எதுக்கு வீட்டுக்கு வந்த கெஸ்ட் வேலை வாங்கிட்டு இருக்க.. ஏதாவது செய்யணும்னா சொல்லு நான் செஞ்சு தரேன் ஜான்வி.. என எந்த வித பாகுபாடும் காட்டி கொள்ளாது கேட்டப்படி அவளுக்கு தள்ளி அமர்ந்தான் அஷோக்.
இருக்கட்டும்.. நா அவ ஃப்ரண்டு தானே.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல..
ஆனா நீங்க எங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்துருக்கீங்க.. உங்கள நல்லபடியா பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு.. கூறியவனிடம் அதற்கு மேல் மல்லுக்கட்ட முடியவில்லை..
அட ஆமா.. நானே அதை பத்தி யோசிக்கல பாரு.. மிதா.. நீ போய் உட்காருடி, நானே எல்லா வேலையும் பார்த்துருவேன் அசோக் நீயும் போ.. அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு.. அவள் பேச்சில் மிதா எழுந்து கார்ட்டூனில் ஐக்கியம் ஆகியிருந்த குழந்தையின் அருகில் அமர்ந்து கொள்ள..
ம்ம்ம்.. பரவாயில்ல.. நீ போய் சிக்கன் கிளீன் பண்ணு.. நான் இத கட் பண்ணிடுறேன்.. என அவள் கையில் வைத்திருந்த கத்தியையும் பலகையையும் பதமாய் தன் வாங்கிக் கொண்டான் அசோக்..
ம்ம்ம்.. வேகமாய் வேலை முடித்தால் தோழிக்கு பரிமாறி விடலாம் என ஜானு அவன் கொடுத்த சிக்கன் கவரோடு எழுந்து உள்ளே சென்று விட.. மிதாவின் புருவங்கள் யோசனையில் சூழிந்தன.
அவள் நினைக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் முற்றும் மாறாக சொல்ல போனால் அப்பாற்பட்டல்லவா இருக்கிறான் இந்த அசோக்..
அதிலும் சரியாய் பாயிண்டை பிடித்து அவன் பேசுவதில் மறுக்கவும் முடியாத சூழ்நிலையாக அல்லவா போகிறது..
சொன்னது போலவே கால்களை மடித்து கொண்ட படி அவள் விட்டு சென்றதிலிருந்து வெங்காயம் தக்காளி இல் இருந்து இஞ்சி பூண்டு வரை அனைத்தையும் உரித்து முடித்து இருந்தான்.. எந்த பாகுபாடும் இன்றி அவன் செய்த வேலையில் சோபாவில் அமர்ந்திருந்த மீதாவின் பார்வை அவனை விட்டு இம்மியும் நகரவில்லை..
ஜான்வி.. அவன் குரலில் வெளியே வந்தாள்.. முடிஞ்சதா அசோக்.??
ம்ம்ம்.. நீ வச்ச எல்லாத்தையும் முடிச்சுட்டேன்.. அவன் கூற.. இதுவரை டிவியில் கவனமாய் இருந்த குழந்தை அவன் குரலில் திரும்பி வேகமாய் ஓடி வந்து அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
நேராய் இருந்த கத்தியை வாகாய் பிள்ளைக்கு கண்ணில் படாமல் தட்டின் கீழ் மறைத்து கொண்டான். சிறு சிறு விஷயங்களிலும் கூட அவன் தன் அன்பை வெளி காட்டியதாய் தோன்றியது மிதாவிற்கு...
சரி எடுத்து குடு...ஜானு கேட்க.. ம்ம்.. இந்தா.. குழந்தையை கண்ணத்தோடு உரசி கொஞ்சியபடி தன் வெட்டி வைத்திருந்த காய்கறி தட்டினை அவள் கையில் கொடுக்க வாங்கி திரும்பப் போனவளின் கண்ணில் நேரம் பார்த்து வியர்த்த நெற்றியில் படர்ந்து இருந்த முடி ஒன்று கண்ணில் விழுந்து விட..
அஹ்ஹ்.. சிக்கன் கழுவிய கையோடு தட்டயும் பிடித்திருந்ததில் அதை ஒதுக்க முடியாமல் அவள் சிரமப்பட்டு கொண்டிருந்த வேளையில்.. ம்ம்ம்.. இரு.. இரு.. குழந்தையோடு எழுந்தவன் அவள் நெற்றியில் இருந்த முடி கற்றையை ஒதுக்கி விட்டான்.
அவனை வைத்த கண் வாங்காமல் நோட்டமிட்டு கொண்டிருந்த மிதாவின் விழிகள் விரிந்தன.. ஜான்வியோ அதையெல்லாம் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் சாதாரண சிரிப்போடு உள்ளே சென்று விட்டாள்.. அப்படியானால் இது தனக்காக அவன் செய்யக்கூடியவை அல்ல.. தெளிவாக புரிந்தது மிதாவிற்கு.
எப்போதுமே அவர்கள் மீது இவ்வளவு அன்போடு இருக்கிறானா.. யோசித்துக் கொண்டிருந்த போதே நீங்க ஆன்ட்டி கிட்ட இருங்க.. அப்பா வந்துடறேன்.. தானும் கிச்சனுக்குள் நுழைந்திருக்க.. அவன் சொன்ன பேச்சை கேட்டு சமத்துப் பிள்ளையாய் ஆன்ட்டி.. மீதாவின் மடியிலேயே அமர்ந்து கொண்டாள்கிருத்தி.
அந்த திறந்த அடுக்களையில் ஜான்வி ஒரு பக்கம் வேலை செய்து கொண்டிருக்க வாசல் மறைத்தபடி நின்றான் அசோக்..
பாத்திரம் கழுவும் இடத்தில் நிறைந்து கிடந்த பாத்திரங்களை சர்வ சாதாரணமாய் அவன் கழுவ ஆரம்பித்து இருந்ததில்.. இதுவரை இல்லாத அளவிற்கு அதிர்ந்து பார்த்தாள் மிதா.
சொல்லாமல் பொருள் வாங்கி வருவது அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வது.. கூட சரி.. ஆனால் எந்த மனப் பாகுபாடுமின்றி வீட்டு வேலையை இப்படி பகிர்ந்து கொள்வது?? அசோகிடம் அவள் விழிகள் ஒட்டிப் போயின..
நீ விடு.. அசோக்.. இன்னும் கொஞ்சம் பாத்திரம் சேரும்.. முடிச்சிட்டு கடைசில விலக்கிக்கலாம்.. வேலையில் கவனமாய் கூறினாள் ஜானு..
பரவாயில்ல.. சும்மா தானே இருக்கேன்.. முடிச்சிடுறேன்.. என்றான் அவன்..
நான் ஒன்னு கேட்பேன் நீ பதில் சொல்லுவியா.. கேள்வி தொக்கியது ஜான்வியிடம்..
ம்ம்ம்.. வர வர என்ன.. ஆவூன்னா இதையே கேட்கிற.. என்ன கேட்கணும் கேளு.
இல்ல.. திடீர்னு ஏதோ வேலை இருக்குன்னு சொல்லிட்டு போனியே என்ன வேலை.. கேட்கும் போது மிதா சொன்னது போல் எதுவும் இருக்கக்கூடாது என அடித்துக் கொண்ட அவள் மனது அவளுக்கே புதிதாக தெரிந்தது.
தலையை மட்டும் திருப்பி பார்த்தான் அஷோக்..
ஏன் திடீர்னு கேட்கிற..
தோணுச்சு??
பெருசா ஒன்னும் இல்ல.. இத்தனை வருஷம் கழிச்சு உன் பிரண்டை பார்த்து இருக்கே.. பிரைவேட்டா ஏதாவது பேசணும்னு நினைப்பீங்க.. நான் இருந்தா உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும்.. அதான் வெளியே போயிட்டேன்.. அவன் கூறியதில் ஜான்வின் இதழ்கள் புன்னகைத்தன என்றால் இந்த பதிலை எதிர்பாராமல் மிதாவின் விழிகள் அதிர்ச்சியாகின..
அவள் என்னமோ நினைத்திருக்க இவன் முற்றிலுமாய் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறான்??
ஏன் அசோக்.. இன்னும் ஒரு கேள்வி..
மஹ்ம்ம்?? கேளு.. தலை சுற்றியது போல் அவன் குரல் ராகம் பாடியது..
ஒருவேளை நாளைக்கு உனக்குன்னு ஒரு லைஃப் வந்தா என்னையும் பாப்பாவையும் விட்டுட்டு போயிருவியா.. இந்த கேள்வியை மிதாவே எதிர்பார்க்கவில்லை என்பது போல் அதிர்ந்தாள்.. தன் மனதில் தோன்றியதை அவளிடம் கேட்டிருந்தாள்.. ஆனால் இப்படி சம்பந்தப்பட்டவனிடம் அவள் வெளிப்படையாய் கேட்பாள் என கனவிலும் நினைத்து பார்த்து இருக்கவில்லையே... பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்தவனின் கரம் தன்னிச்சையாக நின்று விட்டது..
சொல்லு அசோக்..
திரும்பி அவன் கைகட்டி தீர்க்கமாய் பார்த்த பார்வையில் பதிலை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தவள் விழிகள் தரை தாழ்ந்தன.
ஏன் இப்போ திடீர்னு இப்படி ஒரு கேள்வி.. சரி இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிற.. அவன் அடர் இமை கண்கள் அவளை குறுகுறுத்தன..
இல்ல.. இது எனக்கா தான் திடீர்னு தோணுச்சு.. எங்கே மிதாவை தப்பா எடுத்துக் கொள்வானோ என தவித்து.. அதற்கு மேல் பதில் பேச முடியாமல் நிற்க..
அப்படி தோன்றப்போ பார்க்கலாம்.. இதுவரை அப்படி எதுவும் எனக்கு எண்ணம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி சர்வ சாதாரணமாய் திரும்பி விட்டிருந்தான் அவன்..
அவ்வளவு தானா.. அவ்வளவே தானா.. உன் தோழி இப்படி சொல்லி தந்தாளா என தன் வீட்டில் நடப்பது போல் ஒரு குறுக்கு விசாரணை இல்லை.. அவள் கேட்டதற்கு அவள் நினைத்ததற்கும் அதிகமான பதிலாய் ஆமென்றும் சொல்லாமல் இல்லை என்றும் மறுக்காமல் நடக்கும்போது பார்த்துக்கலாம் என அசால்டாய் தோல் குலுக்கி திரும்பி விட்டானே..
எப்படி எந்த வலையிலும் சிக்காமல் இவனால் இருக்க முடிகிறது?? அவன் பேச்சு திறத்தை ரசிக்காமல் இருக்க முடியவில்லை..
அண்ணன் வாழ்க்கைக்கு இடைஞ்சலாய் இருப்பவன் என்ற மிதாவின் பார்வை போக்கு மெல்ல மாறி போனது..
ஒரு பக்கம் ஜான்வி மீதாவிற்கு பிடித்தபடி கிரேவி செய்து முடிக்க மறுபக்கம் பாத்திரங்களை துலக்கி முடித்திருந்தான் அசோக்..
முடிஞ்சிருச்சு மிதா.. வா சாப்பிடலாம்.. உள்ளிருந்தபடி அழைத்தாள் ஜான்வி.. ஏற்கனவே இரண்டு பேர் உள்ளே இருந்ததில் வாசலில் நின்ற அவனை இடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை..
மீதாதயங்கி நின்ற நொடியில் ஒரு நிமிஷம்.. என தான் வெளி வந்திருந்தான் அசோக்.. ஜென்டில் மென்.. மிதாவின் இதழ்கள் தன்னிச்சையாக முனுமுனுத்தன.
ம்ம்ம்.. வாசனையே சூப்பரா இருக்குடி.. வட சட்டி மூடியை திறந்து மோப்பம் பிடித்து வளர்ச்சியாக கூறியவளிடம்.. ம்ம்ம்.. வா.. வா சாப்பிடலாம்.. ஹாலுக்கு கொண்டு வந்தாள்ஜான்வி..
அடுத்தடுத்ததாய் சாதம்.. செம்பு.. என எடுத்து வந்து கொண்டிருக்க பாப்பா.. அசோக்கின் குரலில் அதுவரை சமத்துப் பிள்ளையாய் டிவி பார்த்துக் கொண்டிருந்த கிருத்தி குட்டி இறங்கி ஓடினாள்.
தன் கை கழுவியதோடு அவளையும் தூக்கி கை கழுவி விட்டவன் நாலு தட்டு எடுங்க.. சொன்னதும்.. வேகமாய் மறுபக்கத்திற்கு நடந்தவள் கீழே டப்பில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தட்டில் நான்கை ஒவ்வொன்றாய் எண்ணி அடுக்கி எடுத்து கொண்டு வந்து ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்த மிதாவிற்கு முன்னும் ஒன்றை வைத்தாள்..
ஏய்ய்ய்.. என்னடி.. உன் பொண்ண பயங்கரமா வேலை பாக்குறா..
ம்ம்.. எல்லாம் அவ அப்பா ட்ரெய்னிங் தான்.. கேட்டா அவன் பொண்ணு எப்பவும் யாருக்காகவும் காத்து இருக்கக் கூடாதாம்.. அவ வேலையே அவளை செய்ய பழகணும்னு சொல்லி என் வாய அடைச்சிடுவான்..
ஆனா இது உண்மையாவே நல்ல விஷயம் ஜானு.. படிக்கிறேன்னு ஆசைப்பட்டு ஊருக்கு போயிட்டேன்.. ஆனா அங்க போய் எடுத்த எடுப்புல எந்த வேலையும் செய்ய முடியாமல் நான் பட்ட கஷ்டம்.. அப்பா.. கண்களை முட்டையாய் உருட்டினாள்.. எனக்கு தான் தெரியும்.. அதுக்கு இது ரொம்பவே நல்ல பழக்கம்..
ம்ம்ம்.. புன்னகைத்த ஜானுவின் பார்வை ரூமுக்குள் சென்ற அசோக்கை தொடர்ந்தது..
அவள் பார்வையைக் கண்டு விக்கித்தாள் மிதா.. ஐயோ என்ன செய்யணும்னு நினைச்சு என்ன செஞ்சுகிட்டு இருக்கேன்.. நான் எதுக்கு அவனுக்கு சப்போர்ட் பண்றேன்.. தன் என்னத்திற்கு செயலின் போக்கு மாறி போனதில் எல்லாம் அவனால தான்.. மிதாவின் கண்களும் ரூமுக்குள் மறைந்தவனிடம் படிந்தன..
சாப்பிடு மிதா.. அவளுக்கும் தன் மகளுக்கும் சேர்த்து பரிமாறினாள் ஜான்வி..
நீயும் உட்காருடி.. அவரையும் கூப்பிடு.. மறைந்த அவனைப் பார்த்தபடியே மிதா கூற..
அவன் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்னு சொல்லிட்டான்.. நானும் அவன் கூட அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்..
ஏன் அவரை விட்டு சாப்பிட மாட்டியா.. என்ற மிதா கண்கள் அவளை ஆழ்ந்து பார்த்தன.. அவனைப் பற்றி பேசும் ஒவ்வொரு நிமிடமும் தன் தோழியின் முகத்தில் படம் போல் எதிரொளிக்கும் தேஜஸ் உணர்வுகளை நன்றாகவே உணர முடிந்தது.
அப்புறம் அவன் மட்டும் தனியா சாப்பிடுவான் இல்ல.. அவள் கூறியதும் மறுக்கவில்லை..
சாப்பிடு.. அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள் ஜானு..
ஏன் ஜானு.. எப்பவும் ரெண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிடுவீங்களா.. சாப்பாட்டை மென்று படியே கேட்டாள்..
அப்படி பொத்தாம் பொதுவா சொல்லிட முடியாது.. ஆனா முடிஞ்சளவு சேர்ந்து தான் சாப்பிடுவோம்.. இருக்கிறது மூன்று பேருடி.. தனி தனியாவா உட்கார்ந்து சாப்பிட முடியும்..
இல்ல.. இந்த காத்திருந்து சாப்பிடுவது.. வார்த்தையை முடிக்காமல் அவள் இருக்க..
ம்ம்ம்.. அதுவும் நிறைய நேரம் நடக்கும்.. நான் முதல்ல வந்தா அவனுக்காக வெயிட் பண்ணுவேன்.. அவனும் அப்படித்தான்..
ம்ம்ம்.. என கிரேவியை அள்ளி வாயில் வைத்த நொடி .. சுகமாய் கண்களை சொருக்கினாள்.
ம்ம்ம்ம்ம்.. செம டேஸ்ட்.. ஏன் ஜானு.. உனக்கு ஞாபகம் இருக்கா.. ஒருமுறை நான் கேட்டேன்னு இந்த சிக்கன் கிரேவிய பண்ணி அண்ணனுக்கு எடுத்துட்டு போய் கொடுத்தோமே.. அவனை பற்றி கூறியதும் அதுவரை மலர்ந்து இருந்த ஜான்வியின் முகத்தில் திடீரென தடுமாற்றம்..
விழிகள் தன்னிச்சையாக அசோக் அடைந்து கிடந்த அறை கதவை தழுவின.. குறித்துக் கொண்டாள் மிதா..
சா.. சாரி.. வேணும்னே ஞாபகப்படுத்தல பேச்சு வாக்குல வந்துடுச்சு..
பரவாயில்லை நீ சாப்பிடு.. என அவளுக்கு பார்த்து பார்த்து அவள் பரிமாறியதில்.. போதும் போதும் டி.. செம்மையா சாப்பிட்டேன்.. ரொம்ப நாள் கழிச்சு வயிறு நிறைந்து சாப்பாடு..
அம்மா.. நானும்.. சிரிப்போடு எழுந்த படி கூறினாள் கிருத்தி.
போடி.. கை கழுவிக்கோ..
அவளுக்கு எட்டாதுல்ல.. அப்போவே அவர்தான் கை கழுவி விட்டார்.. மிதா கேட்க.. அதெல்லாம் ஸ்டூல் போட்டு ஏறிடுவா.. என மிதாவிடம் இவள் கவனமாக ஜான்வி சொன்னது போலவே அங்கிருந்த இரும்பு ஸ்டூலை போட்டு கை கழுவியே நேரத்தில் எதிர்பாராமல் சிந்திய தண்ணீரில் இறங்க கிருத்தி கால் வைத்த நொடி வழுக்கி விட்டிருந்தது..
அம்மாஹ்ஹ்.. என்ற அலறலோடு பிடரி தரையில் அடிக்க கீழே விழுந்திருந்தாள் கிரீத்தி..
அவள் சத்தத்தில் வேகமாய் ஓடி வந்திருந்தான் அசோக்.. குழந்தையை அந்த நிலையில் கண்ட அந்த நிமிடம் பெற்றவளையும் மறந்து குழந்தையை நெஞ்சில் அணைத்து கொண்டு மருத்துவமனைக்கு தூக்கி ஓடி இருந்தான்.. ஓடியவனையே வெறித்தன மீதாவின் விழிகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக