என்ன ஜான்வி.. இன்னும் ஏன் உன் முகம் ஒரு மாதிரியாவே இருக்கு.. சாப்பாட்டை தட்டில் பரிமாறி கொண்டிருந்தவளிடம் கேட்டான் அசோக்..
என்னவோ அசோக்.. இன்னும் அந்த நியூஸ்ல இருந்து வெளிய வரவே முடியல.. முகம் சுழித்தபடி தட்டை அவனிடம் நீட்டினாள்.
" விடு.. சாதாரண நியூஸ் தானே அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்.. "அவளை சமாதானம் ஆக்கும் பொருட்டு அவன் கூற.. அனல் பார்வையோடு நிமிர்ந்தவள்.." எப்படி அசோக்.. நியூஸ்னாலும் அது ஏதோ ஒரு இடத்துல நடக்கிறது தானே.. கல்யாணம் முடிஞ்சும் அவனோட இல்லாம இன்னொருத்தன் கூட போறது எவ்வளவு கேவலம்.. நினைக்கவே அருவருப்பா இருக்கு " உடல் சிலிர்த்தாள்.
" அவங்க அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு ஜான்வி.. அதை க்ரிட்டிசைஸ் பண்றதுக்கு நமக்கு எந்த உரிமையும் கிடையாது.. "திட்டவட்டமாய் கூறியவனை முறைத்தாள்.
" நான் ஒன்னும் வேணும்னு கிரிட்டிசைஸ் பண்ணல.. இப்ப நம்ம ரோட்டில் போறப்ப முன்னாடி யாராவது விழுந்துருந்தா ஐயோ பாவம்னு சொல்லி தூக்குறோமே.. அப்போ அந்த ஐயோ பாவம்னு சொல்றது கிரிட்டிஸைசா.. அந்த மாதிரி தான் இதுவும்.. பார்த்த நிகழ்வை தாங்க முடியாம தானா வெளிப்படுற வார்த்தைகள்.. "
" அதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகணும்னு அவசியம் இல்லயே.."
" என்னால அந்த விஷயத்தை அவ்வளவு சாதாரனமா எடுத்துக்க முடியல.." தனக்கும் தட்டில் சாப்பாட்டை போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.. ஆவி பறக்க இட்லி ஊற்றி இருந்ததோடு அதற்கு சுடச்சுட தக்காளி சட்னியும் தேங்காய் சட்னியும்.. வைத்திருக்க அவள் சமைக்கும் நேரத்திலேயே கிருத்திகாவிற்கு ஊட்டி உறங்க வைத்திருந்தான் அசோக்.
"அப்படின்னா கணவன் இருந்ததும் மறுமணம் செய்றதும் உன் கருத்து படி தவறா".. அவளது இந்த கருத்து தவறென்ன காட்டிட முயன்றான்..
" அப்படின்னு கிடையாது.. எல்லாருக்கும் வாழ ஒரு துணை கண்டிப்பா வேணும்.. கணவன் இல்லனா வேற வழி இல்லாம புது ஒரு வாழ்க்கை தொடர்வதும் அதை இந்த சமூகம் ஏத்துக்கிறதும் உண்மையாவே நல்ல விஷயம்.. ஆனா.. இத்தனை வருஷம் வாழ்ந்த கணவன விட்டுட்டு இன்னொருத்தன் கூட எப்படி அப்படி போக முடியுதுங்கிறது தான் எனது கேள்வி.. "
" ஆனா மனசுக்கு படிக்காம இங்க கல்யாணம் பண்றவங்களும் நிறைய பேர் இருக்காங்க தானே ஜான்வி.. புரிஞ்சுக்காம கடைசி காலம் வரைக்கும் சண்டையிலும் சச்சரவிலும் வாழ்வதற்கு ஒரு முறை தன் மனசு என்ன சொல்லுதுங்கறத ஆழமா கேட்டு அத ஏத்துக்கிறது தானே சரி.. இவ்வளவு நாள் அந்த லேடி அவங்க ஹஸ்பண்ட் கூட சேர்ந்து தான் இருந்திருக்காங்க.. ஆனாலும் அவங்க கணவன மனசார நேசிக்க முடியாததால தானே இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிருக்காங்க.. ஒருவேளை கடைசி வரைக்கும் நீ சொல்ற மாதிரி அவங்க ஹஸ்பண்ட்கூடவே இருந்திருந்தாலும் பொய்யா தானே அவங்க வாழ்க்கை அமைஞ்சிருக்கும்.. "
" அதெல்லாம் எனக்கு தெரியல அஷோக்.. என்ன பொறுத்த வரைக்கும் ஒருத்தனுக்கு ஒருத்தி தான்.. அந்த பொண்ணோட வீட்டுக்காரர் எவ்வளவு கதறுனான்.. ஒரு வார்த்தை கூட பேச முடியாம தல குனிஞ்சு அந்த இடத்தில் நின்னாலே அந்த பொண்ணு இந்த அசிங்கமும் சங்கடமும் தேவையா.. " என்றவள் அதோடு உணவில் கவனமாகிவிட.. கல்யாண வாழ்க்கைக்கு ஆதாரமே இரு பக்க காதல்தான் ஜானு.. அது இல்லாத இடத்தில் கல்யாணம் வாழ்க்கையும் வீண்.. மனதோடு கூறியபடி.. தானும் உண்ண ஆரம்பித்திருந்தான் அஷோக்.
உண்டு முடித்ததும் வழக்கம்போல் பாத்திரம் எல்லாம் கழுவி முடித்து அறையில் குழந்தையின் அருகில் அவள் படுத்துக்கொள்ள.. ஹாலில் படுத்திருந்தவனின் விழிகள் நிமிர்ந்து இருட்டறையில் நிறைந்திருந்த இருளை கிழித்து கொண்டு கூர்மையாய் பாய்ந்து அவள் முகத்தோடு ஒட்டியது.. அன்றைய அலுப்போ என்னவோ.. வழக்கத்தை விட சீக்கிரமாகவே உறங்கி இருந்தாள்.
முத்தமிட்டு குவிந்து நின்று குறட்டை விடும் அவள் உதடுகள் கண்ணில் பட.. தேவையானதை கண்டு விட்ட நிம்மதியிலும் மகிழ்ச்சியிலும்.. நீ என்ன ஏத்துப்பியா இல்லையான்னு தெரியாது.. பட் ஐ ஆல்வேஸ் லவ் யூ ஜானு.. இதழில் சிரிப்பு தங்க கூறியவன் கவிழ்ந்தடித்து உறங்கி போனான்.
க்ரீச்.. க்ரீச்.. இனிய குயில்களின் ஓசை காதில் பாய அதை விட படு விமரிசையாய் அடுக்களையில் பாத்திரங்கள் உருளும் சத்தம்.
ஜானு எழுந்துட்டாளா.. விழிகளை மட்டும் படுக்கையிலிருந்து நிமிர்த்தி பார்க்க.. திறந்திருந்த அறையில் அவளை காணததில்.. எழுந்திட்டா போல.. ஆனா காலைலயே ஏன் இவ்வளவு சத்தம்.. தானும் எழுந்து வந்தான்..
பிரிஜ்ஜில் ஏதோ எடுத்து கொண்டு வேகமாய் உள்ளே சென்றவளோடு மீண்டும் ஏதோ பொருள் கீழே விழும் சத்தம் கேட்க.. ஜான்வி.. அவன் குரலில் திரும்பியவள் ஒரு பார்வையோடு மீண்டும் வேலையில் கவனமாக..
"என்னாச்சு.. ஏன் இவ்வளவு சத்தம்.." என்றவன் அவள் வேக வேகமாய் காய்கரிகளை நறுக்குவதில்.. "அட.. இங்க பாருமா..!'" என தாறுமாறாய் நறுக்கி கொண்டிருந்த அவள் கரத்தை தன் பக்கமாய் திருப்ப.. காலைலயே ஏன் இவ்வளவு அவசரம்.. மெதுவா வேலைய பாரு..
"அங்க பாரு அஷோக்.. மணி இப்போவே ஆறாகிடுச்சி.. நானே இப்போ தான் எழுந்தேன்.. இன்னைக்கு கிருத்தி ஸ்கூல்ல மீட்டிங் வேற இருக்கு.. வேகமா போனா தான் சீக்கிரமா அந்த மீட்டிங் முடிஞ்சு வேலைக்கு போக முடியும்.. அதான் அவசர அவசரமா செஞ்சுட்டு இருக்கேன்..." என்றவளை முறைத்தான்.
"அதுக்கு ஏன் இவ்வளவு அவசரம்..ஹோட்டல்ல சாப்பிடுறது உனக்கு பிடிக்காது.. நீயே செய்யணும்னு நெனப்பே.. ஆனா நேரமில்லைனா என்ன எழுப்ப வேண்டியது தானே.. நா உனக்கு உதவுவேன்ல.. அத விட்டுட்டு ஏன் இப்படி சிரமப்படுற.. "என்றவன் கேட்டதில் விழித்தாள்.
இது வரை அவளும் சமைப்பாள்.. டெலிவரி நேரத்தில் அவனும் சமைத்திருக்கிறான்.. ஆனால் ஒருவருக்கொருவர் இப்படி உதவுவதெல்லாம் புதிது.. இது வரை அதை பற்றிலும் யோசித்தது கூட இல்லை.. அதற்கு அவசியமும் வந்ததில்லை.. ஆனால் இன்று அவன் கூறியதில் அதற்கு மேல் யோசித்து கொண்டு நிற்க நேரமில்லாமல்.. சரி அசோக்.. அந்த கத்திரிக்காயை நறுக்கு.. நா வெங்காயம் உரிக்கிறேன்.. என அவன் பக்காய் கத்திரிக்காயை நகற்றி விட்டு தான் வேகமாய் வெங்காயம் உரிக்க ஆரம்பிக்க.. கத்திரிக்காவை கையில் எடுத்தவன்.. முட்டை விழிகள் வெளியே வந்து விடும் அளவிற்கு விழித்தான்.
உதவி செய்கிறேன் என கேட்டு விட்டான்.. ஆனால் எப்படி நறுக்க வேண்டும் என தெரியாதே..
விழித்து கொண்டு நிற்பவனை கண்டவள் என்னவென கேட்க.. இது.. என இரு கைகளில் வைத்திருந்த கத்திரிக்காயையும் கத்தியையும் மாறி மாறி அவன் பார்த்து நின்றதில்.. அவன் பாவனையில் சட்டென அவள் சிரித்ததில்.. விழித்தவன்.. உண்மையில் இமைக்க மறந்து தான் போனான்.
"சரி.. நானே சொல்றேன்..முதல்ல நேரா வெட்டி உள்ள நறுக்கு.. "முறையை சொல்லி குடுத்த பின் அப்படியே நறுக்கினான்.. அந்த சின்ன இடத்தில் இருவர் நிற்க சற்று சிரமம் தான் எனினும்.. அதையில்லாம் கவனிக்க நிலையில் இல்லை அவள். ஒவ்வொரு கணமும் வெங்காயம் நறுக்குவதோடு அடுப்பில் போட்டு வைத்திருந்த தாளிப்பிற்கு கடுகு போடவேண்டும்.. உளுந்து வேண்டும்.. என அவனை தாண்டி அவள் எடுக்கும் போதெல்லாம் பட்டும் படமாலுமாய் மூக்குரசி செல்லும் அவள் வாசனையும் பட்டும் படமலுமாய் கையில் படும் அவள் வாயில் சேலையும் இரும்பு தேகம் அவனை சிலிர்த்து கூச வைத்து ஏகந்தத்திற்கு இட்டு சென்றது.
இது தப்பு.. மனம் ஒரு பக்கம் உறுத்த.. சட்டென விழித்தவன் வேலையில் கவனமானாலும் இந்த நாள்.. இந்த நொடி அவன் வாழ்வின் பொக்கிஷம் தான்.
வேலையை சீக்கிரம் முடித்தாக வேண்டும்.. என வெங்காயத்தை அவள் பாதி உரித்திருக்க.. கண்களிலிருந்து நீர்.
அய்யோ ஜான்வி.. ஏன் அழற.. கத்திரிக்காவை முடித்த கையோடு எதிர்பாராத அவள் அழுகையில் பதறி கன்னம் பிடித்திருந்தான் அஷோக்..
எதிர்பாராத நிகழ்வு இருவருக்கும்.. ஹான்.. அதிர்ச்சியில் அவள் முட்டை விழி தன் விழி மோதிய பின் தான் தான் என்ன செய்திருக்கிறோம் என அறிந்தவனாய்..
ஐ ம்.. ஐ ம் சாரி.. சட்டென இரு அடி பின்னே எடுத்து வைத்து.. திடீர்னு அழுதியா.. அதான் என்னவோன்னு.. என்றவனால் இன்னும் அவளை ஏரிடுத்து பார்க்க முடியவில்லை.. பிடரியை அழுந்த கோதி நின்றான்.. ஏதோ தவறு செய்த பிள்ளை போல.
இட்ஸ் ஓகே அஷோக்.. ஒரு கணம் அதிர்ந்திருந்தலும் அடுத்த கணமே சாதாரணமாய் கூறி வேலையை தொடர்ந்தாள் ஜான்வி.
"வெங்காயம் நறுக்குனதுல எரிச்சல்.. அதுல தாம் கண்ணு கரிச்சுடுச்சு.. "அவள் கூறி முடிப்பதற்குள் அவள் கையிலிருந்த வெங்காயத்தை தான் வாங்கி கொண்டான் அகோக்..
அவள் புரியாமல் பார்க்க.. குக்கர் விசில் வருது பாரு.. நா கத்திரிக்கா நறுக்கிட்டேன்.. வேற எதுவும் நறுக்கணும் செய்யணுனா பாரு.. நா இதை பாத்துக்கிறேன்.. கூறிய படி அவன் தோலை உரிக்க ஆரம்பித்ததில்.. ஏனோ அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் நின்ற ஜானுவின் கண்கள் ரெண்டும் அவன் முகத்தில் நிலைத்தது..
எனக்கு கண்ணு கரிக்கும் தானே நீ பன்றேன்னு வாங்கிட்ட.. அவள் இறங்கிய குரலில் விழி உயர்த்தி அவள் முகம் கண்டவன்.. மீண்டும் வெங்காயத்தில் பார்வையை பதித்து கொண்டான்..
. உனக்கு தெரியுமா அஷோக்.. இத சொல்றது சரியா தப்பான்னு எனக்கு தெரியல.. ஆனா உன்கிட்ட சொல்லணும்னு தோணுது..
என்ன..வேலையில் கவனம் போல் கேட்டான். ஆனால் அவன் பார்க்காத நேரத்திலும் அவன் மூன்றாம் கண்ணின் பார்வையும் அவள் மீது தான் என்பது அவளுக்கு தெரியாதே..
நா எப்படி எல்லாம் ஆரி கூட இருக்கணும்னாய் நெனச்சேனோ இதெல்லாம் அப்பப்பட்ட விஷயங்கள்.. நாங்க மனசு ஒன்றி எனக்கு ஒன்னுனா அவனும்.. அவனுக்கு ஒன்னுனா நானும் ஓடி உதவி.. இப்படி எனக்கு லேட் ஆகும் போது அவன் எனக்காக எல்லாம் செஞ்சு.. அவள் சிலாகித்து அடுக்கிய ஒவ்வொரு வார்த்தைகளிலும் இங்கு ஒருவனின் முகம் இருகியதை அவள் கவனிக்கவில்லை..
ஆனா அவன் என்ன முழுசா உடைச்சுட்டான் அஷோக்.. சட்டென அவள் குரல் மாறியது.. அவளையே ஆராய்ச்சியாய் பார்த்தபடி நின்றான் அஷோக்.
" என்னவோ இப்போ எல்லாம் அவனை பாக்க பாக்க அவ்வளவு கோபமும் ஆத்திரமும் தான் வருது.. ஏன் மனசுல இருந்த ஆசைகளையும் காதலையும் நேத்தோட மொத்தமா கொன்னு புதய்ச்சுட்டான்.. எப்பவாவது அவன் மாறுவான் மாறுவான் என்று நினைத்த என்னை ஏமாத்திட்டான்..வேணும்ங்கரத முடிவு பண்ணா அதுக்கான பாதையை நம்ம உருவாக்கலாம்னு நீ சொன்னதை நானும் யோசிச்சு பாத்தே.."
"உண்மை தானே.. ஆனா அவன பாத்ததில இருந்து அவன் பேசுறதும் அவன் நடவடிக்கையும்.. இவன் என் ஆரியே இல்ல அசோக்.." குரல் தழுதழுத்தவள்.. நா முடிவு பண்ணிட்டேன்.. என நிறுத்தினாள்.
என்ன என்பது போல் அவன் பார்க்க "நா காதலிச்சவன் இவன் இல்லைங்கிறப்போ இனி அவனை பத்தி நா யோசிக்க கூட போறதில்ல.. இந்த நிமிஷம்.. இந்த நொடி நா அதிகமாக வெறுக்கிறதுனா அவனை தான்.. அவனை மட்டும் தான்.. " நேற்று அவன் கேட்ட கேள்வியில் கண்களில் வெறுப்பு சூடு படர.. கூறியவளை அவன் பார்க்க..
"இதெல்லாம் எதுக்கு உன்கிட்ட சொல்றேன்னு தானே பாக்குற.. என் மனச எனக்கு நானே தெளிவு படுத்திக்க.. இது இது மட்டும் தான் இப்போ என் மைண்ட்ல இருக்கு.. இனி அவன் பாப்பாவ பத்தி தெரிஞ்சுக்கிட்டாலும் சரி... இல்லைனாலும் சரி.. இனி அவன் சம்பந்தப்பட்ட எதுவும் என்ன பாதிக்காது.. பாதிக்கவும் கூடாது.. என்னையும் என் குழந்தையையும் இழிவு படுத்தின அவன் எனக்கு வேண்டாம்.. என் குழந்தைக்கும் வேண்டவே வேண்டாம்.. கண்கள் சிறுக்க கூறியவளிடம் உறுதி நிறைந்தது.
ஜான்வி..என அவன் கூற வருவதையும் கேட்காமல்.. தேங்க்ஸ் அஷோக்.. இதுல இருந்து என்ன வெளிய கொண்டு வந்தது நீ தான்.. எனக்கே என்ன அடையாளம் காட்டிருக்க.. இன்னும் நீ எனக்காக என்னெல்லாம் செய்யப் போறியோ "என அவன் உரித்த வெங்காயத்தை குக்கரில் சேர்த்து விட்டு கிருத்தியை எழுப்ப அடுக்களையிலிருந்து வெளியேறி விட.. சுருங்களான பார்வையோடு அவளை தொடர்ந்தவன்.. இல்ல ஜானு.. நீ இன்னும் தெளிவாகல.. உனக்கு இன்னும் உன் மனசு புரியல.. இப்போ கூட அவன் மேல இருக்கிற கோபத்துல தான் இப்படி எல்லாம் பேசுறியே தவிர்த்து இன்னும் உன் கண்ணுல அவனுக்காக இருக்கிற காதல என்னால உணர முடியுது.. கண்களை இறுகமூடி நிமிர்ந்தவன் வலியிலேயே அதிக வலி.. தன் காதலி கண்ணுல இன்னொருத்தனுக்கான காதல பாக்குறது.. உடைந்த நெஞ்சத்தோடு விட்டத்தை வெறித்தான்.
உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.. பெரிய சப்போர்ட்டிவா இருக்கும்.. ப்ளீஸ்..
கண்டிப்பா ரேட்டிங் கொடுத்துடுங்க..
கருத்துகள்
கருத்துரையிடுக