முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 34

 " இன்னைக்குன்னு பார்த்து மணி ஆற தாண்டிடுச்சு.. இந்த அசோக்கை வேற முக்கியமான வேலை இருக்கு..  வர முடியாதுன்னு சொல்லிட்டான்..  அப்படி என்ன வேலையோ.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு போறதுக்குள்ள இருட்ட போகுது.. பஸ் வேற நேரத்துக்கு வருதான்னு தெரியல.. என புலம்பிய படியே அலுவலகத்தில் இருந்து வேகமாய் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் ஜான்வி.


"அப்படி என்ன முக்கியமான வேலையாம்.."உரிமையான கோபம் அவன் மீது.




"அன்னைக்கு வேல நேரத்துல நீ பண்ண வேலைல பாதி நேரம் உன்கூட தானே இருந்தான்.. அப்போ விட்ட நேரத்தை ஈடு செய்ய ஆபிஸ்ல வேலைனு பிடிச்சு வச்சுட்டாங்களோ என்னவோ..'"பதில் மொழி கூறியது மனம்..




என்னவோ என சலித்த படி பஸ் ஸ்டாப்பிற்கு வர.. அங்கு யாரையும் காணாததில்.. அய்யோ பஸ் முன்னாடியே போய்டுச்சா.. இனி அடுத்த பஸ் வர ஒரு மணி நேரமாகிடுமே.. தவிப்பாய் வானத்தை பார்த்தாள்.. கொஞ்சம் கொஞ்சமாய் தன் மேகங்களுக்குள் ஐக்கியமாகி கொண்டிருந்தான் ஆதவன்.. 




அவன் மறையும் மறையும் ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சுக்குள் திக் திக்.. ஏற்கனவே ஒரு முறை அனுபவம் பட்டவள் அல்லவா.. அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் எவனாவது வந்தா என்ன செய்வேன்.. நெஞ்சுக்குள் பதறிவளுக்கு கற்றிருந்த கராத்தே கலையும் இத்தனை வருடங்களில் மறந்துதான் போயிருந்தது..




இருட்டிய வானை பார்ப்பதும் பஸ் வரும் தடத்தையும் மாறி மாறி பார்ப்பதுமாய் நின்று இருக்க திடீரென அவள் அருகில் கீறி சுட்டு நின்ற காரில் விழிகளை சுருக்கியபடி அவள் திரும்ப.. உள்ளிருந்து பளிச்சென புன்னகையை சிந்தி இறங்கினான் ஆரியன்..



இவனா.. இவன் எப்படி இங்கே.. ஆச்சர்யமாய் பார்த்து அடுத்த கணமே அது தனக்கு தேவையில்லாதது என திரும்பி கொண்டாள். காலை அந்த நிகழ்வுக்கு பின் அவனைப் பார்க்கவில்லை.. அவள் பார்க்கவில்லை என்பதை விட அவனும் அவளை தேடி வரவில்லை.. வழக்கம்போல் வார்த்தையால் குத்தி கிண்டவில்லை..  ஆனால் இப்போது அவள் திரும்பிக் கொண்டதில் மனம் ஒரு கணம் சுருக்கேன தைத்தாலும்... '"  என்ன ஜானு பஸ்ஸுக்காக வெயிட் பண்றியா.. வாயேன் நானே டிரா பண்ணிடறேன்.." என்றபடி அவள் பக்கம் இருந்த கார் கதவை திறந்து விட்டான்.. 




"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்.. இட்ஸ் ஓகே.. நானே போய்க்கிறேன்..  விழிகள் பரிதவிப்போடு பஸ் வரும் வழியை நோக்கியது.




அவள் விழி செய்தியை புரிந்து கொண்டவனாய்.. "ஏற்கனவே இருட்ட ஆரம்பிச்சிடுச்சு.. பஸ் எப்போ வருமோ தெரியல..  ஏன் உனக்கு இந்த வெட்டி வீராப்பு ஜானு.." அவன் கேள்வியில் சட்டென அவள் முறைக்க அவசரத்தில் வார்த்தையை விட்டதில் நாக்கை கடித்தான்.




"அதுக்காக சொல்லல..  என் கூட வரலாம்ல்ல.. அதான் எப்படி கன்வெ பண்றதுனு தெரியாம.. " கண்சுருக்கி அவன் கேட்ட விதத்தில் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.. ஏற்கனவே நேரமாயிற்று.. பஸ் வர இன்னும் தாமதமாகி போனால்  அன்று போல் எதுவும் நடக்காது என என்ன நிச்சயம்..  அன்று சரியான நேரத்திற்கு அசோக் வந்திருந்தான். 



ஆனால் இன்று வர முடியாது முக்கியமான வேலையாக செல்கிறேன்.. இரவும் கூட வர தாமதமாகும் என கூறிவிட்டானே.. அவசரத்திற்கு பாதகம் இல்லை என அமைதியாய் அவன் அருகில் ஏறி அமர்ந்து விட்டாள் ஜான்வி. அவன் விழிகள் மின்னின..



" தேங்க்ஸ் தேங்க்ஸ் ஜானு.. " என்றபடி முன் கியரை இழுத்து விட்டு வண்டியை நகர்த்தினான்..



இதுவரை முகத்தில் மோதிய தனிமை காற்று தன்னை இடமாய் அணைத்துக் கொண்டதாய் தோன்றியது.. அனைத்தும் அவளால்.. ஓர கண் பார்வையால் அவ்வப்போது அவளை வருடிக் கொண்டான்..



" நம்ம இப்படி சேர்ந்து போய் எத்தனை வருஷம் ஆகிடுச்சு.. முன்னெல்லாம் நீ ஸ்கூல் முடிச்சுட்டு வர்றப்போ, இதுக்காகவே உனக்காக வெயிட் பண்ணி நின்னு கூட்டிட்டு வருவேன்.. '' அன்றைய நாட்களில் நினைவில் அவன் விழிகள் மலர.. மாறாய் இவள் கண்களோ சுருங்கியது.




" நீயும் அன்னைக்கு ஸ்கூல்ல என்ன எல்லாம் நடந்துச்சுன்னு வளவளன்னு பேசிக்கிட்டே வருவ.. எவ்வளவு நல்லாருக்கும் தெரியுமா.. முகத்துல சுல்லுனு அடிக்கிற காத்து.. பின்னாடி உன் குரல்.. அமிர்தம்.. கண்களை மூடியவனை வெறித்தாள். 




"ஆனா இன்னைக்கு பாரு.. இவ்வளவு பக்கத்துல பக்கத்துல உக்காந்தும் எதுவுமே பேசாம அமைதியா வர.. என்றவனின் குரல் சட்டென சுருங்கியது.



''ஏன் என் மேல இவ்வளவு கோபம் ஜானு.. நிதானமா பேசினா எதனாலும் சரி பண்ணலாமே.. நான் இதுவரைக்கும் பண்ணது பேசினது எல்லாமே தப்புதான்னு ஒத்துக்கிட்டு ஏற்கனவே உன்கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன்.. இதுக்கு மேல என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல.. " நிற்கதியான குரலில் அவன் கூற..



ஹ்ம்ம்.. அமைதியாய் அவள் இதழினில் விரத்தி சிரிப்பு படர்ந்தது...




" இப்படித்தான் சிரிக்காத ஜானு..  நீ இப்படி சிரிக்கிறத பாக்குறப்போல்லாம் மனசு ஒரு மாதிரி வலிக்குது.. "ஒருகரம் ஸ்டேரிங்கை பிடித்திருக்க மறுகரத்தால் நெஞ்சை அழுந்த தேய்த்துக் கொண்டான்.. அவனை பார்க்க உண்மையாகவே சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.. தான் தேடி வரும் போதெல்லாம் தூச்சமாய் தூக்கி எரிந்து விட்டு இப்போது மாறி விட்டேன்.. ஏற்று கொள்.. என்கிறானே..




" என்ன சார்.. நீங்க எவ்வளவு உயரத்தில் இருக்கிறவரு..  பணத்திலேயே குளிக்கிறவரு..  நீங்க என்கிட்ட வந்து இவ்வளவு இறங்கி பேசுறீங்கன்னு நினைச்சா சிரிப்பா வருது.. வேண்டாம்.. உங்களுக்கு இது செட்டாகல" ஓரமாய் சிரிப்போடு அவள் கூறியதில்.. 



" ஜானு ப்ளீஸ் வார்த்தையால இப்படி கொல்லாத.. நீ பணத்துக்காக தான் அப்படி பண்றேன்னு எங்க அம்மா சொன்னத நான் தெரியாம ஒரு முறை நம்பிட்டேன்.. அதனாலதான் அன்னைக்கு.. "



" அதனாலதான்.. அதனால தான்.. காசு தரேன் படுக்கைக்கு வான்னு நேத்து கூட கூப்பிட்டீங்களா.. வேண்டாம்..  என்னுடைய வாழ்க்கை நிறைய மாறிடுச்சு.. அது சொன்னாலும் உங்களுக்கு புரியாது.. ஏத்துக்கிற மனநிலையிலேயும் நீங்க இருக்க மாட்டீங்க.. " கண்கள் நேரில் பளபளக்கக்கூடிய படி அவள் ஜன்னல் பக்கமாய் திரும்பிக்கொண்டதில்.. 



சட்டென காரை ஓரமாய் சடன் பிரேக் போட்டு நிறுத்தி அவள் கரத்தை எடுத்து தன் இதயத்தின் மேலாய் வைத்து அழுத்தி பிடித்தான் ஆரியன்.. அவன் கண்களில் அளவு கடந்த ஏக்கமும் வலியும்..மாறாய் அவள் விழிகளில் ஒதுக்கம்.. அவனிடம் இருந்து தன் கருத்தை பிரித்தெடுக்க முயன்றாள்.




" ஜானு ப்ளீஸ் கொஞ்சமாவது என் பீலிங்ச புரிஞ்சுக்கோ..  தப்பு பண்ணிட்டு குற்ற உணர்ச்சியில நொடிக்கு நொடி செத்துகிட்டு இருக்கேன்.. என்ன நினைக்கிற.. நீ இல்லாத இந்த எத்தனை வருஷமா நான் சந்தோஷமா இருந்தேன்னா..  நிச்சயமா கிடையாது.. வருஷ வருஷம் ஊருக்கு வர்றவன் இப்போ ஊர் பக்கம் போய் அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு.. எப்பவாவது போனாலும் ரெண்டு நாள் இருந்துட்டு தலைய காட்டிட்டு வேகமாக ஓடி வந்திடுவேன்..  யாரையும் பேஸ் பண்ண முடியல.. பாக்க புடிக்கல.. அங்க போனாலே உன் ஞாபகம் தான் என கொலையா கொல்லும்.. அதை யார்கிட்டயும் வாய்விட்டும் சொல்ல முடியாம பேசவும் முடியாமல் இத்தனை வருஷம் தனிமையில் தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. " அவன் கண்கள் கலங்கின.




" ஒவ்வொரு நாளும் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு போகும்போதும் ஏண்டா வீட்டுக்கு போறோம்னு இருக்கும்.. ஒரு சில நாட்கள் இந்த தனிமை பிணியிலேயே செத்துடலாம்னு கூட தோணும்.. என்னை ஏமாத்தினவளுக்காக நான் ஏன் இவ்வளவு கலங்கணும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டாலும் என் மனசு உன்னையே தான் தேடும்.. என் நிலையை எனக்கு கோபமும் வரும் உண்மைதான்.. " அவன் கூறியதில் கண்கள் சிவந்தாள் அவள்.. "நான் ஏமாற்றுகாரியா??"



" என்னால எது உண்மை.. எது பொய்ன்னு யோசிக்கவே முடியல ஜானு.. ஆனா திரும்ப ஆபீஸ்ல எப்ப உன்ன முதல் முறை பார்த்தேனோ அப்போ உண்மையா அந்த செகண்ட் எனக்குள்ள எவ்வளவு சந்தோஷம் தெரியுமா... ஆனா அதுக்கு காரணம் நீதான்ங்குறத என்னால ஏத்துக்க முடியல.. அதையும் கோபமா திருப்பி உன் கிட்டயே காட்டினேன். . நான் என்னடி பண்ணட்டும் நீ பணத்துக்காக தான் என தேடி வர்றேன்னு எங்க அம்மா சொன்னது என் மனசுல ஆழமாக பதிஞ்சிடுச்சு..  அன்னைக்கு கூட ஆபீஸ் விட்டு வந்ததும் நீ இல்லாத இந்த தனிமை எனது ரொம்பவே வெறுக்க வச்சிடுச்சு..  என்ன ஆனாலும் சரி..  நீ எப்படி இருந்தாலும் சரி... நீ எனக்கு வேணும்னு என் மனசு ஊமையா அழுதுச்சு.. அதன் தாக்கம்தான் நேத்து நான் பேசுனது.. அதுக்கு தான் அத்தனை முறை மன்னிப்பு கேட்டுட்டேனே.. இதுக்கு மேல என்ன பண்ண சொல்ற.. '' அளவு கடந்த வலியோடு கண்கள் சுருங்க அவன் கேட்ட விதத்தில் சட்டென கரம் உதறி நெருப்பு பார்வையால் அவனை சுட்டு எரித்தாள் ஜான்வி..



" எப்படி எப்படி..  உங்க அம்மாவா ஒன்னு சொல்லுவாங்க.. அதை நீங்களும் நம்பிடுவீங்க.. என்னையும் தண்டிப்பீங்க... இதுல உங்களுக்கு சந்தோஷமா இருந்தாலும் என் மேல கோபம் காட்டுவீங்க.. தனிமை கஷ்டமா இருந்தாலும் அதுக்கு என்ன தான் பணத்துக்கு வரியானு கேட்பீங்க.. இதெல்லாம் எந்த ஊரு நியாயம்.. நீங்க பேசறது எல்லாம் உங்களுக்கே நியாயம்னு படுதா.. " வெடித்துக் கொண்டு வந்த அவள் வார்த்தைதனில்.. அவஸ்தையாய் பார்த்தான்..







" அதான் சொல்றேன்னே புத்தி கெட்டு போய் அப்படியெல்லாம் பண்ணிட்டேன்.. தயவு செஞ்சு என்னை மன்னித்துவிடு.. நேத்து மிதா சொன்ன பிறகுதான் பொறுமையா உட்கார்ந்து எல்லாத்தையும் யோசித்து பார்த்தேன்..  முதல் முதல்ல உன்ன பார்த்ததிலிருந்து அன்னைக்கு நடந்த நிகழ்வுக்கு முந்தன நாள் வர எனக்கு தெரிஞ்ச ஜான்வி இவ கிடையாதே.. ஆனா அன்னைக்கு.. அன்னைக்கு நடந்த அந்த இன்சிடென்ட் மட்டும்.. ஏன் அன்னைக்கு அப்படி சொன்ன ஜான்வி.. ப்ளீஸ் இப்பயாவது சொல்லு.. " கண் சுருங்கி கேட்டவனை ஆழமாய் அவள் பார்த்ததில் அவள் கண்களை நேராய் பார்க்க முடியாது தானாக அவன் தலை தாழ்ந்து..



" நீங்க இப்படி எல்லாம் பேச தான் என்ன கூப்பிட்டு இருப்பீங்கன்னு தெரிஞ்சா உங்க கூட வந்திருக்கவே மாட்டேன்.. என நின்ற காரிலிருந்து வேகமாய் அவள் இறங்கப் போக.. ஜான்வி.. பதறினான்.. 



"சரி..  சரி.  நான் எதுவும் பேசல ப்ளீஸ் என் கூடவே இரு.. '" அவசரமாய் அவள் கைப்பிடித்து நிறுத்த.. அவள் பார்த்த பார்வையில் தன்னிச்சையாய் அவன் கரம் விலகியது..  காரை கிளப்பியிருந்தான்.. 




லோக்கஷன்..?? வறண்ட குரலில் கேட்டான்.




"நா சொல்றேன்.."முடித்து கொண்டாள் அவள்.. அவளை அவஸ்தையாய் பார்த்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான். ஏதாவது ஒரு கணத்தில் மனது மாறி தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டாளா இப்படியே தன்னோடு வந்துவிட மாட்டாளா.. என ஆதங்கம் அவன் விழிகளில் அதிகமாய்.. 




" நான் ஒன்னே ஒன்னு மட்டும் கேட்கிறேன் அதுக்கு மட்டும் உண்மையான பதிலை சொல்றியா.. " அவன் பேச்சுக்கு மறு பேச்சி இல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.





" ஆபீஸ்ல உனக்கு கல்யாணம் முடிஞ்சதா பேசிக்கிறாங்களே. அதுவும் இல்லாம உன்ன கூட்டிட்டு போக வர ஒருத்தன் இருக்கானே இன்னைக்கு காலைல அவன பத்தி பேசின போதுதான் நீ கோபப்பட்ட... உண்மையாவே உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ஜானு.. " தொலைந்த குரலோடு கேட்டிருந்தவனின் கடைசி வார்த்தையும் காற்றுகளுக்குள் மறைந்து போனது.



நிர்மலமான விழிகளோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. குழந்தையை பற்றிய விஷயத்தை அவன் அறியாத வரை அசோக்கை பற்றி கூறினாலும் அவனுக்கு புரியப் போவதில்லை.. அதற்கும் கண்ணுக்கு காது வைத்து தான் பேசுவான்.. பணத்துக்காக அவனோடு சென்றாயா என அவதூறாய் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. தன்னோடு அசோக்கையும் சேர்த்து அவமானப்படுத்துவான் என இறுகமூடிய கண்களுக்குள் தன் அனைத்து யோசனைகளையும் பூட்டி கொண்டவள்.. அ.. என ஆரம்பிப்பதற்குள்ளாக நேரம் பார்த்து அடித்த ஃபோன் காலில்.. இந்த நேரத்துக்கு அம்மா அடிக்கிறாங்களே.. என அவன் பார்த்த படி தவிப்பாய் அவளைப் பார்க்க.. கைகட்டி ஜன்னல் பக்கமாய் அவள் திரும்பிக் கொண்டதில்.. ஏற்கனவே உடல் நலம் முடியாத கைக்கு என்னமோ ஏதோ என அவசரமாய் அழைப்பை ஏற்று இருந்தான்.. 




ஆர்யா கண்ணா.. எதிர்பக்கம் இருந்து தாயின் பாசமான வழுவழுப்பு குரல்.. அவர் கொஞ்சம் இல்லை என்பதில் நிம்மதி மூச்சு விட்டு சொல்லுமா என்றான் சோர்வாய்..



என்னடா கண்ணா.. ரொம்ப வேலையா குரலே.. ஒரு மாதிரி சோர்ந்து தெரியுது.. ஆனா நான் சொல்றத விஷயத்தை கேட்டா உன் எனர்ஜியெல்லாம் அப்படியே புதுசா வந்துடும் பாத்துக்கோ.. தாயின் குதூகல குரலில் அப்படி என்ன விஷயம் என்பது போல் அவன் புருவங்கள் இடுங்க..



" நான் என் அண்ணன் கிட்ட உனக்கும் ரூபாவுக்கான கல்யாணத்தை பத்தி பேசினேன்.. அவங்க வீட்டில எல்லாருக்கும் சம்மதம்.. ரூபாவும் கூட சம்மதம் சொல்லிட்டாளாம்.. இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கும் நீ தங்கி இருக்கிற ஊர்ல ஏதோ இன்டர்ன்ஷிப்பாமே.. அதுக்காக வரேன்னு சொல்லி இருக்கா.. அங்க அவள உன் கூடவே தங்க வச்சுக்கோ.. கொஞ்ச நாள் ரெண்டு பேரும் சேர்ந்து இருந்து ஒருத்தர் பத்தி நல்லா புரிஞ்சுக்கோங்க.. " அவர் கூறிய செய்திகள் அதிர்ந்து தொடர்ந்து கூறிய அறிவுரையில்.. அம்மா.. அவன் பல்லை கடிக்க.." கல்யாணத்துக்கு முன்னாடி சேர்ந்து இருக்கிறது தப்பு தாண்டா.. ஆனா இந்த காலத்துல யாரு அதெல்லாம் பாக்குறா.. இங்க பாரு அவளுக்கும் உனக்கும் மட்டும் கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னா உங்க மாமாவோட அத்தனை கோடி சொத்தும் நமக்கு தான்.. " குரலிலும் பணத்தாசை மின்னியது..



அதுவரை அவர்கள் பேசுவதை காதில் மட்டும் வாங்கியபடி ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து இருந்தவள் மணிமேகலையின் கடைசி வார்த்தையில் இவ்வளவுதான் நீங்கள் என சட்டென திரும்பி அவன் முகத்தை பார்த்ததில்.. உள்ளத்தோடு உடலும் கூனிக்குறுகிப் போக.. " ஏம்மா எப்ப பாத்தாலும் பணம் பணம் அலையுற.. " என அவசரமாய் போனை துண்டித்து விட்டான்.. 



அது தானடா வாழ்க்கைக்கு முக்கியம்.. என எதிர்பக்கம் மணிமேகலை கூறிய ஏழாம் அறிவு அறிவு அறிவுரையை நல்லவேளையாய் கேட்டிருக்கவில்லை.




அவஸ்தையோடு அவளைப் பார்த்தான்.. இப்படிப்பட்டவர் கூறியதற்காக தானே என்னை இத்தனை தூரம் வருத்தினாய்.. எனக் குற்றம் சாட்டும் விழிகளோடு அவள் பார்க்க.. ஜானு.. " தயக்கமாய் அவன் ஆரம்பித்த வேளையில்.. அதற்கு மேல் பொறுக்க மாட்டாது.. நிறுத்துங்க ப்ளீஸ். அவள் அழுத்தமான குரலில் தானாக வண்டியை நிறுத்தி விட்டிருந்தான்..






அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு கரம் பிடிக்க போக.. வேகமாய் காரை விட்டு இறங்கியவள்..  அவன் புரியாமல் தன்னை பார்த்துக் கொண்டிருக்க கண்டு வேகமாய் பேக்கை துலாவினாள்.. 




இங்கயா உன் வீடு இருக்கு.. என்றவனிடம்..



இல்ல.. ஆனா என் வீட்டுக்கு போக ஆட்டோ இங்க கிடைக்கும்.. இதுக்கு மேல na போய்க்குவேன்.. இதுவரைக்கும் வந்து டிராப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. என்ன பையில் இருந்து நூறு ரூபாயை எடுத்து அவனிடம் நீட்ட.. அம்மா பேசினதுல கோபமாகிட்டேன்னு புரியுது ஆனா அதுக்கு நான் என்னடி பண்ணுவேன்.. ஏண்டி இப்படி வலிக்க வலிக்க அடிக்கிற.. செத்துப் பிழைத்தான்.. 




" ச்சே.. ச்சே.. உங்க அம்மா பேசினதுக்கு நான் ஏன் சார் கோவிச்சுக்க போறேன்.. என்ன இருந்தாலும் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறவரு.. நாளைக்கு என்ன இருந்தாலும் ஒரு நாள் ஓசி ஏசி காத்து வாங்க ஏன் கூட வந்தவன்னு நீங்க சொல்லிட கூடாதுல்ல.. எந்த விஷயம்னாலும் நம்ம எப்பவும் சரியா இருக்கணும்னு அசோக் எப்பவுமே சொல்லுவான்.. அதுக்கு தான் இது.. "என்றபடி ரூபாய் நோட்டினை அவன் கைகளுக்குள் திணித்துவிட்டு அவள் சென்று விட...



அஷோக்.. அது மதியம் அவளோடு பேசியவன் தானே.. திவி கூட அவள் கணவன் என கூறினாளே.. அப்படியானால் தான் கேள்வி பட்டதெல்லாம் உண்மைதானா.. ஆணி அடித்தார் போல் சீட்டில் தோய்ந்து சாய்ந்தவனின் பார்வை சற்று தூரம் தள்ளி ஆட்டோவில் ஏறிக்கொண்டிருந்தவளை வெறித்தது..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...