ஜான்வி பேசி சென்றதில் ஆணி அடித்தாற் போல் அதே இடத்தில் உறைந்து நின்றான் ஆரியன். அவள் பேசி சென்ற வார்த்தைகள் யாவும் மனதில் அமிலமாய் இறங்கி வலி எடுத்தது..
தவறுதான்.. அவளை மீண்டும் பார்த்ததிலிருந்து தான் கொண்ட தவறான எண்ணத்தினால் அவளை வார்த்தைக்கு வார்த்தை குத்தி கிழித்தது தவறுதான்..
அவளை நொடிக்கு நொடி துடிக்க வைத்தது தவறுதான்..
ஆனால் அதற்காக இப்படி பழிவாங்க வேண்டுமா.. தான் வலிய சென்று பேசும்போது மன்னித்து ஏற்றுக் கொள்ளலாமே.. இப்படி மூன்றாம் மனிதன் போல் என் பர்சனல் எனக் கூறிவிட்டு கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஏன் செல்கிறாள் என் ஜானு.. அவன் நெஞ்சம் ஊமையாய் அழுதது.
"தெரியாம தப்பு பண்ணிட்டேன் டி.. உன்கிட்ட அப்படி அவதூரா பேசி இருக்க கூடாது.. ஆனா அதுக்காக என்ன விட்டு போயிடாத ஜானு.. எனக்கு நீ வேணும்.. நீ இல்லாத ஒவ்வொரு நிமிஷமும் அனலா இருக்கு.. ஐ நீட் யூ.. இத்தனை வருஷமா ஃபேமிலி சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டு நான் ஒதுங்கி இருந்ததற்கான ஒரே காரணம் நீ மட்டும் தான்.. ஆனாலும் எப்போ நீ எனக்குள்ள எவ்வளவு வந்தேன்னு தெரியல.. உன்னை நினைக்காத நாளே கிடையாது.. ஆனா அப்போல்லாம் அது வெறும் கோபம் வெறுப்புன்னு நினைச்சேன்.. ஆனா நேத்து மிதா சொன்ன பிறகு தான் உன்னை நினைக்காமல் என்னுடைய ஒரு நாள் பொழுது கூட முழுசா கழிஞ்சதில்லன்னு புரிஞ்சுக்கிட்டேன்.. எனக்கு.. நீ வேணும்.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ டீப்லி.. ஏதோ ஒரு தடவை முட்டாள்தனமா அறிவு கெட்டு போய் இப்படியெல்லாம் பண்ணிட்டேன்.. நான் பேசுனது தப்புதான்.. உன்ன புரிஞ்சுக்காம நடந்து கிட்டது தப்புதான்.. ஆனா அதுக்காக இப்படி முகத்தை திருப்பாத.. என்னால தாங்க முடியல.. "கண்களில் சிறு மினுமினுப்பு எட்டி பார்க்க நெஞ்சை அழுத்தி பிசைந்தான்..
" அது என்ன விஷயம்னு ஏண்டி சொல்ல மாட்டேங்குற.. நீயா சொல்ல வந்தபோ நான் கேக்கல.. ஆனா இப்போ நானே கேட்கிறேனே சொல்லலாம்ல டி.. தவறை உணர்ந்த மனுஷனை ஏன் இப்படி சித்திரவதை பண்ற.."
" அதுலயும் எவனோ ஒருத்தன உன் புருஷன்னு அந்த பியூன் சொல்றான்.. அவன் கூட இனி வராதன்னு நான் உரிமையா சொன்னதுக்கு என்னையவே முறைச்சுட்டு.. உன் பர்சனல்னு தனியா பிரிச்சு பேசிட்டு போறே.. என்ன நடக்குது ஜானு இங்க.. எனக்கு எதுவுமே புரியல மண்ட வெடிக்கிற மாதிரி இருக்கு.. "இரு கரங்களாலும் தலையை அழுந்த பிடித்துக் கொண்டான்..
" ஜானு.. எனக்கு நீ வேணும் டி.. இதுவரைக்கும் இல்லாத வாழ்க்கையை திகட்ட திகட்ட வாழ நீ வேணும்.. " இதழ் கடித்து பொங்கி நின்ற அழுகையை மூக்கை உறிஞ்சி கொண்டவன்.. அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க அடுத்த இரண்டு நிமிடங்களில் உள்ளே வந்திருந்தான் பியூன்..
சற்று நேரத்திற்கு முன் வரை பளபளவென மின்னிக் கொண்டிருந்த அறை இப்போது அனைத்து பொருட்களும் கீழே சிதறியும் உடைந்தும் கிடந்த நிலையில்.. சார்.. என அதிர்வாய் விழிக்க.. எல்லாத்தையும் கிளீன் பண்ணிடுங்க.. உத்தரவாய் கூறியவன் கட்சிப்பில் ஒரு முறை முகத்தை அழுந்த துடைத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினான்.
தன்னிடத்தில் வந்த அமர்ந்த ஜான்விக்கு மனம் இப்பொழுதுதான் சற்று நிம்மதியாய் இருப்பது போல் தோன்றியது.. இதுவரை அவன் பேசியது எல்லாம் காதில் வாங்கி மூளையில் ஏற்றி நாள் ஒரு நிமிடமும் பொழுது ஒரு வண்ணமுமாய் அழுது கொண்டிருந்த நிலையில்.. நேற்று அசோக் கொடுத்த நீண்ட உரையின் பலனாய் இன்று அவன் தான் திருந்தி விட்டதாய்.. கூறியதில்.. ஒரே நாளில் இவ்வளவு மாற்றம் என்ன.. என ஏற்க முடியாமல் தன் மனதில் இருந்ததை வெளிப்படையாய் கூறி வந்திருந்ததில் மனம் நிம்மதியில் பூத்தது..
" நேத்து வரைக்கும் காசுக்காக அலையுறவன்னு சொன்னவரால் ஒரே நாள்ல எப்படி மாற முடியும்.. " கேள்வி முளைத்தது..
" அதுல வேற நா என்ன சொன்னாலும் நம்புவேன்னு சொல்றாரு.. ஆனா அன்னைக்கு அந்த பொய்யை ஏன் சொன்னேன்னு கேட்கிறார்.. இன்னும் கூட நான் சொன்னது அவருக்கு பொய்யு தான்னு நினைக்கிறவரு எப்படி மாறுனதா ஆக முடியும்.. என்றகளின் கண்கள் கரித்துக் கொண்டு வர கண்களை இறுகமூடி கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்..
" நீ என்ன புரிஞ்சிக்கவே இல்ல ஆரி.. புரிஞ்சுக்கவும் வேண்டாம்.. "கண்சிமிட்டி வெளியே எட்டிப் பார்த்த கண்ணீரை உள்ளே நிமித்தி இழுத்துக் கொண்டவள்.. " "அசோக் கூட ஆபீஸ் வரதுக்கே இவ்வளவு கோபப்படுற நீ இத்தனை வருஷமா என்னையும் நம்ம குழந்தையையும் விட்டுட்டு எங்க போன.. நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட பல மடங்கு அசோக் எனக்கு முக்கியம்.. " நன்றி பெருகில் வார்த்தைகள் அழுத்தமாய் விழுந்தன.
வெளியே வந்த ஆரியனின் பார்வை தவிப்போடு ஜான்வியை தேடி அவளிடத்தில் ஒட்டி நின்றது..
சாதாரண நாட்களில் அவளை திட்டவென வலிய வலிய சென்ற இடத்திற்கு இப்போது மன்னிப்பு கேட்டு அவளை சமாதானம் செய்ய.. செல்ல கால்கள் தடுமாறியது ஏனோ...
தூரத்தில் நின்றாவது அவளை கண் குளிர காண வேண்டும் என்பது போல் உள்ளுக்குள் ஒரு உந்துதல்..
அவள் வேலையில் ஆழ்ந்து விட்டாள்.. இவள் அன்று நடந்ததை சொல்லுகிறாள் அல்லது இல்லை.. என்னவானாலும் சரி இனி அவளை விட்டு தன்னால் ஒரு கணமும் கூட வாழ முடியாது.. இதுவரை பட்ட தவிப்பும் கஷ்டமும் போதும்.. அந்த ஒரு நாள் ஒன்றும் தன் வாழ்வில் அத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப்போவதில்லை.. கஷ்டத்தை மட்டுமே கொடுத்த அந்த நாள் இல்லாமல் கூட போகட்டுமே.. அதனால் என்னவாகி விடப் போகிறது.. எப்போது மிதா கூறிய வார்த்தைகள் உண்மைதானோ என பாதியாய் எழுந்த சந்தேகம் அவள் ஆக்ரோஷ பேச்சில் உறுதியாகி போனதோ.. தவறானவளை நான் விரும்பவில்லை.. அவள் என் ஜானு.. என் ஜான்வி.. அறிந்த நொடி மனதில் அதுவரை இருந்த பாரம் விலகி சிறகாய் பறந்தது..
இதை அன்றே காது கொடுத்து கேட்டிருந்தால் இத்தனை வருட பிரிவு வேண்டி இருக்காது.. கண்களையும் சிமிட்ட மறந்து அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான்..
உள்ளே சுத்தம் செய்து கைகளில் உடைந்த பொருட்களோடு வெளியே வந்தவன் எதிர்பாராத விதமாய் முன்னே நின்ற ஆரியனை இடித்து விட சட்டென கேட்ட சத்தத்தில் அனைவரும் நிமிர்ந்து பார்க்க.. கையில் இருந்த உடைந்த கண்ணாடி பூச்செண்டை கீழே விட்டு மிரண்டு நின்றான்.. பியூன்..
"அய்யோ. சும்மாவே இந்த மனுஷன் வள்ளு வல்லுன்னு விழுவாரே.. இப்போ இவர் மேலேயே மோதிட்டான் இந்த பியூன்.. இப்போ கதியாக்கப் போறாரோ.. "திவி கூறி முடிக்கவில்லை..
அவனே குனிந்து கீழே சிதறி கிடந்த கண்ணாடி பொருட்களை எடுத்து அந்த பியூன் கையில் வைத்திருக்க அவளோடு அங்கிருந்து அனைவரின் விழிகளும் விரிந்தன..
" என்ன ஆச்சரியம். திட்டுவார்னு பார்த்தா இவரே எடுத்து கொடுத்து உதவி பண்றாரு.. திவி நடந்த அதிசயத்தில் வாயில் கை வைக்க.. அவன் குறுகுறுத்த பார்வை நிமிர்ந்த ஒரு கணத்திலும் தன்மீது குறுகுறுப்பாய் படிந்திருப்பதை உணர்ந்தவளாய் ஜான்வி கணினிக்குள் தலையை விட்டுக் கொண்டாள்..
எதுக்கு இப்படி பார்க்கிறான்..?? ஒரே நாளில் மாறிவிட்டேன் என கூறியவனே அவ்வளவு எளிதாய் நம்பவும் முடியவில்லை... ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை..
பார்த்துப் போ என்ற படி அதே சுவற்றில் சாய்ந்து வாகாய் அவளை பார்க்கும் வண்ணம் அவன் நின்று கொள்ள.. என்னவாம் இவருக்கு இப்போ.. எதுக்கு இங்க வந்து நின்னு இப்படி பார்த்துக்கிட்டு இருக்காரு.. நிமிர்ந்து பார்க்காமலும் அவன் ஊசி பார்வை தன்னை துளைத்ததை அறிந்து உள்ளுக்குள் அவள் கடுக்க.. மிஸ்.. ஜான்வி.. அந்த மிஸ்ஸில் அழுத்தம் கொடுத்து அழைத்தது அவன் குரல்.
விழியை மட்டும் உயர்த்தி அவள் நிமிர்ந்து பார்க்க.. அந்த அஸ்ட்ரலேசியா பைல் எடுத்துக்கிட்டு என் கேபினுக்கு வாங்க.. என்றவன் குறும்பு பார்வையோடு கூறி அறைக்குள் சென்றுவிட என்னதான் ஆச்சு இவனுக்கு.. ஏன் இன்னைக்கு ஒரு மாதிரியாவே நடந்துக்கிறான்.. என மனதிற்குள் எண்ணிய படி அவன் கேட்ட பைலை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.
" மே ஐ கம் இன் " கேட்டு உள்ளிருந்து எந்த பதிலும் வராததில் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைய.. உள்ளேயும் யாரும் இல்லை.. இப்பதானே உள்ளே வந்தான். அதுக்குள்ள எங்க போனான்? என விழிகளை சுற்றி அலைபாய விட.. திடீரென பின்னிருந்து உருவம் ஒன்று தன்னை அனைத்துதோடு தன் இடையோடு கட்டி கழுத்து வளைவில் உன் முகம் புதைத்ததில்.. அவன் யாரென கண்டு.. சட்டென பெண்மை உயிர்த்தெழ.. ச்சி.. அவனிடமிருந்து தன்னிச்சையாக விலகி உதறி நின்றிருந்தாள்.. மூச்சுகள் மேலும் கீழுமாய் வேகம் எடுத்தன..
"ஜானு.. நா.." என்றவனுக்கு பேச்சு வரவில்லை.. தன் காதலை செயலில் காட்டினால் தன்னை அவள் ஏற்றுக் கொள்ளக்கூடும் என நம்பிக்கையில் இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்க.. இப்போது அற்பமாய் அவள் பார்க்கும் பார்வையில் உள்வரை துடித்து போனான்..
அவன் முடிக்காத வார்த்தையில்.. "நீ.. நீங்க என்ன நெனச்சிங்க.. நேத்து கேட்ட மாதிரி நான் காசுக்காக வரலைங்கவும் ஆபீஸ்லயே வச்சு இவ்வளவு கேவலமா நடக்க நினைச்சுட்டீங்களா.. இல்ல எவ்வளவு தப்பா நடந்துக்கிட்டாலும் காசு கண்ணுல காட்டினா வேசியா கைல வாங்கிட்டு போயிடுவானு நினைத்து விட்டீர்களா.. "அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கடியாய் அவன் நெஞ்சில் விழுந்தது..
"ஜானு ப்ளீஸ்.. இப்படி எல்லாம் பேசாத.." அவன் உடைந்த குரலையும் அவள் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை..
" இதெல்லாம் நீங்க சொன்னது தானே.. என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க.. வேலைன்னு சொல்லி ரூமுக்குள்ள கூப்பிட்டு இப்படி ஒரு காரியத்தை பண்றீங்கண்ணா என்ன அர்த்தம்..?? அப்போ அப்படி" அவள் பேசி முடிப்பதற்கு பாய்ந்து கரத்தால் அவள் வாயை பொத்தினான்..
" ஜானு ப்ளீஸ் உன் வாயிலிருந்து அந்த வார்த்தைகளை சொல்லாத.. இதெல்லாம் அபத்தம்னு உனக்கே தெரியும்.. நான் ஏன் உன்னை கட்டிப்புடிச்சேன்னும் தெரியும்.. பிகாஸ் ஐ லவ் யூ..குரல் கமர அவன் கூறிய வார்த்தையினில்.. " ஹாஹா.. " அந்த இடமே அதிரும் அளவிற்கு சிரித்தாள் கண் என்னவோ கலங்கி தான் நின்றது..
" நீங்க.. நீங்க என்ன விரும்புறீங்களா.. இது என்ன ஒரு நாள் மாயம்.. ஏன் சார்.. நேத்து வரைக்கும் காசு தரேன்.. படுக்கைக்குவா கூப்பிட்டவள.. இன்னைக்கு இப்படி விரும்பறேன்னு எப்படி சொல்றீங்க.. இதுல உங்க அம்மாகிட்ட கல்யாணத்துக்கு வேற ஓகே சொல்லி இருக்கீங்க.. இந்த லட்சணத்துல என்ன காதலிக்கிறேன்னு வேற புதுசா வந்து நிக்கிறீங்க.. " தன் கல்யாண செய்தியை அவள் ஞாபகப்படுத்தியதில் அவன் முகம் இறுகியது..
"ஜா.. ஜானு.. அது ஏதோ உன்ன கோபப்படுத்துறதுக்காக அம்மா கிட்ட அப்படி சொன்னேன்.."அவன் கூறியதில் அவள் சிரிப்பு அதிகமானது..
"கோபப்படுத்தவா.. உங்களுக்கு கல்யாணம்னா நான் ஏன் சார் கோபப்பட போறேன்.. அதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு.." அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டை அடியாய்..
" ஜானு எனக்கு வலிக்கனும்னே இப்படி பேசுற.." விட்டால் கண்களில் இருக்கும் நீர் கொப்பளித்து வெளிவந்து விடும் நிலையில் நின்றான்.
" கண்டிப்பா இல்ல.. நிதர்சனத்தை பேசுறேன்.. இத்தனை வருஷமா உங்களை ஒரு தடவையாவது பார்த்துட மாட்டோமா.. என் மனசுல இருக்குற விஷயங்கள் எல்லாத்தையும் உங்ககிட்ட கொட்டிற மாட்டோமானு எவ்வளவு காத்திருந்தேன் தெரியுமா.. ஆனா நீங்க திரும்ப வந்த நொடியில் இருந்து ஒவ்வொரு நிமிஷமும் வார்த்தையால குத்தி கிழிச்சு கடைசில என்ன உயிரோட கொன்னே போட்டீங்க.. இப்போ நிற்கிறது உணர்வுகளை தொலைச்ச சாதாரண ஜடம்."
"ஜானுஉஉஉ.."
" வேண்டாம்.. " அவன் பதறலில் கை நீட்டி தடுத்தாள்.. " எப்போ பணத்துக்காக என் கூட வான்னு நீங்க கூப்பிட்டீங்களோ, அப்பவே முழுசா செத்துட்டேன்.. ஏன் சாகலாம்னு போயிட்டேன்.. அந்த நேரம் மட்டும் அவன் வராமல் இருந்திருந்தால் இந்த நேரம் என் பிணமும் கடலோரமா ஒதுங்கி இருக்கும்.." அவள் கூறியதில் யார் எவன் என கேள்வி எழுந்தாலும் கூறிய விஷயத்தில் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்தான்... இதை தான் எதிர்பார்க்கவில்லையே.. அப்படியானால் எதற்காக தான் நேற்று வேகமாய் வெளியே ஓடினாளா.. ஐயோ கடவுளே என்ன ஒரு காரியம் செய்ய பார்த்து விட்டேன்??
எவ்வளவு பணம் வேண்டும் என யோசிக்க செல்வதாக எண்ணினேனே.. குட்டு மேல் குட்டு விழுந்ததில் வலி தாங்க முடியாமல் கால்கள் வேரோடி போனது.
"ஹ்ம்ம்.. அப்பவே என் மனசுல ஒட்டிக்கிட்டு இருந்த கொஞ்சம் நெஞ்சம் காதலும் போய்டுச்சு.. இனி நானே நினைச்சாலும் உங்களை ஏத்துக்க முடியாது.. தயவு செஞ்சு இனி எந்த உரிமையையும் எடுத்துக்கிட்டு இப்படி பண்ணாதீங்க.. என் வாழ்க்கைக்குள்ளேயும் திரும்பி வரணும்னு நினைக்காதீங்க.. உங்கள பார்க்கும்போதெல்லாம் இத்தனை வருஷம் எல்லாம் நான் பட்ட வலிகளை விட.. இந்த சில நாட்களாக நீங்கள் கொடுத்த காயம் தான் ஞாபகம் வருது.. தயவுசெஞ்சு என்ன விட்டுடுங்க சார்.. நான் இங்க வேல பாக்குறதுக்காக மட்டும் தான் வரேன்.. நீங்க நினைக்கிற மாதிரி எந்த நோக்கமும் எனக்கு கிடையாது.. "
அடிமேல் அடி வாங்கியதில் பேச வார்த்தைகள் எழாமல் அவளையே வெறித்து பார்த்து நின்றான்.." தயவு செஞ்சு எக்காரணம் கொண்டும் இனி என் வாழ்க்கைக்குள்ள வந்துடாதீங்க.. " என்றவள் தன் கையில் கொண்டு வந்திருந்த ஃபயலே அவன் டேபிளில் வைத்து விட்டு வேகமாய் அங்கிருந்து சென்று விட.. தன் காதலை உணர்ந்த நேரத்திலேயே தான் செய்த காரியத்தினால் அது கருகிப்போனதில்.. தாங்க மாட்டாமல் தரையில் மண்டியிட்டு சரிந்தான் ஆரியன்..
எப்படி இருக்குனு கமெண்ட்ல உங்களுடைய கருத்துக்களை சொன்னால் எனக்கும் பெரிய சப்போர்ட்டிவா இருக்கும்.. ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க..
ரேட்டிங்காவது கொடுக்கலாமே...
கருத்துகள்
கருத்துரையிடுக