முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 31

 மையிருட்டின் மடியில்.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கால் கடுக்க நடந்து வந்திருந்தாலும் உடலில் அலுப்பு தான் தோன்றியதே தவிர்த்து மனதில் இருந்த பாரம் துளியும் இறங்கி இருக்கவில்லை.. 




மீண்டும் அதே வீடு.. அதே தனிமை..  நினைக்கும்போதே பாதம் வீட்டிற்கு வர நெஞ்சம் மறுத்தது.. எப்படி ஆயினும் வந்து தானே ஆக வேண்டும்.. சலிப்போடு உள்ளே வந்த ஆர்யன் சோபாவில் பொத்தென விழுந்தான்..




இத்தனை வருடங்கள் கழித்து தங்கை பேசியதில் எவ்வளவு மகிழ்ச்சியோ..  அதைவிட அதிகமான குழப்பமும் வருத்தமும் நெஞ்சினுள்..




" இன்னும் என் ஜானவ பத்தி உனக்கு தெரியல.. அம்மா சொன்னத நீ வேணும்னா நம்பலாம்.. என்கிட்ட அதெல்லாம் தூக்கிட்டு வராத " மிதாவின் இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுக்குள் ரீங்காரமிட்டன..



எது உண்மை எது பொய் என புரியாத இடத்தில் நின்றான்.. இப்போதே ஜானுவிடம் நேரில் சென்று எதனால் அன்று அப்படி கூறினாய்..  என கேட்டு விஷயத்தை அறிந்து கொள்ள உள்ளுக்குள் பரபரப்பு..




ஆவேசத்தோடு எழுந்தவனின் கண்கள் எதிரில் இருந்த கடிகாரத்தில் நிலைகுத்தியது.. மணி பன்னிரெண்டை தாண்டிக் கொண்டிருந்தது..




இந்த நேரத்தில் எங்கு சென்று அவளை பார்ப்பது.. அவள் வீடும் கூட தெரியாதே.. இதுவரை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என எதுவும் இல்லை.. அலுவலகத்தில் வைத்து அவளை பழி வாங்குவதே போதும் என இருந்தவனுக்கு இப்போது தன்னையே நினைத்து கோபம் கோபமாவு வந்தது..  தலையைப் பிடித்தான்..




இந்த கம்பெனிக்கு வந்த நாட்களில் இருந்து அவள் தன்னிடம் ஏதோ கூற வருவதும்..  தான் மறுத்து கண்டுகொள்ளாமல் விலகி செல்வதும் இப்போது மனதின் ஓரத்தில் குத்தூசியாய் குடைய ஆரம்பித்தது.




" ஆ.. ஆனா அவன் நல்லவனா அன்னைக்கு ஏன் அப்படி சொல்லிருக்கணும்.. இதற்கான பதில் அவள் மட்டுமே.. அவள் வாயை திறந்தால் மட்டுமே கிடைக்கும்.. " என புரிந்தவனுக்கு அந்த ஓர் இரவு பொழுதை நெட்டி தள்ளுவது பெரும் பாடானது..




மணி எப்பொழுது ஆறை தொடும் என விடிய விடிய விழித்துக் கொண்டு காவல் காத்தவன் சரியாய் மணி ஆறை தொட்ட கணத்தில் உடனடியாய் எழுந்து குளித்து கிளம்பி விட்டான் அலுவலகத்திற்கு..




நேற்று 10 நிமிடத்தை அரை மணி நேரமாய் உருட்டி வந்திருந்த கார் இப்போது இரண்டே நிமிடத்தில் ட்ராபிக் இல்லாத அந்த சாலையை கடந்து அலுவலக வாசலில் கீறிச்சுட்டு நின்றது..




வழக்கத்தை விட விரைவாகவே வந்திருந்தவனை செக்யூரிட்டி வித்தியாசமாய் பார்த்தாலும் வேகமாய் ஓடி வந்து கதவை திறந்து விட பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன் அடுத்த கணம் உள்ளே வேகமாய் ஓடிப் போனான்.




"ஜானு.. ஜானு.. "நேற்று போல் இன்றும் சீக்கிரமாய் வந்திருப்பாளா எதிர்பார்ப்பு அவன் விழிகளில்.. ஆனால் அவன் ஆர்வமான விழிகளுக்கு ஏமாற்றமே பதிலாய்..




" நேத்து மட்டும் சீக்கிரமா வந்தியேடி.. இன்னைக்கு ஏன் இவ்வளவு லேட் பண்ற.. " என்றவனுக்கு இதுவரை இல்லாத உணர்வாய் மனதில் தித்..திக்..




அவளை வலிக்க வலிக்க அடித்த காலங்களில் சர்வ சாதாரணமாய் அவளை ஏறிட்டவனால் இப்போது உண்மையிலேயே அன்று என்னதான் நடந்தது என கேட்க நெஞ்சில் திடம் இல்லை.. 




ஏனோ உள்ளிருந்த நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது..அடி வயிற்றில் பூகம்பமாய் ஏதோ ஒன்று உருவேடுத்தது. ஏதோ விடலை பையன் முதன்முதலாய் ஒரு பெண்ணிடம் தன் காதலை கூறப்போவது போல் நெஞ்சுக்குள் சடார்.. படார்.. 



யாரும் இல்லாத அந்த பெரிய ஹாலில் குறுக்கும் நெடுக்குமாய் வேக நடை போட்டான்.. அவளிடம் முதலில் எப்படி பேச்சை ஆரம்பிப்பது.. சாரி.. சொல்லி ஆரம்பிக்கலாமா.. தீவிர யோசனை.. 



எதுக்கு சாரி கேக்கணும்.. நீ தான் சொன்னது 50% தான் அவ உண்மைய சொன்னா தான் உண்மையிலேயே அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியும்.. 




அப்படினா.. நன்றி சொல்லிடுறேன்.. அவளால தானே மிதா என்கிட்ட பேசினா..  அதுக்கு தேங்க்ஸ் சொல்லி அன்னைக்கு என்ன விஷயம் நடந்ததுங்கிறத அவ கிட்ட கேட்கிறேன்.. நெஞ்சை தட்டி சமன் செய்து கொண்டான்..




கடந்து கொண்டிருந்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் யுகங்களாய் சென்று கொண்டிருக்க.. திடீரென கதவு திறக்கப்பட்டதும் அவன் விழிகள் பொங்கிய எதிர்பார்ப்போடு திரும்பின..




சார் உங்களுக்கு சாப்பாடு எதுவும் வாங்கிட்டு வரவா.. கேட்டபடி செக்யூரிட்டி நின்று இருந்தார்.. ஏமாற்றம் அடைந்த விழிகளோடு.. "இ.. இல்ல நீங்க போய் சாப்பிட்டு வாங்க.. நான் அப்புறமா பார்த்துக்கிறேன்.." என அவரை அனுப்பி வைத்தான்..



அவளை பார்த்துவிட நொடிக்கு நொடி துடித்துக் கொண்டிருந்தான் என தான் கூற வேண்டும்.. நேரம் ஒன்பதைக் கடக்க ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்.. 




கேபினில் வந்து அமர்ந்து கொண்டவனின் விழிகள் மட்டும் விழியிலேயே ஒட்டி நின்றது.. மணி ஒன்பது பத்தையும் கடந்தாயிற்று..  அலுவலகத்தில் அனைவரும் வந்துவிட்டனர்.. அவளை தவிர்த்து..



" அவ பிரண்டு கூட வந்துட்டா..  இன்னும் ஏன் இவ மட்டும் வராமல் இருக்கா.." எரிச்சலில் விழிகள் சுழிய தகித்த நெஞ்சத்தை தணிக்கும் பொருட்டு ஜன்னலை திறந்து முகத்தில் மோதிய காற்றில் லைத்தபடி அவன் நின்ற நேரத்தில் அவன் கண்கள் இடுங்கின.




நேற்று யாருடன் சென்றாளோ அவனுடனே திரும்பி வந்து இறங்கி கொண்டிருக்கிறாளே.. யார் இவன்.. எதுக்காக என் ஜானுவ பிக்கப் பண்ணி டிரா பண்ணுவதிலேயே குறியா இருக்கான்.. அவன் கண்கள் இடுங்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே.. இங்கு அசோக்கிடம் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள் ஜான்வி..



" நல்லவேளை அசோக்.. அரை மணி நேரம் பெர்மிஷன் போட்டு எனக்காக வந்த.. இப்ப பாரு.. பாப்பா ஸ்கூலுக்கு போய் மீட்டிங்கும் அட்டென்ட் பண்ணி சரியான நேரத்துக்கு ஆபீஸுக்கும் வந்துட்டேன்.. " அவள் புன்னகைக்க.. " இதுல என்ன இருக்கு நம்ம பாப்பாவுக்கு செய்யணும்னா நம்ம தானே செஞ்சாகணும்.. " கூறியவனிடம் நிமிடத்திற்கும் மேலாய் அவள் விழிகள் நிலைத்தன... 




என்ன.. அவன் புருவம் உயர்த்தியதில்  கண்களை படபடவென சிமிட்டி.. நன்றி பெருக்கோடு அவள் பார்க்க.. அடுத்து என்ன கூறப்போகிறாள் என அறிந்தவனாய்.. "எம்மா தாயே.. திரும்ப உன் புராணத்தை ஆரம்பிச்சிடாத.. அரை மணி நேரம்தான் பர்மிஷன் போட்டு இருக்கேன்.. "அவன் கூறிய தோரணையில் சட்டென சிரித்திருந்தாள்.. இங்கு பார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பற்றி கொண்டு வந்தது..




அவள் சிரிப்பை ஆழ்ந்து பார்த்து இதழுக்குள் புன்னகைத்து நின்றான் அசோக்.. " மேடம் பயங்கர ஹாப்பி மூடுல இருக்கீங்க போல.. சரி.. இப்போ போய்  வொர்க்ல கான்சன்ட்ரேட் பண்ணு.. ஞாபகம் இருக்கட்டும்..  இன்சென்டிவ் கூட வாங்குனா ட்ரீட்டு.. " சிறு பிள்ளைக்கு ஊக்கம் அளிப்பது போல் அவன் கூறிய வார்த்தைகளில் தானாக அவள் தலையாடியது.




நொடிக்கும் மேலாய் அவளை பார்த்து நின்றவன்.. "ஈவினிங் சீக்கிரமா வேலை முடிஞ்சதுன்னா வரேன்.." கூறியவனை வழக்கம்போல் கண்கள் மருக பார்த்தாள்..



இவனுக்கு மட்டும் எங்கிருந்து தன் மீதும் தன் குழந்தை மீதும் இப்படி ஒரு பாசம்..??



ம்ம்ம்.. தலையாட்டிஅவள் உள்ளே செல்ல.. அவள் கண்களில் இருந்து மறையும் வரை காத்திருந்தவன் பெருமூச்சு ஒன்றை விட்டு அங்கிருந்து கிளம்பினான்.




அவளை விட்டதோடு கிளம்பாமல் நின்று பேசி அவளை சிரிக்க வைத்து தானும் சிரித்து அவள் செல்லும் வரை பார்த்துக் கொண்டு நின்றவனை கண்டு அடி வயிறு பற்றிக் கொண்டு வந்தது ஜன்னலோரம் நின்ற சண்டாளனுக்கு..




" யார் இவன்.. எதுக்காக இவன் கூடவே வர்றா போறா.. இவனும் கூட ஏதோ உரிமையானவன் மாதிரி நின்னு பேசிட்டு இருக்கான்.. யார் இவன்.. " பல்லை கடித்தான்.




சரியாய் அந்நேரம் பார்த்து டீ கப் எடுக்க வேணாம் வந்த பியூனை நிறுத்தினான்.. 



"ஜான்வி வந்துட்டாங்களா.. "கேட்ட கேள்வியில் இன்று வந்ததுமே திட்ட ரெடியாகிவிட்டார் போல..  என எண்ணிய படி எஸ் சார்..  இப்பதான் அவங்க ஹஸ்பண்ட் டிராப் பண்ணிட்டு போறாரு.. என அவன் கூறிய வார்த்தையில் பித்து பிடித்தது போல் நின்றான் ஆரியன். ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை..




" ஹஸ்பண்டா?? அவனா?? அப்படின்னா.. ஜானுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா" உள்ளிருந்து பேரலை ஒன்று புயலாய் அடித்தது..




" பின்ன உனக்காக காத்திருப்பான்னு நினைச்சுகிட்டு இருந்தியோ.." உள்ளிருந்து எழுந்த கேள்வி குரலில் அவஸ்தையாய் வலி.



"ஜானு.. ஜானு.. அவ ஏன் ஜானு.. இல்ல இது பொய்.. பொய்ய்ய்.." கண்கள் சிவந்து போக ஆத்திரம் தாளாமல் மேடையில் இருந்து அனைத்து பொருள்களையும் வீசி எறிந்தான்.. அனைத்தும் கண்ணாபின்னமாய் சிதறி போனது..



அவள் இன்னொருவனின் மனையாள் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. இல்ல அப்படி எல்லாம் இருக்காது..  நா இங்க வந்ததுல இருந்து அவ ஏதோ ஒன்னு என்கிட்ட சொல்லணும்னு தானே வந்துகிட்டு இருந்தா.. ஒருவேளை உண்மையாவே கல்யாணம் முடிஞ்சுருந்தா அப்படி என்கிட்ட அந்த விஷயங்களை சொல்ல வேண்டிய அவசியம் என்ன.. "



" ஒருவேளை அவளுக்கு கல்யாணம் முடிஞ்சது என்கிற விஷயத்தை தான் சொல்ல வந்திருந்தா.. " உள்ளிருந்த சாத்தான் நேரம் பார்த்து குரல் கொடுக்க..




"இல்லை இல்லை..  அப்படி எல்லாம் இருக்காது.. அவளால என்ன தவிர்த்து வேறு யாரையும் மனசால கூட நினைச்சு பார்க்க முடியாது.." பிதற்றினான்.. 




"இப்படி எல்லாம் இப்ப பேசுறவன் நேத்து வரைக்கும் அவள என்ன எல்லாம் பார்த்து சொல்லி இருப்ப.. ஏன் நேத்து கூட காசு தரேன்னு கூட வர்றியான்னு கேட்டியே.. இன்னைக்கு என்ன இப்படி அந்தர் பல்டி.." செய்த தவறு கொலையாய் கொன்றது.. தன்னை விட்டால் வேறு யார் அவளுக்கு இருக்கிறார்கள் என்பது விஸ்வரூபமாய் எழுந்த ஆணவம் இப்போது அவளுக்கே ஒரு துணை உள்ளது என்பதில் அடங்கி பொசுங்கி பஸ்பமாய் போயிருந்தது..



தன் கையில் வைத்திருக்கும் பிடித்த பொம்மையை விளையாட்டாய் பிய்த்து அழுக்காகி.. வைத்திருக்க.. திடீரென அந்த பொம்மையை இன்னொருவன் சொந்தம் கொண்டாடி தேவதையாய் சீராட்டும் போது.. அது பொம்மை தனக்கு எவ்வளவு முக்கியம் என உணந்து வரும் தாங்க முடியாத தகிப்பு.. இப்போது அவனுள்ளும்..




ஆனால் அவள் ஒன்றும் பொம்மை இல்லையே..  உயிரும் உணர்ச்சியும் கொண்ட மனுஷி அல்லவா.. 


அய்யோ.. தப்பா சொல்லிட்டேன்.. அவ மேல இருக்கிற கோபத்தை காட்டுனவாவது இந்த பீலிங் எல்லாம் குறைஞ்சுரும்னு நினைச்சு என்ன நானே ஏமாத்திருக்கேன்.. ஆனா அந்த ராட்சசி நொடிக்கு நொடி அதிகமா என் மனசுல இறங்கி இப்படி ஆழமா சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துருக்கிறாளே.. 




அவளை முதன் முதலில் பார்த்ததுல இருந்து இப்போ திரும்ப பார்த்த வரைக்கும் சகா நேரமும் அவள் ஞாபகம் தானே.. ஆனா அதை வெளிப்படைய உணர விடாம இவ்வளவு நாள் அவ மேல இருக்கிற கோபம்  கட்டி போட்டுச்சு.. ஆனா எப்போ மிதா அவளை பத்தி ஆணித்தரமா அடிச்சு சொன்னாளோ... அதோட எப்ப நான் அவளை துன்புறுத்துறேன்னு தெரிஞ்சும் என் தங்கச்சி கூட என்னை சேர்க்கணும்னு நினைச்சாலும் அப்பவே அவள் மனச நான் புரிஞ்சுகிட்டேன்.. புரிஞ்சுகிட்டேன்.. அவ எனக்கு வேணும்.. வேணும்..  கண்ணீரில் கரைத்த கண்களை முகத்தை பொத்திக் கொண்டு தரையில் மண்டியிட்டு சரிந்தான்..



"இல்ல.. அவளுக்கு கல்யாணமும் ஆகல ஒன்னும் இல்ல.. அவ என்னைக்கும் எப்பவும் என் ஜானு தான்.. " அவன் தனக்கு தானே கூறி கொண்டிருக்க.. திடீரென கதவு தட்டப்பட்டது அவசரமாய் எழுந்தவன்.. கண்களை அழுந்த துடைத்து கொண்டான்..




உள்ளே வந்தவள் அவளே.. அவன் அலங்கோலமான அறையும் அவன் நின்றிருந்த கோலமும் ஏதோ தவறென புரிந்தாலும் .. எதையும் கருத்தில் கொள்ளாத நிமிர்ந்து அவன் கண்களோடு கண்ணாய் பார்த்தவன்.. கூப்பிட்டிங்களா சார்.. பியூன் சொன்னாரே..!" அவள் குரலில் எந்த உணர்வோ பதட்டமோ இல்லை.. ஆனால் அதுவே அவனை உயிர்வரை தாக்கியது..



தனக்கு ஒன்று என்றால் அவர் கண்களில் ரத்தம் அல்லவா வடியும்.. ஆனால் இப்பொழுது இத்தனை பொருள்கள் உடைந்து தானும் அதில் ஒன்றாய் நொறுங்கி நிற்கையிலும் அவளின் இந்த சர்வ சாதாரணமான பேச்சு அவனை வதைத்தது..



ஜா.. ஜானு.. குரல் ஏனோ தழுதழுத்தது..



சொல்லுங்க சார்.. எதுவும் புது பிராஜேக்ட் ஒர்க்கா.. என்ன ப்ராஜெக்ட்.. என்ன மாதிரி டிராயிங் பண்ணனும்.. என வேலை விஷயத்துடனே நிற்க.. அது.. அது.. உன்கிட்ட தேங்க்ஸ் சொல்லணும் அதுக்கு தான் கூப்பிட்டேன்.. என்றான் சற்று நளிந்த குரலில்..



" தேங்க்ஸ்சா..  எனக்கா..  எதுக்கு சார்.." அவள் வார்த்தையில் இருந்த சார் அவனை உறுத்தியது..



"ஜானு ப்ளீஸ்.. ஐ.. ஐம் ரியலி சாரி.. என்ன மன்னிச்சிடு எத்தனை வருஷம் கழிச்சு என் தங்கச்சி என்கிட்ட இவ்வளவு ஓபனா பேசியிருக்கானா அதுக்கு காரணம் நீ தான்.. அதுக்காக தான் இந்த தேங்க்ஸ் அண்ட் என்ன மன்னிச்சிடு.. ஏதோ தப்பா நெனச்சு உன்னை இவ்வளவு நாள் நான் தவறாக புரிஞ்சுருக்கேன்.. நேத்து மிதா சொன்னபோதுதான் எனக்கு ஓரளவு விஷயம் கிளியர் ஆச்சு.. அந்த விஷயத்தை தப்பா புரிஞ்சுகிட்டனால நானும் உன்கிட்ட ரொம்பவே தவறா நடந்துகிட்டேன்..  நேத்து நான் உன்கிட்ட பேசின வார்த்தைகள் எல்லாம் உன்னை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும்னு இப்ப புரிஞ்சுகிட்டேன்..  என்ன மன்னிச்சிடு ஜானு.. இதுவரைக்கும் எத்தனையோ முறை அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நீ ஆரம்பிச்சிருக்க..  ஆனா ஒரு முறை கூட நான் உன்னை சொல்ல விட்டதே கிடையாது.. இப்ப நீ சொல்றத கேட்க தயாரா இருக்கேன்.. தயவு செஞ்சு அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தான் சொல்லு.. தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்.. சொல்லு ஜானு.. அன்னைக்கு.. அன்னைக்கு நீ அப்படி ஒரு பொய் சொல்ல என்ன காரணம்.. " தன் தவறை உணர்ந்து அவன் பேசினாலும் கடைசி வார்த்தையில் அன்று அவள் கூறிய விஷயம் பொய் தான் என ஆணித்தரமாய் அடித்து அவன் கேட்ட கேள்விதனில் நிர்மலமாய் அவனைப் பார்த்தாள் ஜான்வி..




" சொல்லு ஜானு..  நீ என்ன சொன்னாலும் நம்புற மனநிலையில் தான் நான் இருக்கேன்.. அ.. அதோட.. ஹான் கேட்கணும்னு நினைச்சேன்.. யாரு அவன் எவனோ ஒருத்தன் டெய்லி உன்ன ஆஃபீஸில் இருந்து கூட்டிட்டு போறதும் கூட்டிட்டு வர்றதுமா இருக்கான்.. இதெல்லாம் கொஞ்சமும் நல்லால.. அவன் பார்வையும் பேச்சும்.. ச்சி.. எனக்கு என்னவோ அவன பார்த்தாலே இரிடேடிங்கா இருக்கு.. " என தலையை உலுக்கிக் கொண்டு அவள் அமைதியாய் நிற்பதில் தன் மன்னிப்பையும் நன்றியையும் ஏற்றுக் கொண்டு விட்டாள் என்ற மகிழ்ச்சியோடு அவன் பேசி சென்றதில்... சார்.. அவளின் அழுத்த குரல் அவனை நிறுத்தியது..




"இது ஆபீஸ் ஆபீஸ்ல ஆபீஸ் வேலைய மட்டும் பார்த்தால் போதும்னு நீங்கதானே சொன்னீங்க.. அதோட நா யார் கூட ஆபீஸ் வந்து இறங்கினேன்.. யார் கூட போகிறேன் என்கிறதெல்லாம் மேனேஜ்மென்ட்க்கு அப்பாற்பட்ட விஷயம்.. சாரி.. அது மேலிடம்னு உங்ககிட்டையோ இல்ல பணக்காரங்கள வளச்சி போடணும்னு சிம்பதி காட்டுற கேவலமான வேலையையோ செய்ய என்னைக்கும் எனக்கு விருப்பமிருந்ததில்லை.. " அன்று அவன் கூறிய அதே வார்த்தைகள் இன்று அவள் கூறியதில் சாட்டையில் ஆணி கட்டி அடித்தார் போல் நெஞ்சுக்குள் ரத்தத்தை பீறிட வைத்தது.




அவன் அதிர்ந்த பார்வையில் நேராய் நிமிர்ந்து அவனை நோக்கியவள்.. "உண்மைதான் இதுவரைக்கும் உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல வந்துகிட்டே இருந்தேன்.. ஆனா நீங்க கேக்குற மனநிலையில இல்ல.. ஆனா இப்போ நீங்க கேக்குற மனநிலையில இருக்கீங்க..  ஆனா அத சொல்ல முடியாத அளவுக்கு உங்க பேச்ச ஒவ்வொன்னும் என் மனசுல முள்ளா பதிஞ்சுடுச்சி... அதை மறந்துட்டு என்னால உங்க கிட்ட அந்த விஷயத்தை சொல்ல முடியாது.. சொல்லவும் தோணல..  இதுவரைக்கும் நீங்க கேட்க விருப்பப்படாதது இனிமேலும் உங்களுக்கு வேண்டாததாகவே இருக்கட்டும்.. இதை தான் கேட்க நீங்க வர சொல்லியிருந்தீங்கன்னா நான் கிளம்புறேன்.."  என அவன் வாயடைத்து நிற்பதையும் கருத்தில் கொள்ளாது வெளி செல்ல போனவள்.. நின்று திரும்பினாள்..




" அதோட இனி என் பர்சனல்ல நீங்க தலையிட மாட்டீங்கன்னு நம்புறேன்.. "  என பர்சனல் என்ற வார்த்தையை அழுத்தி.. வேக நடையோடு அவள் சென்று விட அவளிடம் இருந்து இப்படி ஒரு பதிலடியை எதிர்பார்க்கவில்லை.. தான் அழைத்தால் ஓடோடி வந்து விடுவாள்.. தன் விருப்பு வெறுப்பு மட்டுமே முக்கியம் என இது வரை மெத்தனமாய் இருந்த அவன் எண்ணத்தை.. செருக்கை மொத்தமாய் அந்த நொடி அழித்திருந்தாள் ஜான்வி.. 




கமெண்ட் பண்ணா இந்த பிஞ்சு நெஞ்சமும் கொஞ்சம் சந்தோஷப்படும்.. ப்ளீஸ் கமெண்ட் பண்ணுங்க..



ரேட்டிங் கூட இல்ல 😒😒😒



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...