முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 43

 "மாமா.. நா வந்ததிலிருந்து வெளியேவே எங்கேயுமே போகல.. இன்னைக்கு உங்களுக்கும் லீவ் தான.. ஏதாவது பர்ச்சேஸ்க்காவது போகலாம் மாமா.. அவன் டோஸ்ட் செய்து கொடுத்த பிரட் துண்டுகளை மென்ற படி அவன் மேலே விழுந்தாள் ரூபா.. 




ப்ச்.. அதுக்கு எதுக்கு இப்படி விழணுமாம்.. உள்ளுக்குள்ளேயே எரிந்து கொண்டு.. ம்ம்.. முதல்ல தள்ளி.. அவன் கூறி முடிப்பதற்குள்.. ஹாப்.. ஹாப் அன் அவர்.. கிளம்பிடுவேன்.. என துள்ளி உள்ளே ஓடியவளை வெறித்தான் ஆர்யன்..



எப்போதும் தான் கூறுவதை முழுதாகவே அவள் கேட்க போவதில்லையா.. காலையே அமோகம்.. 





ஒருவழியாய் அவனை இழுத்து கொண்டு அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்சிற்கு வந்து சேர்ந்தந்திருந்தனர் இருவரும்.. வேண்டிய பொருட்களை எல்லாம் தேடி தேடி அள்ளி எடுத்து வந்து தங்கள் டிராலியில் போட்டு கொண்டாள் ரூபா.. அனைத்தும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.. பர்கர்.. சாஸ்.. போன்ற ஐட்டங்கள் தாம்... இத வச்சு எல்லா வேளையும் ஓட்டிடுவியா.. சுருங்கிய கண்களோடு ஆரியன் கேட்ட தொனி அவளுக்கு புரியவில்லை.




இதுக்கு என்ன மாமா.. டெலிசியஸ்.. எனக்கெல்லாம் கொடுத்தா மூணு வேலையும் இதே சாப்பிடுவேன்.. ஆனா உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ. நம்ம மதியம் கேண்டின்ல வாங்கிப்போம்.. பெரிய மனது பண்ணி கூறினாள்.. .




எல்லாம் எந்நேரம்.. நொந்து கொண்டு அவள் எடுத்ததோடு வீட்டிற்கு தேவையான சில பொருட்களையும் வாங்கி நடந்தான் ஆர்யன்.. அப்போதுதான் அவளை கண்டான்.



பில் கவுண்டரில் ஜான்வியை போல் ஒருவள்..  கண்களை சுருக்க.. போல் அல்ல.. உண்மையாகவே அது அவள் தான் என்பது உசிதமானது.. 




அய்யோ கான்ஃப்ளக்ஸ் எடுக்க மறந்துட்டேன் பாருங்க.. இருங்க.. என ரூபா ஓடிப்போன வேளையில் இவன் கால்களோ தன்னிச்சையாய் அவளிடம் வந்திருந்தது.. ஆனால் தன் ட்ராலி அவள் கால்களை இடித்ததை உண்மையாகவே அவன் அறிந்திருக்கவில்லை.. ஒருவேளை பிரபஞ்ச நோட்சோ என்னவோ..



அவள் திரும்பியதில் இருவருமே ஒரே நேரத்தில் அதிர்ந்து போயினர்.. ஒருவரை ஒருவர் அங்கு அவர்களை எதிர்பார்க்கவில்லை என்பது அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது.. ம்ம்க்கும்.. முதலில் தன் நிலையை மீட்டுக் கொண்டவன் ஆரியன் தான்.. ஜானு.. நீ இங்க.. என ஆரம்பிப்பதற்குள் அம்மா.. என இவ்வளவு நேரம் தள்ளி நின்ற தகப்பனோடு ஒட்டி இருந்த கிருத்தி ஓடி வந்து ஜான்வியின் காலை கட்டிக் கொண்டாள்.. பாப்பாஅஹ்ஹ்.. என வலி கொண்ட கண்களோடு ஜான்வி குழந்தையை கையால் அணைத்து கொண்டதில் தூக்கிப் போட்டது ஆர்யனுக்கு..  




வந்த போன் காலில் பேசிக்கொண்டிருந்த அசோக் குழந்தை இறங்கி ஓடியதில் திரும்பியபடி.. பாப்பா பார்த்து என.. கூறிய நேரம்.. அவன் விழிகளும் ஜான்வி அதிர்ந்து பார்த்து நிற்பவனிடம் பதிந்தது..




ஆனால் ஆரியனின் பார்வை.. தன் பிம்பத்தையே அச்சு அசலாய் வார்த்து அவள் காலை பிடித்து கட்டி கொண்டு நிற்கும் குட்டி சிசுவிடமிருந்து இம்மியும் அசையவில்லை..



அவள் தன் உயிர் தான் என்பதை நிரூபிக்க அவளைத் தவிர வேறு சான்றதும் தேவையில்லை அவனுக்கு.. இத்தனை நாளாய் பொய் பித்தலாட்டம்.. என அத்தனை பேரும் கூறியதில் நிச்சயம் அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது.. இவள் தான் பணஆசையில் என் மீது பழி போடுகிறாள்.. என அவன் முழு முற்றாய் நம்பி இருந்தவனுக்கு.. இப்போது தன்னை உரித்து நிற்கும் இந்த குட்டி உருவம்.. உச்சந்தலையில் ஆணி அடித்தார் போல் அத்தனை விஷயங்களையும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது.. இவ்வளவு நாளாய் எந்த காரணத்தினால் அவளை வெறுத்தானோ.. தூரம் தள்ளி சென்றானோ.. அது அத்தனையும் இன்று முழு முற்று என உறுதி செய்யப்பட்டது.. நெஞ்சம் நடுநடுங்க கரங்கள் தன்னிச்சையாய் நடுக்கம் எடுத்தன.. 




மேடம்.. அழைத்த கடைகார பெண்ணின் குரலில் திக்கித்த நெஞ்சோடு.. வண்டியை முன்னால் நகர்த்தும் பொருட்டு பாப்பா.. போய் அப்பா கிட்ட இரு.. எனக்கூறிய நொடி ஆயிரம் பூச்செண்டுகளை தலையின் மீது மகுடமாய் சூடியது போல் நெஞ்சம் குளிர்ந்து தன் குழந்தையின் வருகைக்காக ஏக்கமாய் அவன் கை நீட்டி காத்திருக்க.. அவளோ.. அப்பா.. என எதிர் திசையில் நின்றவனை மீது தாவினாள் மகள் அரசியாய்.. அடுத்த கணமே கூர் கண்களோடு பேசிக்கொண்டிருந்த ஃபோன் காலை விடுத்து மார்பின் உள்ளாய் பெறாதவளை பொதித்துக் கொண்டான் அசோக்..




பட்டென  ஆரியனுக்குள் ஏதோ உடைந்த உணர்வு.. இவன் அவனல்லவா.. அவளுக்கு கணவனாய் மற்றவர்களால் கூறப்பட்டவன்.. அவன் நெற்றியில் சுருக்கங்கள் அதிகமாகிப் போக என்னதான் குழந்தையே இன்னொருவரை அப்பா என அழைத்தாலும் அதன் உரிமையாளன் யாரென அவளைப் பார்த்து

கணம் தெரிந்திருந்தான் ஆர்யன்.. அவள் பில் போட்டு முடித்ததும்..  அடுத்ததாய் இவன் பொருட்களுக்கும் பில் முடிக்கப்பட்டது.. அவசர அவசரமாய் பொருட்களை அள்ளியும் அள்ளாமலுமாய்.. வெளியே ஓடினான்..





வெளியே அவர்களை காணவில்லை.. எங்கே சென்றால் அவள்.. என விழிகளால் சுற்றம் வளைந்து தேடிக் கொண்டிருந்த போதே.. அங்கிள்.. கேட்ட குட்டி உருவத்தில் தானாக அவன் பார்வை கீழே படிந்தது.. அவன் கரம் பற்றிய படி நின்றவள் சத்தியமாக அவன் உதிரமே தான்..




செல்லம்.. ஏதோ தேடி கிடைக்காத பொக்கிஷம் கிடைத்ததாய் சட்டென அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ஆரியன்..  முதுகில் படிந்திருந்த  அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது..




ஆனால் அவளின் அழைப்பு.. உண்மையை அறிந்த கணம் அவனை உலுக்கி எடுத்தது..




நா.. நா.. உன் அப்பா டா.. தழுதழுத்த குரலோடு அவன் கூறிக் கொண்டிருக்க.. அப்பா.. அங்க..  சட்டென அவனிடமிருந்து விலகி நின்றாள் குட்டியவள்..




அங்கிள்.. எனக்கு அந்த பலூன் மட்டும் வாங்கி தரீங்களா.. அம்மா கிட்ட கேட்டா மாட்டேன்ணு சொல்றாங்க.. அவள் கூறிக் கொண்டிருந்த வேலையிலேயே தன்னிடம் அடம் பிடித்து நின்றவள் திடீரென கை உதறி ஓடியதில் பின்னேயே ஓடி வந்திருந்தாள் ஜான்வி.




சட்டென அவள் ஓட்டம் நின்றது.. விழிகள் வெறித்தன.. போயும் போயும் சரியாக இவன் அருகிலா வந்து இவள் நிற்க வேண்டும்.. மகளை அணைத்து அவன் கண்ணீர் விட்டதை கண்டவள்.. அவசரமாய்.. ஓடி வந்து குழந்தையை தன் பக்கமாய் இழுத்துக் கொண்டாள்.. பார்வை அவனை அனலாய் சுட்டு பொசுக்கியது..




யார்கிட்ட என்ன கேட்கணும்னு தெரிய வேண்டாமா உனக்கு.. வா பாப்பா என் கூட.. முறைத்த பார்வையோடு விடுக்கென குழந்தையை இழுத்துக் கொண்டு அவள் நடந்த சமயம்.. சட்டென அவள் கரம் பற்றி நிறுத்தி இருந்தான் ஆரியன்..



விடுங்க.. என்றவளுக்கு மூச்சு வேகம் எடுத்தது.





எனக்கு எனக்கு பதில் தெரியாம விடுறதா இல்ல.. உண்மை.. உண்மைய சொல்லு இது என் குழந்தை தானே.. தழுதழுத்த குரலோடு அவன் கேட்க வெடுக்கென திரும்பி பார்த்தாள். கண்களில் அத்தனை சிவப்பு..



அசோக் பைக்கில் வந்திருந்ததை கண்டு.. அம்மா.. அப்பா.. என அவனை கை நீட்டியபடி குழந்தை வேகமாய்  ஓட போக.. குட்டி.. அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள.. எட்டி பிடிக்க நீட்டிய அவன் கரம் அந்தரதில் நின்றது.. அவன் தன் குழந்தையை பிடிப்பதற்குள்ளாக அவன் கரம் பற்றி நிறுத்தி இருந்தாள் ஜான்வி.. அந்த பிடியிலும் விழியிலும் தான் எத்தனை அழுத்தம்.. 




அவன் விழிகளில் இருந்த காட்டம் கொஞ்சமும் குறையாத உஷ்ண பார்வையோடு அவளிடம் விழுந்தது..





இது என் குழந்தை தானே.. இவ்வளவு நாள் நீ என் பக்கத்துல இருந்தும் குழந்தையை பத்தின ஒரு விஷயத்தை கூட என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டல்ல...  சுள்ளேன வந்து விழுந்த அவன் வார்த்தைகளில் வழக்கம்போல் தன் கலங்காது.. துடிக்காது.. கைகட்டி தீர்க்கமாய் நின்றாள் ஜான்வி..



அவளை நேர் பார்வையில் இவனுக்கு தான் உள்ளுக்குள் பதட்டம் அதிகமாய்.. எனக்கு தான் இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறதே தெரியாது.. ஆனா நீ குழந்தையை பெற்று வளர்த்துக்கிட்டு வர்றவ.. என்ன முதல் தடவை பார்க்கும்போதே இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டாமா? இப்போது வலியோடு அவன் கேட்டதில்.. ஹ்ம்ம்.. இதழ் ஓரமாய் விரக்தி புன்னகையை சிந்தினாள் அவள்.. 




சொல்லவா..  என்னென்னு சொல்ல சொல்றீங்க.. எத்தனை முறை சொல்ல வந்தேன்.. ஒருமுறையாவது காது கொடுத்து கேட்டீங்களா.. என்றவள் சட்டென செல்ல போக.. அவள் கரம் பற்றி நிறுத்தினான் ஆரியன்.




ப்ளீஸ் ஜானு.. அன்னைக்கு ஏதோ கோபத்துல முட்டாள்தனத்தினால் அப்படி பண்ணிட்டேன்.. அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காத.. சம்பந்தமே இல்லாத எவனோ ஒருத்தன என் குழந்தை அப்பானு சொல்றத என்னால தாங்கிக்க முடியல.. அவன் விழிகள் வலியோடு சற்று தள்ளி பைக்கில் அசோக்கோடு முகத்தோடு முகம் உரசி கொஞ்சிக் கொண்டிருந்த தன் மகளிடம் வலியோடு பதிந்தது...




அவ என்ன போய் அங்கிள்ன்னு சொல்றா டி.. என்னோட பீலிங்ஸ் உனக்கு புரியலையா.. வலியோடு அவன் கேட்டுக் கொண்டிருக்க சட்டென அவன் கரம் உதறி விலகி நின்றாள் ஜான்வி.




புரிஞ்சு.. புரிஞ்சு என்ன பண்ண சொல்றீங்க குழந்தையை பத்தி நான் சொல்ல வர ஒவ்வொரு நிமிஷமும் வார்த்தையால குத்தி கிழிச்சு உங்களை காதலிச்ச ஒரே பாவத்துக்காக என்ன நொடிக்கு நொடி துடிக்க வச்சீங்க.. நீங்க விட்டுட்டு போன இத்தனை நாள்ல எத்தனையோ முறை எனக்கு கஷ்டம் வரும்போது எல்லாம் உங்கள.. நீங்க பேசின வார்த்தைகள் தான் எனக்கு பெரிய ஊக்கமா நெனச்சுப்பேன்... நிஜத்துல இல்லனாலும் நினைவுல உங்க கூட சந்தோஷமா தான் இருந்தேன் ஆனா எப்போ நீங்க திரும்பி வந்தீங்களோ, எப்போ கண்டபடி பேசி என ஒவ்வொரு நிமிஷமும் துடிக்க வச்சீங்களோ, அப்பவே என் மனசுல இருந்த எல்லா எண்ணமும் மறைஞ்சு போச்சு.. என்ன.. என்ன.. சொன்னிங்க.. பணம் தான் முக்கியம்ன்னு படுக்கவும் வருவேனா.. அவள் தேகம் இப்போதும் நடுங்கியது.



ஜானு.. அழைத்தபடி அவன் நெருங்கப் போக.. கை நீட்டி அவனை அப்படியே நிறுத்தினாள். என்ன வார்த்தைக்கு வார்த்தை குத்தி கிழிச்சு கொன்னுட்டீங்க.. அவள் வார்த்தைகளில் இயலாமையோடு அவன் பார்வை அவள் மீதாய் விழுந்தது.




என்ன சொன்னீங்க.. சம்பந்தமே இல்லாதவன என் பொண்ணு அப்பான்னு சொல்றாளா.. ஹ்ம்ம்..  அந்த சம்பந்தமே இல்லாதவன் தான் அன்னைக்கு நான் ரோட்டில் யாரும் இல்லாத அனாதையா மயங்கி கிடந்தபோது கை கொடுத்து காப்பாத்தினவன்.. பித்து புடிச்ச மாதிரி இருந்த என்ன கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சி அடைய வச்சவன்..  குழந்தை பிறக்கும்போது தாய்க்கு தாயாக நண்பனுக்கு நண்பனா எனக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சவன்.. இதோ இன்னைக்கு வரைக்கும் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் என் குழந்தைக்கு அப்பான்னு தோள் கொடுக்கிறவன்.. கூறியவளின் பார்வையில் அவனுக்கும் உனக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.. என்ன குற்றம் சாட்டும் பார்வை..  அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டை அடியாய் அவனை வலிக்க வலிக்க அடித்தது.





ஜானு.. ப்ளீஸ்.. தெரியாம என்னென்னவோ பண்ணிட்டேன்.. தயவு செஞ்சு இந்த ஒரு முறை என்னை மன்னிச்சிடு.. எனக்கு நீ வேணும்.. நம்ம பிள்ளை வேணும்..





அப்படி நினைக்கிறவரு உங்க அம்மா கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க மாட்டீங்க.. 



ஐயோ அது ஏதோ உன்ன வெறுப்பேத்துறதுக்காக..




போதும் ஆரியன்.. இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிக்கிட்டு இருக்க போறீங்க.. ஒவ்வொரு முறையும் அந்த ரூபா கூட உங்கள பார்க்கும்போது என் மனசு துடிச்ச வலி எனக்கு தான் தெரியும்..  இத நான் உங்ககிட்ட சொல்லணும்னு தானே அவகிட்ட ஒட்டி உரசி கிட்டு இருந்தீங்க.. இப்ப நானே சொல்லிட்டேன் போதுமா.. ஆனா அதே சமயம் இன்னொன்னும் சொல்றேன்.. எனக்கு உங்க மேல இருந்தா கொஞ்சம் நஞ்ச நல்ல அபிப்பிராயமும் மொத்தமா மாறிடுச்சு.. காதல் மாறுமான்னு தெரியாது.. ஆனா உங்க செயல் ஒவ்வொன்னும் என்ன காதலயே வெறுக்க வச்சிடுச்சு.. இப்படி ஒருத்தரயா நான் காதலிச்சேன்னு எத்தனையோ முறை என்ன பயங்கரமா அழ வச்சுட்டீங்க.. காதல் காயத்தை கொடுக்கும்.. வலியைக் கொடுக்கும் கடைசில அதுவே அதுக்கு மருந்தாகும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா இங்க.. என்றவள் இதழ் ஓரமாய் விரக்தி புன்னகையை சிந்தி.. இங்கே என்ன காயப்பட தான் வச்சிருக்கு.. வலிக்க வலிக்க வலிக்கதான் வச்சுருக்கு.. எந்த தப்பும் செய்யாமல் ஒவ்வொரு நிமிஷமும் பழி பாவத்தை சுமந்துகிட்டு ஒவ்வொரு நிமிஷமும் தவிச்சுக்கிட்டு இருக்கேன்.. இதுக்கு மேலயாவது எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாதுன்னு நினைச்சீங்கன்னா தயவு செஞ்சு இனி என் வாழ்க்கையில் குறுக்கிடாதீங்க.. உங்க அம்மா சொன்னது போல அந்த ரூபாவே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க.. படபடவென பொறிந்தவள் விலகி செல்ல போக.. ஜானு..  இயலாமையான குரலோடு அவள் கரம் பற்றி நிறுத்தினான்..




ப்ளீஸ்.. அவன் கண்கள் சுருங்கி தான் செய்த அனைத்து தப்புகளுக்கும் இறைஞ்சின..



திரும்பியவளின் பார்வை அவனை தாண்டி பின்னே பயணித்தது.. வேகமாய் மூச்சு வாங்க முன்னே வந்து நின்றாள் ரூபா..




அவளை கண்டதும் ஜானவியை பிடித்திருந்த கரம் தானாக இறங்கி விட்டது ஆர்யனுக்கு.. மாமா.. உங்கள உள்ள எங்கெல்லாம் தேடிக்கிட்டு இருக்கேன்.. இங்க இவ கூட உனக்கு என்ன பேச்சு.. வெறுப்போடு ஜான்வியை உறுத்து விழித்தபடி அவள் கேட்டதில்.. ரூபா.. அவன் அழுத்தமும் ஆதிக்கமும் அங்கு செல்லுபடி ஆகவில்லை..




ஏய்ய்ய்.. உனக்கு வேற வேலையே இல்லையாடி.. எங்க போனாலும் என் மாமாவையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்க.. கருமம்.. முதல்ல அம்மா சொல்ற மாதிரி காலடி மண்ணை எடுத்து தான் மாமாவுக்கு சுத்தி போடணும்.. ஜான்வி கேட்கும் படியாகவே கடைசி வார்த்தையை தெளிவாய் அவள் முணுமுணுக்க.. முனுக்கென பொங்கிய கண்ணீரை இதழ் கடித்து நிறுத்தினாள்.. தீர்க்கமாய் அவளைப் பார்த்தாள். 



அதுக்கு அவசியம் இல்ல மேடம்.. இனி நான் அவரைத் தேடி வரவேண்டிய அவசியம் இருக்காது.. என வலியான ஓரப்பார்வையோடு அவர்களை விட்டு விலகி நடந்தாள்.



போகலாமா அசோக்..  கூர் பார்வையால் தங்களையே துளைத்துக் கொண்டிருந்த அசோக்கின் பின்னே ஏறிஅமர்ந்தபடி கேட்ட படி. பைக்கின் பின் ஸ்டாண்ட் கவனமாய் பிடித்துக் கொள்ள.. இனி அவள் தங்கள் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன் என கூறியதில் நிம்மதி பெருமூச்சு விட்ட ரூபாவின் கண்கள் அவள் ஏறி அமர கண்டதில்.. விழிகள் பைக்கில் அமர்ந்தவனின் மீது கூர்ந்தன.. யோசனையில் இடுங்கிய புருவங்களோடு நின்ற சமயம் அவர்களை கண்டு கொள்ளாமல் பைக் அவர்களை சீறிப்பாய்ந்து கடந்திருந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...