முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 46

 அங்கு மிதாவை எதிர்பாராமல் கண்டு அதிர்ந்து நின்றான் ஆரியன். இந்த நேரத்தில் அவளை எதிர்பார்க்கவில்லை என்பது அவனது அதிர்ந்த முகத்திலேயே தெரிந்தது. அதிலும் அவள் இறுகிய முகத்தோடு அவனைப் பார்த்த விதத்தில் உண்மை எல்லாம் அறிந்துவிட்டாளோ.. நெஞ்சம் நின்று துடித்தது இவனுக்கு.. 




நொடியில் முத்து முத்தாய் வியர்த்துப் போன நெற்றியை தேய்த்து விட்டபடி நிற்க.. தன் மீது அத்தனை அன்பாய் இருந்தவன் நடந்த விஷயத்திற்காக எட்டு வருடங்கள் அவனை தான் வெறுத்த போதும்.. ஏதாவது வழியில் தன்னிடம் பேச முயற்சித்தவன்.. இப்போது பார்த்தும் உள்ளே கூட அழைக்காமல் யோசனையோடு நிற்க  கண்டு ஹலோ.. கையாட்டினாள் மிதா.




என்ன அப்படியே நிக்கிற..  நான் வந்ததுல உனக்கு ஷாக் ஆகிட்டியா.. புருவத்தோடு உயர்ந்த அவள் குரலில் தன்னிலை கொண்டான் ஆரியன். 



அப்படியெல்லாம் இல்ல பாப்..பா.. உள்ள வா..  இன்னும் வியர்த்து ஊற்றியது நிற்கவில்லை..  தவறு செய்த மாணவனின் நிலையில் இப்போது தான்!!



எப்படி இருக்க?? வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு??  பொதுப்படையான பேச்சுகளோடு உள்ளே வந்த மிதா விழிகள் அவன் வீட்டை சுற்றி வளம் வந்தன.. அபார்ட்மெண்டில் பதினோராம் மாடியின் குடியிருப்பு.. தங்கள் வீடு அளவிற்கு இல்லை என்றாலும் அதில் பாதி அளவு பிரம்மாண்டமாக தான் இருந்தது..




அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.. நான் நல்லா தான் இருக்கேன்.. நீ எப்படி இருக்க பாப்பா.. ஒவ்வொரு வார்த்தையும் சற்று திக்கி திக்கி தான் வெளிப்பட்டது. 



நானும் நல்லா தான் இருக்கேன்   அது சரி உனக்கு ஏன் இப்படி வியர்த்து ஊற்றுது? அவள் கேட்டதும் தான் அறிந்தவனாய் புறங்கையால் அவசரமாய் நெற்றி வியர்வையை துடைத்துவிட்டு கொண்டான்.



இல்.. இல்லையே.. ஏசி கம்மியா இருக்குன்னு நினைக்கிறேன்.. செய்த தவறில் காரணம் இல்லாமல் மூச்சு வாங்கியது..



  ஒஹ்ஹஹ்..  அவள் கூறிக் கொண்டிருக்கும் போது ஏசி அதன் ஃபுல் ஸ்பீடை எட்டியது..




திடீரென..  மாமா யார் கூட பேசிக்கிட்டு இருக்கீங்க.. நான் உள்ள இருக்கேன்.. என்ற படி வெளியே வந்த ரூபாவின் நடை அங்கு சோபாவில் அமர்ந்து இருந்த மிதாவை கண்டதும் அப்படியே நின்று போனது..




அவளை எதிர்பார்த்து இருக்கவில்லையே!!  ஒரு செய்தி கூட கூறாமல் திடீரென வந்தவளைக் கண்டு மாட்டிக்கொண்ட ரீதியில் விழித்து அடுத்த நிமிடமே தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்..  அத்தையின் துணை இருக்க மற்றதெல்லாம் எதற்கு சமமாம்?? 



பொதுவாகவே மிதாவோடு அவ்வளவாய் ஒத்துதில்லை.. வெகுவான பிரச்சனை எந்த தகுதி தராதரமும் பார்க்காமல் மிதா பழகும் பழக்கத்திலிருந்தே ஆரம்பிக்கும்..  அதற்காகவே இருவருக்கும் எப்போதும் முட்டு தான்.. 




மிதாவும் கூட அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது சுழிந்த அவள் விழியினில் தெரிந்தது.. இவளும் இங்கே தான் தங்கியிருக்கிறாளா.. ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு பார்த்து மிதா பார்க்க தொண்டையை செருமினான் ஆரியன்.. 




இவளும் உன் கூட தான் தங்கிருக்காளா.. என்கிட்ட இத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல..  குற்றம் சாட்டும் பார்வையோடு அவள் கேட்க..




இதுவரைக்கும் சொல்ல வேண்டிய அவசியமோ மனநிலையோ தோன்றவில்லை என்பதை வெளிப்படையாய் கூற முடியவில்லை..




சகோதரனின் அமைதியில்.. வாட் எவர் நிமிர்ந்து அமர்ந்தாள் மிதா.. அப்புறம் மிதா நீ எப்ப கோயம்புத்தூரில் இருந்து வந்த..  விஷயமே சொல்லல..  இனிமேல் இங்கதான் இருக்க போறியா..  ரூபாவின் அடுத்த அடுத்த கேள்விதனில் ச்சே.. ச்சே.. உடனடியாய் மறுத்து தலையாட்டினாள்..



நான் ஏன் இங்க இருக்க போறேன்..  அவள் விழிகள் ரூபாவை கடுப்போடு மொய்த்தது..




நான் இங்க வேறொரு விஷயமா வந்தேன்.. அப்படியே இவனை பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.. பாத்துட்டேன்.. கிளம்புறேன்    வந்த கையோடு பையை தூக்கி எழ..  பாப்பா இப்பதானேடா வந்த.. அதுக்குள்ள எங்க போற..  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போகலாமே..



இல்ல.. எனக்கு முக்கியமான வேலை இருக்கு..  அதோட உங்க தனிமையில கரடியா இருக்க எனக்கு விருப்பம் இல்லை..  அவள் பார்வை இருவரையும் உருத்து விழித்தது.. சூழல் அனைத்தும் தனக்கு எதிராய் இருப்பதில் தலை தாழ்ந்தான் ஆரியன்..



பார்வை எதிரில் இருக்கும் ரூபாவிடம் அசுயையாய் படிந்தது.. என்னதான் மாற்றம் ஆன பெண் என்றாலும் வீட்டிற்குள் இப்படி தட்டை பாதியும் டவுசர் கூட அல்லாத சின்ன உடையாய் பாதியும் போட்டு நின்றால் யாருக்கென்றாலும் அப்படித்தானே தோன்றும்.. 




நான் கிளம்புறேன்.. மிதா கிளம்பி விட.. பாப்பா..  என பின்னையே செல்ல போனவனை கைபிடித்து நிறுத்தினாள் ரூபா..



அவ தான் ஏதோ முக்கியமான வேலைன்னு சொல்றாளே மாமா .அவ போகட்டும்.. இங்க இருந்து என்ன பண்ண போறா.. கடைசி வார்த்தை வரையும் வேக எட்டுக்களோடு நடந்த மிதாவின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது.. 



நீ விடு..  அவசரமாய் கையை உதறி ஓடி வந்தவன் மிதா முன் நிற்கையில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.




கொஞ்ச நேரம் கூட இருக்காம போறியே பாப்பா.. கசங்கலாய் அவன் குரல் இறங்கியது.. என்னதான் எதிர்பாராத நேரத்தில் வந்திருக்கிறாள் எனினும் வெகு நாளைக்கு பின் காண்பவள் அல்லவா.. தன் உயிர்!!




சுருங்கிய விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள்..  நான் ஒன்னு நினச்சு வந்தேன்..  ஆனா இங்க வேற மாதிரி  இருக்கு.. அவள் பார்வை அவனைக் கடந்து வீட்டில் பதிந்து நின்றது.




நான் கிளம்புறேன்..  அவள் கூறி செல்ல போக இருக்கைகளையும் நீட்டி வழிமறித்தபடி நின்று கொண்டான் ஆரியன்.




இதுவே உனக்கு புது ஊரு தானே? நீங்க யாரை போய் உனக்கு தெரியப்போகுது.. தயவு செஞ்சு என் கூடவே இரு பாப்பா.. லீவ் விட்டதும் நானே உன்னை கூட்டிட்டு போய் ஊர்ல விட்டுடுறேன்.. தயவு செஞ்சு கோபப்படாத.. நீயாவது எனக்கு துணையாய் இரு என்பது போல அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு நின்றவனை தீர்க்கமாய் பார்த்தவள்..




முக்கியமான ஒரு ஆள மறந்துட்டியேண்ணா..  என் ஜானு??..  நான் அவ வீட்ல தான் தங்க போறேன்..  அதுக்காக தான் ஊர்ல இருந்தும் வந்தேன்.. என்றிட தூக்கி போட்டது அவனுக்கு




பாப்பா.. அங்க.. ஆரம்பித்தவன் வந்த வார்த்தையை வாய்க்குள்ளயே விழுங்கிக் கொண்டான்..  ஜானுவும் இவளும் பேசுவதை தான் அவனை கண்டிருக்கிறானே.. ஒன்று அவள் குழந்தையோடு அவனைப் பற்றிய விஷயத்தை கூறியிருக்க வேண்டும்.. அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக மறைத்திருக்க வேண்டும்..  எதுவானாலும் அங்கே சென்றே அவள் தெரிந்து கொள்ளட்டும். என அமைதியாகிய படி அவள் முகத்தை பார்த்தான்..




அவ வீட்லையாவது நான் விடலாமா?? குரல் இறங்கியது.




அந்த சாக்கில் தன் குழந்தையை ஒரு கணம் பார்த்து விடமாட்டோமா என்ற அற்ப ஆசையும் கூட தான்..



ம்ம்..  ஆனா அவ வீடு எங்க இருக்குன்னு தெரியுமா.. என்றதில் மௌனமாய் இதழ் கடித்தான்..




எனக்கு தெரியும் உனக்கு தெரியாதுன்னு..  பரவாயில்ல நீ போ நான் வழி சொல்றேன்..  காரில் ஏறி அமர்ந்து கொண்டாள் மிதா.. வண்டி எடுத்தான் ஆரியன்.




இந்த எட்டு வருஷமா உன்ன எவ்வளவு மிஸ் பண்றேன் தெரியுமா பாப்பா.. எனக்கு நீ இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்துருக்க கூடாது.. வேதனையோடு அவன் குரல் சிறுத்தது.




நீயும் என் ஃப்ரெண்டுக்கு அப்படி ஒரு வேலை பண்ணிருக்கக் கூடாது.. இவள் கூறியதும் சட்டென துணுக்குற்றான்.. மற்ற வேளையாய் இருந்தால் அவள் கூறியது பொய் என ஆணித்தரமாய் அடித்து கூறும் அளவிற்கு பேசியிருப்பான்..  ஆனால் இப்போது உண்மை அறிந்த நிலையில் கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டிய நிலை..




அவ உன்னை எவ்வளவு நம்பினா தெரியுமா.. யார்கிட்டயும் அவ இவ்வளவு க்ளோஸ் ஆகி இருந்து நான் பார்த்ததே இல்லை.. அவ்வளவு தூரம் உன்னை விரும்பினா..  ஆனா நீ அவ காதலையே கொச்சைப்படுத்திட்ட.. எனக்கு எப்பவும் என் ஜானு தான் முக்கியம்.. அவளோட சந்தோஷம்தான் முக்கியம்.. என்றவளின் குரலில் ஆணித்தரமான உறுதி..



கூகுளில் மேப் போட்டு வைத்தாள்.. அவசரமாய் அதை ஹோம் என்ற பேஜில் சேவ் செய்து கொண்டான்.. மிதா பார்க்க.. ஒரு பார்வை மட்டுமே.. 




சென்னையில் அவன் இருப்பது ஒரு மூளை என்றால் இவள் இருப்பது மற்றொரு மூளையாக இருந்தது.. அன்று நிறுத்திய இடத்திலிருந்தும் கிட்டத்தட்ட அரை மணி நேர பயணம்.. மொத்தமாய் ஒரு மணி நேர பயணம் ட்ராபிக்கில் இரண்டு மணி நேரத்தை தொட போனது. 



ஆனால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய தூரமாய் தெரியவில்லையே.. தான் மகள் போல் வளர்த்த தங்கை அருகில் இருக்கிறாள்.. நெஞ்சம் கவர்ந்தவளையும் தன் உதிரத்தையும் பார்க்க போகிறோம்.. என்ற அளவு கடந்த ஆவலும் மகிழ்ச்சியும் மட்டுமே அவனிடம்.




ரூபா எப்போ இங்க வந்தா. அவ ஏன் உன் கூட தங்கி இருக்கா.. மிதா கேள்வியில் தன்னிலை கொண்டு திரும்பினான்.




அப்படின்னா அம்மா அவ கிட்ட இந்த விஷயத்தை சொல்லலையா.. யோசித்தாலும் தான் திருமணத்திற்கு சம்மதம் கூறியதை தவிர்த்து தாய் ரூபாவை திருமணம் செய்ய கூறி வலியுறுத்தியதிலிருந்து ரூபா இங்கு தங்கியது வரை அனைத்தையும் கூறி முடிக்க இந்த அம்மாவுக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா.. வார்த்தைகளில் வெடித்தாள்.




எதுக்கு இப்படி பைத்தியம் மாதிரி வேலை பார்த்துகிட்டுருக்கு.. ஊருக்கு போனதும் வச்சுக்கிறேன் அதை.. பல்லை கடித்ததில்.. ஒருவேளை தாய் இந்த பேச்சை ஆரம்பித்த போதே தானும் உடனடியாய் மறுத்து இந்த விஷயத்தை அப்போதே முடித்திருக்க வேண்டுமோ..  என காலம் கடந்த ஞானோதயமாய் இப்போது எண்ணினான்..



கார் கீறிச்சுட்டு அவள் சொன்ன இடத்தில் நின்றது.. இங்கதான் என் ஜானு இருக்காளா.. அவன் விழிகள் சுற்றியிருந்த இடத்தை அளந்தன.. 




முன்னே சற்று பரவலான இடம்.. அதை ஒட்டி வீடு..  வெளியில் இருந்து பார்க்க சற்று பரவாயில்லை போல் தான் தோன்றியது.. போட்டிருந்த கிரில் கேட்டின் வழியாய் பார்வை உள்ளே படிய.. அடுக்கடுக்காய் என்றால் மூன்று பத்தி கண்களில் பட்டது.




பத்தி வீட்டில் இருக்கின்றனரா என் ஜானுவும்.. என் பிள்ளையும்?? அவன் நெஞ்சம் நின்று துடித்தது.. ஊரில் தன் வீடு அத்தனை பிரம்மாண்டத்துடன் அத்தனை எழிலுடன் செழித்திருக்க இங்கோ தன் உதிரத்தை கருவில் சுமந்த இனியவள் மூன்று பத்தி வீட்டில் வாழ்கிறாள்.. என்பதே அவனை உயிர் வரை தாக்க போதுமானதாய்..


அதுவும் பக்கத்தில் இருந்த பெரிய கால்வாயும் அதில் சுற்றிக் கொண்டிருந்த கொசுவும் இருவரின் முகத்தையுமே ஒரு நிமிடம் சுழியத்தான் வைத்தன.




பாப்பா..   நீ பாத்துட்டு வா.. நம்ம வீட்டுக்கு போய்க்கலாம்.. அவள் முகத்தை அளந்தபடி கூற.. ஹ்ம்ம்.. இதழ் சுழித்து சிரித்தாள் மீதா..




என் பிரண்டே இந்த வீட்ல தானே இருக்கா.. ஒரு ரெண்டு நாள் தங்கிட்டு போறதுல எனக்கு என்ன சிரமம் வந்துட போகுது   நீ கெளம்பு.. உனக்காக உன் பியான்சி அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கா.. 



மிதா ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாத.. அவன் குரல் மங்கியது..




உண்மை அதானே.  நாளைக்கு அவ தானே உன்னை கல்யாணம் பண்ணிக்க போறா.. அவள் விழிகள் கூர்மையாய் அவனை துளைத்தன.. வலியோடு சென்று காரில் அமர்ந்து விட்டான். நான் இங்கேயே தான் இருப்பேன்.. பேசிட்டு வர்றதுன்னா வந்துரு நான் கூட்டிட்டு போய் விடுகிறேன்..




அதுக்கு அவசியம் இருக்காது.. காலிங் பெல்லை அடித்தாள்.. கலைந்த ஓவியமாய் முகத்தில் முத்தமிட்டேன் என்ற முடி கற்றைகளை விலக்கிய படி  வந்தவளை பார்க்கும்போதே தூங்கி எழுந்திருக்கிறாள் எனப் புரிய.. புன்னகைத்தவளை கண்டு ஆச்சரியத்துப் போனாள்.




மிதாஆஆஆஆ..  அவசரமாய் கேட்டை திறந்தவள் பாய்ந்து தோழியை கட்டி அணைத்துக் கொள்ள இருவரும் கட்டிக்கொண்டு நின்றனர்.. வெகு நாளைக்கு பின் தன் ஜானுவின் முகத்தில் ஆத்மார்த்தமான சிரிப்பை காருக்குள் மறைந்து அமர்ந்து கண்டவனின் இதழ்கள் மலர்ந்தன..



அன்னைக்கு ஒரு நிமிஷம் கேட்டுருந்தா இந்த சிரிப்பு எப்பவும் அவள் முகத்திலேயே இருந்திருக்கும் ஆர்யா..  தள்ளி நின்று கேட்ட மனசாட்சியின் குரலில்.. விடுக்கென அவன் புன்னகை மறைந்தது.. பார்வை மட்டும் அவர்களிடம் லலித்தது..



மிதா.. எப்ப டி ஊர்ல இருந்து வந்த.. ஒரு வார்த்தை கூட சொல்லல.. உரிமையாய் கேட்டபடி அவள் கையில் இருந்த பைகளை வாங்கிக் கொண்டாள்.




ம்ம்ம்.. இப்போ தான்.. அண்ணனை ஒரு எட்டு பாத்துட்டு வரேன்..  என்றதும் ஜான்வின் முகத்தில் இருந்து மலர்ச்சி சட்டென உறைந்தது.. 




என்ன டி.. சரி வா., உள்ளே போகலாம் மிதா அழைக்க அப்போதுதான் நினைவு வந்தது உள்ளே அசோக்கும் குழந்தையும் அல்லவா இருக்கின்றனர்..



மி.. மிதா.. அவள் தட்டு தடுமாறிக் கொண்டிருந்த வேளையிலேயே யார் ஜான்வி கேட்டபடியே.. உள்ளிருந்து பனியன் டிராக் பாண்டோடு வந்தவனை கண்டு மீதாவின் புருவங்கள் இவன் யார் என்பது போல் சுழிந்தது.. 




உள்ளவா பேசலாம்..  உண்மையை சொல்ல வேண்டிய  கட்டாயத்தோடு  தோழியோடு உள்ளே நடந்தாள் ஜான்வி.. 




இங்கு தன் மொபைலில் டிங் டிங் என வந்த மெசேஜில்..அடுத்த நிமிடம் அதிர்ச்சியாகி வீட்டை நோக்கி காரை திருப்பி இருந்தான் ஆரியன்.. 



ஜான்வி சொல்லப்போற உண்மைய கேட்டு மிதா என்ன செய்ய போறா.. அப்பவும் அவள் முடிவுல உறுதியா தன் அண்ணன ஜான்வியோட சேர்த்து வைக்க தான் முயற்சி செய்வாளா..  உங்க கருத்துக்களை சொல்லுங்க.. 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...