தோழிகளை விட்டு தனியே வந்த அஷோக் தன் காதுகளை திசை திருப்பி கொண்டாலும் விழிகள் அவளிடமே பதிந்து விட்டன.. அதிலும் வெகு நாளைக்கு பின் தோழியை கண்டதும் அவள் முகத்தில் ஏற்பட்ட புத்துணர்ச்சியும் மலர்ச்சியும் அவனை தானாக புன்னகைக்க வைத்தன.. குழந்தையை கை கழுவ அவள் அனுப்பும் போதும் கூட அந்த கதவு இடுகின் வழியாய் அவன் பார்வை அவளிடம் தான்.. சொல்வதை காது கேட்டது.. ஆனால் மூளை இவளிடம் இவள் மகிழ்ச்சியில் ஸ்ட்ரக்கடித்து விட்டதே..
திடீரென அஹ்ஹ்ஹ.. குழந்தையின் ஓலத்தில் தான் அதிர்ந்து எழுந்தான்.. பெற்றவன் போல் தாயமுதம் மார்பில் சுரக்க அடித்துப் பிடித்து எழுந்து ஓடி அவன் வருவதற்குள் அனைத்தும் முடிந்து இருந்தது.. எதிர்பாராமல் வழுக்கியதில் அடுக்கலை திண்டு பிடரியில் இடித்து ரத்தம் சொட்ட சொட்ட தரையில் மயங்கி கிடந்திருந்தாள் மகளரசி அவள்..
பாப்பா.. பாப்பா.. நின்று போன இதயத்துடிப்போடு உதறல் கைகளோடு அவள் கன்னத்தில் தட்டி எழுப்ப ஜான்வி முயற்சிக்க.. ரத்தம்.. பதறியவன் அவளுக்கு முன்னால் பாய்ந்து குழந்தையை அள்ளித் தூக்கி நெஞ்சில் சாய்த்து இருந்தான்..
அஷோக்.. பாப்பா..
எதுவும் பேச வேணாம்.. பாப்பாவுக்கு ஒண்ணுமாகாது.. ஹாஸ்பிடல் போகலாம்.. அடுத்த நிமிடம் அவளை தூக்கி ஓடி வர.. அண்ணன் வெளியே தான் இருப்பான்.. அவன் கார்லையே போயிடலாம் என்ற படி வந்த பிருந்தா அங்கு யாரையும் காணாமல் விழிக்க.. அசோக் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நொடி கணமும் தாமதிக்காது அடுத்த கணம் ஓரமாய் கிடந்த செட்டில் பளிங்கு போல் மூடி இருந்த காரில் குழந்தையை படுக்க வைக்க.. அவள் தலையில் இரத்தம் பீச்சிடாமல் தலை ஒரு பக்கமும் கால் ஒரு பக்கமுமாய் அமர்ந்து கொண்டனர் ஜானுவும் மிதாவும்.. எடுத்து கிளப்பி இருந்தான்..
அந்த இடைசலான ட்ராபிக்கில் வருவது ஒன்றும் அவ்வளவு எளிதாய் இல்லை.. போடப்பட்ட சிக்னலில் நிற்க பொறுமையற்று கார் மறுபக்கம் சீறியது.. .. நடக்க கூட வழி இருக்கிறதா என கேட்கும் அளவிற்கு குறுகலாக இருந்த தெருக்களை எல்லாம் எப்படி தான் கண்டு வைத்திருந்தானோ.. சரியாய் காரை செலுத்தி அடுத்த பத்து நிமிடத்தில் அந்த பெரிய மருத்துவமனைக்கு முன் கீறிச்சீட்டு நின்றது அவன் கார்.. மூன்று வருடத்திற்கு முன் அவள் பிறந்த மருத்துவமனை..
வாசலை மறைத்தபடி காரை நிறுத்தியவன் அடுத்த நிமிடம் உள்ளே ஓட வெளியே வரும்போது அவனோடு இருவர் சேர்ந்து வந்தனர்.. கையோடு கொண்டு வந்தபடுக்கையில் குழந்தையை படுக்க வைக்க பேச்சு மூச்சு இல்லாமல் கிடப்பவளை பார்க்க நெஞ்சம் எம்பி குதித்தது..
ஐ சீ யூ என போர்ட் போட்ட அறை வரை கூடவே வந்தவர்களை கதவருகே நிறுத்திவிட்டு குழந்தையை மட்டும் உள்ளே அழைத்துக் கொண்டனர்..
நான் மட்டுமாவது வர்றேனே..அவர்கள் பின்னையே ஓட முயன்று தோற்றுப் போனாள் ஜான்வி..
என் மேல தான் தப்பு பாப்பாவா.. அப்படி தனியாக விட்ருக்கக் கூடாது.. நானும் போயிருக்கணும்.. தலைதலையாய் அடித்துக் கொண்டவளை.. பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாதடி, நீ பயப்படாத..அவளுக்கு ஆறுதலாய் கூறினாள் மிதா..
எல்லாம் என் தப்புதான்.. குழந்தைய கேர்லஸ்சா அனுப்பி விட்டது என் தப்பு தான்.. பாரு இப்போ.. என அறைக்குள் பார்த்தபடி பதறியவளை அதுவரை கலங்கிய கண்களோடு நின்றிருந்தவன் சட்டென கரம் பற்றி தன் தோளில் சாய்த்து கொண்டான்..
அசோக்.. தோளோடு படர்ந்த அவன் கரமும் அதற்குள் கோழி குஞ்சாய் சுரண்டி இருந்த ஜான்வியும் அர்த்தத்தோடு படிந்தது மிதாவின் பார்வை..
சார்.. குரல் கேட்கத் திரும்பினர்.. கையில் பேப்பர் பேனாவை வைத்தபடி நின்றாள் நர்ஸ்..
ஒரு நிமிஷம்.. என்றபடி விலகியவன்.. அதில் இருந்தவை களை ஒரு கணம் படித்து கையெழுத்திட இது எதுக்காக அசோக்.. ஜான்தியின் புருவங்கள் பதட்டமாய் சூழிந்தன.
பாப்பாவுக்கு ஆப்ரேஷன் பண்றதுக்கு நம்ம அனுமதி பேப்பர்ஸ் என்றதோடு முடித்துக் கொண்டான்.. நிச்சயம் அப்படி இருக்காது.. ஐ சி யு விற்குள் சென்றாலே வாங்கப்படும் கையெழுத்து உள்ளே இருப்பவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்பதற்காக தானே..மிதாவின் புருவஙகள் இடுங்கின.
விஷயம் எப்போது எப்படி ஆரியனுக்கு தெரியப்படுத்தப்பட்டதோ.. இதோ வேகமாய் வந்து விட்டான்.
வெகு அருகில் வேகமாய் கேட்ட பூட்ஸ் சத்தத்தில் அழுகையில் தரை தாழ்ந்திருந்த ஜான்வியின் விழிகள் நிமிர்ந்தன..
ஆரி.. சட்டென அருகில் நின்ற அசோக்கிடமிருந்து விலகி நின்றாள்.. அவளை ஆறுதலாய் பிடித்திருந்த கை அப்படியே நிற்க..அவனும் ஆர்யனை பார்த்து விட்டு எதையோ நினைத்து பெருமூச்சு விட்டபடி கையை பின்னே நகர்த்திக் கொண்டான் அசோக்.
ஜானு.. ஜானு என்ன ஆச்சு.. பாப்பா.. காலையில கூட நல்லா தானே இருந்தா.. இப்போ திடீர்னு என்ன ஆச்சு.. டாக்டர் என்ன சொல்றாங்க..ஒன்னும் பிரச்சனை இல்ல தானே.. படபடக்கும் விழிகளோடு கேட்க.. ஜான்வி அமைதியா நிற்பதை பார்த்து அண்ணா.. என நடந்ததை சுருக்கமாய் கூறி முடித்தாள் மிதா.
நீ கவலைப்படாதம்மா.. நம்ம பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது.. சீக்கிரமா சரியாகிவிடும்.. அவளை அணைக்க நீண்ட கைகளிலிருந்து விலகியிருந்தாள் .. இந்த நிலையிலும் இவ்வளவு வெறுக்க வேண்டுமா? அவன் விழிகள் வலியோடு அவளிடம் பதிந்தன..
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராட்டமாக தான் போனது.. அழுது அழுது சோர்ந்து போனாள் ஜானு.. இதற்கு மேல் அழ திரானியில்லை போலும்.. டாக்டர் ஒரு வார்த்தை பிள்ளைக்கு ஒன்றுமில்லை என கூறி விட மாட்டாரா.. அவள் விழிகள் அவ்வப்போது அறையை பார்ப்பதும் தரையை பார்ப்பதும் விட்டத்தை பார்ப்பதுமாய் பரிதவித்தது.. இடையில் அஷோக்கின் நெஞ்சு சட்டையில் பட்ட பிள்ளையின் இரத்தமும் அவளை ஆட்டி படைத்தது.. ஜாமியின் அருகில் ஒரு பக்கம் மிதா அமர்ந்து கொள்ள மறுப்பக்கம் அமர்ந்து இருந்தான் ஆரியன்.
அவள் இப்போது இருக்கும் நிலைக்கு நெஞ்சில் சாய்த்து ஆறுதல் கூறி விட கை கால்கள் பரபரத்த போதிலும்.. அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடு என அப்போது அனுப்பிய மெசேஜ்சோடு மிதா சேர்த்து கூறியிருந்த வார்த்தையில் அமைதியாய் கைகட்டி அமர வேண்டிய நிலை..
யாரை நினைத்து இந்த முழு உலகத்தையும் மறந்து ஒருவன் அமர்ந்திருந்தானோ அவன் ஆரியன் வந்ததிலிருந்து துளியும் இவள் பக்கம் திரும்பவில்லை.. எதிர்பக்கம் இருந்த கதவினூடே ஒட்டிப் போயின அவன் கண்கள்... மகளுக்காகவோ அல்லது அவன் அவளுக்காக இருப்பதை பார்க்க முடியாமலோ..
ஜானு.. அழுகாத பாப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.. நீ அதிகமாஅழுது பயங்கரமா சோர்ந்து போயிட்ட.. ஏதாவது சாப்டியா.. ஆரியன் கேட்டான் அக்கறை உள்ளவனாய்..
நிமிர்ந்து அவன் முகத்தில் படிந்த அவள் விழிகள் அடுத்த நிமிடமே திரும்பிக் கொண்டன.. ம்ம்ம்.. பெருமூச்சு விட்டான் ஆரியன்..
இந்த நேரத்தில் கூட இவ்வளவு கோபப்படனுமா.. அவள் காதோரமாய் மெல்லிய குரலில் வருத்தத்தோடு கேட்டுக் கொண்டிருக்க.. அப்புறமா சாப்பிட்டுட்டு இருக்கிறேன்னு சொன்னா அண்ணா.. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.. மிதா கூறியதும் எழுந்திருந்தான் ஆரியன்.
இப்ப வந்துடறேன் என கூறி வெளி சென்றவன் மீண்டும் உள்ளே வருகையில் கையில் டீ கவர்.. அவனே ஆளுக்கு மூன்று கிளாஸ்சாய் ஊற்றி ஜான்வியிடம் ஒன்று நீட்ட.. சோர்ந்து போன உடலோடு தொய்ந்து அமர்ந்திருந்தவளை உலுக்கினாள் மீதா..
தெம்பே இல்லாமல் இருக்கேடி.. கொஞ்சமா குடி.. உன் புள்ளை எழுந்ததும் அவளுக்கு தேவையானது செய்ய நீ நல்லபடியா இருக்க வேண்டாமா? அந்த வார்த்தை அவளை உத்வேகப்படுத்தியது.. பாப்பா நல்லாயிடுவால்ல.. வலியோடு கேட்ட படி வாங்கிக் கொண்டாள்..
அடுத்ததா மிதாவிற்கு ஒன்று கொடுக்க.. எனக்கு வேண்டாம் இப்போ தான் சாப்பிட்டேன்.. என முடித்துக் கொண்டாள் அவள்.. பெருமூச்சு விட்டபடி அதை தன் வாயில் சரித்துக் கொண்டான் ஆரியன்..
மிச்சம் இருந்த ஒன்றை நேரே நடந்து அசோக்கிடம் நீட்ட இருவரின் பார்வையும் ஒருசேர மற்றவரை கத்தியாய் குத்தி கிழித்தது.. அவன் கொடுத்ததை குடிக்க ஆரம்பித்து இருந்தாள் ஜான்வி..
சில விஷயங்கள்ல எனக்கு உங்க மேல மனஸ்தாபம் இருந்தாலும் இந்த இடத்துல காட்டிக்க வேண்டாம்.. கண் சுருக்கினான் ஆரியன்.. விரக்தியாய் பிடரி கோதினான் அசோக்..
இட்ஸ் ஓகே.. ஆனா எனக்கு வேண்டாம்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. என் பொண்ணு நல்லா இருக்கேன்னு கேட்கிற வரைக்கும் எனக்கு துளி பொட்டு தண்ணி தொண்டைல இறங்காது.. கரகரத்த குரலோடு அவன் கூறி விட.. டீ குடித்து கொண்டிருந்த ஜான்வின் விழிகள் சட்டென நிமிர்ந்து உடல் சோர்ந்து நின்ற அவனிடம் பதிந்தன..
பாப்பா உங்க மேல வச்ச பாசத்தை தான் நானும் பார்த்தேனே. .. அவ சரியானதும் முதல்ல உங்களையும் தேடுவா தானே அதுக்காகனாலும் குடிங்க.
ப்ளீஸ் என்ன கட்டாயப்படுத்தாதீங்க.. என்றதோடு முடித்து விட்டான் அசோக்.. பெற்றவனாய் இருந்தும் தொண்டையை கடந்து இரைப்பைக்குள் பயணித்துக் கொண்டிருந்த டீயை எப்படி வெளியே கக்குவது என்ற ரீதியில் முகத்தை வைத்துக்கொண்டு வந்து அமர்ந்தான் ஆரியன்.
ஒரு மணி நேரம் இப்படியே கடக்க கதவு திறக்கப்பட்டது.. முன்னே நின்ற அசோக் வெளிவந்த டாக்டரை அடுத்த நிமிடம் வழி மறைத்து இருந்தான்..
ஜான்வி.. ஒரு பக்கம் பதறி எழுந்து ஓட அவளை தொடர்ந்து ஆரியன்..அடுத்ததாய் மிதா என நால்வரும் தவிப்போடு டாக்டர் என்ன கூறுவார் என பார்க்க.. அசோக் சார்.. டாக்டரின் பார்வையோ ஒரு கணம் சுற்றி வந்து அசோக்கிடம் பதிந்தது.
பின்னந்தலையில கூர்மையான ஆயுதம் பட்டதால வெளி ஜவ்வு கிழிஞ்சிருக்கு.. அத ஸ்டிச்சஸ் போட்டு இருக்கோம்.. அவர் கூற கூறவே வாய் பொத்தி அழுக ஆரம்பித்தாள் ஜான்வி.. குலுங்கிய தோள்களில் அவள் அழுகிறாள் என உணர்ந்து கொண்ட போதிலும் அப்போதும் கூட அவன் பார்வை துளியும் அவள் பக்கம் திரும்பவில்லையே..
ஒரு ஒரு மாசத்துக்கு பெட் ரெஸ்ட்ல வச்சுக்கோங்க.. பாப்பாவை அதிகமா எதுவும் வேலை பார்க்க விடாதீங்க.. கொடுக்கிற மெடிசின்ஸ் எல்லாம் சரியான நேரத்தை கொடுங்க.. சி வில் பி ஆல் ரைட்.. என்றதோடு அந்த டாக்டர் நகர்ந்தபடி ஏதோ கூற வர.. கண்ணில் என்ன ஜாடை செய்தானோ.. சார் கொஞ்சம் ரூம் வரைக்கும் வந்துட்டு போங்க.. என்றதோடு டாக்டர் சென்றுவிட்டர்.. சார் இது மட்டும் வாங்கி தந்துடுங்க.. என அவன் கையில் ஒரு லிஸ்ட்டை துணித்து விட்டு நகர்ந்தாள் நர்ஸ்..
நான் வாங்கிட்டு வரேன் ஆரியன் கை நீட்டுவதற்குள் அங்கிருந்து சென்று இருந்தான் அசோக்.. ஆரியனின் பார்வை செல்பவனையே துளைத்தது..
நான் கேட்ட பொருட்களை வாங்கி தந்து விட்டு டாக்டர் அறை பக்கமாய் செல்லப் போனவனை .. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. வழிமறைத்தான் ஆரியன்.
சொல்லுங்க.. நிமிர்ந்த நேர் பார்வையோடு நின்றான் அசோக்.
இவ்வளவு நாள் சந்தர்ப்ப சூழ்நிலையால என் பொண்டாட்டியையும் பிள்ளையையும் விட்டு இருக்க வேண்டிய நிலை.. ஆனா இப்போதுதான் நான் வந்துட்டேனே.. இனி நான் அவங்கள பார்த்துக்கிறேன்... இவ்வளவு நாள் நீங்க அவங்கள பாத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி.. அவங்கள நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போய் நான் பாத்துக்கலாம்னு நினைக்கிறேன்.. இதுவரைக்கும் நீங்க செஞ்ச எல்லா உதவிக்கும் நன்றி.. கூறிவிட்டு ஆரியன் செல்ல போக ஒரு நிமிஷம்.. அசோக்கின் இறுகிய குரல் அவனை நிறுத்தியது..
ஜான்வி சம்மதிச்சானா தாராளமா கூட்டிட்டு போங்க.. அவனிடமிருந்து இந்த வார்த்தை எதிர்பார்க்கவில்லை என்பது போல் ஆரியனின் புருவங்கள் இடுங்கின.
பட் ஷிஸ் நாட் யுவர் வைஃப்.. பட் ஆஸ் எ பிரின்ட் வித் மீ.. என் ஃப்ரெண்டுக்கு இப்ப மட்டும் இல்ல எப்பவும் நான் துணையாய் இருப்பேன்.. கூறியவன் அடுத்த நொடி அங்கிருந்து சென்று இருந்தான்.. திக்கித்து நின்றான் ஆரியன்..
உண்மைதானே.. காதல் என்ற வார்த்தையை வெளிப்படையாகவும் கூறாது கொண்ட இன்பத்தில் குழந்தையும் விளைந்திருந்தாலும் அவளை மனைவி எனக் கூற அர்த்தம் ஏது..
ஆனால் அஸ் எ ப்ரெண்ட் என கூறும் போது அவன் குரலில் இருந்த உறுதி ஆரியனை கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது.. அவ சமாதிச்சா நீங்க தாராளமா கூட்டிட்டு போகலாம் அசோக்கின் வார்த்தை காதோரமாய் கேட்க இங்கு ஒரு மாதம் குழந்தை படுக்கையில் இருக்க வேண்டும்.. என்பதில் விரக்தியை கண்ணாடி கதவை வெறித்துக்கொண்டிருந்தாள் ஜான்வி.
ஜானு.. அழைத்தபடி அவள் தோளில் ஆர்யன் கை வைக்க.. கண்களில் துளிர்த்திருந்த நீரை துடைத்தெறிந்து திரும்பினாள்.
எதுக்கும் கவலைப்படாத ஜானு.. நான் இருக்கேன்.. மிதா இருக்கா.. நம்ம நல்லபடியா நம குழந்தைய பாத்துக்கலாம்.. டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொன்னதும் நம்ம நம்ம வீட்டுக்கு போயிடலாம்.. அங்க நான் உங்கள பாத்துக்குறேன்.. உன்ன பாப்பாவை எந்த குறையும் இல்லாமல் நல்லா பார்த்துக்கிறேன்.. என அவன் கூறிக் கொண்டிருக்க அவள் விழிகளோ அழுகையை மறந்து அவனை வெறித்தன.
ஜானு.. நீ என் மேல கோபமா இருக்கேன்னு தெரியும்.. ஆனாலும் நம்ம குழந்தைக்காக இத நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.. எனக்கும் உங்களுக்காக நான் இருப்பேன்.. ப்ளீஸ் நம்பு அவன் குரல் இறைஞ்சியது.
ஜானு அண்ணன் தான் இவ்வளவு தூரம் சொல்றானே பாப்பாவ கூட்டிட்டு அண்ணன் வீட்டுக்கு வந்துரலாம்ல்ல.. மிதாவின் குரலும் இறங்க.. இருவரையும் தீர்க்கமாய் பார்த்தவளின் பார்வையில் அத்தனை உறுதி..
நம்புறேன்.. ஆனா நீங்க என்ன நம்புவீங்களா.. அவள் கேள்வியில் புரியாமல் பார்த்தான் ஆரியன்.
நாளைக்கு உங்க வீட்ல சின்னதா ஏதாவது ஒரு பொருள் காணாம போயிட்டா கூட வழக்கமா சொல்றது போல பணத்துக்காக நான் தான் எடுத்து இருப்பேன்னு சொல்ல மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்..
ஜானு கோபத்தை கொட்டுறதுக்கான இடம் இது இல்ல.. பணத்துக்காக நீ என்ன நாளும் சொல்லுவேன்னு நான் சொன்னது தப்புதான்.. வேணும்னா உன் காலுல னாலும் விழுறேன்.. தயவு செஞ்சு என் கூட நம்ம வீட்டுக்கு வந்துரு..
சரி வந்துடறேன்.. அவள் கூறியதில் அவன் முகம் 1000 வாட்ஸ் பல்பாய் ஜொலிக்க..ஆனா பாப்பா கிட்ட உங்களை என்னன்னு சொல்லி அறிமுகப்படுத்துறது.. அவள் நேரடியான கேள்வியை எதிர்பாராது அவன் முகம் சட்டென அதிர்ந்தது..
இது என்ன கேள்வி அப்பான்னு தான்..!!
அப்போ இவ்வளவு நாள் வளர்த்தவன்?? அவள பொறுத்த வர அசோக் தான் அவ அப்பா!!
ஜானு அது பொய்யின்னு உனக்கே தெரியும்.. ஆரியனின் குரல் மேலேறியது..
ஆனா குழந்தைக்கு தெரியாதுல்ல..
என்னக்கா இருந்தாலும் சொல்லி தானே ஆகணும்..
அதுக்கு அவசியம் வந்தா பார்க்கலாம்.. ஆனா அவ உடம்பு முடியாத இந்த நிலைமையில எதையும் சொல்ல நான் தயாரா இல்லை.. அவளாலும் அசோக் இல்லாம ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது.. சரியா மருத்துவரிடமிருந்து பேசிவிட்டு வந்த அசோக்கின் கால்கள் அவளின் கடைசி வார்த்தைகளில் நின்று விட அப்போதுதான் விழிகள் அவளிடம் தேங்கின..
பாப்பாவுக்கு மட்டும் தான் நான் வேணுமா ஜானு.. உனக்கு?? அவன் மன கேள்வி மனதுடனே புதைந்து போனது.
ஜானு ஆனா.. மிதா வாய் எடுத்த வேளையில் ப்ளீஸ் மீதா.. ஏற்கனவே பயங்கர அப்செட்ல இருக்கேன்.. ப்ளீஸ் நீயும் என் நிலைமை புரியாம பேசாத.. என திரும்பியவள் தள்ளி நின்று அசோக்கிடம் வந்தாள்..
டாக்டர் என்ன சொன்னாங்க அஷோக்??
பாப்பாவை எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு சொன்னாங்க.. அவன் கூறியதும் ஆரியனை திரும்பி அவள் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.
டிஸ்சார்ஜ்?? ஆரியன் கேட்டான்..
இன்னும் சொல்லல.. ஒரு நாளாவது முழுசா அப்சர்வேஷன் இருக்கணும்னு மட்டும் சொன்னாங்க.. கூறிக் கொண்டிருக்கும் வேளையிலேயே நர்ஸ் வெளியே வந்தார்
குழந்தை கண்ணு முழிச்சிட்டா.. அவர் கூறிய அடுத்த நிமிடம் அதுவரை தேக்கி வைத்து இருந்த உணர்வுகளை தாங்க மாட்டாது ஜான்வியை விட்டு உள்ளே நுழைந்திருந்தான் அசோக்.. பாப்பா.. என்ற பெற்றவளே அவனுக்கு பின் தான்..
தன்னை முந்தி நடந்து கொள்ளும் அசோக்கின் ஒவ்வொரு செயலிலும் ஆரியனிடம் கோபம் கூடியது.. அதோடு என்றும் ஒரு நாள் தான் பேசிய வார்த்தைக்கு அவள் இப்படி வலிக்க வலிக்க அடிப்பதில் வலி தாங்க மாட்டாது அவன் முகம் வாட.. அவன் தோளில் கை வைத்தாள் மிதா.. இவள் கூறிய விஷயத்தில் அதிர்ந்து நின்றான் ஆரியன்..
கருத்துகள்
கருத்துரையிடுக