ஆரியனிடம் தாஜா செய்து அங்கேயே அமர்ந்து விட்டாள் ரூபா.. அவள் இருந்தாலும் இல்லை என்றாலும் தன் வேலை தான் உண்டு என தான் இருக்கப் போகிறோம் என அவனும் அதற்கு மேல் அவளை மனதை நோகடிக்க விரும்பாமல் அங்கே விட்டு தன் வேலையில் மூழ்கி விட்டான்..
அடுத்தடுத்ததாய் மீட்டிங் நிமிர கூட முடியாத அளவிற்கு கலங்கடிக்கும் அளவிற்கு வேலை.. இடைவேளை என சிறிது நேரம் மீட்டிங் ஒத்தி வைக்கப்பட்டு இருக்க காலையில இருந்து பேசிக் கொண்டே இருந்தவன் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவாறு நிமிர.. இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பார்த்து பயங்கரமாய் சிரித்துக்கொண்டிருந்தாள் ரூபா..
வயிற்றை பிடித்து கொண்டு அவள் சிரித்தது ஒன்றும் அவ்வளவு நல்ல காமெடியா என தெரியவில்லை.. அப்படியே கேட்டு தானும் பார்க்க ஒன்றும் இது வீடோ.. அல்லது வெளியிடமோ இல்லையே.. ஆபிஸ்!!
மீட்டிங் சமயத்திலும் அவ்வப்போது இப்படித்தானே சிரித்துக் கொண்டிருந்தாள்.. அவள் சத்தம் கேட்கும் ஒவ்வொரு முறையும் எதிர் முனையில் இருப்பவர்கள் ஒரு நொடி விகாரமாய் ஆரியனை பார்த்து மீண்டும் தங்கள் பேச்சுக்குள் ஆழ்ந்ததை அறியாத அளவிற்கு அவன் ஒன்றும் முட்டாளில்லையே.. ஏதோ அவன் நல்ல நேரம் என தான் கூற வேண்டும்..
இவ ஏன் இப்படி பண்றா.. கடுப்பான விழிகளோடு ரூபா.. அவன் அழுத்த குரலில் நிமிர்ந்தவளின் கண்கள் சிரிப்பில் கலங்கி நின்றது..
சொல்லுங்க மாமா..
ஏன் இப்படி கத்தி கத்தி சிரிச்சுகிட்டு இருக்க.. கிலையட்ன்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க.. கேட்டதும் அவள் இதழ்கள் வாட்டமாய் சுழிந்தன.
பின்ன என்ன மாமா பண்றது.. சும்மாவே இருக்கேன் போர் அடிக்குது.. நொடித்தாள்..
சட்டென ஏதோ தோன்ற.. கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வெளியே என்ன செஞ்சுகிட்டு இருந்த..
அதான் சொன்னேனே டவுட் கேட்டுக்கிட்டாங்க.. சொல்லி தந்துட்டு இருந்தேன்..
நீ சிவில் தானே படிச்சிருக்க..
எதற்கு இந்த அடுத்தடுத்த கேள்வி என புரியாமல்.. நீங்க அதான் படிச்சீங்கன்னு நானும் ஆசையா எடுத்து படிச்சேன் மாமா.. மறந்துட்டீங்களா.. சிரித்தாள்.
அப்போ சரி.. அவன் தலை அர்த்தமாய் ஆடியது..
என்ன மாமா..
அப்போ இனிநீ நம்ம ஆபீஸ்லயே வேல பாரு.. சும்மா இருக்கிறதுக்கு வேலை பார்த்தா போரடிக்காதே.. நான் உனக்கு ஏதாவது வொர்க் தரேன் அதை பண்ணு.. செலரி வேணும்னா கூட வாங்கிக்கோ.. அவன் கூறியதில் அசௌகரிகமாய் மாறியது ரூபாவின் முகம்..
மாமா.. மாமா.. அவனை நிறுத்தும் பொருட்டு கிட்டத்தட்ட கத்தி இருந்தாள்..
எனக்கு வேலையா மாமா.. அவள் கேலியான குரலில்.. அதான்சொல்லித் தர அளவுக்கு உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே.. கண்டிப்பா உன்னால பண்ண முடியும்.. அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாய் பயப்படுகிறாளோ என கூறினான் அவன்.
அயோ மாமா.. தலையில் கை வைத்தாள்.. கண்கள் கேலியாய் அவனைப் பார்த்தன.
என்ன மாமா நீங்க.. நம்ம அம்மா அப்பா நம்ம பிள்ளைகளும் உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு சொத்து சேர்த்து வச்சிருக்காங்க.. அதுவும் இல்லாம நீங்களும் கை நிறைய சம்பாதிக்கிறீங்க.. அப்புறம் நான் வேலைக்கு போக வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு.. " அவள் கேட்டதில் புதிதாய் பார்த்தான்.. வேலைக்கு போவது காசுக்காக மட்டும் தானா.. சுயமரியாதைக்காகவும் அல்லவா..
அவளுக்கு எடுத்துக் கூற முனைந்தவனாய் ரூபா.. என ஆரம்பிப்பதற்குள்ளாக கையெழுத்து கும்பிட்டு இருந்தாள் அவள்..
என்ன ஆள விடுங்க மாமா.. இதுக்கெல்லாம் நான் சரி பட வரமாட்டேன்.. அவங்க ஏதோ கேட்டாங்க.. அத்தனை பேருக்கு முன்னாடி நின்னு சொல்லி தருவது எனக்கு பிடிச்சிருந்தது.. சொல்லிக் கொடுத்தேன்.. அவ்வளவுதான்.. அதுக்காக வேலையெல்லாம் பார்க்க சொல்லாதீங்க.. அவள் உதடுகள் சூழ்ந்தன.
நமக்கு ஜாலியா இருக்கணும்.. எல்லா நேரமும் பயங்கரமா ஃபன் பண்ணனும்.. அவ்வளவு தான் ஏய்ம்மே.. மாசம் ஒருமுறை வர்ற சம்பளத்துக்காக நாள் பூரா 9 டு 5 ஜாப் பார்க்கிறது எல்லாம் நமக்கு செட் ஆகாது.. கூறி 32 பற்கள் தெரிய அவள் சிரித்தது ஒன்றும் அவனுக்கு அவ்வளவு குளிர்ச்சியாய் இல்லை.
என்னவோ நீ போரடிக்குதுன்னு சொன்னனால சொன்னேன்.. உனக்கு பிடிக்கலன்னா விட்டுடு.. அதற்கு மேல் என்ன கூறுவது என பிடிபடாமல் அவள் போக்கிலேயே கூற.. அய்யோ மாமா..என்ற படி எழுந்து அவனை நெருங்கினாள் ரூபா..
எனக்கு போர் அடிச்சா என்ன.. அதுக்கு தான் கம்பெனி கொடுக்க நீங்க இருக்கீங்களே.. என அவனை நெருங்கியபடி அவனை தன் நெஞ்சோடு அவனை கட்டிக் கொள்ள.. அவள் மேனி தந்த அழுத்தத்தில் ரூபா என்ன பண்ற.. சட்டென அவளை விட்டு விலகி தள்ளி நின்றான் ஆரியன். இவ்வளவு நாட்களாய் வீட்டில் தான் இப்படியான அலம்பல்கள் என பார்த்தால் இப்போது அலுவலகத்திலும்மா?...
ஏன் மாமா பதறுறீங்க.. நீங்க நம்மள தவிர்த்து வேற யாரும் இல்ல.. குரலில் சினங்கினாள்..
யாரும் இல்லைனாலும் இது ஆபீஸ் ரூபா..அவன் குரல் தானாகவே கடுகடுத்தது.. வெளிநாட்டில் இருந்து படித்து வந்தவள்.. அவள் செயல்லாம் அப்படித்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டாலும் அவளின் இந்த ஓவராய் உரிமையான செய்கைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. முடிந்த மட்டும் சீக்கிரமாய் ஜான்வியின் மனதை மாற்றி விட்டு இவளிடம் உண்மையை கூறி விட வேண்டும்.. உள்ளுக்குள் எண்ணிக்கொண்டான்.
ஒரு பக்கம் தன் சுயநலத்திற்காக அவளை பயன்படுத்துகிறோமோ என எண்ணம் எழுந்தாலும் வெளிநாட்டில் இருந்து படித்து வந்தவளுக்கு இதெல்லாம் சாதாரணம்தானே? ஒருமுறை கூறினால் பத்தோடு 11 என மனம் மாறிவிடுவாள்.. மறுபக்கம் மனம் அறிவுறுத்தியது..அவளைப் பற்றி அறியாதவனா அவன்.. அந்த யோசனையை அதோடு ஒதுக்கினான்.
மாமா.. அவள் வாயெடுக்கும் சமயத்தில் எக்ஸ்க்யூஸ் மீ சார்..என வெளியிலிருந்து கேட்ட குரலில் அவளை பார்வையால் விளக்கி விட்டு எஸ்.. உள்ளே அழைத்தான் ஆரியன்..
கையில் ஏதோ பைலோடு வந்தாள் ஜான்வி. அவளை கண்டதும்.. எப்ப பாரு சிவ பூஜைக்குல கரடி நொழஞ்ச மாதிரி..ஆர்யன் அருகில் உரிமையாய் நின்று அவள் கூறிய வார்த்தைகள் ஜான்விக்கு நன்றாகவே கேட்டது.. அமைதியான அந்த அறையில் வார்த்தைகள் ஆரியன் காதிலும் விழ.. விழிகள் மலர எதிரில் இருந்தவளை பார்த்து நின்றவன் ரூபா.. அழுத்தமாய் அழைக்க.. சரி மாமா.. நான் எதுவும் சொல்லல.. சொன்ன உடனே மூக்கு சிவந்துகிட்டு வந்துருவாரு.. கடைசி வார்த்தையை வாய்க்குள்ளேயே கூறியபடி நொடித்துக் கொண்டு தன் இடத்தில் சென்று அமர்ந்து விட்டாள் பார்வை மட்டும் இவர்கள் இருவரிடமே குவிந்து கிடந்தது..
சாரி அவ அப்படி பேசினதுக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. அவள் செய்த வேலையில் எந்த குறையும் இருக்காது என தெரிந்தும் பெயருக்கென ஒரு முறை பார்த்துவிட்டு கையெழுத்திட்டபடியே கூறினான் ஆரியன்.
ம்ம்ஹும்.. ஒரு பக்க இதழ் மட்டும் விரிய ஜான்வி சிரித்தவள் வந்தவேலை முடிய கிளம்பி இருந்தாள்.. ஒரு வார்த்தை இல்லை.. ஏன் பார்வையும் கூட அவனிடம் தங்க மறுத்து விட்டதே.. ரூபா என் பக்கத்துல நின்னதுல கோபம் ஆகிட்டாள.. போசசிவ்.. அவன் கண்கள் மின்னின.
தன் இடத்தில் வந்து அமர்ந்தாள் ஜான்வி. எப்போதும் அவன் அறைக்குள் இருந்து வரும் போது அழுகையோடு கோபத்தோடு வெறுப்போடு என கலக்கமான மனநிலையை காட்டும் தன் தோழியின் முகம் இப்போது எப்படி இருக்கிறது என்று ஆர்வத்தோடு திவி நிமிர்ந்து பார்த்த அடுத்த நிமிடம் சட்டென அதிர்ச்சியாயின அவள் விழிகள்..
ஜானு.. அவள் கரம் மேல் கரம் பதிக்க.. அவள் விரிந்த முட்டை விழியினில்.. ஜான்வி புரியாமல் பார்த்தாள்.. என்னடி ஆச்சு? ஆர் யூ ஓகே.. படபடத்தாள் திவி.
புருவம் சுருக்கி அவள் பார்க்க.. இல்ல.. எப்பவும் அந்த ஆளு ரூமுக்குள்ள போயிட்டு வந்தாலே அழுதுகிட்டு அப்செட் ஆகிட்டு தானே இருப்ப.. இப்போ சாதாரணமா இருக்க.. என்ன அவர் உன்னை எதுவும் சொல்லலையா.. அப்படின்னாலும் அந்த மேக்கப் பைத்தியம்.. அதுவும் எதுவும் சொல்லலையா.. அப்படி இருக்க வாய்ப்பில்லையே.. என மனதில் தோன்றிய சந்தேகங்களை வாய்மொழி கேள்விகளாய் அடுத்தடுத்து இறக்கி வைக்க.. கண்களை ஒரு கணம் அழுந்த மூடி திறந்த படி எதிரில் இருந்த திவியை தீர்க்கமாய் பார்த்தாள் ஜான்வி.
"சொல்லு.. சொல்லு.. "
" மத்தவங்க சொல்றத காதுல வாங்கிக்கிறதும் மூளையில ஏத்திக்கிறதும் என்னுடைய விருப்பம் தானே.. நான் கடந்து போக பழகிட்டேன்.." அவள் கூறிய வார்த்தைகள் இவளுக்கு புரியவில்லை எனினும் தன் தோழி காயப்படாமல் இருப்பதே போதும் என்ற மட்டும் அமைதியாய் திரும்பிக்கொண்டாள்.
அன்றிரவு வீட்டிற்கு வந்த ஜான்வியின் கண்கள் முதலில் தேடியது என்னவோ அசோக்கைதான்..
அக்கா.. என பக்கத்தில் இருந்து பூவிதா அழைக்கும் போதே அவன் இன்னும் வரவில்லை என உணர்ந்து பிள்ளையை அழைக்கவென அவர்கள் வீட்டின் பக்கமாய் நடந்தாள்..
அக்கா.. டயர்டா இருக்கா.. உன்கிட்ட கொஞ்சம் பேசலாம்னு நெனச்சேன்.. குழந்தை விளையாடுவதை பார்த்துக் கொண்டு நின்ற ஜான்வியிடம் கிசுகிசுத்தாள் பூவித.
சொல்லு புவி.. என்ன விஷயம்.. கேட்டவளிடம் மெதுவா மெதுவா என்பது போல் கை ஜாடை அவள் செய்ய இவள் புருவங்கள் சுருங்கின.
என்ன விஷயம்.. காற்றோடு கலந்து வந்தது அவள் குரல்.
வாயேன்.. அப்படி போய் தின்னையில உட்கார்ந்து பேசுவோம். என அவளை இழுத்து கொண்டு நடந்தாள் பூவிதா..
அமர்ந்து ஐந்து நிமிடங்கள் முடிதாய் கடந்தும் அக்கா.. அக்கா.. என்பதை தவிர்த்து ஒரு வார்த்தை முழுதாய் பேசாதவளை பார்த்தபடி யாரையும் காதலிக்கிறாயா புவி.. என ஜான்வி கேட்ட கேள்வியில் அவள் விழிகள் விரிந்தன
எப்படிக்கா..
நாங்களும் உன் வயசு கடந்து தானே வந்திருக்கோம்.. சரி சொல்லு யாரு.. அவள் இதழ்கள் சிறிதாய் சிரித்தன..
ம்ம்ம்.. என் கூட படிக்கிற பையன் வினோத்.. நல்ல பையன்.. நல்லா படிப்பான்.. நம்மள மாதிரி மிடில் கிளாஸ் தான்.. ஆனா எங்க காலேஜிலேயே பெரிய கம்பெனில பிளேஸ் ஆகி இருக்கான்.. இன்னும் 6 மாதத்தில் யூஎஸ் மூவ் ஆகிடுவான்.. அவள் கன்னங்கள் குழைந்தன.
அப்புறம் என்ன.. உனக்கு புடிச்சிருந்தா ப்ரொபோஸ் பண்ணிட வேண்டியதுதானே.. அக்சப்ட் பண்ணிட்டா வேலை ஓவர்.. குறும்பு கொப்பளிக்கும் குரலில் ஜான்வி கேட்க.. பிடிக்காம தான் அவன பத்தி பேசுறேனா... ஆனா அவனே வந்து ப்ரபோஸ் பண்ணிட்டான் அக்கா.. கன்னங்கள் சிவந்தன அவளுக்கு.
சூப்பர்.. அப்போ அடுத்த வேலை வீட்ல விஷயத்தை சொல்லிட வேண்டியதுதானே.. ஆல் சக்சஸ்.. அவள் கூற அய்யய்யோ அக்கா பதறினாள் பூவிதா.
நான் இன்னும் அவனுக்கே ஓகே சொல்லல.. அவள் தயங்க ஏன்.. நீ சொல்றத பார்த்தா நல்ல பையனா தான் தெரியுறான்.. நல்ல வேலைக்கும் போகப் போறான் பிறகு என்ன..
அதுல தான் ஒரு சின்ன சிக்கல் அக்கா.. அவளோட அக்கா அவங்க ஹஸ்பண்டை விட்டுட்டு வீட்டோட வந்துட்டாங்க.. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு.. அவங்க அக்கா அந்த பொண்ணுன்னா இவனுக்கு அவ்வளவு உயிரு.. அவங்கள விட்டுட்டு இந்த us வேலைக்கு கூட அவன் போக விருப்பம் இல்லாத மாதிரி கிளாஸ்ல நிறைய பேர் பேசிக்கிட்டாங்க.. அவங்க மேல பாசமா இருக்கான் சரிதான்.. ஆனா வேலைக்கு போக யோசிக்கிற அளவுக்கு பாசம்னா எனக்கு அவனுக்கு ஓகே சொல்ல தயக்கமா இருக்கு.. அவள் கூறியதில் புரியாமல் பார்த்தாள் ஜான்வி.
எல்லா பொண்ணுங்களுக்கும் தன் புருஷன் தன் மேல உயிரா இருக்கணும்னு தானே ஆசை இருக்கும்.. ஆனா இவனுக்கு அவங்க அக்கா.. பொண்ணுனா அவ்வளவு இஷ்டம். நாளைக்கு நான் கல்யாணம் முடிச்சிட்டே போனாலும் அவன் அவங்க அளவுக்கு பாசமா வச்சுப்பானான்னு தெரியல.. ஒருவேளை நாளைக்கு எனக்கும் அவங்க அக்காவுக்கும் டெர்ம்ஸ் செட் ஆகாம போச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒரே யோசனையா இருக்கு.. நமக்கு இந்த காதலிச்சிட்டு கழட்டி விடுற வேலை எல்லாம் செட் ஆகாது. காதலிச்சா ஸ்ட்ரைட்டா கல்யாணம் தான்.. அந்த நேரத்துல ஏதாவது நெருங்கல் வந்துச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது.. நொந்தபடி அவள் பேச..
நிறைய யோசிக்கிறேன்னு நினைக்கிறேன் பூவிதா.. கூறினாள் ஜானு.
ஆனா யோசிக்காம கல்யாணம் பண்ண முடியாதே அக்கா, காதலிச்சா கல்யாணம் பண்ணனும்னு என்னோட டெர்ம்.. விட்டுட்டு போறது அழுவதற்கு எல்லாம் நமக்கு சக்தி கிடையாது.. ஆனா அவன் ரொம்ப நல்ல பையன்.. ஆனா அவன் கிட்ட இருக்க இந்த சின்ன விஷயம் தான் என உறுத்திக்கிட்டே இருக்கு.. விஷயத்தை கூறியதோடு அவள் முகம் தொங்கி போக திடீரென ம்ம்க்கும்.. கேட்ட செருமல் சத்தத்தில் பெண்கள் இருவரின் கவனமும் மறுபக்கம் திரும்பியது.. அசோக் நின்றிருந்தான்..
இவரா.. அவனை கண்டதுமே வழக்கம்போல் ஆர்ப்பரிக்கும் பயத்தோடு புவி எழ போக.. இவன் எப்போது வந்தான் இன்று சீக்கிரமாகவே வந்து விட்டானே.. மலர்ந்த விழிகளோடு ஜான்வி அவனை பார்த்தாள்..
ஒரு நிமிஷம்.. உள்ளே செல்லப் போனவளை தன் அழுத்த குரலோடு நிறுத்தினான்..
சொல்லுங்க.. வழக்கம்போல் உதட்டை சுழித்தாள்..
நான் வேணும்னா சொல்யூஷன் சொல்லட்டுமா.. அவன் கேட்க.. தாங்கள் பேசியதை மறைந்து நின்று கேட்டானா உடனடியாய் எழுந்த கோபத்தோடு தாயிடம் கூறி விடுவானோ பயமும் கலக்க.. எப்படியோ தன் விஷயத்துக்கு தீர்வு கிடைத்தால் போதும் என எண்ணிய படி சொல்லுங்க.. குரலின் ஸ்ருதி சற்று குறைந்தது..
தங்கள் பேசிய விஷயத்தை தங்கள் அனுமதியில்லாமல் கேட்டதோடு அதற்கு தீர்வையும் கூறப்போகிறேன் என வந்து நின்றவனை வித்தியாசமாய் பார்த்தாள் ஜான்வி.. பொதுவாக இது போன்ற விஷயங்களில் தலையிட மாட்டான் அல்லவா அவன்.. இன்று என்ன.. புதிதாய்.. என பார்த்துக் கொண்டிருக்க.. ஜான்வியை பார்த்தபடியே அழுத்தமான அடிகளை புவிதாவிடம் வைத்தபடி பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான். கண்கள் எதிரில் குட்டி பெண்ணாய் அவன் நெஞ்சு அளவிற்கு நின்று கொண்டிருந்த பூவிதாவை துளைத்தது..
நீ அவன லவ் பண்றியா.. தன் இருகலான கற்களை இல்லை இல்லை குரலை கொட்டினான்..
இதுவரைக்கும் இல்ல.. ஆனா லவ் பண்ணனும்னு ஆசைதான்.. அவன் நல்ல பையன்.. ஆனா அவங்க அக்கா தான்.. அவள் இழுக்க.. ஒரு நிமிஷம் அவளை நிறுத்தினான் அசோக்..
நீ அவனை உண்மையாவே லவ் பண்ணுனா இந்த மாதிரி ஜட்ஜ் பண்ற வேலையை அங்கே இருக்காது.. அவனை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னா என்னென்ன பிராபிட் அண்ட் லாஸ்னு ஏன் யோசிக்கிறே.. அவன் கேட்டதில் மௌனமாய் பார்த்தாள்..
வெறும் காதல்னா ஓகே.. கல்யாணம்னா இதெல்லாம் யோசிச்சு தானே ஆகணும்.. அவள் கூறியது நான் அதை மறுக்கல.. உடனடியாய் கூறியிருந்தான்..
நீ பேசுறது சரிதான்.. ஆனால் அவன் அவன் குடும்பத்து மேல வச்சிருக்க பாசத்துனால உன் மேல அவனுக்கு பாசமில்லாமல் போயிடும்னு ஏன் நினைக்கிற.. தன் குடும்பத்தையே இவ்வளவு தூரம் நேசிக்கிறவன் தன் காதலிக்கிற பொண்ண எவ்வளவு நேசிப்பான்னு யோசிச்சு பாரு.. இத்தனை நாட்கள் உன்கிட்ட காதலா சொல்லாதவன் இவ்வளவு பெரிய வேலை கிடைச்சதோட இன்னைக்கு தேடி வந்து தனக்கு உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருக்கான்னா அவன் மனசுல நீ கண்டிப்பா ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கணும்.. என்றவனை அமைதியாய் பார்த்தாள்.
இது ஒன்னும் பிராபிட் அண்ட் லாஸ் போட்டு செய்ய பிசினஸ் டீல் கிடையாது.. ட்ரு லவ்.. அது இருந்தா மட்டுமே அடுத்த கட்டத்துக்கு போக முடியும்.. வாழ்க்கையை வாழ முடியும்.. உனக்கு அவன புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுச்சுன்னா அவனை அப்படியே அக்சப்ட் பண்ணிக்கோ.. அவன் அக்கா அக்கா பிள்ளைகள் மேல அவன் பாசமா இருக்கான்னா அவனை விட ஒரு படி அதிகமாக நீயும் பாசமா இரு.. அவனோட பாசத்தையும் ஏத்துக்கோ.. உங்க ரெண்டு பேர் லவ்வுக்குள்ள எந்த ஒரு குளறுபடியும் வராது.. இது இப்போ மட்டும் இல்ல எப்பவும்.. எனக்கு என்னவோ நீ சொல்றத வச்சு பார்த்தா அவன் உன் மேல அவங்கள விட நிறைய அன்பு வச்சிருப்பானுதான் தோணுது.. இல்லைனா வாழ்க்கைத் துணைன்னு கேட்கிற அளவுக்கு அவன் வாய் வந்து இருக்காதே.. ஏன்னா ஒருமுறை வச்ச பாசமும் அன்பும் யார் மேலயும் எப்பவும் எந்த காரணத்துக்காகவும் மாறாது.. இந்த வார்த்தைகளில் அழுத்தமாய் அவன் விழிகள் ஜான்வியின் மீது பதிந்து நின்றது..
அவன் பார்வையில் உள்ளுக்குள் ஜிவ்வென்று ஏதோ ஒரு சிவப்பு எறியது அவளுக்கு..
அதனால உன் மேல வச்சிருக்கற காதல் கொறஞ்சிடுமோன்னு நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்ல உண்மையாவே உனக்கு அவன புடிச்சிருந்தா ஓகே சொல்லிடு.. அவன் கூறியதில் இவ்வளவு நேரம் குழப்பத்தில் மண்டி கிடந்த அவள் முகம் தெளர்ச்சியானது.. பளிச்சென்று புன்னகையோடு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
அவங்கள விட என்ன நல்லா பாத்துப்பானான்னு இதுவரை எனக்கு குழப்பம் இருந்துச்சு.. ஆனா நீங்க சொன்னத வச்சு பார்க்கும்போது அவங்கள விட அவன் என் மேல தான் ரொம்ப பாசமா இருக்கான்னு புரியுது.. அதே மாதிரி நானும் அவங்க அக்கா கிட்ட அன்பா இருப்பேன்.. தன் சண்டை சச்சரமான குடும்பத்தை விட்டு வந்த அவங்கள நானும் நல்லபடியா கவனிச்சுப்பேன்.. மலர்ச்சியாய் அவள் கூறிட... ஒரு சின்ன தலைவாசைப்போடு அலட்டிக் கொள்ளாமல் நடந்தவன் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கிருத்திகாவை தூக்கிக்கொண்டு தன் வீட்டிற்குள் சென்றான் அசோக்..
நொடியில் வந்து அவள் மன கலக்கத்தை தீர்த்து வைத்ததோடு அவளுக்கு நல்ல வாழ்க்கை உருவாகவும் காரணமாய் இருந்த அவனை பார்த்தபடி ஜானு நின்று இருக்க. அக்கா.. அவன் சென்றதோடு இவள் தோளை பற்றி மகிழ்ச்சியாய் சுற்றினாள் பூவிதா.. அவள் மகிழ்ச்சியில் லயித்து அவள் விட்டதில் தலைச்சுற்ற சரியாய் அவள் விழப்போன சமயம்.. அவளை தன் தோள் வளைவில் தாங்கி இருந்தான் அகோக்.
குழந்தையை அழைத்துச் சென்றவன் எப்போது திரும்பி வந்தான்.. இவன் என்ன இப்படி திடீர் திடீர் ஷாக் கொடுக்கிறான்.. அவள் விழிகள் முட்டையாய் விரிய வெகு அருகில் அவனின் கூர்மையான முகம்.. ஒரு கையில் தன்மகள்.. மறுக்கையில் தான்.. அவள் பட்டாம்பூச்சி விழிகள் அவன் கழுகு கண்களின் நிலை குத்தின.. அந்த கண்களில் என்ன.. அந்த அடர் இமை விழிகள் அவளை தனக்குள் வாரி சுருட்டி கொண்டிருந்தது..
கருத்துகள்
கருத்துரையிடுக