தான் இருமியதற்கு ஓடி வந்து நீர் கொடுத்தவளின் மீது நொடிக்கும் அதிகமாய் அஷோக் பார்வை நிலைத்தது.. இந்த அன்பும் பாசமும் தானே தான் அவளிடம் கேட்பது.. யாசிப்பது.. அதை ஒருநாளும் அவள் புரிந்து கொண்டதே இல்லை..
என்னாச்சு அஷோக்.. ஏன் அப்படி பக்குற.. குடி.. அவள் கேட்டதும் தன்னிலை கொண்டு கண்களை படபடவென கொட்டி சிமிட்டி தன்னை நிலை படுத்தி கொண்டான்.. அவளின் சிறு செயலுக்கு கூட அளவு கடந்த துடிப்பு அவனிடம் உண்டு.
வாங்கிக்கோ.. கையிலிருந்த செம்பை காட்ட இருமல் நின்று போயிருந்தலும் அவள் கொடுப்பதை மறுக்காமல் வாங்கி மடக் மடக்கென வாயில் சரித்தான்.
இது.. இது தான் அவன் ஜானு.. யாருக்கேன்றாலும் ஓடி சென்று உதவுபவள்.. தன்னை நித்திப்பவர்களுக்கும் நல்லதையே நினைப்பவள்.. எதையோ நினைத்து கண்களை அழுந்த மூடி திறந்தான்..
அஷோக்.. நா இன்னைக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா.. அவளோடு சேர்ந்து கதை பேசிய அவள் பட்டாம்பூச்சி கண்களில் அவன் விழிகள் விழுந்தன.
நம்ம பூவிதா இருக்காளே.. அன்னைக்கு நீ சொன்ன மாதிரி அவ பாய் பிரண்ட் கிட்ட பேசிருக்கா.. அவனுக்கும் ரொம்ப சந்தோஷம்.. அமெரிக்கா போகவும் சம்மதம் சொல்லிட்டான்... வீட்டுலயும் எல்லாருக்கும் ஓகேவாம்.. இப்போதான் சந்தோசமா வந்து என்கிட்ட சொல்லிட்டு இருந்தா.. எனக்கும் அவ்வளவு சந்தோஷம்.. அவள் மகிழ்ச்சியில் தானாக இவன் இதழ்களும் சின்னதாய் விரிந்தன..
பயங்கரமான ஆளு தான் நீ.. குடுத்த ஒரு அட்வைஸ்லயே அவ லவ்வ செட்டில் பண்ணி விட்டுட்ட.. ஹ்ம்ம்.. உன்ன மூணு வருஷத்துக்கு பாத்ததுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி பாத்துருந்தா.. சட்டென அவள் கூறி கொண்டிருந்த வார்த்தைகளில் அடுத்து என்ன சொல்ல போகிறாள் என அறிந்தவனாய் இது வரை கொண்ட உணர்வு மாற சட்டென எழுந்திருந்தான்..
அஷோக்?? அவள் புரியாமல் பார்க்க.. கை கழுவிட்டு வந்துடறேன்.. காயுது.. அவன் வேக நடை எதற்கென புரியவில்லை.. ஓடுகிறானே.. இவ்வளவு நேரம் தான் கூறுவதை அமைதியாக தானே கேட்டு கொண்டிருந்தான்.. இப்போது என்ன??
அவன் வர அவள் காத்திருக்கும் போதே வந்தவன் பாத்திரங்களை எடுத்து சென்று வைத்து விட்டு நேராய் சோபாவில் தலை சாய்ந்து விட்டான்.
ஏன் இப்படி பண்றன்.. இன்னும் கூட ஏன் என்ன அவாய்ட் பன்றான்.. இன்று விடவே கூடாது என்ற எண்ணத்தோடு அவனருகில் வந்த படி.. உன்கிட்ட பேசிட்டுருந்தேனே அஷோக்.. ஏன் பாதிலையே வந்துட்ட.. அவள் குரல் கேட்டு தலையை மட்டும் நிமிர்த்தியவன்.. ஜான்வி.. கொஞ்சம் ஹெட் ஏக்மா.. இந்த ஒருவாரமா தூங்கவே இல்ல. பயங்கர அலைச்சல் வேற.. அப்புறமா பேசலாமா.. கேட்டதும் இவள் முகம் தொங்கி விட்டது.. பார்த்தவனுக்குள் உள்ளுக்குள் பூகம்பம்.
எப்போதும் அவளை மகிழ்ச்சியாய் வைத்து கொள்ள வேண்டும் என்பது தான் அவனது பெரிய லட்சியமே.. அவள் மகிழ்ச்சி வேறொன்றாக இருந்தால் பரவாயில்லை.. ஆனால் இங்கு வேறொருவனாக அல்லவா இருக்கிறான்.. ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நா உன்ன பாத்துருக்க கூடாதா.. வழக்கமான தவிப்பு வார்த்தைகளோடு அவன் கண்கள் இமை கூட்டுக்குள் ஒளிந்தன..
எவ்வளவு மகிழ்ச்சியாய் அவனிடம் பேச ஓடினேன்.. ஆனால் அவன் தன்னை நிராகரிக்கிறான். .. தள்ளி நிறுத்துகிறான்.. தான் அப்படி என்ன தவறு செய்து விட்டோம்.. மனம் கணக்க.. எதிர் சுவரை வெறித்து கொண்டிருந்தாள் ஜானு..
அவள் சென்று விட்டாளா.. என்ன பார்க்க கண்களை திறந்தான் அஷோக்.. எதிரே அவளை காணவில்லை.. நேராய் திரும்பிய விழிகள் அவள் அறைகுள்ளும் இல்லை என்பதை காட்ட.. இவன் கால்கள் தானாக எழுந்திருந்தன..
எங்க போனா.. இங்க தானே இருந்தா.. அவன் சாக்கு சொன்ன தலை வலி எங்கே போனதோ.. ஒருவேளை பொய்யோ அது..
வேகமாய் வெளி வர.. வாசல்கட்டில் அமர்ந்த படி. வெறித்த கண்களோடு அமந்திருந்தவளை கண்டு சட்டென அவன் நடை தடை பட்டது..
இந்த உச்சி வேளையில் கொஞ்சம் நேரம் கண் அயராமல் இங்கு வந்து ஏன் அமர வேண்டும்..
ஜானு.. வந்த குரலை செருமி ஜான்வி.. அவன் குரலில் சட்டென விழிகள் மலர திரும்பியவளின் கண்கள் சட்டென அங்கு தன்னையே பார்த்து கொண்டிருந்த அஷோக்கை முறைத்து திரும்பிக் கொண்டது..
என்னாச்சு.. தூங்கலையா.. இங்க வந்து உட்கார்ந்து இருக்க.. அவன் குரலில் அவள் கரம் பக்கத்தில் இருந்த செடியை வருடியது.
நான் பேச வந்தப்போ அப்புறமா பேசலாம் தலை வலிக்குதுன்னு சொன்ன.. இப்ப அமைதியா உட்கார்ந்து இருக்கிறப்போ மெனக்கிட்டு வந்து தூக்கம் வரலையான்னு கேட்கிறே?? அவள் குழந்தை தனமான கோப குரலில் எவ்வளவு முயன்றும் கட்டு கொள்ள முடியாது இவன் இதழ்கள் தானாக விரிந்தன.
சரி.. இப்போ என்ன.. நீ சொல்ல வர்றதை கேட்கணும் அதானே.. சொல்லு.. அவளுக்கு மறுபக்கமாய் வந்து கை கட்டி அவள் முகம் பார்த்த படி அமர்ந்தான் அசோக்.
ம்ம்ம்.. மின்னிய விழிகளோடு திரும்பினாள்.. நான் கேட்பேன்.. உண்மையை மட்டும் சொல்லுவியா..
ம்ம்ம்.. அவன் புருவங்கள் சுழிந்தன..
என்னாச்சு அசோக் உனக்கு.. ஏன் திடீர்னு என்ன அவாய்ட் பண்ற.. நீ என்கிட்ட பேசாம போற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா.. அவள் முகம் கவலையில் சுருள தான் பேசாதது அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என கேட்டவனின் நெஞ்சுக்குள் மெலிதாய் இளஞ்சாரல் வீசியது.
அம்மு.. வந்த வார்த்தையை உள்ளேயே விழுங்கினான்.. இது.. இதுதான் பிரச்சனை.. மனதில் இருப்பதை அப்படியே வெளியே கூறவும் முடியாது அதே நேரத்தில் அவளிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து கவனித்து பேச வேண்டிய நிலையில் தான்.
ஜான்வி.. பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டான்..
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே மா.. கொஞ்சம் வேலை.. அதான் சரியா பேச முடியல..அவன் கூற மறுப்பாய் தலையாட்டினாள்.. எனக்கு தெரியாதா உன்னை பத்தி? நீ வேணும்னே என்ன அவாய்ட் பண்ற.. இல்லனா.. இப்படி எல்லாம் ஒரு நாளும் நீ பேசாம இருந்ததில்லை.. அவள் கூறிட.. எல்லாம் தெரியுமா.. வாய்க்குள் முனகிய அவன் குரல் ஆழ்ந்தது..
என்ன கூறி புரிய வைப்பான்.. அன்று ஆரியனோடு ஒன்றாய் அவளை காரில் கண்ட நொடி அவன் நெஞ்சம் இரண்டாய் வெடித்ததை..
அந்த நொடி உலகின் அனைத்து உயிர்களும் பொருட்களும் ஸ்தம்பித்துப்போன நிலையை..நிற்கதியான நிலையில் தான் நிற்பதாய் தோன்றியதே.. அந்த வலியை என்னவென அவளிடம் கூறி புரிய வைப்பான்..
அதற்கு முதல் தன் மனதை அவள் புரிந்து கொண்டாக வேண்டும்.. தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் மட்டுமே தன் உணர்வை கூறுவது சாத்தியமாகும்.. அவளுக்காக அவன் செய்த அத்தனை விஷயங்களும்.. மின்னல் வேகத்தில் கண் முன் வந்து சென்றது..
ப்ச்.. அத விடு.. அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்..நான் ஒரு விஷயம் கேட்கிறேன்.. அதுக்கு பதில் சொல்லு என்றவனை பார்த்தவள்.. எது கேட்டாலும் நான் சொல்லுவேன்.. உன்ன மாதிரி மென்று முழுங்க மாட்டேன்.. சுழிந்த அவள் உதட்டின் மீது ஒரு நொடிக்கும் அதிகமாய் அவன் விழிகள் நிலைத்தன.. பார்வை கூட நேரம் காலம் தெரியாமல் வஞ்சிக்கிறதே..
மரத்திலிருந்து கேட்ட குயில் சத்தத்தில் நிலை கொண்டு மறுபக்கமாய் திரும்பிக் கொண்டான்..
கேளு.. அவன் முரட்டுக்கரம் பற்றிய அவள் தளிர்க்கரம் பட்ட இடம் எங்கும் அவன் கை சிலிர்த்தது..
நொடியில் உள்ளுக்குள் உணர்வுகள் ஆர்ப்பரித்தது.. தவறு.. தவறு அஷோக்.. வாகாய் அவளிடம் இருந்து தன் கரம் விடுத்து கொண்டான்.. ம்ம்.. அது.. இன்னைக்கு நீ அங்க பாத்தது.. மிஸ்டர் ஆர்யன் தானே.. கேட்டதும் இவள் முகமும் சுருங்கியது.
ம்ம்ம்.. ஆரியன் தான்.. உனக்கு எப்படி தெரியும்.. நீ எப்படி கண்டுபிடிச்ச.. அவள் கேட்டதில் இதழ்கள் விரக்தியில் விரிந்ததை அவள் அறியவில்லை. அவளை பற்றி அவன் அறியாத விஷயங்களா??
ம்ம்ம்.. ஆனா அவர் அங்க வருவார்னு நானே எதிபக்கல.. அவர் வருங்கால மனைவியோட வந்திருந்தார்.. கூறும் போது அவள் குரல் சற்று கம்மியாது.
என்ன.. கூர் விழிகளோடு பார்த்தான் அஷோக்..
நீ ஏன் இப்படி பாக்குறன்னு புரியுது.. நா அக்சப்ட் பண்ணிக்கிட்டேன் அஷோக்.. அவர் லைப்.. அவர் வழி.. அவர் விருப்பம்.. என்றவளிடம் இப்போது தீர்க்கமாய் மாறியது அவன் பார்வை.
ஒருவேள இப்போ அவர் அந்த பொண்ணு வேண்டாம்னு உன்ன தேடி வந்தா உனக்கு ஓகேவா.. அவன் கண்களில் எதையோ கேட்டு விட துடிப்பு.
ம்ம்ம்.. அவள் கண்களில் யோசனையோடு இதழ்களும் மூடி விட.. சரி ஜான்வி.. எழுந்து விட்டான் அஷோக்..
என்னாச்சு.. திரும்பி அவள் புரியாமல் பார்க்க.. சொன்னேனே.. ஹெட் ஏக்ன்னு.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்.. அப்புறமா பேசலாம்.. அவள் யோசிக்க தனிமை தேவைப்படுவதாய் அவன் வர.. மாறாய் அந்த நிமிடம் எதிர் மரத்தை பார்த்தவளின் மனதில் இருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை..இன்னும் உனக்கு டைம் தேவைப்படுதா ஜானு.. சோபாவில் கால் மடக்கி படுத்தவனின் கண்கள் இன்னும் வெளியே அமர்ந்திருந்தவளை எட்டி வெறித்தன..
தாய் பேசியதை ஆரியனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.. இது போல் தானே இல்லாததையும் பொல்லாததுமாய் தான் அவளை கண்ட நொடியில் இருந்து தன் மனதில் விஷமாய் ஏற்றி கடைசியில் அவளையே வெறுக்க வைத்து விட்டிருந்தார்.. இவர் கூறியதை நம்பி என் ஜானுவை நிற்கதியாய் விட்டுவிட்டேனே.. குழந்தையை வயிற்றில் தாங்கிய நிலையோடு எவ்வளவு அவஸ்தை பட்டு இருப்பாள்..?? அவன் இதயம் மௌனமாய் அழுதது..
நல்லவேளையாய்ய் யோசிக்க மட்டும் விட்டு இது வரை ரூபா வந்திருக்கவில்லை.. நாளைவேளை.. இல்லையெனில் இருந்த மண்டை கணத்தில் கத்தி அவளை கதற விட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதர்கில்லை..
எவ்வளவு நேரம் தன்னிலையை நொந்து கொண்டு அமந்திருந்தானோ.. திடீரென ஏதோ காலிங் பெல் சத்தத்தில் அவன் புருவங்கள் சுழிந்தன..
இந்த நேரத்துல யாரு.. தொடர்ந்து அடிக்கப்பட்ட காலின்பெல்லில் முட்டிய எரிச்சலோடு கதவை திறக்க.. அங்கு மிதா.. இறுகிய முகத்தோடு நின்றிருந்தாள்.
மிதா.. இத்தனை வருடங்கள் கழித்து தங்கையை பார்த்த மகிழ்ச்சியை விட.. இந்த நேரத்திலா இவள் வர வேண்டும்..அறிந்திருந்த உண்மையில் தலை சுற்ற நின்றான் ஆரியன்..
ஏற்கனவே ஜானவியும் ஆரியனையும் சேர்த்து வைக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்த மிதா இப்போ வந்துட்டா.. இனி என்ன நடக்க போகுது.. நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.. சப்போர்ட் பண்ணுங்கப்பா..
கருத்துகள்
கருத்துரையிடுக