முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 33

 இதுவரையில் கொடுக்காய் கொட்டிக் கொண்டிருந்தவன் இப்போது திடீரென தான் மாறிவிட்டதாய் கூறிய மாற்றத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. அதே சமயம் நம்பவும் முடியவில்லை.. 



"நேத்து வரைக்கும் காசு தரேன் படுக்கைக்கு வான்னு அவ்வளவு கொச்சையா கூப்பிட்டவன் இன்னைக்கு ஏன் திடீர்னு இப்படி பேசுறான்.. ஏதோ எத்தனை வருஷம் உருகி உருகி காதலிச்ச மாதிரி.." காதலிச்ச என்ற வார்த்தையும் கூட இப்போது அவளுக்கு வேப்பங்காய் கசந்தது..



" எப்படி ஒரே நாள்ல இவ்வளவு மாற்றம்..  ஒருவேளை நேத்து நான் சொன்னதுக்காக மிதா அவன்கிட்ட பேசினவ நான் சொன்னதையும் மீறி என்ன பத்தி அவன் கிட்ட சொல்லி இருப்பாளா..  ஆனா அத புரிஞ்சிக்கிற அளவுக்கு அவன் இருந்தானா.. "அடுத்த கேள்வி..



காலையில இருந்துதான் வந்தனை பார்க்கும் விதமும் பேசும் வார்த்தைகளும் ஏனோ அவள் மனதோடு ஒட்டவில்லை.. இதுவரை அவன் கடைக்கண் பார்வை தன் மீது பட்டிராதா என ஏங்காத காலம் கிடையாது.. ஆனால் இப்போது அதை ஏற்கும் நிலையில் இல்லை அவள்..




"அய்யோ.. ஏன் இவன் என்ன இவ்வளவு சித்திரவதை பண்றான்.. " அவஸ்தையாய் விட்டத்தை வெறித்தாள்.. அவன் விட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் மனதில் அமலத்தை வாரி இறைத்து கொண்டு இருந்தது..





"அ.. அதோட அவன் என்ன கட்டிப் பிடிச்சதும் ஏன் எனக்கு அவ்வளவு கோபம்.. இந்த எட்டு வருட காலங்களில் அவனோடு கனவிலும் வாழ்ந்தேனே.. என் ஆசைகளை எல்லாம் தெவிட்ட தெவிட்ட காட்டினேனே.. ஆனால் இப்பொழுது நிதர்சனம் என வருகையில் என் மனம் அதை மறுப்பது ஏன்..?? " தனக்கே தான் புதிதாய் தெரிந்தாள்.




இன்னும் அவன் கரம் பட்ட இடம் எங்கும் குறுகுறுத்து கொண்டிருந்தது.. அதற்கு மேல் தாள முடியாமல் எழுந்து விட்டவள் அவசரமாய் பாத்ரூமிற்குள் நுழைந்து அவன் கைப்பட்ட இடம் எங்கும் கட்சிப்பை நனைத்து அழுத துடைத்து எடுத்தாள்.. தான் இப்படி செய்வதெல்லாம் தனக்கே புதிதாய் தெரிந்தாலும் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே.. ஒருவேளை இத்தனை நாளா அவன் பேசின பேச்சால் என்னால் அவனை ஏத்துக்க முடியலையா..??



குறைந்தபட்சம் குழந்தையை பற்றி கேட்கும் போது சொல்லி இருக்கலாமோ..?? அடிமனம் நேரம் கடந்து பரிந்து கொண்டு வந்தது அவனுக்கு..



"சொல்லியிருந்தா மட்டும்..  சொல்லி இருந்தா மட்டும் உடனடியா என் குழந்தையான்னு நெஞ்சோடு தூக்கி வச்சு அணைச்சுப்பானா.. "என்றவளுக்கு அந்த நிமிடங்களில் அசோக் கண் முன் தோன்றாமல் இல்லை..



கண்சிமிட்டி தன்னிலை வந்தாள்.. "இவ்வளவு நாளா என்னை மட்டும் அவதூறா அசிங்கமா பேசி உடைத்தவன் நான் அதை சொன்னா என் பிள்ளையையும் அப்படி தப்பா பேச மாட்டான்னு என்ன நிச்சயம்.. அவன் உண்மையிலேயே என்ன நம்புறவனா இருந்தா.. உண்மையிலேயே அவன் மாறி இருந்தா..  ஏன் அன்னைக்கு பொய் சொன்னேன்னு கேட்டிருக்க மாட்டான்.. அப்படின்னா அவன் மனசுல இன்னும் நான் சொன்னது பொய்யா மட்டும் தான் இருக்கு.. அப்படி இருக்கிற பட்சத்துல அவன் கிட்ட எந்த உண்மையையும் சொல்ல நான் தயாராக இல்லை.. 




" அவன் பேசுறத காதலிச்ச பாவத்துக்காக நான் ஏத்துப்பேன்..  ஆனா என் பொண்ணு.. அவள பத்தி யாரும் ஒரு வார்த்தை கூட தப்பா சொல்லிட்டா என்னால தாங்க முடியாது.. அது அவ பெத்தவனா இருந்தாலும் சரி.. "தன் முன் இருந்த பெரிய கண்ணாடியில் அழுத்தமாய் கூறி ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை நிதானப்படுத்தி வெளி வந்தாள்.





காலையில இருந்து அவன் நடவடிக்கை எவ்வளவு புதிதாக இருக்கிறதோ அதே அளவு இவளிடமும் நிறைய மாற்றம் தென்படுவதை கண்டு கொண்டுதான் இருக்கிறாள் திவி.. 



காலையில இருந்து அவனிடம் சுடு சொல் இல்லை.. அதே நேரம் அவளை பார்வையால் துகில் உரித்து கொண்டிருக்கிறான்.. அதே நேரம் இவ்வளவு நாளா பணிந்த வழிகளோடு இருப்பவள் இன்று நெருப்பு கோழியாய் அவன் இருக்கும் இடமும் திரும்ப மறுக்கிறாள்.. ஏன்..??



அவன் அழைத்து அறைக்குள் சென்றாலும் யோசனையோடு வருவதும்.. பாத்ரூமிற்க்குள்ளிருந்து உடலை தேய்த்த படியே வெளிவருவதையும் கண்டவளால் அதற்கு மேல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை..



நேற்று இவளுக்கு போன் செய்தவள் ஆரியனை அடையாளம் கண்டு பேசிய போதே இருவருக்கும் ஏற்கனவே பழக்கமா.. என இவளிடமே இவனைப் பற்றி தவறாய் கூறியிருக்கிறேனே.. ஒருவேளை அவனிடம் கூறிவிட்டால் தன் வேலை?? என வாயடைத்து போனவள்.. அதிலிருந்து வாயையே திறக்கவில்லை.. 




ஆனால் தோழி ஏதோ சங்கடத்தில் இருக்கும் இப்போதும் எனக்கு என்ன வந்தது என்பது போல் இருக்க மாட்டாமல்..  குறுகிய காலமானாலும் நெருங்கிய அவளுடனான பழக்கத்தால்.. தன் அருகே வந்து அமர்ந்தவளை வித்தியாசமாய் பார்க்க.. 



"என்ன ஆச்சு..  ஏன் அப்படி பாக்குற.."என சிஸ்டத்தின் முன் நேராய் அமர்ந்தபடி ஜான்வி கேட்டதும்.."கேன்டீன் போகலாமா.." திவியின் கேள்வியில் அவள் விழிகள் விரிந்தன..



" வொர்கிங் டைம்லையா.."



" அதனால என்ன..?? ஒரு பத்து நிமிஷம் போயிட்டு வந்துடலாம்.. வர்றியா.." அவள் கேட்டதிலேயே ஏதோ பேச முற்படுகிறாள் எனப் புரிய இப்போது தான் இருக்கும் மனநிலைக்கு வேலையிலும் கவனம் செலுத்த முடியாது என அறிந்தவள் போகலாம் என தலை அசைத்து எழுந்து விட்டாள்..





கார்டன் ஏரியாவில் அந்த ஆபீஸ் கேண்டினில் அமர்ந்திருந்தனர்.. இருவரும் ஆளுக்கு ஒரு ஸ்நாக்ஸை கூறிய பின் ஜான்வி மௌனமாய் அமர்ந்திருக்க.. "அப்படின்னா உனக்கும் ஆரியன் சாருக்கும் ஏற்கனவே பழக்கம்.. அப்படி தானே.. " நேரடியா விஷயத்திற்கு வந்திருந்தாள் திவி..





நேற்று மிதா பேசிய போதே அவள் ஆச்சரியத்தில் விழித்ததை தான் ஜான்வி பார்த்து இருந்தாள.. ம்ம்ம்.. என்றாள் மௌனமாய் இதழ் கடித்து.




" அப்புறம் ஏன் நீங்க உங்களை வெளிப்படுத்திக்கவே இல்ல.. அதுலயும் ஆரியன் சார் உன்ன பார்க்கும்போதெல்லாம் அவ்வளவு கோபப்படுறதும்.. நீ அமைதியா போறதும்.. நா கூட உனக்காக எவ்வளவு நாள் வருத்தப்பட்டிருக்கேன்.. என்கிட்ட கூட உனக்கு அவர தெரியும்னு சொல்லலையே.. அவளிடம் சிறு வருத்தம் எட்டி பார்த்தது.





"சொல்லி என்ன பண்றது திவி.. அவரே அக்சப்ட் பண்ணாதப்போ அவர எனக்கு தெரியும்னு சொல்லி.. அதன் மூலமா ஆதாயம் தேடிக்க எனக்கும் விருப்பமில்ல திவி.. மத்தபடி சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்லை.. '' அவள் கூறியதில்.. "அப்படி இவ்வளவு அவர் கோபமா இருக்க என்ன காரணம்.. பாக்கும் ஒவ்வொரு வேலையும் உன்ன இப்படி காயப்படுத்துறாரே ஜான்வி.. ஏன்.." கேட்டு அவள் அமைதியாய் இருந்ததில் "உனக்கு விருப்பம் இல்லைன்னா சொல்ல வேண்டாம்.. ஆனா நீ கஷ்டப்படுறது என்னால பாக்க முடியல.. அதான் கேட்டேன்.. " என்றாள் வருத்தமாய்..



"ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. அவர்.. என ஒரு கணம் தயங்கியவள் ஆழ்ந்த மூச்சு ஒன்றை இழுத்து விட்டு.."நேத்து பேசினாளே மிதா.. அவ என் உயிர் தோழி.. இவர் அவளோட கூட பிறந்த அண்ணன்.." கூறியதும் அவள் விழிகள் இரண்டும் விரிந்தன..




" முதன் முதலில் 12 ஆம் வகுப்பில் அவனை தோழியின் அண்ணனாய் கண்டதிலிருந்து அவன் தனக்கு செய்த ஒவ்வொரு உதவிகளிலும்  தங்கள் நட்பு வளர்ந்தது வரை கூறியவளால் ஏனோ அவனை நான் காதலித்தேன்.. அவனுக்கும் எனக்குமான குழந்தை தான் இப்பொழுது அசோக்கிடம் வளர்கிறது என வெளிப்படையாய் எனக் கூற முடியவில்லை.. நட்பு வரை கூறி மௌனமாய் தலை தாழ்ந்தாள்..  




" அப்படின்னா ரெண்டு பேரும் முதல்ல நல்ல பிரண்ட்ஸா தான் இருந்திருக்கீங்க அடுத்து தான் ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்காகி இவ்வளவு சண்டை..?? யோசனையாய் கேட்டாள் திவி.. " இதை சரி செய்ய நீயாவது முற்பட்டு இருக்கலாமே ஜான்வி.. "



" எத்தனையோ முறை அவர்கிட்ட பேச போனேன்.. ஆனா வார்த்தையால குத்தி கிழிச்சாரு.. இப்போ என்னால சுத்தமா அவர்கிட்ட முகம் கொடுத்து கூட பேச முடியல.. " அவள் குரல் கரகரத்தது..




ஆமா.. என தலை உருட்டியவள்.. " ஆனா இன்னைக்கு ஏன் சார் ரொம்ப மாறி தெரியுறாரு.. காலையில இருந்து கோபம் இல்ல.. குத்தல் பேச்சு இல்ல.. ஏன் உன்கிட்ட கூட கோபப்படல.. ஆனா தள்ளி நின்னு உன்னையே தான் அவர் பார்த்துக்கிட்டு இருக்காரு.." அவள் கூறியதில் இவள் இவ்வளவு கவனித்திருக்கிறாளா.. அதிர்ச்சியாய் அவள் பார்க்க.." ஒருவேள    உன்கிட்ட ஏதாவது பேச நெனைக்கிறாரோ.." அவள் கேட்டதில் விரக்தி சிரிப்பு இவள் இதழினில் பரவியது..




" நெனச்சி.. இது வரை அவர் பேசாததா.. வந்ததுல இருந்து வார்த்தைகளாள துடிக்க துடிக்க கொன்னுட்டார்..    நிறைய உடைஞ்சிட்டேன்..  இன்னும் அவர்கிட்ட உடைய எனக்கு தெம்பு இல்ல.. " அவள் குரல் கரகரத்ததில் ஆசுவாசப்படுத்தும் பொருட்டு அவள் கரம் மேல் கரம் வைத்து அழுத்தினால் திவி.




" ஒருமுறை வாய்ப்பு கொடுக்கிறது தப்பில்லையே ஜான்வி.. அவன் பேச்சு உன்னை இந்தளவு பாதிக்குதுனா இன்னும் அவர் மேல நீ பாசமா இருக்கேன்னு தானே அர்த்தம்.. ஒரு தடவ மனசு விட்டு பேசுங்களேன்... மனசுல இருக்குற கழிவு எல்லாம் வெளியே வந்துடும்.. பிரச்சனையும் சரியாகிடும்.. " அவள் கூறியதில்.. ப்ச்.. சலிப்பாய் மறுபக்கம் திரும்பிக்கொண்டவளின் பார்வை வெறித்தது.




அவன் தன் வாழ்வில் வரவேண்டும் என தான் எண்ணாத நாட்கள் இல்லை.. வேண்டாத பொழுதில்லை.. ஆனால் இப்பொழுது  அவன் திரும்பி வந்திருக்கவே வேண்டாம் என தான் தோன்றுகிறது.. ஏன்?? இப்போது அவன் கரம் தன் மீது பட்டதற்கே போய் கழுவி விட்டு வருகிறேனே.. இன்னும் அவன் கரம் பட்ட தேகம் எங்கும் எரிந்தது..



அமைதியாய் இருப்பவளை ஆழ்ந்து பார்த்தாள் திவி.. நான் ஒன்னு கேட்கவா.. இந்த விஷயம் அசோக்கிற்கு தெரியுமா.. இத்தன வருஷம் கழிச்சு அவர் திரும்ப வந்ததும் நீ அவர் கீழ தான் ஒர்க் பண்றங்கிறதும் அசோக்கிற்கு தெரியுமா..??



" தெரியும்.. ஆரம்பத்துல இருந்து இருந்தது.. இருக்கிறது.. அவன்தானே..  அவனுக்கு எல்லாமே தெரியும்.. "



" அப்படின்னா என்ன சொன்னாரு.. " விழிகளில் ஆர்வம் மின்ன கேட்டாள்.. ஏனோ அசோக்கை பற்றி கேள்விப்படும் சிறு சிறு விஷயங்களும் கூட அவளை அழகான கனவு உலகத்திற்கு இட்டு செல்கிறது..




அதெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை ஜான்வி.. " அவன் என்ன சொல்லப் போறான்.. உன் மனசு கிட்ட கேளு.. உன் மனசு என்ன தோணுதோ செய்ன்னு சொல்கிறான்.. உறுதியாக பேசு..  பேசாதன்னு எதுவுமே சொல்ல மாட்டேங்குறான்.. " சலிப்பாய் அவள் கூறிட இதுவும் கூட தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல் தான் கேட்டுக் கொண்டிருந்தாள் திவி..




"ஹௌ ஜென்டில்மேன்.. தன் வைஃப்பே ஆனாலும் பர்சனல் ஸ்பேஸ் கொடுத்து ஒரு அடி விலகி நிற்கிறார்.." மனதிற்குள் சிலாகித்தாள்.




" அவர் சொல்றது தான் சரி.. " தலையை ஆட்டினாள் திவி.." அவர் உனக்கு யோசிக்க நிறைய ஸ்பேஸ் தராரு..  அத சரியா யோசிச்சேன்னா உனக்கே பதில் கிடைத்துவிடும்.. எத்தனை பேருக்கு இப்படி அண்டர் ஸ்டாண்டிங் ஆன ஹஸ்பண்ட் கிடைப்பாரு.. உனக்கு கிடைச்சுருக்காரு..!" அவனை பற்றிய புகழ்ச்சியை கேட்கும் நிலையில் இல்லை அவள்..




ஆனால் அந்த ஹஸ்பண்ட் ஏற்ற வார்த்தை அவளை சற்று உறுத்தியது..



அ.. அவன் என் நண்பன் எனக் கூற வந்த பாதி வார்த்தைகளோடு போன் திடீரென ஒழித்ததில்  எடுத்து பார்க்க அசோக் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.




அவன பத்தி தான் சொல்லிக்கிட்டு இருந்த..  இதோ அவனை கூப்பிட்டான்.. எனும் போதே இதழில் சிறு குறுநகை எட்டி பார்க்க அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.




" சொல்லு அசோக்.. "அவள் சோர்வான குரலுக்கு மற்றும் மாறாய்.. "ஹலோ ஜான்வி.." எதிர்பக்கம் இருந்து துள்ளலான அவன் குரல்.




"சொல்லு அஷோக்.. என்ன ஆச்சு வேலை முடிஞ்சதா.. "கேட்டாள் பொதுவாய்..



"ம்ம்ம்.. முடிஞ்சது வீட்டுக்கு கிளம்புறேன்.. அதான் உனக்கு கூப்பிட்டேன்.."




"ம்ம் சரி.. " என அவள் அமைதியாக.. எதிர்பக்கமும் ஒரு கணம் அமைதி..



" என்னாச்சு ஹலோ அசோக்.. லைன்ல தானே இருக்க.. "




"ம்ம்ம் இருக்கேன் தான்.."இப்போது அவன் சலித்தான்..




" என்ன ஆச்சு.. போன் பண்ணிட்டு அமைதியா இருக்க.. என்ன அன்னைக்கு மாதிரி போரடிச்சுச்சுனு போன் பண்ணியா.." மூக்கை சுருக்கி அவள் கொண்டு கேட்க.. 




"ம்ம்ம்ம்.. அப்படி தான்னு வச்சுக்கோயேன்..  சரி உனக்கு வேலையெல்லாம் எப்படி போகுது.." அவள் கேட்டதையே திருப்பி கேட்டான்.. 



" எங்க..  ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்னு திவி கூட்டிட்டு வந்தா..  கேண்டின்ல இருக்கோம்.."



" ஓஹோ.. வேல நேரத்துல ஸ்நேக்ஸ்சா..  சரி சரி.. ஆனா இன்சென்டிவ் ஞாபகம் இருக்கட்டும்... இன்செட்டிவ் கைக்கு வந்துச்சுன்னா அதைவிட டபுள் மடங்கு நான் உனக்கு ட்ரீட் தருவேன்.. 



" அவன் கூற அதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கலாமே..  எதுக்கு இன்செண்டிவ் வாங்ககணும்.. அத டபுள் மடங்கா செலவு பண்ணனும்.. இருக்கட்டும் அசோக் செலவுக்கு தேவைப்படும்.. " என  சிரிப்போடு அவள் கூறிட.. " செலவை பத்தி நீ ஏன் கவலைப் படுற.. பிரீயா இரு.. சொன்னத மறந்துடாத.. " அழுத்தமாய் அவன் கூறியதில்.. சரியென தானாய் இவள் தலை ஆடியது..




"அஷோக்.. ஆரி இன்னைக்கு.." என அவள் ஆரம்பித்த வேளையில்.. "ஹான்.. வரேன்.. வரேன்.. எங்கோ பேசியபடி.. கூப்பிடுறேன் ஜான்வி.."உடனடியாய் அழைப்பை துண்டித்து விட்டான்..




''அவனும் ஆர்யனை பற்றி கேட்பதில்லை.. தானே கூறினாலும் கேட்பதில்லை.. இவன் கூட தான் நான் வேலை பார்க்கிறேன் என்கிறது இவனுக்கு ஞாபகம் இருக்கோ..  இல்லையோ.. ஒரு நாளாவது இத பத்தி பேசுறானா..  "என மனதிற்குள்ளேயே நொடித்து கொண்டு போனை பர்ஸில் சொருக.. இமைக்க மறந்து திவி அவளை பார்த்து கொண்டிருந்ததில்.. என்னாச்சு..திவி.. ஏன் அப்படி பாக்குற.. கேட்டாள்..



" எவ்வளவு ஜோவியலா அவர்கிட்ட பேசுற..  அவரும் அவ்ளோ அட்டாச்மென்டா உன்கிட்ட இருக்கார்.. ஏன் ஜான்வி.. போர் அடிக்கும் போதெல்லாம் அவர் உனக்கு கால் பண்ணிடுவாரா.. " என்றவளின் குரலில் அளவு கடந்த ஆர்வம் இருந்ததை அறியவில்லை அவள்..



" அட அதை ஏன் கேக்குற.. சலித்தாள்..



"அன்னைக்கு ஒரு நாள் போர் அடிக்குதுன்னு மெனக்கெட்டு போன் பண்ணி மொக்கை போட்டு வச்சான்.. இதை இப்பவும் அதேதான்.. வேலை முடிஞ்சிடுச்சாம்.. வீட்டுக்கு போறேன்னு சொல்ல கூப்பிட்டு இருக்கான்..என பெருமூச்சோடு கூற சிரிப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள் திவி.. 



" ஆனாலும் உன் ஹஸ்பண்ட் செம டைப் போ.. எனக்கே அவர பத்தி கேட்க கேட்க ஆசையா இருக்கு.. கண்டிப்பா ஹஸ்பண்ட் எக்ஸ்பெக்டேஷன் உன் வீட்டுக்காரர் மாதிரி தான் இருக்கணும்.. " சிலாகித்து கன்னத்தில் கை வைக்க.. " போதும் போதும் கனவு கண்டது.. எழுந்து வா கிளம்பலாம்.. என்றவளின் பேச்சு இப்பொழுது வெகு சாதாரணமானதில்.. " ஏய் ஒரு நிமிஷம்" அவள் கைப்பிடித்து நிறுத்தினாள் திவி..


"என்னாச்சு.." புரியாமல் ஜான்வி பார்க்க.. " "இவ்வளவு நேரம் உம்முன்னு இருந்தவ திடீர்னு பிரைட் ஆகிட்டியே.. பார்ரா உன் வீட்டுக்காரர் ரெண்டு வார்த்தை பேசினதும் மேடம் எவ்வளவு எனர்ஜி ஆகிட்டீங்க.. இதுக்கு தான் வீட்டுக்காரன் என்று ஒருத்தன் வேணும் போல.."



" மரியாதையே இல்ல.. " ஓரக்கண்ணில் பார்த்தபடி ஜான்வி கேட்க..



"ப்ச்.. அத வச்சுக்கிட்டு என்ன பண்றது.. ஆனா பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி மாதிரி.. யுவர் ஹஸ்பண்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் யுவர் எனர்ஜியா.." குறும்பாய் கண்ணடித்து அவள் கேட்டதில்.. "ஏய் ச்சி லூசு வா.. கலாய்க்கிறது என்றால் முதல் ஆளா வந்துடுவா.."அவளை கைபிடித்து இழுத்துக் கொண்டு நடந்தாள் ஜான்வி..




அவளிடத்தில் அவளை காணாததில் நொடி கணம் உயிர் வரை பதறிப் போய் எங்கே தான் அப்படி கட்டியணைத்ததில் மீண்டும் கோபித்து எங்கோ சென்று ஏதும் தவறான முடிவு எடுத்து விடுவாளோ.. என பதறிக்கொண்டு ஓடி வந்திருந்த ஆர்யன் கேண்டினில் அவள் தோழியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு சற்று நிதானித்து நிற்க.. நேரத்திற்கேன அப்போது பார்த்து அவளுக்கு போன் வந்ததும்.. அவள் முகத்தில் திடீரென மகிழ்ச்சி குலுங்கியதும்.. அவன் புரியாமல் நிற்க.. எடுத்த எடுப்பிலேயே அஷோக்.. என அவள் ஆரம்பித்து.. போன் அணைத்ததை தொடர்ந்து திவியின் வார்த்தைகளும் அவனுக்குள் அமிலமாய் பாய்ச்ச.. அப்படின்னா அவளுக்கு கல்யாணம் ஆனது உண்மைதானா.. உடலில் இருந்து உயிரை உருவி எடுத்தது போல் ஜடமாய் அங்கிருந்த சுவற்றில் சரிந்தான் ஆர்யன்.. 




உங்க கமெண்ட் மட்டும் தான் பெரிய ஆறுதல்.. ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க..



ரேட்டிங் கூட இல்லையே.. ஏன்..?😞



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...