன்பு பேச்சை துண்டிக்க விருப்பமில்லை.. 




இதுவென்றால் தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு வேலை செய்வது போலவும் தெரியும் தோழியிடமும் பேசிக் கொள்ளலாம்!! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்..!!




ஆளாளுக்கு வேலையில் மூழ்கி கிடப்பதால் தங்கள் பேச்சு ஒன்றும் மற்றவர்களுக்கு தெரிய போவதும் இல்லை.. கேட்க போவதுமில்லை.. என.. பேச்சில் கவனமாக.. கடந்த எட்டு வருடங்களில் அன்றைய நாளுக்குப் பின் தாயின் நோயும்.. இறப்பும்.. எதிர்பாராத நேரத்தில் ஒருவனை சந்தித்ததும்.. அவன் தன்னை காப்பாற்றியதும்.. தான் ஊரை விட்டு வந்ததும்.. இப்போது அவன்கூடவே தங்கி இருப்பதையும் ஒன்று விடாமல் கூறியவள் வாகாய் கிருத்திகாவின் விஷயத்தை மட்டும் மறைத்து விட்டாள்.





குழந்தையை பற்றி கூறினால் எங்கே அந்த உண்மைகளையும் சேர்த்து கூற வேண்டுமோ என்ற தவிப்பு.. சம்பந்தப்பட்டவன் இன்னும் அதற்கான அத்தாட்சியை கொடுக்காத போது தோழியே ஆனாலும் மகளைப் பற்றிய விஷயத்தை வெளிப்படையாய் கூற வாய் வரவில்லை..


" கடவுள் தான் உனக்காக அந்த நேரம் பார்த்து அந்த மனுஷனை அனுப்பி இருக்கணும்னு நினைக்கிறேன்.. முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கு இவ்வளவு தூரம் செய்ய யாருக்கும் மனசு வராது.. அவர் பெயர் என்ன சொன்ன.. "



"அஷோக்.." கூறும்போது அவள் கண்கள் நன்றியிலும் மலர்ந்ததை.. ஒரு முடிவோடு அவளிடம் விஷயத்தை பேசி இன்றே முடித்தாக வேண்டும் என வேக நடையோடு வெளியே வந்திருந்த ஆரியனின் நடை அவள் கூறிய ஆணின் பெயரில் நின்று விட்டது.. 



" நீ சொன்னது உண்மைதான்.. அவன் கிடைக்க உண்மையாவே நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.. " பிறகு நாளைக்கு பின் தோழியோடு பேசும் மகிழ்ச்சியில் தன்னையும் மறந்து மனதார உண்டான புன்னகையில் சுருங்கும் அவள் விழிகளும்.. மற்றவர்களுக்கு மறைத்து உதட்டுக்குள் விரியும் மென்மையான சிரிப்பும்.. அதோடு பேசுபவனை பற்றிய விஷயத்தில்.. விடைகள் பணிய அவள் கூறிய அந்த ஒற்றை பெயர் அவன் கண்களை இடுங்க செய்தன..




"அது சரி.. அங்க என்கிட்ட நல்லவன் மாதிரி நாடகம் ஆடிட்டு.. எங்க அடுத்து இன்னொருத்தனே வளைக்க திட்டம் போட்டுட்டா.." என்றவனின் பார்வை ஆங்காரமாய் அவள் அருகில் இருந்த போனில் பதிந்தது. 




  " மேல நேரத்துல போன் பேசி வெட்டியா கடலை போட்டுக்கிட்டு இருக்கா.. அதுலயும் இன்னொருத்தன் குடியே கெடுக்க.. " என்றவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்ததில்.. வேக நடையோடு அவளை நெருங்கியவன் டேபிளில் பட்டென நான் தட்ட.. ஏற்பட்ட அதிர்வில் சட்டென மிரண்டு கால்கள் தனிச்சையாய் எழுந்து நின்று விட்டன...



திவியும் கூட எதிர்பாராத அதிர்வில் ஹக் என பயந்து விழிகள் மிரள பார்க்க.. "இடியட்..  வாட் த ஹல் இஸ் ஹாப்பனிங் ஹியர்.. வேலை நேரத்தில் வேலையை விட்டுட்டு இப்படி அலட்சியமா போன் பேசிக்கிட்டு இருக்கீங்க.." என தான் தகித்துக் கொண்டிருக்கும் போதிலும் அவள் குளிர்வாய் சிரித்துக்கொண்டு இன்னொருவனை மடக்க திட்டம் போட்டுக் கொண்டிருப்பதில்.. பணத்தை தாண்டி அவளுக்கு அப்படி வேற என்ன தேவையாம் என ஏளனத்தோடு எண்ணியபடி.. எரிச்சலை வார்த்தையில் காட்டி இருக்க.. ஜானு.. ஜானு.. அந்த பக்கம் இருந்து கேட்ட குரலில் இன்னும் துண்டிக்கப்படாத அவள் போனில் நிலை குத்தின அவன் கண்கள்..





உயிர் தங்கையின் குரலை அறியாத அளவிற்கு அவன் ஒன்றும் குடும்பத்தின் மீது பாசம் இல்லாதவன் இல்லையே..  அதிலும் அவன் உயிரே அவன் தங்கை அல்லவா.. 




அன்றைய நாள் இவள் செய்த காரியத்தால் தன்னிடம் பேச மறுத்த  தங்கையின் குரலை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து காதில் கேட்கிறான்..



இனிய கீதமாய் காதல் தொட்டுச் சென்ற குரலில்.. அதிர்ச்சியாய் விழிகள் மேலிழுந்து அவள் முகத்தில் படிய.. அவன் பார்வையை புரிந்து கொண்டவளாய் ஆமாம் என்பது போல் தலையை ஆட்ட.. ஷிட்.. இதழ் கடித்தவனின் முகம் மொத்தமுமாய் சுருங்கிப் போனதாய்...




''ஜானு.. அது அவனா... ஆர்யனா.." எதிர்பக்கம் இருந்து கேட்ட குரலில் விரிந்து போயின திவியின் விழிகள்.



இவளுக்கு போன் செய்தவள் சரியாய் தங்கள் சிடு மூஞ்சி மேனேஜரின் பெயரை கூறுகிறாள் என்றால்..  அப்படியானால்...?? கேள்வி எழுந்தாலும் முன்னே நிற்பவனின் முன்பு கேட்க தைரியம் இல்லை.. லேப்டாப்பிற்குள் தலையை அழுத்தி புகுத்திக் கொண்டாள்..



அவசரமாய் போன் ஸ்பீக்கரை ஆப் செய்து போனை எடுத்து காதில் வைத்து கொண்டாள் ஜான்வி..




" ஜானு லைன்ல இருக்கியா நீ.. "ஸ்பீக்கர் ஆப் செய்திருந்தாலும் அதிகபட்ச சத்தத்தில் மிதாவின் குரல் எதிரில் இருந்த ஆரியனுக்கும் நன்றாகவே கேட்டது..




நல்ல வேலையாய் தான் வந்த விஷயத்தை பற்றி பேசியிருக்கவில்லை.. இல்லையென்றால் இப்போதைக்கு பேருக்காவது அண்ணன் என்ற இடத்தை தந்திருப்பவள் அதற்கு அடுத்து என் விழியிலும் விழித்திருக்க மாட்டாள்.. அதோடு இவள் இன்னும் இதோடு தொடர்பில் தான் இருக்கிறாளா.. அப்படியானால் இவ்வளவு நான் செய்ததெல்லாம் அவளிடம் கூறி இருப்பாளா.. அன்று தாய் பேசிய போது கூட மிதா இன்னும் தன் மீது கோபமாய் இருப்பதாய் தானே கூறினார்.. அப்படியானால் அதற்கும் காரணம் இவள் தானா.. பல்லை கடித்தான்.



" ஆனாலும் அடுத்த நிமிடமே.. தன் குரல் கேட்டு ஆரியனா..?? எனக்கு கேள்வியாய் தங்கை கேட்டதில் அப்படியானால் நான் இங்கே இருப்பது அவளுக்கு தெரியாது என்று தானே அர்த்தம்.. ஏதோ நெஞ்சோடாய் மெலிதாய் நிம்மதி பரவியது..




இப்போது இவள் என்ன கூற போகிறாளோ என அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க..



" ஹான் ஹான் இருக்கேன்.. " அவள் கேள்வியில் அவசரமாய் கூறினாள் ஜான்வி.




" என்னடி அது ஆரியன் தானே.. அவனும் உன் கூட தான் இருக்கானா.. நீங்க ரெண்டு பேரும் பேசி சமாதானம் ஆகிட்டீங்களா.. அவன் உன்ன புரிஞ்சுகிட்டானா.. " என தோழியின் அடுக்கி வைக்கப்பட்ட அடுத்தடுத்த கேள்விதனில்.. திவியின் முழி விரிந்தது எனில் ஆரியனின் முகமோ அசூயையாய் சுருங்கியது. 




இவள் மீது தான் தன் தங்கைக்கு எத்தனை நம்பிக்கை.. உடன் பிறந்தவன் மீது கூட இத்தனை நம்பிக்கை இல்லையே.. அப்படி என்ன செய்துவிட்டாலாம் இவள்..  பணத்தை தேடி அலையும் அற்ப பெண்.. எண்ணியவன் வாய்விட்டு எதுவும் கூற முடியாத நிலையில் இதழை கடித்து அதற்கு மேலும் தங்கை அவளிடம் உருகி உருகி பேசுவதை கேட்க முடியாதவனாய் வேகமாய் உள்ளே சென்று விட.. அவனை தொடர்ந்த அவள் பார்வையை



ஜானுஉஉஉ.. மிதாவின் அழுத்த குரலில்.. தன் பக்கமாய் திருப்பினாள்.



சொல்லு மிதா.. என்றாள் அவன் சென்ற பின் சற்று இலகுவான மனதை சமன்படுத்திய படி.




" என்னடி சொல்ல சொல்ற.. அவன் குரல் கேட்டுச்சே..  அது ஆர்யன் தானே.. "என அவசர அவசரமாய் கேட்க.. 



"ம்ம்ம்.. அவர் தான்.. "தயக்கமாய் கூறியவளிடம் "அப்ப நீயும் அவனும் சேர்ந்துட்டீங்களாடி.. என்கிட்ட ஏன் சொல்லவே இல்ல.. உனக்கு தெரியுமா.. இதனால தான் நான் அவன்கிட்ட பேசறதே இல்ல.."



"என்ன.." அவள் கூறியதில் அதிர்ச்சியானாள் ஜான்வி.




" நீ ஏன் டி பேசாம இருக்க.."




" அவன் பண்ண வேலைக்கு என்னால அவன் கிட்ட முகம் கொடுத்து பேச முடியல..  அன்னைக்கு நீ எவ்வளவு கதறுன..  நீ என்ன சொல்ல போறன்னு கூட முழுசா கேக்காம புரிஞ்சுக்காம அப்படியே கார் ஏறி போனானே..  எனக்கு அதில் இருந்து அவனைப் பார்த்தாலே அவ்வளவு வெறுப்பா இருக்கு.."



"சரி அத விடு இப்ப விஷயத்தை சொல்லு அவன் உன்னை அக்செப்ட் பண்ணிட்டானா.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டீங்களா " என ஆர்வமாய் கேட்டவளிடம் 



''மிதா.. மிதா.. ஒரு நிமிஷம்.. "அமைதியான குரலில் நிறுத்தினாள் ஜான்வி..



" நான் இங்க ஒரு கம்பெனில வேலை பாக்குறேன்..  அந்த கம்பெனியோட மேனேஜர் இப்போ அவர்தான்.. " என கூற.. அவள் வேலை பார்ப்பது ஒரு அதிர்ச்சி என்றால் அதற்கு தன் தமையன் தான் மேனேஜர் என்பது அடுத்த அதிர்ச்சி!!



" என்னடி சொல்ற.." அவள் உணர்வை அப்பட்டமாய் பிரதிபலித்தன அவள் குரல்.



" உண்மைதான் மிதா.. நான் இங்க ஒர்க் பண்றேன்.. அவர்தான் இங்க மேனேஜர்.. அதா ன் வேலை நேரத்தில் என் போன் பேசுறீங்கன்னு வந்து சொல்லிட்டு போறாரு.. "




"அ.. அப்படினா.. "அவள் திக்கி தடுமாற.." நீ நெனச்ச மாதிரி எதுவுமே கிடையாது.. ஆனா என்ன காரணம் காட்டி நீ பண்றதும் தப்பு.. உன் பிரண்டா நானே சொல்றேன்.. தயவு செஞ்சு அவர்கிட்ட பேசு.. நீனா அவருக்கு எவ்வளவு இஷ்டம்னு உனக்குமே தெரியுமே.. என்ன காரணம் காட்டி நீ அவர்கிட்ட பேசாம இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ் பேசிடு.. "கண்கள் சுருங்க தாழ்ந்த குடலில் அவள் கூற.. 



" நீ எதுவும் அதைப் பற்றி அவன் கிட்ட பேசலையா.. " இன்னும் அதே புள்ளியில் நின்ற தோழியிடம் நான் கூற முற்பட்டாலும் அவன் கேட்க போவதில்லை என்பதை வாய்க்குள்ளேயே நிறுத்திக் கொண்டாள்.



" பேசுறதுல எனக்கு விருப்பம் இல்ல.. கேக்குறதுக்கு அவருக்கும் விருப்பமில்லை.. அத விடு.. நீ அவர்கிட்ட பேசிடு.. "


ஆனா ஜானு.. அவள் இழுத்ததில் எனக்காக ப்ளீஸ்.. கண்களை சுருக்கி அவள் கேட்ட விதத்தில் எதிரில் இருந்தவளால் மறுக்க முடியவில்லை.




"சரி பேசுறேன்.. ஆனா கண்டிப்பா உன் விஷயத்தை பத்தியும் பேசுவேன்.." என்றவளிடம் "இல்லை இல்லை வேண்டாம்" அவசரமாய் மறுத்தாள்.




நான் அவரதான் டெய்லி பார்க்கிறேனே.. எப்போ சொல்லனும்னு தோணுதோ அப்ப நானே சொல்லிக்கிறேன்..  ப்ளீஸ் நீ எப்பயும் போல அவர்கிட்ட பேசு.. என் பேச்சை எடுக்காத.. "என தோழி உறுதியாய் கூறிய பின்.. "என்னவோ போ.. இத்தனை வருஷம் கழிச்சு ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாக்குற மாதிரியான இடத்துல இருக்கீங்க.. ஆனாலும் உங்களை நீங்களே விட்டுக் கொடுத்துட்டு இருக்கீங்களே.. " என்றவளின் குரலில் சோர்வு மிகுதியாய்..


ப்ச்.. அதெல்லாம் விடுடி.. ஆமா இது அசோக் வாங்கி கொடுத்த நம்பரே.. இந்த நம்பர் எப்படி உனக்கு கிடைச்சது..அவள் கேட்க..



ம்ம்ம்.. உன் ரேஷன் கார்டுல பார்த்தேன்.. என அவள் கூறியதில்.. எ.. என்ன.. மாதம் தேவைப்படும் மளிகை சாமான்களுக்காகவே தான் அசோக் கிருத்தி எனும் மூவரும் குடும்பமாய் கொண்ட ரேஷன் கார்டு பார்த்து விட்டாளா.. என தோன்றிய அதிர்ச்சியோடு நெஞ்சை பிடிக்க..



அவள் அமைதியை மிதா எப்படி நினைத்தாளோ..  பக்கென சிரித்தாள். 




பின்னே என்னடி ரேஷன் கார்டுலையா நம்பர் போட்டுருப்பாங்க.. தற்செயலா உன்னுடைய பேஸ்புக் அக்கௌன்ட் செக் பண்ணேன்..  புது நம்பர் அப்டேட் ஆகி இருந்துச்சு.. அதான் சரி.. எதுக்கும் போட்டு பாப்போம்னு பார்த்தேன்.. நல்லவேளையா நீ எடுத்துட்ட.. ' குரலில் மகிழ்ச்சி தங்க அவள் கூற அப்பாடா பெருமூச்சு விட்டாள் இவள்..



"சரி.. வேலைல இருக்கேன்னு சொல்ற.. நீ ஃப்ரீ ஆனதும் எனக்கு கூப்பிடு.. எனக்கு இதே நம்பர் தான்.. இன்னும் இன்டர்ன்ஷிப் முடிய ரெண்டு மாசம் இருக்கு..  அதுக்கு அடுத்து ஊருக்கு தான் வருவேன்.. அப்போ கண்டிப்பா உன்ன பாக்க வர்றேன்.. "அவள் கூறியதில் அவள் வந்தால் குழந்தையைப் பற்றி தெரிந்துவிடுமே என ஹக் என நினைத்தாலும தோன்றினாலும்.. அது ஒன்றும் நாளைக்கே நடக்கப்போவது இல்லையே..  இன்னும் இரண்டு மாதம் இருக்கிறதே என பெருமூச்சு விட்டவளாய் வா வா.. என வாய் நிறைய அழைத்து போனை துண்டிக்க.. தங்கை அவளிடம் மட்டும் உருகி பேசுவதை கேட்க முடியாமல் தள்ளி வந்திருந்தாலும் அவர்கள் அப்படி என்ன பேசுகிறார்கள்? என ஓரமாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஆரியனின் காதில் அவள் பேசியது மொத்தமும் விழுந்து இருக்க.. அதிலும் அவள் தன் தங்கையிடம் தன்னிடம் வலிய பேசக் கூறியதை கேட்டு.. உள்ளே இருந்த காயத்திற்கு மயிலிறகால் வருடி கொடுத்தது போல் ஒரு இன்பம்..




" இவளை நான் நிமிசத்துக்கு நிமிஷம் இவ்வளவு டார்ச்சர் பண்றேன்.. ஆனா இவ எதுக்கு மிதாவ என்கிட்ட பேச சொல்லி எனக்கு சப்போர்ட் பண்ணனும்.. " இதழில் சிரிப்பு தங்க வேலையை தொடர ஆரம்பித்தவளை புரியாத கேள்வியோடு பார்த்து..  இதுவரை கொண்டிருந்த ஆதங்கமும் வெறியும் மாறி.. சிறிதே சிறிதான ஆதூரமான பார்வையால் வருடி தன் கேபினுக்குள் சென்றிருந்தான் ஆரியன்... 





நீயே சொன்னாலும் உன்னையும் என் அண்ணனையும் சேர்த்து வைக்காமல் விடமாட்டேன் ஜானு.. துண்டித்த போனை பார்த்தபடி இதழில் புன்னகை தவழ இந்த பக்கம் கூறிக் கொண்டிருந்தாள் மிதா.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 38

 ரூபா தன்னை கட்டி அணைத்த போது ஜான்வி முகம் போன போக்கில் அந்த நிமிடம் உள்ளுக்குள் உறுத்தல் தோன்றியதென்னவோ உண்மைதான்.. அதனால்தான் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. என ரூபாவை உள்ளேயே அமர்த்திவிட்டு வெளியே ஓடி வந்தான் ஆர்யன்..  ஆனால் எப்போது அவள் முகம் தனக்கென தொய்ய கண்டானோ அப்போதே மனதில் எண்ணம் உதித்து விட்டது.   தன்னால் முடிந்த மட்டும் மன்னிப்பு கேட்டு ஆயிற்று.. தான் செய்த தவறு பெரிது தான் என்றாலும்..  அதை துளியும் காதில் வாங்காது மனமிரங்காதவள்.. ரூபாவோடு தான் இருந்த ஒரு கணத்தில் சலனப்பட்டு முகம் சுழிக்கிறாள் என்றால்.. இது.. இது பொறாமை தானே.. என்னவன் என்னும் பொறாமை.. தான் இன்னொரு பெண்ணோடு இருப்பதினால் வந்த பொறாமை.. அதோடு நேற்று தாயும் ரூபாவை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால் வந்த தனியுரிமை பொசசிவ்.. என்னதான் தான் பேசியதில் அளவு கடந்த கோபத்தில் அவள் இருந்தாலும் தன்னுடைய இன்னொரு பெண் பழகுவதை அவளால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை எனில் இன்னும் தன் மீது அவளுக்கு காதல் இருப்பது உண்மை தானே..  அதை அவளையே ஒத்துக்கொள்ள வைத்தாக வேண்டும்.. அதற்கு மன்னிப்பால் ம...

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...