ஜான்வி சென்று விட்டிருந்ததில் கோபித்துக் கொண்டாளோ.. அவசரமாய் ரூபாவை உதவி விட்டு பின் தொடர போனவனை.. " நீங்க இருங்க மாமா" கைபிடித்து நிறுத்தினாள் ரூபா.
"விடு ரூபா.. அது..!'' அவன் விழிகள் அவள் சென்ற வழியில் மொய்க்க..
" நீங்க எதுக்காக மாமா இப்படி பதறுறீங்க.. அவ கெடக்குறா.. அன்னாடங் காட்சி.." அவள் சென்ற வழியை பார்த்தபடியே முடிப்பதற்குள்.. "ரூபா.." அவன் கத்தலில் சப்தமும் ஒடுங்கிப் போக அவள் விழிகள் மிரண்டன..
"மாமா.." அதிர்ச்சியோடு அவனைப் பார்த்த படி.." எதுக்காக இப்போ என் மேல இவ்வளவு கோபப்படுறீங்க.. அவ உங்க மேல எவ்வளவு சீப்பான பழியை போட்டுருக்கா.. அவள ஒரு வார்த்தை சொன்னதுக்கு நீங்க இப்படி என்ன திட்ட வருவது சரியில்ல.. .. முதல்ல அவ இங்க இருக்கிறத அத்தை கிட்ட போன் பண்ணி சொல்றேன்.." என அவசரமாய் அவள் போனை எடுக்க சட்டென தன் கரத்தில் உருவி கொண்டான் ஆரியன்..
"மாமா.. என்ன பண்றீங்க முதல்ல என் போனை கொடுங்க.. " பாய்ந்து வாங்க முற்பட்டவளிடம்.. எங்கே தாயிடம் கூறி விடுவாளோ.. ஒருவேளை தாய்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால்.. இதையே ஒரு பெரிய பிரச்சினையாய் பூதகரமாய் ஊதி இன்னும் அவளுக்கும் தனக்கும் இடையேயான விரிசலை இன்னும் பெரிது படித்து விடுவார் என்பது நிதர்சனமான உண்மை..
" அதெல்லாம் அம்மா கிட்ட சொல்ல வேண்டாம்.. "குரல் இறுக கூறினான்..
"ஏ.. ஏன்.. எதுக்காக அத்தை கிட்ட சொல்ல வேணாம்னு சொல்றீங்க.." வார்த்தைகளினில் படபடத்தாள் ரூபா.. வந்ததிலிருந்து அவன் பேசும் முறை சரியில்லையே..
இப்போதே தான் ஜான்வியை காதலிப்பதை இவளிடம் கூறி விடலாமா எழுந்த யோசனையை உடனடியாய் கைவிட்டான் ஆர்யன் . அவள் இங்கு இருப்பதையே தாயிடம் உடனடியாய் கூறுவேன் என அவள் பிடிவாதம் பிடித்து கொண்டிருக்க.. இப்போதுஇந்த விஷயத்தை கூறினால் நிச்சயம் குடும்பத்திற்குள் ஒரு பெரிய பிரளயத்தையே உண்டு செய்து விடுவாள் என்பது உறுதி.. அதோடு தாய்க்கு மட்டும் ஜான்வி இங்கிருக்கும் விசயம் தெரிந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அலுவலகத்திற்கே வருவதோடு அவளையும் கண்டு கண்ட வார்த்தையினால் பேசி காயப்படுத்தி விடுவார்.. ஏற்கனவே தான் அவளை வார்த்தைகளில் துடிக்க விட்டது போதாதா..
இப்போதைக்கு இந்த விஷயத்தை இவளிடம் கூற வேண்டாம் "என முடிவாய் எண்ணிய படி இதழ் விரித்து சிரித்தான்.
"மாமா.. " ஏன் சிரிக்கிறான் என்று ரீதியில் விரிந்த விழிகளோடு அவள் புரியாமல் பார்க்க.. " ரூபா நீ எதுக்கு அவளைப் பார்த்து இவ்வளவு ஷாக் ஆகுற.. " இவ்வளவு நேரம் டென்ஷனோட பேசிக் கொண்டிருந்தவன் குரல் சட்டென இலகியதில் என்னவாயிற்று இவருக்கு புரியாமல் பார்த்தாள்.
"இப்ப எதுக்கு அம்மாகிட்ட சொல்லி ஆகணும்னு இப்படி குதிக்கிற.." இதுவும் அதே இலகு குரலில் தான்.
" மாமா.. அவளை பத்தி உங்களுக்கு தெரியல.. நீங்க இங்கே இருக்கிறது தெரிஞ்ச உங்கள மடக்கணும்னு நீங்க வேலைக்கு சேர்ந்திருப்பா.. இவ்வளவு நாளா நீங்க அத்தை கிட்ட இந்த விஷயத்தை சொல்லாம இருந்ததே தப்பு.. " தன் கற்பனையை பன்மடங்காய் பெருக்கிக் கூறினாள் ரூபா..
" இருக்கலாம்.. " அசட்டையை தோள் குலுக்கினான் ஆர்யன்.. " ஆனா நான் தான் அவளை கண்டுக்கிறதே இல்லையே.. அவள ஒரு ஆளா நா மதிச்சா தானே அம்மா கிட்ட அவளை பத்தி சொல் லிருக்கணும்.. என்ன பொறுத்த வரைக்கும் அவ இங்க வேலை பாக்குற சாதாரண ஒர்க்கர் அவ்வளவுதான்.. " உறுதி அவன் குரலில் பிரதிபலிக்க கேட்டவளுக்கு இப்போதுதான் மனதில் இருந்த பாரம் சற்று விலகியது..
" அப்போ உண்மையாவே அவள் உங்களுக்கு வெறும் ஒர்க்கர் அப்படித்தானே.. "என துளிர் விட்ட நம்பிக்கையோடு ரூபா கேட்க.. கண்டிப்பா.. கண் சிமிட்டி புன்னகைத்தான்.
" ஆனா அவளை நான் ஒரு வார்த்தை சொன்னதுக்கு நீங்க அவ்வளவு கோபப்பட்டீங்களே.. " மீண்டும் எழுந்த கேள்வியோடு நிற்க.." பின்ன அவ இங்க வெறும் ஒர்க்கர் மட்டும்தான்.. அவ மேல பர்சனல் வெஞ்ஞான்ஸா காட்டி அவள உயர்த்தி விட சொல்றியா.. ப்ளீஸ் ரூபா நீயும் அவ கிட்ட சண்டை போடுற மாதிரி சில்லறையா நடந்துக்காதே.. மத்தவங்க பாத்தா நமக்கு தான் இமேஜ் டவுன் ஆகும்.. மூன்றாம் மனுஷனை போல் அவளைப் பற்றி கூறிய வார்த்தைகளில் ரூபாவின் முகம் தாமரையாய் மலர்ந்தது...
" அப்படின்னா அவ மேல உங்களுக்கு எந்த ஃபீலிங்ஸ் இல்ல அப்படித்தானே மாமா.." கண்கள் மின்ன கேட்டாள்.
ம்ம்ம்.. ம்ம்ம்.. தலையை ஒரு மார்க்கமாய் உருட்டியவன் அதோட அந்த பேச்சை மாற்ற.. என்ன சாப்பிடுற ...டீயா காபியா.. வந்ததும் வராதுமா உபசரிக்க கூட விடாம தேவையில்லாத பிரச்சனையை இழுத்து விடுற.. பெரிதாய் குறைபட்டுக் கொள்ள அவன் மீது முழுதாய் சாய்ந்தாள்
ரூபா.. அவன் முகம் மாறியது..
கண்டுகொண்டதாய் தெரியவில்லை அவள்.. "மாமா.. நமக்கு கல்யாணம்னு அத்தை சொன்னதும் எனக்கு எவ்வளவு ஹாப்பி தெரியுமா.. என்னால இன்னும் நம்ப முடியல.. நீங்க நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்கன்னு.." அவன் சட்டை பட்டனை திருக்கியபடியே கொஞ்சலாய் கூறி கொண்டிருக்க.. ஏற்கனவே தன்னை கண்டால் சுற்றி சுற்றி வளைய வருபவள் இப்போது திருமணம் என்பதில் இன்னும் உரிமை எடுத்துக் கொண்டு தன்னோடு பழக கண்டு.. அவள் தோள் பற்றி விளக்கி நிறுத்தினான் ஆரியன்..
மாமா.. முகத்தை சுளித்தாள் அவள்..
" யாராவது வந்தா தப்பா போயிடும் ரூபா.. " அவன் கூறிய வார்த்தைகளில் மீண்டும் மலர்ந்தது அவள் முகம்..
" அப்படின்னா உங்களுக்கு ஓகேவா.. கண்கள் மின்ன கேட்டவள்.. " சரி சரி.. அப்பா இங்க வேண்டாம்.. வீட்டுக்கு போய் பாத்துக்கலாம்.. " என காலால் டைல்ஸ்சில் கோலம் போட்டபடி வெட்கத்தோடு கூறி நிமிர்ந்து அவனை பார்த்து கண்ணடிக்க.. இதழ் கடித்து தன்னை அடக்கி கொண்டு நிற்பதை தவிர்த்து வேறு வழி தெரியவில்லை அவனுக்கு..
அவளோடு நிற்கும் ஒவ்வொரு நொடியும் ரணமானது அவனுக்கு.. மெல்லமாய் தள்ளி நின்று கொண்டவனாய்..
"சரி நீ உட்காரு.. ரவுண்ட்ஸ் போக வேண்டிய நேரம் போயிட்டு வந்துடறேன்.. அவன் வெளியே செல்ல முற்பட.. சட்டென அவன் கையோடு பிடித்து நிறுத்தினாள்..
என்ன மாமா.. உங்கள பாக்க அவ்வளவு ஆசையா ஓடி வந்து இருக்கேன்.. நீங்க என்னன்னா இப்படிவிட்டுட்டு போறேன்னு சொல்றீங்க.. குரலில் குழைந்தாள்.
"வேலை டா.. தவிர்க்க முடியாதில்லையா.. உனக்கு ட்ரிங்ஸ் கொடுக்க சொல்றேன்.. குடிச்சிட்டு இங்கேயே இரு.. நான் போயிட்டு ஷார்ப்பா 15 மினிட்ஸ்ல வந்துடுவேன்.." அவன் கூற.. அரை மனதோடு அவள் தலை ஆடியது..
தப்பித்தோம் பிழைத்தோம் என அவசரமாய் அறையில் இருந்து வெளியே வந்தவனுக்கு இப்போதுதான் அடைத்து நின்ற மூச்சு சற்று இலகுவாய் வெளியேறியது..
" என்ன ஜான்வி.. சார் எதுவும் சொன்னாரா.. ஏற்கனவே காலைல இருந்து உன் முகம் ஒரு மாதிரி அப்செட் ஆயிருந்தது.. இப்ப இன்னும் டல்லாகிடுச்சே.. ஒன்னும் பிரச்சனை இல்லையே" என கேட்ட திவியின் வார்த்தைகளில் திரும்ப கூட முடியாது கண்கள் குளம் கட்ட அமர்ந்திருந்தாள் ஜான்வி..
" என்னதான் அவன் வாழ்க்கையை பார்த்துக்கொள் என நேற்றேகூறி இருந்தாலும் உரிமையாய் ஒருவள் அவனை கட்டி அணைத்துக் கொண்டு நின்றதில்.. மனதில் சிறு வலி தோன்றியதென்னவோ உண்மை.
"ஒண்ணுமில்ல.." கலங்கிய கண்களை துடைத்து விட்டபடி அவள் கூற.. "ஜான்வி அலறியா விடுடி.. எதனாலும் சரியாகிவிடும் மனசு போட்டு குழப்பிக்காத.. '' தோழி ஆறுதல் கூறியவளாய் பார்வை அவன் அறையின் மீது பதிந்தது..
" ஆமா புதுசா யாரோ ஒருத்தி உள்ள வந்தாலே யார் அவ.. உனக்கு அவளை தெரியுமா..?? "
.. ம்ம்ம்.. மிதாவோட கசின்..
அப்படின்னா இவருக்கும் அத்தை பொண்ணு தானே?? "
"ம்ம்ம்.."
" அப்படின்னா கட்டிக்க போற முறை.. " அவள் இழுக்க.. எதுக்கு இப்போது இந்த டீடைல்.. என்ற ரீதியில் பார்த்தவளிடம் தேங்க் காட்... மலர்ச்சியாய் கண்களை மூடினாள் திவி..
ஜான்வி புரியாமல் பார்க்க.. இவ்வளவு நாளா அந்த சாருக்கு ஆள் கிடைக்காமல் தான் உன்னை பிடிச்சு தொங்கிட்டு.. கத்திக்கிட்டு இருந்தாரு... இப்பதான் ஆள் வந்துடுச்சுல்ல கவனம் எல்லாம் அந்த பக்கம் திரும்பிடும்.. திட்றதுக்கு சொன்னேன்.. திட்டுறதுக்கு.." கண் சிமிட்டி சிரிக்க
" திட்றதுக்கு மட்டும் இல்ல.. இனி எல்லா மாவும் அவருக்கு அவள் தானே இருக்க போறா.. " வார்த்தைகளோடு இன்னும் அதே அமைதியாய் அவள் இருந்ததில்..
தான் கூறிய காமெடி அவள் விட்டதில் " அத விடு.. நீ ஏன் காலையில இருந்து ஒரு மாதிரியாவே இருக்க.. என்ன உனக்கு உன் ஹஸ்பண்டுக்கும் எதாவது சண்டையா.. " திவி கொக்கி போட்டு நிறுத்தியதில் இவ்வளவு நேரமாய் மனதின் ஓரத்தில் முடங்கி கிடந்த காலையில் இருந்து அசோக் செய்த வேலை எல்லாம் நினைவு வர.. இதழ் கடித்து அமைதி ஆனாள்..
அவன் தன்னை நிராகரிக்கிறான் என வெளிப்படையாய் கூற வார்த்தைகள் வரவில்லை..
சோர்ந்து அவளை பார்க்க.. " ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் குள்ள இதெல்லாம் சர்வ சாதாரணம் தானே.. " ஆறுதலாய் கூறினாள் திவி..
"ம்ம்ம்.." தலையை மட்டும் ஆட்டியபடி தன் வேலையில் அவள் மூழ்க எத்தனிக்க..
அவளிடம் ஏதோ பேசுவதும் அவள் அவளிடம் கலங்கிய கண்களோடு பதில் அளிப்பதையும் கண்ட ஆரியனுக்கு.. மூளையில் சட்டென மின்னல்.. மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து போக..
" அப்படின்னா நான் ரூபா கூட இருந்தா இவளுக்கு ஹர்ட் ஆகுதா.. அப்படினா இவ இன்னும் என்ன காதலிக்கிறான்னு தானே அர்த்தம்..இது.. இது தான் போசசிவ்.. எனக்கு புரிஞ்சிடுச்சு.. " என வேக நடையோடு அவன் உள்ளே செல்ல.. ரவுண்ட் செல்கிறேன் எனக் கூறியவன் அடுத்த கணம் உள்ளே வந்து நிற்கிறானே.. புரியாமல் பார்த்த ரூபாவிடம்.. " உனக்கும் ரூம்குள்ளே இருக்கிறது போர் அடிக்கும்ல.. நீயும் என் கூட ரவுண்ட்ஸ் வரியா.." என கேட்டதில் இதற்கு தானே ஆசைப்பட்டேன் பாலகுமாரா.. என்ற ரீதியில் கண்கள் மின்ன சட்டென எழுந்து அவன் கரம் கோர்த்திருந்தவள் அவனோடு கிளம்பி இருந்தாள்..
கருத்துகள்
கருத்துரையிடுக