முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 44

 உயிரற்ற உடலாக ஆரியன் நின்று இருக்க.. அடுத்து எப்படி அவனை காரில் ஏற்றி  அழைத்து வந்தாளோ.. இதோ வீட்டிற்குள் இழுத்து வந்திருந்தாள்..  உடலின் செய்கைகளையும்  உணர முடியாத நிலையில் அணுக்கள் அனைத்தும் தம்பித்துப் போனதாய் சோபாவில் பொத்தென விழுந்தான் ஆரியன்.. கண் முன் கைகொட்டி நின்று சிரித்தாள் ஜான்வி பெற்ற மகளுடன்.




இதுவரை எத்தனையோ முறை அவள் பேச வந்த விஷயத்தை பேசவிடாமலேயே தடுத்து இருக்கிறான். வார்த்தையால் அவளை குத்தி கிழித்து இருக்கிறான்.. அவளை அணு அணுவாய் துன்பப்படுத்தி இருக்கிறான். அனைத்தும் அன்று அவள் கூறிய ஒரே விஷயத்திற்காக தான்..




அது பொய் என மற்றவர்கள் கூறிக் கொண்டிருந்தவரை தான் செய்வது அனைத்தும் சரியாத்தான் பட்டது. அவள் கூறிய பொய்க்கான தண்டனையாய் தோன்றியது.. ஆனால் இன்று கண்முன் தன்னை உறித்து நிற்கும் இந்த குட்டி ஜீவன் அவனை வேர்வரை ஆட்டம் காண வைத்திருந்தது..




அதிலும் அப்பா என இன்னொருவனிடம் அவள் தாவியதும்.. உனக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என கூறாத குறையாய் ரூபாவிடம் அவள் கூறிச் சென்ற வார்த்தைகளும் அவனை நிலைகுலைய வைத்தன.. 




அது எப்படி அவ அப்படி சொல்லலாம்.. அது என் குழந்தையும் கூட தான..  அவ மேல எனக்கு உரிமை இல்லைன்னு இவ எப்படி சொல்லலாம்.. கோபம் ஜான்வியின் பக்கமாய் திரும்பியது..




ஆனால் உரிமை கொண்டாடும் அளவிற்கு குழந்தை அவள் வயிற்றில் வளர்ந்ததிலிருந்து இதுவரை ஒரு இம்மி துரும்பை கூட தான் எடுத்து போட்டிருக்க வில்லையே.. இப்போது மட்டும் எந்த உரிமையை கூறி உரிமை கொண்டாடிக் கொண்டு செல்ல முடியும்.. அதே இடத்தில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். என்ன மாமா தலை வலிக்குதா.. அவன் தோளை தொட்டபடி கன்னங்களில் இதழ் உரசினாள் ரூபா.. 




கண்கள் சிவக நிமிர்ந்தவனை கண்டு ஒரு நிமிடம் மூச்சு அடைத்து தான் போனது அவளுக்கு..




என்ன மாமா.. கண்ணெல்லாம் எப்படி சிவந்து போய் கிடக்கு.. இருங்க.. என சட்டென விலகி அவள் எழுந்து ஓடியதில்.. இப்போதைக்கு இவள் தொல்லை தாங்க முடியாது..  தள்ளி சென்றாலே போதும் என்ற மட்டும் நிம்மதி கொண்டு தலையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் அவன் குனிய அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் தோள் தட்டி நின்றாள் ரூபா.



இந்தாங்க மாமா.. வாங்கிட்டு வந்த மிக்ஸை நானே கலக்கி உங்களுக்காக காபி போட்டு கொண்டு வந்துருக்கேன்.. கொஞ்சம் குடிங்க.. அவள் கொஞ்சலை கவனிக்கும் நிலையில் இல்லை அவன்..  பித்து பிடித்தார் போல் இருந்தது..



ப்ச்.. கொஞ்ச நேரம் என்னை டிஸ்டர்ப் பண்ணாத ரூபா.. தள்ளிப்போ.. அவன் கூறிய வார்த்தைகளின் வேகத்தை அவள் உணரவில்லை..


மாமா.. தலைவலியோ என்னவோ கண்ணெல்லாம் எப்படி சிவந்து கிடக்குது பாருங்க.. எல்லாம் அந்த ராட்சசி கண்ணு பட்டதால தான் இருக்கும்னு நினைக்கிறேன்.. கண்களை உருட்டி வெடித்து அவள் ஒரு அர்த்தத்தில் கூற.. ராட்சசி என்றதில் இவன் இதழ்களும் வலியோடு சுழிந்தன..



ஆமா ராட்சசிதான் உண்மையாவே ராட்சசிதான் என நொடிக்கு நொடி இப்படி செத்துப் பிழைக்க வைக்கிறா.. அவன் மனக்குமுறல் இவளுக்கு கேட்கவில்லையே..




சரி மாமா உங்களுக்காக போட்டு வந்தேன்.. கண்டிப்பா குடிச்சிருங்க.. அவள் தொல்லை உண்மையாகவே தாங்க முடியவில்லை.. 





இப்போதே அவளிடம் இதற்காகத்தான் உன்னிடம் பழகினேன் என்ற விஷயத்தை கூறி குறைந்த பட்சம் இவளிடம் இருந்தாவது விடுதலை வாங்கிக் கொள்ளலாமா.. ஆம் இனி நாடகத்தை போட்டும் எந்த பிரயோஜனமும் இல்லையே.. சிறுபிளைத்தனமாக தான் செய்த செயலுக்கு முற்றும் மாறாய் அங்கு நிலையே வேறு அல்லவா.. என்ற முடிவோடு ரூபா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என அவன் ஆரம்பித்த வேளையில்.. ட்ரிங்.

ட்ரிங்.. என அடித்த தொலைபேசி எண் ரிங்கில் தானாக இவன் பேச தடைப்பட்டு விட்டது. யார் என்றும் அறிந்து விட்டான்.. செவிகள் கூர்ந்தன..


அத்தை கண்கள் மின்ன அவள் அழைத்ததில் சந்தேகம் ஊர்ஜிதம் ஆனது.. எப்படித்தான் என் அம்மாவுக்கு மட்டும் சரியான நேரத்தில் மூக்கு வியர்க்குதோ..  ஆனால் என்ன ஆனாலும் சரி.. இன்றோடு இந்த பிரச்சனையை முடித்தாக வேண்டும்.. உண்மையை அவளிடம் கூறி விட வேண்டும்.. முதலில் முடியாது என அடம் பிடித்தாலும்..  படித்த பெண் எப்படியும் தன் மனநிலையை புரிந்து கொள்வாள்.. என தாயிடம் பேசி முடித்து அவள் வரும் நேரத்திற்காக அவன் காத்திருக்க.. 




அத்தை இன்னைக்கு மாமா என்ன எங்க கூட்டிட்டு போனாரு தெரியுமா.. இங்க இருந்ததிலேயே பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அங்கு இல்லாத பொருட்களை இல்ல..அவ்ளோ நல்லா இருந்துச்சு..  எனக்கு கூட ரெண்டு ஹேண்ட் பேக்.. மேக்கப் அக்சஸரீஸ் எல்லாம் வாங்கி தந்து இருக்காரு.. எல்லாமே சூப்பரா இருந்துச்சு.. வெளிநாட்டில் இருந்து வந்தவள் சாதாரண சாம்பியன் காம்ப்ளக்ஸை கண்டு ஆச்சரியமாய் கூறுவதெல்லாம் வியப்புதான்.. அவள் மகிழ்ச்சி ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல இல்ல கூட்டி சென்ற தன்னிடம் என கண்ட ஆரியனுக்கு நெஞ்சம் வெடித்தது..  ஆனாலும் தன் மனநிலை.. 


தன்னால் அவளை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாதே.. சொல்லி தான் ஆகணும் ஆர்யா.. முடிவோடு பார்த்துக் கொண்டிருக்க மகிழ்ச்சியாய் கூறிக் கொண்டே வந்தவள்.. அப்புறம்..உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அத்தை என நிறுத்தினாள்.. 


மெல்லிய குரலோடு பேசிக்கொண்டிருந்தவளின் முணுமுணுப்பு திடீரென கேட்காமல் போனதில் பேசி முடிச்சிட்டியா. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. ஜான்வி.. என அவன் எடுத்த வேளையில் இன்னைக்கு அங்க அந்த ஜான்விய பார்த்தோம்.. தன் வருங்கால மாமியாரிடம் விஷயத்தை ஒப்படைத்து இருந்தாள் ரூபா.




ஐயோ இவன் இன்னும் அம்மா கிட்ட பேசி முடிக்கலையா? என பாதியாய் வந்த வார்த்தைகளை வாய்க்குள்ளயே விழுங்கி அவன் நிற்க.. ஜான்வியா.. எதிர் முனையில் ஒரு கணம் மௌனம் நிலவியது..




ஹலோ அத்தை இருக்கீங்களா..




அவ எங்கடி அங்க.. என்ற மணிமேகலையின் குரல் அடுத்த கணம் ஓங்கி இருந்தது..




அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு போல.. கையில குழந்தை அவ வீட்டுக்காரனோட வந்து இருந்தா.. ஓரக்கண்ணால் ஆர்யனை பார்த்துக்கொண்டு கூற அந்த குழந்தை என்னுடையது.. என கதற தோன்றிய வாயை எழுத்து பிடித்துக் கொண்டு அமைதி ஆனான்.




என்ன.. மணிமேகலையாலும் கூட இதை நம்ப முடியவில்லை என்பது அவளின் அதிர்ந்த குரலிலேயே தெரிந்தது. அட உண்மைதான் அத்தை.. மாமா கூட பார்த்தாரு.. வேணும்னா கேளுங்க.. என்றபடி மாமா அதை உங்க கிட்ட பேசணுமாம் என்ன போனை நீட்ட..  வாங்கியவன் அதன் ஸ்பீக்கரை மறைத்தான். அவளை பத்தி சொல்லாதன்னு உன்கிட்ட சொன்னேனே..  என அடிகுரலில் இயலாமையோடு கேட்க.. ஆபீஸ்ல பார்த்தது தானே சொல்ல கூடாதுன்னு சொன்னீங்க.. அதுக்குன்னு இப்படி வெளிய பார்த்து பேசிக்கிறதை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது.. அத்தை கிட்ட சொல்லாமலும் இருக்க முடியாது.. அதான் சொல்லிட்டேன்.. சரி நான் வச்ச காபிய மறக்காம குடிச்சிருங்க.. கன்னம் தட்டி விட்டு எழுந்து சென்று விட்டாள்.



அ.. அம்மா.. அவன் அழைத்தது தான் தாமதம்..  என்னடா பண்ரா அங்க அந்த ***.. இங்க இருந்து உன் வாழ்க்கையை அழிச்சது பத்தாதுன்னு இப்போ நீ இருக்கிற இடமும் தேடி வந்துட்டாளா.. இப்பதான் உனக்கு ரூபாவ கல்யாணம் பண்றதுக்கு நல்லபடியா வேலை ஓடிக்கிட்டு இருக்கு.. அது பொறுக்கலையா அந்த ***.. பேசியது அனைத்தும் தகாத வார்த்தைகள் அதற்கு மேல் தாங்க மாட்டாதவனாய் போதும்மா.. அடி குரலில் இருந்து கத்தி இருந்தான். 




ஆர்யா..




போதும்மா.. இதுக்கு மேல.. இதுக்கு மேல.. ஒரு வார்த்தை அவள பத்தி நீங்க பேச கூடாது.. வார்த்தைகளில் சுள்ளேன காய்ந்தான்.. அவனை கோபப்படுத்தினால் வேலைக்காகாது என புரிந்து ஹிஹிஹி.. ஆர்யா.. அம்மா இப்படி எல்லாம் பேசிட்டேன்னு கோவப்படாதப்பா... அவளை பத்தி தெரிஞ்சு தானே நான் சொல்றேன்.. வாழைப்பழத்தில் மெல்லமாய் ஊசி ஏற்றும் வகையில் அவள் கூற..




தெரியுமா?? என்னம்மா தெரியும் உங்களுக்கு அவன் இதழ்கள் வலியோடு கேலியாய் விரிந்தன.. தெரியும் தெரியும்னு சொல்லி என் லைஃபையே நீங்க அழிச்சிட்டீங்க.. 



அவன் கூறியது மணிமேகலைக்கு புரியவில்லை.. என்ன சொல்ல வர நீ..அவள் குரல் கூர்மையானது..



இன்னும் என்ன சொல்லணும்.. உங்களால் என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சு.. முடிஞ்சிடுச்சு.. அதுக்குமேல் வார்த்தை வரவில்லை அவனுக்கு.. தான் செய்த தவறை வெளிப்படையாய் கூற இதுவரை அவன் கொண்டிருந்த கோட்பாடுகளும் அதன்படி நடக்கும் வழிமுறைகளும் அவனுக்கு இடம் கொடுக்கவில்லை..



ஆர்யா.. ஆர்யா.. நீ ஏதோ ஸ்ட்ரெஸ்ல இருக்குற மாதிரி தெரியுது.. இன்னைக்கு லீவு தானே கொஞ்சம் ரெஸ்ட் எடு தூங்கி எந்திரிச்சு வந்து பேசு.. என்றதோடு போனை கட் செய்து விட்டாள் மணிமேகலை.





அம்மா.. அவன் வெடித்த கத்தல் அழைப்பு வீணானது..    எப்போதும் அவர் கூறும் போக்கிற்கே தான் ஆட வேண்டும்.. இல்லை என்றால் பிறகு பேசி கொள்ளலாம்.. என போனை துண்டித்து விடுவார் அவன் விழிகள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்த ஐ போனை வெறித்தன..




வேண்டாம்.. எனக்கு யாரும் வேண்டாம்.. எனக்கு என் பிள்ளையும்.. அவளும் மட்டும் போதும்.. அவன் கண்கள் மௌனமாய் கலங்கின.




அறையில்வந்த ரூபா யோசனையோடு அமர்ந்து இருந்தாள்..  கண்களுக்கு முன் ஜான்வியை ஏற்றி சென்ற அவன்.. அவன்?? எவன்??.. தெரியவில்லை ஆனால் அவனை இதற்கு முன் பார்த்த ஞாபகம்.. ஆனால் எங்கே?? பேரும் தெரியவில்லை பார்த்த இடமும் ஞாபகம் இல்லை. ஆனால் இவ்வளவு தூரம் பார்த்த கணத்தில் இது அவன்தான் என தோன்றும் மட்டும் தனக்குள் பதிந்து இருக்கிறான் என்றால்.. யாரவன்.. தீவிர யோசனையோடு அமர்ந்திருந்தாள்.





வந்த கையோடு கிருத்தி கேட்டாள் என அசோக் சிக்கன் எடுத்து வர பிரியாணி போட்டு தயார் செய்து விட்டாள் ஜான்வி..




கமகமக்கும் பிரியாணி ரெடி.. என்றபடி குக்கரை தூக்கி வந்து ஹாலில் வைக்க.. அடுத்தடுத்த தாய் தட்டும் செம்பும் வாண்டு ஒன்றும் அதன் அப்பன் ஒன்றுமாய் கொண்டு வந்து பரிமாறி...

அய்ய்ய் அம்மா.. கிருத்தி கழுத்தோடு கட்டிக் கொண்டு. எனக்கு புடிச்ச பிரியாணி.. தேங்க்ஸ் மா.. என குதூகளிக்க நெற்றி முட்டினாள் ஜான்வி.




முதல் போனியாய் மகளுக்கு..  அடுத்ததாய் அவனுக்கு கடைசியில் தனக்கென வைத்து அமர.. பாதி சிந்தையும் பாதி வாய்க்குள் தள்ளியும் என ஒரு வழியாய் உண்டு முடித்து கிருத்தி எழுந்து சென்று அறைக்குள் படுத்து விட்டாள்..




தானும் உண்டு முடித்து அறைக்குள் வர அதற்குள் உறங்கி இருந்தாள் திருத்தி. பார்வை உறங்கிக் கொண்டே இருந்த மகளை வெறித்தது..




சற்று நேரத்திற்கு முன் ஆர்யன் மகளை கண்டதும் அவன் நெஞ்சம் படபடத்து விழிகள் நிலைக்க நின்ற விதம்..கண் முன் காட்சியாக விரிந்தது.. 



வேண்டுமென்று அவனை தண்டிக்க நினைக்கவில்லை.. ஆனால் தன்னையும் அறியாமல் அவனை விட்டு ஏதோ ஒன்று தள்ளி நிறுத்துகிறதே.. குழந்தையை எக்காரணம் கொண்டும் அவன் பக்கம் விட்டு விடாதே என இந்த ஆழ்மனதின் அறிவுறுத்தல் தான் என்ன..ஆழ்ந்த சிந்தை  யோசித்து அவள் அமர்ந்திருக்க அக்கா.. சத்தமிட்ட குரலோடு உள்ளே ஓடி வந்தாள் பூவிதா.




பூவி.. வா.. வா.. சட்டென மாறும் பொய்யான மலர்ச்சி தான்.. இந்த சில காலங்களாய் பழகிவிட்டது போலும்..



அக்கா.. ஓடி வந்தவளோ அவளை தோளோடு கட்டிக் கொண்டு துள்ள ஆரம்பித்தாள்.... அடி.. என்னாச்சு டி.. அவள் கேள்விக்கும் பதில் இல்லாது அவள் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்..



அச்சோ.. அச்சோ.. என்ன இதெல்லாம் கிருத்தியை போல் தன் கன்னத்தில் எல்லாம் எச்சில் செய்த பூவிதாவை தலையில் செல்லமாய் கொட்டி நகற்ற.. அக்கா இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. மீண்டும் அவளை தோளோடு பிடித்துக் கொண்டு துள்ளினாள்.


அப்படி என்னவாம்.. அவள் புருவம் உயர்த்த.. அர்த்தத்தோடு ஜான்விவிடம் பதிந்த அவள் பார்வை சக்சஸ் என வெற்றி குறியோடு நின்றது..



என்ன.. புரியாமல் ஜான்வி கேட்க.. அய்யோ அக்கா.. வினோத் சொல்லிருந்தேன்ல.. கேட்கும்போதே அவள் முகத்தில் வெட்கம் சிவப்பு வானமாய் பிரதிபலித்தது.



விஷயம் அறிந்து ஜான்மியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.. அப்படின்னா ஓகே ஆயிருச்சா.. 



ம்ம்ம்.. கண்களை அழுந்த மூடி திறந்தாள்..



அன்னைக்கு உன்கிட்ட பேசிட்டு போன பின்ன.. வினோத் கிட்ட பேசினேன்.. என்னை ரொம்ப காதலிக்கிறதா சொன்னான்..  ஆனா அவனுக்கும் அவங்க அக்கா அக்கா மகளை பத்தி கவலை தான்.. அதெல்லாம் எதுக்கும் கவலைப்படாத..நம்ம இருக்கோம்.. நம்ம  அவங்கள பார்த்துக்கலாம்னு சொன்னேன்.. உடனே அவனுக்கு தான் எவ்வளவு சந்தோஷம்ன்னு சொல்ற.. முன்னாடி பேசுனதை விட பயங்கர சந்தோஷமாகிட்டான்..  அவன் சந்தோஷமா பேச பேச எனக்கும் அவ்வளவு சந்தோஷமா இருந்தது.. கடைசில அமெரிக்கா போறதுக்கும் சம்மதம் சொல்லிட்டான்.. அதே நேரத்துல அவங்க அக்கா அக்கா மகளுக்கு செய்ய வேண்டியதையும்  செஞ்சிடலாம்னு சொல்லிட்டான்.. ஒரே கல்லில் இரண்டு மாங்கா.. வெட்கமும் மகிழ்ச்சியும் கலக்க கூறிக்கொண்டே வந்தவள் சட்டென முகம் சுருக்கினாள்..



ஆனாலும் உன் வீட்டுக்காரன் என்னதான் சிடு மூஞ்சியா இருந்தாலும்.. அட்வைஸ் எல்லாம் பயங்கரமா தான் கொடுக்கிறார்.. அவர் சொன்னத வச்சு தான் கொஞ்சம் என் மைண்டை மாதிரி அவன்கிட்ட பேசினேன்.. கடைசில என் பஸ்ட் லவ்வே சக்சஸ் ஆயிருச்சு.. வீட்லயும் அமெரிக்கா போக போறவன்னு விஷயத்தை சொல்லிட்டேன். எல்லாருக்கும் சம்மதம்.. அதான் இந்த விஷயத்தை முதலில் உன்கிட்ட சொல்லனும்னு ஓடி வந்தேன் என கூறியபடி மீண்டும் அவள் கழுத்தோடு கட்டிக்கொண்டு உள்ள.. அய்யோ.. அடியே.. அவள் மகிழ்ச்சியில் இவள் இதழ்களும் விரிந்தன..



சரிக்கா.. வீட்ல ஒத்துக்கிட்டாங்க என்கிற இந்த விஷயத்தை இன்னும் வினோத் கூட சொல்லல..  நான் போய் அவன் கிட்ட பேசுறேன்..துள்ளி ஓடினாள்.




சொல்பவளே மகிழ்ச்சி பொங்கிய கண்களோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஜான்வியின் விழிகளோ மறு பக்கமாய் ஏதேச்சையாய் இருமிய அசோக் பக்கம் தன்னை மறந்து திரும்பியது.. சட்டென பாய்ந்து அவனுக்கு நீர் கொடுத்தவளின் கண்கள் அவனை விட்டு அகல மறுத்தது.. 



இப்போ ஜானு யார அக்சப்ட் பண்ணுவான்னு நினைக்கிறீங்க.. கமெண்ட்ல சொல்லுங்க.. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...