ஆட்டோவில் ஏறி அமர்ந்த ஜான்விக்கு நெஞ்சம் தகித்து கொண்டிருந்தது.. இத்தனை நேரமாய் ஆரியன் கூறிய ஆறுதலும் மன்னிப்பும் அவன் தாய் கூறிய அந்த ஒற்றை பணம் என்ற வார்த்தையில் மறைந்திருந்தது.
" என்ன மனுஷங்க இவங்கல்லாம்.. இத்தனை வருஷம் ஆகியும் கொஞ்சமும் அவங்களும் மாறல.. இவரும் மாறல.. அவங்க அம்மா சொன்னதை கேட்டுட்டு அமைதியா இருக்காரு.. இதுல தவற உணர்ந்துவிட்டதா என்கிட்ட மன்னிப்பு கேட்கிறார்.. இதெல்லாம் ஏத்துக்கிற மாதிரியா இருக்கு.. "என்றவளின் மனம் ஆறவே இல்லை..
கண்களையும் மூடியவளுக்கு அன்று அவன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் முள்ளாய் தைத்துக் கொண்டிருக்க.. இதற்கு மேல் முடியாது என கண்களை திறந்த நிமிடத்தில் வீடும் வந்து இருந்தது..
அசோக் இல்லாததால் குழந்தை பக்கத்து வீட்டில் இருப்பாள்.. என வேகமாய் தன் வீட்டை தாண்டியவளின் நடை பூவிதா வீட்டின் முன் நின்றது.
" புவி.. புவி.. " வெளியிலிருந்து அழைக்க தாயின் குரல் கேட்டு புவிதாவிற்கு முன்னே முந்தி ஓடி வந்தாள் கிருத்தி..
" பாப்பா.. " ஓடிவந்த குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவளுக்கு இவ்வளவு நேரம் தகித்துக் கொண்டிருந்த அனல் மாறி குளுமை பரவியது உடலினில்..
" என்னக்கா இன்னைக்கு ரொம்ப வேலையோ.. இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.. அது சரி எங்க உங்க மச்சான காணோம்.. எப்பவும் என் பிள்ளை என் பிள்ளைன்னு என்கூட விளையாட கூட விட மாட்டாரு.. இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆகியும் ஆள காணோமே.. " பெரிதாய் நொடித்துக் கொண்டபடி பூவி கேட்க..
"ஏதோ முக்கியமான வேலையாம் பூவி.. அதான் முடிச்சுட்டு வரேன்னு சொல்லி இருக்கான்.. "
" அது சரி" தலையை ஒரு மார்க்கமாய் உருட்டினாள்.. "எப்படியோ இன்னைக்கு அவர் வராததுல இந்த வாலு என்கூடவே இருந்துச்சு.. ஆனாலும் எவ்வளவு சேட்டை.. நான் வாங்கிட்டு வந்த சாக்லேட் பிடுங்கி தின்னுடுச்சு.. பிள்ளையின் தலையில் குட்டு வைக்க" என்னையே அடிக்கிறியா நீ" என அவள் மீது பாய்ந்தாள் கிருத்திகா..
ரெண்டும் எலியும் பூனையும் தான்.. ஆனால் ஒன்றை விட்டு ஒன்று இருக்காது.. ஆனால் அவள் அடிப்பதும்..தன் மகள் திரும்பி அடிப்பதும் அசோக்கிற்கு என்னவோ பிடித்தமில்லை.. குழந்தைகளுக்கு இப்போதிருந்தே மரியாதையே சொல்லித் தரணும் ஜான்வி.. சொன்னாலும் அந்த பொண்ணு புரிஞ்சிக்க மாட்டேங்குறா.. அப்புறம் வளர்ந்தாலும் இதே பழக்கம் தானே வரும்.. என சிடுசிடுப்பவன் பூவிதாவை பார்க்கும் பார்வையிலேயே ஓடி மறைந்து கொள்வாள் அவள்.
" ஆமா புவி வேலைதான்.. நல்லவேளை நீயே போய் பாப்பாவ கூட்டிட்டு வந்துட்டே.." அவள் கூற.. "ஏதேய்ய்ய்.. நானா.. யக்காவ்.. உன் புருஷன் தான் வீட்டுக்கு வந்து விட்டுட்டு திரும்ப எங்கேயோ மறைஞ்சு போயிட்டாரு.. அதான் நீ வந்ததும் அவர் எங்கன்னு கேட்டேன்.. "கூற அவள் விழிகள் விரிந்தன.
" எதோ முக்கியமான வேலை.. இம்மியும் அசைய முடியாது.. எனக் கூறினானே ஆனால் நேரத்திற்கு சென்று பிழையை அழைத்து வந்து விட்டானா.. " தானாக மனதோடு ஒரு நெகிழ்ச்சி படர்ந்தது..
" ஏ புள்ள.. இப்பதான் அந்த புள்ள வந்துருக்கா.. அதுக்குள்ள வாசல்ல நிக்க வச்சு வெட்டி யானம் பேசிக்கிட்டு இருக்க.. நீ போ ஜான்வி.. போயி பிள்ளைக்கு வேணுங்கறத செஞ்சு கொடு" என்றபடியே உள்ளிருந்து வந்தாள் பூவியின் தாய்..
ஹ்ம்ம்.. பெரிதாய் பூவி ஒடித்துக் கொள்ள சிரித்தபடியே க்ருத்தியோடு வீட்டிற்குள் நுழைந்தாள் ஜான்வி.
அவன் இல்லாத வீடு ஏதோ சோபலாய் தோன்றியது..
"எனக்கு ஏன் இப்படி தோணுது.. " என.. இடுப்பில் இருந்த குழந்தையை சோபாவில் அமர வைத்து அணிந்திருந்த யூனிஃபார்மை காலராய் மாற்றி குழந்தைக்கு முகம் கை கால் கழுவி விட.. ஆஆஆஆ.. கத்தி முகத்தை சுருக்கினாள் குழந்தை.
அய்யோ என்னாச்சு.. பெற்றவள் பதற சட்டென சிரித்திருந்தவள்.. சும்மா சும்மாம்மா என கண் சிமிட்டியதில்.. "வர வர இப்படி ஏமாத்துறதே உனக்கு வேலையா போயிடுச்சு.." முகம் சுருக்கியதும்.. உடனடியாய் உதடு பிதுக்கினாள் கிருத்திகா.
" போமா சும்மா விளையாட்டுனா கூட நீ கோவிச்சுக்கிற.. அப்பா இந்நேரம் இருந்திருந்தா.. கிச்சு கிச்சு மூட்டி எப்படி சிரிக்க வைச்சுருப்பார் தெரியுமா.. " முகம் சுருக்கிய கிருத்திகாவின் வார்த்தையில் நெஞ்சில் நெருடல்.
எப்போதும் பள்ளி விட்டு வரும் குழந்தையை மாற்றுடை மாற்றி விடுவது அசோக்கின் முக்கியமான வேளைகளில் ஒன்று.. பெற்றவனாய் இல்லாவிடினும் அவன் தன் குழந்தைக்கு செய்யும் வேலைகள்..வேலை என கூறுவதை விட பிடித்த பணிவிடை.. என கூறலாம்.. அப்பப்பா.. பெற்றவனும் செய்யக்கூடியதை விட அதிகம் அல்லவா..
அன்று முழுவதும் அப்பா எங்கே.. அப்பா எங்கே.. என அவளை ஒரு வழி ஆக்கிவிட்டாள் கிருத்திகா.. அப்பா வருவார் டி என பொறுமையை எவ்வளவுதான் எடுத்துக்கொண்டு கூறியும் கேட்காமல் ஒருக்கட்டத்தில் அழும் நிலைக்கு சென்று விட்டிருந்தவளை என்ன செய்வது என புரியாமல் ஜான்வி விழித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென போன் அடித்தது.
தன்னிச்சையாய் விழிகள் கடிகாரத்தை பார்க்க மணி எட்டை தாண்டியதில் மிதா தான் அழைக்கிறாளா.. என எழுவதற்குள் "ஐய்ய்ய் அப்பா..." துள்ளி குதித்து டீப்பாய் மேலிருந்த போனை முழு உயரத்திற்கு எக்கி ஒரு வழியாய் எடுத்து வந்து தாயிடம் கிருத்தி நீட்டினாள்.. அட்டென்ட் செய்து கொடு பேச வேண்டும் என்ற ரீதியில்..
வாங்கி பார்க்க ஜான்வின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.. அசோக் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.. இது எப்படி சாத்தியம்.. இவள் இங்கு கேட்டு உச்சகட்டமாக அழும் வேளையில் சரியாய் அவன் எப்படி போன் செய்து இருக்கிறான்.. யோசனையோடு அழைப்பை ஏற்று காதில் வைக்க.. ஜான்வி.. எதிரில் அசோக்.
சொ.. சொல்லு அஷோக்.. என கூறிக் கொண்டிருக்கும் போதே பொறுமை காற்றில் பறந்தவனாய் பாப்பாகிட்ட போன குடேன்.. அவகிட்ட பேசணும் போல இருக்கு
. என்றதில் தானாய் அவள் கரம் போனை கிருத்திகிடம் நீட்ட அடுத்த கணம் வாங்கி காதில் வைத்துக் கொண்ட வழி முகத்தில் தான் எத்தனை மலர்ச்சி.. மகிழ்ச்சி..
.
ஹலோ.. அப்ப்பா.. பெரிய மனுஷை போல் போனை காதல் வைத்து அந்த ஹால் முழுக்க நடை போட ஆரம்பித்து விட்டாள்.
அன்று முழுவதும் பள்ளியில் நடந்த விஷயங்களை கூறினாள்.. பூவிதாவோடு விளையாடியதை கூறினாள்.. இவ்வளவு ஏன் தனக்கு உடைமாற்றி விடும்போது தான் கூறியதற்கு தாய் திட்டியது வரை அனைத்தையும் புள்ளிவிவரமாய் தந்தை அவனிடம் விவரித்து வைத்த படி.. நீ கேளுப்பா என்னன்னு.. அம்மாவை திட்டக்கூடாதுனு சொல்லு.. என சொல்லிக் கொடுத்ததில் எதிர்முனையில் என்ன கூறப்பட்டதோ சரிப்பா நீ வந்து சொல்லிடு.. என்றவள் அடுத்த கதையை ஆரம்பித்து விட்டாள்..
இமைக்கவும் நேரமில்லை முக்கியமான வேலை.. என தன்னிடம் கூறியவனுக்கு அரை மணி நேரமாய் பிள்ளையிடம் மட்டும் பேச மட்டும் நேரம் இருக்கிறதோ?? மனதின் ஓரமாய் கேள்வி.
போதும் குடுடி.. போய் ஹோம் ஒர்க் செய்.. என ஓடிக் கொண்டிருந்தவளை வழுக்கட்டமாய் பிடித்து தான் போனை வாங்கினாள்..ஜான்வி.
சொல்லு ஜான்வி.. "
என்ன கூப்பிட மட்டும் வர நேரமில்லை சொன்ன.. இப்போ இவ்வளவு நேரம் உன் பிள்ளை கிட்ட பேசிகிட்டு இருக்கே.. " அவளிடம் கோபம் சிலாகிக்க..
" உண்மையாவே வேலை தாம்மா.. என்னவோ பாப்பா கிட்ட பேசணும் போல இருந்தது.. அதான் கூப்பிட்டேன்..அவ பேசும் போது கட் பண்றேன்னு சொல்லவும் மனசே வரல.. அதான்.. " அப்போதிருந்த படபடப்பை தாண்டி இதம் பொருந்தியது அவன் குரலெனில்.
சரி எப்ப வர அசோக்.. ஏன் கேட்டாளோ.. வார்த்தை தானாக உதிர்ந்திருந்தது..
இப்போதுதான் பாதி வேலை முடிஞ்சிருக்கு.. முடிச்சுட்டு சொல்றேன்மா.. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்.. நீ சாப்பிட்டு தூங்கிடு.. இன்னொரு சாவி போட்டு நான் நா வந்துக்கிரேன்..
ஆனா.. அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது..
" இவ்வளவு நேரம் அவன் பிள்ளை கிட்ட பேசிகிட்டு இருந்தவன் நான் பேசினதும் போன கட் பண்ணிட்டான்.. " பெரிதாய் குறைபட்டுக் கொண்டபடி ஹோம் ஒர்க் சொல்லித் தந்துவிட்டு.. டிவியை போட்டு கொடுத்து கிச்சனுக்குள் நுழைந்து விட்டாள்.
என்னமோ.. எது குறைவது போலே தோன்றியது.. இட்லியும் சட்னியும் வைத்துவிட்டு குழந்தைக்கு இரண்டு வாய் ஊட்டி அவளை உறங்க வைத்தவளுக்கு இம்மியும் அந்த விழிகளில் உறக்கமில்லை.. தனக்காக காத்திருக்க வேண்டாம் என அவன் கூறிவிட்டான் தான்.. ஆனால் இந்த உறக்கம் ஏன் வர மறுக்கிறது.. டிவியின் முன் அமர்ந்து விட்டாள்.
கைகள் சேனலில் ஒவ்வொன்றாய் மாற்ற திடீரென.. ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே… கேட்ட பாடல் வரியில் சட்டென கரம் நின்றுவிட்டது..
விழிகள் அவஸ்தையோடு டிவியின் நிலை குத்த.. இதெல்லாம் ஒரு காலத்தில் அவனை விட்டு பிரிந்து இருந்தாலும் அவன் நினைவுடனே வாழ உதவி செய்த பாடல் அல்லவா.. மலரும் நினைவுகளாய் ஞாபகங்கள் விரிந்தன..
உனது இருவிழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…என்னவோ இப்போது அந்தப் பாட்டை கேட்கும் போது வலித்தது.. கண்களில் இருந்து தானாய் நீர் சொட்ட..
உதிரட்டுமே உடலின் திரை…
அதுதானே இனி நிலாவின் கரை கரை.. முடியும்போது வெகுவாகவே அவள் கண்களில் இருந்து நீர் சுரந்து மார்பு சேலையை நனைக்க ஆரம்பித்திருந்தது..
திடீரென அருகில் கேட்ட காலடி சத்தத்தில் கலங்கிய விழிகளை பிரித்து நிமிர்ந்து நோக்க.. கூர்மையான பார்வையால் அவளை தழுவியபடி நின்றிருந்தான் அசோக்..
அ.. அஷோக்.. அவசரமாய் கண்களில் இருந்து நீரை துடைத்துக் கொண்டாள்.. எதுவும் கேட்பானா என அழைப்புறும் விழிகளோடு பார்க்க.. எதுவும் பேசாமல் கையில் இருந்த பேக்கை அவள் அருகில் வைத்து விட்டு உள்ளே குளியல் அறைக்குள் சென்று விட்டான்.
தன் அழுதால் என்னவென கேட்க மாட்டானா.. ஒருவேளை வந்து கேட்பானோ என அவன் சென்று வழியிலேயே அவள் விழித்துக்கொண்டிருக்க.. உள்ளே சென்று முகத்தை டவலால் துடைத்தபடியே வெளியே வந்தவன்.. நேராய் கிச்சனுக்குள் செல்ல அவன் பின்னே தொடர்ந்தாள்.
என்ன சாப்பாடு இருக்கிறது என அவளிடம் எதுவும் கேட்காமல் தானே ஒவ்வொரு பத்திரமாய் திறந்து பார்த்தபடி இட்லியையும் சட்னியையும் தட்டில் வைக்கப் போக இரு நா வச்சு தரேன்.. என்ன ஒரு அடி முன்னே வந்தவளிடம்.. இருக்கட்டும் என்றவனின் குரலில் ஏன் அத்தனை கணம்..
தனக்கு வேண்டியதை தட்டில் நிரப்பியபடி ஹாலுக்கு சென்று விட்டான்.. அதே இடத்தில் நின்றிருந்தாள் ஜான்வி தான் அழுதும் ஏன் என கேட்கவில்லை.. அதேசமயம் தான் வைத்து தருகிறேன் என கூறியதற்கு ஏன் மறுக்கிறான்.. எதுவும் கோபமா.. ஏனோ அவன் கோபத்தில் நெஞ்சம் அதிகமாய் துடித்தது..
அவன் பின்னையே தொடர்ந்தவள் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.. டிவியில் ஏதோ ஓடிக்கொண்டிருக்க அதை தீவிரமாய் பார்த்தபடி உண்டு கொண்டிருந்தான்.. அதில் என்ன ஓடுகிறது என கேட்டால் கூட நான் நிமிடம் அவனுக்கு தெரியாது என்பது சத்தியமான உண்மை..
இமைக்க கூட மறந்தபடி அவன் டிவி பார்த்து அமர்ந்திருப்பது.. என்னாச்சு அசோக்.. இன்னைக்கு ரொம்ப வேலையா முகமே ஒரு மாதிரியா இருக்கே.. என்றவளின் பக்கம் திரும்பியும் பாராமல் ம்ம்ம்.. கொட்டினான்.
" என்ன ஆச்சு என் மேல எதுவும் கோபமா.." தானாக அவல் குரல் கம்மியது..
விழிகளை மட்டும் நிமிர்த்தியவனின் விழிகளில் இருந்ததே அவளால் உணர முடியவில்லை. "உன் மேல நான் எதுக்கு கோபப்பட போறேன் " என்றதோடு மீண்டும் தட்டில் தலை பதித்துக் கொள்ள.. அவன் கோபத்தில் அவளுக்கு மூச்சு பேச்சு அடைத்தது.
அதன் மேல் அந்த பேச்சை வளர்க்க விரும்பாதவளாய் இன்னைக்கு பாப்பா என்ன பண்ணா தெரியுமா.. என தான் அழைத்து வந்ததிலிருந்து அவள் செய்த அனைத்தையும் அவனை சுவாரசியமாக்கும் பொருட்டு கூற தான் என் இவ்வளவு மெனக்கிடுகிறோம்.. என்பது அவளுக்கே பெரிய கேள்விதான்..
அனைத்தையும் தலையசைத்தபடியே கேட்டு சாப்பிட்டு முடித்திருந்தவன் எழுந்து கை கழுவ சென்று விட்டான்..
என்ன அவாய்ட் பண்றானா ஆனா ஏன்??
திரும்பி வந்தவன் '' இன்னும் தூங்கலையா என கேட்ட படி.. தனக்கு பெட்ஷீட்டை கீழே விடுத்து படுக்க போக.. அவனிடமே கேட்க முற்பட்டவளாய்.. என்ன அவாய்ட் பண்றியா அசோக்.. அவள் குரல் கம்மியது..
பார்வையை மட்டும் உயர்த்தி பார்த்ததில் இருந்தது என்ன உணர்வு..??
அப்போ கேட்டது தான்.. நான் எதுக்காக உன்ன அவாய்ட் பண்ணனும்.. உன் மேல கோபப்படனும் ஜான்வி.. அதுக்கு எந்த காரணமும் இல்லையே.. அப்படியே இருந்தாலும் உன் மேல எனக்கு என்ன உரிமை இருக்கு.. என்னைக்கா இருந்தாலும் நீ இங்க இருந்து போகப் போறவ தானே.. என்றவனின் இறுகி போக அதோடு லைட்டை அணைத்துவிட்டு படுத்துவிட்டான்.
இப்போது என்ன கூறினான் என புரியாமல்.. சட்டென கலங்கி போன கண்களோடு அஷோக்.. அஷோக்.. அவனை நெருங்கி வேகமாய் எழுப்பினாள்..
என்னவென்பது போல் விழியை மட்டும் திறந்து அவன் பார்க்க.. ஏன் அப்படி சொல்ற என்றாள் கலங்கிய குரலில்..
ப்ளீஸ்.. அழாத.. உருத்து வந்தவன் வார்த்தையில் தானாக மூச்சை உள்ளிழுத்து அழுகையை விழுங்கிக் கொண்டவளை தீர்க்கமாய் பார்த்தவன்.. "அது தானே உண்மை.. நீ உன் வாழ்க்கையை முடிவு பண்ணிட்ட.. ஆனா பாப்பாவ மட்டும் எக்காரணம் கொண்டும் என்கிட்ட இருந்து பிரிச்சுடாதே.. ஒருவேளை அவளும் என்னை விட்டு போயிட்டா அடுத்த நிமிஷமே என் உயிர் என்னை விட்டுப் போயிடும்.." என தலை கவிழ்ந்தடித்த கணம்.. அன்று முழுவதும் கொண்ட வேலையோ அல்லது சோர்வோ.. உறங்கி போயிருக்க..
திடுமென இவனுக்கு என்னவாயிற்று.. ஏன் இப்படி கூறுகிறான்.. புரியாமல் அவன் அருகே அமர்ந்தபடி அவன் முகத்தை முட்ட முட்ட வெறித்து கொண்டு அன்று இரவு உறக்கத்தை தொலைத்தாள் ஜான்வி.
கருத்துகள்
கருத்துரையிடுக