முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 42

 எப்போதும் அவசரத்துடனும் ஆர்ப்பாட்டத்துடனும் விடியும் ஜான்வியின் பொழுதானது இன்று மிக அமைதியாய் தன் போக்கை மாற்றி துவங்கியது.. இனிய கூக்குரல்களின் மத்தியில் கண் சுருங்க இமை திறந்தாள் ஜான்வி..




விழிகள் கடிகாரத்தில் மோத.. வழக்கத்தை விட அரை மணி நேரம் தாமதம்..  எனினும் அந்த வேகமும் அவசரமும் இன்று இல்லையே.. காரணம் இன்று வார இறுதி.. விடுமுறை..



அப்பாடா என பெருமூச்சு விடலாம் போல் தோன்றியது அவளுக்கு.. காரணம் இந்த சமீப காலங்களாய் தன் மனதோடு வெகுவாகவே போராடி கலைத்து விட்டாள்..  ஒரு பக்கம் ரூபா கொடுக்கும் குடைச்சல்.. மறு பக்கம் வீட்டில் அசோக்கின் ஒதுக்கம்.. அவளை ஒரு வழியாக்கி இருந்தது.. இன்று எப்படியாவது அவனோடு பழைய நட்புறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதில் முடிவானவளாய் அருகில் படுத்திருந்த தன் மகளின் கலைந்த சுருட்டை முடியை ஒதுக்கி விட்டபடி அவள் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தாள்..




அடித்து பிடித்து அரக்க பறக்க உண்டும் உண்ணாமலுமாய் ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலே அற்புத நாளாகி தான் போகிறது.. வேலைக்கு சென்று குடும்பத்தை தூக்கி நிறுத்தும் அனைவருக்கும் இது பொருந்தும்.. பொதுவாக அவர்களின் மன ஓட்டத்தை யாரும் கேட்பதில்லை..  கேட்டால் அவர்கள் கேட்கும் ஒரே வார்த்தை ஒரு நாள் விடுமுறை.. என்பதாகத்தான் இருக்கும்..





வெளிவந்து பார்க்க அசோக் இன்னும் கவிழ்ந்தடித்து உறங்கிக் கொண்டிருந்தான்.. ஹ்ம்.. அப்படி என்னதான் கோபமோ.. இன்னைக்கு உன் கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிடறேன் பாரு.. என தனக்குள்ளேயே புன்னகையோடு கூறி கொண்டு இடுப்பில் முந்தானையை இழுத்து சொறுகிக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்..




பல் தேய்த்து வெளிவரும் போது அசோக்கும் எழுந்திருந்தான்.. குட் மார்னிங்.. பளிச்சின புன்னகை சிந்தியவளிடம் கணத்திற்கும் மேலாய் தேங்கிய பார்வை அடுத்த கணமே குளியல் அறையில் பதிந்தது.




எவ்வளவுதான் முயன்றும் தன்முகம் மாறுவதை தடுக்கவே முடியவில்லை அவளால்.. அவளைக் கண்டு கொள்ளாது மறுபக்கமாய் செல்லப் போனவனை கரம் பிடித்து நிறுத்தினாள்.. 




அவள் என்ன கேட்க போகிறாள்.. என அறிந்து சலிப்பாய் திரும்பியவனின் பார்வையே என்னவென கேட்க.. டீ யா காபியா.. என்றவளிடம் வித்தியாசமாய் பதிந்தது அவன் பார்வை..




எப்பவும் டி தானே போடுவ.. என அவள் கை விடுத்து உள்ளே சென்று கதவை பூட்டி கொண்டான்..




எப்பவும்னாலும் இன்னைக்கு உனக்காக எல்லாம் கொஞ்சம் ஸ்பெஷலா தான் பண்ண போறேன் அசோக்.. உன்ன சமாதானப்படுத்த எனக்கு வேற வழி தெரியல.. உதடு சுழித்துக் கொண்டு அடுக்களையின் பக்கம் நகர்ந்தவள் அவன் கேட்டது போல் இருவருக்கும் டீயே போட்டு விட்டு குழந்தைக்கு பூஸ்ட் கலக்கி தயார் செய்து வெளி வந்து டிவியை ஆன் செய்தாள்..




எடுத்ததும் ஓடிய சாமி பாட்டோடு அவள் மனமும் ஓட ஆரம்பித்து விட்டது.. சோபாவில் அமர்ந்தபடி அவள் டீ குடிக்க பாத்ரூமில் இருந்து நேராய் வந்தவன் கிச்சனுக்குள் திரும்பிய சமயம் காலடி சத்தம் கேட்டு திரும்பியவள் டீ இங்கே இருக்கு. . அங்க எங்க போற.. கேட்டதில் நொடிக்கும் மேலாய் சுழிந்த அவன் பார்வை அடுத்த நிமிடமே அவன் கால்களை ஹாலுக்கு அழைத்து வந்திருந்தது..




எப்பவும் கிச்சன்ல தானே வச்சிருப்பே.. கேட்ட படி அவளுக்கு எதிர் பக்கம் அமர்ந்தான்.. பார்வை அவளிடம் நிலைத்திருந்தது.




இன்னைக்கு நீயும் சேர்ந்து என்கூடவே குடிப்பேன்னு உனக்கும் இங்கே கொண்டு வந்துட்டேன்.. கூறியபடி அவனுக்கு ஒரு டம்ளர் நகர்த்தி வைத்தாள்..




விகாரமாய் பார்த்தாலும் டம்பலரை எடுத்து கொண்டு நகர போனவனை.. கம்பெனி கொடுக்கலாமே.. அவள் சுருங்கிய குரலில் அவன் நடை நின்றது.. திரும்ப.. ஒரு அஞ்சு நிமிஷத்துல உன் வெட்டி கோபம் ஒன்னும் போய்டாதாக்கும்..  உதட்டை சுழித்தாள்..நிலைத்த விழிகளோடு அங்கேயே அமர்ந்து விட்டான்..



சிறிது நேரத்தில் கிருத்திகா எழுந்து வர அம்மா அப்பா இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து தேநீர் உண்ண கண்டு.. அப்பா.. என ஓடி அவனிடம் விழுந்தாள்.




பல்லு தேய்ச்சு விடுறேன் வாடி.. அழைத்த பெற்றவளை முறைத்து விட்டு நீயே எனக்கு தேச்சு விடு.. என அசோக்கின் பக்கம் திரும்பிக் கொள்ள.. இன்னும் அவன் தேநீர் பாதி மிச்சம் இருந்ததில் நா பேஸ்ட் பிரஸ் கொண்டு வரேன்.. என குழந்தைக்கு தயார் செய்து கொண்டு வந்தாள்.





இப்படி அவ்வப்போது செய்யக்கூடிய உதவிகள் பரஸ்பரம் தான் என்றாலும் இன்று வித்தியாசமாய் பட்டது அசோக்கிற்கு.. நெஞ்சத்தில் நிறைய கேள்விகள் முட்டின.. ஆனால் அதை கேட்பதற்கு தனக்கு எந்த உரிமையும் கிடையாது என உணர்ந்து அவன் இதழ்கள் பூட்டிக்கொண்டன..விழிகள் மட்டும் அவ்வப்போது தன் எதிரே துள்ளலோடு சுற்றி வந்த ஜான்வியிடம் பதிந்தது.




சரி.. இன்னைக்கு என்ன சாப்பிடலாம்.. ஓரடி முன் வந்தவளாய் ஆர்வமாய்  கேட்டாள்..




அம்மா.. பூரி.. பூரி.. ஆர்ப்பரித்தாள் குட்டி பெண்.




பூரியா.. ஆச்சரியமாய் பார்த்தனர் இருவரும்..  சாதாரணமாய் எப்போதும் இட்லி சட்னி மட்டும்தான்.. தோசையே அபூர்வம்!! அப்படி இருக்க இவளுக்கு பூரி எல்லாம் யார் சொல்லித் தருவது.. கேட்க.. அன்னைக்கு நைட் வாங்கிட்டு வந்தேன்னு எனக்கு ஒரு பூரி காலைல எடுத்து வச்சிருந்தல்லப்பா.. ரொம்ப நல்லா இருந்துச்சு.. என கண்ணு உருட்டி கிருத்தி கூறிய விதத்தில் மாட்டிக்கொண்ட டோசில் அவன்.. இரவு உணவே காலை குழந்தைக்கு கொடுத்திருக்கிறானா.. முறைப்பாய் ஒற்றைப் புருவம் உயர்த்தினாள் அவள்.




ஆனால் அன்று தான் கவனித்திருக்கவில்லையே.. பிள்ளை பிள்ளை என நெஞ்சோடு அணைக்க காத்திருந்தால் மட்டும் போதுமா.. அவளுக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் தானும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் தானே.. என தோன்ற.. வேண்டாம் பாப்பா அதுக்கெல்லாம் நிறைய வேலை செய்யணும்.. அப்பா இன்னொரு நாள் உனக்கு பூரிய கடையிலேயே வாங்கிட்டு வரேன்..  என அசோக் ஆரம்பித்திருந்த வேலையில்  செஞ்சுடலாம்.. கண்கள் மின்ன கூறியிருந்தாள் ஜான்வி.





சொல்ல வந்த வார்த்தைகள் வாயோடு நின்று போக இன்று என்ன ஆனது இவளுக்கு.. அவன் விழிகளில் இப்போதும் சொல்ல முடியாத உணர்வு அவளை வாரி சுருட்டியது.ஏய்ய்ய்.. துள்ளிய மகளால் அடுத்த நிமிடம் தாயிடம் பாய்ந்து இருந்தாள்.. காரியக்காரி.. இவ்வளவு நேரம் கூப்பிட்டும் வராதவ இப்போ அவன் வேணுங்கிறத செஞ்சு தர வேண்டியதும் எப்படி வந்து ஒட்டிக்கிட்டா..  என குழந்தையை நெஞ்சோடு அணைத்து கொண்டாலும் அது அவள் மகிழ்ச்சியை காட்டும் விதம் என புரியாமல் இல்லை..




என்றும் இல்லாத அதிசயமும் ஆச்சரியமாய் இவ்வளவு பொறுமையாய் இருக்கும் ஜான்வியை குறுகுறுவென கீழ்கண்களால் பார்த்தபடி அஷோக் அமர்ந்திருக்க.. அஷோக்.. அழைத்தபடி அவள் நிமிர்ந்ததில் சட்டென கண்களை படபடவென கொட்டி தலையை மறுபக்கமாய் திரும்பி கொண்டான்.




அஷோக்.. பாப்பா பூரி கேக்குறா.. மாவு வாங்கிட்டு வந்துடு.. காய் எல்லாம் இருக்கு.. உருளைக்கிழங்கு குருமா வச்சிடலாம்.. என கூறிட.. ம்ம்.. எழ போனவனின் கழுத்தோடு கட்டிக்கொண்டு தானும் மேலே எழுந்தாள்.




நானும் கடைக்கு வரேன் பா.. என்றவளின் ஆங்காங்கே கசங்கி நின்ற உடையை இழுத்து விட்டுக்கொண்டு கலைந்த தலைமுடியை தகப்பனாய் வாரி தோளில் தூக்கி போட்டு கிளம்பி விட்டான் அசோக்..




இப்போது புரிகிறது எங்கே இருந்து எவ்வளவு பாசம் என.. அவளின் ஒவ்வொரு ஆசைகளையும் விருப்பத்தையும் உண்மையான பெற்றவனாய் நிறைவேற்றுகிறானே..



கண்கள் மலர்ச்சியாய் பார்த்துக் கொண்டே நின்றவளுக்கு திடீரென அந்த இடத்தில் ஆரியன் என எண்ணம் தோன்ற.. அடுத்த நிமிடம் நெஞ்சில் சிறு தடுமாற்றம்.. 




அவன் நினைப்போடு ஆரம்பித்த தலைவலியை அதே இடத்தில் ஒதுக்கிவிட்டு இன்னைக்கு எந்த காரணத்துக்காகவும் நான் என் மைண்ட மாற்றப்போவதில்லை.. என புன் சிரிப்போடு கிச்சனுக்குள் நுழைந்தவளுக்கு தெரியாது இன்று நடக்கப்போகும் அதிர்ச்சியான சம்பவங்களை பற்றி.




கூறியது போல் உருளைக்கிழங்கை பாதி துண்டுகளாய் நறுக்கி குக்கரில் போட்டு வேக வைத்தாள்.. அம்மா.. கீச்சு குரல் சத்தத்தில் வெளிவர இரண்டும் மாவு பாக்கெட்டோடு நின்றன.. 




மில்க் இந்தா.. குடிக்க கொடுக்கும் போது ஓடி வந்து தந்தையின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள் கிருத்தி.. அவளுக்கு பாலை கொடுத்து விட்டு நகர.. திடிரென பிடிக்கப்பட்ட கரத்தில்.. கோபம் போச்சா.. மிளிர்ந்த விழிகளோடு திரும்பியவளின் பார்வை தன் கைபிடித்து நிறுத்தியது கிருத்திகா என கண்டதும் சோர்ந்தது. 




என்ன காலையிலேயே இத்தனை பல்பு வாங்குறேன்.. தலையில அடித்துக் கொள்ளாத குறையை வாய்க்குள் முனகியபடி சென்றவளை ஓர பார்வையால் தொடர்ந்தன அசோக்கின் கண்கள்..



கிச்சனுக்குள் நின்று கொண்டாள்.. இன்னைக்கு எப்பாடுபட்டாவது அவன் கூட பேசியே தீரணும். போதும் இந்த மௌன விரதம் தாங்கவே முடியல.. என தலையை அசூயையாய் உலுக்கி விட்டுக்கொண்டு.. மாவை பாத்திரத்தில் போட்டு பிணைய ஆரம்பிக்க.. எடுக்க மறந்த தண்ணீரை எடுக்க அவசரமாய் திரும்பிய நேரம்.. ஹான் உடனே.. எனப் பின்னே திரும்பிப் பேசி வந்த அசோக்கின் நெஞ்சில் முட்டி நின்றாள்.




இறுகிய அவன் நெஞ்சில்.. முட்டிய நெற்றி வலிக்க எதிர்பாராத முட்டலில் பயந்து ஹக்.. கென துள்ளி அவள் பின்னே இருந்த குடத்தை கவனிக்காமல் எட்டு வைத்ததில் அவள் விழ போன சமயம்.. சட்டென அன்று போல் அவளை இடைப்பற்றி தாங்கி நின்றிருந்தான் அசோக்..  ஆனால் அன்றை விட இன்று அவன் பிடியில் இறுக்கமும் அழுத்தமும் அதிகமானதாய் உணர்ந்தவளின் இடை செப்பண்ணிட்டு போனது.



அன்று கண்ட அதே உணர்வு அவன் கண்களில்..பிசைய வேண்டிய மாவு மறந்து போனது.. ஏதோ ஆள் அரவமற்ற தனி உலகிற்கு பயணித்தது போல் தோன்ற.. திடீரென கேட்ட குக்கர் விசில் சத்தத்தில் கண்களை படபடவென கொட்டி அவனிடமிருந்து விலகி நின்றாள் ஜான்வி..



ஒரு நொடி தான்.. அடுத்த கனமே சாரி.. என வேக நடையோடு வெளி சென்று இருந்தான் அசோக். அவன் சென்ற பின் தான் கொண்டிருந்த மாயவலை அறுபட்டதாய் ஐயோ நல்ல சான்ஸ் கிடைச்சதே..  இப்படி மிஸ் பண்ணிட்டேனே.. என தலையில் அடித்துக் கொண்டு பார்த்தவளுக்கு.. அந்த நொடி அந்த நிமிடம் அப்படி அமைதியாய் நின்றது ஏன் என புலப்படவில்லை.




வழக்கமாய் இந்த தொடுகை பிடிப்பு எல்லாம் சாதாரணம்தான் என்றாலும்..

இன்று ஏனோ அவன் கரம் பட்ட இடம் சிலிர்த்து நின்றது.. 




அம்மா.. என ஓடி வந்த கிருத்திகாவின் குரலில் தெளிந்து அடுத்ததாய் விசில் சத்தம் கேட்டதில் அடுப்பை அணைத்தாள்.. 




சொல்லு பாப்பா.. 



சாப்பாடு ரெடியா பசிக்குது.. அவள் வயிற்றை தடவ.. ஒரு 10 மினிட்ஸ் ரெடி ஆயிடும் குட்டியின் தலையில் கை வைத்து ஆட்டினாள்..




சொன்னது போலவே அடுத்த பத்து நிமிடங்களில் மாவை பிசைய.. ஒரு பக்கம் உருளைக்கிழங்கை தட்டில் வைத்து எடுத்து ஹாலுக்கு கொண்டு போயாயிற்று.. கிழங்கை உரிக்கவென வெளியே வந்து பார்த்த சமயம் ஏற்கனவே தோல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு இருந்த நிலையில் கையில் மாவோடு கிருத்தி அமர்ந்திருப்பதை கண்டு.. ஹேய் செல்லம்.. நீங்களா உரிச்சீங்க..  என கேட்டதும் குழந்தையின் விழிகள் அசோக்கிடம் பதிந்தது.. விழி வழியாய் மகளுக்கு என்ன செய்தி கடத்தினானோ.. ஆமா நானே உரிச்சேன்..  தலையை மாங்காவாய் ஆட்டினாள் கிருத்தி..



காரணகர்த்தா யார் என தெரிந்து தானாக இவள் கண்கள் சுருங்கின.. தேங்க்ஸ் செல்லம்.. குழந்தையின் கண்ணத்தோடு கன்னம் வைத்து கொஞ்சிய போது பார்வை அவனிடம் நிலைத்தது உண்மையாகவே நன்றி உணர்ச்சியும் நட்புறவும் தானாம்.. கேட்டாலும் அப்படித்தான் சொல்வாள் அவள்..






பின் குருமா வைத்து முடித்து உணவை தரையில் பரப்ப.. அஷோக் கை கழுவ வந்தவன்.. செம்பில் தண்ணீரையும் அவனை எடுத்துச் சென்று விட்டான்.. வழக்கமாய் இந்த இடத்தில் ஆரியன் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என ஒப்பிட்டு பார்க்கும் மனது இப்போது அதிர்ஷ்டவசமாக அவனைத் துளியும் இவனோடு ஒப்பிடவில்லையே.. இது என்ன முதல் மாற்றமா..??



டிவியில் அப்போது இருந்த சாமி பாட்டு மாறி வேறு ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.. கண்டு கொள்ளாமல் .. முதலில் குழந்தைக்கு பரிமாறி தானே தனக்கு பரிமாற முற்பட்டவனிடம் நான்தான் வைப்பேன்.. என முந்திக்கொண்டு அவன் தட்டிலும் பூரி கிழங்கை எடுத்து வைத்தவளை புதிதாய் பார்த்தான்.. 




எப்போதும் இப்படி மெனக்கெட்டெல்லாம் ஒருவருக்கொருவர் எதுவும் செய்து கொண்டது கிடையாது.. ஆனால் இன்று ஜான்வி செய்வதனத்தும்?? ஏன்.. தனக்காகவா.. கேள்வி.. 




ஆழ்ந்த பார்வையால் அவளையே துளைத்தவனை நிமிர்ந்து பார்த்தவள் கட்டென கண் சிமிட்டி புன்னகைத்தாள்.. சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. அமர்ந்து கொள்ள..



நீ சாப்பிடல?? கேட்டான் அஷோக்.. 



அவன் கேள்வில் ஆயிரம் ஆயிரம் மலர் செண்டுகளை தலையில் கொட்டிய உணர்வு.. சாப்பிடணும் சாப்பிடணும் நீங்க முதல்ல சாப்பிடுங்க.. மகிழ்ச்சியை உள்ளுக்குள் மறைத்து கூறினாள்.




நீயும் சாப்பிடு.. தன் பக்கமாய் இருந்த தட்டில் தானே இரண்டு பூரி வைத்து அவள் பக்கமாய் நீட்டினான்.. இந்த விஷயத்தில் மட்டும் மாற்றம் இல்லை.. தன்னையும் தன் பிள்ளையையும் உன்ன வைத்த பின்னரே அவன் வாய்க்குள் உணவு இறங்கும்.. இறங்குகிறது.. அதற்கு மேல் மறுக்கவில்லை அவள் வாங்கிக் கொண்டாள்..  வெகு நாளைக்கு பிறகு இப்படி சேர்ந்து உண்பதில் மனது நிறைந்தது. 




அசோக் பொருள் எல்லாம் தீர்ந்துடுச்சு..  கொஞ்சம் மளிகை கடை வரைக்கும் போயிட்டு வந்துடலாமா.. பூரியை வாயில் மென்றபடி கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவன்.. ம்ம்.. என மீண்டும் டிவிக்குள் ஐக்கியமாகி இருந்தான்.. 




ம்ம்.. ரொம்ப கோபம் தான்.. இன்னைக்கு எப்படியாவது உன்னை சமாதானமாக்காம விடுறதா இல்ல.. அவனைப் பார்த்தபடி மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே கொடு என்பதாய் கை நீட்டினான்.. எதை.. அவள் விழிகள் புரியாமல் விரிந்தன.. பூரியை கேட்கிறானா என அடுத்த இரண்டு வைக்கப் போக அவன் பார்வை அவளுக்கு மறுபக்கம் படிந்ததில் ஓ ரிமோட்டா.. இதை தான் கேட்டானா.. கொடுத்தாள்.. அடுத்த நிமிடமே சேனலை மாற்றினான்..




ஏன் மாத்துற.. அதுல காமெடி நல்லா தானே இருக்கு அதுவே வையி.. ஜான்வி கூறும் போதே அவன் முகம் கடுகடுத்தது..




சாப்பிடுற வரைக்கும் வேற ஏதாவது பார்க்கலாம்..  வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் பேசியவனை அவள் புரியாமல் பார்க்க.. அப்பா.. வை.. எனக்கு குழந்தை கூறியதில் மறுக்க மாட்டாமல் வைத்தான் மீண்டும் அதே சேனலை..



ஏன் நல்ல காமெடி சீன் தானே ஓடுது உனக்கு ஏன் பிடிக்கலையா..




இதுல என்ன காமெடி இருக்கு.. அவன் இதழ்கள் சுழிந்தன.. 



ஏய்.. என்ன இப்படி கேக்குற எவ்வளவு பெரிய ஃப்ரெண்ட்ஷிப் காமெடி இது.. இதுக்கு போய் சிரிப்பு வரலன்னு சொல்ற.. உண்டான சிரிப்போடு அவள் கேட்க.. எனக்கு இதுல அவங்க பேசறது புடிக்கல.. அவன் கண்கள் தீயை கக்கின.




இதில் இவ்வளவு கோபமாகும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறதாம்??





இவனை பாரேன்.. சாதாரணமா அந்த பொண்ண டி போட்டு கூப்பிடுறான்.. இதுல பிரண்ட்டாம்.. கூறும்போது அவன் முகத்தில் எள்ளும் கொள்ளுமாய் வெடித்தது. 





இதுல என்ன இருக்கு அசோக்..  அவங்க காம்போர்ட்டபிளா கூப்பிடுகிறார்கள்.. என்றவளை நெருப்பு பார்வையோடு திரும்பியவன்.. இந்த உலகத்துல ஒரு ஆண் ஒருத்தியை  டி.. போட்டு கூப்பிடுறான்னா அது  மனைவியாக போறவளா.. இல்ல கட்டிக்க போறவன் எல்லாம் தான் இருக்கனும்.. ஏன்னா அதுக்கு அவ்வளவு அழகான உயிர் இருக்கு.. இப்படி யார் யாராலும் கூப்பிடலாம்னு சொல்லலாம்னா அப்புறம் அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் கிடைச்சுட போகுது.. கேள்வியோடு அவன் வார்த்தைகள் நின்றது.




அவள் தலை ஆமோதிப்பாய் உருண்டது..  ஆனா அவங்க அவங்களுக்கு புடிச்ச மாதிரி கூப்பிடுறது ஒன்னும் தவறு இல்லையே..அவள் கூறி முடிப்பதற்குள்.. அப்படி கிடையாது டி.. அவன் கூறி இருந்ததில் இவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன..



என்ன சொன்னான்.. டி போட்டா அழைத்தான்.. அவள் கருமணிகள் உருள..  குறிஞ்சிரிப்பு தேங்கியது அவன் இதழினில்..



பாத்தியா சொன்னேன்ல.. இது உணர்வான வார்த்தைன்னு.. சும்மா தான் சொன்னேன்..  என தட்டில் வைத்த இரண்டு பூரியோடு எழுந்து சென்று விட்டிருந்தான். அவன் அவள் தான் அப்படியே அமர்ந்து இருந்தாள்..  பார்வை எழுந்து சென்றவனை பூரி வைத்துக்கொள் என கூட கூற மறந்து தொடர்ந்தது.




குழந்தையை கிளப்பும் வேலையை வழக்கம்போல் தன் கையில் எடுத்துக் கொண்டான் அசோக்.. நிறைய பொருட்கள் வாங்கவிருப்பதால் ஜான்வியும் அவர்களோடு கிளம்பி விட்டாள்.. பழையபடி வெகு நெருக்கமாக பேசிக்கொள்ளவில்லை என்றாலும் இந்த சில நாட்கள் போல் கேட்பதற்கும் பதில் கூறாமல் முகத்தை திருப்பிக்கொண்டு செல்லாமல் கேட்டதற்கு பதில் என்ற ரீதியில் வண்டியை கிளப்பினான் அசோக்..




லிஸ்ட் உன்கிட்ட தானே இருக்கு அசோக்..



ம்ம்ம்...



இன்னைக்கு குறுமால கொஞ்சம் உப்பு ஜாஸ்தியோ..




ம்ம்ம்..




இன்னைக்கு ஈவினிங் பாப்பாவ பார்க்குக்கு கூட்டிட்டு போகலாமா கூட்டிட்டு போய் ரொம்ப நாள் ஆச்சு..



ம்ம்ம்.. 




அவள் கேட்க கேட்க வெகு சிரத்தையாய் ம்ம்ம்.. கொட்டியபடி வந்தான் அவன்..



பைக் அந்த பெரிய மாலின் முன்பாய் கிரிச்சிட்டு நின்றது.. பெரிய இடமாயிருக்கே..  விலை எல்லாம் கூட இருக்கும் போலையே... என இரண்டு மாதத்திற்கு முன் வந்த போது கேட்ட அதே இடம் தான்.. ஆனால் விலை எல்லாம் மற்ற இடங்களை விட வெகுவாகவே குறைவாய் இருப்பதில் இப்போது பர்ச்சேஸ் என்றாலே இங்குதான் என்பது போல் ஆகிப் போகிறது..  





உள்ளே வந்தவள் ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ட்ராலியில் ஒன்றை எடுத்து அவன் கையில் இருந்த குழந்தையை  அமர வைத்துக் கொண்டாள்..  வித்தியாச வித்தியாசமான பொருட்களையும் பிஸ்கட்களையும் கண்டு கிருத்திகாவின் வழிகள் மலர.. ஒவ்வொன்றையும் தங்கள் வண்டிக்குள் அவள் அள்ளிப் போட்ட வேகத்தில்.. ஜான்வி அவள் கை பிடித்தவள்.. ஏய்.. விடு டி.. நீ போற போக்க பார்த்தா கடையை எழுதி வாங்கிட்டு தான் இங்க இருந்து போவ போலயே.. என அவசரமாய் அவள் எடுத்து வைக்க முற்பட.. என் பொண்ணு கேட்டா வாங்கிட வேண்டியது தான்.. சிரிப்போடு மகள் நெற்றி முட்டினான் அஷோக்..




ம்ம்ம்.. ம்ம்ம்.. வாங்குவிங்க.. தலையை ஒரு மாதிரியாய் உருட்டியவள் தேவையில்லாததை வெளி வைக்க போக.. கிருத்திகா உதடு பிதுங்கியதில்.. கடைசியாய் பார்த்துக் கொள்ளலாம்..  என முடித்து விட்டான் அஷோக்.. ஹ்ம்ம்.. பொண்ண ஒரு வார்த்தை சொல்லிட கூடாது.. என வேண்டிய பொருட்களை எடுக்க ஆரம்பித்தாள்.. அனைத்தையும் முடித்து பில் கட்டும் இடத்தில் பொருட்களை தள்ளிக் கொண்டு ஜான்வி நிற்க.. அவர்களுக்கு முன்னால் சற்று தள்ளி நின்றிருந்தான் அசோக் அவன் கையில் கிருத்திகா..




திடீரென எதிர்பாராமல் பின்னே வண்டிப்

 ஒன்று தன்னை இடித்து கொண்டே இருந்ததில் ஹலோ.. என திரும்பியவளின் விழிகள் அதைப் பிடித்த படி நின்றவனை கண்டு அதிர்ந்து போனது.. ஆர்யன்.. விக்கிய குரலோடு அவள் குரல் காற்றோடு கலந்தது.



கமெண்ட்ல உங்க சப்போர்ட்ட சொல்லுங்க 🙏🏻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...