இதோடு ஒரு வாரம் முழுதாய் கடந்து இருக்க ஜான்விக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்து விட்டது.. பெரியாதாய் ஏதோ செய்து இருக்கிறேன்.. அதனால் தான் தன்னை இவ்வளவு முழுதாய் நிராகரிக்கிறான்.. இல்லையெனில் அன்று தான் கீழே விழும் போது சடுதியில் பாய்ந்து தன்னை தாங்கியவன் அடுத்த சில கணத்திலேயே யாரோ போல் விட்டு வீட்டிலும் கூட எதுவும் நடக்காதது போல தான் உண்டு தன் வேலையுண்டு.. என இருக்க முடியுமா..அவன் தன்னை தாங்கியதில் தன் பழைய நண்பன் கோபம் மறந்து விட்டதாய் நினைத்து வந்தாளே.. ஆனால் இங்கு பழைய குருடி கதவை திறடி.. கதை தான்...
24 மணி நேரமும் அந்த போனையே நோண்டிட்டு இருக்கான்.. காலையிலும் சரி.. மாலையிலும் சரி.. அது சரி மாலை எங்கே.. இரவு தானே வீட்டிற்கே வருகிறான்.. அப்படி அதுல என்னதான் இருக்கோ தெரியல.. மனதளவில் சலித்து போனாள்.. அலுவலகத்தில் ஆர்யனோடு ரூபா இருக்கும் போது கண்டும் காணாமலுமாய் இருக்க வேண்டிய நிலை.. இங்கு இவனோடு கொள்ளும் மன போராட்டம்.. வாழ்க்கையே சலிப்பானதாய் தோன்றியது..
கேட்டால் வேலை என காரணம் கூறி தன்னை தவிர்க்கிறான்.. ஆனால் கிருத்திகா ஒரு நிமிடம் அப்பா.. என கூறினாலும் அந்த போனை வைத்துவிட்டு ஓடி வந்து அவளோடு விளையாட ஆரம்பித்து விடுகிறானே.. அப்போது மட்டும் வேலையில்லையாமா.. நண்பனின் ஒதுக்கம் நெஞ்சை தாக்கியது. அவ்வளவு தூரமாகி போனேனா நான்?? உள்ளுக்குள் மருகினாள்.
ஏதோ கண் கொண்டு கான முடியாத பனி திரை தங்களுக்குள் விழுந்ததாய் தோன்றியது.. கேட்டாலும் பதில் இல்லாமல் நிராகரிக்கிறானே.. அல்லது பெயருக்கென ஏதாவது கூறி சென்று விடுகிறான்..
எதற்கு இந்த தவிப்பு.. அவன் பேசலைனா என்ன.. எனக்கு கோபத்தில் எழுந்த மன கேள்வியோடு.. அப்படின்னா நான் பேசுறேன்.. அவன் எனக்காக எவ்வளவோ செஞ்சுருக்கான்.. இணைந்து வந்தது அவளின் இனக்கமான குரல்..
அன்று அவன் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே சமைத்து பிள்ளைக்கு ஊட்டி உறங்க வைத்து தானும் சாப்பிட்டு முடித்து இருந்தவளுக்கு மண்டையில் பளிச்சென ஒரு ஐடியா.. சமையல் கட்டில் அவன் வைத்திருந்த உணவுகளை எல்லாம் தூக்கி அடியில் பத்திரப்படுத்தினாள்..
இப்ப வந்து என்கிட்ட சாப்பாடு எல்லாம் எங்க இருக்குன்னு கேட்க பேசி தானே ஆகணும்.. இப்போ என்ன பன்றான்னு நானும் பாக்குறேன்.. என நிதானமாய் டிவி முன் அமர்ந்து கொள்ள.. சோதனைக்கோ என்னவோ கையில் வரும் போதே பார்சலை வாங்கி வந்திருந்தான்..
காலடி சத்தம் கேட்டதும் கண்கள் மின்ன திரும்பி பார்த்தவளின் விழிகள் கவரோடு அமர்ந்திருப்பதை கண்டு.. அஷோக்.. கரித்து கொண்டு வந்தன..
நிமிர்ந்தவன் கூப்பிட்டியா ஜான்வி.. வா நீயும் வந்து சாப்பிட வா.. என பேருக்கும் அழைக்காமல் மீண்டும் அடுத்த கனமே ஒரு பார்வையோடு இலைக்குள் தலையை விட்டுக் கொண்டானே..
கால் உதைத்து வந்து அவன் முன் நின்றாள்.. என்னதான் நினைச்சுகிட்டு இருக்க நீ.. அவள் ஆர்ப்பாட்டமான கேள்வியில் அமர்த்தலாய் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான்.
இப்போ என்ன வேணும் உனக்கு.. வார்த்தைகளும் எண்ணி தான் வந்தன.
அவன் கேள்வியில் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.. உனக்காக வீட்டில சமைச்சு வச்சிருக்கேன்.. நீ இப்படி வெளியே இருந்து வாங்கிட்டு வந்தால் என்ன பண்றது.. பொருள் எல்லாம் வேஸ்டா போகுது.. "அவள் கேட்ட அடுத்த நிமிடம் எழுந்தவன்..
வா என்கூட.. என சமையல் கட்டிற்கு அழைத்துச் சென்றான். என்ன செய்கிறான் என புரியாமல் அவள் பின்தொடர உள்ளே ஒவ்வொரு பாத்திரங்களையும் திறந்து காட்ட அதில் இட்லி இருந்த துகள்களோடு பாத்திரம் மூடப்பட்டிருந்தது.
சாப்பாடு எல்லாம் காலி.. பாத்துட்டு தான் போய் வாங்கிட்டு வந்தேன்.. பொருளுக்கான மதிப்பு எனக்கு நல்லாவே தெரியும்.. எதையும் எப்பவும் நான் வேஸ்ட் பண்ண மாட்டேன்.. அவன் அழுத்தமான வார்த்தைகளோடு நகர போக.. அப்புறம் இது என்ன.. என அதுக்கு மேல் தாங்க மாட்டாமல் கீழே தான் பத்திரப்படுத்தி இருந்த உணவுகளை எடுத்து காண்பிக்க அவன் கூர்ப்பார்வை அவளை துளைத்தது.
அ.. அது..அவசரப்பட்டு தானே மாட்டி கொண்டதில் தடுமாறினாள்.
யாருக்கோ தூக்கி கொடுக்க போற மாதிரி இவ்வளவு அடியில் நீ வச்சுருக்கிறது எனக்கு தெரியாது மா.. அடுத்த தடவைலிருந்து சாப்பாடு இல்லைனா இங்க பார்த்து எடுத்துக்கிறேன்.. கூறியவன் அதோட அந்த பேச்சு முடிந்தது என்பது போல் செல்ல.. நில்லு அஷோக்.. அவன் கைப்பற்றி நிறுத்தி இருந்தாள் அதற்கு மேல் அவன் ஒதுக்கம் தாங்க முடியாமல்.
எதுக்கு என்னை இப்படி அவாய்ட் பண்ற.
நானா..
நடிக்காத அசோக்.. இப்ப எல்லாம் நீ சரிவர என்கிட்ட பேசுறதே இல்லை.. என்ன பார்த்தாலே ரொம்ப தூரம் தள்ளி போற..
ஏன்.. அவள் கேள்வியில் கேலியாய் மாறியது அவன் பார்வை.
நான் பேசி என்ன பண்ண போற.. உனக்கு வேண்டியவங்க தான் நிறைய பேர் இருக்காங்களே.. சாரி ஜான்வி.. இந்த பேச்சை இதோட விடு.. நீயும் முடிஞ்ச அளவு என்ன மாதிரி இருக்க பாரு.. பட்டுப் படாமல் கூறி சென்று விட்டான்.
பிரம்மை பிடித்தது போல் அதே இடத்தில் நின்றவளின் விழிகள் அவன் முதுகை வெறித்தன. அப்படி என்ன செய்து விட்டேனாம்.. இப்படி மூன்றாம் மனிதனைப் போல் பேசி நடந்து கொள்வதோடு என்னையும் அப்படி நடந்து கொள்ள சொல்கிறான்.. எத்தனை யோசித்தும் பதில் கிடைக்கவில்லை.. ஆரியனை பற்றி கூறிய போது கூட ஒன்று உன் காதலை சொல்லு இல்லையென்றால் விலகிவிடு என சர்வசாதாரணமாய் தானே கூறினான்.. அப்படியானால் வேறு என்ன தான் காரணமாய் இருக்கும்..??
இங்கு ஆரியனின் தோளில் சாய்ந்து அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தாள் ரூபா.. இருவரும் டிவி பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
கொஞ்ச நேரம் தள்ளி இரேன் ரூபா.. அவள் நெருக்கத்தில் அசௌகரிகமாய் நெளிந்தான் ஆரியன். என்ன மாமா நீங்க.. என்ன மாதிரி பொண்ணு எல்லாம் பக்கத்துல வராதான்னு அவன் அவன் ஏங்கி தவம் கிடக்கான்.. நீங்க என்னன்னா நான் எப்போ பக்கத்துல வந்தாலும் தள்ளிப்போ தள்ளிப்போன்னு சொல்றீங்க.. கேட்டபடி அவன் முதல் பட்டனை கழட்டி மார்பில் விரல்களால் கோலம் போட்டாள்..
ம்ம்ம் ரூபா.. அவள் செயலை அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது தோள் பற்றி விலக்கி விட்டு எழுந்து நின்றான் ஆரியன்.. பார்வை அவளை சுட்டுக் கொண்டிருந்தது.
கூல் மாமா.. கூல்.. எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன்.. நம்ம கல்யாணம் பண்ணிக்க போறவங்க தானே.. இதெல்லாம் இருந்தா தான் சுவாரசியமே.. என்றவள் மீண்டும் நெருங்கி கோலம் போட ஜானுவை வெறுப்பேற்றவென தான் ஆரம்பித்த நாடகம் அதன் போக்கையே மாற்றி கடந்து கொண்டிருக்கிறதே.. இதைக் கடிவாளம் போட்டு எப்படி இழுத்து கட்டுவது என புரியாமல் அவன் பார்த்திருக்க.. திடீரென வந்த ஃபோன் காலில் ஒரு நிமிஷம் மாமா.. என விலகி தன் போனை எடுத்தாள் ரூபா.
சொல்லு கிரேசி... எடுத்த எடுப்பிலேயே சோபாவில் குத்துக்கால் போட்டுக் கொண்டு துள்ளலாய் அவள் பேசிய தோரணையில் தோழி போலும் நினைத்து கொண்டான்.. எப்படியோ கொஞ்ச நேரம் தனக்கு விடுதலை..
ஆமா என் மாமா கூட.. அவள் கன்னஙகள் குழிந்தன..
ஆமாடி அவரே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாரு.. என்றதோடு போனை ஸ்பீக்கரில் போட்டு.. பார்த்துக் கொண்டிருந்தவனிடம் இதை கேளுங்கள் கேளுங்கள் என்பது போல் கண் சாடை காட்டினாள் ரூபா.
ஹலோ ப்ரோ எப்படி இருக்கீங்க.. ஆங்கிலமும் தமிழும் கலந்த குரலில் கேட்டாள் எதிரில் இருந்தவள்.
ம்ம்.. பைன் நீங்க?? வழக்கமான பரஸ்பர பேச்சு.
நாங்க நல்லா இருக்கோம்.. ஆனா நீங்க இப்படி கல்யாணத்திற்கு சம்மதிப்பீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல.. ரூபா சொல்லும்போதெல்லாம் நீங்க கொஞ்சம் ட்ரெடிஷனலான ஆள்.. இவ மார்டனுக்கு செட் ஆகாதுன்னு சொல்லுவோம்.. ஆனா இவ ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட உங்க பேர நூறு தடவயாவது சொல்லிடுவா.. அப்போவெல்லாம் எப்படி இவ்வளவு லவ் பன்றான்னு தோணும்.. அதுவும் அவளை விரும்பாதவர..?? ஆனா ஊருக்கு வந்த கையோட இப்படி உங்களுக்கும் அவளுக்கும் கல்யாணம்ன்னு சொன்னதுல எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா.. கல்யாணம் எப்போன்னு மட்டும் சொல்லுங்க..அடுத்த பிளைட்ல கிளம்பி நாங்க அத்தனை பேரும் அங்க வந்து குதிச்சிடறோம். அந்த பெண் பேசிக்கொண்டே செல்ல.. இவ்வளவு தூரம் இவள் தன்னை விரும்புகிறாளா.. இதை அறியாமல் வெளிநாட்டில் இருந்தவள் இதை கண்டும் காணாமலுமாய் விட்டு விடுவாள்.. என தன் திட்டத்தை கூட அவளிடம் கூறாமல் தன்னோடு அவளை சேர்த்து தவறு செய்து விட்டோமா.. யோசித்து கொண்டிருக்கும் போதே.. மாமா.. அவன் மீது மேனி சரிய விழுந்தாள் ரூபா.
எனக்கு உங்கள அவ்வளவு பிடிக்கும் மாமா.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ சோ மச்.. நீங்கன்னா எனக்கு அவ்வளவு உயிரு.. தயவு செஞ்சு எப்போவும் தள்ளி போக சொல்லிடாதீங்க.. அப்படி மட்டும் சொல்லிட்டா அந்த நிமிஷமே நா செத்துடுவேன்.. அவன் மார்பில் சாய்ந்து கொண்டதில்.. அவள் வார்த்தைகளை நம்ப மாட்டாமல் விழி அகல.. ஏதோ அகல கால் வைத்து மாட்டி கொண்டதாய் விழித்து நின்றான் ஆர்யன்.
வெளிநாட்டிலிருந்து வந்தவள் இந்த உணர்வெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டாள் என எண்ணி தன் நாடகத்தை ஆரம்பித்திருக்க.. ஆனால் அவள் மனதிலும் வெரூன்றி நின்ற விருட்சத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தான் நீரூற்றி வளர்த்ததை எண்ணி அந்த நிமிடம் உறைந்து போனான்..
இல்ல.. ரூபா.. என ஆரம்பித்த வேளையில் தூக்கம் வருது மாமா. அவன் தோளிலேயே சாய்ந்து தூங்க ஆரம்பித்து விட்டாள் ரூபா.. வாய் வரை வந்த வார்த்தைகளை கூற முடியாமல் அவளை தோளில் தாங்கியவன் அன்று இரவு உறக்கம் தொலைத்தான்..
இந்த பழக்கத்தை வளர விடுவது தப்பு எப்படியாவது களைய வேண்டும் என.. ஒவ்வொரு நிமிடமும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறான்.. ஆனால் லாவகமாய் நழுவி விடுகிறாளே பாவி..
அதிலும் அவள் ஜான்வியை பார்க்கும் போதெல்லாம் அவள் சீண்டுவதும்.. அதை ஜான்வி ஒரு பார்வையோடு சாதாரணமாய் கடந்து செல்வதும் மறு பக்கம் முகம் வாடி அமந்திருப்பதும் தன் போசஸிவ் ட்ராமாவின் ஒரு கட்டம் தான் எனினும்.. அவளின் அதிகமான பேச்சை தன்னாலேயே பொறுக்க முடியாது.. உச்சந்தலைவரை உஷ்ண பாலாய் பொங்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் எந்த சுவற்றில் சென்று முட்டிக் கொள்ளலாம் என்ற ரீதியில் ரூபாவிடமே காட்ட அடுத்த நிமிடம் அத்தை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விடுகிறாள் அவள்..
அம்மாவிற்கு விஷயம் தெரிய கூடாது என்ற வரை கவனமாய் இருந்தாள் ஆரியன்.. அதே நேரத்தில் ஜான்வியின் நினைவுகள் ஒவ்வொன்றும் அவனை கொலையாய் கொன்று கொண்டிருந்தது.. அவளை பார்க்கும் போதெல்லாம் எம்பி குதித்து விழும் இதயமும் அவன் சொல் பேச்சு கேட்காமல் வேகமாய் உள் வெளி செல்லும் மூச்சுக்காற்றும் அவன் மனப்போராட்டத்தை காட்டியது..
நீ மட்டும் என்ன அன்னைக்கே மன்னிச்சிருந்தா இன்னைக்கு என்ன தேவையில்லாத பிரச்சனை எல்லாம் வந்திருக்காதே.. அவள் எண்ணங்களோடு காய்ந்தான்..
அன்று காலையிலிருந்து கேட்ட பார்த்த ரூபாவின் நடவடிக்கைகளில் எவ்வளவு தான் முயன்றும் சிதிலமடைந்து போனவளாய் நிலவின் தனிமையில் அமந்திருந்த ஜானவியின் மனம் சற்று நிம்மதியானது.. நாளை வார இறுதி விருமுறை அல்லவா.. குறைந்த பட்சமாய் ஒருநாளாவது ரூபாவின் குதர்க்க நடவடிக்கைகளை காணாமல் நிம்மதி கொள்ளலாம் என நினைத்து நேரமானதில் இறங்கி உறங்க செல்ல.. அந்த நாள் தங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதை ஜான்வி ஆர்யன் இருவருமே அறிந்திருக்கவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக