அசோக் வந்து இரண்டு நாட்கள் முழுதாய் முடிந்திருந்த வேளையிலும் அவன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.. அவன் பேச்சும் பரிபாஷனைகளும் குழந்தையோடு ஆரம்பித்து அவளுடனே முடிந்து விடுகின்றன..
ஏற்கனவே செதுக்கி வைத்தார் போல் இறுகி நிற்கும் முகம் இப்போது இன்னும் கடுத்துக் கொண்டிருந்தது.. அவன் தன்னை நிராகரிக்கிறான் என தெரிந்தும் ஓரிருமுறை.. " என்னாச்சு அசோக்.. ஏன் என்கிட்ட பேச மாட்டேங்கிற "என அவளே வெளிப்படையாய் கேட்டிருந்த போதிலும் அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே.. கூறும் குரலிலும் சுரத்திருக்காது..
அவன் சட்டையை பிடித்து உரிமையாய் கேட்கும் அளவிற்கு அவள் ஒன்றும் நெருக்கம் இல்லையே.. அமைதியாக கடந்து விடுவாள்.. ஆனால் மனதில் மட்டும் எழுந்து சுணக்கத்தை தடுக்கவே முடிவதில்லை..காலை எழுபவன் வழக்கம் போல் பிள்ளைக்கு எந்த குறையும் வைக்காது கிளப்பி விட்டு தானும் அலுவலகத்திற்கு புறப்பட்டு விடுகிறன்..
" நான் வேணும்னா உன்ன கொண்டு போய் டிராப் செய்யவா" என்ற வார்த்தை அவனுக்கு மெமரி ஹிஸ்டரியிலிருந்து முழுதாய் அழிக்கப்பட்டு விட்டது போலும்..
ஜான்வி தான் அவனோடு பேச இல்லாத காரணங்களை எல்லாம் இழுத்து கூட்டி பழையபடி அவனோடு பேச முயல்கிறாள்.. ஆனால் அதையும் அந்த கல்நெஞ்சக்காரன் நாசுக்காய் தவிர்த்து விடுகிறானே..
" டைம் ஆச்சு அசோக்.. பாப்பாவ கிரஷுல விட்டுட்டு பஸ்ல போறதுன்னா ரொம்ப லேட் ஆகிவிடும்.. என்ன டிராப் பண்றியா.." ஜான்வியை கேட்ட போதிலும்.. "ஒன்னும் பிரச்சனை இல்ல" அவன் முதல் வார்த்தையில் அவள் விழிகள் விரிந்தனவே..
ஆனால் அதை தொடர்ந்து.. "பாப்பாவ விட்டுட்டு போக தானே நேரமாகும்.. இட்ஸ் ஓகே.. பாப்பாவ நான் விடுகிறேன்.. நீ ஆபீஸ்க்கு கிளம்பு.." என கூறியதோடு அவள் விழித்து நின்ற வேளையிலேயே கிளம்பி வெளிவந்த குட்டி பாவாடை சட்டை போட்ட குழந்தையை வாரி அனைத்து பைக்கில் தன்னோடு ஏற்றி கிளம்பி விட்டிருந்தானே...
முழுதாய் சோர்ந்து போனாள் ஜான்வி.. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன் என்ன பிரச்சனை என்றும் சொல்லாமல் அதை சரி செய்யும் முயற்சியும் செய்யாமல் என்னை ஏன் இப்படி ஒதுக்க வேண்டும்.. ஏனோ அவன் ஒதுக்கலை ஒப்புக்கொள்ள முடியாமல் அழுகை மூட்டி கொண்டு வந்தது..
முகத்தை வருடி சென்ற ஜன்னல் காற்றும்.. தனக்கெனவே இதம் கொடுப்பதற்கு என மேகத்திற்குள் மறைந்த கதிரவனும் அவள் கண்களுக்கு தென் படவில்லை.. மனதையும் குளிரூட்டவில்லை.. அவன் தன்னை அழைத்துச் செல்ல மாட்டேன் என நாசுக்காய் கூறியது மட்டுமே மீண்டும் மீண்டும் நினைவலைகளில் ஓட.. நான் அப்படி என்ன பண்ணிட்டேனாம்.. கோபமாய் வந்தது..
வந்ததும் வராததுமாய் ஓடி வந்து அவள் கைகள் ரெண்டையும் பிடித்துக் கொண்டாள் திவி..
என்னாச்சுடி இவ்வளவு வேகமா ஓடி வர.. இருந்த கடுப்பில் குரல் தானாக டல் அடித்தது.. ஆனால் அதை அறியும் நிலையில் திவி இல்லை போலும்.. அல்லது இத்தனை நாட்களாய் அவள் அப்படியே இருப்பதில் பழகி விட்டதோ..
இந்த ஆரியன் சார் கூட ஒரு பொண்ணு இருந்துச்சே??
ம்ம்.. ரூபா..??
ரூபாவோ.. பீப்பாவோ..?? உதட்டை இழுத்து சுழித்தால் திவி.. இவ வந்ததுல இருந்தே எனக்கு கொஞ்சமும் பிடிக்கல.. எப்ப பாத்தாலும் அவரை ஒட்டிக்கிட்டு நடக்கிறது என்ன..உரசி கிட்டே போறதென்ன.. எரிச்சலா இருக்கும்.. இதுல இன்னைக்கு என்ன ஹைலைட் தெரியுமா போட்டு இருக்கா பாரு ஒரு டிரஸ்.. அசோகையாய் முகத்தை சுளித்தவள்.. நீ வா.. நானே காட்டுறேன் என அவள் கையை பிடித்துக் கொண்டு ஓட அவள் நிறுத்திய இடத்தில் கண்டவளுக்கு மூச்சடைத்தது.
ரூபா பணக்கார வீட்டு பெண்.. வசதியான வீடும் கூட தான்.. நம்ம போடுற டிரஸ்லயே நம்மளோட வேல்யூ தெரியனும் மிதா.. என எத்தனையோ முறை தன் தோழியிடம் வெளிப்படையாய் கூறி கூட கேட்டிருக்கிறாள்.. இப்படி மூன்று அடி ஆழத்தில் கழுத்தும் எட்டடிக்கும் குறைவான சட்டை பாவாடையிளும் .. மேலே போடப்படாத துப்பட்டாவிலும்.. அப்படி என்ன தகுதி தெரியப்போகிறதோ..
ஏன் அவள் இங்கு வந்த இரண்டு நாட்களிலும் கூட அப்படி ஒரு பிராக் அல்லது இறுகிய டி-ஷர்ட்டும் நீள் பாவாடையமாக தான் வந்திருக்கிறாள் ஆனால் இன்று..
உடை எங்கே எனக் கேட்கும் அளவிற்கு தசைகளை இறுக்கி காட்டும் ஸ்லீவ்லெஸ் ஷார்ட் டாப்போடு.. முழங்காலுக்கு மேலே ஏறிய குட்டை பாவாடை.. அங்கிருக்கும் அனைத்து பெண்களையும் முகம் சுழிக்க வைத்தது. இதில் வேறு பேசுகிறேன் பேர்வழி என வழிந்து நின்ற ஒரு சில ஆண்களிடம் கைகளை உயர்த்தி உயர்த்தி ஏதோ தனக்கு தான் அனைத்தும் தெரிந்தது போல் பாவலா காட்டிக் அவள் பேசிய தோரணையில் அவள் ஒவ்வொரு முறை கையை உயர்த்தும் போதும் தன் உயரத்திற்கும் வெகுவாகவே மேல ஏறி தெரியும் அவள் இடைவேறு மற்ற பெண்களையும் அசௌரிகத்திற்கு உண்டாக்கியது..
கூறியது போல் அவள் ஹை கிளாஸ் ஆக இருக்கலாம்.. ஆனால் அங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் ஒருவேளை சோற்றுக்காகவும் வேலைக்கு வரும் சாதாரண மிடில் கிளாஸ் தானே.. அப்படியும் ஒரு சிலர் மேடம் ஒக்காந்துக்கோங்க.. என டேபிள் மறைத்த அந்த இருக்கையை காட்டினாலும் நோ.. நோ.. இட்ஸ் ஓகே.. என்றபடி வழிந்து நிற்பது கூட தெரியாமல் அவர்களுக்கு எக்ஸ்பிளைன் செய்கிறேன் என அவள் கூறிக் கொண்டே இருந்த விதத்தில் பார்க்கும் அனைவருக்கும் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் தான் வந்தது..
வேலை பார்ப்பதில் பாதி ஆண்கள் அவள் முன்னால் அசம்பல்.. எத்தனை பேர் வந்ததில் அவளுக்கும் அலம்பல் தான்.. இது தெரியாம எத்தனை பேர் இருக்கீங்க.. வாங்க நான் சொல்லி தரேன்.. என லிப்ஸ்டிக் பூட்டிய வாயை அசைத்து ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தாள்.
திவி காட்டிய பின் அதற்கு மேல் தான் உண்டு தன் வேலையுண்டு என ஜான்வியால் இருக்க முடியவில்லை.. என்ன இருந்தாலும் அவளும் ஒரு பெண் அல்லவா.. நின்ற அனைவரையும் தாண்டி அவளை நெருங்க.. அவளைப் பார்த்ததும் ரூபாவின் உதடுகள் ஏளனமாய் சுழிந்தன.
" ரூபா உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்" தழைந்த குரலில் அவள் கூறி முடிப்பதற்குள் " கால் மீ மேடம்.." அதிகாரம் தூள் பறந்தது..
முகம் கருத்து போனாள் ஜான்வி.. இருந்தும் அடுத்த நிமிடமே அவள் குணம் தான் அறியாததால் என தனக்கு தானே சமாதானப்படுத்திக் கொண்டு மேடம்.. கொஞ்சம் என் கூட வாங்களேன்.. என மெல்லிய குரலோடு கூற ..
"ஹேய் ஷிட்.. எதுக்கு என் டைம் வேஸ்ட் பண்ற..எதுனாலும் இங்கேயே சொல்லு.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. அவள் விழிகள் முன்னே வரிசை கட்டி நின்று இருந்தவர்களின் மீது படிய.. " இவளுக்கு எதுக்கு இந்த வீண் வேலை.." பல்லை கடித்தாள் திவி.
அது உங்க டாப்ஸ்.. என ஜான்வி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே.. முகம் படுத்துவிட்டது ரூபாவிற்கு..
என் டிரஸ்.. என்ன சொல்ல வந்த.. அவள் கண்கள் உறுத்துவிழி க்க "இல்ல மேடம்.. அது. நீங்க கை தூக்கும் போது.. "அது.." என தர்ம சங்கடமாய் கூறி முடிப்பதற்குள் வாய மூடு.. முகத்தில் அறைந்தால் போல் அந்த இடமே அதிரும் அளவிற்கு கத்தி இருந்தாள் ரூபா..
'' இவ்வளவு பெரிய பொசிஷன்ல இருக்கிறவரோட ஃபியான்சி நான்.. எவ்வளவு தைரியம் இருந்தா.. என் ட்ரசபத்தி என்கிட்டே வந்து குறை சொல்லுவ.. உன்ன.. "என இவ்வளவு நாள் தேக்கி வைத்திருந்த பகையையும் வெறுப்பையும் காட்ட இதுதான் நல்ல சமயம்.. என்பது போல் ஓங்கி அறையப்போக.. சட்டென கரம் காற்றில் நின்றதில் அவள் விழிகள் விரிந்தன..
எதிரில் சுட்டெரிக்கும் விழிகளோடு நின்று இருந்தாள் ஆரியன்.. ஆ.. ஆரி.. வார்த்தைகள் வர தடு மாறியது..
இவன் பெயரை சாக்காய் வைத்து தானே ஆட்டம் போட எண்ணியது..
இவ்வளவு நேரம் மீட்டிங்..மீட்டிங்.. என உள்ளே இருந்தவன் இப்போது மட்டும் திடீரென எங்கிருந்து முளைதான்.. என விழித்துக் கொண்டு நிற்க பிடித்திருந்த அவள் கரத்தை உதறிவிட்டான் ஆரியன். கண்களில் இன்னும் அனல் தவிப்பு போகவில்லை. "என்ன பண்ற ரூபா' அடிக்குரலில் கேட்டதும் அவள் உடல் தூக்கி போட்டது..
"ஆ.. ஆரியன்.. மாமா.. இவ தான்.. என்ன.. என் டிரஸ்.." என அரைகுறையாய் ஏதோ உளறி முடிப்பதற்குள் சுற்றி இருந்தவர்களில் ஒரு பார்வை பார்த்துவிட்டு வா.. அவளை கையோடு இழுத்துக் கொண்டு நடந்தான்.
முகம் கருத்தாள் ஜான்வி.. ஏதோ அவள் தான் கேள்வி பொருள் போல் அங்கிருந்தவர்கள் பார்த்த பார்வையில்.. நல்லது செய்யப்போயும் அவளை கொஞ்சமும் புரிந்து கொள்ளாது அவமானப்படுத்திவிட்டு சென்றவளையும்.. ஒரு வார்த்தையும் கூறாமல் அழைத்துச் சென்ற ஆர்யானையும் உக்கிரமாய் முறைத்து விட்டு வேகமாய் ஜான்வி அருகில் ஓடி வந்தாள் திவி.
" உனக்கு எதுக்கு இந்த வீண் வேலை.. நானே சும்மா கை கட்டி நின்னு வேடிக்கை தானே பார்க்கிறேன்.. அவ பண்ற அலப்பறைக்கு இதெல்லாம் அவளுக்கு தேவைதான்.. அப்படி இருக்கும் போது நீ எதுக்கு அவளுக்கு ஹெல்ப் பண்றேன்னு ஓடி போற.. " அவள் காதருகில் கிசுகிசு தவளை பாவம் டி அப்படியெல்லாம் பேசாத.. என அமைதியாய் தன்னிடத்தில் வந்து அமர்ந்து விட்டால் ஜான்வி.
வார்த்தைகள் என்னமோ சமாதானமாய் இருந்த போதிலும் அவள் முகம் சிறுத்தைதான் போயிருந்தது.. நீ மாற மாட்ட என நொடித்துக் கொண்டபடி தன் சிஸ்டத்திற்குள் திரும்பிக் கொண்டால் திவி.
அறைக்குள் வந்ததும் அவள் கருத்தை பட்டென உதறி நின்றான் ஆரியன்.. பார்வை அவளை பொசுக்கி கொண்டிருந்தது.
என்ன செஞ்சுகிட்டு இருக்க ரூபா நீ.. எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிருக்கேன்.. உன்னோட பர்சனல் வெஞ்ஞன்ஸ் எல்லாம் ஆபீஸ்ல காட்டக்கூடாதுன்னு.. நீ என்னன்னா கொஞ்சமும் பொறுப்பில்லாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்க.. " எரிச்சலில் பிடரியை அழுந்த கோதினான்.
" மாமா என்ன மட்டும் ஏன் திட்டறீங்க.. அந்த ஜான்வி என்ன பண்ணா தெரியுமா? நான் ஒன்னும் காரணம் இல்லாம அப்படி நடக்கல.. நாங்க அத்தனை பேருக்கு சொல்லி தந்துகிட்டுருக்கேன்.. அவங்க முன்னாடி என் டிரஸ் பத்தி குறை சொல்றா அவ".. என கூறி முடிப்பதற்குள் வாய மூடு.. அவன் கர்ஜித்ததில் சற்று நேரத்தில் முன் அவள் முகம் கருக்க இவள் கூறிய வார்த்தை இப்போது இவளுக்கே ரிப்பீட் அடித்தது.
மாமா.. பயத்தில் அதிர்ந்தாள்..
" நானே கேட்கிறேன்.. ஆபீஸ் வரப்போ போடுற ஃபார்மல் வேர் இதுதானா..
இது என்ன ஆபீசா.. இல்லனா பப் பார்ட்டியா.. என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற ரூபா நீ.. தயவு செஞ்சு இப்ப எல்லாம் போட்டு கிட்டு ஆபீஸ்க்கு வராத.." தலையில் கை வைத்தான்.
காலை அவள் எழுவதற்கு உள்ளாகவே கிளம்பியது இதற்காக தானா.. தூக்க கலக்கத்தில் கண்களை கசக்கியபடி அவள் எழுந்து வர முக்கியமான வேலை நீ இன்னைக்கு வீட்டிலேயே ரெஸ்ட் எடு.. போர் அடிச்சா வெளியே எங்கேயாவது சுற்றிப் பார்த்துவிட்டு வா என கையில் தன் கார்டை திணித்துவிட்டு வந்திருந்தானே..
இந்த இரண்டு நாட்களாய் அவள் செய்த தொல்லை அவனுக்குமே தாங்க முடியவில்லை.. உடனிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மாமா மாமா.. என வளைய வளைய தன்னையே சுற்றி வருவதும்.. அலுவலகத்தில் ஜான்வி முன் தவிர மற்ற நேரங்களில் அவனுக்குமே பற்றி கொண்டு வந்தது..
அதிலும் தினமும் வீட்டிற்குள் நுழைந்ததும்.
ஏதோ ஆத்மார்த்தமான கணவன் மனைவி போல் தன்னை இறுக கட்டி அணைப்பதும்.. எதிர்பாராத நேரத்தில் முத்தம் கொடுப்பதும்.. அவளுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.. ஆனால் தனக்கு?? நரக வேதனை..
கேட்டால்.. கல்யாணம் செஞ்சுக்க போறவங்க தானே மாமா.. என அதற்கும் சிரித்து வைத்தாள்.. இதற்கெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவர்கள் என பேச தெரிந்தவளுக்கு ஒரு வாய் தோசையும் கூட அவனுக்கு சுட்டு போட தெரியவில்லை.. கடனே என தனக்கு செய்யும் கான்ஃப்ளக்ஸோடு அவளுக்கும் ஒரு பவுல் அவன் தான் போட்டு தர வேண்டியதாகிப் போனது..
சோபாவில் குத்த வைத்து அமர்ந்து கொண்டு அவன் கொடுப்பதை சாப்பிடுவது மட்டுமே அவளின் திருப்பணி.. சாப்பாடு தான் செய்ய வரவில்லை என்றால் சாப்பிட்டதை எடுத்து வைக்க கூட வராதா.. என்ற ரீதியில் எத்தனை மணி நேரம் ஆனாலும் சாப்பிட்ட பவுல் அந்த இடத்தை விட்டு அகன்று இருக்காது.. சோதனை காலம் என தலையில் கை வைத்து அவனே எடுத்துச் சென்று கழுவியும் வைத்து விடுவான்.. அன்று முழுவதும் செய்யும் அலுவலக வேலை.
வீட்டு வேலை.. என சோர்ந்து வந்து அமருபவனை ஒரு நொடியும் வீட்டு விலகாது வேகமாய் ஓடி வந்து கோழி குஞ்சாய் அவன் கைகளுக்குள் பதுங்கிக் கொள்வாள்.. எரிச்சலாய் நெளிவான்..
சொகுசாய் அவன் நெஞ்சின் மீது சாய்ந்து கொண்டு டிவி பார்ப்பாள்.. பேசாமல் உண்மையை கூறி இந்த நரகத்திலிருந்து வெளிப்பட்டு விடலாமா? என யோசனை தோன்றும்போது எல்லாம் அத்தை கிட்ட பேசுறேன் மாமா.. என அவள் போன் எடுத்து விட அனைத்தும் நீரில் கக்கிய உப்பாகி போகும்...
சோதனை?? உண்மையாகவே அவனுக்கு இது சோதனை தான்..
அவன் கூறியதில் முகத்தை சுருக்கி நின்றாள் ரூபா.. ஜான்வியிடம் கூறியது போல் என் உடை என் உரிமை என தன் பஞ்சாங்கத்தை இவனிடம் வாசிக்க முடியாதே..
" உன்னை நான் இன்னைக்கு ஆபீஸ் வர வேண்டாம் வெளிய சுத்தி பாருன்னு சொல்லிட்டு தானே வந்தேன்.. இங்க என்ன பண்ற.. " அடிக்குரலில் அவன் கேட்க.. பாவமாய் பார்த்தபடி.. "நானும் வெளியே போகலாம்னு தான் கிளம்புனேன்.. ஆனா நீங்க இல்லாம போகவே புடிக்கல.. அதான் இங்கேயே வந்துட்டேன்.. ஏன் மாமா நான் வந்தது தப்பா.. அ"வன் திட்டியதில் முட்டிய அழுகையோடு தழுதழுத்த குரலில் அவள் கேட்க கண்களை இறுக்க மூடி திறந்தான்.
ரூபா.. பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அழைத்தான்.
" ஏன் மாமா எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கீங்க.. அவதான் சொல்றான்னு நீங்களும் என்னை திட்டுறீங்களே..!' தழுதழுத்த குரலோடு அவள் கேட்க.. ". எந்த இடத்துக்கு எப்படி வரணும்னு ஒரு டிசைன் இருக்குல்லையா..ஏன் உனக்கு அது தெரியாதா? ஆபிஸ்க்கு இப்படியா வர்றதா.. அதான் ஒரு டென்ஷன்ல இப்படி திட்டிட்டேன்.. சரி நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு.. போய் ரெஸ்ட் எடு.. "அவன் கூறியும் நகராமல் அதே இடத்தில் நின்றாள்.
என்ன??
நீங்க என்ன அவாய்ட் பண்றீங்களா மாமா.. தழுதழு குரலோடு அவள் கேட்க.. அப்படி எல்லாம் இல்லம்மா.. அவன் வார்த்தைகளை கூடாகவே அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தாள் ரூபா.
" ப்ளீஸ் மாமா.. என்ன ஆனாலும் எந்த சூழ்நிலையிலயும் எப்பவும் நீங்க என்ன விட்டுடாதீங்க.. அப்படி விட்டால் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.. எனக்கு நீங்கன்னா அவ்வளவு உயிரு" அவன் நெஞ்சில் சாய்ந்தபடி கண்ணீரில் தழுதழுத்து அவள் கூறிக் கொண்டிருந்த போதிலேயே.. தன் முடித்த பைலுக்கு சைன் வாங்க என சரியாய் அந்நேரம் பார்த்து உள்ளே நுழைந்து இருந்த ஜான்வின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்திருந்தன..
ஒரு நொடி அப்படியே நின்று கீழ் உதட்டை அழுந்த கடித்தவள்.. அடுத்த கனமே அமைதியாய் வந்த வழியே வெளி சென்று இருந்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக