முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கானலோ! என் காதலோ! 47

 மிதாவை உள்ளே அழைத்து ஐந்து நிமிடங்கள் முழுதாய் முடிந்திருந்த போதிலும் எதையும் உடனடியாய் உடைத்து கூறி விட முடியவில்லை.. 



கூறுகிறேன் என கூறி அழைத்து வந்தாலும் பேச வாய் எழாமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் ஜானு..




தனக்கு முன் இருந்த ஜான்வியையும் மறுபக்கம் நின்றிருந்த அசோக்கையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மிதா.. மனதில் என்னென்னவோ கேள்விகள் எழுந்த போதிலும் தவறாய் எதுவும் கூறி விட கூடாது என்பதில் கவனமானவளாய்.. அவளே கூறட்டும்.. அமைதியாய் இருக்க நடந்ததை எந்த இடத்தில் இருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் ஜான்வி.




க்கும்.. ஜான்வி.. நான் போய் உன் பிரண்டுக்கு காபி போட்டு கொண்டு வரேன்.. ஜான்வியிடம் கூறிவிட்டு தோழிகளுக்கு தனிமை கொடுத்து நாகரிகமாய் கிச்சனுக்குள் நகர்ந்து விட்டான் அசோக்..




ஜானு.. அமர்ந்திருந்த சோபாவில் ஒரு படி முன்னே நகர்ந்து அமர்ந்தாள் மிதா.. அதற்கு மேல் மனதின் ஆர்ப்பாட்டத்தை தாங்க முடியவில்லை.. 





இங்க என்னடி நடக்குது.. யார் அவரு.. அவர் கூட நீ ஏன் நீங்க தங்கி இருக்க ஜானு... இதுவரை அவர பத்தி நீ எதுவும் சொன்னது இல்லையே.. உன் கூட பழகுன நாள் வரை நானும் அவரை பார்த்ததில்லை.. யோசனையோடு மிதா கேட்க.. 



நீ அவன பாத்து இருக்க வாய்ப்பில்லை மிதா.. எனக்கே இந்த நாலு வருஷமா தான் பழக்கம்.. வார்த்தையை முடித்து இருந்தாள் ஜான்வி.. 




நாலு வருஷமாவா..  அப்படின்னா நான் கோயம்புத்தூர் போனதுல இருந்தா..  அவள் கேட்க ஜானுவின் தலை மௌனமாய் ஆடியது..




சரி சொல்லு அவர் ஏன் உன் கூட தங்கி இருக்கிறாரு.. நீ ஏன் அங்க நம்ம ஊர விட்டுட்டு இங்க வந்து தங்கி இருக்க.. கேட்டதும் ஜான்வி நிமிர்ந்து பார்த்த பார்வையிலேயே காட்டுத் தீயாய் பரவிய விஷயத்தில் அங்கு இருக்க முடியாமல் இங்கு வந்திருப்பாள் என புரிந்தது..



நான் சொல்றத நீ கொஞ்சம் பொறுமையா கேக்கணும் மிதா.. என ஆரம்பித்த வேளையில் அக்கா வெளியில் இருந்து குரல் சத்தத்தில் தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள்.. பூவிதா நின்று இருந்தாள்..  ஒரு நிமிஷம் என வெளியே செல்ல அக்கா.. வீட்ல எல்லாரும் ஒத்துக்கிட்டாங்கங்கிறத ஸ்வீட்டோட போய் வினோத்துக்கு சொல்லப் போறேன்.. நல்லா இருக்கான்னு டேஸ்ட் பண்ணி பாரு.. எனக்கு கொடுக்க..  கேசரியில் இருந்து ஒரு துளியை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்..



ம்ம்ம்.. நல்லாருக்கு பூவி..



அவனுக்கு பிடிக்குமில்ல.. மகிழ்ச்சியோடு கேட்டவள் சட்டென.. ஆனா உன் முகம் ஏன் ஒரு மாதிரியா இருக்கு..  என உள்ளே எட்டிப் பார்க்க புதிதாய் ஒருவள் அமர்ந்து இருந்ததில் என் ஃப்ரெண்ட் புன்னகைத்தாள் ஜான்வி..




ஓ டிஸ்டர்ப் பண்ணிட்டேனா.. கேரியான்..  என நகர்ந்ததும் ஜான்வி படிக்கட்டில் உள்ளே வந்த வேளையில்.. உன் வீட்டுக்காரர் கிட்டயும் நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு.. வந்து அவருக்கும் கேசரி தரேன்.. என கத்திய படியே ஓடிப்போனாள் பூவிதா..




வீட்டுக்காரரா..  உள்ளே இருந்த மிதா அதிர்ச்சியில் எழுந்தே நின்று இருந்தாள்..



என்னடி.. இங்க என்ன நடக்குது.. அந்த பொண்ணு என்னவோ உன் வீட்டுக்காரர்னு சொல்லிட்டு போறா..  அப்படின்னா உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சா ஜானு.. படபடப்பாய் கேட்டதில்.. அம்மா.. பூவியின் சத்தத்தில்.. எழுந்து வெளிவந்திருந்தாள் குட்டி பெண்..



அம்மாவா.. அடுத்த அதிர்ச்சி மிதாவிற்கு..




ஒன்று புரியாமல் விழித்து நின்ற தோழியை விடுத்து உறக்கத்தில் எழுந்து வந்த குழந்தையை பாய்ந்து தோளில் தாங்கிக் கொண்டாள் ஜான்வி.. பாப்பா.. எழுந்துட்டீங்களா.. அவள் கேட்டுக் கொண்டிருக்க கிருத்தியின் பார்வை புதிதாய் வந்திருந்த மிதாவின் மீது படர்ந்தது.



உனக்கு ஸ்வேதா ஃப்ரெண்ட் இருக்கால்ல.. அந்த மாதிரி இவ என்னுடைய பிரண்டு.. எங்க ஆன்ட்டிக்கு ஹாய் சொல்லு.. ஜான்வி கூறியதும் ஹாய்.. தூக்க கலக்கத்தோடு கையை மட்டும் ஆட்டிவிட்டு தாயின் தோளில் சாய்ந்து கொண்டாள் கிருத்தி.




டீயை போட்டு அசோக் எடுத்து வந்தவனாய் இந்தாங்க எடுத்துக்கோங்க.. என கொடுக்க அதிர்ச்சியோடு அவன் நீட்டியதை எடுத்துக் கொண்டவளின் பார்வை அவனையும் புதிதாய் நின்ற குழந்தையையும் விட்டு அகலவில்லை..



  


நீ பேசு.. நான் பாப்பாவ கடைக்கு தூக்கிட்டு போயிட்டு வரேன்.. குழந்தையை தன் தோளுக்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் அஷோக்.




அவன் சென்றது தான் தாமதம் ஜானு.. அவன் தோள்கள் இரண்டையும் பற்றினாள் மிதா..




ஜானு.. இங்க என்னடி நடக்குது.. அந்த பொண்ணு என்னன்னா உன் வீட்டுக்காரன்னு என்னமோ சொல்றா..  இந்த குழந்தை என்னன்னா உன்ன அம்மான்னு சொல்றா..  இங்க என்ன நடக்குது.. எனக்கு எதுவுமே புரியல..  தலையை வெடித்து விடும் நிலையில் விழிகள் உருட்டி நின்றவளை உட்கார டி.. ஆசுவாசமான பேச்சோடு அமர்த்தினாள் ஜான்வி.



வேகமாய் வாங்கிய மூச்சுகளோடு பார்த்து அமர்ந்திருந்தாள் மிதா..



இத எங்க இருந்து ஆரம்பிக்கன்னு தெரியல..  அன்னைக்கு.. என ஆரம்பித்தவள் அவள் வீட்டில் இருந்து தான் வீட்டிற்கு வந்தது.. பிரக்னன்சி கிட்டில் இரண்டு கோடுகள் காட்டியது.. கூற..



ஜானு.. அதிர்ந்தாள் மிதா.. 



ஹ்ம்ம்.. அந்த டைம்லையே நான் பிரக்னண்டா தான் இருந்தேன்.. என்றதோடு முடித்துக் கொண்டவள் அடுத்ததாய்  தாய் தன் பிரக்னன்சி கிட்டை பார்த்தது.. அதிர்ச்சியில் அவருக்கு உடம்பு முடியாமல் போனது.. கருவை கலைக்க தான் மறுத்தது.. ஒட்டு மொத்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடைசியாய் மும்பை வரை டிரீட்மென்ட் க்கு வந்தது.. அங்கு தெரியாத ஒருவனிடம் கடன் வாங்கியது.. கடைசியாக அவன் ஆட்கள் துரத்திய நிலையில் தான் மயங்கி விழுந்தது.. என அனைத்தையும் கூற தோழி பட்ட கஷ்டத்தில்  மிதாவின் கண்களில் இருந்து நிற்காமல் நீர் வடிந்தது.




அப்போ தாண்டி அசோக் வந்தான்.. கழுகு கூட்டமா என சுத்தி நின்னவனுங்கள அடிச்சு விரட்டி விட்டுட்டு.. என்ன அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனான்..



அம்மாவுக்கு ஆபரேஷன் நடந்துச்சு.. ஆனா அவங்க என்ன பாக்க கூட விரும்பல.. அவங்களே டிஸ்சார்ஜ் ஆகி தனியா கிளம்பி ஊருக்கு வந்துட்டாங்க.. அவங்களால என்னையும் மன்னிச்சு சேர்த்துக்க முடியல.. என்னாலயும் அதுக்கு மேல ஊர்க்காரங்க பேசுறத கேட்டு அந்த ஊர்ல இருக்க முடியல.. கொஞ்ச நாள் தான் அம்மா தவறிட்டாங்க..  அசோக் தான் என கூட்டிட்டு போனான்..  என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல.. எனக்காகவே வாழ்ந்த எனக்காகவே உயிரையும் விட்ட என் அம்மாவ கடைசி காலத்தில் கூட இருந்து பார்க்க முடியாத பாவி ஆயிட்டேன்..




அப்பதான் கடன் கொடுத்தவன் திரும்ப வந்தான்..  இப்பவே அவன் கொடுத்த பணம் வேணும் இல்லனா நான் வேணும்னு கேட்டான்.. அவ்வளவு நேரம் வாய் பேசிக்கிட்டு இருந்த ஊருக்காரங்க கல்லுபட்ட புறாவா பறந்து போயிட்டாங்க.. ஆனா அந்த நிமிஷம் அசோக் தான் எதையும் யோசிக்காமல் அவன்கிட்ட இருந்து ஒரே வீட்டையும் வித்து அந்த 15 லட்சத்தையும் மொத்தமாக அடைத்தான்..



ஜானு.. நம்ப மாட்டாமல் அதிர்ந்தாள் மிதா..



ஆமாம் மிதா அவன்தான்  செஞ்சான்.. வாயும் வயிறுமா இருக்குற பொண்ணுன்னு கூட பாக்காம அப்பவும் கூட மத்தவங்க தப்பா தான் பேசினாங்க.. அதனால இங்க இருக்க வேணாம்னு கையோட என்ன அழைச்சிட்டு வந்துட்டான்.. குழந்தை பிறந்தா தங்குவதற்கு சரியான இடம் வேணும்னு இந்த வீட பார்த்ததிலிருந்து இங்க குடி வந்தது.. குழந்தை பிறந்து நான் வீட்டில கிடந்தப்போ எனக்கு எல்லாமுமா இருந்து பாத்துகிட்டது.. இந்த செகண்ட் வரைக்கும் என் குழந்தைக்கு அப்பாங்கற பாசத்தை கொடுத்து வளர்க்கிறது எல்லாமே அவன்தான்.. அவன் தான் அஷோக்.. எனக் கூறி முடிக்க மிதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..




தன் தோழி தன் அண்ணனை காதலிக்கிறாள்.. அது ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்த போய் அவன் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டான்.. என தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தாள்.. ஆனால் அது இவ்வளவு பெரிய பூகம்பமாய் வந்து நிற்கும் என்பதை அவள் யோசித்தும் பார்த்திருக்கவில்லை..



அப்படின்னா அந்த குழந்தை??



என்னுடையது.. என்னுடைய உயிரும் உருவமும் ஆனது..



அண்ணனா?? வார்த்தைகள் தடுமாறின..



வேற யாரு.. அவள் இதழ்கள் விரக்தி வளைந்தன.



அம்மாஹ்ஹ்.. நெஞ்சை பிடித்து விட்டாள்..



எவ்வளவு பெரிய தவறை தன் சகோதரன் செய்திருக்கிறான். அண்ணனுக்கு இந்த விஷயம் தெரியுமா.. அவன் எப்போது திரும்ப உன்னை சந்திச்சான்.. இந்த விஷயத்தை சொல்லிட்டியா..




நிறைய தடவை சொல்லப் போனேன்..  ஒரு தடவை கூட அவர் காது கொடுத்து கேட்கல..  வார்த்தைகளால் நிறைய காயப்படுத்தினார்.. ஒரு கட்டத்தில் சோர்ந்து  விட்டுட்டேன்... அதுக்கடுத்து என்ன விஷயம்னு கேட்டாரு..  ஆனா என்னால சொல்ல முடியல.. ஹ்ம்ம்..  எல்லாத்துக்கும் ஒரு முடிவுன்னு ஒன்னு இருக்கும் இல்லையா.. இன்னைக்கு காலையில எதிர்பாராத நேரத்துல அவரே கிருத்தியை பார்த்துட்டாரு..




குழந்தை பேரு கிருத்திகா..  தன் அண்ணன் மகள் என கண்ணீரோடு இடை மறித்தாள் மிதா..



ம்ம்ம்.. அவளுக்காவது வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்னு இந்த பெயர் வச்சேன்.. மௌனமாய் புன்னகைத்தாள் ஜான்வி.. அதிலிருந்த வலியை மிதாவினால் நன்றாகவே உணர முடிந்தது..





அவள் கையை ஆதூரமாய் பிடித்துக் கொண்டாள்.. சரி.. கிருத்திய பாத்துட்டு அண்ணன் என்ன சொன்னான்..



அவர் என்ன சொல்லப் போறாரு.. என்ன கஷ்டப் படுத்தினா பத்தாதா..  என் குழந்தை எனக்கு வேணும்னு கேட்டாரு.. முடியாதுன்னு கூட்டிட்டு வந்துட்டேன்..




வேற எதுவுமே சொல்லலையா..  நீ அவன் வாழ்க்கைக்குள்ள... என அவள் ஆரம்பித்தவேளையில் மிதா.. அவளை நிறுத்தி இருந்தாள் ஜான்வி..



இதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு.. எனக்கு முன்னாடியே தான் உங்க அம்மா கிட்ட ரூபாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொன்னாரு.. 



வாட்.. அதிர்ந்தாள்..  தாய் தானே கட்டாயப்படுத்தி ரூபாவை தன் வீட்டிற்கு அனுப்பி இருப்பதாய் ஆரியன் கூறினான்..  ஆனால் இவனும் கல்யாணத்திற்கு சம்மதம் கூறினானா??



ஜானு.. அப்படி இருக்க வாய்ப்பே இல்லையே.. இன்னும் அவன் மனசுல நீதான் இருக்க.. ஏதாவது ஒரு புள்ளியில் அவள் மனம் மாறி தன் அண்ணனோடு இணைந்து விட மாட்டாளா என தவிப்போடு கேட்டாள்..



ஹ்ம்ம்.. அப்படி இருந்திருந்தால் இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதம் சொல்லி இருப்பார்..  இந்த கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை.




இது அவளே எதிர்பார்க்காத ஒன்று அல்லவா..




என் முன்னாடியே தான் ரூபாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொன்னாரு.. இத்தனை நாளும் ரூபாவோட தங்கி இருக்காரு..




அண்ணனா சந்தேகப்படுறியா.. அவன் அப்படிப்பட்டவன் கிடையாது.. என்றவள் சட்டென நிறுத்தி உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டதுக்கு என இருக்க..



அன்னைக்கு அவர் சுயநினைவு இல்லை..  அதனால வந்த வினை தான் இது அத்தனையும்.. ஆனா ப்ளீஸ்.. அதையும் இதையும் சம்பந்த படுத்திக்க வேண்டாம்.. அவர பத்தி எனக்கும் தெரியும்.. அவள் குரல் மெலிதாய் கரகரத்தது..




பின்ன என்னடி.. மிதா குரல் இறங்கியது..




எனக்கு திரும்ப வலிய தாங்குற சக்தி இல்ல மிதா.. இப்ப எல்லாம் அவர் சும்மா பேச வந்தாலும் கூட என்ன காயப்படுத்துற மாதிரி தான் எனக்கு தோணுது.. 



அதே போல என்னதான் அவர் சும்மா ரூபா கூட பழகினாலும் அவ உண்மையாவே தான் அவர காதலிக்கிறா.. அத அவ கண்ணுல எத்தனையோ முறை நானே பார்த்திருக்கேன்... 




நீயும் தானடி காதலிக்கிற..



சின்ன திருத்தம் காதலிச்சேன்..



அப்போ இப்போ.. மிதா கேட்க.. என் வாழ்க்கை எதை நோக்கி போய்கிட்டு இருக்குன்னு தெரியல..  ஆனா இந்த ஜென்மத்துல என் வாழ்க்கை என் மகளுக்காக மட்டும் தான்..




முட்டாள்தனமான முடிவு..  ஒரு முறை உன் முடிவ பரிசீலனை பண்ணலாம்.. அண்ணனுக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காத.. உன் வாழ்க்கைக்காகவும் தான் சொல்றேன்.. 




ஹ்ம்ம்.. என் வாழ்க்கை எப்போவோ என் மகள் மட்டும் தான்னு ஆகிட்டா.. அவள் கூறவும் கிருத்தி யை தூக்கி படி அசோக் உள்ளே வரவும் சரியானது.




ஜான்வின் மனநிலை குழந்தை வரை ஓகே தான்.. ஆனால் இவன்.. இவனுக்காக ஜானு தன் முடிவை மாற்ற யோசிக்கிறாளா.. மிதாவின் கண்கள் யோசனையோடு அசோக்கின் மீது படிந்தன..




மிதா இப்போ என்ன முடிவு எடுக்கப் போறாளோ.. உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லிடுங்கப்பா🙏🏻🙏🏻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கானலோ! என் காதலோ! 01

 புது கதை.. உங்கள் ஆதரவை மட்டுமே தேடி..  கடகடவென வண்டிகளின் சத்தமும் ஆங்காங்கே கேட்ட ஹிந்தி குரலிலும்.. பய பந்தானது தொண்டை குழியை அடைத்தது. புதிய இடம்.. புதிய மொழி.. அந்த குறுகிய  தெரு முக்கின் கடைசி கடையில் அமர்ந்து இருந்தாள் ஜான்வி.. கண்கள் அலைபுறுதலோடு யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தது.. சாய்.. சாய்.. டேபிளை தட்டி கேட்டி கேட்ட கடைக்காரரின் தோரணை ஒன்றும் அவ்வளவாய் கவனத்தில் பதியவில்லை.. கழுத்தில் வியர்வை படிய படிந்த துண்டோடு அழுக்கு பனியன் லுங்கியும் பேச்சும் அவள் இருந்த மனநிலையில் அவள் கவனத்தை அதிகம் ஈர்த்து விடவில்லை தான்.. ஆனால் வந்து ஒரு மணி நேரம் கடந்தும் எதுவும் வாங்கவும் இல்லாது அதே சமயம் எழுந்தும் போகாமல் தன் கடையிலேயே அமர்ந்து இருப்பவளை அதுக்கு மேலும் அப்படியே விட முடியாமல்.. வேகமாய் டேபிளை தட்ட.. ஹான்.. திரும்பினாள்.. டீ வேண்டுமா என கேட்கிறார் போலும்.. மனசாட்சி காரர்..  இன்னும் மாறாத அழைப்புறும் கண்களோடு.. அதெல்லாம் வேண்டாம்.. என்றாள் சுத்த தமிழில்.. அவள் புரியாத நடவடிக்கைகளோடு மொழியும் புரியாததில்.. நிச்சயம் அந்த கடைக்காரர் கடுப்பாகி இருக்க வேண்டும்..கூற...

கானலோ! என் காதலோ! 36

 இரவு முழுவதும் புரியாத ஏதோ புதிரில் சிக்கியதாய் விழித்துக் கொண்டே அமர்ந்து இருந்தவள் எப்போது உறங்கினாளோ.. காலையில் வெளியில் பைக் கிளம்பும் சத்தத்தில் தான் விழித்தாள்.. அமர்ந்த நிலையில்.. சோபாவில் சாய்ந்து உறங்கியிருக்க விழித்தவளின் கண்கள் முதலில் தேடியது அருகில் இருந்தவனை தான்.. தரையில் படுத்திருந்தவனை காணவில்லை..  அவசரமாய் வெளியே ஓடி வர அவன் பைக்கின் பின்விளக்கு அந்த இருட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தது..  " அசோக் அஷோக்.. வண்டி தானே அதுக்குள்ள கிளம்பிட்டானா.. இன்னைக்கு என்ன இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்டான்..  அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்புறான்.." மனம் தவிக்கும் மட்டும் யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது.. அவன் தன்னை ஒதுக்குகிறான்..  ஆனால் ஏன்.. புரியாவிடினும் அவன் ஒதுக்கத்தை தாங்கவே முடியவில்லை..  காலையிலேயே மனம் வறண்டு போனது.. நெஞ்சம் இருண்டு போனதாய் தோன்றியது.. வேகமாய் உள்ளே வந்து அவனுக்கு போன் அடிக்க கடைசி ரிங் வரை சென்று ஓய்ந்ததே தவிர்த்து அழைப்பு ஏற்கப்படவில்லை.. நிச்சயமாய் ஏதோ கோபத்தில் தான் இருக்கிறான் ஆனா...

கானலோ! என் காதலோ! 74

 உனக்கு என்ன கைமாறு செஞ்சு நீ எனக்கு செஞ்சதுக்கெல்லாம் நன்றி செலுத்த போறேன்னே தெரியல..அஷு.. கண் கலங்கியவளை கன்னம் பற்றி நிமிர்த்தினான். இனி சந்தோசத்துல கூட என் ஜானு கண்ணு கலங்க கூடாது.. போதும் டி ஏற்கனவே நிறைய அழுதுட்ட.. இனி உன் வாழ்க்கைல சந்தோஷமும் சிரிப்பும் மட்டும் தான் இருக்கணும்.. பேச்சோடு அவள் கன்னத்தில் ஊறிய அவன் முரட்டு இதழ்கள் அவள் கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டன.  அவன் செயலோடு பேச்சில் சிலிர்த்தாள்.. எவ்வளவு ஆத்மார்த்தமான அன்பு..  காதல்.. இதுவரை அவன் நட்பில் திளைத்து இருக்கிறாள்.. மகிழ்ந்து இருக்கிறாள்.. வாழ்ந்து இருக்கிறாள்..  ஆனால் அவனின் இந்த அளப்பரிய காதல் அவளை தேவலோகத்திற்கு அல்லவா இட்டு செல்கிறது.. அசோக்..  அவன் கழுத்து வளைவில் கண்ணீரை கவிழ்த்தவளை தானும் இறுகி அணைத்துக் கொண்டான் அசோக்..  நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன்..  ஆனா மேடம் இன்னும் சொல்லாமல் இருக்கீங்களே.. அவன் கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி பார்த்தாள்.. நான் என்ன சொல்லாமல் இருக்கேன்.. நான் உன்னை விட்டுட்டு வந்த காலங்களில் என்னை தேடினேன்னு சொன்னேன்.. ஆனா காதலிக்கி...